Home Blog Page 5671

ஜெயலலிதா ஆவி என்னுடன் பேசியது: திகில் கிளப்பும் திருவாரூர் சாமியார்!

ஜெயலலிதாவின் ஆவி பேசியதாக திருவாரூரை சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*
_ஜெயலலிதாவின் ஆவி தன்னிடம் பேசியதாக திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆவி தன் மீது இறங்கியிருப்பதாக கூறிய சாமியார், ஜெயலலிதாவின் ஆன்மா போல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது._
_ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல் அவரது மரணம் வரை எல்லாமே மர்மமாக உள்ளது. ஜெயலலிதா மறைந்து 3 மாதங்கள் கடக்க உள்ள நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குடைச்சல் கொடுக்க சசிகலா தரப்பு ஜெ.வுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலை வரவழைத்து அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து விளக்கமளிக்க வைத்தது. ஜெ.மரணத்தில் ஏற்கனவே ஏராளமான மர்மங்களும் குழப்பங்களும் நீடித்து வரும் நிலையில் மருத்துவர்கள் அளித்த விளக்கம் கூடுதல் குழப்பத்தையும் சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளது._
_இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார். அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும் அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என்று கூறி அனுமதிக்காக காத்திருந்தார்._
 
_ஜெ.ஆவிப்போல் பேசினார்
அவரிடம் நிருபர்கள் விசாரித்தபோது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாக சாமியார் ஸ்ரீ மகரிஷி கூறினார். அந்த ஆவி பேசுவது போலவும் அவர் பேசினார்._
 
_அவர் பேசியதாவது, ' நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன். ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது. இவ்வாறு அந்த சாமியார் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதுப் போல் பேசினார். ஆவி, பேய், பூதம் எல்லாம் பொய் என்று கூறப்பட்டாலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் பரபரப்பை ஏற்படுத்திதான் வருகிறது._

பொ.செ. பதவியை ராஜினாமா செய்கிறாரா சசிகலா?! அமைச்சர்கள் சிறை சந்திப்பின் பின்னணி

பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவை  தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகினார். டிசம்பர் மாதத்தில் நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்த தீர்மான நகல், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டன. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடியானது. இதற்கிடையில் சசிகலாவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டி காரணமாக உள்கட்சி பூசல் ஏற்பட்டது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு போர்க்கொடி தூக்கியது. இதில் ஒருகட்டமாக சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், பிப்ரவரி 28-ம் தேதிக்குள் (இன்று) சசிகலா, பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களில் சிலரும், சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனும் சந்தித்து பேசினர். அப்போது கட்சியின் உள்விவகாரங்களையும், தமிழக அரசியல் சூழ்நிலைகளையும் கேட்டறிந்த சசிகலா, அதற்கான ஆலோசனைகளையும் தெரிவித்தார். பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை  அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, தேர்தல் ஆணைய விவகாரம், சிறை மாற்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் மறு சீராய்வு மனு உள்ளிட்டவைகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கட்சியின் உள்விவகாரங்கள், பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 
 
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "அ.தி.மு.க.வின் விதியில் 5 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். அந்தவகையில் பார்த்தால் சசிகலா, தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியில் இல்லை. 2011ம் ஆண்டில் ஜெயலலிதாவால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியிலிருந்தும், போயஸ் கார்டனிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர். இதில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா மீண்டும் சேர்த்துக் கொண்டார். அ.தி.மு.க.வின் விதிப்படி சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது. இதை நிச்சயம் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டும். மேலும் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியும் அ.தி.மு.க.வில் இல்லை. இதனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சசிகலாவே, பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறார். அதுதொடர்பாக டி.டி.வி. தினகரன் மற்றும் கட்சியின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் சசிகலா வெளியிட வாய்ப்புள்ளது.
மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல், பெங்களூரு சிறையிலிருந்து தமிழக சிறைக்கு மாற்றம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சில நாள்களுக்கு முன்பு தீபக் அளித்த பேட்டி தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. தீபக்கை இயக்குபவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சசிகலா உத்தரவிட்டுள்ளார். அடுத்து மக்களை சந்திக்கும் பன்னீர்செல்வத்துக்கு எப்படி முட்டுக்கட்டை போடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. சசிகலாவின் சந்திப்பில் பங்கேற்ற மன்னார்குடியின் பவர்புல் மனிதர் ஒருவர், 'எந்த காரியத்திலும் அவசரப்பட வேண்டாம். ஏற்கெனவே நாம் அவசரப்பட்டதால்தான் சிறை வரை வந்து விட்டோம். இனிமேல் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் தீவிர ஆலோசனைக்குப்பிறகே எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். அமைச்சர்களைச் சந்தித்த சசிகலா, முதல்வர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளதை கட்சியில் ஒரு தரப்பு விரும்பவில்லை. இதனால் அவர்களை சரிகட்டும் வகையில் கட்சியில் முக்கியப்பதவி அந்த தரப்புக்கு கொடுக்கலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட அந்த தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்" என்றனர்.

ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிவிசாரணை கோரி 8-ம் தேதி ஓ.பி.எஸ். உண்ணாவிரதம்

ஜெ.மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிவிசாரணை கோரி 8-ம் தேதி ஓ.பி.எஸ். உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே 8-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி ஓ.பி.எஸ். அணி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் போலீசாரிடம் மனு அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 359 வங்கிகள் மூடல் 5 ஆயிரம் கோடி பணவர்தனை முடக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ரூ. 5 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடங்கின. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடும்ப ஓய்வூதியத் திட்டத்தில் கூடுதல் பலன்களை வழங்க வேண்டும். வங்கி ஊழியர் சங்கங்களின் செயல்பாட்டை கட்டுபடுத்த முயன்று வரும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு

சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 36 கூட்டுறவு வங்கிகள், 61 கிராமப்புற வங்கிகள் உள்பட மொத்தம் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடின. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

பிப். 28 மாத இறுதிநாளாக என்பதால் சிறிய மற்றும் பெரும் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை முடங்கியதாக வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்: கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கனரா வங்கி கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்டப்பொதுச்செயலர் ரெங்கன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகி கில்பர்ட்ராஜ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் நம்பிராஜன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி செளந்தர்யா, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாகி முத்தையா உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு

திருநெல்வேலி
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கு (Hernia)
அறுவை சிகிச்சை , லேப்ராஸ்கோபிக் சிகிச்சை இதில் எது சிறந்தது  என அது 
குறித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. 

இதில்
பாவூர்சத்திரம் சுசிலா ஆஸ்பத்திரி மருத்துவர்  எஸ்.குணசேகரன் கலந்து கொண்டு
லேப்பராஸ்கோபிக் சிகிச்சையே சிறந்தது என்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 
மற்றும் மாணவர்களுக்கும் செயல் விளக்கம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம்
விளக்கம் அளித்தார். முடிவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் ,
மருத்துவர் 
எஸ்.குணசேகரனுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள் .

கீழப்பாவூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள் விழித்துக் கொள்ளுமா ?காவல்துறை

கீழப்பாவூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கருப்பசாமி(63)  இவர் எஸ்.கே.ஆர் பூங்கா தெருவில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்  இரவு வீட்டில் வழக்கமாக
தூங்கும் அறையில் தூங்காமல் வேறு அறையில் தூங்கியுள்ளார் ,இந்நிலையில் மாடி
வழியாக வீட்டிற்குள் வந்த  திருடன் வீட்டில் பீரோ சாவியை தேடி எடுத்து  இரண்டு 
பீரோக்களை திறந்து பீரோவில்  இருந்த பணம் ரூ 1.86 லட்சம் மற்றும் நகை 60 கிராம் நகையை
கொள்ளையடித்துள்ளான்  சத்தம் கேட்டு பக்கத்துக்கு அறையில் இருந்து எழுந்து 
வந்த கருப்பசாமி சத்தம் போட சுதாரித்த திருடன் வீட்டை விட்டு ஓடி விட்டான்
இது குறித்து பாவூர்சத்திரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர், அண்மைக்காலமாக கீழப்பவூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் ,பொது இடங்களில் கண்காணிப்பு காமிரா ,மற்றும் இரவு நேரங்கள் முக்கிய இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களளின் கோரிக்கையாகும்

வங்கி ஊழியர்கள் இன்று ‘ஸ்டிரைக்’

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் இன்று(பிப்.,28), 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுகின்றனர்; அதனால், வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கும்.
வாரத்தில் ஐந்து நாள் வேலை, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வேலை செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, அப்போது உயிர் இழந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் உட்பட, பல கோரிக்கைகளை, வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
*பேச்சு தோல்வி:*
இது தொடர்பாக, மத்திய அரசுடன் நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால், கூட்டமைப்பினர் இன்று(பிப்.,28) ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொது மற்றும் அரசுத் துறை வங்கிகள்; கூட்டுறவு வங்கிகள்; பழைய தனியார் வங்கிகள்; வெளிநாட்டு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
*கோரிக்கைகள்:*
இது குறித்து, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர், சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது: அரசு வங்கிகளின் பல பணிகளை, தனியாருக்கு தரவும், பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், வங்கிகளை தனியார் மயமாக்கவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது; இவற்றை கைவிட வேண்டும். ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க வேண்டும்; பல ஆயிரம் கோடி வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடக்கிறது.
இதில், தமிழகத்தில், 8 000 கிளைகளில் பணிபுரியும், 75 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். சென்னையில், வள்ளுவர் கோட்டத்திலும், மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
*சில வங்கிகள் செயல்படும் :*
பழைய தனியார் வங்கிகளின் ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர். அதே நேரம், புதிய தனியார் வங்கிகளான, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., – கோட்டக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. இந்த வங்கிகள், வழக்கம் போல செயல்படும். மற்ற வங்கிகள் செயல்படாததால், வங்கிகளுக்கு இடையே நடைபெறும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன?: பொன்னையன் போட்டார் புது குண்டு

சென்னை…
 ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளில், சென்னை ஆர்.கே.நகரில் நடக்கும் பிரம்மாண்டமான விழாவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவேன் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறி வந்தார். ஆனால், வெளியிடவில்லை. 
இதனால், பன்னீர்செல்வம், பிப்., 24ல், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் சப்பென்று நிறைவடைந்தன. மக்கள் மத்தியிலும், பன்னீர்செல்வம் மீது எரிச்சல் ஏற்படுத்தியது.
இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பினர், நேற்று, கூடி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் முடிவில், பிப்., 24ல், பன்னீர்செல்வம் வெளியிட இருந்த அறிவிப்பை, கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையனை வைத்து, உடனடியாக வெளியிட முடிவெடுக்கப்பட்டது.
ஜெ., மீது தாக்குதல்?: 
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சின் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய பொன்னையன், கடந்த செப்., 22ல், உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன், சென்னை, போயஸ் தோட்டம் இல்லத்தில் வைத்து, தாக்கப்பட்டிருக்கிறார். அதன் பின், அவர் சுய நினைவு இழந்த நிலையிலேயே, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார். அடுத்த சில நாட்களிலேயே அவர் இறந்து போயிருக்கிறார்.
ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போது, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், மருத்துவரான மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களைக்கூட, மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவைப் பார்க்கச் சொன்றால், பார்க்கச் செல்பவருக்கு நோய்த் தொற்று ஏற்படும் என்று சொல்லித் தடுத்தனர்.
அப்படியென்றால், 73 நாட்கள், ஜெயலலிதாவின் கூடவே இருந்ததாகச் சொல்கிறாரே சசிகலா, அவருக்கு ஏன் நோய்த் தொற்று ஏற்படவில்லை?இப்படி, ஜெயலலிதாவை யாரையும் சந்திக்க விடாமல் செய்ததோடு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மருத்துவ சிகிச்சை அனைத்தையும் மாற்றி, மாற்றி சொன்னதில் அப்பல்லோ நிர்வாகத்துக்கும் சசிகலாவுக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டதோ என்ற சந்தேகம் இருக்கிறது.
 இல்லையென்றால், சிகிச்சை விபரங்களைக்கூட ஏன் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும்? 
தொண்டர்கள் உற்சாகம் : 
விரைவில், தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தீவிர பிரசார சுற்றுப் பயணம் செய்து, பொதுமக்கள், கட்சித் தொண்டர்களை சந்திக்கவிருக்கும் பன்னீர்செல்வம், இப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல்கள் அனைத்தையும் மக்கள் மத்தியில் வெளியிடுவார் என்றார். பொன்னையனின் இந்தப் பேச்சால், கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த விவரம் அறிந்து, சசிகலா தரப்பு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி அதிரடியாக பேசுவோர் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்தும், துணைப் பொதுச் செயலர் தினகரன் ஆலோசித்து வருகிறார் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.

பழைய ரூ.500, 1000 நோட்டுகள் வைத்திருந்த 4 பேர் கைது

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த 4 பேர் கைது.முதல் நடவடிக்கையை தொடங்கியது மத்திய அரசு.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடிவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அறிவித்தார்,
இதனைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற குவித்ததால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.
பணம் எடுத்த ஏடிஎம்களில் மக்கள் தவமிருந்தனர். அங்கு பணம் இல்லாததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இப்பிரச்சனையில் ரிசர்வ் வங்கி அறிவித்த 100 க்கும் மேற்பட்ட அறிவிப்புகளால் பொது மக்கள் குழம்பிப் போயினர்.
அதே நேரத்தில் 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில் பழைய ரூ. 500, 1000 நோட்டுக்களை வைத்திருந்ததாக கிழக்கு டெல்லி, காசியாபாத் பகுதியை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய.500, 1000ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தை எடுத்து செல்ல அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் என்ஆர்ஐ களுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
என்ஆர்ஐக்கள் தங்களிடம் இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பரிமாற்றம் செய்ய ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அதைப் பயன்படுத்தி இந்த பணத்தை மாற்ற முயற்சித்திருபபதாக போலீசார் தெரிவித்தனர்.

பிப்.28-ல் வங்கிகள் வேலைநிறுத்தம்: 75 சதவீத வங்கி பரிமாற்றம் பாதிக்க வாய்ப்பு

பிப்ரவரி 28-ம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், வங்கி சேவைகள் 75 சதவீதம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வேண்டும், பண மில்லா பரிவர்த்தனை செய்வதை கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 28-ம் தேதி பொதுத் துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், வங்கிப் பணிகளை அயல்பணிகளாக அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 9 வங்கி சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில்,  வங்கி சங்கங்களில் உள்ள பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவித்த்துள்ளதால் பணப்பரிவர்த்தை சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி, ஆக்சிஸ் மற்றும் கோடக் மகேந்திரா ஆகிய தனியார் வங்கிகள் வழக்கம் போல் தொடரும் என்று தெரிகிறது.
ஆனால் இதில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கீழ் இயங்கும் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காது என்று தெரிகிறது.
27 பொதுத் துறை வங்கிகள் தான் 75 சதவீத வர்த்த பணப் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. இதனால் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கபடுகிறது.
.எம்.விஜயன்