Home Blog Page 5672

பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு

ஏற்கனவே, மொபைல் போன், ஷூ ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.

மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்கு கிறது. இதில், 6,737 பள்ளிகளைச் சேர்ந்த, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர்.

மேலும், தமிழ் வழியில் படிப்போரில், 5.69 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இந் நிலையில், தேர்வு எழுதுவோருக்கு கடும் , கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவை பின் வருமாறு:

தேர்வு மையவளாகத்திற்குள், மொபைல் போன் எடுத்துவரக் கூடாது. எடுத்து வந்தால்அதை தங்கள் உடைமைகளுடன், வளாக அறையில் தான் வைக்க வேண்டும். அதற்கு, கல்வித்துறை பொறுப்பேற்காது

தேர்வறைக்குள் வரும் போது, காலணிகளை, வளாகத்திலேயே கழற்றி விட்டு வர வேண்டும்.

தேர்வறைக்குள் காலணி, உடைக்கான இடுப்பு பெல்ட் அணிய அனுமதி இல்லை. இதனால், மாணவ, மாணவியர் தொள தொள என, பெரிய சைஸ் உடைகளை, பெல்ட் மூலம் இறுக்கி அணிந்து வருவதை, தவிர்ப்பது நல்லது

தேர்வு அறையில் கடிகாரம் கண்டிப்பாக இருக்கும். அவை இயங்கும் வகையில், புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிலுள்ள நேரத்தின் படியே, தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும்.

எனவே, தேர்வறைக்குள் மாணவர்கள், வாட்ச் அணிய தேவையில்லை. எந்த கூடுதல் வசதியும் இல்லாத, சாதாரண வாட்ச் மட்டும் கட்டலாம். ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத் வாட்ச் போன்றவை அனுமதிக்கப்படாது

தேர்வு முடியும் நேரத்தில், தாங்கள் எதிர் பார்த்தமதிப்பெண் கிடைக்காது என தெரிந்து, மறு தேர்வு எழுதுவதற்காக,இந்த தேர்வில் தோல்வி அடையும் வகையில், விடைத்தாள் களில் எழுதிய விடைகளை, தாங்களே அடிக்க கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், அடுத்து வரும் இரண்டு பருவத்திற்கான தேர்வுகளை எழுத முடியாது

தேர்வறையில் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன், தேர்வர்கள் வாக்கு வாதங் களில் ஈடுபடக் கூடாது

ஹால் டிக்கெட் இல்லாதவர்கள், எக்காரணத்தை கொண்டும், தேர்வு எழுத அனுமதிக்கபட மாட்டர்.இவ்வாறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன

இஸ்ரோ சாதனை, பீம் செயலி, மகளிர் சக்தி என மனதின் குரலில் பாராட்டு தெரிவித்த மோடி

இது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 29வது பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 26.02.2017 அன்று ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம். சென்னை வானொலியில் இந்த நிகழ்ச்சி தமிழாக்கப்பட்டு ஒலிபரப்பானது.

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். பனிக்காலம் இப்பொழுது மறைந்து கொண்டிருக்கிறது. வசந்த காலம் நம் அனைவரின் வாழ்க்கையிலும் தன் வருகையைப் பதிவு செய்து வருகிறது. இலையுதிர்க்காலத்திற்குப் பிறகு விருட்சங்களில் புதிய தளிர்கள் துளிர்க்கத் தொடங்கியிருக்கின்றன, மலர்கள் மலர்கின்றன, காடு-கழனி, தோட்டம்-துறவு எல்லாம் பசுமை பொலிந்து கொண்டிருக்கிறது. புள்ளினங்கள் கீசுகீசென்று குதூகலிக்கின்றன. மலர்கள் மட்டுமல்லாமல், கனிகளும் கூட ஆதவனின் கதிரொளியில் பளிச்சிடுகின்றன. கோடைக்காலக் கனியான மாங்கனியின் பிஞ்சுகள் வசந்த காலத்திலேயே தென்படத் தொடங்கியிருக்கின்றன. வயல்வெளிகளில் கடுகுப் பயிரின் மஞ்சள் மலர்கள் விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. பூவரசு மலர்களின் செவ்வண்ண மலர்கள், ஹோலிப் பண்டிகை வருகைக்குக் கட்டியம் கூறுகிறது.  பருவகால மாற்றத்தின் இந்தக் கணங்களை அமீர் குஸ்ரு மிக ரஸமாக வர்ணித்திருக்கிறார்.

வயல்கள் எங்கும் கடுகுப் பயிர்கள் பூத்துக் குலுங்குகின்றன,

மாமரமலர்கள் மொட்டவிழ்கின்றன, பூவரசு பூக்கிறது,

குயில்கள் குக்கூ குக்கூவெனக் கூவுகின்றன.

இயற்கை குதூகலத்தில் திளைக்கும் போது, சூழல் சுகமாக அமையும்,, மனிதனும் இந்தச் சூழலின் இனிமையில் இன்பம் அடைகிறான். வசந்த பஞ்சமி, மஹாசிவராத்திரி, ஹோலிப் பண்டிகை ஆகியன மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சிப் பூக்களை உதிர்க்கின்றன. அன்பு, சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவை தவழும் சூழலில் நாம் பால்குன மாதத்தை நிறைவு செய்யவிருக்கிறோம், புதிய சைத்ர மாதத்தை வரவேற்க தயாராகிறோம். வசந்த காலம் இந்த இரு மாதங்களின் இணைவு.

மனதின் குரலுக்கு முன்பாக நான் உங்கள் ஆலோசனைகளைக் கேட்கும் போதெல்லாம், ஏராளமான ஆலோசனைகளை எனக்கு அனுப்பி உதவுவதற்காக நான் இலட்சோபலட்சம் நாட்டு மக்களுக்கு என் நன்றிகளை முதலில் தெரிவிக்கிறேன். Narendramodiappஇல், twitterஇல், முகநூலில், கடிதங்கள் வாயிலாக என அனைத்து வகைகளிலும் பங்களித்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

நிறைய பொது மக்களுக்கு ISROவின் சாதனைகள் பற்றித் தெரியவில்லை என்று Narendramodi appஇல் ஷோபா ஜாலான் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், நீங்கள் 104 செயற்கை கோள்கள் பற்றியும் intercerptor missiles, இடைமறிப்பு ஏவுகணை குறித்தும் தகவல் அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஷோபாஜி, பாரதத்துக்குப் பெருமை சேர்த்திருக்கும் எடுத்துக்காட்டை நினைவு கூர்ந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி. ஏழ்மையை எதிர்கொள்வதாக இருக்கட்டும், நோயிலிருந்து தற்காத்துக்கொள்வதாகட்டும், உலகோடு நம்மை இணைத்துக் கொள்வதாகட்டும், அறிவாற்றலையும், தகவல்களையும் கொண்டு சேர்ப்பதாகட்டும், தொழில்நுட்பம், அறிவியல் ஆகியன இவற்றில் தங்களுக்கே உரிய பதிவை ஏற்படுத்தியிருக்கின்றன. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் நாள் பாரதத்தின் சரித்திரத்தில் ஒரு பெருமிதம் அளிக்கும் நன்னாள். நமது விஞ்ஞானிகள் உலக அரங்கில் பாரதத்தை நெஞ்சு நிமிர்த்தச் செய்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே பல வியத்தகு சாதனைகளைப் புரிவதில் இஸ்ரோ வெற்றி பெற்றிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். செவ்வாய்க் கோளுக்கு, mars mission திட்டப்படி மங்கள்யானை அனுப்பி வெற்றி பெற்றதற்குப் பிறகு, இப்பொழுது சில நாட்களுக்கு முன்பாக விண்வெளித் துறையில் ஒரு புதிய உலக சாதனையை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது. இஸ்ரோவின் இந்த மெகா சாதனை மூலமாக அமெரிக்கா, இஸ்ரேல், கஜாகஸ்தான், நெதர்லேன்ட்ஸ், ஸ்விட்ஸர்லேண்ட், யூ.ஏ.இ., பாரதம் என, ஒரே நேரத்தில் பல நாடுகளின் 104 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன. ஒரே சமயத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் நாடாக பாரதம் ஆகியிருக்கிறது. மேலும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இது பி.எஸ்.எல்.வியின் 38ஆவது வெற்றிகரமான செயல்பாடாகும். இது இஸ்ரோவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாரதத்துக்குமே ஒரு வரலாற்று சாதனை. இஸ்ரோவின் குறைந்த செலவிலான விண்வெளித் திட்டம் உலகம் முழுவதற்குமே வியப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒன்றாகியிருக்கிறது, உலகம் முழுமையும் பாரத விஞ்ஞானிகளின் வெற்றியைப் பாராட்டியிருக்கிறது.

சகோதர சகோதரிகளே, இந்த 104 செயற்கைகோள்களில் ஒன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் – Cartosat 2D – இது பாரதத்தின் செயற்கைகோள், இதன் மூலமாக எடுக்கப்படும் படங்கள், கனிம வளங்களை அடையாளம் காண்பது, கட்டமைப்பு, வளர்ச்சி தொடர்பான மதிப்பீடு, நகர்ப்புற மேம்பாடு பற்றிய திட்டமிடுதல் ஆகியவற்றுக்குப் பேருதவியாக இருக்கும். குறிப்பாக, நாட்டில் இருக்கும் நீராதாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?, அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம், எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் அறிந்து கொள்ள நமது புதிய செயற்கைக்கோளான cartosat 2D எனது விவசாய சகோதர சகோதரிகளுக்குப் பேருதவியாக இருக்கும். சென்றடைந்தவுடனேயே நமது செயற்கைகோள் சில படங்களை அனுப்பி இருக்கிறது. அது தனது பணியை ஆற்றத் தொடங்கி விட்டது. இந்த அனைத்து செயல்பாடுகளும் நமது இளைய சமுதாய விஞ்ஞானிகள், நமது பெண் விஞ்ஞானிகள் ஆகியோர் தலைமையில் நடந்திருக்கின்றன என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இளைய விஞ்ஞானிகள், பெண் விஞ்ஞானிகள் ஆகியோரின் இத்தனை சிறப்பான பங்களிப்பு என்பது இஸ்ரோவின் வெற்றிக்கு மிகப் பெருமை அளிக்கும் விஷயம். நாட்டுமக்களான உங்கள் தரப்பில் நான் இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களுக்காக, நாட்டுப் பணியை மனதில் கொண்டு விண்வெளி விஞ்ஞானத்தை செயல்படுத்தியிருக்கும் உங்கள் நோக்கம், இன்று போலவே என்றும் நீங்காது நிலைத்திருப்பதற்காக, தினம் தினம் பல புதிய சாதனைகளை நீங்கள் படைத்துக் கொண்டே இருக்கின்றீர்கள். நமது இந்த விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எத்தனை பாராட்டுக்களை அளித்தாலும், அவையனைத்துமே குறைவு தான்.

ஷோபாஜி கேட்ட இன்னொரு கேள்வி பாரதத்தின் பாதுகாப்பு தொடர்பானது. பாரதம் இந்த விஷயத்தில் ஒரு மிகப் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது. இது தொடர்பாக அதிகம் பேசப்படவில்லை என்றாலும், ஷோபா அவர்களின் கவனம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் மீது சென்றிருக்கிறது. பாதுகாப்புத் துறையில் ballistic interceptor missile எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இடைமறிக்கும் ஏவுகணை ஒன்றை பாரதம் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்திருக்கிறது. இடைமறிக்கும் தொழில்நுட்பம் உடைய இந்த ஏவுகணை, சோதனையின் போது, நிலத்திலிருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் எதிரி ஏவுகணையை சாம்பலாக்கி வெற்றிப்பதிவை ஏற்படுத்தி இருக்கிறது. பாதுகாப்புத் துறையில் இது மிகப் பெரிய சாதனையாகும். உலகில் இந்தத் தொழில்நுட்பத்திறன் நான்கைந்து உலக நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது என்பது உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பாரத விஞ்ஞானிகள் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். 2000 கி.மீ. தொலைவிலிருந்தும் கூட பாரதத்தைத் தாக்க ஒரு ஏவுகணை வந்து கொண்டிருக்கிறது என்றாலும் கூட, நமது இந்த ஏவுகணை விண்ணில் அதை அழித்து விடும் வல்லமை வாய்ந்தது என்பது தான் இதன் பலம். நாம் புதிய தொழில்நுட்பத்தைக் காணும் போதோ, ஏதோ ஒரு புதிய விஞ்ஞான சாதனையைப் பார்க்கும் போதோ, நம் மக்களுக்கு ஆனந்தம் உண்டாகிறது. மனித சமுதாய வளர்ச்சிப் பயணத்தில் தேடல் என்பது மிக முக்கிய பங்களிப்பு நல்கி வந்திருக்கிறது. யாரிடத்தில் சிறப்பான புத்திகூர்மை இருக்கிறதோ, அவர்கள் தேடல்களோடு நின்று விடுவதில்லை, அவரவர்களுக்குள்ளே வினா எழுப்பிக் கொள்கிறார்கள், புதிய தேடல்களைத் தோண்டி எடுக்கிறார்கள், புதிய தேடல்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்தத் தேடல், புதியன படைத்தலுக்கான பாதையை வகுத்துக் கொடுக்கிறது. அவர்களுக்குள்ளே எழும்பிய வினாவுக்கான விடை கிடைக்கும் வரையில் அவர்கள் அமைதியாக ஓய்ந்திருப்பதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மனித சமுதாய வாழ்க்கையில், இந்த வளர்ச்சிப் பயணத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால், மனித சமுதாயத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் எங்குமே முழுமையான ஓய்வு இருந்ததே இல்லை என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியும். முழுமையான ஓய்வு சாத்தியமே இல்லை. பிரும்மாண்டத்தில், படைப்பின் விதிகளைத் தெரிந்து கொள்ள, மனிதனின் மனம் அயராது முயற்சி செய்து வந்திருக்கிறது. புதிய அறிவியல், புதிய தொழில்நுட்பம் ஆகியன இதிலிருந்து தான் பிறந்திருக்கின்றன. ஒவ்வொரு தொழில்நுட்பமும், ஒவ்வொரு புதிய அறிவியல் வடிவமாக, ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

பிரியம்நிறை இளைஞர்களே, விஞ்ஞானம், விஞ்ஞானிகளின் கடின உழைப்பு பற்றிப் பேசும் போது, நமது இளைய தலைமுறையினர் விஞ்ஞானத்தின்பால் ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல முறை மனதின் குரலில் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். பல விஞ்ஞானிகள் தேசத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.  இன்றைய விஞ்ஞானிகள், இனிவரும் யுகத்தில் தோன்றவிருக்கும் தலைமுறைகளின் வாழ்க்கையில் ஒரு நிலையான மாற்றத்தின் காரணிகளாக ஆகிறார்கள்.

எந்த ஒரு விஞ்ஞானமும் பூரண நிலையில் வானத்திலிருந்து குதிக்கவில்லை. அனைத்து அறிவியல் அனைத்தும், அனுபவத்தால் செதுக்கப்பட்டவை என்று அண்ணல் காந்தியடிகள் கூறுவதுண்டு.

உண்மை நாடி ஓயாது உழைக்கும் நம் நவயுக விஞ்ஞானிகளின் தாகம், விடாமுயற்சி, தியாகம் ஆகியவற்றைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று பெருமதிப்பிற்குரிய பாபு அவர்கள் கூறியிருக்கிறார்.

கோட்பாடுகளை எப்படி நடைமுறைக்கு ஏற்றாற்போல ஆக்குவது, அதற்கான சாதனங்கள் என்ன, எந்த மாதிரியான தொழில்நுட்பத்தைக் கையாள்வது என்பதை விஞ்ஞானம் பொதுமக்களின் தேவையுணர்ந்து செய்ய வேண்டும்; அப்போது தான் எளிய மனிதனுக்கான மகத்துவம் வாய்ந்த பங்களிப்பாக இது ஆக முடியும். கடந்த நாட்களில், நீதி ஆயோகும், பாரதத்தின் அயலுறவுத் துறையும் 14ஆவது அயல்நாடுவாழ் இந்தியர்கள் தினத்தன்று மிகத் தனித்தன்மை வாய்ந்த வகையில் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் சமுதாயத்துக்கு பயனளிக்கும் கண்டுபிடிப்புக்களை வரவேற்றிருந்தார்கள். இத்தகைய புதுமைகளை அடையாளம் காணல், அவற்றைப்பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டல், மக்களுக்குத் தகவல்கள் அளித்தல், இத்தகைய கண்டுபிடிப்புக்களை எப்படி பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல், பேரளவு உற்பத்தியை எப்படி செயல்படுத்துதல், அதனை வர்த்தகரீதியாக பயன்கொள்ளுதல் ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பவற்றை எல்லாம் நான் பார்த்த போது, எத்தனை எத்தனை மகத்துவம் நிறைந்த வகையில் போட்டியாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.

நான் பார்த்த இப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; இது நமது ஏழை மீனவர்களுக்குப் பயன் அளிப்பதாய் அமைந்திருக்கிறது. ஒரு எளிய App, செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது, எங்கே செல்ல வேண்டும், எங்கே அதிகப் படியான மீன்கள் கிடைக்கின்றன, காற்று வீசும் திசை எது, அதன் வேகம் எவ்வளவு, அலைகளின் உயரம் எத்தனை – அதாவது ஒரு மொபைல் செயலியில் அனைத்துத் தகவல்களும் கிடைக்கின்றன, இதனால் நமது மீனவ சகோதரர்களுக்கு மிகவும் குறைவான நேரத்தில், அதிக மீன்கள் கிடைப்பதற்கு அவர்களின் மீன்பிடிப்பில் அது உதவியாக இருக்கிறது. சில வேளைகளில், பிரச்சனையே கூட விஞ்ஞானத்தின் மகத்துவத்தைத் துலக்கிக் காட்டித் தீர்வை அளிக்கிறது. மும்பையில் 2005ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவு மழை கொட்டித் தீர்த்தது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, கடலும் சீற்றத்துடன் காட்சியளித்தது, ஏராளமான இடர்ப்பாடுகள் உண்டாயின. எந்த ஒரு இயற்கை இடர் ஏற்பட்டாலும், அது முதலில் தட்டுவது ஏழை வீட்டின் கதவுகளைத் தான். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று இருவர் முடிவு செய்தார்கள், அவர்கள் இது போன்ற சங்கடங்கள் நிறை காலத்தில் வீட்டைக் காப்பதோடு, வீட்டில் இருப்பவர்களையும் வெள்ளப்பெருக்கிலிருந்து காத்து, நீரினால் பரவும் நோய்களிலிருந்தும் காக்கக் கூடிய ஒரு வீட்டை மேம்படுத்தினார்கள். இப்படி ஏராளமான கண்டுபிடிப்புக்களை என்னால் காண முடிந்தது.

நாட்டில் இந்த வகையிலான பங்களிப்பை பலர் அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நான் கூற விழைவது. நமது சமுதாயமும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு இயங்கும் சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு வகையில் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையின் இணைபிரியாத அங்கமாக ஆகிக் கொண்டிருக்கிறது. கடந்த நாட்களில் டிஜிதன் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல மக்கள் ரொக்கப் பரிவர்த்தனை முறையிலிருந்து மாறி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். பாரதத்திலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிக விரைவாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் தங்கள் செல்பேசியில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப் பழகி வருகிறார்கள். இதை நான் நல்ல அறிகுறியாகக் காண்கிறேன். நமது நாட்டில் கடந்த நாட்களில் லக்கி க்ராஹக் யோஜனா, அதிர்ஷ்டகரமான நுகர்வோர் திட்டம், டிஜிதன் வியாபாரி யோஜனா, டிஜிதன் வியாபாரிகளுக்கான திட்டம் ஆகியவற்றுக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுமார் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஒவ்வொரு நாளும் 15000 பேருக்கு ஓராயிரம் ரூபாய் வெகுமதி கிடைத்து வந்திருக்கிறது.

இந்த இரண்டு திட்டங்கள் வாயிலாக, பாரதத்தில் டிஜிட்டல் கொள்முதல் என்பது ஒரு மக்கள் இயக்கமாக மாறிக் கொண்டிருப்பது புலனாகிறது, ஒட்டுமொத்த தேசமும் இதை இருகரம் கொண்டு வரவேற்றிருக்கிறது. இது வரை டிஜிதன் திட்டத்தின்படி, 10 இலட்சம் பேருக்கு வெகுமதி கிடைத்திருக்கிறது, 50000க்கும் அதிகமான வியாபாரிகளுக்கு வெகுமதி கிடைத்திருக்கிறது, சுமார் ஒண்ணரை கோடிக்கும் அதிகமான தொகை, இந்தத் திட்டங்களில் பங்கெடுத்து முன்னெடுத்துச் சென்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பது பேருவகை அளிக்கும் விஷயம். இந்தத் திட்டத்தின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்குத் தலா ஒரு இலட்சம் வெகுமதி கிடைத்திருக்கிறது. 4000க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தலா 50000 ரூபாய் வெகுமதியாகக் கிடைத்திருக்கிறது. விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் என பலதரப்பட்ட மக்கள் இதில் அதிக உற்சாகத்தோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு இதனால் பயனும் கிடைத்திருக்கிறது. இதை நான் அலசிப் பார்த்த போது, இதில் இளைஞர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் பங்கெடுத்திருந்தார்கள் என்பது தெரிய வந்தது; இதில் 15 வயதே ஆன இளைஞனும் இருந்தார், 65-70 வயது கொண்ட மூத்த குடிமக்களும் இருந்தார்கள். மைசூரிலிருந்து சந்தோஷ் அவர்கள் தனது மகிழ்ச்சியை narendramodiappஇல் வெளிப்படுத்தி இருக்கிறார்; அவர் லக்கி க்ராஹக் திட்டத்தின் மூலமாக தனக்கு 1000 ரூபாய் கிடைத்ததாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் எழுதியதில் முக்கியமான விஷயமாக நான் கருதுவதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு 1000 ரூபாய் வெகுமதியாகக் கிடைத்தது என்னவோ உண்மை தான் என்றாலும், ஒரு ஏழைத் தாயின் வீட்டில் தீப்பற்றி, அதில் இருந்த அனைத்தும் சாம்பலாகிப் போனதை நான் பார்த்த போது, எனக்குக் கிடைத்த இந்த 1000 ரூபாய் வெகுமதியை நான் அந்த ஏழைத் தாய்க்கு உதவும் வகையில் அளித்து விட்டேன், என் மனம் சந்தோஷத்தில் நிறைந்தது என்று கூறியிருக்கிறார். சந்தோஷ் அவர்களே, உங்கள் பெயரும் உங்கள் செயலும் எங்கள் அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கிறது. நீங்கள் மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் செயலைச் செய்திருக்கிறீர்கள்.

தில்லியைச் சேர்ந்த 22 வயதுடைய கார் ஓட்டுநரான சபீர், நாணய விலக்கலுக்குப் பிறகு தனது தொழிலில் டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார், அரசின் லக்கி க்ராஹக் திட்டத்தில் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான வெகுமதி கிடைத்திருக்கிறது. இன்று அவர் கார் ஓட்டினாலும், ஒரு வகையில் இந்தத் திட்டத்தின் தூதராக மாறியிருக்கிறார். தன் காரில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளோடும் இவர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். மிக உற்சாகமாக அவர் விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதோடு, மற்றவர்களையும் இவர் ஊக்கப்படுத்தி வருகிறார்.

மஹாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பரான பூஜா நேமாடே, முதுகலைப் படிப்பு படித்து வரும் மாணவி; இவர் Rupay அட்டை, e-wallet ஆகியவற்றை எப்படி தன் குடும்பத்தார் பயன்படுத்துகிறார்கள், இதில் அவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறது என்பது தொடர்பான தனது அனுபவங்களைத் தனது நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறார். ஒரு இலட்சம் ரூபாய் வெகுமதி இவருக்கு பெரியதொரு தொகையாக இருந்தாலும், இவர் இதை ஒரு இலட்சியமாகக் கொண்டு மற்றவர்களையும் இந்த வழிமுறையில் ஈடுபடுத்தி வருகிறார்.

இந்த அதிர்ஷ்டகர நுகர்வோர் திட்டம் அல்லது டிஜிதன் விபாரிகளுக்கான திட்டத்தின் மூலம் வெகுமதி கிடைக்கப் பெற்றவர்கள் இந்த வழிமுறையின் பிரதிநிதிகளாக, நீங்கள் உங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடமும் விண்ணப்பிக்கிறேன். இந்த இயக்கத்துக்கு நீங்கள் தலைமையேற்க வாருங்கள். நீங்கள் இதை முன்னெடுத்துச் செல்லுங்கள், ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிரான போரில், இதற்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் அனைவருமே என் பார்வையில், ஊழலுக்கு எதிரான புதிய போர் வீரர்கள். ஒரு வகையில் நீங்கள் நேர்மையின் போராளிகள். அதிர்ஷ்டகர நுகர்வோர் திட்டம் 100 நாட்கள் நிறைவடைந்த பிறகு என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும் இல்லையா? ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று டா. பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாள் வருகிறது. இது நினைவில் கொள்ளத்தக்க நன்னாள். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று மிகப் பெரிய பரிசுகளுக்கான குலுக்கல் நடைபெறவிருக்கிறது. இன்னும் சுமார் 40-45 நாட்கள் எஞ்சியிருக்கின்றன. பாபா சாஹேப் அம்பேட்கரை நினைவு கொள்ளும் வகையில், உங்களால் ஒரு வேலை செய்ய முடியுமா? சில நாட்கள் முன்பு தான் பாபா சாஹேப் அம்பேட்கரின் 125வது பிறந்த நாள் கடந்து சென்றது. அவரது நினைவைப் போற்றும் வகையில் நீங்கள் குறைந்தபட்சம் 125 பேரையாவது பீம் செயலியை தரவிறக்கம் செய்யக் கற்றுக் கொடுங்கள். இதன் மூலமாக எப்படி பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்பதைக் கற்றுத் தாருங்கள், குறிப்பாக உங்கள் அருகிலிருக்கும் சிறு வியாபாரிகளுக்கு இதைச் சொல்லிக் கொடுங்கள்.

இந்த முறை பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாளும் பீம் செயலியும், சிறப்பான மகத்துவம் நிறைந்தவையாக மாறட்டும்; பாபா சாஹேப் நிர்மாணித்த அடித்தளத்தை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதை நான் குறிப்பிட விரும்புகிறேன். வீடு வீடாகச் சென்று, அனைவரையும் இதோடு இணைத்து, 125 கோடி நாட்டு மக்களின் கைகளில் பீம் செயலி சென்று சேர்வதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். கடந்த 2-3 மாதங்களில் இந்த இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் காரணமாக, பல நகரியங்களில், பல கிராமங்களில், பல நகரங்களில் பெருவெற்றி கிட்டியிருக்கிறது.

பாசம்மிகு நாட்டுமக்களே, நமது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஆணிவேராக விவசாயம் இருக்கிறது. கிராமங்களின் பொருளாதார பலம், தேசத்தின் பொருளாதார வேகத்துக்கு வலு கூட்டுகிறது. நான் இன்று உங்களுடன் ஒரு மகிழ்வு தரும் தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது விவசாய சகோதர சகோதரிகள் கடுமையாக உழைத்து களஞ்சியத்தை நிரப்பி இருக்கிறார்கள். நமது தேசத்தின் விவசாயிகளின் உழைப்பு காரணமாக, இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு விளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நமது விவசாய சகோதர சகோதரிகள் பழைய சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கிறார்கள் என்று அனைத்துக் குறியீடுகளும் தெரிவிக்கின்றன. மகசூலைப் பார்க்கும் போது, ஏதோ இன்று தான் பொங்கலையும் பைசாகிப் பண்டிகையையும் நாம் கொண்டாடுகிறோம் என்பது போல ஒவ்வொரு நாளும் தோன்றத் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு சுமார் இரண்டாயிரத்து 200 இலட்சம் டன்களை விட அதிகமாக மகசூல் கிடைத்திருக்கிறது. நமது விவசாயிகள் கடைசியாக நிகழ்த்திய சாதனையை விட, இது 8 சதவீதம் அதிகம். உள்ளபடியே இது ஒரு வியத்தகு சாதனை. நான் குறிப்பாக தேசத்தின் விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க இன்னொரு காரணமும் இருக்கிறது – அவர்கள் பாரம்பரியமான உணவுப்பயிர்களை விளைவிப்பதைத் தவிர, பலவகையான பருப்புவகைப் பயிர்களையும் பயிர் செய்திருக்கிறார்கள். ஏனென்றால், பருப்பு வகைகளில் தான் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்திருக்கிறது. என்நாட்டு விவசாயிகளின் காதுகளில் ஏழைகளின் குரல் விழுந்திருக்கிறது, அவர்கள் சுமார் இருநூற்று தொண்ணூறு ஹெக்டேர் நிலத்தில் பலவகையான பருப்புவகைப் பயிர்களைப் பயிர் செய்திருக்கிறார்கள். இது வெறும் பருப்புவகைகளின் உற்பத்தி மட்டும் அல்ல, இது என் நாட்டு ஏழைகளுக்கு விவசாயிகள் புரிந்திருக்கும் மகத்தான சேவை. நான் விடுத்த ஒரு வேண்டுகோளுக்கு, எனது ஒரு விண்ணப்பத்துக்கு செவி சாய்த்து, பருப்புவகைகள் மகசூலில் சாதனை படைத்த நாட்டின் விவசாய சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பான என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

அன்புநிறை நாட்டுமக்களே, நமது நாட்டில், அரசு வாயிலாக, சமுதாயம் வாயிலாக, அமைப்புகள் வாயிலாக, இயக்கங்கள் வாயிலாக, ஒவ்வொருவரும் தூய்மையை நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு வகையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு அடைந்தவர்களாக செயல்பட்டு வருகிறார்கள். அரசு இடைவிடாத முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த நாட்களில் குடிநீர் மற்றும் சுகாதாரத்துக்கான அமைச்சகத்தின் செயலரின் தலைமையின் கீழ், 23 மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளுக்கான ஒரு நிகழ்ச்சி, தெலங்கானாவில் நடைபெற்றது. தெலங்கானா மாநிலம் வாரங்கலின் மூடிய அறைகளுக்குள்ளே இந்த கருத்தரங்கம் நடைபெறவில்லை, அடிமட்டத்தில் தூய்மைப்பணிகளின் மகத்துவம் என்ன, அதன் செயல்படுத்தலாக இது அமைந்தது. பிப்ரவரி மாதம் 17-18ஆம் தேதிகளில் ஹைதராபாதில் கழிப்பறைத் தொட்டிகளை வெறுமையாக்கும் பயிற்சி தொடக்கி வைக்கப்பட்டது. 6 வீடுகளில் இருக்கும் கழிப்பறைத் தொட்டிகளை வெறுமையாக்கி, அவை தூய்மைப்படுத்தப் பட்டன, இரண்டு தொட்டிகள் கொண்ட கழிப்பறைகளின் தொட்டிகளை அகற்றி, அவற்றை எப்படி மறுபடி பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று அதிகாரிகள் செய்து காட்டினார்கள். இந்தப் புதிய உத்தியைப் பயன்படுத்தும் கழிப்பறை எத்தனை வசதிகரமானது, இவற்றை வெறுமையாக்குவது முதல் தூய்மைப்படுத்துவது வரை எந்த சங்கடமும் ஏற்படுவது இல்லை, எந்த கஷ்டமும் இல்லை, உளவியல்ரீதியிலான எந்தத் தடையும் இல்லை, எந்தத் தடங்கலும் இல்லை என்பதை அவர்கள் செய்து காட்டினார்கள். நாம் எப்படி சாதாரணமாக சுத்தம் செய்கிறோமோ, அதைப் போலவே கழிப்பறைத் தொட்டிகளையும் தூய்மையாக்க முடியும். இந்த முயற்சியின் பலனாக, தேசத்தின் ஊடகங்களில் இது நன்கு பரப்பப்பட்டது, இதன் மீது அழுத்தம் அளிக்கப்பட்டது, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தாமே கழிப்பறைத் தொட்டியை சுத்தம் செய்யும் போது, தேசத்தின் கவனம் அவர்கள்பால் செல்வது என்பது இயல்பானது தானே!

இந்தக் கழிப்பறைத் தொட்டியைத் தூய்மைப்படுத்தும் பணியில், கழிவுகள் என்று நாம் கருதுபவற்றை உரம் என்ற கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்த்தோமேயானால், ஒரு வகையில் இதைக் கருப்புத் தங்கம் என்று கொள்ளலாம். கழிவிலிருந்து செல்வம் என்றால் என்ன என்பதை நாம் இங்கே கண்கூடாகக் காணலாம். இது நிரூபிக்கப்பட்டு விட்டது. 6 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, சராசரியான ஒரு இரட்டைத் தொட்டி கழிப்பறை – இது சுமார் 5 ஆண்டுகளில் நிரம்பி விடும். இதன் பின்னர் கழிவுகளை எளிதாக அகற்றி, இரண்டாவது தொட்டிக்கு அதைத் திருப்பி விட முடியும். 6 முதல் 12 மாதங்களில் தொட்டியில் சேர்ந்திருக்கும் கழிவுகள் முழுமையாக மக்கி விடும். இந்த மக்கிய கழிவினைக் கையாள்வது மிகவும் பாதுகாப்பானது, உரம் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, இது மிகவும் மகத்துவம் நிறைந்த உரமான NPK. விவசாயிகளுக்கு இந்த NPK பற்றி நன்கு தெரியும். நைட்ரொஜென், ஃபாஸ்பரஸ், பொடாசியம். – இந்தச் செறிவு, வேதிப் பொருட்கள் நிறைந்தது. இது விவசாயத்தில் மிகவும் சிறப்பான உரமாகக் கருதப்படுகிறது.

எப்படி அரசு தரப்பில் இப்படிப்பட்ட முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றதோ, அதே போல பலரும் இப்படிப்பட்ட முன்னெடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இப்போதெல்லாம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், தூய்மை பற்றிய செய்திகள் என்ற சிறப்பான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் எத்தனைக்கெத்தனை விஷயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றனவோ, அத்தனைக்கத்தனை பயனளிக்கும். அரசிலும் கூட, பல்வேறு துறைகள் தூய்மை தொடர்பான இருவாரங்களுக்கு ஒரு முறை நடக்கும் தூய்மை தொடர்பான கூட்டங்களுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்து வருகிறார்கள். மார்ச் மாதம் நடைபெறவுள்ள முதல் கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து இந்தத் தூய்மை இயக்கத்துக்கு வலு சேர்க்கவிருக்கிறார்கள்.  மார்ச் மாதத்தின் இரண்டாவது கூட்டத்தில், கப்பல் போக்குவரத்து அமைச்சகமும், நீர் ஆதாரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை நதிக்கு புத்துயிர் ஊட்டும் அமைச்சகமும் இணைந்து, மார்ச் மாதத்தின் கடைசி 2 வாரங்களுக்கு தூய்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றன.

நமது நாட்டில் எந்த குடிமகன் நல்லதொரு பணியில் ஈடுபட்டாலும், ஒட்டுமொத்த தேசமும் ஒரு புதிய சக்தியை உணர்கிறது, தன்னம்பிக்கை ஊற்றெடுக்கிறது. ரியோ பேராலிம்பிக்ஸில், நமது மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களின் சாகஸங்களுக்கு நாம் பெரும் வரவேற்பு அளித்தோம். இந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்வைத் திறன் இல்லாதோருக்கான டி-20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், பாரதம் பாகிஸ்தானத்தைத் தோற்கடித்து, 2வது முறையாக தொடர்ந்து உலக சாம்பியனாகி, தேசத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். நான் மீண்டும் ஒரு முறை அணியின் அனைத்து வீரர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தில் நமது மாற்றுத் திறனாளி நண்பர்களின் சாதனைகள் நமக்குப் பெருமிதம் அளிக்கின்றன. மாற்றுத் திறன் படைத்த நமது சகோதர சகோதரிகள் அதிகத் திறன் படைத்தவர்கள், மனவுறுதி நிரம்பியவர்கள், சாதனையாளர்கள், மனோதிடம் கொண்டவர்கள் என்று நான் எப்போதுமே கருதி வந்திருக்கிறேன். ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை இருந்து கொண்டே இருக்கின்றன.

விஷயம் விளையாட்டுத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, விண்வெளி விஞ்ஞானமாக இருந்தாலும் சரி, நமது தேசத்தின் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். சரிநிகர் சமானமாக அவர்கள் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள், தங்கள் சாதனைகள் மூலம் தேசத்தின் நற்பெயருக்கு ஒளிகூட்டி வருகிறார்கள். கடந்த சில நாட்களில் ஆசிய ரக்பி sevens கேடயத்துக்கான போட்டியில், நமது பெண் வீராங்கனைகள் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார்கள். இந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது அளவில்லா பாராட்டுக்கள்.

மார்ச் மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பாரதத்திலும் பெண் குழந்தைகளுக்கு மகத்துவம் அளிக்க வேண்டி, குடும்பம், சமுதாயம் ஆகியவற்றில் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும், புரிந்துணர்வு பெருக வேண்டும். பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் எனும் இயக்கம் துரித கதியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்று இது வெறும் அரசுத் திட்டமாக மட்டும் நின்று போய் விடவில்லை. ஒரு சமூக புரிந்துணர்வாக, அனைவருக்கும் கல்வி என்ற இயக்கமாக இது பரிமளித்திருக்கிறது. கடந்த ஈராண்டுகளில் இந்தத் திட்டம் மக்கள் சமுதாயத்தை இணைத்திருக்கிறது, தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் இந்த முக்கியமான விஷயம் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது, பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் பழைய பழக்க வழக்கங்கள் குறித்து மக்களின் எண்ணப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறது. பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன என்பது காதில் விழும் போது, மனதில் அதிக ஆனந்தம் ஏற்படுகிறது. ஒரு வகையில் பெண் குழந்தைகள் குறித்து ஆக்கபூர்வமான எண்ணப்பாடு, சமூக ஏற்பின் காரணமாக ஆகி வருகிறது. தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு இயக்கம் காரணமாக, பால்ய விவாஹம் தடுக்கப் பட்டிருக்கிறது என்பதை நான் கேள்விப்பட்டேன். இது வரை சுமார் 175க்கும் மேற்பட்ட பால்ய விவாஹங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் சுகன்யா சம்ருத்தி திட்டத்தின்படி, சுமார் 55-60 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கியிருக்கிறார்கள். ஜம்மு-கஷ்மீரத்தின் கடுவா कटुआ மாவட்டத்தில் convergence model, எனப்படும் ஒன்றிணைதல் மாதிரியின் படி, அனைத்துத் துறைகளும் பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன, கிராம சபைகள் கூட்டப்படுவதோடு கூட, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அனாதைப் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல், அவர்களின் கல்வியை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான முழுமையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் हर घर दस्तक – ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டுங்கள் என்ற திட்டத்தின்படி, கிராமம் தோறும் ஒவ்வொரு வீட்டின் பெண் குழந்தைகளின் கல்விக்காக ஒரு இயக்கம் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் எங்கள் குழந்தை, எங்கள் பள்ளிக்கூடம், अपना बच्चा, अपना विद्यालय இயக்கம் செயல்படுத்தப்பட்டு, பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்தி விடும் பெண்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மீண்டும் அவர்களைப் படிப்பில் ஈடுபடுத்துவது என்ற இயக்கம் நடைபெற்று வருகிறது. நான் கூற வருவது என்னவென்றால், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் எனும் இயக்கம் பல்வேறு வடிவங்களைத் தாங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான். இந்த ஒட்டுமொத்த இயக்கமும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. புதுப்புதுக் கற்பனைகளோடு இது இணைந்து பயணிக்கிறது. வட்டாரத் தேவைகளுக்கு ஏற்ப இது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதை நான் ஒரு நல்ல அறிகுறியாகவே கருதுகிறேன். மார்ச் மாதம் 8ஆம் தேதியை பெண்கள் தினமாகக் கொண்டாடும் வேளையில், நாம் ஒருமித்த உணர்வுடன் இருக்க வேண்டும்

”சக்தி படைத்தவர்கள், எங்கள் பாரதப் பெண்கள்,

சக்தியில் அவர்கள் அதிகம் இல்லை, குறைவும் இல்லை, அவர்கள் அனைவரும் சரிநிகர் சமமே”

பிரியம்நிறை நாட்டு மக்களே, மனதின் குரலில், அவ்வப்போது, ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி உரையாட உங்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் ஆக்கபூர்வமாக இதோடு இணைந்து வந்திருக்கிறீர்கள். உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள எனக்கு நிறைய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. உலகநடப்பு, கிராமங்களின் நிலை, ஏழைகளின் மனதில் இழையோடும் உணர்வுகள் எல்லாம் என்னை வந்து சேர்கின்றன. உங்கள் பங்களிப்புக்காக, உங்கள் அனைவருக்கும் என் கோடானுகோடி நன்றிகள்.

***** தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன் (சென்னை வானொலி நிலையம்)

ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒரு பார்வை

இயற்கை எரிவாயுதான் ஹைட்ரோ கார்பன் வாயு  எனறு வேதியியல் பெயரில் அழைக்க்கப்படுகிறது.
1. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80%. இறக்குமதி மூலமாகதான் சமாளிக்கின்றோம். இதை இறக்குமதி செய்வதற்காக பல லட்சம் கோடி ரூபாய் வருடத்திற்க்கு அன்னிய செலாவனி தேவைபடுகின்றது.
2.  இந்தியாவிலேயே  எண்ணெய் வளங்களை கண்டு அதை எடுக்கும் பணியை ONGC மற்றும் IOC போன்ற பொதுத்துறை நிறுவனங்களே செய்துவந்தன. 
3. 1991 பிறகு புதிய பொருளாதார கொள்கைகள் உருவான பிறகு இந்தியாவில் சுமார் 28 தனியார் எண்ணெய் நிறுவணங்களும் கச்சா எண்ணெய் உற்பத்தி துறையில் ஈடுபட துவங்கின.
4.1997 ஆம் ஆண்டு இந்தியாவின் தேவைக் கான கச்சா எண்ணெய் உற்பத்தியை நம் நாட்டிலேயே அதிகபடுத்தும் நோக்கோடு பல  முறைபடுத்தும் நோக்கோடும் New Exploration Policy ஒன்றை உருவாக்கியது..
5. அது 1998 ல் அமலுக்கு வந்தது. அதனடிப்டையில் சிறிய அளவிலான எண்ணெய் கிணறுகள் மற்றும் எண்ணெய்/வாயு கிடைக்கும் இடங்களை சர்வதேச டெண்டர் மூலம் ஏலம் விட முடிவு செய்யப்பட்டு அதிலே அரசுக்கு Revenue sharing முறையில் வருமானத்திற்க்கு வழி செய்யப்பட்டது…
6. இந்த New Exploration policy நடைமுறைக்கு வந்த இந்த 20 ஆண்டுகளில் 9 முறை 
பல Blocks சர்வதேச டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் Onshore and off shore block களும் அடங்கும்.
7.  தமிழ் நாட்டில் பல்லாண்டு காலமாக ONGC மற்றும் அரசு துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வுகள் நடத்தி வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு தமிழ்நாட்டில் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டு  தமிழ் நாட்டில் தற்போது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிலங்கள் செயல் பாட்டில் உள்ளவை 31. 
8. இந்த Oil and Natural gas fields புவனகிரியிலிருந்து ராமனாதபுரம் வரையில் பரவலாக அமைந்துள்ளது. இதில் நரிமணம் Oil and Gas Field நமக்கு பரிச்சயமான பெயர்..
9. இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வயல் களிலிருந்து ஒரு நாளைக்கு 700 டன் எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதே போல் 3.8 மில்லியன் கன மீட்டர்  இயற்கை எரி வாயு தினம் எடுக்கப்படுகின்றது..இதில் உற்பத்தியாகும் எரிவாயு மூலம் தமிழகத்தில் மின்சார தேவைகாக 650 முதல் 700 மெகாவாட் மின் சாரம் தயாரிக்க பயன் படுகின்றது. தமிழ் நாட்டு அரசுக்கு ராயல்டி மற்றும் வாட் வரி மூலம் 5 ஆண்டுகளில் 1768 கோடி ரூபாய் ONGC மூலம் வருமானம் கிடைத்துள்ளது.
10. இந்த நிலையில் மத்திய அரசு New exploration policy யில் உள்ள அரசுக்கும் நாட்டிற்க்கும் பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கி  சிறந்த கொள்கை முடிவை எடுக்க முடிவு செய்தது. அதன் அடிப்படையில் தான் New Hydrocarbon exploration and licensing policy 2015 ல் உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியா கச்சா எண்ணெய்காக 80% இறக்குமதியை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் நிலையை படிப்படியாக குறைக்க வேண்டும் என முடிவு செய்து 2022 க்குள் 80% லிருந்து இறக்குமதியை 67 % ஆக குறைக்க முடிவு செய்துள்ளது…
11. நெடுவாசல் விஷயத்தை பொருத்தவரை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கே எண்ணெய் எரிவாயு கிடைப்பதை ONGC நிறுவனம் உறுதி செய்தது. ஆகவே ஏதோ இப்போது தான் மோடி அரசுதான் இந்த திட்டத்தை இங்கு கொண்டு வந்தது என்பது உண்மையில்லை….ஏற்கெனவே தமிழ் நாட்டில் 31  Oil and Gas fields செயல்பாட்டில் உள்ளது. எனவே இது முதல் திட்டம் அல்ல….
12. மேலும் தமிழ் நாட்டில் மட்டும் தான் எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் தங்களுடைய வேலையை தொடங்க Consent to operate என்ற Certificate யை மாநில அரசிடமிருந்து பெறவேண்டும். மாநில அரசு அனுமதி கொடுத்த பிறகே இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது……
13. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சில இயக்கங்களும் மத்திய மோடி அரசு தமிழக விவசாயிகளை இந்த திட்டத்தின் மூலம் வஞ்சிக்கிறது என்று தவறான தகவலை பரப்பி ஏமாற்றுகிறது. நான் ஏற்கெனவே குறிப்பிட் படி தமிழ் நாட்டில் ஏற்கெனவே 31 Hydrocarban oil fields உள்ளது. அவைகளெல்லாம் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன…..
கொசுரு செய்தி :
_________________
              கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரானிகன்ஜ் என்ற இடத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் மிகப் பெரிய அளவில் செயல்பட்டு கொண்டிருக்கிறது…….அங்கே மீத்தேன் எரிவாயு திட்டத்தை அனுமதித்தது யார் என்பது சொல்லி தெரிய வேண்டுமா?

தமிழகத்தை வஞ்சிப்பவர்கள் யார்? சதி திட்டங்கள் என்ன?

லஞ்சமே காரணம்!
     நாட்டில் உள்ள வறுமையை போக்க மத்திய பாஜக அரசு, 2 சதவிகித பிரிமியத்தில், விவசாய காப்பீடு வழங்குகிறது!எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் எல்லா விவசாயிகளும்,மற்றவர்களும் தொழில் செய்ய வியாபாரம் செய்ய ரூபாய்10 லட்சம்வரை மாதம் முக்கால் சதவிகித வட்டியில் கடன் வழங்குகிறது மத்திய பாஜக அரசு! மாதம் 210 ரூபாயில் அனைவருக்கும் மாதம் ரூ.5000 பென்சன் கொடுத்து வாரிசுக்கு ரூ 8 லட்சத்து 50 ஆயிரம் வழங்குகிறது பாஜக அரசு! ஸ்டாட்டப் இந்தியா திட்டத்தில் ரூ. 2 கோடிவரை எவ்வித ஜாமீனும் உத்திரவாதமும் இல்லாமல் தொழில் துவங்கும் பட்டதாரிகளுக்கு பாஜக அரசு வழங்குகிறது! மத்திய அரசின் திட்டம் எதுவாக இருந்தாலும் அதை மாநில அரசுதான் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்! காரணம் அதிகாரிகளும் சேவைநிறுவனங்களும் தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் தமிழக மாநில அதிமுக அரசு அதை செய்யாமல் இருட்டடிப்பு செய்கின்றன! எனினும், பாஜக வினர் முடிந்தவரை மக்களுக்கு எடுத்து சொல்வதால்,மேலே சொன்ன திட்டங்கள் அனைத்திலும் 50 லட்சத்திற்கும் அதிகமான தமிழக மக்கள் பயன் பெற்றுள்ளனர்!
 
     தற்போது 100 நாள் வேலையை 150 நாளாக பாஜக அரசு உயர்த்தியுள்ளது! நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு இலவச வீடு! நகர்புற ஏழைகளுக்கும் இலவச வீடு! நடுத்தர வசதி படைத்தோருக்கு வீடு கட்டிக்கொள்ள குறைந்த வட்டியில் கடன்! வருடம் 12 ரூபாயில் ரூபாய் 2 லட்சம் விபத்து காப்பீடு!வருடம் 330 ரூபாயில் ரூபாய் 2 லட்சம் ஆயுள் காப்பூடு! ஆகிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.   இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மத்திய அரசின் திட்டம் எதுவானாலும் மாநில அரசுகள்தான் அவற்றிற்கான பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும். இதை கட்சிரீதியாக பயன்படுத்திக்கொள்ளும் மாநில அரசு அவர்களின் கட்சிக்கார்ர்களைமட்டும் தேர்வு செய்து பொதுமக்களுக்கு துரோகம் செய்கிறது! அதுமட்டுமின்றி மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்கள்போல காட்டிக்கொள்கிறது.
 
      சென்னை மதுரை என தமிழ்நாட்டில் 12 நகரங்களையும்33 சிறு நகரங்களையும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ம்ருத் நகரங்கள் என அறிவித்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய பாஜக அரசு! காஞ்சியையும் நாகையையும் ஆன்மீக நகரமாக அறிவித்து வளர்ச்சி திட்டங்களை வழங்கி பணம் ஒதுக்குகிறது மத்திய பாஜக அரசு! இந்த திட்ட்த்தின்கீழ் கட்டப்படும் மேம்பாலம் போன்ற பணிகளை மாநில அரசு தங்களின் திட்டம்போல காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறது!
 
     இத்தனையும் செய்யும் பாஜக அரசு ஒரு ஊழலும் இல்லாத அரசாக நடந்துவருகிறது! ஊழலுக்காகவே அரசியல் செய்யும் தமிழக அரசியல் வாதிகள் பலருக்கு இது பிடிக்கவில்லை! ”பாஜக வினர் ஊழல் இல்லாமல் நல்லது செய்வதைப்போல நீங்களும் ஏன் செய்யக்கூடாது?”என்று மக்கள் கேட்டுவிடுவார்களோ என்னும் பயத்தில் தமிழகத்தில் பல அரசியல் வாதிகள்! போய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர்! தமிழக அரசியல் வாதிகளால் நடத்தப்படும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இதையே செய்துவருகின்றன!
 
     ஏர்கெனவே நான் இங்கு சொன்னதைப்போல,மேலே சொன்ன திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசே நேரடியாக நிறைவேற்றிடும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை! மாநில அரசு மூலமாகத்தான் நிறைவேற்றப்படவேண்டும்! மாநில அரசின் ஒப்புதலும் வேண்டுகோளும் இல்லாமல் எந்தஒரு திட்டத்தையும் மத்திய அரசு மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது!
 
     தமிழகத்தில் தேசத்துரோகமான செயல்கள் நடந்தாலோ,சட்டம் ஒழுங்கு மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத வகையில் கெட்டுப்போனாலோ மாநில அரசை மத்திய அரசு கலைத்துவிடலாம்! ஆனால் மாநில அரசின் ஒப்[புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவரவும் முடியாது! மத்திய அரசு அந்த திட்டத்தை நேரடியாக மக்களுக்கு வழங்கவும் முடியாது! இதுதான் இந்திய அடசியல் அமைப்புச்சட்டம் சொல்வது!
 
     நிலத்திற்கடியில் இயற்கை எரிவாய்வு இருக்கும் இடங்களில் அதை உறிந்து எடுத்து பெட்ரோலுக்குப்பதிலாக பயன்படுத்தும் திட்டங்களை தமிழக மாநில அரசு விரும்பி வரவேற்று வேண்டுகோள்  விடுத்து  ஒப்புதல் கொடுத்ததால்தான், 2009 ல் இத்திட்டம் புதுக்கோட்டை ஆலங்குடியில் துவக்கப்பட்டது!
 
     அப்போது அந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வலது கம்யூனிஸ்ட் காரர்! (ராஜசேகர்)நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ்காரர்(பா.சிதம்பரம்), தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது திமுக!மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்! தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாக இருந்தது அதிமுக! காங்கிரஸ் திமுக, கம்யூனிஸ்ட் எல்லோரும் சேர்ந்து திட்டத்தை கொண்டுவரும்போது பிரதான அதிமுக எதிர்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! 
 
     2009 திலேயே திட்டம் துவங்கியது! 4000 அடி ஆழம்வரை துழைப்போடப்பட்டு இயற்கை எரிவாயு சோதனையாகஎடுக்கப்பட்டது! புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயற்கை எரிவாய்வு பெட்ரோலுக்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் கிடைக்குமானால், விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல்  நிரந்தரமாக பல்லாண்டுகளுக்கு வாயுவை உறிந்து எடுக்கலாம்தமிழகம் உட்பட இந்திய பெட்ரோலிய தேவைக்கு பயன்படுத்தலாம், இதனால் தமிழகத்திற்கு அதிகலாபம் கிடைக்கும்! என்னும் திட்டத்தில்தான், திமுக, அதிமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளால் திட்டம்துவங்கப்பட்டது!
 
     சோதனையில் “ஆம், இயற்கை எரிவாயுவை இங்கு எடுக்கமுடியும்” அன்று பதில் வந்ததால், முறைப்படி உறிந்து எடுக்க அனுமதி வழங்கப்பட்டது! மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படாமல் காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்திருந்தாலும்,சோதனை வெற்றியானதால் அனுமதி வழங்கியிருப்பார்கள்! ஆனால் அந்த வேலையை ஒரு கம்பெனியிடம் ஒப்படைக்கும்போது அந்த கம்பெனியிடம் இருந்து ஒரு பெரும் தொகையை வாங்கி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் எல்லோரும் பங்குப்போட்டு கொடுத்திருப்பார்கள்!
 
     பாஜக விடம் அத்தகைய ஊழல் என்னும் தேசத்துரோகம் இல்லாத்தால் பணம் கம்பெனியிடமிருந்து வாங்கப்படவில்லை பங்கிட்டு கொடுக்கப்படவில்லை! எனவே கோபமடைந்த அனுமதி வழங்கிய கட்சியினரே மக்களிடம் தவறான பொய்யான தகவல்களை சொல்லி திட்டத்தை தடுக்கிறார்கள்!
 
     இதே போன்று இன்னொரு சம்பவம் சென்னையில் நடந்ததை இங்கு நான் சுட்டிக்காட்ட வேண்டும்.மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை மேம்பாலம் கட்டும்பணி திமுக ஆட்சியில் ஒப்பந்தக்காரரிடம் லங்சம் பெற்றுக்கொண்டு துவக்கப்பட்டது! ஆட்சி அதிமுக வுக்கு மாறிவிட்டதால் அதிமுகவினருக்கும் லங்சம் கொடுக்க ஒப்பந்தக்காரரால் முடியாமல் போனதால் அந்த வேலை நிறுத்தப்பட்டது!அங்கே ஒப்பந்தக்காரரால் கொடுக்க முடியவில்லை இங்கே பாஜக கொடுக்கவிடாமல் தடுக்கிறது! பாஜக எதிர்பார்க்கும் வேலை சுத்தத்திற்கு யாருக்கும் லங்சம் கொடுக்கமுடியாது! யற்கை எரிவாயு எடுக்கப்படும்போது விவசாயத்திற்கு எவ்வித பாதிப்பும் வராதவகையில் பாதுகாப்புப்பணிகளை சரியாக செய்யவேண்டும் என்பது மத்திய பாஜக அரசின் உத்தரவு! இந்த கட்சியினர் கம்பெனிக்காரணிடம் லஞ்சம் வாங்குவதை அனுமதித்தால் கம்பெனிக்காரன் பாதுகாப்புப்பணிகளை சரியாக செய்யமாட்டான். எனவே எந்த திட்டமாக இருந்தாலும் ஊழல் இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக இருக்கிறது! ஆகமொத்தத்தில், ஆலங்குடி போராட்டத்திற்கு,அரசியல்வாதிகளுக்கு கம்பெனிக்காரன் லங்சம் தராததே காரணம்! தமிழக அரசியலை 40 ஆண்டுகளாக கவனித்துவரும் அனுபவத்தில் இதை நான் உறுதியாக சொல்கிறேன்!
 
     மத்தியிலே ஆட்சி செய்யும் பாஜக அரசு மக்கள் நல அரசு!மக்கள் வேண்டாம் என்று சொன்ன வுடனேயே மத்திய பெட்ரோலிய அமைச்சர், தர்மேந்திர பிரதான் அவர்கள்  திட்டத்திற்கு தடை விதித்துவிட்டார்கள்! நாடு முழுமையும்69 இடங்களில் இத்தகைய திட்டம் நிறைவேற்றப்படுகிறது.பல மாநிலங்களில் இது நடந்துக்கொண்டிருக்கிறது! மக்கள் விரும்பாத இடத்தில் தேவையில்லை! விவசாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இத்திட்டத்தை செயல் படுத்த முடியும் என்பதுதான் நிபுனர்களின் கருத்து!
 
    மாநில அரசின் ஒப்புதலோடுதான் மத்திய அரசு ரேசன் அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.28 மானியம் தருகிறது! ரேசன் மண்ணெண்ணை லிட்டருக்கு ரூ.13 மானியம் தருகிறது!மாநில அரசு வேண்டாம் என்றால் மத்திய அரசு நிர்ப்பந்தப்படுத்த முடியாது. சட்டத்தில் அப்படி இடம் இல்லை!  ஆலங்குளம் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை மாநில அரசிடம்தான் வைக்கவேண்டுமேயன்றி மதிய அரசிடம் அல்ல!
 
     போராட்டக்காரர்களின் கருத்துப்படி, விவசாயத்தை அழிப்பது மாநில அரசுதான்! அதாவது திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான்! பாஜக அல்ல!
 
–   குமரிகிருஷ்ணன் 

காவலர் பாதுகாப்பில் இருந்தவர் கொடூரக் கொலை; சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கு: ராமதாஸ்

*காவலர் பாதுகாப்பில் இருந்தவர் கொடூரக் கொலை: சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கு!*

– பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை நிகழ்வுகளைப் பார்க்கும்போது சட்டம் &ஒழுங்கு நிலைமை குறித்த கவலை ஏற்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலியில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த கைதி கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது இக்கவலையை அதிகரித்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமான சிங்காரம் என்ற கைதியை, அவர் மீதான குற்ற வழக்கு ஒன்றில் நேர்நிறுத்துவதற்காக பாளையங்கோட்டை சிறையிலிருந்து நேற்று காலை காவல்துறை வாகனத்தில் காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறையிலிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே, மூன்று மகிழுந்துகளில் வந்த கும்பல், காவல்துறை வாகனத்தின் மீது தங்கள் வாகனத்தை மோதி தடுமாற வைத்திருக்கிறது. காவல்துறை ஊர்தியில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி மற்றும் தண்ணீரை வீசி நிலைகுலையச் செய்ததுடன், கைதி சிங்காரத்தை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. முன்பகை காரணமாகவே இந்த கொலை நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற யூகத்திற்கு வந்திருப்பதைத் தவிர இதில் வேறு எந்த முன்னேற்றமும் இன்று வரை ஏற்படவில்லை.

கைதி சிங்காரத்தை காவல்துறையினர் எந்த நேரத்திற்கு கொண்டு செல்வர் என்பதை கண்காணித்து  இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கிறது.  கைதி சிங்காரம் மீது ஏராளமான கொலை வழக்குகளும், வேறு வழக்குகளும் இருந்திருக்கின்றன. நேற்று முன்நாள் பாளை சிறையிலிருந்து தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிங்காரம், நேற்று இரண்டாவது முறையாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரை கொலை செய்வதற்காக 3 வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். சிங்காரம் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால் அவருக்கு எதிராக இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை காவல்துறை எதிர்பார்த்து, அதற்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய காவல்துறை தவறி விட்டது. அதுமட்டுமின்றி, சிங்காரத்தை படுகொலை செய்யும் திட்டம் பெரிய அளவில் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை ஒரே நாளில் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க முடியாது. இதை உளவுத்துறையினர் முன்கூட்டியே கண்டுபிடித்து தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

கடந்த 12-ஆம் தேதி திருவண்ணாமலையில் அதிமுகவின் முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் என்பவரும், வேலூர் காட்பாடியில் அதிமுக நிர்வாகியும், தனியார் கல்லூரி அதிபருமான ரவி என்பவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதில் முதல் கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைந்து விட்ட நிலையில், இரண்டாவது கொலையில் குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப் படவில்லை. காவல்துறையின் செயல்பாடுகள் இந்த அளவுக்கு தான் கவலையளிக்கும் வகையில் உள்ளன.

ஒரு மாநிலத்தில் திட்டமிடப்பட்ட படுகொலைகள் நடக்காமல் தடுப்பதில் உளவுத்துறையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை உளவுத்துறை செயலிழந்து விட்டது. உளவுத்துறைக்கு தலைமை கூட இல்லை. தமிழக உளவுத்துறையின் தலைமை இயக்குனராக டி.கே. இராஜேந்திரன் இருக்கும் போதிலும், அவர் சட்டம் &ஒழுங்கையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால், உளவுத்துறையின் தலைவர்(ஐ.ஜி) பொறுப்பில் இருப்பவர்கள் தான் அதை முழுமையாக வழி நடத்துவார்கள். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் உளவுத்துறை தலைவர்கள் ஆறு முறை இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் அப்பதவியில் நியமிக்கப்பட்ட  டேவிட்சன் தேவாசீர்வாதம் 2015-ஆம் ஆண்டு நீக்கப்பட்டு, அவருக்கு பதில் சத்தியமூர்த்தி நியமிக்கப் பட்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் நீக்கப்பட்டு, கரண்சின்ஹா அப்பதவியில் அமர்த்தப் பட்டார். தேர்தலுக்கு பிறகு மீண்டும் சத்தியமூர்த்தி அப்பதவிக்கு வந்தார். அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக அவர் நீக்கப்பட்டு டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் நியமிக்கப் பட்டார். ஆனால், 10 நாட்களில் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். முக்கியமான பதவியில்  உள்ள அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டதும் உளவுத்துறையின் முடக்கத்துக்கு காரணம் ஆகும்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான தேவைகளில் முக்கியமானது சட்டம் &ஒழுங்கு ஆகும். எனவே, காவல்துறையை சீரமைத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஈஷா யோக மையத்துக்காக கோவை வந்தார் அத்வானி

கோவை: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று (பிப்.25) மாலை கோவை வந்தார். விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்திலிருந்து வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை பார்வையிடுகிறார். பின்னர் அங்கு நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு டில்லி திரும்புகிறார்.*

சாலையோரத்தில் மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன்

மணப்பாறையில் சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவன் பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சிவகங்கை பாலமுனி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். பார்வையற்றவர். இவரது மனைவி பரிதா (வயது 30). இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தர்மம் வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பரிதா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். உடன் அவரது கணவர் அப்பாஸ் சென்றார். ஆனால் பரிதாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லும்படி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தங்களிடம் பணம் இல்லாததால், மணப்பாறையிலே பிரசவம் பார்க்க கூறினர். ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிட்டதால் பின்னர் அவர்கள் மணப்பாறை ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலின் அருகே சென்று நேற்று காலை தங்கி விட்டனர்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில் பிரசவ வலி அதிகரிக்கவே மண் தரையில் படுத்து பரிதா துடித்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வேனிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் லோகேஷ், அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் ஆகியோர் ஆம்புலன்சுடன் விரைந்தனர். இருப்பினும் பரிதா பிரசவ வலியால் அலறினார். கணவர் அப்பாஸ் தனது மனைவியை ஆசுவாசப்படுத்தினார். குழந்தை பிறந்து கொண்டிருப்பதை பார்வையற்ற தனது கணவன் அப்பாசிடம் பரிதா தெரிவித்தார்.

அவர் செய்வதறியாமல் குழந்தை பிறந்து வெளியே வரும் போது கையில் தாங்கி பிடித்துக்கொண்டார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவர் பிரசவம் பார்த்ததை கண்ட அப்பகுதியினரின் கண்களில் கண்ணீர் வந்தது. அவர்களது நிலையை கண்டு உருகினர். இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ் வேன் வந்து சேர்ந்தது. அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் சிகிச்சை அளித்து குழந்தையை முழுவதுமாக வெளியில் எடுத்தார். இதைத்தொடர்ந்து தாயும், சேயும் பத்திரமாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தாலும், கர்ப்பிணி பெண்களை மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. இதில் தான் நேற்று பரிதா சாலையோரம் பிள்ளை பெற்றெடுக்க தள்ளப்பட்டார். உரிய சிகிச்சை வசதி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எந்த பெண்ணுக்கும் இனி இது போன்ற நிலை வரக்கூடாது. அதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையை மணப்பாறை அரசு மருத்துவமனையில் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெ.டி.ஆர்.

கூவத்தூர் கூத்துகள்: வெளியான புதிய தகவல்கள்

காஞ்சிபுரத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்டில் தங்கியிருந்த 10 நாள்களில் அவர்கள் ரிசார்டையே அல்லோகலப்படுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தியபின்னர், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை கூவத்தூர் ரிசார்டில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சசி முதல்வராக பதவியேற்க இருந்தபோது அவர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார் என்று மெரினா கடற்கரையில் ஓ.பன்னீர் செல்வம் மௌன போராட்டத்தை நடத்தினார்.

இதனால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தாம் பதவியேற்பதற்கு முன்னர் ஓபிஎஸ் தரப்பினராலோ அல்லது எதிர்க்கட்சியினராலோ தம் வசம் உள்ள எம்எல்ஏ-க்கள் விலை போகலாம் என்ற அச்சத்தின் பேரில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை காஞ்சிபுரத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்டில் தங்க வைக்க சசி தரப்பு ஏற்பாடு செய்தது.

*♌சசிக்கு பேரிடி*

கூவத்தூர் ரிசார்டுக்கு அழைத்து செல்லப்படும் போது சில எம்எல்ஏ-க்கள் தப்பி ஓபிஎஸ் அணிக்கு தாவினர். இதனால் சில நாள்கள் சசிகலாவும் அந்த ரிசார்டில் தங்கியிருந்தார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தம்மை பதவியேற்க அழைப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு பேரிடியாக அமைந்தது சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு.

  

*எம்எல்ஏ-க்கள் செயல்பாடு*

இந்த நிலைக்கு சசிகலா சிறை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை 122 எம்எல்ஏ-க்களும் 10 நாள்களாக அந்த ரிசார்டிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது ரிசார்டில் நடந்து என்ன, எம்எல்ஏ-க்கள் நடந்து கொண்ட விதம், எத்தனை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர் உள்பட சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

  

*ஒரு நாள் வாடகை*

அந்த ரிசார்ட்டில் இருந்த அனைத்து 56 அறைகளும் அதிமுக சார்பில் ஒரு டிராவல் ஏஜென்ட்டால் முன்பதிவு செய்யப்பட்டது. ஒரு அறையின் வாடகை நாளொன்றுக்கு ரூ.2,800 ஆகும். அதுமட்டுமல்லாது உணவு, மதுபானம் ஆகியவற்றுக்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சசிகலா தரப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களும் ரிசார்டில் தங்கியிருந்தனர்.

  

*?சமையலுக்கு ஆள்*

இந்நிலையில் பெண எம்எல்ஏ-க்களின் கணவர்கள், குழந்தைகள் என மிகப் பெரிய கும்பலே அங்கு தங்கவைக்கப்பட்டதால் உணவுக்காக அவரவரது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் ரிசார்ட் நிர்வாகம் விழி பிதுங்கியது.

இதனால் சசி தரப்பினரால் அழைத்து வரப்பட்ட சமையல் செய்யும் குழுவினர் அவர்களது உணவு பிரச்னையை தீர்த்தனர்.

*மசாஜ் இல்லை*

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ-க்களுக்கு அழகிய பெண்களால் மசாஜ் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய். எம்எல்ஏ-க்களுக்கென்று சிறப்பு வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. முதல் 3 நாள்களுக்கு ரிசார்டில் உள்ள அனைத்து காமிராக்களும் முடக்கப்பட்டன. அவர்களது செல்போன்களும் பறித்து வைக்கப்பட்டன.

  

*சசிகலா மட்டுமே தங்கினார்*

ரிசார்டில் இருந்த 56 அறைகளும் புக் செய்யப்பட்டிருந்ததால் அங்கு திடீரென வந்திருந்த சசிகலா உறங்குவதற்கு அறை இல்லாமல் போனது. இதையடுத்து சில எம்எல்ஏக்கள் அங்கிருந்து காலி செய்யப்பட்டு வேறொரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சசிகலா அங்கு தங்கினார். அப்போது அவர் அனைவருடனும் இயல்பாக பழகினார். தினமும் அரைமணி நேரம் நடைப்பயற்சி மேற்கொண்டார்.

  

*ரகசிய கூட்டம்*

தமிழக அரசியல் நிலவரம் குறித்து 10 நாள்களும் எம்எல்ஏ-க்களுடன் அதிமுக மூத்த அமைச்சர்கள் மணிக்கணக்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அச்சமயம் ரிசார்ட் நிர்வாகத்தைச் சேர்ந்த யாருக்கும் அறைக்கு செல்ல அனுமதியில்லை.

  

*ரூ.50 லட்சம் புஸ்*

இந்நிலையில் பிப்.8-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடைபெற இருந்ததால் எம்எல்ஏ-க்கள் தங்கள் ரிசார்டை காலி செய்ய நேரிட்டது. அப்போது சேவைக் கட்டணம், அறை கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ. 70 லட்சம் ஆனது. ஆனால் ரூ.20 லட்சம் மட்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மீதி ரூ.50 லட்சத்தை கட்சி விரைவில் செலுத்தும் என்றும் இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என்றும் ரிசார்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

  

*எம்எல்ஏக்கள் செயல்பாடு*

ரிசார்டில் இருந்த டேபிள்கள் உள்ளிட்ட பொருள்களை எம்எல்ஏ-க்கள் உடைத்தனர். மேலும் உணவு பொருள்களை புல்வெளிகளில் சிந்தியிருந்தனர். ரிசார்ட்டில் உள்ள சொத்துகளை சேதப்படுத்தினர். அவர்கள் காலி செய்தவுடன் ரிசார்டை பராமரிக்கவே இரு நாள்களுக்கு ரிசார்ட் மூடப்பட்டது. அந்தளவுக்கு மோசமாக்கி விட்டனர்.

  

*பிரபலமடைந்த ரிசார்டு*

பணக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரிசார்ட் இன்று தமிழகம் கடந்து பட்டித் தொட்டிகளெல்லாம் பரவியது ரிசார்ட் உரிமையாளருக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அங்கிருந்தபோது எம்எல்ஏ-க்கள் செய்த அட்டகாசத்தை மறக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டனர்.

மீத்தேன் எடுப்பது நல்லதா? : ஆய்வு நோக்கில்!

 

Actually what’s the issue? மோடியா ? உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதா? தேச நலனா? விவசாயமா ?

தனது சக்தியை உணர்ந்து கொண்ட Tech Savvy இளைய சமுதாயத்தை ஏதாவது உணர்வுப்பூர்வமாக வளைத்துப் போட அரசியலாளர் செய்யும் முயற்சியா? நானும் விளையாட்டிலிருக்கிறேன் என்று தன்னை, தமது அமைப்பை முன்னிருத்த கிடைத்த சந்தர்ப்பமாக தொண்டு நிறுவனங்கள் முயல்கின்றனவா? அல்லது பிரச்சனை ஹைட்ரோ கார்பனா?

ஹைட்ரோ கார்பன் என்றால் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது பிரச்சனையா? தமிழகத்தில் எடுப்பது பிரச்சனையா? காவிரி டெல்டாவில் எடுப்பது பிரச்சனையா?

நெடுவாசலில் எடுப்பது பிரச்சனையா? கடந்த சில நாட்களாக ஜியாலஜிஸ்டை தவிர அனைவரும் பேசும் பொருளாக உள்ளது குறித்து எனது கருத்து.

எச்சரிக்கை 1: மோடி தான் உங்கள் பிரச்சனை என்றால், ……. எனது பதில் … மோடி ஒழிக. 2037 க்கு பிறகு ஒழிக.

எச்சரிக்கை 2: எனது கருத்துக்கு மாற்று அல்லது எதிர் கருத்து இருப்பின் கீழ் கண்ட தகுதிகளுக்கு மேல் தமக்கு இருப்பதாக நிரூபித்தோர் தமது கருத்தை – அறிவியல் கருத்தை பதிவு செய்யலாம்.

நான் இந்தியன், தமிழன், சுற்றுசூழல் விரும்பி, விவசாயிகளின் நண்பன் என்று கருத்து + அரசியல் சித்து விளையாட விரும்புவோர், எனது FB திண்ணையை விட்டு விட்டு வேறெங்காவது சென்று விளையாடவும்.

a. மத்திய அரசின் Directorate of hydrocarbon முதன் முதலாக இந்தியாவிலுள்ள வடிநிலங்களைப் பற்றியும், அவற்றில் ஹைட்ரோ கார்பன் கிடைப்பது, கிடைக்கும் ஹைட்ரோ கார்பன் ஐ இலகுவாக மேலெடுப்பது, அவ்வாறு எடுக்கும் போது நிகழ கூடிய ஆபத்துக்கள் எவை, அவற்றை தடுக்கும் விதங்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தவும், ஆய்வுகள் நடத்த நிபுணர்களை உருவாக்கவும் Delta Studies Institute என்ற பெயரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு புதிய ஆய்வு நிறுவனத்தை நிறுவியது. அந்த ஆய்வு, கல்வி நிறுவனத்தை உருவாக்கி, பல ஆய்வுகளை முன்னெடுத்து, மற்றும் பல பணிகளை செய்தது Dr.Mu.Ramkumar என்ற Founder Scientist.

b. Hydrocarbon exploration ல் புதிய தொழில்நுட்பமான chemostratigraphy என்ற பிரிவை உலகறியச் செய்யும் விதமாக அறிவியல் உலகின் No.1 பதிப்பாளரான Elsevier மூலம் அத் தொழில்நுட்ப சட்ட திட்டங்களை நிறுவியது Dr.Mu.Ramkumar.

c. இப்பிரிவை உலகறியச் செய்யும் விதமாக ஆய்வு நடத்துவதற்காக செருமனி ஜனாதிபதியின் நேரடி நிர்வாகத்திலிருக்கும் Alexander von Humboldt Foundation மூலம் visiting scientist ஆக தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டது Dr.Mu.Ramkumar.

d. Petroleum exploration fieldல் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மலேசியாவிலுள்ள Universiti Teknologi Petronas ல் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு Visiting Scientist ஆக இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டது Dr.Mu.Ramkumar. மேலும் மலேசிய அரசு எமது ஆய்வுக் குழுவுக்கு 3.3 மில்லியன் ஈரோ அதாவது சுமார் 24 கோடி ௹பாய் கொடுத்துள்ளது.

e. பொதுமக்களுக்கு Face book போல ஆய்வாளர்களுக்கு Research gate என்ற வலைத்தளம் உள்ளது. அதில் விஞ்ஞானிகளின் ஆய்வறிவு, ஆய்வுக் கட்டுரைகளின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பயனீட்டாளருக்கும் தரவரிசை ஸ்கோர் தரப்படும். Dr.Mu.Ramkumar ன் தற்போதய ஸ்கோர் 30.89 அதாவது அவ்வலைத்தளத்தில் உறுப்பினராயுள்ள பல லட்சக்கணக்கானோரில் Top 12.5% ல் Dr.Mu.Ramkumar ன் ஆய்வுத் தரம் உள்ளது.

So, ஹைட்ரோ கார்பன் துரப்பண ஆய்வு குறித்து மேற்கண்டவற்றிற்கு மேலதிகமாக சாதித்தோர் மட்டும் எனது அறிவியற்கருத்துகளுக்கு பதிலிறுக்கலாம். கருத்துக்கள் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள படி ஒவ்வொரு கேள்விக்குமான பதில்களாக பதிவேற்றப்படும்.

First thing is first:

உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதா? தேச நலனா?

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை கிட்டதட்ட 80% வரை இந்தியாவின் ஹைட்ரோ கார்பன் தேவை இறக்குமதி மூலமே நிறைவேற்றப்பட்டு வந்தது. நமது foreign exchange reserve ம் oil import bill Servicing –க்காகவே பெருமளவில் உபயோகப்பட்டு வந்தது. Uல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த dependency குறைக்கப்பட்டு வந்துள்ளது.

உதாரணமாக, Oil Videsh Ltd என்ற நிறுவனம் மூலம் பிற நாடுகளில் நாமே எண்ணை வயல்களை நிறுவி, நமது இந்தியதேவைகளுக்கு பயன்படுத்துவது, இந்தியாவின் Unexplored பகுதிகளை ஆய்வுக்குட்படுத்துவது, ஹைட்ரோ கார்பன் இருக்கலாம் என ஊகிக்கப் பட்டுள்ள ஆழ்கடல் மற்றும் நிலப்பகுதிகளில் தீவிர துரப்பண பணிகளை முடுக்கி விடுவது, joint venture மூலம் மேம்பட்ட தொழில் நுட்பங்களை அயல் நாட்டு நிறுவனங்களை இந்திய பகுதியில் ஆய்வு நடத்த செய்தல், ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உற்பத்தியை துவக்குவது, உற்பத்தி நடைபெறும் கிணறுகளில் recovery rate – ஐ அதிகப்படுத்துவது, சிறிய எண்ணைவயல்களிலிருந்து உற்பத்தியை ஆரம்பிப்பது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இவற்றால் நன்மைகளே அதிகம்.

Strategic ஆகவும் எண்ணை உற்பத்தியில் தன்னிறைவுக்கு இந்நடவடிக்கைகள் அவசியமானவை.

Foreign exchange reserve – ஐ பாதுகாக்கவும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்.

நம்ம கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு அதாவது நம்நாட்டிலுள்ள ஹைட்ரோ கார்பனை விட்டு விட்டு வெளிநாட்டிடம் கையேந்துவது கேவலம்.
நமது பொருளாதார, சமூக முன்னேற்றம் எரிபொருள் உற்பத்தி தன்னிறைவை சார்ந்துள்ளது.

கூடாது, மாட்டேன், செல்லாது என்பவரெல்லாம் நாளையிலிருந்து விறகடுப்பில் சமைக்கட்டும்; சமையல் கேஸ் கனெக்சனை வேண்டாமென்று திருப்பி கொடுக்கட்டும்; பைக், கார், பஸ், இரயில், விமான போக்குவரத்தை பயன்படுத்தாமல் காளை மாட்டு வண்டியில் பயணம் செய்யட்டும்.

மற்றொரு முக்கிய செய்தி: டீசல், பெட்ரோல், மண் எண்ணை மட்டுமல்ல, தார் ரோட்டிற்கு asphalt, நூற்றுக்கணக்கான மருந்து பொருட்கள், solvents, fertilizer ஆகியனவும் Crude oil ஐ சுத்திகரிக்கும் போது கிடைக்கின்றன. ஹைட்ரோகார்பன் வேண்டாமென்பவர்கள் அவற்றையும் வேண்டாமென மறுதலிக்கட்டும். மொதல்ல எங்க ஊரில் ரோடு வசதி வேண்டாமின்னு சொல்லட்டும் பாக்கலாம்.

மீதேன் எடுப்பது நல்லதா ? 

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் … ஹைட்ரோ கார்பன் எடுக்க கூடாது என்றும் எவரும் தற்சூழ்நிலையில் சொல்லவில்லை.

ஆந்திராவிலோ அஸ்ஸாமிலோ, காம்பே பகுதியிலோ பல தசாப்தங்களாக எடுப்பதை பற்றி ஏதும் சொல்லவில்லை. அப்படியென்றால் அண்டை மாநிலமோ அண்டை மாவட்டமோ எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும், எங்கள் மாநிலத்தில், மாவட்டத்தில், பகுதியில் எடுக்க கூடாது;

ஆனால் கேஸ் கனக்சன் வேணும், அதுவும் சலுகை விலையில், போன் மூலம் பதிவு செய்தவுடன் ரெட்டை சிலிண்டர் வேணும், மருந்து மாத்திரை வேணும், மேடு பள்ளமில்லாத ரோடு வேணும், என்று சொன்னால், கேட்டால் அது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

நமது இந்திய சட்டங்களின்படி கனிம வளங்கள் இரண்டு அட்டவணையில் உள்ளன. அதில் சிறு கனிமங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் மற்றவை மைய அரசு கட்டுப்பாட்டிலும் உள்ளன.

எங்கு, எத்தகைய கனிமங்கள் கிடைத்தாலும் துரப்பண பணிகளுக்கு, கனிம உற்பத்திக்கு மைய, மாநில அரசுகளின் அனுமதி தேவை.

மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தில் மைய அரசின் அட்டவணையிலுள்ள கனிமத்தை அகழ்ந்தெடுப்பதானால் மைய அரசு தக்க EIA அறிக்கை, Local governing body அனுமதி ஆகியவற்றை பெற்ற பின்னரே நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பின்னர் உற்பத்தி செய்யப்படும் கனிம அளவு, மதிப்பு ஆகியவற்றினடிப்படையில் மாநில அரசு, local governing body ஆகியவற்றுக்கு royalty கொடுக்கும். இது அத்தகைய உற்பத்தி மையங்களருகில் உண்டாகும் Infrastructure, வேலை வாய்ப்பு, developmental activities ஆகியவற்றுக்கு மேலாக மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியாதாரம்.

அனைத்துக்கும் மேலாக தமது மதிப்பீட்டின் அடிப்படையில் for the benefit of common good என்று முடிவு செய்து இத்தகைய கனிமங்கள் கிடைக்கும் இடங்களை குத்தகைக்கோ அல்லது கையகபடுத்தவோ அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. உதாரணமாக தங்கநாற்கர சாலை அமைக்க நிலங்கள் அரசால் கையகபடுத்தியதை குறிப்பிடலாம். நீதிமன்றம் சென்று போராடலாம்; ஆனால் for the benefit of common good என்று நீதிமன்றம் ஏற்று கொள்ளும் பட்சத்தில் அரசின் முடிவை மாற்றயியலாது,

அடுத்ததாக, கேஸ் கனக்சன் முதல் துபாய் ரோடு மாதிரி அனைத்தும் வேண்டும், ஆனால் எங்கள் மாநிலம், மாவட்டம், கிராமம், நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாதென்ற option -ஐ பற்றி பார்க்கலாம்.

புவியியற் கூற்றுகளின் படி இந்தியா ஒரு தனித்துவமான கண்டம் (Continent). இந்தியாவில் உலகில் காணப்படும் கிட்டதட்ட அனைத்து வகை பாறைகள், கனிமங்கள் ஆகியன உள்ளன. பல கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான யுரேனிய தாதுவிலிருந்து, இரும்பு, தங்கம், செம்பு கனிம வகையிலிருந்து நேற்று உருவான பாறைக் குழம்பு, thorium, இல்மனைட் beach placer வரை அனைத்தும் உள்ளன.

இவையனைத்தும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பாறை வகைகளாக, வெவ்வேறு ஆழங்களில் கிடைக்கின்றன. உதாரணமாக ஆற்று மணல் தரைமட்டத்திலேயும், தங்கம் பல நூறு மீட்டர் அல்லது பல கி.மீ ஆழத்திலும் கிடைக்கின்றன. உருவாகும் விதம், இடம், தன்மை ஆகியவற்றை பொறுத்து இக்கனிமங்கள் மிகக் கடினமான நீர் புகாபாறை வகைளிலிருந்து நீருடன் இணைந்திருக்கும் பாறைகள், நீரை கடத்தும் பாறைகள் ஆகியவற்றில் பொதிந்துள்ளன. இதற்கெல்லாம் பல கோடி கணக்கான ஆண்டுகளாக கல்தோன்றி மண் தோன்றாகாலத்தே முன் தோன்றிய மூத்த குடிகளாே, &&&”மோடியோ”&&&& ஏதும் செய்யாமல் இயற்கையாக நிகழ்ந்த புவியியற்காரணிகளே காரணம்.

மனிதனின் தேவைக்கு, வளர்ச்சிக்கு, எதிர்கால முன்னேற்றத்திற்கு இயற்கை வளங்களே அடிப்படை. இயற்கை வளங்கள் புவியில் சம நிலையில் கிடைப்பதில்லை. கிடைக்கும் இடத்திலிருந்து தான் தேவைக்கு, வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எளிதில் புரிகிற மாதிரி சொல்வதென்றால் கனிமங்கள் எவ்விடத்தில், எந்த பாறையில் எந்த ஆழத்தில் கிடைக்கிறனவோ அங்கு தான் எடுக்க முடியும் –

அடுத்து ஹைட்ரோ கார்பன் -க்கு வருவோம்.

இவை படிவுப் பாறைகளிலேயே கிடைக்கின்றன.
பாறை அடுக்குகளுக்கு இடையேயும், பாறை வெடிப்புகளுக்குள்ளும், பாறைகளின் உள்ளேயுள்ள இடுக்குகளிலும் சேகரமாகி பல லட்சகணக்கான ஆண்டுகளாக அப்படியே உள்ளன.

எண்ணெய்,

எண்ணெய் + கேஸ்,

கேஸ்,

எண்ணெய் + நீர் + கேஸ்,

உறைபனிநீர் + உறைந்த கேஸ்

ஆகிய பலவிதமாக காணக்கிடைக்கின்றன.

இவற்றில் கடைசி விதத்தை எடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சியளவிலேயே உள்ளது.

மற்றவை தரை மட்டத்திலிருந்து (கடலடி மற்றும் நிலப்பகுதி) சில நூறு மீட்டர் ஆழத்திலிருந்து பல கிமீ ஆழம் வரை கிடைக்கின்றன.

கிடைக்கும் இடம், ஆழம், பாறை வகை, உள்ள இடத்தில் நிலவும் அழுத்தம், type ஆகியவற்றைப் பொறுத்து அகழ்ந்தெடுக்கும் முறைகள் மாறுபடும்.

++++++++++++++++++++++++++
Oil industry standards படி இந்தியாவில் விபத்து விகிதங்கள் மிகக் குறைவு.
+++++++++++++++++++++++++

அகழ்ந்தெடுக்க primary recovery_ அடியாழத்தில் உள்ள அழுத்தத்தினாலும், குறையடர்த்தியினாலும் எண்ணெய் மற்றும் கேஸ் தாமே மேலே வருவது;

Secondary recovery_ மேலிருந்து அடர்த்தியதிகமான நீரை அழுத்தத்துடன் செலுத்தி குறையடர்த்தி கொண்ட எண்ணெய் + கேஸ் – ஐ மேலே வர செய்து சேகரித்து கொள்வது;

tertiary recovery_ அடியாழ பாறை துகள்களுக்கிடையே உள்ள ஹைட்ரோ கார்பனை பிரிக்க கூடிய biological agents – ஐ அனுப்புவது,

fracking செய்வது போன்ற முறைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வயல்களிலிருந்து ஹைட்ரோ கார்பன்களை மேலே கொண்டு வருவது பல ஆண்டுகளாக உள்ள நடைமுறை.

நான் M.Sc. படிக்கும் காலத்திலேயே இதை பார்த்துள்ளேன். ஏதாவது இதனால் ஆபத்து என்று பயந்தால் …25 வருஷமா உலகில் எங்கும் நடக்காத ஆபத்து தமிழகத்தில், காவிரி வடிநிலத்திலோ , நெடு வாசலில் மட்டும் நடக்கும் என்பது எனது சிற்றறிவுக்கெட்டவில்லை.

சீனாவில் அடுத்தகட்டமாக இறந்த எண்ணை கிணறுகளை ….

Industrial, Urban and burning of fossil fuel activities மூலம் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமிலவாயுவை பிரித்து, நீர்மமாக குளிர்வித்து தீர்ந்து போன ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகளுக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்தை தென் சீன கடலில் கடலில் பல நூறு மீட்டர் தண்ணீரை தாண்டி தரைக்கடியில் சில கிமீ ஆழத்தில் உள்ள எண்னைய் கிணறுகளுக்குள் முயற்சி செய்து கொண்டிருக்கிற காலம் இது. கோமாவிலிருந்து எழுந்து வாங்க ஸ்வாமி!

++++++++++++++++++++
அடுத்து, விவசாய நிலம் தான் கிடைத்ததா?
++++++++++++++++++++

++++++++++++++++++++++++++
நிலத்தடி நீர் பாதிக்கப் படாதா?
++++++++++++++++++++++++++

ஹைட்ரோகார்பன் விஷ வாயுவல்லவா என்றவற்றைப் பார்க்கலாம்.

முன்னரே சொன்ன விதமாக என்ன கனிமம் எங்கு, எவ்வளவு ஆழத்தில் கிடைக்கிறதோ, அங்கே, எந்தவிதத்தில் எடுக்க முடியுமோ அப்படி தான் எடுக்க முடியும். அது மொட்டைப் பாறையோ, பாழ் நிலமோ, விவசாய நிலமோ என்பது influence செய்வதில்லை.

ஹைட்ரோ கார்பன் என்பது படிவுப் பாறைகளிலேயே கிடைக்க கூடியதென்பதாலும், வடிநிலங்களில் படிவுப் பாறைகளிலிருப்பதாலும், வடிநிலங்கள் விவசாயப் பயன்பாட்டுக்குட்படுத்தபட்டு வருவதால் ஹைட்ரோகார்பன் துரப்பண ஆய்வும், உற்பத்தியும் விவசாய நிலங்களிலும் (கவனிக்க, விவசாய நிலங்களிலும், விவசாய நிலங்களில் மட்டுமேயல்ல) செய்யப்படுவது தவிர்க்கயியலாத இயற்கையாக அமைந்த நிலவரம். இதில் நபரையோ, அரசையோ குறை சொல்லயியலாது.

அடுத்ததாக, எவ்வளவு நிலம் தேவைப்படும்?

துரப்பணபணியின் போது பல விதமான பெரிய உபகரணங்கள் பயன்படுத்தபடுவதால் குறைந்தபட்சம் ஒவ்வொரு எண்ணை கிணறு, வயலுக்கு சில ஏக்கர் நிலம் தேவைப்படலாம். பின் reservoir testing முடிந்த பின்…

++++++++++++++++++++++++++++++++++
உற்பத்தி ஆரம்பித்தால் நம்ப கார்ப்பரேஷன் மேல்நிலை குடிநீர் தொட்டி, பம்பிங் ஸ்டேஷன் அளவுக்கு இடம் தேவைப்படும்.
++++++++++++++++++++++++++++++++++

அடுத்து, நிலத்தடி நீர் மாசுபடும் என்ற ஐயம்.

மக்களின் குடிநீர், விவசாய பயன்பாட்டிற்கான நிலத்தடி நீர் நில அமைப்பு, பூமிக்கடியிலுள்ள பாறைகளின் கட்டமைப்பு ஆகியவற்றை பொறுத்து தரைமட்டத்திலிருந்து சில நூறு அடிகள் ஆழம் வரை தான் இருக்கும்.

ஆனால் பாறை துகள் இடுக்கு வகையிலான ஹைட்ரோகார்பன் வயல்கள் பல்லாயிரம் அடியாழத்தில் தான் இருக்கும்.

இரண்டுக்கும் இடையே நீர் புகா (impervious) பாறைகள் தான் இருக்கும். எனவே ஹைட்ரோ கார்பன் நிலத்தடி நீரை மாசு படுத்தும் என்பது %%%துர்லபம்%%%.

துரப்பணபணிகளுக்காகவோ, உற்பத்திக்காகவோ துளையிடும் போதே metal + சிமெண்ட் seal செய்யப்பட்ட Casing துளைக்குள் செருகப்படும், இல்லாவிட்டால் தொடர்ந்து துளையிடவும் முடியாது, அடியாழத்திலுள்ள எண்ணை + கேஸ் – ஐ மேல் கொணர்ந்து சேகரம் செய்ய முடியாது.

++++++++++++++++++++++++++++++++++
எனவே நிலத்தடி நீர் மாசுபடும் என்ற அச்சம் தேவையற்றது.
++++++++++++++++++++++++++++++++++

எல்லாவற்றுக்கும் மேலாக எந்தவொரு Mining என்றாலும் நிலமேல், நிலத்தடி, நீர், மண், போன்றவற்றை வேலை ஆரம்பிக்கு முன் ஆய்வு செய்வார்கள். பின் உற்பத்தி ஆரம்பித்தவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கொரு முறை மீண்டும் பரிசோதித்து Environmental Clearance பெறுவார்கள்.

++++++++++++++++++++++++++++++
தவறும் பட்சத்திலும், பாதிப்பு இருப்பதாக தெரியும் Uட்சத்திலும் mining நிறுத்தப் Uடும். ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் வரையும், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் வரையும் சம்பந்தப்பட்ட நிறுவன நடவடிக்கைகளும் முடக்கப்படும்.

++++++++++++++++++++++++++++++

அடுத்து ஹைட்ரோ கார்பன் என்பது விஷவாயு என்ற ஐயம், ஹைட்ரோ கார்பன் கேஸ் மீத்தேன், ஈ.த்தேன், ப்ரொப்பேன் போன்ற கரிம மூலக்கூறுகளின் வாயு கலவை.

மனிதன் உட்பட பிராணிகள், பிராண வாயுவை தவிர வேறெதையும் சுவாசிக்கயியலாது. வீட்டில் கேஸ் சிலிண்டர் லீக் ஆகும் ஆபத்தை விட ஹைட்ரோ கார்பன் வயல்களில் உள்ள ஆபத்தின் Probability மிக மிக குறைவு.

ஆய்வுக் கட்டுரை: மு.ராம்குமார்

Prof. Mu Ramkumar with Prof.Wolfgang Ketterle, Nobel Prize Winner, in the Lawns of Official Residence of “German President”, Berlin. We, among many others were invited by the German Presidency for a Dinner in honor of we being Humboldtians

மானம் இல்லாத தமிழர்கள்: கட்ஜூ வேதனை

புதுடில்லி:

தமிழக முதல்வராக பழனிசாமி நீடிக்கும் வரை நான் தமிழனே அல்ல என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேஸ்புக்கில் கட்ஜூ வெளியிட்ட செய்தி: 

எனதருமை தமிழர்களே, 

சிறைக்கைதி ஒருவரின் கைப்பாவை ஒருவர் உங்களின் முதல்வராக ஆக்கப்பட்டுள்ளார். ஆனால், நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள் சோழர், பாண்டியன் மற்றும் சேரர்களின் சந்ததியர்கள். முதல்வர் நியமனத்தில் செய்யப்பட்ட சதிக்கு நீங்கள் வீழ்ந்ததை பார்த்து உங்கள் மூதாதையர்கள் அவமானப்படுவார்கள். நீங்கள் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பரின் சந்ததியினர். எந்த எதிர்ப்பும் காட்டாமல், முதல்வரை ஏற்றுக்கொண்டதால், உங்களுக்கு அசிங்கம் ஏதுமில்லையா? நானும் ஒரு தமிழன் என நான் பெருமையாக கூறிவந்தேன். இனிமேல் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு இதனை சொல்வேன். 

நான் தைரியமாக சொல்கிறேன். பழனிசாமி உங்களின் முதல்வராக நீடிக்கும்வரை நான் தமிழனே அல்ல. அவமானம் மற்றும் மரியாதை பற்றி கவலைபடாமல் வாழும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் நானும் ஒரு உறுப்பினராக இருக்க விரும்பவில்லை. இதற்கு பதில் இறப்பதே மேல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.