Home Blog Page 5669

Live From The Field

என்ன செய்யும் சந்திரதோஷம்?
எந்த ஜாதகமாக இருந்தாலும் சூரியனுக்கு அடுத்தப்படியாக சந்திரன் முக்கிய கிரகமாக வருகிறார். தேக சுகத்தையும் தேகநலத்தையும் குறிப்பவர். லக்னத்திற்கு அடுத்தப்படியாக, இவர் இருக்கும் இடத்திற்கு சந்திரா லக்னம் என்ற அமைப்பைப் பெறுகிறார்.
ஜாதகத்தில் எந்த யோகத்தை பெற வேண்டுமனாலும் சந்திரனை மையப்படுத்தியே வரும். லக்னபாவத்தின் வழியாக வரும் யோகத்தைவிட, சந்திரன் வழியாக வரும் யோகத்தின் வலு மற்றும் பலம் அதிகம். அதோடு மனோகாரகன் என்ற பெயரும் பெறுகிறார். ஒருவரின் மனோநிலையை குறிப்பவர். அதோடு பத்துமாதம் சுமந்து, பெற்றெடுத்து, பேணிக்காத்து, வளர்த்து, இப்பூலகில் நாமும் மனிதனாக நடமாட முடிகிறது என்றால் அதற்கு தாயே காரணகர்த்தா. 
அந்த தாய்கிரகம் சந்திரன். அதனால் மாதுர்காரகன் என்று போற்றப்படுகிறார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலை பெறாவிட்டால், நல்லோர் சேர்க்கை பெறாவிட்டால், ஜாதகர் குழப்பவாதியாக காட்சியளிப்பார். எந்த காரியத்தைத் தொட்டாலும் சந்தேகமும், அவநம்பிக்கையும் தலைதூக்கும். அதனால் உறுதியான செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ள முடியாது.
சந்திரன் நீச்சம் பெற்றிருந்து, வக்கிரம் பெற்ற கிரகத்தின் பார்வை சேர்க்கை பெற்றிருந்தால், மனநிலை பாதிக்கப்பட்டு சித்தசுவாதீனம் ஏற்படவும் வாய்ப்புண்டு. மற்றும் தோல் மற்றும் குடல் வியாதிகள் வர சந்திரனே காரணம். சூரியன் வலது கண்ணை குறிக்க, சந்திரன் இடது கண்ணை குறிக்கிறார். 
கடல் கடந்த பயணம் ஏற்பட சந்திரனே காரணம். மேலும் சந்தோஷம், அழகு, ஆற்றல், அறிவு, திடசித்தம், சுபபோகம் என்று நீளமான பட்டியலுக்கு உரியவர். இவர் ஜாதகத்தில் நீச்சம் பெற்றிருந்தாலோ, ராகு கேதுவுடன் கூடி இருந்தாலோ, செவ்வாயின் பார்வையில் இருந்தாலோ சந்திரனின் இயற்கை பலன்கள் மாறும்.
அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவுக்கு காரணமாக அமைந்து விடும். தாயின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.
சந்திர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?
உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அருகில் உள்ள அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். 
பெண்களாயின் முத்து மாலைகள் அணியலாம். கையில் முத்து மோதிரம் அணிந்து கொள்ளலாம்.  ஆண்களாக இருந்தால் 10 கேரட்டுக்கு குறையாமல் மூன்ஸ்டோன் கற்கள் பதித்த டாலரை கழுத்தில் அணிந்து கொள்ளலாம். பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்லுங்கள்.  சந்திரதோஷம் விலகும்.
நிறம் : வெண்மை
ஜாதி : வைசியன்
வடிவம் : குள்ளம்
மனித அவயம் : முகம், வயிறு
உலோகம : ஈயம்
ரத்தினம் : முத்து
வஸ்திரம் : வெண்மை
சமித்துக்கள் : முருக்கு
தூபதீபம் : சாம்பிராணி
மலர் : வெள்ளலரி
தாணியம் : பச்சரிசி (நெல்)
திசை : வடமேற்கு (வாயுமூலை)
அதிதேவதை : பார்வதி
ஆட்சிவீடு : கடகம்
உச்சவீடு : ரிஷபம்
நீச்சவீடு : விருச்சிகம்
பெயர்ச்சிகாலம் : இரண்டேகால் நாள்
நட்சத்திரங்கள் : ரோகிணி, ஹஸ்தம், திருணோனம்
உபகிரகம் : பரிவேடன்
வேறுபெயர்கள் : பிறை, இந்து, சசி, சோமன், அம்புலி, திங்கள், கேழவன்
சந்திரன் மூலமந்திரம்.
ததிசங்க துஷாராபம்
ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்

தாம் எடப்பாடி அணிக்கு மாறியதாக வெளியான தகவலுக்கு எம்.எல்.ஏ நட்ராஜ் மறுப்பு

சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவில் கலந்துகொண்டது பற்றி எம்.எல்.ஏ நட்ராஜ் விளக்கம்  அளித்துள்ளார்.மயிலாப்பூர் தொகுதி சார்ந்த திட்டங்களும் தொடங்கப்பட்டதால்  விழாவில் பங்கேற்றேன் என்று  கூறியுள்ளார். விழாவில் பங்கேற்றதால் தாம் எடப்பாடி அணிக்கு மாறியதாக வெளியான தகவலுக்கு நட்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தவர்களில் நட்ராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேர்வில் காப்பியடித்த 9 பேர் பிடிபட்டனர்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ் இரண்டாம் தாளில் காப்பியடித்ததாக 9 பேர் பிடிபட்டுள்ளனர்.
கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 மாணவர், திருச்சியில் 3 மாணவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 9 மாணவர்கள் பிடிபட்டுள்ளதாக தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே தமிழ் முதல் தாளில் காப்பியடித்ததாக 3 மாணவர்கள் பிடிபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிதாக இருந்த இரண்டாம் தாள் இதனிடையே, பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வைக் காட்டிலும் இரண்டாம் தாள் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தேசிய அளவில் சாதனை

.
கூடங்குளம்  அணுமின் நிலையத்தில்  முதல் அணு உலையில்  775 மெகாவாட்  மின்சாரமும் இரண்டாவது  அணு உலையில்  950  மெகாவாட்  மின்சாரமும்  இன்று  உற்பத்தி  செய்யப்பட்டு  வருகிறது. 
தேசிய அளவில்  ஒரே நேரத்தில்  அதிக மின் உற்பத்தி  செய்த அணுமின் நிலையம்  என்ற  சாதனையை  அது பெற்றுள்ளது.

இனி வங்கி கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ ரூ.5000 இருக்கனும்

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.
பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

ரூ 4.00 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.விற்கு 18 மாதம் சிறை; ரூ.400 அபராதம்

கிருஷ்ணகிரி அருகே 400ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.விற்கு 18 மாதங்கள் சிறை; 400 ரூபாய் அபராதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த பாரூர் பகுதியில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தவர் மணி. இவர் கடந்த 2010 ம் ஆண்டு 400 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 
இந்த வழக்கு கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்து 400 ரூபாய் லஞ்சம் வாங்கிய மணி என்பவருக்கு 18 மாதங்கள் சிறை மற்றும் 400 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பு வழங்கினார். 
மணி கடந்த 2014ம் ஆண்டே ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

தாய் சேய் ஊர்தி சேவை நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை தாயின் வீடு வரை சென்று சேர்க்கும் தாய்-சேய் ஊர்தி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் கருணாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 102 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம்: வங்கிகள் முடிவு

ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளது. ஹெச்.டி.எப்.சி., ஐசிஐசிஐ வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மாதத்தில் 4 முறை பணம் செலுத்தினாலோ அல்லது பணம் எடுத்தாலோ கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் வங்கிகள் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் : பாஜக தமிழிசை

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
ஒரு மருத்துவர் என்ற ரீதியில் எந்த ஒரு நோயாளியும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும்போது ஒவ்வொரு நிகழ்வும் நிமிடத்திற்கு நிமிடம் பதிவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
முக்கிய தலைவரான ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது உயிரோடு இருந்தவரைக்கும் புகைப்பட பதிவுகளை வெளியிட வேண்டாம் என்று சொன்னதை நியாயமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவரது சிகிச்சையில் ஒப்புக்கொள்ள முடியாத பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
75 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் உடல்நிலை முன்னேறியதாகவும், சாப்பிடுகிறார் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டன. அப்போது கூட புகைப்படம் வெளியிடாதது குழப்பத்திற்குதான் வழி வகுக்கும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெளிவற்ற ஒரு நிலையே நிலவுகிறது. உயர்நீதிமன்றத்தில் கூட ஆஸ்பத்திரி நிர்வாகம் பதில் சொல்ல மறுக்கிறது.
உறவினர்கள் கேட்டால் மருத்துவ சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுத்தே தீர வேண்டும். ஆனால் ரத்த சம்பந்தமானவர்கள் அமைதியாக இருப்பது ஏனோ?
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெறுவதற்கும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை தெரிவிப்பதற்கும், பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் சசிகலா அடிக்கடி பேசினார்.
அதேபோல் ஜெயலலிதா நிலைகுறித்தும் தகவல்கள் தெரிவிக்க தயங்குவது ஏன்? முதல்-அமைச்சர் பதவி ஏற்க இருந்த நிலையில் லண்டன் டாக்டரை அவசரம் அவசரமாக அழைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். அது குழப்பத்தை தீர்க்கும் என்று நம்பினார்கள்.
மேலும் குழப்பத்தை அதிகரிக்கத்தான் செய்தது. எதையோ சொல்லி மக்களை சமாதானப்படுத்த நினைக்கிறார்கள் என்றுதான் நினைக்க வைத்தது. வேதா இல்லத்தில் இருந்து அப்பல்லோ வரை நடந்தது என்ன? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எப்படி இருந்தார் என்ற எந்த விவரமும் தெரியாமலேயே உள்ளது.
75 நாட்கள் வெளி உலகத்துக்கு தெரியாமலேயே இருந்து இறந்து இருக்கிறார். இப்போது அவர் உயிரிழந்து விட்ட நிலையில் ஒரு முதல்-அமைச்சரின் சாவில் இருக்கும் சந்தேகத்தை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. சசிகலாவின் பினாமி அரசுதான் நடந்து வருகிறது.
குற்றமும், குற்றச்சாட்டும் அவர்கள் மீதுதான் இருக்கிறது. எனவே அதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதை ஒப்புக் கொள்ளாதபட்சத்தில் சந்தேகம் மேலும் அதிகரிக்க தான் செய்யும்.
எந்த தவறும் நடக்கவில்லை என்றால் வெளிப்படையாக அறிவிப்பதில் ஏன் தயக்கம். எதையும் சொல்ல முடியவில்லை என்றால் சொல்ல முடியாத ஏதோ ஒன்று நடந்திருப்பதாக தானே நினைக்க தோன்றும். இதையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் உரிய முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வருகிறார் சுரேஷ் பிரபு: ரயில் திட்டங்கள் துவக்கி வைக்கிறார்

ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 4–ந்தேதி சென்னை வருகை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 4–ந் தேதி (சனிக்கிழமை) சென்னை வருகிறார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மூர்மார்க்கெட்–பேசின்பிரிட்ஜ் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5 மற்றும் 6–வது ரெயில்வே தடங்களில் மின்சார ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதேபோன்று எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ‘வை–பை’ வசதி, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இரண்டாம் நுழைவுவாயிலில் துரித உணவகம், நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான சுரங்க பாதை, மாம்பலத்தில் இரட்டை வழித்தடம் கொண்ட புதிய பிளாட்பாரம், கோடம்பாக்கத்தில் புதிய டிக்கெட் முன்பதிவு அலுவலகம், திருவான்மியூரில் பயணிகளுக்கான புதிய நடைமேம்பாலம் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட டிக்கெட் முன்பதிவு அலுவலகம் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
மதுரை ரெயில் நிலையம்
மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிடுகிறார்.
மதுரை ரெயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘வை–பை’ வசதி, செங்கோட்டை–ஆரியங்காவு இடையேயான அகல ரெயில்பாதை திட்டம் ஆகியவற்றையும் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ‘வார்தா’ புயலின் போது பாதிப்படைந்த மேற்கூரைகளை சீரமைக்கும் பணி, நிலையங்களுக்கு வெள்ளையடித்தல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.