Home Blog Page 5703

ஆந்திராவில் ரூ.10.54 லட்சம் கோடி முதலீடு: தமிழகம் வாய்ப்புகளை இழப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:
ஆந்திர மாநிலத்தில் தொழில் முதலீட்டு வாய்ப்புகளாக ரூ.10.54 லட்சம் கோடி குவிகிறது, ஆனால் தமிழகம் வாய்ப்புகளை இழக்கிறது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆந்திர அரசும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து கடந்த 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், மொத்தம் 10.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆந்திரத்தில் முதலீடு செய்ய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மொத்தம் 665 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய வெற்றி ஆகும்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக அதிக முதலீட்டு உத்தரவாதங்களை பெற்ற மாநிலம் என்ற பெருமையை இதன்மூலம் ஆந்திர அரசு பெற்றிருக்கிறது. ஆந்திரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி வாரியங்களில் மட்டும் ரூ. 3 லட்சத்து 62,662 கோடி முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இதற்காக 177 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இந்த நிதியை ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கடலோரப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களை கட்டமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதும் தான் பொருளாதார வளர்ச்சி வாரியங்களின் பணியாகும். இதன்மூலம் ஆந்திரத்தில் பொருளாதார வளர்ச்சி விரைவுபடுத்தப்படும்.

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் பொருளாதார ஆணையரகங்கள் ஏற்படுத்தப்படும்; அவற்றின் மூலம் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. உலக அளவில் வெற்றி பெற்ற இந்த தத்துவத்தை கடைபிடித்து ஆந்திர அரசு மூன்றரை லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீட்டை ஈர்த்திருக்கிறது. ஆனால், இதுபோன்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் பற்றி சிந்தித்து பார்ப்பதற்கு கூட தமிழக அரசு தயாராக இல்லை. இதுதான் தமிழ்நாட்டின் சாபக்கேடு ஆகும்.

ஆந்திரத்தில் புதிய தொழில்களை தொடங்குவதற்காக ரூ. 2 லட்சத்து 1471 கோடி முதலீடு செய்வதற்காக 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒரு லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடு கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், அதையொட்டிய பகுதிகளிலும் செய்யப்படவுள்ளன. ஆந்திராவின் புதிய தலைநகரம் அமையவிருக்கும் அமராவதி தலைநகரப்பகுதியில் மட்டும் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.245 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த தொழில் திட்டங்களில் மட்டும் ரூ. 1.43 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இதில் ரூ.15,000 கோடி தனியார் முதலீடு தவிர மீதமுள்ள முதலீடுகளை இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி., கெயில் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள நிறுவனங்கள் விண்ணப்பித்த 14 நாட்களில் புதிய தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு அறிவித்துள்ளார். இந்த தொழில் திட்டங்களின் மூலம் 22.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை நினைத்தால் வேதனை மட்டும் தான் மிஞ்சுகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்களோ, பிறமாநில நிறுவனங்களோ முன்வரவில்லை என்பது தான் உண்மை. 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும், இவை தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்பின் 17 மாதங்களாகிவிட்ட நிலையில், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 10 விழுக்காடு கூட முதலீடு செய்யப்படவில்லை. சுமார் ரூ.25,000 கோடி மதிப்புள்ள முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் பதிலில்லை. அதற்கு காரணம் குறிப்பிடும்படியாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது தான்.
அதேநேரத்தில், ஆந்திரத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட ரூ.4.67 கோடி முதலீட்டில் பாதிக்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு 14 நாட்களில் அனுமதி கிடைப்பதும், தொழில் தொடங்குவதற்கான நடைமுறை ஊழல் இல்லாமல் வெளிப்படையாக இருப்பதும் தான் அங்கு தொழில் முதலீடு குவிவதற்கும், பொருளாதார வளர்ச்சி பெருகுவதற்கும் காரணம் ஆகும்.

ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதும், தொழில் தொடங்குவது குறித்து முதலமைச்சரையோ, அமைச்சர்களையோ சந்தித்து பேசுவது சாத்தியமில்லை என்பதும் தான் இதற்கு காரணமாகும். தொழில் தொடங்குவதற்கான அனுமதி 30 நாட்களில் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதேநிலை நீடித்தால் தொழில்துறையிலும் தமிழகம் கடைசி இடத்தை பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. எனவே, அரசு நிர்வாகத்தில் ஊழலை அடியோடு ஒழித்து, தொழில் தொடங்க முன்வருபவர்களை ஊக்குவித்து, தமிழகத்தை தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக மாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டு மனை பதிவுகளின் மீதான தடையை நீட்டித்தது நீதிமன்றம்

சென்னை:

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளைப் பத்திரப் பதிவு செய்ய விதித்துள்ள தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய, பத்திரப் பதிவுத் துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வீட்டுமனைகளை வகைப்படுத்த, தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு, அங்கீகரிக்கப்பட்டாத மனைகளை பத்திரவுப் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டித்தும், தமிழக அரசுக்கு பிப்., 27 ம் தேதி வரை அவகாசம் அளித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

இன்போசிஸ் அலுவலக கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் மர்ம மரணம்!

புனே:
ஜடி நிறுவனத்தின் கான்ப்ரனஸ் ரூமில் பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனேவில் இயங்கிவரும் ஐடி நிறுவனம் ஒன்றின் கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்தில் ஒயர் சுத்தப்பட்டிருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரசிலா ராஜ. 25 வயதான இவர் புனேவின் ஹிஞ்ஜேவாடியில் உள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜியாரக பணிபுரிந்து வந்தார்.

விடுமுறை நாளான நேற்று மிச்சமிருந்த சில வேலைகளை செய்வதற்காக அவர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். நேற்றிரவு அலுவலகத்துக்குள் சென்ற பாதுகாவலர் கான்ப்ரன்ஸ் ரூமில் ரசிலா மயக்கநிலையில் கிடைப்பதைக் கண்டு மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவி கமிஷ்னர் வைஷாலி ஜாதவ் மானே தலைமையில் காவல்துறையினர் இளம் பெண் உயிரிழந்த இன்போஸிஸ் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் 9வது மாடியில் உள்ள கான்ப்ரன்ஸ் ரூமில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவரது கழுத்து ஒயரால் நெரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்: வைகோ பரபரப்புப் பேச்சு

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார் என்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ பேச்சால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் போதெல்லாம் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என யாராவது கூறுவர். இதைக் கேட்டு, கருணாநிதி வழக்கம் போல எதையாவது செய்து கொண்டு இவை எல்லாம் வதந்தி என்று சொல்லி, அதற்கு முற்றுப் புள்ளி வைப்பார். இது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இதே போல், கருணாநிதி அண்மையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பின்னர் கருணாநிதியிடம் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. வழக்கமாக கேள்வி பதில் பாணியில் உடன்பிறப்புக் கடிதம் எழுதியும், அறிக்கை விட்டும் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருப்பார். ஆனால் இதுவரை அவர் பெயரில் அறிக்கை எதுவும் வெளியாகாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பொதுக்குழுவுக்கு கூட கருணாநிதி வரவில்லை. சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் கிளாடியேட்டர் திரைப்படத்தில் அரச பதவிக்காக தந்தையை மகன் கொலை செய்ய முயற்சிப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் வைகோ.

செயல் தலைவரான நிலையில் ஸ்டாலினின் செயல்பாடுகளில் திமுகவில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் வைகோவின் பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை பாகிஸ்தான், ஆப்கனுக்கும் நீட்டிக்க வாய்ப்பு

வாஷிங்டன்:
அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் அதிபர் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை பாகிஸ்தான், ஆப்கனுக்கும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் கனவு திட்டமான ‘ஒபாமா கேர்’ என்னும் மலிவு கட்டண சுகாதார காப்பீடு திட்டத்தில், அரசின் நிதிச்சுமைகளை குறைப்பதற்கான வழிவகைகளை கண்டறியுமாறு நிர்வாக உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த அதிரடியாக மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரை தடுக்க 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்ப உத்தரவிட்டுள்ளார். அடுத்த அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை அண்மையில் பிறப்பித்திருக்கிறார்.

உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை போட்டுள்ளார். அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சிரியா அகதிகள், அமெரிக்காவில் நுழைய முடியாது. அடுத்து, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளன.

இந்நிலையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற டிரம்ப் உத்தரவிடும் போது இந்த பட்டியலில் பாகிஸ்தானையும் இணைக்கலாமா? என்று டொனால்டு டிரம்ப் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும்கூட இத்தகைய தடை விதிக்க வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் சூசகமாக தெரிவித்தனர். தற்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருகை தரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய வம்சாவளியினரும் நிரந்தர குடியுரிமைகொண்டவர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச அழகியானார் மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனரே

பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்‌.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிரபஞ்ச அழகிக்கா‌ன போட்டி நடைபெற்றது. ‌பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 அழகிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் பிரான்ஸைச் சேர்ந்த ஐரிஷ் மிட்டேனேரே, பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

23 வயதான ஐரிஷ் மிட்டேனேரே, பிரான்ஸின் லில்லி பகுதியில்‌ பிறந்தவர். பல் மருத்துவம் பயின்று வரும் ஐரிஷ், கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

பிரபஞ்ச அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த ராகுவல் பெலிசியர்யும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவைச் சேர்ந்த ஆண்ட்ரியாவும் பிடித்தனர்.

 

நடிகை சமந்தா நிச்சயதார்த்தம்: திரையுலகினர் வாழ்த்து

தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. இதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமந்தாவுக்கு நிச்சயதார்த்தமாகிவிட்டாலும் தொடர்ச்சியாக படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஷாலுடன் ‘இரும்புத்திரை’, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் படம், விஜய் – அட்லீ இணையும் படம், பொன்ராம் – சிவகார்த்திகேயன் இணையும் படம் ஆகிய தமிழ் படங்களிலும், 3 தெலுங்கு படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரீமேக்கான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மனம்’ உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருமே காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியானது. ஆனால், அச்செய்தி குறித்து இருவருமே தங்களது கருத்துகளை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறித்துவ முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

நாக சைதன்யா – சமந்தா நிச்சயதார்த்தம் குறித்து நாகார்ஜுனா, “எனது அம்மா தற்போது எனது மகளாகிவிட்டார். மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனது சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டார்.

நாகார்ஜுனா புகைப்படங்களை வெளியிட்ட பின்பு, சமூகவலைத்தளத்தில் திரையுலகினர் பிரபலங்கள் பலர் இவர்களுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

 

செய்தி சுருக்கம்: இன்றைய முக்கிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்களிடம் ரூ.3.54 கோடி கையிருப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது. இதைப்போல பகுஜன் சமாஜ் கட்சியிடம் ரூ.26.59 லட்சமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியிடம் ரூ.88 ஆயிரத்து 468–ம் கையிருப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் நிதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் எதுவும் வெளியிடவில்லை. இந்த கட்சிகள் தங்கள் நிதி நிலவரம் குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.இதைப்போல ஆம் ஆத்மி, அசாம் கணபரி‌ஷத், ஐக்கிய ஜனதாதளம், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட மாநில கட்சிகளும் 2015–16–ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது*

*ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளுக்கு மத்திய வரி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இன்று அவர்கள் கருப்பு பட்டை அணிகிறார்கள்

*பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகளை கட்டுவதற்கு கேரள அரசு தீவிரம்

*ஜல்லிக்கட்டு போராட்டத்தை வேடிக்கை பார்க்க மெரினாவுக்கு சென்ற சிறுவன் மாயம். சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. அப்பகுதியில் பூ வியாபாரம் செய்யும் இவர், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை வேடிக்கை பார்க்க என்னுடைய மூத்த மகன் ஆகாஷ்(வயது 16) கடந்த 20–ந் தேதி என்னுடைய தாயாருடன் சென்றான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் மகனை திடீரென காணவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மெரினா கடற்கரைக்கு சென்று பல இடங்களில் தேடினேன். என் மகன் கிடைக்கவில்லை. மெரினா கடற்கரையில் தொடர் போராட்டம் நடந்ததால், போராட்டக்காரர்களுடன் என் மகனும் இருந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த 23–ந் தேதி வன்முறை சம்பவம் கடற்கரையில் நடந்தது. அதன்பின்னரும் என் மகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால், என் மகனின் நிலை கண்டு பயமாக உள்ளது. என் மகனை கண்டுபிடித்து தரக்கோரி மெரினா கடற்கரை போலீசில் புகார் செய்தும் எந்த பயனும் இல்லை. எனவே, என் மகனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் கமி‌ஷனருக்கும், மெரினா இன்ஸ்பெக்டருக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்

* மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த ராஜேஷ் சாவந்த் மும்பையில் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தார்

*கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறேன்: முலாயம் அதிரடி

*பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனுப்பும் எத்தகைய கடிதத்தையும், அரசு துறைகள், 15 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களுக்குள் தக்க பதில் அனுப்பப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த நடைமுறையில் தாமதம் ஏற்படும் என தெரிந்தால், இடைக்கால பதில் ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும். அந்த பதிலில், சரியான தீர்வு எப்போது அளிக்கப்படும் என்பதற்கான தேதியை குறிப்பிட வேண்டும். எம்.பி.,க்கள் அனுப்பும் கடிதங்கள், அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள் உள்ளிட்டவற்றை முறையான ஆவணங்களாக பராமரிக்க வேண்டும்.இந்நிலையில், தாங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு குறித்த காலத்தில், அரசு துறைகள் பதில் அனுப்புவதில்லை என குற்றஞ்சாட்டி, எம்.பி.,க்கள் சிலர், பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். இதையடுத்து, இவ்விவகாரத்தை உயரதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.இது தொடர்பாக, வடகிழக்கு மாநிலங்கள் விவகாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், அனைத்து அரசு துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எம்.பி.,க்கள் அனுப்பும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

*வரும் புதன்கிழமை பிப்.1 ல் மத்திய பட்ஜெட் தாக்கல் எப்படி இருக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்பினர் பல்வேறு எதிர்பார்ப்புகளை நோக்கியுள்ளனர்.கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு நிறுவனங்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். சைமா , கிமா, இந்திய தொழில் வர்த்தக சபை , காட்மா, டேட், கோக்மா, காஸ்மோபேன் உள்ளிட்ட தொழில்துறை அமைப்பினர் பட்ஜடெ் எப்படி இருக்க வேண்டும் என கேட்ட போது சில விஷயங்களை இங்கு வெளியிட்டுள்ளோம்.வரிச்சலுகை , ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கும் ஏதேனும் அறிவிப்புகள், குறுந்தொழில் பேட்டை அமைத்தல் , வங்கி கடன் அதிகரிப்பு, வட்டிவிகிதம் குறைப்பு , வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் கால அவகாசம் நீட்டிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, தரப்பரிசோதனை கூடம் , உள்ளிட்ட அம்சங்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்

*சென்னையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு இரவு ரோந்து பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் 1281 பேரையும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 5 பேரும், பழைய குற்றவாளிகள் 5 பேர் என மொத்தம் 1,291 பேரை கைது செய்தனர். மேலும், போதையில் வாகனம் ஓட்டியதாக 88 பேர் போலீசாரிடம் சிக்கினர்

*இந்தியாவில் இருந்து தொழுநோயை அகற்ற கூட்டு முயற்சி தேவைப்படுகிறது என தொழுநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வையில் தொழுநோயை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் மகாத்மா காந்தி தொடர்ந்து அக்கறை காட்டினார் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்

*தடுப்பணை கட்டுவதை தடுக்க கேரள முதல்–மந்திரியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசவேண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

*போதை பொருளை பதுக்கி வைத்திருந்ததாக பதிவு செய்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பூந்தமல்லி, மல்லியம் நரசிம்மன்நகரில் ஒரு வீட்டில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக ‘ஹெராயின்’ போதைப் பொருளை சிலர் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார், கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் 18–ந் தேதி அந்த வீட்டை சோதனை நடத்தினார்கள்.அந்த வீட்டில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்காக 84 ‘டப்பாக்களில்’ உயிருடன் மீன்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ‘டப்பாக்களை’ போலீசார் சோதனை செய்தனர். மீன்கள் உள்ள தண்ணீருக்குள் ‘பாலித்தீன் கவர்களில்’ மர்ம பொருள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்

*ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பேட்டி

*தமிழகத்தின் நலனுக்காக முதல்- அமைச்சரின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது சரத்குமார் பேச்சு

*திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

*சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு

*மாணவர்கள் மீதான தடியடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி

*அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர், பயல் மோடி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது வகுப்பறையில் உள்ள வெள்ளை நிற போர்டில், ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. அப்போது அவர் டிரம்பை தண்ணீர் துப்பாக்கியால் சுட்டு, ‘செத்துப்போ’ என கத்தினார். இது ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

*‘‘பஞ்சாப் முதல்–மந்திரி பாதலை சிறையில் தள்ளுவேன்’’ அமரீந்தர்சிங் மிரட்டல்

*உலகிலேயே இளம்வயதினரை கொண்ட நாடு என்று பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டை பெருமிதத்துடன் கூறி வருகிறார். இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பு, ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.உலக அளவில் மக்கள் தொகை, வயது தொடர்பான சில சுவாரசியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:–
* 2020–ம் ஆண்டில் உலக அளவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து விடும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை அவர்களின் எண்ணிக்கை விஞ்சி விடும்.
* 2050–ம் ஆண்டில், 60 மற்றும் அதற்கு அதிகமான வயதினை கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 200 கோடியை எட்டி விடும். 2015–ம் ஆண்டு நிலவரப்படி இந்த எண்ணிக்கை 90 கோடிதான்.
* உலகில் தற்போது 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் எண்ணிக்கை 12½ கோடியாக உள்ளது. 2050–ம் ஆண்டுவாக்கில், சீனாவில் மட்டுமே இந்த வயதினர் எண்ணிக்கை 12 கோடியாக இருக்கும். உலக அளவில் இந்த வயதினரின் எண்ணிக்கை 43 கோடியே 40 லட்சமாக இருக்கும்.
* 2050–ம் ஆண்டில் மூத்த குடிமக்களில் 80 சதவீதம்பேர் அடித்தட்டு, நடுத்தர வருவாய் நாடுகளில் வசிப்பார்கள்.
* 2015–ம் ஆண்டை, 2050–ம் ஆண்டுடன் உலக சுகாதார அமைப்பு ஒப்பிடுகையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் விகிதாச்சாரம் 12 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயரும்.இவ்வாறு அந்த புள்ளிவிவரம் கூறுகிறது*

*தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.96 கோடி சிக்கியது

*டிவி பார்க்க தடை – மனமுடைந்த மாணவி தற்கொலை.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கண்டமங்லம்

*தந்தையுடன் சென்ற மாணவியை போதையில் கட்டிப்பிடித்த வாலிபர் கைது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்

*கோவில்பட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி – 10 பேர் காயம்.நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டு இருந்தது. இன்று மாலை கோவில்பட்டி அருகேயுள்ள சிதம்பரபுரம் பஸ் நிறுத்ததில் பயணிகளை இறங்கி விட்டு பஸ் கிளம்பிய போது தீடீரென நிலை தடுமாறி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது

*குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு விடிய விடிய மழை

செய்தி: விஸ்வரூபம்

இமயமலையில் நடத்தப்படும் இமாலய சாதனை

இமயமலையில் நடக்கும் ஒரு இமாலய சாதனை!
மோடி அரசு எத்தனையோ சாதனைகளை செய்து வருகிறது. அதை எல்லாம் விட இமயமலையில் தேவபூமியான ரிஷிகேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  பூகம்பங்களையும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இருவழி சாலைகள்தான் மிக முக்கியமானது.
இந்து மதத்திற்கும் இமயமலைக்கும் உள்ள தொடர்பு இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்க வேண்டும். ஏனென்றால் இமயமலையில்  காற்று ஒலித்துக் கொண்டிருக்கும் 'ஓம்' என்கிற சத்தத்தை விட அங்கு செல்லும் மக்கள் ஒலிக்கும் ஹர ஹர மகாதேவா என்கிற சத்தம்தான் காற்றின் ஒலியையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
இந்த ஹர ஹர மகாதேவா கோஷம் இமயமலையில் மட்டுமல்ல அது இந்தியா முழுவதும் இனி கேட்க வேண்டும் அதற்கு நிறைய பக்தர்களை வரவழைக்க வேண்டும்
என்று நினைத்த மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் "சார்தாம்" யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியாவின் கடைசி கிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  இருவழி சாலைகளை 12,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது  இந்த சார்தாம் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் 5000 க்கும் மேற்ப்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்துபோனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மோடி அரசு நினைத்து அதற்க்கான செயல் திட்டங்களில் இறங்கியது.
இதற்காக 13 பைபாஸ் ரோடுகளை மறு சீரமைத்து 2 சுரங்கப்பாதைகளை அமைத்து 25 பாலங்களை உருவா க்கி 3 மேம்பாலங்களை கட்டி 154 பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப்பாக்கி இமயமலையெங்கும் 11,000 அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்ம ஒலியை ஒலிக்க இருக்கிறது மோடி அரசு. இதற்கான துவக்க விழா இன்று ஆரம்பித்தது. 7 பகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிடும்.
இந்த பாரத நாட்டில் தான் எத்தனை  மத நம்பிக்கைகள். எத்தனை யாத்திரைகள்.யார்  தொடங்கி வைத்தார்கள்? எப்பொழுது தொடங்கி வைத்தார்கள்? என்றே தெரியாமல்
இந்த மண்ணில் காலம்காலமாக இன்றும் மக்களை இயக்கி வைத்துக்கொண்டு இருக்கும் இந்த நம்பிக்கைகளை வழி நடத்தி செல்வதே ஒரு அரசாங்கத்தின் உண்மையான கடமையாகும்.
அந்த விதத்தில் மோடி அரசாங்கம் இந்துக்களின் எண்ணங்களை செயலாக்கி  கொண்டே வருகிறது. இந்துக்களின்
புண்ணியபூமி தனுஸ்கோடியில் புயலினால் அழிந்து 52 வருடங்களுக்கு பிறகு மோடி ஆட்சியில் தான் ரோடு போடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நான்கு வழி சாலை திட்டம் இந்த வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது.
இதெல்லாம் விட  உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்படுத்தப்போகும், பேரிடரிலும் அழியாத இரு வழிச் சாலை அது தாங்க மோடி அரசின் மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் மிகையாது. கடும் பனி சூழ்ந்த மலைகளை குடைந்து சுரங்கம் உருவாக்கி மேம்பாலம் கட்டி அதுவும்
பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதியான அங்கே 10,000 அடி உயரத்தில் அனைத்து பேரிடர்களையும் தாங்கக்கூடிய இரு வழி சாலைகளை அமைக்க இருப்பது சாமானிய
வேலையா? சொல்லுங்கள்.
இந்த இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரை மிக புகழ் பெற்றது. இந்த சோட்டா சார்தாம் யாத்திரை உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைத் தொடரில் உள்ள யமுனோத்ரி கங்கோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் என்ற  நான்கு புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்வதையே உத்தரகாண்ட் யாத்திரை அல்லது சோட்டா சார்தாம் யாத்திரை என்று சொல்கிறார்கள்.
இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரை சார்தாம் யாத்திரையாகும். இந்த சார்தாம் யாத்திரையில் இரண்டு உள்ளது. ஒன்று தெற்கே ராமனாதரையும் மேற்கே துவாரக நாதரையும் வடக்கே பத்ரிநாதரையும் கிழக்கே ஜெகனாதரையும் ஒரே நேரத்தில் சென்று தரிசிப்பதே சார்தாம் யாத்திரையாகும். இந்த யாத்திரையை ஓவ்வொரு இந்துவும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தர்மம் சொல்கிறது. இது தான் பெரிய சார்தாம் யாத்திரையாகும்.
இதே மாதிரி வட இந்தியாவில்  உத்தரகாண்ட் மாநிலத்தில்  இமயமலையில் ஒரு சார்தாம் யாத்திரை உண்டு. இதற்கு பெயர் சோட்டா சார்தாம் யாத்திரை யாகும். இந்த யாத்திரையில் ஆதி சங்கரர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே ஈடுபட்டுள்ளார்.
 
இந்த சார்தாம் யாத்திரையில் முதலில் உள்ள யமுனோத்ரி கோயில் யமுனை நதி உற்பத்தியாகி வரும் இடத்தில் உள்ளது. இந்த யமுனை நதியில்தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம்பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான கருப்பு வண்ணமா கவே உள்ளாள். . கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை நதியாகும்.. யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத் திலிருந்து 3293 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது
அடுத்து கங்கோத்ரி கடல் மட்டத்தில் இருந்து 3415 மீட்டர் உயரத்தில்  அமைந்துள்ளது. கங்கோத்ரி கோயில்தான்  கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம் . இந்த கோயில் பகீரதன் காலை ஊன்றி  கங்கையை பூமிக்கு வர வேண்டி தவம் செய்த இடத்தில் தான் அமைந்துள்ளது. இங்குதான் பாண்டவர்கள் அசுவமேதயாகம் செய்ததாக கங்கோத்ரி வரலாறு சொல்கிறது.
அடுத்து கேதார்நாத் ஆலயம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரபதிகம் பாடப்பட்ட தலம் இது. அதோட  பாரததேசமெங்கும் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று இந்த கேதாரீஸ்வரர் தான். கடல் மட்டத்திலிருந்து 3553 மீட்டர் உயரத்தில் பனி மூடிய சிகரங்களுக்கு நடுவில், மந்தாங்கினி ஆற்றின் உற்பத்தி ஸ்தானத்தில் ருத்ர இமய மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்குதான் ஆதிசங்கரர் முக்தி அடைந்த இடம் உள்ளது பரசு ராமர் வழி பட்ட தலம் இது. 
அடுத்து கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் நர நாராயண சிகரங்களுக்கிடையில் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் பத்ரிநாத்  அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம்  செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுள் பத்ரிநாத்தும் ஒன்று இங்கே ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளது. இங்கு தான் வியாசர் குகை விநாயகர் மகாபாரதம் வடித்தது போன்ற இந்து தர்மத்தின் ஆதார சம்பவங்கள் அரங்கேறிய இடங்கள் உள்ளது.
இப்படி இந்துக்களின் வாழ்வில் புண்ணியம் சேர்க்கும் இந்த இடங்களுக்கு மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை தான் மக்கள் யாத்திரை செல்வார்கள்..ஒரு
வருட யாத்திரியில் குறைந்தது 30 லட்சத்திற்கும் மேலாக மக்கள் சென்று கொண்டிருக்கும் இந்த புனித யாத்திரையை மேம்படுத்துவதே ஒரு உன்னதமான அரசின் நோக்கமாக இருக்க முடியும். இதை தான் மோடி அரசு செய்து வருகிறது..

அதிமுக பொதுச்செயலாளரிடம் வாழ்த்து பெற்றார் பிரபாகரன் எம்.பி

திருநெல்வேலி புறநகர் மாவட்டகழகச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன் தனது 10 ம் ஆண்டு திருமணநாளன்று தனது குடும்பத்தினருடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் திருமதி வி.கே.சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்