தென்காசிக்கு வரும் வெளியூர் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஏனெனில் குற்றாலம் அருகில் இருப்பதால் பெருபாலான வாகனங்கள் தென்காசியை சந்திக்காமல் செல்வதில்லை இதனால் போக்குவரத்து மிகுந்த நகரமாக மாறிவருகிறது தென்காசி தங்கபாண்டியன் மருத்துவமனை அருகில் உள்ள சிக்கனலில் தினந்தோறும் வாகனங்கள்
குறிப்பிட்ட இடத்தில் (வெள்ளைக்கோட்டில்) நில்லாமல் சிக்கனல் சிக்கனல்
கம்பத்தையும் மீறி வாகனம் நிற்கிறது இப்பகுதி தென்காசிக்கு ,திருநெல்வேலி ரோட்டில் இருந்து உள்ளே நுழைவும் ,தென்காசியில் இருந்து திருநெல்வேலில் கடையம் ,பாபநாசம் போன்ற பகுதிகளுக்கு வெளியேறும் முக்கிய சந்திப்பாக இருக்கிறது இந்த சிக்னலில் தென்காசி உள் அதவாது தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விதிமுறைய மீறி வந்துவிடுகிறது இதனால் மட்டப்பா தெருவில் வரும் வாகனங்கள் திருப்பத்தில் திரும்ப முடியாமல் அவதிகுள்ளாகின்றன்ர்
இதனால் மட்டப்பாத் தெரு நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன இந்த நெருக்கடி பழைய பேருந்து நிலையம் ,காசிவிஸ்வநாதர் ஆலயம் வரை நீடிக்கிறது அதன் பின் போக்குவரத்து காவலர்
நெருக்கடிகை சரி செய்கிறார் அதற்குப்பதில் விதிமுறையை மீறும்போதே
வாகனங்களை தடுக்கலாமே ,மேலும் காவலர்கள் வேகாத வெயிலில் நிற்கதயங்கி நிழலில்
ஒதுங்கிவிடுகின்றனர் இவர்களுக்கு மினி பேன் பொருத்தப்பட்ட தொப்பி வழங்கலாம்
மேலும் இவர்களுக்கு நீர்மோர் அடிக்கடி கொடுக்க ஏற்ப்பாடு செய்யலாம் இவர்களும் மனிதர்கள் தானேஅரசு கவனிக்குமா ?



