Home Blog Page 5667

உழைப்பே உயர்வு எனக் காட்டும் பெருமாள்!

 

ஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து, “நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது…?” ன்னு கேட்டார்.

எல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி னு சொன்னாங்க.

“ஏன்…. பதில் தெரியுமா”…ன்னு கேட்டார் பயிற்சியாளர்!

ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலைச் சொன்னாங்க.

அவங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார் “எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது. ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார். மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் குடுக்கறார். பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை. மற்ற கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்.  பகலில் ஓய்வு உண்டு. ஆகையால் கடுமையாக உழைத்தால்தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா! என்று கேட்டார்….

அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை

 

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. “இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?” எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான்.

பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை பார்க்கிறான்.

அவரிடம் சென்று, “ஏய்… வானரமே… உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே… ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.

தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க திருவுள்ளம் கொள்கிறார்.

“சரப்பாலம், என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும்போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும்?”

“ஏன் முடியாது… நீ நின்றால் தாங்கும்படி இந்த நதியின் குறுக்கே நான் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல… எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும்” என்கிறான் அர்ஜூனன்.

தனது காண்டீபதின் சக்தி மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்த அர்ஜூனன், “பந்தயத்தில் நான் தோற்றால், வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன்” என்கிறான்.

“நான் தோற்றால், என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன்” என்கிறான் அனுமன்.

அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து இராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினான்.

அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும், அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தது தான் தாமதம், பாலம் தகர்ந்து சுக்குநூறானது. அனுமன், ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.

“பார்த்தாயா என் இராமனின் சக்தியை?” என்கிறான் அனுமன் கடகடவென சிரித்தபடி.

தனது வில் திறமை இப்படிபோயாகிப் போனதே என்ற வருத்தம் அவனுக்கு. “போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான், தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே… நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள்… கிருஷ்ணா என்னை மன்னிக்கவேண்டும்” என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும், தனது பந்தயத்திலிருந்து பின்வாங்க அவன் தயாராக இல்லை.

அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது, “என்ன நடக்கிறது இங்கே… என்ன பிரச்சனை?” என்று ஒரு குரல் கேட்டது.

குரல் கேட்ட திசையில், ஒரு அந்தணர் தென்பட்டார்.

இருவரும் அவரை வணங்கி, நடந்ததை கூறினார்.

“பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு… மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும்… பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று” அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனணன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லியபடி பாலம் கட்டினான்.

தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால், கர்வம் தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை இராம நாம ஜெபம் செய்யவில்லை.

அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார்… நிற்கிறார்… ஓடுகிறார்… ஆடுகிறார்… பாலம் ஒன்றும் ஆகவில்லை.

“பார்த்தாயா எங்கள் கண்ணனின் சக்தியை ? நீயே சொல் யார் இப்போது பெரியவர்? எங்கள் கண்ணன் தானே?”

அர்ஜூனனின் கேள்வியால் அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அங்கே சாட்சியாக நின்றுகொண்டிருந்த அந்தணரை நோக்கி வந்து “யார் நீங்கள்?” என்று கேட்கிறார்.

அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக பரந்தாமன் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர்.

“நீங்கள் இருவருமே தோற்கவில்லை. ஜெயித்தது கடவுள் பக்தியும் நாம ஸ்மரணையும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது, தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று இராம நாமத்தை ஜபித்தான். இராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன், தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி இராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே தவிர நீங்கள் அல்ல!!” என்றார்.

கர்வம் தோன்றும்போது கடமையும் பொறுப்புக்களும் மறந்துவிடுகின்றன. எனவே தான் சும்மா இருந்த அனுமனை சீண்டி பந்தயத்தில் இறங்கினான் அர்ஜூனன்.

“உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை.
ஆனால் இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா, இந்த வானரன் வேறு யாருமல்ல, சிரஞ்சீவி அனுமனே!”

உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டுகிறார். அர்ஜூனன், அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறான்.

அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர், “ஆஞ்சநேயா, பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும்வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது!”

“அப்படியே ஆகட்டும் பிரபோ!” என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.

இன்றும் பாரதப் போர் சம்பந்தப்பட்ட படங்களில் அர்ஜூனனின் தேரில் அனுமனின் உருவம் இருப்பதை பார்க்கலாம். அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை இது தான்.

திருப்பம் தரும் திருமலை! : தகவல்கள்

 

திருப்பதி வேங்கடாசலபதி, பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். அதோடு, பிறப்பு – இறப்பு வட்டத்திலிருந்து மனிதனை விடுவித்து, அவனுக்கு முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே தெய்வம். புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சி.

திருப்பதி வேங்கடாசலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சில புள்ளிவிவரங்கள்.

* 32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.

* திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.

* திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது. அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். நாட்டிலேயே மிகப் பெரிய கோவில் நிர்வாக அமைப்பு இதுதான். ஒரே கோவிலில் அதிகபட்ச எண்ணிக் கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் இக்கோவிலில்தான். வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நிர்வாகத்தின்கீழ் வழங்கப்படும் தங்கும் விடுதிகளை அமைத்துள்ளதில் இது முதலிடத்தை வகிக்கிறது. இங்கு 7200 அறைகள், குடில்கள் மற்றும் சத்திரங்கள் இருக்கின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 60,000 பேர் தங்கலாம்.

தினமும்சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.லட்டு தயாரிப்புக்காக மற்றும் ஆலயப் பணிகளுக்காக மிக அதிக எண்ணிக்கையில் நெய்யைப் பயன்படுத்தும் கோயில் இது. வருடத்துக்கு 1,800 டன்கள். மிக அதிக அளவில் மின்சக்தியைப் பயன்படுத்தும் கோவிலும் இதுதான். ஒரு மாதத்துக்கு 2 கோடி யூனிட்டுகள். நாட்டிலேயே பெரிய அளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி உணவும் பிரசாதமும் தயாரிக்கும் கோவில் இது. ஒரு மணி நேரத்திற்கு 2.2டன் நீராவி இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

* 30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோவில் நிர்வகித்து வருகிறது.

கணினித் தொழில்நுட்பத்தைப் பரந்த அளவில் பயன் படுத்தும் முதல் கோயில் இதுதான். இக்கோவிலுக்கு என்று தனியாக ஒரு ‘கால் சென்டரே’ இருக்கிறது. தங்கும் வசதி, தரிசன டிக்கெட், உண்டியல், போக்குவரத்து ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1884ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஸ்ரீ வேங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டிடக்கலைப் பள்ளி. நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981ல் இங்கு துவக்கப்பட்டது. நாட்டில் முதன்முறையாக, பிச்சைக்காரர்களுக்காக, படுக்கைகள், சாப்பாடு, மருத்துவ வசதி, ஆடைகள் ஆகியவற்றை வழங்கும் பிச்சைக்காரர்கள் இல்லம் இங்கு துவக்கப்பட்டது.தொழுநோயாளிகளுக்காக நாட்டிலேயே பெரிய தொழுநோய் இல்லம் இங்கு துவக்கப்பட்டது. அதில் இலவச மருத்துவ வசதி மற்றும் பராமரிப்புச் சேவை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக, அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகம் இங்கு 1943 ல் நிறுவப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும அறக்கட்டளைகள்…

1. ஸ்ரீவேங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை

‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.

2. ஊனமுற்றோருக்கான அறுவைச் சிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை

இந்த மருத்துவ அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, பிறவி ஊனங்கள், முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பானவற்றிற்கு இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.

3. ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக் கட்டளை

இந்த அறக்கட்டளை, கோவில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.

4. ஸ்ரீ வேங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை

2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக் காகப் பாடுபட்டு வருகிறது.

5. ஸ்ரீ வேங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை

வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.

6. பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை

திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.

7. ஸ்ரீ வேங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை

புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.

8. ஸ்ரீ வேங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை

சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சீறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.

திருப்பதியில் அஷ்ட தள பாத பத்மாராதனையின் துவக்கக் கதை

திருப்பதியில் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க,
அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு ஆர்ஜித சேவைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது ‘அஷ்டதள பாத பத்மாராதனை’ சேவை.
இந்த சேவை துவங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.

?  ‘அஷ்டதள பாத பத்மாராதனை’ எனப்படும் இந்த ஆர்ஜித சேவை திருமலையில் 1984 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருமலை திருப்பதிக்கு புறப்பட்டார். திருப்பதியை அடைந்தவுடன் ஏழு மலைகளையும் கடந்து நடந்தே சென்ற அவர் திருமலையை  அடைந்தார்.
மகா துவாரத்துக்கு ( பிரதான நுழைவாயில் )  சென்ற அவர், அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை கேட்ட அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவருக்கொருவர்  பார்த்துக் கொண்டனர்.  அவரை நேரே தேவஸ்தானத்தின் உயரதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். அவர்களும் அதிர்ச்சியடைந்து அவரை ஆலயத்தின் செயல் அலுவலரிடம் (EO) அனுப்பி வைத்தனர்.

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம் வேறு ஒரு விஷயம்…

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது. திருமலையின் நிர்வாகம் முழுக்க முழுக்க இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதன் பொன்விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட தேவஸ்தானம் தரப்பில் அப்போது திட்டமிட்டு கொண்டிருந்தனர். இதற்காக பல நாட்கள் பல ரவுண்ட் மீட்டிங்குகள் நடத்தப்பட்டன. ஆனாலும் பொன்விழாவுக்கு என்ன செய்வது, எந்த மாதிரி கொண்டாடுவது என்று எந்தவொரு முடிவுக்கும் அவர்களால் வர இயலவில்லை. இது போன்றதொரு சூழ்நிலையில் தான் அதிகாரிகள் தேவஸ்தான கமிட்டியிடம் வந்து அந்த முஸ்லீம் பக்தரின் கோரிக்கை பற்றி தெரிவித்தனர்.

அப்போது போர்டு ரூமில் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களின் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. குமாஸ்தா ஒருவர் மெல்ல அறைக்குள் சென்று, EO வை சந்தித்து, முஸ்லிம் பக்தர் ஒருவர் குறிப்பிட்டதொரு கோரிக்கையுடன்  கூறி, தங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்று காத்திருப்பதாக தெரிவித்தார்.

“மிக மிக முக்கியமான மீட்டிங் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. என்னால், எழுந்து வெளியே செல்ல முடியாது. அந்த பக்தரை நேரே இந்த அறைக்கே அனுப்பு பரவாயில்லை. என்ன ஏது என்று விசாரித்துவிட்டு உடனே அவரை அனுப்பிவிடுகிறேன்” என்று குமாஸ்தாவிடம் தகவல் தெரிவித்து அனுப்பினார்.

ஆனால் அவருக்கோ அந்த அறையில் இருந்த மற்ற தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களுக்கோ தெரியாது… அந்த முஸ்லீம் பக்தரை அனுப்பியவன் சாட்சாத் அந்த ஸ்ரீனிவாசனே என்பதும், அந்த பக்தரின் கோரிக்கையை ஏற்று இவர்கள் செயல்படுத்த இருக்கிற திட்டத்தால் அந்த ஏழுமலையானே மனம் குளிர்வான், தேவஸ்தான பொன்விழா கொண்டாட்டங்களில் மகத்தானதொரு முத்திரையை அது பதிக்க போகிறது என்று.

குமாஸ்தா வெளியே வந்து ஷேக் மஸ்தான் என்கிற அந்த இஸ்லாமிய பக்தரை போர்டு ரூமுக்குள் EO அழைப்பதாக தெரிவித்தார்.

அதுவரை வெயிட்டிங் ஹாலில் காத்திருந்த ஷேக் மஸ்தான் தனது இருக்கையிலிருந்து எழுந்து நேரே மீட்டிங் நடைபெறும் அந்த அறையை நோக்கி சென்றார்.

கைகளை கூப்பியபடி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார் மஸ்தான். அவருடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் தெரிவித்த இ.ஓ., “நாங்கள் இப்போது மிக முக்கியமானதொரு மீட்டிங்கில் இருக்கிறோம். நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?
என்னை ஏன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கூறினீர்கள்?
அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சீக்கிரம், சுருக்கமாக சொன்னீர்கள் என்றால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.”

அடுத்து ஷேக் மஸ்தான் கூறிய விஷயம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரை சேர்ந்த ஒரு சிறு வணிகன்.  எங்கள் குடும்பத்தில் பலர் பல தலைமுறைகளாக ஏழுமலையானின் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். பலப் பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்த வித தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம், ஸ்ரீனிவாச பிரப்பத்தி. மங்களா சாசனம் ஆகியவற்றை கூட பாடுவோம். ஸ்ரீனிவாச கத்யத்தை கூட என்னால் முழுமையாக பாட முடியும்!”

கமிட்டி உறுப்பினர்கள் அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருக்க, அந்த முஸ்லீம் அன்பர் தொடர்ந்தார்….

“எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம் என்பது இறைவனை போற்றி கூறும் 108 போற்றிகள்). இதுதவிர, எங்கள்  வீட்டு புழக்கடையில் உள்ள தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம்.”

“ஆனால் ஐயா… இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்றதொரு சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான 108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால் எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் என் கொள்ளு தாத்தாவால் சில பூக்களைத் தான் சேர்க்க முடிந்தது. அவருக்கு பிறகு என் தாத்தா சிறிது பூக்கள் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிது பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறோம்.”

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது அர்ச்சனை செய்ய மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். (வில்வத்திற்கு கூட நிர்மால்ய தோஷம் கிடையாது!)

அதிர்ச்சியுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்தான செயல்  அலுவலர், “எ….ன்…ன….  நீங்கள் 108 பூக்களை சேர்த்துவிட்டீர்களா?”

“ஆம்!” என்றார் ஷேக் மஸ்தான்.

“ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் வயிற்றை கட்டி வாயை கட்டி இந்த பூக்களை சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட மூன்று சவரன்!)

“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்…
அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் சேவையின் போதோ பயன்படுத்தவேண்டும் என்பதே”

“எங்கள் கோரிக்கையை தட்டாமல் ஏற்றுக்கொண்டால், எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் எங்கள் தாத்தாவின் ஆன்மா கூட நிச்சயம் இதன் மூலம் சாந்தியடையும். இது தான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்!!”

ஷேக் மஸ்தான் முடிக்க…. அமைதி… அமைதி…
அந்த அறை முழுக்க ஒரே அமைதி. நிசப்தம்.
இது சாதாரண அமைதி அல்ல. அசாதாரணமான அமைதி.

அடுத்த சில கணங்களுக்கு அந்த அறையில் ஃபேன்கள் சுழலும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.

சேர்மன், செயல் அலுவலர், இணை அலுவலர், துணை அலுவலர் மற்றும் பல அதிகாரிகளும் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களும் நிரம்பியிருந்த அறையில் எவருமே வாயை திறந்து எதுவும் பேசவில்லை.

தங்கள் முன், கைகளை கட்டிக்கொண்டு பவ்யமாக நின்றுகொண்டிருந்த அந்த முஸ்லிம் பக்தரிடம் என்ன சொல்வது, என்ன பதில் அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

தங்களுக்கு நடுவே சாட்சாத் ஸ்ரீனிவாசனே அங்கு எழுந்தருளி நடக்கும் அனைத்தையும் பார்த்துகொண்டிருப்பது போன்று அறையில் அனைவரும் உணர்ந்தனர்.

எக்சியூட்டிவ் ஆபிஸர் எனப்படும், இ.ஓ. தான் முதலில் வாயை திறந்தார்.

கண்களில் இருந்து அவருக்கு தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது இருக்கையை விட்டு எழுந்தவர் நேரே அந்த முஸ்லிம் பக்தரிடம் சென்று “இத்தனை நேரம் உங்களை நிற்கவைத்து பேச வைத்ததற்கு எங்களை மன்னிக்கவேண்டும். முதலில் இந்த சேரில் உட்காருங்கள்” என்று கூறி ஷேக் மஸ்தான் அமர்வதற்கு ஒரு நாற்காலியை போட்டார்.

“மஸ்தான் காரு, உங்களை போன்றதொரு பக்தரை இந்த காலத்தில் இங்கு பார்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் பல வித்தியாசமான பக்தர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் உங்களைப் போன்றதொரு பக்தரை இதுவரை பார்த்ததில்லை.”

“எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள் கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்… அதை உடனடியாக சேவையில் பயன்படுத்துவோம் என்று இப்போது, இங்கு நான் எந்த வித உத்திரவாதமும் கொடுக்க முடியாது. மேலும் தேவஸ்தானத்தின் பாலிஸி தொடர்பான இந்த விவகாரத்தில் நான் மட்டும் உடனே முடிவெடுத்துவிட முடியாது. தவிர அது எங்கள் கைகளில் மட்டும் இல்லை.”

“ஆனால், உங்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்துவது என்று உறுதி பூண்டிருக்கிறோம். எங்களுக்கு கொஞ்ச காலம் அவகாசம் நீங்கள்  அளிக்கவேண்டும். அது போதும்! முடிவெடுத்த பின்னர் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம்!”

மஸ்தான் விடைபெற்று செல்ல, அவருக்கு தரிசனம் செய்வித்து பிரசாதம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர் தேவஸ்தான தரப்பில்.

அதற்கு பிறகு தேவஸ்தான கமிட்டி கூட்டம் மேலும் பல முறை கூட்டப்பட்டு இந்த மலர்களை பயன்படுத்துவதற்கு என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் திருமலையில் அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.

சிறப்பு மிக்க இந்த ஆர்ஜித சேவைக்கு டிக்கெட்டை மூன்று மாதங்களுக்கு முன்பே பதிவு  செய்துவிட வேண்டும். இந்த சேவையில் கலந்துகொள்ளும் சேவார்த்திகள் பங்காரு வாசலுக்கு குலசேகரப்படிக்கும் இடையே உள்ள சிறிய மண்டபத்தில் உட்கார வைக்கப்படுவார்கள்.

?  ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு ஒவ்வொரு நாமத்துக்கும் (ஷேக் மஸ்தான் குடும்பத்தினர் காணிக்கையாக அளித்த) ஒரு மலர், வேங்கடவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.

? 1984 ல் திருமலையில் ஏழுமலையான் சன்னதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இன்றும் நடக்கிறது.

திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை, காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்தி வந்த ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அந்த ஏழுமலையான் இரட்சித்து வருகிறான் என்பதையும் பறைசாற்றுகிறது.
?  ?  ?  ?  ?

( நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த உண்மை சம்பவம் திருமலை திருப்பதியில் 1983ஆம் ஆண்டு நடைபெற்றது )

’மொட்ட சிவா கெட்ட சிவா’ தடை நீங்கியது என்பது பொய்; நம்பாதீர்கள்: பைனான்சியர் போத்ரா!

 
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்குத் தடை இருக்கிறது என்றும், தடையில்லை குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தடையா? தடையில்லையா?  எனப் புரியாத குழப்பமான இன்றைய சூழ்நிலையில் தடை கோரி பைனான்சியர் போத்ரா தொடங்கிய வழக்கு நீதிமன்றத்தில்  தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று திடீரென  செய்தி வந்துள்ளது. இந்நிலையில் உண்மை நிலை பற்றியும் தனது நிலை என்ன என்பது பற்றியும் தெரிவிக்க பைனான்சியர் போத்ரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”மொட்ட சிவா கெட்ட சிவா ‘ படத்தின் தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ்  மதன் தான் . அவர் எவ்வளவு பெரிய குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரியும். 105 மாணவர்களின் பணத்தை மோசடி செய்தவர். அந்தப் பணத்தை  இன்னமும் யாருக்கும் கொடுக்கவில்லை.

தலைமறைவாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு போலீசையே அலையவிட்டவர். அப்படிப்பட்ட மதன் தயாரித்துள்ள படம் தான் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’  .

அந்தப் படத்துக்குத்தான் நான் ஏழரை கோடி ரூபாய் பணம் கொடுத்தேன். அது தரப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பைனான்சியரின் பாக்கி தீர்க்கப்படாமல் படத்தை வெளியிட முடியாது .எனவே தான் படத்துக்கு நீதிமன்றம் தடை ஆணை வழங்கியது. அந்தத் தடையை இந்த நேரம் வரை விலக்கப்படவோ ரத்து செய்யப்பட வோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப் படுகின்றன.

மார்ச் 10- ல் படம்  வெளியாகும் என்று விளம்பரங்களும் வருகின்றன.  இது எவ்வளவு மோசடியானது.?

இந்தப் படத்துக்கான இரண்டு வழக்கு கள் நீதிமன்றத்தில் உள்ளன. மாண்புமிகு  நீதிபதிகள் கல்யாணசுந்தரம், விமலா ஆகியோர் விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் நீதிபதி ஒருவரின் மகன்  சினிமாவில் பாடல் எழுதுகிறார். அவரை வைத்து தாங்கள் தடையை ரத்து செய்து விட்டோம் என்று தவறாக செய்தி பரப்பி வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பொய்?

நீதிபதி  என்பவர்  யார் சொல்வதையும் கேட்பவரல்ல. கடவுளே வந்தாலும் அவரை மாற்ற முடியாது. நான் நீதிபதியையும்  நீதிமன்றத்தையும் முழுதாக நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா ‘படத்துக்கு தடை நீக்கப்படவில்லை.

விநியோகஸ்தர்கள் , திரையரங்கு உரிமையாளர்கள் யாரும்  இதை எல்லாம் நம்ப வேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது படம் வெளியாகிறது என்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அப்படி விளம்பரம் செய்யும் ஆர்.பி.செளத்ரி , டாக்டர் செல்வம் மீது இது பற்றி புகார் கொடுக்கப் போகிறேன்.” இவ்வாறு போத்ரா கூறினார்.

அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன், 
அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார். 'நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்குவதற் காக அல்ல; மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல்' என, கமல் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெ., மறைவை தொடர்ந்து, டுவிட்டரில், அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் கமல், மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். இந்தச் சூழலில், கமல் ரசிகர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு, கண்டனம் தெரிவித்த கமல், அவரை விடுவிக்கக்கோரி எச்சரிக்கையும் விடுத்தார். 
இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் நேற்று கமல் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இந்த ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனையின் போது, கமல் பேசியதாக, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
கச்சேரியில் பாட்டு சரியில்லை என, குறை கூறுவதால், மேடைக்கு வந்து, என்னை பாடச் சொல்லக்கூடாது. 
நான் அறிக்கை விடுவது புதிதல்ல; 30 ஆண்டுக ளுக்கு முன்பிருந்தே, கருத்து கூறி வருகிறேன். இலங்கை பிரச்னைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவன் நான்.இப்போது தான் நான் கூறு வது, அவர்கள் காதில் விழ தொடங்கி உள்ளது.
நான் அரசியலில் இல்லை என்றுயார் சொன்னது. நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்கும் அரசியல் அல்ல; மக்கள் பிரச்னை களை தீர்க்கும் அரசியல். யார் தவறு செய்தா லும், நாகரிகமான முறையில், அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யுங்கள். 30 ஆண்டுகளாக எவ்வித இடையூறு இன்றி நடைபெற்ற ரசிகர் மன்ற பணி, இன்னும் சிறப்பாக, பெரிய அளவில் நடைபெற வேண்டும்; நான் துணை யிருப்பேன்.இவ்வாறு கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.
அவர்கள் கூறுகையில், 'ஜெ., மறைவின் போது, சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என, கமல் கூறினார். அது, எவ்வளவு உண்மை என, இப்போது தெரிந்திருக்கும். கமலின் இந்த அதிரடி நடவடிக்கை, அவர் அரசியலுக்கு வருவ தற்கான அஸ்திவாரம் தான். இது, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் அளிக்கும்' என்றனர்.

பாமக துணை தலைவர் நீக்கம்

மாநில துணை தலைவர் வேணு புவனேஸ்வரன் கட்சியில் இருந்து நீக்குவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பாமக மாநில துணை தலைவர் வேணு புவனேஸ்வரன் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும் தொடர்ந்து, செயல்பட்டு வருவதால் இன்று(நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். 
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுவாசல் போராட்டம் தொடர்பாக இன்று சுமுகமான முடிவு: பொன்.ராதாகிருஷ்ணன்

நெடுவாசல் போராட்டம் தொடர்பாக இன்று சுமுகமான முடிவு ஏற்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தை போக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை விசாரணை கமிஷன் அமைக்காதது ஏன் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கிப் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணமா? : ப.சிதம்பரம் கண்டனம்!

வங்கிப் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணமா? என்று ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது பணத்தை ஒரே தவணையில் எடுத்துவிட்டால், வங்கிகள் மகிழ்ச்சியடையுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், மாதத்தில் 4 தவணைகளுக்கு மேல் பணம் எடுத்தாலும், செலுத்தினாலும் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றன. இதற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், ப.சிதம்பரம் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கமலஹாசன் நற்பணி இயக்க செயற்குழு கூட்டம்

பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் ஒன்றிய கமலஹாசன் நற்பணி இயக்க செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் டி.முருகேசன்தலைமையில் நடைபெற்றது ,மாவட்ட இணை செயலாளர் செல்லப்பா, ஒன்றிய  பொருளாளர் முருகேசன்,ஆகியோர்  முன்னிலை வகித்தனர்
பெரியசாமி,
இசக்கி, துரைராஜ், மாரியப்பன், பரமசிவன், தங்கப்பாண்டியன், கதிரேசன்,
சமுத்திரபாண்டி, குணசேகரன், முருகன், செந்தூர் ஆகியோர் உட்பட நிர்வாகிகள்
உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 10,12 ஆம்
வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியர்களுக்கு
பரிசு வழங்குவது, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் கைது நடவடிக்கைக்கு
கண்டனம் தெரிவிப்பது, கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில் கருவேலமரங்களை தீவிரமாக
அகற்றிட கோரிக்கை விடுத்தல், ஊராக பணிக்கு தேர்ந்தெடுக்கும் விவசாய
பணியாளர்களை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது
வலியுறுத்தியும்., ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்த கமலஹாசனுக்கு
நன்றி தெரிவிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.