Home Blog Page 5668

கீழப்பாவூரில் பயணிகள் நிழற்குடை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்

கீழப்பாவூரில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்.

கீழப்பாவூர்
பேரூராட்சி அலுவலகம் முன்பு ரூ.9.95 செலவில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள்
நிழற்குடை, முகப்பு வளைவு ஆகியன  திறப்பு விழா நடைபெற்றது.
நெல்லை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமை
வகித்து, திறந்து வைத்தார். பேரூராட்சி
நிர்வாக அதிகாரி தேவராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும்
இளம்பெண்கள்  பாசறை மாவட்ட
செயலாளர் மு.சேர்மபாண்டி, பேரூர் செயலாளர் பாஸ்கர்,பேச்சாளர்  தீப்பொறி
அப்பாத்துரை, மேலவைப் பிரதிநிதகள்  , ஜெயராமன்,வி.கே.கணபதி மதியழகன்,அரசு
ஒப்பந்தக்காரர் சண்முகவேலு, உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

முன்னாள் நீதிபதி கட்ஜு செய்யும் அரசியல்: இப்பவே இப்டின்னா…?

சென்னை:

முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவரது முகநூலில் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் நீதிபதியான அவரது அரசியல் பணிகள் தற்போது அதிகரித்திருப்பதாகத் தெரிந்தாலும், இப்போவே இப்டின்னா… அப்போ? என்ற வினாக்களையும் விமர்சகர்கள் எழுப்பாமல் இல்லை!
சென்னையில் தொட்டதற்கெல்லாம் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் நீதிபதி கட்ஜு பகிர்ந்துள்ள அவரது முகநுால் பதிவு:

தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்களும், இன்று முதல் தினமும், கீழ்கண்ட கோரிக்கைகளுக்காக, அமைதியாக போராட வேண்டும்.

* வட மாநில உயர் நீதிமன்றங்களில், ஆங்கிலத்துடன் ஹிந்தியும் வழக்காடு மொழியாக உள்ளது. அதேபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை, அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க வேண்டும்

* உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையிலோ அல்லது இதர தென்மாநில நகரங்களிலோ ஏற்படுத்த வேண்டும்

* ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, பெங்களூரு சிறை பறவையின் கைப்பாவை பழனிசாமி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்

* ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை, உரிய அறிவியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்

இந்த நான்கு கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கையில் வெள்ளை, ‘பேன்ட்’ அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும். வெள்ளை பேன்ட், போராட்டத்தின் குறியீடு ஆகும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, வழக்கறிஞர்கள் அவற்றை நீக்க வேண்டாம். இவ்வாறு கட்ஜு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு அருகே சதுர் ராம தரிசனம்!

சதுர் ராம தர்சனம்!
 
முதலில் பொன்பதர்கூடம் – சதுர்புஜ ராமர். ஸ்ரீ ராமரின் அமர்ந்த கோலம். நான்கு கரங்களுடன் சங்கு சக்ர தாரியாக வரம் தரும் கரம் கொண்டவனாக… உத்ஸவர் மூர்த்தி வெகு அழகு. கைரேகைகளும், விரல் நகமும் பாதம், கணுக்கால் எல்லாம் அவ்வளவு நுணுக்கமாக காட்சி தரும் அழகு! அதைவிட அழகு.. அனுமனின் உத்ஸவ மூலவர் திருமேனிகள். வலக் கரத்தை வாயினில் பொத்தி அடியேன் என்று வளைந்து குனிந்து பணிந்து, விநய ஆஞ்சநேயராக அற்புதக் கோலம்…!
 
அடுத்து, பொன்விளைந்த களத்தூர் – நரஸிம்ம ஸ்வாமி கோயில் அடுத்துள்ள கோதண்ட ராமர் சந்நிதி. சீதா தேவியை மடியில் அமர்த்தி வைத்த கோலத்தில் ராமன்.! லட்சுமணன் கைகூப்பிய வணக்கக் கோலம்.
 
அந்த சந்நிதியை அடுத்துள்ள தர்ப்ப சயன ராமரின் அழகுக் கோலம். சேலம் விஜயராகவாச்சாரியார், தொடர்ந்து அவர் குடும்பம் செய்துள்ள கைங்கர்யம் போற்றப்பட வேண்டியது. உத்ஸவ மூர்த்தியின் அழகு அவ்வளவு அத்புதம். அருகிருந்த கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, தனிக் கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.
 
அடுத்து, செங்கல்பட்டில் உள்ள கோதண்டராம ஸ்வாமி. ஒரே பீடத்தில் ராமனும் சீதையும். அருகே பிராகாரத்தில் அனுமன் சந்நிதி. சனியை அடக்கிய அனுமன் எனும் கோலம். காஞ்சி மகாபெரியவர் காட்டிக் கொடுத்த விக்ரஹ ரூபி.
 
சென்னையில் இருந்து வருபவர்கள், இந்த நான்கு ராமர்களையும் தரிசிக்க அருமையான வாய்ப்பு. மாலை 3 மணிக்கு மேல் கிளம்புங்கள். செங்கல்பட்டு வந்து, திருச்சி செல்லும் சாலையில் சற்று தொலைவு வந்து, நீதிமன்ற வளாகம் கடந்ததும் வரும் இடதுபுற சாலையில் திரும்பி 7 கி.மீ. தொலைவு…. ஒத்திவாக்கம் ரயில்வே நிலைய கேட் கடந்ததும் வரும் வலதுபுறம்… பொன்விளைந்த களத்தூர். இருப்பினும் சரியாக 5-5.30 மணி அளவில் (அப்போதுதான் திருவாராதனம் செய்ய கைங்கர்யபரர் வருவார்) அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் பொன்பதர் கூடம் சென்று சதுர்புஜ ராமரை தரிசித்து விட்டு, அதன் பின் பொன்விளைந்தகளத்தூரில் இரு ராமர்களையும் தரிசித்து பின் செங்கல்பட்டு வந்து 8 மணிக்குள்ளாக ஸேவித்து 10 மணிக்குள் சென்னைக்குள் திரும்பி விடலாம்!

ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை; எவரும் திருட முடியாது: யுஐடிஏஐ

புதுதில்லி:

‘ஆதார் தகவல்களை எவரும் திருட முடியாது; அவற்றை பாதுகாக்கவும், பயன்படுத்தவும் பல்வேறு கடுமையான நடைமுறைகள் உள்ளன. ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் உள்ளன’ என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொருவரின் முகம், கருவிழிகள், கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகளைப் பெற ஆதார் அடையாளம் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், ‘ஆதார் விபரங்கள் திருடப்படுகின்றன. அவற்றை பராமரிக்கும் முறை பாதுகாப்பானதாக இல்லை. இதனால் தனிநபர் விபரங்கள் யாருக்கும் கிடைக்கும் அபாயம் உள்ளது’ என பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, ஆதார் எண் வழங்கும் பணியை மேற்கொள்ளும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அளித்துள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆதார் மூலம் நேரடியாக மானியங்களை அளிப்பதால் ரூ.49 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப் பட்டுள்ளது

* கடந்த ஐந்து ஆண்டுகளில் 400 கோடி ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

* உலகிலேயே மிகப் பெரியது, மிகவும் பாதுகாப்பானவை இந்த ஆதார் பதிவு விவரங்கள். இந்தத் தகவல்கள் திருடப்பட்டதாகவோ, தவறாக பயன்படுத்தப்பட்டதாகவோ கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தப் புகாரும் இல்லை.

* இந்தத் தகவல்களை எவராலும் திருட முடியாது; தவறாகவும் பயன்படுத்த முடியாது.

* ஒரு குறிப்பிட்ட வங்கியின் துணை நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், தன் ஆதார் விவரங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்தார். அது குறித்து, ஆதார் தகவல் பாதுகாப்பு முறைக்கு உடனே கிடைத்த தகவலால் அது தடுக்கப்பட்டது. மற்றபடி, ஆதார் தகவல்கள் திருடப்பட்டதாக எந்தப் புகாரும் இல்லை

* ஒருவரது ஆதார் எண் மூலமான தனிப்பட்ட தகவல் பெற பாதுகாப்பான வழிமுறைகள் உள்ளன. எனவே ஆதார் விவரங்கள் இணையதளத்தில் கிடைப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.

வங்கி, மொபைல்போன் நிறுவனங்களுக்கு ஆதார் விவரங்கள் எதுவும் நேரடியாகக் கொடுக்கப்படுவதில்லை. ஒருவரது அடையாளத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக, அந்தத் தகவல்களை பயன்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இதற்கும் கட்டுப்பாடுகள் பல உள்ளன.   ஒருவரது அனுமதி இல்லாமலோ, அவருக்குத் தெரியாமலோ, அவரது தகவல்களை வங்கிகளோ, மொபைல் போன் நிறுவனங்களோ அல்லது மற்ற அமைப்புகளோ பயன்படுத்த முடியாது.

* ஒருவரது புகைப்படத்தை வைத்து, ஆதார் விவரங்களை பார்க்க முடியாது. கண்ணின் கருவிழிப் பதிவுக்கு, புகைப்படத்தைப் பயன்படுத்த முடியாது. அதேபோல, கைவிரல் ரேகைப் பதிவை, புகைப்படமாக வைத்து பயன்படுத்த முடியாது

* பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், ஆதார் விவரங்களைப் பயன்படுத்தினாலும், அதன் விவரங்களை திருடவோ, முடக்கவோ முடியாது. ஆதார் விவரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படுகின்றன.

– என்று அந்த விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடியில் ஊழியர்கள்-லாரி ஓட்டுனர்கள் இடையே மோதல்!

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியர்களுக்கும் லாரி ஓட்டுனர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுங்க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி வட மாநில சுங்கச்சாவடி ஊழியர்கள் அபராத கட்டணம் செலுத்த சொன்னதாக தெரிகின்றது. இதனால் லாரி ஓட்டுநருக்கும் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டதில், லாரி ஓட்டுநரை ஊழியர் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லாரி ஓட்டுநருக்கு ஆதரவாக மற்ற லாரி மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் அருகில் இருந்த சுங்கச்சாவடி அலுவலக கண்ணாடி, இருசக்கர வாகனம், மற்றும் பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
இதனால் மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கே வந்த மேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போக்குவரத்து சீரடைந்தது.

சசிகலா மீது பாயும் கிரிமினல் வழக்கு!? – டெல்லி சிக்னலின் அடுத்தகட்டம்

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தாலும், தமிழக அரசியல் களம் சசிகலாவை மையப்படுத்தியே நகர்கிறது. 'ஆட்சி அதிகாரத்தைப் பின்வாசல் வழியாக இயக்குகிறார் தினகரன்' என்ற குற்றச்சாட்டுகளும் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. 'பொதுச் செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டதற்கு தினகரன் அளித்த பதிலை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. தன்னுடைய விளக்கமாக சசிகலா எதை முன்வைத்தாலும், கிரிமினல் வழக்கு பாய்வதற்கு வாய்ப்புள்ளது' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 
சென்னை, வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்பட்டதையே காரணமாகவைத்து, பதவியைத் தக்கவைக்கும் வேலைகளில் இறங்கினார் சசிகலா. தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறுவதற்குக் கடுமையாக முயற்சிசெய்தார் தம்பிதுரை. அவரது முயற்சிகள் எதுவும் பலிக்காததால், தன்னுடைய டெல்லி நண்பர்கள் மூலம் காய்களை நகர்த்திவந்தார், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நாமக்கல் செந்திலோடு, டெல்லி சென்று சில விஷயங்களைச் சாதிக்கக் கிளம்பினார். அவரது முயற்சிக்கு டெல்லி வட்டாரத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு விரிவான கடிதம் அனுப்பியிருந்தார் தினகரன். அந்தக் கடிதத்தில், 'கட்சி விதிகளின்படியே சசிகலா பொதுச் செயலாளர் ஆனார்' எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையத்தின் செயலர் பிரமோத் குமார் சின்ஹா கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், 
தினகரன்‘கடந்த பிப்ரவரி 2,15,17 ஆகிய தேதிகளில், உங்கள் பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்களுக்கு டி.டி.வி. தினகரன் பெயரில் ஐந்து வெவ்வேறு கடிதங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன. தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சி ஆவணத் தகவலின்படி, அ.தி.மு.க-வின் நிர்வாகியாக டி.டி.வி. தினகரன் இல்லை. தேர்தல் ஆணையத்துடன் மேற்கொள்ளப்படும் கடிதத்தில், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிதான் கையெழுத்திட முடியும். எனவே, தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்துக்கு உங்கள் கையொப்பம் இட்ட பதிலையோ அல்லது உங்களால் அங்கீகரிக்கப்பட்ட யாராவது ஒருவர் சார்பிலோ பதில் அளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் பதில் அனுப்ப வேண்டும்' என அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, முதல்வர் உள்பட எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் கலந்துரையாடுவது என டி.டி.வி.தினகரன் பரபரப்பாக இயங்கிவருகிறார். 'கட்சி ஆவணத்தின்படி, அவர் அ.தி.மு.கவின் நிர்வாகியாக இல்லை' எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் ஆளும்கட்சி நிர்வாகிகள். 
சசிகலா புஷ்பா"தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா புஷ்பா தொடக்கத்தில் கொடுத்த புகார்களின்  அடிப்படையிலும், பன்னீர்செல்வம் அணியில் இருந்து மைத்ரேயன் எம்.பி அளித்த புகார் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 'ஜெயலலிதா கையெழுத்தை வைத்து இவர்கள் முறைகேடு செய்வார்கள்' எனத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார், சசிகலா புஷ்பா. அதற்கான நேரம் இப்போது நெருங்கிவிட்டது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலின்போது, 'நான் மறுபிறவி எடுத்துவிட்டேன். அண்ணா தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்' என ஜெயலலிதா கையெழுத்துடன் அறிக்கை வெளியானது.
'அந்த நேரத்தில் கையெழுத்துப் போட்ட ஜெயலலிதாவால், மூன்று தொகுதி வேட்பாளர்கள் அளித்த பி படிவத்தில் ஏன் கைநாட்டு வைத்தார்?' என்பதுதான் புகாரின் சாராம்சம். இதைச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. 2012 மார்ச் மாதம் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார் சசிகலா. ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் கட்சியின் உறுப்பினராகிவிட்டார். ஆனால், உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா கடைசி வரையில் கொடுக்கவில்லை.
இதைப் பற்றி ஆணையத்தின் அதிகாரிகளிடம் வலியுறுத்திய சசிகலா புஷ்பா, 'கட்சிக்குள் அவர் சேர்க்கப்பட்ட பிறகு நடந்த செயற்குழுவுக்கு, ஜெயலலிதாவுக்கு உதவியாக கூட்டத்துக்கு வந்தார். செயற்குழு உறுப்பினர்களின் பெயரை நான்தான் தொகுத்து எழுதினேன். அதில், முதல் பெயரே என் பெயர்தான். அதில் எந்த இடத்திலும் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. அவர் எப்படி செயற்குழு உறுப்பினர் கிடையாதோ, அதேபோல கட்சியின் உறுப்பினரும் கிடையாது. தற்போது தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம்கொடுப்பதற்காக, உறுப்பினர் அட்டையை அவர் அனுப்பினால், அதைப் பரிசீலிக்க வேண்டும்.
அந்த அட்டையில் இருப்பது ஜெயலலிதா கையெழுத்துதானா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். உறுப்பினர் அட்டையில் மோசடி செய்திருந்தால், டெல்லி காவல்துறையில் புகார் அளித்து, கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அனைத்துக் குளறுபடிகளையும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்' என வலியுறுத்தி இருக்கிறார். மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா கொடுக்கும் பதிலைப் பொறுத்தே, எங்கள் அணியின் வேகம் அதிகரிக்கும்" என்கிறார், பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர். 
"துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் அந்த மனுவை அனுப்பினேன். பன்னீர்செல்வம் போன்றவர்கள் தினமும் எதையாவது கூறி, தங்கள் இருப்பைக் காண்பித்துக்கொள்ள முயற்சிசெய்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில், அவர்கள் முழுமையாக அடங்கிவிடுவார்கள்" என நேற்று கொந்தளித்தார் டி.டி.வி.தினகரன். 'தேர்தல் ஆணையத்தின் அதிரடியும், அப்போலோ மர்மத்துக்கு விடை தேடி நடத்தப்படும் தர்ம யுத்தமும், யாரை அடங்கவைக்கப்போகிறது என்று பாருங்கள்' எனப் புன்சிரிப்போடு பதிலளிக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.

பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசு வரி: மார்க்சிஸ்ட் கண்டனம்

;text-indent:0px;text-transform:none;white-space:normal;word-spacing:0px;background-color:rgb(255,255,255);text-decoration-style:initial;text-decoration-color:initial”>பெட்ரோல் டீசல் மீது மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உயர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

4.3.2017 நள்ளிரவிலிருந்து பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியிருக்கிறது.

பெட்ரோலுக்கு 27 சதவிகிதமாக இருந்த வரி 34 சதவிகிதமாகவும், டீசல் 21.43 சதவிகிதமாக இருந்தது தற்போது 25 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.76 அளவுக்கு உயர்ந்துள்ளன.

விலையேற்றம் பற்றிய தகவல் எஸ்.எம்.எஸ் வழியாக தெரிவிக்கப்பட்டதாகவும், உடனடியாக விலையேற்றம் அமலுக்கு வந்திருப்பதாகவும் பெட்ரோல்/டீசல் விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர் சில நாட்களில் நடக்க உள்ள சூழலில், தமிழக மக்களை பாதிக்கக் கூடிய வரி உயர்வை எதேச்சதிகாரமான முறையில் மாநில அரசு மேற்கொண்டிருப்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்புகள் எல்லாப் பொருட்களின் விலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். சதவிகித அளவில் செய்யப்பட்டுள்ள உயர்வானது இனி வரும் காலங்களில் செய்யப்படும் ஒவ்வொரு உயர்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நூறாண்டு காணாத வறட்சியில் மாநில மக்கள் தவிக்கின்றனர். ரேசன் முறையில் மக்களுக்கு கிடைத்து வந்த சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை நிறுத்தப்பட்டு விட்டது. கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இப்பின்னணியில் வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி உள்ளது.
மக்களைப் பாதிக்கும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வைக் கை விட வேண்மென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

⁠⁠⁠⁠3:59 PM⁠⁠⁠⁠⁠