Home Blog Page 5662

ஆதார் அட்டை திட்ட அமலாக்கம்: மோடிக்கு உலக வங்கி பாராட்டு

புதுடில்லி, : 

 அடையாள   சான்றாக, 'ஆதார்' அட்டை வழங்கும் திட்டத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடியை, உலக வங்கி பாராட்டி உள்ளது. 
ஆதார் அட்டை திட்டம், முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டாலும், மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு 
பதவியேற்ற பின்தான், ஆதார் அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த ஆதார் அட்டையை, அடையாள சான்றாக பயன்படுத்தி, நாட்டின் எந்தப் பகுதியிலும், வங்கிக் கணக்கு துவங்குதல்,அரசு மானியம், விவசாயி களுக்கான மானியம், கல்வி உதவித்தொகை, சமையல் எரிவாயு மானியம் என, அரசு சலுகை களை பெறலாம்.ஆதார் அட்டை திட்டத்திற்காக, பிரதமர் மோடிக்கு, உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 

இது குறித்து, உலக வங்கி யின் தலைமை பொருளா தார நிபுணர் பால் ரோமர் கூறியதாவது: பணப் பரிவர்த்தனை போன்ற அனைத்துபரிவர்த்தனை களுக்கும், இந்த ஆதார் அடையாள சான்று அடிப்படையானது. 

உலகம் முழுவதும், இத்திட்டம் அமல்படுத்தப்பட் டால், பொருளாதார நிலை வளர்ச்சியடையும். உலகம் முழுவதும், சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில், 150 கோடி பேர், தங்கள் அடையாளத் தை நிரூபிக்க முடியவில்லை. இது போன்ற சேவைகளுக்கு, ஆதார் அடையாள அட்டை தேவை. 

இந்த திட்டத்தை, இந்தியாவில் தீவிர மாக செயல்படுத்திய, பிரதமர் மோடிக்கு, உலக வங்கி பாராட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வருண ஜெபம்

தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர்
ஸ்ரீநரசிம்மர்
கோயிலில்  சுவாதி
நட்சத்திரத்தன்று மழை வேண்டி வருண ஜபம்
,யாகம்
ஆகியவை நடைபெற்றது
,
 தொடர்ந்து  ஸ்ரீ
நரசிம்மருக்கு
16 வகை மூலிகைகளால்
மூல மந்திர ஹோமம்
,விஷ்ணு சூக்த
ஹோமம்
, மகா லட்சுமி ஹோமம் மற்றும் 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன  தொடர்ந்து  பெருமாள்
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருக்கோயிலையும்
, தெப்பக்குளத்தை  பக்தர்களின்
ராம கோஷம்
 ஒலிக்க தீர்த்த
வலம் வந்து வருண ஜெபம் செய்த தீர்த்தத்தை ஸ்ரீ சந்நிதியில் உள்ள கிணற்றில்
சேர்க்கப்பட்டது ஏற்பாடுகளை நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபாவினரும் பொதுமக்களும் செய்திருந்தனர்

 


பாம்பு கடித்து இறந்த பாம்பு மன்னன் பூனம்சந்த்: ஆர்வலர்கள் சோகம்

கடலூர் பாம்பு மன்னன் என அழைக்கப்படும் பூனம்சந்த், பாம்புகளை யாரும் கொல்லக்கூடாது என்ற குறிக்கோள் உடன் அந்த பாம்புகளை காப்பாற்றும் பணியை செய்து வந்தார். 
இதுபோல் இதுவரை ஆயிரக்கணக்கில் பாம்புகளை உயிருடன் காப்பாற்றிய அவர் நேற்று ஒரு அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து உள்ளார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
இன்று நடைபெற்ற பிரேதபரிசோதனையில் அவர் முதுகு பகுதியில் பாம்பு கடித்த அடையாளம் இருந்ததால் அவர் பாம்பு கடித்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதிய அறிவிப்பு இல்லாத, கடன்சுமையை அதிகரித்த வெற்று நிதிநிலை அறிக்கை! : ராம்தாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட
அறிக்கை
2017&18 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்திருக்கிறார். ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள இந்த அறிக்கையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த புதியத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. சாதாரண கணக்காளர் தயாரிக்கும் வரவு&செலவு திட்டம் எப்படி இருக்குமோ அதைப்போன்று தான் இந்த அறிக்கையும் உள்ளது.
புதிய நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகளோ, கட்டண உயர்வோ அறிவிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரிகளை ரூ.2000 கோடி அளவுக்கும், பேரூந்து கட்டணங்களை ரூ.900 கோடி அளவுக்கும் உயர்த்திவிட்டு புதிய வரிகளை விதிக்கவில்லை என்பது மோசடியிலும் மோசடியானதாகும்.
அத்திக்கடவு& அவினாசி திட்டத்தை செயல்படுத்த ரூ.3523 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக குறைந்தபட்சம் ரூ.1000 கோடியாவது ஒதுக்கினால் தான் அடுத்த 4 ஆண்டுகளில் அத்திட்டத்தை செயல்படுத்தி முடிக்க இயலும். மாறாக ரூ.250 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஏமாற்று வேலை ஆகும். இத்திட்டத்தின் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதை ஈடுகட்டுவதற்கு கூட இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.26,932 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.10,150 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோத்தாரி குழுவின் பரிந்துரைப்படி பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.60,000 கோடியும், மக்களின் நலவழ்வை உறுதி செய்வதற்காக ரூ.40,000 கோடியும் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், அதில் பாதிக்கும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல.
காவல்துறைக்கு இப்போது நடைபெற்று வரும் ஆள்தேர்வுக்குப் பிறகும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கும் நிலையில், புதிய காவலர் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக 10,500 பேர் காவல் இளைஞர் படைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஆளும் கட்சியினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முயற்சியாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கரும்பு மற்றும் உணவு தானிய உற்பத்தியும், சாகுபடி பரப்பும் குறைந்து விட்டது என்பதை தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. வறுமை ஒழிப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால், மக்களுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டத்தை தவிர வறுமை ஒழிப்புக்காக வேறு திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் விவசாயம், கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இம்மாத இறுதிக்குள் மேலும் 2700 மதுக்கடைகள் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஆனாலும், மது விற்பனை மூலமான வருவாய் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் மதுவை அதிக அளவில் மக்கள் மீது திணிக்க அரசு முடிவு செய்திருப்பதை உணர முடிகிறது.
தமிழக அரசின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை இந்த பட்ஜெட் மதிப்பீடுகளில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. 2016&17 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் ரூ.90,691 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இலக்கை விட குறைவாக ரூ.87,287 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டிருப்பது ஆட்சியாளர்களின் தோல்வியையே காட்டுகிறது. கடந்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.40,533 கோடியாகவும், இது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2.96 விழுக்காடாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கடந்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.61,341 கோடியாக, அதாவது 4.58% ஆக அதிகரித்துள்ளது. மின்சார வாரியத்தின் கடன்களில் ஒருபகுதியை அரசு ஏற்றதால் தான் எந்த பாதிப்பு என்று அரசு கூறியுள்ளது. எனினும், நடப்பு ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும் என எந்த அடிப்படையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. உதய் திட்டத்தின் கீழ் மின்வாரியக் கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கடனை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஏற்க வேண்டும் என்பதால் நடப்பாண்டிலும் நிதிப்பற்றாக்குறையும், அதற்கு ஏற்றவகையிலான கடன்சுமையும் அதிகரிக்கும். அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும்.
2017&18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.3,14,366 கோடி கடன் வாங்கப்படும், நடப்பாண்டில் மட்டும் ரூ.41,965 கோடி கடன் வாங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையையும் கணக்கில் கொண்டால் நடப்பாண்டின் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.5.75 லட்சம் கோடியாக இருக்கும். அதாவது தமிழகத்தில் ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.79,861 கோடி கடன் இருக்கும். தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, கடன் வளர்ச்சியில் தான் தமிழகத்தை முன்னணிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எவ்வளவு விரைவாக அகற்றப்படுகிறதோ, அப்போது தான் தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்பது தாம் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

786’ என்ற எண்களில் முடியும் நூறு ரூபாய் நோட்டு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை: ‘இபே’ நிறுவனத்தால் பரபரப்பு

‘786’ என்ற எண்களில் முடியும் நூறு ரூபாய் நோட்டை ‘இபே’ நிறுவனம் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தயாரிப்புப் பொருட்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யலாம். விற்பனை செய்யப்பட்ட தொகைக் கான கமிஷனை மட்டும் ஆன் லைன் வர்த்தக நிறுவனம் எடுத்துக் கொண்டு, மீதித் தொகையை பொருளை விற்றவரிடம் கொடுத்து விடும்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல நிறுவனங்கள் இப்படியே செயல்படுகின்றன. இதேபோல ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் ‘இபே’ நிறுவனம் மூலம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் ஒரு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் புனித எண்ணாக கருதும் ‘786’ என்ற எண்ணுடன் முடியும் நூறு ரூபாய் நோட்டை விற்பனை செய்வதாக ‘இபே’ நிறுவனம் மூலம் சிலர் அறிவித்துள்ளனர். இந்த நூறு ரூபாய் நோட்டின் விலை ரூ.50 ஆயிரம். தபால் செலவுக்கு கூடுதலாக ரூ.90. மொத்தம் 50 ஆயிரத்து 90 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்துபவர்களுக்கு இரு நாட்களில் அவர்களின் முகவரிக்கு ‘786’ என்று முடியும் நூறு ரூபாய் நோட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று ‘இபே’ நிறுவன இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 50 ரூபாய் நோட்டை ரூ.254-க்கும், 20 ரூபாய் நோட்டை ரூ.294-க்கும், 10 ரூபாய் நோட்டை ரூ.244-க்கும், 5 ரூபாய் நோட்டை ரூ.549-க்கும் விற்பனை செய்ய அதே நிறுவன பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொது மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி, அநியாய விற்பனையை வெளிப் படையாக செய்பவர்களுக்கும், ‘இபே’ நிறுவனத்துக்கும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் முகமது மைதீன் கூறும்போது, “786 என்பது ‘இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்’ என்ற வார்த்தை களின் எண்களுக்கான சுருக்கமா கும். இந்த எண்ணுக்கும் இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொடர்பு இல்லை. இதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். பொதுமக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி, அதை பணமாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கூறும்போது, “786 என்பது வெறும் எண் மட்டும்தான். இது புனித எண் என்பது தவறானது. இதை வைத்து மக்களிடம் பணம் பறிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

செருப்பு வீச்சு அரசியல்: கைமாறு என்ன?

மத்திய அமைச்சர் அண்ணன் பொன்னார் மீது செருப்பு எறிந்தவன் யார்?
திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துவாகப் பிறந்த முனுசாமியின் கிறிஸ்தவ மகன் சாலமன்.
அவன் சார்ந்த அமைப்பு எது?
இந்திய மக்கள் முன்னணி (ஈப்ஃப்), மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற நக்சல் இயக்கத்தின் உறுப்பினர்….செருப்பு எறிய திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சேலம் சென்றுள்ளார்.
நக்சல்களின் லேடஸ்ட் தமிழ் சேவை என்ன ?
சி.ஆர்.பி.எப் படையில் வேலை பார்த்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழன் சங்கரைக் கொன்றது!
பொன்னார் மீது ஏன் இந்தச் செருப்புத் தாக்குதல் ?
1. ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க பெரும் பங்காற்றினார்.
2. நெடுவாசல் போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் முடித்து வைத்தார்.
3. இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைத்தார்.
4. தமிழக மீனவர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளாது.
5.தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களை இலங்கைச் சிறையிலிருந்து மீட்டார்
இலங்கையிலும், அரபு நாடுகளிலும் சிக்கிய பல மீனவர்களை சிறையிலிருந்து மீட்டார்.
6. அப்கானிஸ்தானில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழ் பாதிரியாரை மீட்டார் (பாம்புக்கு பால் வார்த்தது)
7. குளச்சல் துறைமுகம், சாலைகள், மேம்பாலங்கள், கடலூர் துறைமுகம் விரிவாக்கம் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார்.
தமிழகம் அவருக்கு என்ன செய்தது ?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
இந்தக் குறளைப் புரிந்து கொள்ளும் தமிழனின் முடிவுக்கு இந்தக் கேள்வியை விட்டு விடுவோம்!
கட்டுரை பால. கௌதமன்

அமைச்சர் மீது செருப்பு வீச்சு: பின்னணி என்ன?

கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகளின் ஈனத்தனம்
தமிழகத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் கடந்த திங்கள்கிழமை இரவு அவருடைய நண்பர்கள் அறையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த துயரச் செய்தியை கேள்விப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் உடனடியாக டெல்லி சென்று துக்கம் விசாரித்ததோடு நின்றுவிடாமல் மாணவனின் பெற்றோரையும், அவரது உறவினர்களையும் டெல்லியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு முத்துகிருஷ்ணனின் மரணத்திற்கான காரணத்தையும் விசாரித்தார். முத்துகிருஷ்ணனுக்கு டெல்லியில் காப்பாளராக இருக்கும் பேரா.சுகுமார் அவர்களையும் நேரில் சந்தித்து பிற விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். 
அவர் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்ப முயற்சி எடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்திருக்கிற முத்துகிருஷ்ணனின் சம்பவத்தை உடனடியாக விசாரிக்க பல்வேறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார். டெல்லியில் போஸ்ட் மார்ட்டம் முடிந்து அவரது உடல் பெற்றோரின் கைகளுக்கு வரும்வரை உடனிருந்து பல்வேறு உதவிகளை செய்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள். 
மற்றொரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் உடனடியாக சென்று விசாரித்தார். அப்போதுவரை எப்ஐஆர் போடவில்லை. உடனடியாக டெல்லி காவல்துறை எப்ஐஆரை போட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை மீடியா வாயிலாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இந்த மரணத்தை எஸ்ஸி எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் பதிந்து விசாரணையும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று முத்துகிருஷ்ணன் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க அதையும் வலியுறுத்தினார் நிர்மலா சீதாராமன் அவர்கள். மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு உரிய விசாரணையும் நீதியும் கிடைக்க மத்திய அரசோடு பேசுவோம் என்றும் வாக்குறுதி அளித்தனர். இவர்களின் அழுத்தத்தின் காரணமாகவே விசாரணை ஆரம்பித்திருக்கிறது. 
இதோடு மட்டும் நின்றுவிடாமல் முத்துகிருஷ்ணனின் உடல் டெல்லியிருந்து சென்னை வர விமானத்திற்கு ஏற்பாடு செய்து முத்துகிருஷ்ணன் உடலுடன் கூடவே வந்தார் பொன்.இராதாகிருஷ்ணன். இவை எல்லாவற்றையும் கூடவே இருந்து பார்த்து நெகிழ்ந்து போனார் முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம். சென்னை விமான நிலையத்தில் வந்தவுடன் அப்போது அங்கிருந்த மக்களால் புறக்கணிக்கப்பட்ட சில குழுக்கள் (விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிசவாதிகள் – 20 அல்லது 25பேர் இருப்பார்கள்) அமைச்சரை எதிர்த்தும் பிஜேபி அரசை எதிர்த்தும் குரல் எழுப்பினர். முத்துகிருஷ்ணனின் தந்தை அப்போதே அவர்கள்மீது எரிச்சல் அடைந்து ஆவேசமானார். உங்களுக்கு அமைச்சரைப் பற்றி என்ன தெரியும்? என் மகனின் உடலை வைத்து நீங்கள் அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள் என்று கோபமாகவே எரிந்து விழுந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த குழுக்கள் தங்களின் அரசியல் பிழைப்பு இங்கு எடுபடாது என்பதை புரிந்துகொண்டு ஓட்டம் பிடித்தனர். 
நேற்று பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் அவர்கள் சேலத்திற்கு சென்று முத்துகிருஷ்ணனின் இல்லத்திற்கு சென்றார். அங்கு துக்கம் விசாரித்து விட்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நீதி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்தார். 
சென்னையிலிருந்து நேராக முத்துகிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போதும் பொன்.இராதாகிருஷ்ணன் அந்த உடலுடன் சேலத்திற்கு பயணமானார். கடைசியாக இன்று முத்துகிருஷ்ணனின் உடலுக்கு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் அஞ்சலி செலுத்தி மாலையை முத்துகிருஷ்ணனின் பாதத்தில் வைத்தார். முத்துகிருஷ்ணனின் தந்தை அந்த ஒரு மாலையை மட்டும் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அணிவித்தார். என் மகனின் உடல் இங்கு வந்திருக்கிறது என்று சொன்னால் அது இவரால்தான் என்று உள்ளம் நெகிழ்ந்து அங்கிருப்போரிடம் கூறினார். 
இதனிடையே சென்னையில் அசிங்கப்பட்ட அந்த குழுக்கள் இங்கேயும் ஒரு திட்டம் போட்டு மாலை அணிவித்து விட்டு வந்த பொன்.இராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசினர். மத்திய அமைச்சர் பெருந்தன்மையாக அதை விட்டுவிட சொல்லிவிட்டார். ஆனால் முத்துகிருஷ்ணனின் தந்தை கடும் கோபம் அடைந்தார். என் மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை அவமரியாதை செய்வதற்கு நீங்கள் யார்? என் மகனின் உடல் டெல்லியில் இருந்தபோது ஒருவனாவது வந்தீர்களா? என் மகனின் உடலை வைத்து அரசியல் செய்வதற்கு உங்களுக்கு எந்த யோக்யதையும் இல்லை என்று பொரிந்து தள்ளிவிட்டார். மத்திய அமைச்சர் செய்த உதவிகள் என்னவென்றாவது தெரியுமா? அவரிடன் உதவி இல்லாமல் உடலை இங்கு கொண்டுவந்திருக்க முடியுமா? நீங்களோ உங்கள் அமைப்புகளோ, கட்சிகளோ ஏதாவது ஒரு சிறு உதவியாவது செய்தீர்களா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டு அவர்களை விரட்டினார். 
மத்திய இணை அமைச்சர் அவர்கள் செருப்பு வீசிய நபரை கைது செய்ய வேண்டாம், வழக்கு போட வேண்டாம். இவர் உண்மை தெரியாமல் யாரோ சொல்லிக் கொடுத்ததை செய்திருக்கிறார். விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
தன்னுடைய தமிழ் சகோதரன் ஒருவன் டெல்லியில் இறந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டு நெஞ்சம் பதைபதைத்து தன் சொந்த சகோதரன் இறந்துவிட்டால் எப்படி ஒரு அண்ணன் கூடவே இருந்து பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லி கடைசி வரை இறந்த உடலோடு இருப்பாரோ அதுபோலவே இருந்த மத்திய இணை அமைச்சரை அரசியல் பிழைப்புக்காக ஒருவன் செருப்பு வீசி இருக்கிறான் என்று சொன்னால் அவன் தன் தாயைக்கூட விலை பேசி விற்பவனாகவே இருப்பான். அதை மெய்ப்பித்து காட்டியிருக்கிறான் சாலமன் என்கிற புரோக்கர்.
News by Gowdaman

தினகரன் வெற்றி பெற்றால் நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன்: சாரு நிவேதிதா

.. 
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என ஆர். கே. நகர் தொகுதி மக்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அவர் தோல்வியை தழுவார் என ஓ. பி. எஸ் அணியினர் மற்றும் ஜெ. வின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் தினகரனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என தினகரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆர். கே.
நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால், இந்த நாட்டை விட்டே வெளியேறி விடுவேன் என எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தன் அமைப்பை தடை செய்த விவகாரம்: மத போதகர் சாகிர் நாயக்கின் மனு தள்ளுபடி!

புதுதில்லி: இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்னும் தன்னுடைய அரசு சாரா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததை எதிர்த்து சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
வெளிநாட்டில் வசிக்கும் சாகிர் நாயக் என்பவர் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்னும் பெயரில் ஓர் அரசு சாரா அமைப்பை நிறுவி அதன் மூலம் இஸ்லாமிய மதம் தொடர்பான பிரச்சாரங்களை செய்து வருகிறார். நிறைய தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் அவர் இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
சாகிர் நாயக்கின் அமைப்பு மூலம் இளைஞர்கள் மத்தியில் மதம் சார்ந்த அடிப்படைவாத எண்ணங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக அவர்கள் ஏதேனும் தீவிரவாத இயக்கங்களில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கருதிய மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு அறிவிப்பு மூலம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தை ஐந்து ஆண்டுகள் தடை செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சாகிர் நாயக் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தடைக்கு தகுந்த காரணங்களோ அல்லது ஆவணங்களோ தாக்கல் செய்யப்படவில்லை என்றும், முன்னதாக விளக்கம் கோரி நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் சாகிர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது மத்திய உள்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டதற்கு காரணமான ரகசிய ஆவணங்கள் தாக்கல் செய்யயப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி சச்தேவா பிரச்சாரகர் சாகிர் நாயக்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் உடனடியாக தடை செய்யயப்பட்டதற்கு போதுமான காரணங்கள் உள்ளதாகவும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டே இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை பயன்படுத்த உத்தரவு

*கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை; x உத்தரவு
  
இத்தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. 150 மதிப்பெண்கள் வினாக்களில், 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் ’அப்ஜெக்டிவ்’ வகையாக கேட்கப்படும். இதற்கான விடைகள், தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் நிரப்ப வேண்டும். 
கடந்தாண்டு புளு அல்லது கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாக்களால் மாணவர்கள் விடை நிரப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இந்தாண்டு கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டும் தான் நிரப்ப வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
*’ஆன்சர் கீ’ வெளியிடப்படுமா*
பொது தேர்வுக்கு பின், மாணவர் நலன் கருதி அனைத்து தேர்வு வினாக்களுக்கும், ’ஆன்சர் கீ’ விவரம், ஆன்லைனில் தேர்வுத்துறையால் வெளியிடப்படும். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு மட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாள் புகைப்பட நகல் கேட்டு விண்ணப்பித்தால் ’தியரி’ பகுதிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 
75 மதிப்பெண் பகுதியான ’ஓ.எம்.ஆர்., ஷீட்’ நகல் வழங்குவதில்லை. எனவே, இந்தாண்டு முதல் ’ஆன்சர் கீ’ வெளியிட்டு, ஓ.எம்.ஆர்., ஷீட் புகைப்பட நகல் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.