Home Blog Page 5663

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு

   
கோவை: 
’டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை, ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 421 பள்ளிகளில் இருந்து,34 ஆயிரத்து 505 மாணவர்கள், 101 தேர்வு மையங்களில், எழுதுகின்றனர்.
இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 98 பள்ளிகளில் இருந்து, 8 ஆயிரம் மாணவர்கள், 38 மையங்களில், பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்களுக்கு பிரத்யேகமாக, ஐந்து தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொருத்தவரை, தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகள் முடிவடைந்தன. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, இன்று (மார்ச் 16ம் தேதி) நடக்கிறது. வரும் 30ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன.
பிளஸ் 2 மாணவர்களுக்கும், வரும் 31ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன. ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), ஏப்ரல் 29, 30 ஆகிய இரு தேதிகளில் நடப்பதால், பொதுத்தேர்வு மதிப்பீட்டு பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது, தேர்வு மையங்களில் இருந்து, நோடல் மையத்திற்கு வரும் விடைத்தாள்களை, தனித்தனியாக பிரித்து அடுக்கும் பணிகள் நடக்கின்றன. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் கொண்ட குழு மேற்பார்வையில், வரும் 31ல், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.
ஏப்., 1 – 12ம் தேதிக்குள், அனைத்து பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, கோவை கல்வி மாவட்டத்தில், அரசு உதவி பெறும் மணி மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பொள்ளாச்சியில், நகராட்சி மேல் நிலைப்பள்ளியும், விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள்களை, எந்த மாவட்டத்திற்கு, அனுப்ப வேண்டுமென, வரும் 28ம் தேதி தான், அரசு தேர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்படும்.
’கோவை மாவட்டத்திற்கு வரும், விடைத்தாள்களின் எண்ணிக்கையை கொண்டு, மதிப்பிடல் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
’இதேபோல், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்த, கோவை கல்வி மாவட்டத்தில், ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ நேருமகா வித்யாலயா பள்ளி, சுங்கம், நிர்மலா மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சியில், பி.கே.டி., மெட்ரிக் பள்ளியும், மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
’ஏப்., 3ம் தேதி முதல், பிளஸ் 2 விடைத்தாள் திருத்த, அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

‘அம்மா உணவகம்’ தொடரும்: ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகன், அம்மா உப்பு, அம்மா மருந்துகம், அம்மா காய்கறி அங்காடி போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் 2017 – 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்ட நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகன், அம்மா உப்பு, அம்மா மருந்துகம், அம்மா காய்கறி அங்காடி போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படும்" என்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பின்னர், பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசின் நலத்திட்டங்களுக்கு 'அம்மா' என்று பெயர் சூட்டக்கூடாது என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அம்மா உணவகன், அம்மா உப்பு, அம்மா மருந்துகம் திட்டங்கள் தொடரும் என ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார்.

தினகரன் – சசிகலாவுக்கு இடையே வெடித்தது மோதல்?

தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவை ஆர்.கே.நகரில் வேட்பாளராக்கி இருந்தால் எம்ஜிஆரின் மகளை எதிர்க்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யவும் தன் மீதான எதிர்ப்பு வாக்குகளை சிதறாமலும் செய்திருக்கலாம் என சசிகலா கருதுகிறார். தன்னை சந்திக்க வந்தவர்களிடம் இதை தான் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தினகரன் தன் பேச்சை கேட்காமல் ஜோதிடர் ஒருவர் சொன்னார் என்பதற்காக தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டுள்ளார் என செம கடுப்பில் உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பள்ளிக்கல்விக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்விக்கு பணம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசின் பட்ஜெட்டில் 26 ஆயிரத்து 932 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது மற்ற துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து அத்துறையின் மேல் தனி கவனம் செலுத்தி செயல்பட்டு வந்ததார்.
பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணனி, விலையில்லா 2 செட் சீருடை, விலையில்லா புத்தகங்கள், விலையில்லா காலணிகள், இலவச பேருந்து கட்டணம், பென்சில் , கிரேயான் என பள்ளிக்குழந்தைகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்கி குழந்தைகள் மத்தியில் மகத்தான இடம் பிடித்திருந்தார்.
அத்தகைய பெருமை வாய்ந்த ஜெயலலிதாவின் மறைவு பள்ளிக் குழந்தைகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா இல்லாமல் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட் அப்படியே ஜெயலலிதாவின் பாணியிலேயே உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை சலுகைகளும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2017 – 18 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லா அளவுக்கு பள்ளிக்கல்வித் துறைக்கு 26,932 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பள்ளி மாணவ-மாணவிகளை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கச் செய்துள்ளது.

நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து…

நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து…
* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
* காவல்துறைக்கு ரூ 1,483 கோடி
* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
* தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டை மூன்று அமைச்சர்கள் புறக்கணிப்பு: எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி

தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நிகழ்வில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மூன்று அமைச்சர்கள் வராதது கண்டு அதிமுக எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் சபையின் உள்ளே தங்களுக்குள் முனுமுனுத்துக்கொண்டார்கள்.
இதுகுறித்து விசாரித்தபோது, தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க தம்பிதுரையுடன் மூன்று அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். சசிகலாவின் தற்காலிய பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்குமாறும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்த இவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த அதிமுக்கிய விஷயத்திற்காக டெல்லி செல்லும் நோக்கத்தில் இன்றைய பட்ஜெட்டை புறக்கணித்திருக்கிறார்கள் அமைச்சர்கள்.
இதுகுறித்து ஆளும்கட்சி எம்எல்ஏக்களிடம் நாம் பேசியபோது, ''நிதிநிலை அறிக்கை என்பது ஒவ்வொரு துறை சார்ந்தும் முக்கியமானது. அதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது துறை சார்ந்து என்ன அறிவிப்புகள் வெளியாகிறது என்பதை கவனிப்பது அவசியம். அதனால் பட்ஜெட் தாக்கலின்போது எந்த அமைச்சரும் கலந்து கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். தவிர, பட்ஜெட்டை அமைச்சர்களே புறக்கணிப்பது அவர்களது ஆட்சியையே புறக்கணிப்பதற்கு சமம். அமைச்சர்களுக்கு ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கையில்லை, நிதிநிலை அறிக்கை மீதும் நம்பிக்கையில்லை என தெரிவித்தனர்.

விதிமுறை மீறும் வாகனங்கள் நடவடிக்கை எப்போது


தென்காசிக்கு  வரும் வெளியூர் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது  ஏனெனில் குற்றாலம் அருகில் இருப்பதால் பெருபாலான வாகனங்கள்  தென்காசியை சந்திக்காமல் செல்வதில்லை இதனால் போக்குவரத்து மிகுந்த நகரமாக மாறிவருகிறது     தென்காசி தங்கபாண்டியன் மருத்துவமனை அருகில் உள்ள சிக்கனலில் தினந்தோறும் வாகனங்கள்
குறிப்பிட்ட இடத்தில் (வெள்ளைக்கோட்டில்) நில்லாமல் சிக்கனல் சிக்கனல்
கம்பத்தையும் மீறி  வாகனம் நிற்கிறது  இப்பகுதி தென்காசிக்கு ,திருநெல்வேலி ரோட்டில் இருந்து உள்ளே நுழைவும் ,தென்காசியில் இருந்து திருநெல்வேலில் கடையம் ,பாபநாசம் போன்ற பகுதிகளுக்கு வெளியேறும் முக்கிய சந்திப்பாக இருக்கிறது இந்த சிக்னலில் தென்காசி உள் அதவாது தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விதிமுறைய மீறி வந்துவிடுகிறது இதனால் மட்டப்பா தெருவில் வரும் வாகனங்கள்  திருப்பத்தில் திரும்ப முடியாமல் அவதிகுள்ளாகின்றன்ர் 
இதனால் மட்டப்பாத் தெரு நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன இந்த நெருக்கடி பழைய பேருந்து நிலையம் ,காசிவிஸ்வநாதர் ஆலயம் வரை நீடிக்கிறது அதன் பின் போக்குவரத்து காவலர்
நெருக்கடிகை சரி செய்கிறார் அதற்குப்பதில் விதிமுறையை மீறும்போதே 
வாகனங்களை தடுக்கலாமே ,மேலும் காவலர்கள் வேகாத வெயிலில் நிற்கதயங்கி நிழலில்
ஒதுங்கிவிடுகின்றனர் இவர்களுக்கு மினி பேன் பொருத்தப்பட்ட தொப்பி வழங்கலாம்
மேலும் இவர்களுக்கு நீர்மோர் அடிக்கடி கொடுக்க ஏற்ப்பாடு செய்யலாம் இவர்களும் மனிதர்கள் தானேஅரசு கவனிக்குமா ?

ரேசனில் அரிசி, பருப்பு தட்டுப்பாடு:போராட்டம் நடத்திய கனிமொழி கைது

சென்னை: மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ரேசன் பொருட்களுக்க தட்டுப்பாடு நிலவுவதாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மட்டும் மதுபாட்டில்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் கூறியுள்ளார். ரேசன் கடை முன்பு போராட்டம் நடத்திய கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிப்பதில்லை என்பது திமுகவினர் குற்றச்சாட்டு. பல தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் ஆய்வு நடத்தி ஸ்டாலினுக்கு அறிக்கை அளித்தனர்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இன்று ரேசன்கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். சென்னை ராயப்பேட்டையில் கனிமொழி எம்பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கடையை முற்றுகையிட முயன்ற கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தின் போது பேசிய கனிமொழி, மாநிலம் முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ரேசன் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டினார். டாஸ்மாக் கடைகளில் மட்டும் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
விலையில்லா அரிசி கொடுத்தாலும் அது தரமானதாக இருப்பதில்லை என்று கூறிய கனிமொழி, மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா? என்பதைப்பற்றி அமைச்சர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்றார்.
அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. தங்களின் பதவியை பாதுகாத்துக்கொள்ளவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று கூறிய கனிமொழி, மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.
மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், லாரி தண்ணீர் கூட பெரும் போராட்டத்திற்கு பிறகே கிடைப்பதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார். பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காகவே இந்த போராட்டத்தை எதிர்கட்சியான திமுக நடத்துவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைக் கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

“கமல் சினிமாவை மட்டும் கவனித்தால் போதும்…” : வைகை செல்வன்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு பிரவேசம் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடை தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து தீபா பேரவையை சேர்ந்த நிர்வாகிகள், ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று, வாக்குசேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று இரவு தீபா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின், நினைவிடத்துக்கு சென்றார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த தீபா, தன்னை சிலர் மறைமுகமாக மிரட்டுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிமுக செய்தி தொடர்பாள வைகை செல்வன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வருகிறார். இது எங்களுக்கு சந்தோஷம். அவரை வரவேற்கிறோம். ஆனால் அதிமுகவினர் மீது வீண் பழியை சுமத்தி வருவது தொடர்கதையாக கொண்டுள்ளார். இதுபோன்று அவர் பொய் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா, தனது உறவினர்கள் யாரையும் அரசியலுக்கு அழைக்க வில்லை. சேர்க்கவில்லை. அப்படி செய்வதாக இருந்தால், தீபாவை எப்போதோ அழைத்து வந்திருப்பார். ஆனால், சசிகலாவை கடந்த 30 ஆண்டுகளாக உடன் வைத்திருந்து, அரசியல் குறித்து கற்று கொடுத்துள்ளார். அவரும் அறிந்து இருக்கிறார்.

சில நாட்கள் பிரிந்து இருந்த சசிகலாவை மீண்டும், கட்சியில் இணைத்து கொண்டதும் ஜெயலலிதாதான். இது அதிமுகவினர் அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது, மீண்டும் மீண்டும் தன்னை யாரோ மிரட்டுவதாக பொய் சொல்லிவரும் தீபா என்ன ஆதாயம் தேடுகிறார் என தெரியவில்லை.

அதேபோல் நடிகர் கமல், தனியார் டிவிக்கு பேட்டி அளித்தபோது, அரசியலில் மாற்றம் வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கூறினார். அவருக்கு சினிமா மட்டும் தொழில் அதை மட்டும் பார்த்தால், போதும்.

சினிமாவுக்கு கனவும், கற்பனையும் தேவை. அந்த கனவையும், கற்பனையையும் சினிமாவில் மட்டும் கமல் செலுத்த வேண்டும். தேவையில்லாமல், அரசியலில் செலுத்துவது சரியானது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

பதக்கம் வென்றார் தமிழக ஐபிஎஸ் அதிகாரி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் எம். கோட்னீஸ், ஐ.பி.எஸ்அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும்  காவல்துறையினருக்கிடையேயான   அகில இந்திய அளவிலான  துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.  தமிழகத்திலிருந்து  ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் ரைபிள் பிரிவில் பதக்கம் வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.