தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில், மு.க. ஸ்டாலின் தங்களுக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நான் வணங்கும் ஆண்டவனை வேண்டி தங்களின் அரசியல் பணி தொடர மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.*
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு ‘செக்’
புதுடில்லி :
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களின் பணி செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டை ஆன்லைன் மூலம் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கார்டு :
இதன் மூலம் அதிகாரிகளின் பணி செயல்பாடு விகிதம், நம்பகத்தன்மை ஆகியவற்றை தெரிந்து கொள்ள உதவும் என அரசு கருதுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் ரிப்போர்ட் கார்டுகள் மீது அரசு அலுவலர்கள், அரசியல் பிரதிநிதிகள் தங்களின் விமர்சனங்களை, எலக்ட்ரானிக் முறையில் பதிவிடமும் வழிவகை செய்யப்பட உள்ளது.
தற்போது பரிசீலனையில் இருக்கும் இந்த விதிமுறைக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இந்த விதிமுறை நாடு முழுவதிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ல் தங்களின் ரிப்போர்ட் கார்டுகளை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதிகாரிகள் தாக்கல் செய்யும் ரிப்போர்டு கார்டுகளை சரிபார்த்து, அது பற்றிய விமர்சனங்களை மார்ச் 15 ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
வனப்பகுதியில் புகை பிடித்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
தமிழக வனப்பகுதிகளுக்குள் புகைப்பிடித்தாலோ அல்லது சமையல் செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நிலவும் கடும் வறட்சியால் மரங்கள், செடிகள் மற்றும் கொடிகள் காய்ந்து சருகாகி உள்ளன. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக-கர்நாடக எல்லையான பேடுகுழி கர்நாடக வனத்தில் தீப்பிடித்து 300 ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின.
மூங்கில் உராய்வு காரணமாகவே வனத்தில் தீப்பிடித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழக பகுதியான கேர்மாளம், காராப்பள்ளம், ஹாசனூர்,கோட்டாடை ஆகிய பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வனத்தில் ஏற்படும் காட்டுத்தீ குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
நெடுவாசல்: ஒரு நியாயமற்ற போராட்டம்
நெடுவாசல் போராட்டம் பற்றி எறிந்துகொண்டிருக்கிறது, அதை பலரும் ஊதி வளர்த்து வருகின்றனர். இந்த போராட்டம் தேவைதானா? இல்லை, இந்த போராட்டம் முற்றிலும் தவறு. இந்த திட்டத்தைப் பற்றி எந்த தெரிதலும் இல்லாத அதிகம்பேர் மிகவும் பயமுறுத்தக்கூடிய படங்களை போட்டு, போஸ்டர் ஒட்டி இது ஆபத்து, இந்த திட்டம் நிறைவேற்றினால் தமிழ் நாடே பாலைவனமாக மாறும் என்று கூறி வருகின்றனர்.
இதில் உண்மை என்ன? பிப்ரவரி மாதம் நடந்த CCEA கூட்டத்தில், 31 சிறிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிலைக்குழ கான்ட்ராக்ட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 23 நிலைக்குழுமங்கள் onshore எனப்படும் நிலத்திலிருந்து எடுக்கும் திட்டங்களும், மீதம் offshore அதாவது கடலடியில் இருந்து எடுக்கும் திட்டங்களும் ஒப்புதல் பெற்றது.
இந்த முப்பத்தியோரில் அதிகபட்சமான ப்ளாக்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஆயில் அண்ட் நாச்சுரல் காஸ் கார்ப் எனப்படும் ONGC நிறுவனத்தால், எண்ணெய் மற்றும் இயற்க்கை எரிவாயு இருக்கிறது என நிரூபிக்கப் பட்டு ஆனால் அவர்களால் அதை நிறைவேற்ற முடியாது என்று திருப்பி அளிக்கப் பட்டவை. பெரிய நிறுவனமாகையால் அவர்களுக்கு நிர்வாக செலவினங்கள் உயர்வாக இருப்பதால், சிறிய நிறுவனங்கள் இதை குறைந்த செலவில் உற்பத்திக்கு கொண்ட வர முடியும் என்று அரசாங்கம் இவைகளை மறுபடியும் ஏலத்திற்கு விட்டு புதிய உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடிவு செய்தது.
இது இன்றய, நேற்றைய முடிவல்ல. சென்ற UPA அரசாங்கமே இதை செய்ய ஆலோசனை ஆரம்பித்து NDA அரசாங்கம் இதற்க்கு உண்டான சில புதிய விதை முறைகளை ஏற்படுத்தி அதற்கப்புறம் 2016ல்
Discovered Small Fields Bid Round 2016 கொண்டு வந்தது. இதன் மூலம் தேர்ந்தடுக்கப்பட்ட 31 ப்ளாக்சில் 2 மட்டுமே தமிழ் நாட்டில் இருக்கிறது. அதில் ஒன்றுதான் நெடுவாசல். CY/ONDSF/NEDUVASAL/2016 எனப்படும் இந்த பிளாக் ஜெம் லெபோரேடரிஸ் எனும் புதிய தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பிளாக் 'conventional block' அதாவது நடைமுறையில் இருக்கும் ட்ரில்லிங் மற்றும் உற்பத்தி முறையை உபயோகித்து கச்சா எண்ணெய் மதுரம் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யக் கூடியது. இது shale gas அல்லது coal bed methane போன்று மிகவும் கடினமான, அதிக அளவில் கிணறுகள் ஏற்படுத்தி, இரசாயநக் கலவைகள் செலுத்தி எண்ணை அல்லது வாயு வெளிக்கொணர வேண்டியதில்லை.
நெடுவாசல் பிளாக் ஏறக்குறைய 2700 மீட்டரில் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடும், இந்த ஆழத்தில் நிலத்தடி நீர் மாசுபட வாய்ப்புக்கள் இல்லை, ஏனென்றால் தண்ணீர் 180 முக்கால் 270 மீட்டரில் கிடைக்கிறது.
பின்னொரு காலத்தில் நெடுவாசல் கிணறில் எண்ணை உற்பத்தி குறைந்து அப்போது உற்பத்தி அதிகரிக்க இரசாயன கலவை செலுத்தி உற்பத்தி அதிகரிக்கும் Enhanced Oil Recovery (EOR) திட்டம் மேற்கொண்டாலும் அந்த இரசாயணம் கலந்த நீரை சுத்திகரித்து மீண்டும் அந்த கிணற்றிலேயே உபயோகப்படுத்தலாம்.
ஐக்கிய அரபு நாடுகள் தங்கள் எண்ணைக்கிணறு இருக்கும் இடங்களில் எல்லாம் வேப்ப மரமும், துளசிச்செடியும், முல்லைக்கொடியும் வளர்த்து வருகிறது. சுற்றுச்சூழல் வளப்படுத்த ஒரு பாலைவனத்திலேயே அவ்வாறு செய்யமுடியுமென்றால் இந்த சிறிய பிளாக்கை சுற்றி விவசாயம் செய்ய முடியாதா?
ஐக்கிய அரபு நாட்டில் அல் எய்ன் எனும் இடத்தில் பாலைவனச்சோலை உள்ளது. அங்கிருந்துதான் நாடு முழுவதற்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. அங்கு சோலைகளுடன் கால காலமாக எண்ணெய் உற்பத்தியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகமே பாலைவனமாகும் எனப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள் இந்த உதாரணங்களை பார்க்க மாட்டார்கள்.
இந்த திட்டத்தால் யாருக்குப் பயன்? ONGC நம் நாட்டில் உற்பத்தி செய்யும் எண்ணெயின் அளவில் தமிழ் நாட்டின் உற்பத்தி வெறும் 0.25 மில்லியன் டன் அல்லது 5% மட்டுமே. அந்நாள் அதில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் ராயல்டி வருடத்திற்கு 400 கோடி. அதனுடன் ONGC எண்ணற்ற CSR நல்லது திட்டங்களும் தமிழ் நாட்டில் நடத்தி வருகிறது. தமிழ் நாடு நகரங்கள் நிறைந்த நாடு, தொழில் வளர்ச்சி அடைந்த நாடு அதானால் அதனுடைய எரிவாயுத் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெடுவாசல் விவசாயிகளும் தங்கள் டிராக்டர், பம்ப்செட் இயக்க டீசலை எதிர்பார்க்கிறார்கள் அல்லவா? எப்படியிருக்கு மாநிலத்தில் வரும் ஒவ்வொரு எரிவாயு திட்டத்தையும் எதிர்த்தால் எப்படி? என்னூரில் திட்டம் எதிர்ப்போம், கேரளாவிலிருந்து எரிவாயுக்குழாய் எதிர்ப்போம், கூடங்குளம் அணு மின்நிலையமா கூடவே கூடாது.
எதிர்ப்பே வாழ்வென்றிருந்தால் முன்னேற்றம் எங்கிருந்து வரும்? தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருந்த மாநிலம், இடைவிடாத போராட்டங்களால் அதை இழக்கக் கூடாது. புதிய தொழில் முனைவோர் வளர, இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி பெறுக நெடுவாசல் போன்ற திட்டங்கள் ஒரு சிறு முயற்சியே. ஏழு ஆண்டுகள் கழித்து எண்ணெய் உற்பத்தியில் புதிய முதலீடு வர இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. "Unified Bidding Round" என்பது ஒரு நிர்வாக புரட்சி, shale gas திணிக்கும் ஒரு பூதம் அல்ல.
அதிக படிப்பறிவு மிக்க, வளர்ந்த மாநிலத்தில் எப்படி எப்படிப் பட்ட பொய்ப்பிரச்சாரங்கள் சாத்தியமாகிறது. உங்கள் பூமியிலிருந்து கிரோசின் எடுப்போம் என்றதால் எங்கள் நிலங்களைக் கொடுத்தோம், ஹைட்ரா கார்பன் என்றால் கொடுக்கு மாட்டோம் என்று விவசாயிகள் சொல்வதாக ஊடங்ககளும் எழுதுகின்றன. இவர்களுக்கு எந்த நிலத்திலிருந்தும் கிரோசின் வரமுடியாது, அது ஒரு சுத்திகரிக்கப்பட்ட பொருள் என்று தெரியாதா. கச்சா எண்ணெய்க்கும், கிரோசினுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஒரு திட்டத்தை தடுத்து நிறுத்துவார்களேயானால் தமிழ் நாட்டில் எந்த ஒரு தொழிலும் தொடங்க முடியாத நிலையே வரும். முதலில் ஹைட்ரோ கார்பன் தமிழ் வார்த்தையா? ஹைட்ரொ கார்பன் எனும் பூதத்தைக் கிளப்பியது யார்?
கட்டுரை: பாடுநர் :
சாகச முயற்சி சோதனையானது: கம்பி எண்ணும் இளைஞர்
துபாய் தலைநகர் ஷார்ஜாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் ஸ்டண்ட் செய்தது பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
தன்து ஸ்டண்ட்ங் திறமையை பறைசாற்றிட திருமண நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்து, தனது காரை இரண்டு சக்கரங்களிலேயே சிறிது தூரம் ஓட்டிச் சென்றுள்ளார்.வாலிபரின் இந்த சாகசத்தை படம்பிடித்த உறவினர், அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவியுள்ளது.
ஆனால் இதில் ஒரு திருப்பம் என்னவெனில், காவல்துறையின் கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றது. பொது வெளியில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்
கல்லூரி மாணவியைக் காதலிப்பதில் தகராறு: பத்தாம் வகுப்பு மாணவன் கொலை
பெங்களூரில் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நடந்த தகராறில், மாணவர் ஒரு குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் யேலகன்கா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று இவரது பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. ஆண்டு விழா நடந்த முடிந்த சில மணி நேரங்களிலே ஹர்ஷா பள்ளிக்கு வெளியில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இதைக் கண்ட அருகில் இருந்த மக்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஹர்ஷா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மக்கள் கூறுகையில், சுமார் 10-12 மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள், திடீரென அந்த இடம் அமைதியானது.
அதன்பின்னர், அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் வேகமாக ஓட்டமெடுக்க, ஒரு மாணவன் மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தான் என்றும் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், விசாரணை மேற்கொண்டதில், ஹர்ஷாவுக்கும் மற்றொரு பள்ளி மாணவர்களுக்கும் இடையே கல்லூரி மாணவியை காதலிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடைப்பெற்ற வாக்குவாதத்தின் போது யாரோ ஒரு மாணவன் ஹர்ஷாவை கத்தியால் குத்தியுள்ளான் என்று கூறியுள்ளனர்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் மிகவும் பீதிக்கு உள்ளானார்கள். இதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிப்பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த குப்வாரா, கிஸ்த்வார், பதர்வா உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தி இந்து பிபிசி செய்தியாளர்- குழு இந்தியா வர 5 ஆண்டுகள் தடை : மத்திய அமைச்சகம் வலியுறுத்தல்
தி இந்து நிருபர் ஷிவ் சஹாய் சிங்
தெற்காசியாவுக்கான பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட் மற்றும் அவரின் குழுவினர் இந்தியாவுக்குள் நுழைய குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வனத்துறை துணை காவல் தலைவர் வைபவ் சி. மாத்தூர் இது தொடர்பான அலுவல் ஆணையை பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். இதில் 5 ஆண்டு காலத்துக்கு நாட்டின் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பிபிசி படமெடுக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட்டின் ஆவணப்படமான ''ஒன் வோர்ல்ட்: கில்லிங் ஃபார் கன்சர்வேஷன்'' உருவாக்கத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அஸாமின் காசிரங்கா புலிகள் சரணாலயத்தில் விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ள செயல்பாடுகளை ஆய்வு செய்யும் விதமாக அந்த ஆவணப்படம் அமைந்திருந்தது.
அப்படத்தில், காண்டாமிருகத்தை வேட்டையாடுபவர்களைச் சுடவும், அவர்களின் உயிரைப் போக்கவும் காவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், ரெளலட் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகும் ஆவணப்படம் எடுத்துள்ளார். இதன்மூலம் அவர் சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியிருந்த விதிமுறைகளை மீறிவிட்டார்.
ரெளலட் மற்றும் அவரின் குழுவினர், உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்து இந்திய அரசாங்க அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு முயற்சிகள் முறையாகக் காட்டப்படவில்லை. இந்த ஆவணப்படம் முற்றிலும் தவறான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
பிபிசி தரப்பில் இதுகுறித்து எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ministry seeks ban on BBC correspondent, crew's entry into India for five years, revocation of visas
Documentary explores the anti-poaching strategy adopted by guards of the Kaziranga Tiger Reserve in Assam.
The Ministry of Environment and Forests (MoEF) has urged the Ministry of External Affairs to revoke the visas of BBC's South Asia correspondent Justin Rowlatt and his crew, and prevent “their further entry into India for a period not less than five years.”
அரசாங்கத்தை கைதிகள் பராமரிக்கின்றனர் : மு.க.ஸ்டாலின்
சென்னை : கைதிகளை அரசாங்கம் பராமரிப்பது தான் வழக்கம்; தற்போது அரசாங்கத்தை கைதிகள் பராமரிப்பதாக திமுக பேச்சாளர்கள் கூட்டத்துக்குப்பின் சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற பேச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் காலம் கடந்த உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதா ஆவி விரும்புகிறது : ராமதாஸ்
நான் ஊழல் செய்துவிட்டேன். எனது தோழியும் சரியில்லை. ஆதலால், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆவி விரும்புகிறது. என டாக்டர் ராமதாஸ் கூறினார்.*
_சேலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா நூல் வெளியீட்டு விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''நான் ஊழல் செய்துவிட்டேன். எனது தோழியும் சரியில்லை. ஆதலால், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆவி விரும்புகிறது. மேலும், தமிழகத்தில் அன்புமணி சொன்ன மாற்றம் வரத்தான் போகிறது._
_தரம் இல்லாதவர்களை எல்லாம் தலைப்பு செய்தியில் போட்டு நாட்டை சீரழித்து விடாதீர்கள். பொறுப்புடன் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டும். நான் கட்சி துவங்கி 28 ஆண்டுகள் ஆகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்காகவும் தான் நான் உழைத்து வருகிறேன். எங்களை ஜாதிக் கட்சி என்ற முத்திரையை இனிமேலும் குத்தாதீர்கள். இந்த எடப்பாடி மற்றும் புன்னகை மன்னன் பன்னீர்செல்வம் ஆகியோர் அரசியலில் இருந்து ஒழியப் போகிறார்கள்'' என்றார்._

