சல்மான்கான் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜல்லிக்கட்டு தடயை நீக்கியது சின்னம்மாவாம்
சோ.,வுக்கு பத்மபூஷன்
வேந்தர் மோவீஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
செய்தி சுருக்கம்
பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை: தடுத்து நிறுத்த அன்புமணி கோரிக்கை
பாம்பாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக., அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கேரள அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகில் உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அமராவதி அணையிலிருது தான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பாம்பாறு ஆகும். கேரளத்தின் மலைப்பகுதியில் உருவாகும் இந்த ஆறு கிழக்கு நோக்கி பாய்ந்து தமிழகத்திற்குள் வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பட்டுச்சேரி என்ற இடத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் கேரள அரசு தொடங்கியது. அப்போது தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தை கேரளம் கைவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பாம்பாறு தடுப்பணை பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அப்பணிகள் ரூ.26 கோடி செலவில் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன.
பாம்பாற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறையும். இதனால் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன ஆதாரத்தை இழந்து பாலைவனமாக மாறும். குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும். மாநிலம் விட்டு மாநிலம் பாயும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்றால், கடைமடை பாசன மாநிலத்திடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமலும், தமிழக விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமலும் கேரளம் தடுப்பணை கட்டுவது ஏற்க முடியாதது ஆகும். தமிழகத்துடனான நல்லுறவை பாதிக்கும் செயல்களில் கேரளம் ஈடுபடக்கூடாது.
ஏற்கனவே பவானி ஆற்றில் 6 தடுப்பணைகளை கட்ட்ட முடிவு செய்து அவற்றில் இரு தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை தடுத்து நிறுத்தும்படி பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே வலியுறுத்திய நிலையில், அதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போதெல்லாம் அதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுவதுடன் கடமை முடிந்ததாக நினைத்து முதலமைச்சர் ஒதுங்கி விடக் கூடாது. பிரதமரையோ மத்திய நீர்வளத்துறை அமைச்சரையோ நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். இப்போது பாம்பாற்றிலும் தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில், பவானி மற்றும் பாம்பாற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமரை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

டிவிட்டரில் சு.சுவாமி கமல்ஹாசன் வாக்குவாதம்: கமலுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
சென்னை:
ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்களை இளைஞர்களை சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து முதல்வர் பன்னீர் செல்வம் சந்தித்து சமாதானப் படுத்தியிருந்தால், இந்த வன்முறை வெடித்திருகாது என்ற ரீதியில் நடிகர் கமல்ஹாசன் ஒரு கருத்தைப் பதிவிட்டார் தனது டிவிட்டர் பக்கத்தில்.
How foolish for cinemawallah Kamalhasan to suggest that CM should have met the demonstrators. CM tried in Madurai and what happened?
— Subramanian Swamy (@Swamy39) January 24, 2017
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சுப்பிரமணியம் சுவாமி, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கச் சென்ற பன்னீர்செல்வத்துக்கு என்ன மரியாதை கிடைத்தது என்று பார்த்தீர்கள் அல்லவா, அதையும் மீறி அவர் மெரினாவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறாரா கமல்ஹாசன் என்று கேலியாகப் பதிவிட்டிருந்தார்.
Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.
— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2017
இந்நிலையில் சுவாமியின் கருத்துக்கு தான் பதில் கருத்து எதுவும் சொல்லப் போவதில்லை என்று கமல் ஹாசன் டிவிட்டரில் பதிலளித்தார்.
Decided not 2 answer samis insinuations.Take over T.porikkis u R in g8 company.Kamraj Anna Rajaji my father & more மோதி மதித்து விடு பாப்பா
— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2017
இருவரும் டிவிட்டரில் கருத்து யுத்தம் நடத்திக் கொண்டிருந்த பின்னணியில், இன்று மாலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். ஜல்லிக்கட்டு தொடர்பாக, கமல் தொடர்ந்து கருத்துகளை பதிந்து வரும் நிலையில், அவருக்கு இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தை வன்முறைக்குக் கொண்டு சென்ற 3 பேர்: சிவசேனாபதி பரபரப்புத் தகவல்
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு அவசர சட்டம் குறித்து விளக்கம் அளித்து கொண்டு இருந்த போது, மூன்று மர்ம நபர்கள் மறுத்து பேசி, போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தடுத்தனர்’ என காங்கேயம் இன மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஜன., 19ம் தேதி மாலை, சென்னை மெரினாவில் கூடியிருந்த பேராட்டக்காரர்களிடம் பேசினேன். அது, நேரடியாக, ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது எங்கள் முன் இருந்த கோரிக்கைகள், 1. மிருக வதை தடுப்பு சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்2. அல்லது ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்3. அதுவும் முடியாவிட்டால், தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.
இதன்பிறகு, டில்லிக்கு புறப்பட்டோம். 20ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு டில்லி சென்றடைந்தோம். அங்கு, நான், ராஜசேகர் உள்ளிட்ட, 20 பேர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினோம். காலை, 10:30 மணி முதல், 12:00 மணி வரை மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தவேவை சந்தித்து பேசினோம்.
அப்போது நாங்கள் முன் வைத்த கோரிக்கைகள்:1. இந்திய விலங்குகள் நல வாரியத்தை கலைக்க வேண்டும்2. இந்த வாரியம் குறித்து விசாரிக்க வேண்டும்3. மத்திய அரசு அல்லது மாநில அரசு மூலமாக, மிருக வதை தடுப்பு சட்டத்தை திருத்த வேண்டும் 4.அல்லது அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.
பின்னர், நாங்கள் அவரது அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் புதிய தலைவர் நிகி ஆகியோரை சந்தித்தோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக தாங்கள் தயாரித்து வைத்து இருந்த அறிக்கையை அவர்கள் கேட்டு பெற்றனர். பின், அதை வைத்து அவசர சட்டத்தை உருவாக்கினர்.
இதன் பின், மத்திய அமைச்சர் தவேவை மீண்டும் சந்தித்தோம். அப்போது, பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அப்போது அவர், ‛ஒரு அமைப்பு சட்டத்தை மீறுகிறது அல்லது நாட்டிக்கு எதிராக சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் வேண்டும்’ என, கூறினார். உடனே நாங்கள்,‛ பீட்டா அமைப்பு, 13 மாநிலங்களில், நாட்டு கால்நடைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது’ என, கூறினோம்.
இந்த புகாரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, விசாரிக்க சொல்வதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து நாங்கள், ‛ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைகள் பெற அந்த அமைப்பு ஏராளமாக செலவு செய்கிறது’ எனவும் குறிப்பிட்டோம். மேலும், ‛ அன்னிய முதலீடு முறைப்படுத்தும் சட்டத்தின் வாயிலாக விசாரிக்க வேண்டும்’ என்றோம். அப்போது அவர் பிரதமர் மோடியுடன் பேசினார். ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என பிரதமர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
அடுத்த நாள், டில்லி நிருபர்களை சந்தித்து, பிராணிகள் நல அமைப்புகள், இந்தியாவின் நாட்டு கால்நடைகளை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை தெரிவித்தோம். இதை கேட்டு, டில்லி நிருபர்கள் ஆச்சரியப்பட்டனர். அன்று இரவு சென்னை திரும்பி, இரவு 9:00 மணிக்கு மெரினாவில் கூடியிருந்த போராட்டக்காரர்களை சந்தித்து பேசினோம். டில்லியில் நடந்த விஷயங்களை எடுத்து கூறினோம். இனிமேல் என்ன செய்யலாம்? என அவர்களிடம் கேட்டோம். போராட்டக்காரர்களில், 99.9 சதவீதம் பேர், ‛ நீங்க சொல்லுங்க அண்ணா…’ என்று கூறினர்.
அதற்கு நான், ‛ இந்த போராட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்யவில்லை. எனினும், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற நம் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு நாம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றேன். அங்கிருந்த இளம் பெண் ஒருவர், ‛ சார், அரசை நாம் நம்ப முடியுமா?’ என, கேள்வி எழுப்பினார்.அதற்கு நான், ‛பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்களுக்கு சிறிது அவகாசம் அளிக்க வேண்டும்’ என, தெரிவித்தேன். இதன் பின்னர் போராட்டக்காரர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து செல்ல இருந்தனர். ஆனால், மூன்று மர்ம நபர்கள் திடீரென பிரச்னை எழுப்பினர்.
அதில் ஒருவர், தன்னை ஒரு மூத்த வழக்கறிஞர் என்று கூறிகொண்டு, தீவிரமாக பேசி போராட்டக்காரர்களை உணர்ச்சிவசப்பட வைத்தார். இரண்டாவது நபர், ‛ நாம் போக தான் வேண்டுமா; அரசியல்வாதிகளை நம்ப வேண்டுமா?’ என்று பேசி அங்கிருந்தவர்களை குழப்பி விட்டார்.
நாங்கள் கூறிய எதையும் அந்த மூன்று நபர்கள் ஏற்க மறுத்து விட்டனர். எங்களிடம் இருந்த மைக்கை பெறுவதில் குறியாக இருந்தனர். இதன் பிறகு, ஜல்லிக்கட்டு பிரச்னையை விட்டு விட்டு பிற பிரச்னைகள் மீது கவனம் செலுத்த தொடங்கினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல கூடாது என்பதில், 10 பேர் மட்டுமே தீவிர கவனத்துடன் இருந்தனர்.
எனவே, அங்கிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறினோம். தமிழகத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரலாற்றுபூர்வமான மாணவர் போராட்டம் அப்போதே தோல்வியில் முடிந்து விட்டது.
இவ்வாறு கார்த்திகேய சிவசேனாதிபதி முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினை சக்திகளை அடையாளம் கண்டு அரசு ஒடுக்க வேண்டும்: ராம.கோபாலன்
சென்னை:
மாணவர்களின் பண்பாட்டு காக்கும் போராட்டத்தில் ஊடுறுவிய பிரிவினைவாத, தேசவிரோத சக்திகளை அடையாளம் கண்டு மத்திய, மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும்.. என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசியல்சாராமல் பண்பாடு, கலாச்சாரம் காத்திட முதல் முறையாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கிட சட்டப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாண்புமிகு தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இந்து முன்னணி பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் பிரச்னையை காவல்துறை கையாண்டவிதம் கண்ணியமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை சீர்குலைக்கவும், வன்முறையை தூண்டவும், தங்களின் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த சமூகவிரோத, தேசவிரோத, பிரிவினைவாத சக்திகள் ஊடுறுவி, வன்முறையை தூண்டி வருவதை இந்து முன்னணி காவல்துறை தலைவர் (டி.ஜி.பி) அவர்களிடம் விளக்கி மனு ஒன்றை 19.1.2017 அன்று வழங்கியது.
சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் அவர்கள், இந்தப் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படி உட்புகுந்த போராட்டத்தை திசைத்திருப்பிய அமைப்புகள் எவை எவை என வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
நேற்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக சட்டம் இயற்றப்பட இருந்த நிலையில், வேண்டுமென்றே வன்முறையை ஏற்படுத்தி, கலவரச் சூழலை உருவாக்கினர். இதற்கெல்லாம் பின்புலத்தில் அரசியல் கட்சிகளில் சிலவும், தேச விரோத, பிரிவினை வாதிகளும் இருந்தனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது. அவர்கள் பெண்கள், குழந்தைகள், அப்பாவி ஏழை குடிசை மக்களை தூண்டிவிட்டு, கேடயமாக பயன்படுத்தியது வெட்ககரமான செயல்.
தமிழக அரசு பாராபட்சமின்றி, உடனடியாக தேசவிரோதிகளையும் அவர்களுக்கு உதவி செய்து வன்முறையை கட்டவழித்து விட காரணமானவர்களையும் தண்டிக்கும் வகையில் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. காலதாமதப்படுத்தி, சமூக விரோதிகளை விட்டுவிட்டால், நாளை பெரிய அளவில் தமிழகம் இதற்கு விலை கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம். – என்று கூறியுள்ளார்.