Home Blog Page 5636

ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு: மே 30ல் உணவகங்கள் மூடல்!

gst - 2026

சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி தமிழகத்தில் உணவகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, ஜிஎஸ்டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப் படவுள்ளது. இந்த வரி விதிப்பின் மூலம் விலைவாசியில் மாற்றம் ஏற்படும். உணவகங்களில் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படும். ஏசி.,யுடன் கூடிய உணவகங்களில் விலை அதிகமாகும். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உணவகங்களின் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு, ‘ஜிஎஸ்டி., வரி விதிப்பினால் உணவுகளின் விலை கடுமையாக உயரும். மத்திய அரசு இதனைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக மே 30ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் புதிய சேட்டிலைட்


நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே
அறியும் வகையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிசார் என்ற புதிய
செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி
மையமான நாசாவுடன் இணைந்து முதன் முறையாக செயற்கைகோளை உருவாக்கும் முயற்சியில்
ஈடுப்பட்டு வருகிறது.

நாசா- இஸ்ரோ சிந்தடி அபர்ச்சர் ராடார் என்ற இந்த செயற்கோள் மூலம் பூமியில்
ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் அதிகரிப்பு, எரிமலை சீற்றம் உள்ளிட்ட இயற்கை
சீற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக அறிய முடியும்.

இந்த செயற்கைகோள் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படுகிறது.
இந்த செயற்கைகோள்
வரும் 2021-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“என் வாயைப் பார்த்தியோ?”: பெரியவா

kanchi periyava - 2026
​”என் வாயைப் பார்த்தியோ?”–பெரியவா
“உதடெல்லாம் கூடப் புண்ணாயிட்டது…ஏன் தெரியுமா?”
“நீ பாலைச் சூடா வெச்சுட்டு, அவசர அவசரமா கிளம்பி வந்துட்டே இல்லையா….அதான்!”(பக்தர் வைத்த படையல்)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(அலுக்காத சம்பவம்-வேற ஆசிரியர் கட்டுரை) திருச்சியில் ஒரு பக்தர். புகைப்படக்காரர்.சிறிய ஸ்டூடியோ வைத்திருந்தார்.வீட்டு பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும்.

தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு படையலை மகாபெரியவர் முன்
வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். பெரியவாளின் நாமத்தை
அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

ஒரு தடவை பெரியவா,ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூலுக்கு விஜயம் செய்திருந்தார். அதுவோ உஷ்ணப் பிரதேசம்.வெயில் கடுமையாக கொளுத்திக் கொண்டிருந்தது.

திருச்சியில் இருந்த இந்தப் புகைப்படக் கலைஞருக்கு ‘பெரியவாளைத் தரிசிக்க
வேண்டும்’ என்று மனதில் ஆசை வந்தது. அன்று காலை ரயிலில் புறப்படும் முன்,வழக்கம்போல்
பெரியவா படத்துக்கு முன்னால் படையலாக சூடான பாலை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்!

கர்னூலில் அளவுக்கு அதிகமாக பக்தர் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம்.நமது புகைப்பட நிபுணர் எந்த பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை.சற்று தூரத்தில் இருந்த மணற்குவியல் ஒன்றின் மீது ஏறி நின்று மகாபெரியவாளைத் தரிசிக்க முயன்றார்.

வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது.கும்பல்குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார்.இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம்.

சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார்.யாரோ அவரைக் கூப்பிடுவது போல் தோன்றவே,
திரும்பிப் பார்த்தார்.

ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார். “நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க?”

“ஆமாம்!” “பெரியவா உங்களை அழைச்சுண்டு வரச் சொன்னார்!”

“என்னையா!” – பக்தருக்கு வியப்பு! “நீங்க போட்டோகிராபர்தானே”

“ஆமாம்” “அப்படியென்றால் வாருங்கள்…”

விடாப்பிடியாக அவரை அழைத்துக்கொண்டு போய் பெரியவா முன் நிறுத்தினார் சிஷ்யர்.
கைகளைக் கூப்பியவாறு, கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, புகைப்படநிபுணர் தன்னை
மறந்து அங்கே நின்றார்.

அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான், “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு
தூரம் கிளம்பி வந்திருக்கே.. கடைசியிலே பார்க்காமலேயே போனா என்னப்பா அர்த்தம்?” என்றார்.

கும்பல் நிறைய இருந்தது…அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு…” என்று
தடுமாற்றத்துடன் இழுத்தார் புகைப்படக்காரர்.

சில விநாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார்; “என் வாயைப் பார்த்தியோ?”
நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடுபட்டதுபோல் சிவந்திருக்கிறது! பிறகு
கேட்டார்,”உதடெல்லாம் கூடப் புண்ணாயிட்டது…ஏன் தெரியுமா?”

புகைப்பட நிபுணருக்குப் புரியவில்லை.

“நீ பாலைச் சூடா வெச்சுட்டு, அவசர அவசரமா கிளம்பி வந்துட்டே இல்லையா….அதான்!”

அப்போதுதான் தான் வைத்த படையல் ஞாபகத்துக்கு வந்தது. சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மகாபிரபு, என்னை மன்னியுங்கள்!” என்று கதறினார்.

எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால், மகாபிரபு அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள் அது சாத்வீகமான பக்தி! ஆண்டவனே,நீதான் எனக்கு எல்லாம் என்று மனதார நினைக்கும் பக்தி. ”

18519875 453505468335864 6779754798523911594 n - 2026

நியூஸு ப்ரேக்கிங்: எப்டி பிரேக்குறது?

flashnews - 2026

ஏ என்னப்பா… எதுனா டாப் நியூஸ் இருக்கா. இன்னும் ஹிட்ஸ் ரீச் ஆவல! எதுனா இருக்கான்னு தேடு…

சரி சார்.. இப்ப ஆஜ்தக்ல அமித் ஷா பேசிட்டிருக்காராம்…

சரி சரி நல்லா பாரு… எதாவது தேறுமான்னு பாக்கலாம்…

சார் ஏதோ ப்ரசிடென்ட் எலக்சன் பத்தி ப்ரேக் பண்றாங்க.. இன்னும் நாங்க கேண்டிடேட் செலக்ட் பண்ணலன்றாராம்….. … நாம அப்போ. அத்வானிக்கு கல்தாவா? அத்வானிய ஜனாதிபதியாக வரவிடாமல் செய்ய மோடி அமித்ஷா கூட்டு சதின்னு ஹெட்டிங் போட்டு நியூஸ ப்ரேக் பண்ணட்டா…! இல்லன்னா அத்வானிக்கு துரோகமிழைக்கும் மோடி! ; வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததுன்னு எதுனா செண்டிமெண்டா போடட்டா…!?

இல்ல வெய்ட் பண்ணு வேற எதுனா சொல்றாரா பார்ப்போம்..

சார் .. ஆமா சார்.. ரஜினி பத்தி ஏதோ சொல்றாரு….

என்ன சொல்றாரு கவனி….

ரஜினி முடிவு அவர் கைலன்றாரு…

இல்ல.. இல்ல.. என்ன சொல்றாங்க… நல்லா பாரு.

To a question on whether Tamil superstar Rajinikant is likely to join the BJP, Mr Shah said that the decision has to be taken by the actor himself, and that his party welcomed all good people to its fold… அப்டின்னு ஏஜென்ஸி நியூஸ் சார்.

சூப்பர்.. சூப்பர்… ரஜினிக்காக பாஜகவின் கதவு திறந்தே இருக்கு: அமித் ஷா ஓபனாக அழைக்கிறார்னு ஹெட்லைன் போடு…

சார் ஆனா அவரு அப்டி சொல்லலையே!

யே.. நியூஸ மத்தவன் படிக்கணுமா வேணாமா? சொல்றத செய்…

ஆனா சார்… இங்லீஷ் சைட்ல அப்டி போடலியே…! He also welcomed reports of actor Rajinikanth’s foray into politics while speaking at the India Today Editors’ Roundtable. “From our end, every good person is open to joining politics,” he said. — அப்டின்னு போட்டிருக்காங்க…

இதோ பாரு… ரஜினிக்காக வெத்தல பாக்கு வெச்சி வீட்டுக் கதவ தட்டி வாங்க வாங்கன்னு நாங்க கையைப் பிடிச்சி தரதரன்னு பிஜேபி ஆபீஸ்க்கு இழுத்துட்டு வர ஆள்லாம் செட் பண்ணி வெச்சிருக்கோம். அவரு மட்டும் கண்ணசரட்டும்..ன்னு கூட எழுது. எவன் கேக்க போறான்…!  பேஸ்புக் டிவிட்டர்னு எல்லாம் ஒரே வைரலா போக வேணாமா? எல்லாம் நாம வெக்கிற தலைப்பை மட்டும்தான் படிச்சி விவாதிப்பான் தெரிஞ்சுதா…? ஒருத்தனும் நியூஸு உள்ளே போய் படிக்க மாட்டான். அதனால… உள்ளே அதை எல்லாம் எழுது. தலைப்பை மட்டும் கேச்சியா போடு… புரிஞ்சுதா?

சரி சார்.. இப்போதைக்கு பாஜக கதவு திறந்திருக்கு: அமித் ஷா அழைப்புன்னு போட்டுக்கறேன் சார்…

வெரி குட்!

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 7)

varadharajaperumal - 2026

நான்முகன் அழைத்தவுடனே விச்வகர்மா விரைந்து வந்தான்.. ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை
அலங்கரிக்கும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட , அவனும் தன் பேறு இது என்று
ஏற்றுக் கொண்டான் !

பிரமன் விவரிக்கத் தொடங்கினார் ! ஸகல வசதிகளுடன் பற்பல மாடமாளிகைகள் கட்டப்பட
வேண்டும் .. வேள்வியைத் தரிசிக்க வரும் விருந்தினர்க்கு எவ்வகையிலும்
சிரமங்கள் ஏற்படாத படி , ஸௌகரியங்கள் பல செய்து செய்து தரவும் ஆணையிட்டார்..

விச்வகர்மா சன்னமான குரலில் கேட்டான்.. நான்முகனே ! இவ்வேள்விக்கு எத்தனை பேர்
வரக்கூடும் ?; தெரிந்து கொள்ளலாமா ??

சிரித்தபடி பதிலுரைத்தான் பிதாமஹன் ( பிரமன் ) .. விச்வகர்மாவே நன்கு கேள் !!

வேள்விகளில் சிறந்ததாய் , ஸகல பாபங்களையும் போக்குவதாய், வைஷ்ணவமானதாய் (
ப்ரதானமாக , நேரடியாக பரமாத்மாவையே பூசிப்பதாய் ) விளங்கக் கூடியது இந்த
அச்வமேதம் !

இந்த க்ஷேத்ரமும் ( ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் ) நாம் தொடங்கிய நற்காரியங்கள்
தடையின்றி நிறைவேறுமிடமாய் , பாபங்களிலிருந்து நமக்கு முக்தி அளிப்பதாய்
உயர்ந்த ஹஸ்திகிரியை தன்னகத்தே கொண்டதாய் விளங்கும் உன்னத இடமாகும் !!

வேள்வியும் சிறந்தது.. வேள்வி நடை பெறுமிடமும் சிறந்தது.. எனவே ஆசையுடன்
பலரும் வருவர்கள்.. இத்தகு வேள்வியை தரிசிப்பதே புண்யமன்றோ !!

தவிரவும் , வேள்வி நடைபெறுமிடத்திற்கு , நமக்கு அழைப்பு வந்தால் போகலாம் என்று
காத்திருக்க வேண்டியதில்லை .. நம்மை அழைக்காமல் விட்டாலும் நாம் வேள்வியைக்
காணப் போக வேண்டும் சாஸ்த்ரமும் சொல்லியிருப்பதால் ஆஸ்திகர்கள் ( வேத
வேதாந்தங்களில் நம்பிக்கையுடையவர்கள் )
தாங்களாகவே வருவார்கள்..

தேவர்கள், மனிதர்கள் , இன்ன பிறர்களும் ஆசையுடன் வரக்கூடும்.. எனவே ஏற்பாடுகள்
கனகச்சிதமாக இருக்க வேண்டும் ..யாக சாலைகள், யாக வேதி ( யாகம் செய்யப் பாங்கான
மேடை ) ,பாக சாலைகள் ( சமையலறைகள் ) , விருந்துண்ணுமிடங்கள்,கலை
நிகழ்ச்சிகளுக்கான அரங்கங்கள், விருந்தினர் விடுதிகள் , என்று யாவும் சிறந்த
முறையில் , மிக நேர்த்தியாக , அழகாக அமைக்கப்பட வேண்டும் என்று பிரமன்
சொல்லவும், அவ்விதமே செய்வதாக விச்வகர்மா பதிலுரைத்தனன்..

அவர் சொன்னபடி அனைத்தையும் விரைவாகச் செய்து முடித்தான் விச்வகர்மா !

எல்லா வகையாலும் உயர்ந்த ஹஸ்திகிரியையே உத்தர வேதியாக்கினான் விச்வகர்மா ! நம்
வரதன் உதிக்கப் போகும் இடம் இதுவேயாம் !

( அக்னிஹோத்ரம் செய்வதற்கு ஆஹவனீயம் , கார்ஹபத்யம் , தக்ஷிணாக்னி ஆகிய மூன்று
அக்னிகள் உண்டு ; இவைகளுக்கு முன்பிருக்கிற இடத்திற்கு மஹாவேதி என்று பெயர்
..ஸதஸ் ,ஹவிர்தானம் என்னுமிடங்களும் அங்கு உண்டு ..அதற்கு முன்பாக அக்னியை
ஸ்தாபனம் (உண்டாக்கி )பண்ணி வேள்வி செய்வார்கள்; அந்த இடத்திற்கே உத்தர வேதி
என்று பெயர் )

அனைத்தையும் நன்கு வடிவமைத்து, ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை ஒரு ராஜதானி ( தலை நகரம்
) போலே சமைத்திட்டான் ( உருவாக்கினான் ) விச்வகர்மா !

நன்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஊரினைப் பார்வையிட வருமாறு பிரமனுக்கு
அவன் ( விச்வகர்மா ) அழைப்பு விடுக்கவும் , அயனும் ஆசையுடன் வந்தான் !வந்தவன்
தன் மனத்தினைப் பறி கொடுத்தவனாய் , இந்த க்ஷேத்ரத்தினை , விச்வ கர்மாவின் கை
வண்ணத்தினை ச்லாகிக்கத் தொடங்கினான் !!

நாநா விதமான ( பல்வகை ) ரத்நங்களாலும், ஸ்வர்ணம் முதலானவைகளைக் கொண்டு ,
சிறந்த சில்பிகளைக் கொண்டு பக்குவமாக அமைக்கப்பட்டிருக்கிற நகரத்தின் மாட
மாளிகைகளின் அழகு , பிரமனையும் ஏனையோரையும் வியப்பிலாழ்த்தியது..

இனிமேல் தான் இந்த க்ஷேத்ரம் ” காஞ்சீ ” என்று ப்ரஸித்தமான பெயரைச் சுமக்கும்
என்று புன்னகை தவழ , பெருமிதத்துடன் பேசினான் அயன் !

ஏன் ?? ஏற்கெனவே காஞ்சீ என்ற பெயருளதே !! “பூமிக்கு இடையாபரணம் போன்ற ஊர் ”
என்கிற பொருளிலே முன்னமேயே இந்நகரத்துக்கு காஞ்சீ என்ற பெயர் கொடுக்கப்
பட்டுள்ளதே ..

பின்பு ஏதோ இப்போது தான் புதியதாக இவ்வூருக்கு இப்பெயர் சூட்டுமாப் போலே
நான்முகனுக்கு ஏன் இத்தனை ஆநந்தம்..

பலரும் அங்கே இப்படித் தான் யோசித்த படி புருவங்களை உயர்த்தலாயினர் !!

நான்முகன் பேசினான் !!

எனக்கு ” க ” என்றொரு பெயர் உண்டு ! க என்கிற என்னால் எவ்விடத்தில் ஸ்ரீ ஹரி
பூசிக்கப்படுகின்றானோ அவ்விடத்திற்கு “காஞ்சீ ” என்று பெயர் ! இவ்வூர்
புண்ணியங்களை நன்கு வளர்த்திடும் திறன் பெற்றது.. என்று அவன் சொல்லவும் ,
வானம் பூச்சொரிந்து நம் நகரை ( காஞ்சியை ) நனைத்தது..

பிரமன் முகத்தில் ஆநந்தத்திற்குக் குறைவில்லை.. ஆனால் அவர் மைந்தன் வசிட்டர்
முகம் வாடிக் காணப்பட்டார்..

காரணம் வினவினான் வசிட்டரை..

அவர் சொன்ன பதில் நான்முகன் முகத்தையும் வாடச் செய்தது ..

என்ன காரணம்.. விடை விரைவில்..

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

நல்லவங்கள்லாம் எங்க கடைக்கு வரலாம்!

amit shah - 2026

சார் நீங்க ரொம்ப நல்லவருதானே…!

அப்டியா சொல்றீங்க?

பாத்தா அப்டித்தான் சார் தெரியுது!

இல்லயே! நான் பேஸ்புக்ல எழுதறத பாத்து நான் ரொம்ப கோவக்காரன், அதுவும் முன்கோவக்காரன், முசுடுன்னுதானே எல்லாஞ் சொல்றாங்க…!

அது அதுல சார்… நான் சொல்றது இதுல சார்…!

ஓ.. அது இதுன்னு எப்டியோ சொல்றீங்க… சரி விஷயம் என்னான்னு சொல்லுங்க…!

இல்ல… இன்னிக்கு உங்களுக்கு பாஜக., தலைவர் அழைப்பு விடுத்திருக்காரே… அதான் சொன்னேன்!

என்னன்னு…?

நல்லவங்கள்லாம் பாஜக.,வுல சேரணும்; அவங்களை வரவேற்கிறேன்னு சொல்லியிருக்காரே… அந்த நல்லவங்கள்ல நீங்களும் ஒருத்தர்தானேன்னு அப்டிக் கேட்டேன்.

அடடா… நான் நல்லவன்னு உங்கள மாதிரி நண்பர்களுக்கு தெரியறதே இந்த மாதிரி எந்தக் கட்சியிலயும் இல்லாததுனாலதானே…! என்னையும் அப்டி இப்டி ஆக்கணும்னு நினைக்கிறீங்களா?

அதில்ல சார்… ஆனா…

சரி சரி.. நீங்க சொல்றத நான் ஒப்புக்கிறேன். நான் பாஜக., சேர தயார்… ஆனா ஒரு கண்டிஷன்!

என்ன சார்..?

எனக்கு முதல்வர் போஸ்ட் கன்பர்ம் பண்ணனும்! அப்டின்னா நான் பாஜக.,வுல சேர்றேன்.

சார்… என்ன விளையாடறீங்களா?

ஏன் சார் நான் போய் விளையாடப் போறேன். நாட்டுல சிஸ்டம் ரொம்ப கெட்டுப் போய்க் கிடக்கு சார். அதை க்ளீன் பண்ணனும்னா எவ்ளோ உழைக்கணும். நாட்டுக்காக சேவை பண்றதுக்காகத்தான் நானே … ரொம்ப யோசிச்சி… சரி வரேன்னு சொல்றேன். அதுக்கு போய் நீங்க யோசிச்சீங்கன்னா..?

இல்ல… இருந்தாலும் நீங்க சீரியஸா பேசறீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!

அட … பாருங்க! நீங்கதான் என்னை நல்லவன்னு சொன்னீங்க ! அதான் சொல்றேன். என்னைத் தவிர கெட்டுப் போய்க் கிடக்குற சிஸ்டத்தை க்ளீன் செய்ய வேற யாரும் கிடையாது…! அதனால அத ஏன் நீங்க யோசிச்சி பாக்க மாட்டேன்றீங்க…!

சர்தான்.. ஆனா… இது ரொம்ப ஓவர்!

பாருங்க.. அதான் சொன்னேன். நான் எந்தக் கட்சி ஆபீஸ் பக்கம் கூட வர்றதுக்கு லாயக்கில்லாதவன்னு…! இனி இப்பிடி ஒரு தடவ கேட்டுட்டாதீங்க…

….???

ரஜினி முடிவு அவர் கையில்; நல்லவர்களை பாஜக.,வுக்கு வரவேற்கிறோம்: அமித் ஷா

amit shah - 2026

புது தில்லி:

பாஜக., இன்னும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்று கூறிய அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை ஆளும் தரப்பில் இருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கலாம் என்ற சிவசேனாவின் கருத்தை நிராகரித்தார். காஷ்மீர் விவகாரம், காங்கிரஸ் எதிர்ப்பு, நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணிக்குத் திரும்பல் உள்ளிட்ட பல்வேறு கேள்விக்கு பதிலளித்த பாஜக தலைவர் அமித் ஷா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இன்று ஆஜ் தக் இந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற வாரத்தின் ஹைலைட், தமிழக ஊடகங்களில் ரஜினிகாந்த் தான்! ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அவ்வப்போது அரசியல் கருத்துகளைப் பேசி, ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தார். ஸ்டாலினைப் பாராட்டினார், ஆனால் ஊழலை எதிர்ப்பேன், சிஸ்டம் சரியில்லை என்று ஏதோ சொன்னார்.

ஆன்மிகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ள ரஜினி காந்த் திடீரென கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு பெரியாரிஸம் பேசியது ஏன் என்றும் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல்களும் விமர்சனங்களும் அதிகம் முன்வைக்கப்பட்டன. ரஜினி பாஜகவுக்கு வந்தால் வரவேற்பதாக, தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும்போது, சுப்பிரமணியசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், திடீரென ரஜினி அரசியலுக்கு வருவதை ஆண்டவன்தான் முடிவு செய்வான் என்று வழக்கம்போல் நழுவினார்.

இந்நிலையில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து விளக்கும் வகையில், ஆஜ் தக் இந்தி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவு அவர் கையில் உள்ளது. நல்ல மனிதர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைப்பது பாஜக., எனவே இதை வரவேற்கிறோம் என்று, ரஜினிக்கு பாஜகவில் சேர நேரடி அழைப்பு விடுத்தார். அமித்ஷாவின் இந்த மனம் திறந்த அழைப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சென்ற வருடம் தேர்தல் நேரத்தில் ரஜினியை வைத்து பாஜக., களம் காண முயன்றது. அப்போது ஜெயலலிதா இருந்தார். மோடி, ரஜினிகாந்த்தின் வீட்டுக்கே சென்று பார்த்து பேசிவிட்டு வந்தார். அப்போதெல்லாம், அது ஒரு சாதாரண சந்திப்பு, வெறும் நலம் விசாரிப்புதான் என்று, தனது பிடியை விட்டுக் கொடுக்காமல் நழுவினார் ரஜினி காந்த். எனவே, அமித் ஷாவின் அழைப்பும் ஒரு பரபரப்பான அரசியல் சூழலாகத்தான் தோற்றுவிக்குமே தவிர பெரிய மாற்றங்களை ஒன்றும் தந்துவிடாது என்று நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த், இதனாலேயே சென்னை வந்த போது நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று அவரது வீட்டிலேயே பார்த்து விட்டு வந்தார் மோடிஜி. இந்நிலையில் பாஜகவில் இருந்து அதன் தேசியத் தலைவர் அமித்ஷா விடுத்திருக்கும் ஓபன் அழைப்பை ரஜினிகாந்த் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே இனி வரும் அரசியல் பரபரப்புகளாக இருக்கும்

 

மோடியை ஏன் சந்தித்தார் ஓபிஎஸ் என எனக்குத் தெரியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

pon radhakrishnan - 2026

மதுரை:

பிரதமர் மோடியை ஓபிஎஸ் எதற்காக சந்தித்தார் என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, விவசாயிகளை சந்திக்க முடியாதமோடி, ஓபிஎஸ்ஸை மட்டும் எப்படி சந்தித்தார்; அதற்கான காரணம் என்ன என்று மு.கஸ்டாலின் கேட்டிருந்தாரே! என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை ஓபிஎஸ் ஏன், எதற்காக சந்தித்தார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்க உரிய காரணங்கள் இருந்திருக்கலாம். அந்த வகையில் அவர் ஓபிஎஸ்ஸை சந்தித்திருக்கலாம் என்று கூறினார்.

மேலும், தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது ஏற்படும் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. ரூ.100 கோடி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை ரயில் மற்றும் மின் மயமாக்கப்பட்ட வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இந்தத் திட்டத்துக்காக ரூ.3,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

காவிரிப் பிரச்னை நிலை இங்கும் வந்துவிடக் கூடாது : சந்திரபாபு நாயுடு கவலை

chandrababunaidu - 2026

திருப்பதி:

காவிரி நதிநீர் பிரச்சனையால் தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது, அந்நிலை இங்கும் வந்துவிடக் கூடாது என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, “ஆந்திராவை வறட்சியே இல்லாத மாநிலமாக மாற்றுவோம். சித்தூர் மாவட்டத்தில் வறட்சி ஏதும் இல்லாத நிலைமையை உருவாக்குவோம். தமிழகம், கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்னை நீடித்து வருகிறது. இது இரு மாநில மக்களின் உணர்வுகளை கடுமையாகப் பாதித்துள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனையால் தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக போலவரம் நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது…” என்றார்.

 

ராமானுஜர் 1000: திருவள்ளூரில் நான்கு நாட்கள் நடந்த தர்சநோதயம்!

darsanodhayam ramanuja - 2026

திருவள்ளூர்:

“தர்சநோதயம்” என்ற தலைப்பில், உபந்யாசகரும் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா இதழின் ஆசிரியருமான உ.வே. எம்.வி. அனந்தபத்மநாபாசாரியர் ஸ்வாமியின் ’சரண்’ அமைப்பும் திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் தேவஸ்தானமும் இணைந்து, நான்கு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  திருவள்ளூரில் ஶ்ரீ இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டினை ஒட்டி 04.05.2017 முதல் 07.05.2017 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மிக விமரிசையாக நடந்து முடிந்தது.

தர்சநோதயம் தொடக்க விழா

04.05.2017 வியாழக்கிழமை அன்று …
வைத்ய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் வழங்கும், அஹோபில அழகிய சிங்கர் ஜீயரின் முன்னிலையில் அனந்தபத்மநாபன் ஸ்வாமி விழாவில் உரையாற்றி தொடங்கி வைத்தார்.

துவக்க விழாவில், திருமதி ரேவதி அனந்தபத்மநாபன், திருமதி ரம்யா வாசுதேவன் இருவரும் குத்து விளக்கேற்றி வைத்தனர். தேவஸ்தான ஶ்ரீகாரியம் ஸ்வாமி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.

ஜீயரின் திருக்கரங்களால் அனந்தபத்மநாபன் ஸ்வாமியின் புத்தக வெளியீடு மற்றும் தீதில்லா நல்லோர் திரள் எனும் TNT (SARAN) சரண் சேவகர்களின் கை வண்ணத்தில் உருவான ‘ஶ்ரீபாஷ்யபுரம்’ எனும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதனை ஜீயர் மேற்பார்வையிட்டார்.

தர்சநோதயம் முதல் நாள் விழா:-

darsanodhayam4 - 202604.05.2017 வியாழக்கிழமை அன்று…

முதல் நாள் நிகழ்ச்சியில் முதலில் திருமதி. மைத்ரேயி பத்ரி நாராயணன் குழுவினரின் “இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. கச்சேரி செவிகளுக்கு இனிமையாக இருந்தது. தொடர்ந்து “முனிவனும், புனிதனும்” எனும் தலைப்பில் ஶ்ரீ உ.வே.பேரங்கியூர் பி. ஶ்ரீநிவாஸ ராகவன் சுவாமியின் உபன்யாசம் நடந்தது.  மாலை நேரத்தில் ஏகாந்த வேளையில் எங்கும் பார்த்திராத திருவரங்கம் பெரியகோயில் மிராசு வீணை ரங்கராஜன் திருகுமாரர்களான வீணை ஶ்ரீநிவாஸன், வீணை ராமானுஜம் மற்றும் வீணை கோவிந்தன் ஆகியோரின்  “வீணை ஏகாந்த இன்னிசை” எனும் கச்சேரி நடைபெற்றது.

முதல் நாளின் கடைசி நிகழ்ச்சியாக திண்டிவனம் வீரா வெங்கடேச பாகவதர் குழுவினரின் “நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (ஶ்ரீராமானுஜ திவ்யநாம சங்கீர்த்தனம்)” நடைபெற்றது. அதில் ஹனுமன், சிம்மம் ஆகியோர் போல் வேடமிட்டு கோலாகலமான ஆட்டமாக நடைபெற்றது. .

தர்சநோதயம் இரண்டாம் நாள் விழா:-
darsanodhayam2 - 2026

05.05.2017 வெள்ளிக்கிழமை அன்று…

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் முதலாவதாக டாக்டர் ஹேமா ஶ்ரீரங்கநாதன் குழுவினரின் “வீணை இன்னிசை. வீணையை மீட்டுவதில் தான் என்ன ஒரு தனி அழகு இல்லையா? செவிகளுக்கு இனிமையாக ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து “திருமால் கவிச்செல்வர்” ஶ்ரீ.உ.வே. ரகுவீர பட்டாசாரியார் ஸ்வாமியின் “யதிபதியும், குலபதியும்” எனும் தலைப்பில் உபன்யாசம் நடைபெற்றது. இதனைக் கேட்பதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

இரண்டாம் நாள் நிகழ்வின் கடைசி நிகழ்ச்சியாக யுவபுரஸ்கார் பரிசு பெற்ற விஜய்மாதவன் குழுவினர் வழங்கிய “ஆழ்வார் இன்னமுது” எனும் நாட்டிய நிகழ்ச்சி அருமையாக நடந்து முடிந்தது.

தர்சநோதயம் மூன்றாம் நாள் விழா:-
darsanodhayam1 - 2026

06.05.2017 சனிக்கிழமை அன்று…

மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் முதலாவதாக “ராமானுஜரின் வாழ்வில் பெண்கள்” எனும் தலைப்பில் கல்லூரிப் பெண்களின் மிகவும் வித்தியாசமான கலந்துரையாடல் இனிமையாக ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து அரையர் சேவை. அரையர் ஶ்ரீ.மான் வேங்கடேசன் வழங்கிய “தேசிகப்ரபந்தம்” நடைபெற்றது. இதில் முரளி தேசிகரும் பாடினார்.

பிறகு கடைசி நிகழ்ச்சியாக ப்ரியாமுரளி குழுவினர் வழங்கிய “நவவிதபக்தி” எனும் நாட்டிய நிகழ்ச்சி மிக அருமையாக நடந்து முடிந்தது.

தர்சநோதயம் நான்காம் நாள் விழா:-
darsanodhayam3 - 2026

07.05.2017 ஞாயிறு அன்று …

நான்காம் நாள் நிகழ்ச்சியில் முதலாவதாக “ஜுகல்பந்தி” எனும் தலைப்பில் “உபயவேதம்”, “விலக்ஷணகான விசாரத்” ஜானகி ராமானுஜம் ப்ரம்மஶ்ரீ நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் குழுவினரின் வேதம்-கணம், திவ்யப்ரபந்தம், ஸ்வரம் மற்றும் பக்கவாத்தியங்களுடன் வித்தியாசமான நிகழ்ச்சி இனிமையாக நடைபெற்றது . இதில் ஏபிஎன் ஸ்வாமியும் ட்ரம்ஸ் செய்து ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு நடந்தது. இந்த நிகழ்வில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற என்.கோபால்சாமி, குமுதம் ஜோதிடம் இதழாசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏ.பி.என். ஸ்வாமியின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசியபோது, தங்களது அனுபவங்களை முத்துக்களாக வழங்கினர்.

அந்நாளின் கடைசி நிகழ்ச்சியாக விவாத மேடை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமானுஜர் செய்த புரட்சி எனும் தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது. இதில்,  செங்கோட்டை ஶ்ரீராம், மங்களம் ஶ்ரீகாந்த், மற்றும் நிர்மலா மணவாளன் ஆகியோர் மதத்திலா? என்ற தலைப்பிலும், ஶ்ரீவல்லபன் ஸ்வாமி, Dr. லக்ஷ்மி நரசிம்மன் மற்றும்  வைஜயந்தி சுதர்ஸனன் ஆகியோர் மனத்திலா? என்ற தலைப்பிலும் விவாதம் செய்தனர். இந்த நிகழ்வுக்கு நடுவராக இருந்து வழிநடத்தினார்  அனந்தபத்மநாபாசாரியார். நிகழ்வின் இறுதியில் நடுநாயகமான தீர்ப்பை வழங்கி நான்காம் நாளின் இறுதி நிகழ்ச்சியை சுவையாக முடித்து வைத்தார்.

மிகவும் சிறப்பாக அருமையாக நடந்து முடிந்த  இந்த நான்கு நாள் நிகழ்ச்சிக்கும் வந்திருந்து, பங்கேற்று சிறப்பாக நடத்தி தந்தவர்களுக்கும் அதில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாக சார்பாகவும் ஏபிஎன் ஸ்வாமியின் சார்பாகவும் நன்றி தெரிவித்துப் பேசினார் தேவஸ்தானத்தின் சம்பத் ஸ்வாமி.

darsanodhayam snap - 2026

இந்த நிகழ்ச்சியைக் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாசகி ஒருவரின் அனுபவப் பதிவு இது…

“தர்சநோதயம்” என்ற பெயருக்கு தகுந்த படி மிகவும் அருமையான தர்சனத்தைக் கண்டேன். அந்த நான்கு நாட்களும் சென்றதே தெரியவில்லை. என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. இந்த இராமானுஜரின் ஆயிரமாவது வருடத்தில் இருப்பதே மிகவும் புண்ணியம் செய்திருக்கிறோம்.

அதிலும் அடியேன் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறேன். APNஸ்வாமி ஆசாரியராக கிடைத்ததிலும் தர்சனோதயா எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். APN ஸ்வாமிக்கு நன்றி சொல்ல என்றென்றும் மிகவும் கடமைபட்டுள்ளேன். எனக்கும் ஒரு அங்கிகாரம் கொடுத்து பங்கேற்க வைத்தார். அடியேனுக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை. பள்ளியில் படிக்கும் போது மேடையில் ஏறியது. அந்த நாள் ஞாபகம் வந்தது. மறுபடியும் அந்த மாதிரி சந்தர்ப்பம் வரும் என்று கூட நான் நினைத்து பார்த்தது இல்லை. அதுவும் எப்பேற்பட்ட அறிஞர்கள் கூட சரிசமமாக என்னையும் அமர்த்திவிட்டார். அது நினைக்கும் போது மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறது. அடியேன் சிறிதும் அருகதை இல்லாதவள்.

நான் அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறேனா? என்று நினைக்கும் போது ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. எனக்குள்ளேயும் ஏதோ தகுதி இருக்கிறது என்று அதை உள்ளுக்குள்ளேயே வைத்திருக்காமல் அதை வெளிபடுத்தி மேடையில் ஏற்றி வைத்தார் APN ஸ்வாமி அவர்கள்.

ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல் இருக்கிறது. என்னைப் பெற்ற தாய் தந்தைக்கும் நமஸ்காரம். என் புகுந்த வீட்டின் ஆசிர்வாதத்திலும் என் கணவரின் ஒத்துழைப்பிலும் நான் மேடையில் ஏறி பேசினேன். அதிலும் முக்கிமாக APN ஸ்வாமி அவர்கள் கொடுத்த மன தைரியம் தான் மிக முக்கிய காரணம். அவருக்கு சிஷ்யனாக இருப்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.

தர்சநோதயம் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் A1 நெத்தியடிதான். அவ்வளவும் அருமை. ஜீயரைக் கொண்டு திறந்து வைத்த ‘ஶ்ரீபாஷ்யபுரம்’. சங்கீதம், எங்கும் பார்த்திராத ஏகாந்த வீணைக் கச்சேரி, ஶ்ரீராமானுஜரின் நாமசங்கீர்த்தனம், வீணை இசை, சங்கீத உபன்யாசம், நாட்டியம், அரையர் சேவை, ஶ்ரீராமானுஜரின் வாழ்வில் வந்த பெண்களைப் பற்றி ஒரு வித்தியாசமான கலந்துரையாடல், இவர்கள் சந்தித்தால் எனும் தலைப்பில் (ராமானுஜர், வேதாந்த தேசிகர், ஆதிவண்சடகோப ஜீயர்) திருவள்ளூரில் சந்திக்கும் வித்தியாசமான படைப்பு, நவ வித பக்தி எனும் நாட்டியம், புது விதமான ஜுகல் பந்தி, பல உபன்யாசங்கள் பல வி.ஐ.பி.கள் கொண்டு புத்தக வெளியீடு விழா மற்றும் கடைசியாக விவாத மேடை ராமானுஜர் செய்த புரட்சி மனத்திலா? மதத்திலா? இதற்கு APN ஸ்வாமியின் ஸ்டைலில் எதிர்பாராத தீர்ப்பு எல்லாவற்றையும் பார்க்க கண்கொள்ளா காட்சிகளாக இருந்தன.

இதில் APN ஸ்வாமிக்கு முக்கியமாக பெரும் பங்களிப்பு ஒத்துழைப்பு தந்த பூமா மாமி மற்றும் ரேவதி ஸ்வாமினி அவர்களுக்கும் இங்கு நன்றி சொல்ல மிகவும் கடமைபட்டுள்ளேன். மற்றும் சுபத்ரா சொன்னது போல் லட்சுமி, பத்மினி, ஜெயந்தி மாமி, அர்ச்சனா, விஜயலக்ஷ்மி, சுபத்ரா ராகவன், நிவாஸ், சுந்தரம் ஶ்ரீனிவாசன் சுவாமி, ராஜாராம் சுவாமி், ராகுல் மற்றும் தேசிகன் சுவாமி வெயில் என்றும் பாராமல் உழைத்த நமது TNT உறுப்பினர்களுக்கும் நன்றி. இன்னும் நிறைய TNT உறுப்பினர்கள் வராதவர்களுக்கு பெரும் இழப்பு.

இதேபோல் இன்னும் பல நிகழ்ச்சிகள் APN ஸ்வாமி அவர்கள் மேன்மேலும் நடத்தனும் அதில் அடியேனும் பங்கு கொண்டு உதவி செய்ய வேண்டும் என்று பெருமாளை பிரார்த்திக்கிறேன்.

செய்தித் தொகுப்பு: –  நிர்மலா அழகியமணவாளன்