தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர்
ஸ்ரீநரசிம்மர் கோயிலில் சுவாதி
நட்சத்திரத்தன்று மழை வேண்டி வருண ஜபம் ,யாகம்
ஆகியவை நடைபெற்றது, தொடர்ந்து ஸ்ரீ
நரசிம்மருக்கு16 வகை மூலிகைகளால்
மூல மந்திர ஹோமம்,விஷ்ணு சூக்த
ஹோமம், மகா லட்சுமி ஹோமம் மற்றும் 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன தொடர்ந்து பெருமாள்
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருக்கோயிலையும், தெப்பக்குளத்தை பக்தர்களின்
ராம கோஷம் ஒலிக்க தீர்த்த
வலம் வந்து வருண ஜெபம் செய்த தீர்த்தத்தை ஸ்ரீ சந்நிதியில் உள்ள கிணற்றில்
சேர்க்கப்பட்டது ஏற்பாடுகளை நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபாவினரும் பொதுமக்களும் செய்திருந்தனர்



