கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட பெத்தநாடார்பட்டி நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் தத்தெடுத்த முன்மாதிரி கிராமாகும் இந்த முன்மாதிரி கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் எனபதே இதன் நோக்கம் இதையடுத்து முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்கபட்டது , இந்நிலையில் தமிழக அரசால் 100 கால்நடை கிளைநிலயங்கள் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவித்தது இதையடுத்து பெத்தநாடார்பட்டியில் செயல்பட்டு வந்த கால்நடை கிளை நிலையம் முழு நேர மருத்துவமனையாக செயல்பாட்டுக்கு வந்தது இந்த மருத்துவமனை மற்றும் மருந்தகத்தை கே.ஆர்.பி .பிரபாகரன் எம்.பி திறந்துவைத்தார் ,மேலும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையிடம் இருந்து புதிய மருத்துவமனை அமைக்க ரூ.26 லட்சம் நிதி பெற்று தந்துள்ளார் அதி நவீன வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தினை கால்நடை மண்டல இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் முருகையா ஆகியோருடன் சென்று பார்வையிட்டார்
பின்னர் அப்பகுதி விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை வைப்பதற்கு மானியத் தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு கால்நடை மண்டல இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் முருகையா, கால்நடை மருத்துவர் நாகராஜன், கால்நடை ஆய்வாளர் டெய்சி ராணி, பெத்தநாடார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராதா, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டி ,மேலவைப் பிரதிநிதி ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெத்தநாடார்பட்டியில் கால்நடை மருத்துவமனை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்
நயன்தாராவுக்கு குரல் கொடுத்த அனிருத்!
நேமி சந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டோரா’. இப்படத்தில் விவேக் – மெர்வின் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள ‘எங்க போர டோரா’ மற்றும் ‘வாழவிடு’ ஆகிய பாடல்கள் சிங்கில் ட்ராக்காக வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்ற நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிசந்தர் குரலில் ‘ரா ரா ரா’ எனும் பாடல் அடுத்து வெளியாகவிருக்கிறது. மிகவும் ஆக்ரோஷமான இப்பாடல் நயன்தாரா தீய சக்தியை எப்படி வென்றெடுக்கிறார் என்ற காட்சியமைப்பில் உருவாகியிருக்கிறதாம். அனிருத்தின் வசீகரமான குரலும், நயன்தாராவின் குரலில் பேசியுள்ள வசனங்களும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் புதிய முயற்ச்சியாக டோரா படத்தின் இசை தொகுப்பில் படத்தின் பிண்ணனி இசை மற்றும் தீம் மியூசிக் உள்ளிட்டவை இடம்பெறவிருக்கிறதாம். டோரா படத்தின் இசை தொகுப்பினை சோனி மியூசிக் விரைவில் வெளியிடுகிறது.
அரசு மருத்துவமனை பயோமெட்ரிக் வருகை பதிவு… நீதிமன்றம் உத்தரவு
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவிற்கான அரசாணையை 1 மாதத்தில் முறையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பணிக்கு வந்து செல்லும் நேரத்தையும், வருகையையும் உறுதிப்படுத்தும் பயோமெட்ரிக்ஸ் வருகைப்பதிவேடு முறை நடைமுறையில் இல்லை. பதிவேட்டில் கையெழுத்திடும் பழைய முறையையே பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மருத்துவர்களின் பணி நேரம் வெளிப்படைத்தன்மை இல்லாததோடு, பணிக்கு தாமதமாக வருவது, தேவைப்படும் நேரத்திற்கு வெளியே செல்வது போன்றவை நடைபெறுகின்றன. கடந்த 2012 செப்டம்பர் 20ல் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ESI மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக்ஸ் முறையை பயன்படுத்த வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் சில மழுப்பலான காரணங்களை முன்வைத்து இம்முறை நெறியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் வருகைப்பதிவு பயோமெட்ரிக்ஸ் முறையிலேயே செயல்பாட்டில் உள்ளது. எனவே ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் பணி நேரத்தை வெளிப்படையாக்கும் பொருட்டும் 2012ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந
பத்ம விருதுகள் அறிவிப்பு… விவரம்
*பத்ம விருதுகள் அறிவிப்பு*
*குடியரசு தினத்தை முன்னிட்டு 2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*
*இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.*
*பத்ம விருதுகளுக்கு மொத்தம் 1730 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.*
_*இவர்களில் தேர்வு செய்யப்பட்டு, விருது பெறும் 150 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.*_
? *பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் விபரம் :*
? *பாடகி அனுராதா பட்வால்*
? *ஓய்வபெற்ற அதிகாரி டி.கே.விஸ்வநாதன்*
? *இந்தி எழுத்தாளர் நரேந்திர கோலி*
? *பத்திரிக்கையாளர் பாவனா சோமாய்யா*
? *பத்திரிக்கையாளர் ஹச்.ஆர்.ஷா*
? *முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல்*
? *தீபா கர்மாக்கர்*
? *விகாஸ் கவுடா*
? *ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்*
? *சமூக சேவகர் அனுராதா கொய்ராலா*
? *எழுத்தாளர் இலி அகமது, கிரிக்கெட் வீரர் வீராத் கோலி*
? *மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்*
? *நடிகர் சாது மேகர்*
? *சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங்.*
? *நடன கலைஞர் பாசந்தி பிஸ்த்*
? *மலையாள கவிஞர் பி.குன்ஹிராமன் நாயர்*
? *சுற்றுப்புற ஆர்வலர் டாக்டர் எஸ்.வி.மபுஸ்கர்*
? *ஓவியர் திலக் கீதை*
? *பீகார் ஓவியர் பயோயா தேவி*
? *மணிப்பூர் இசையமைப்பாளர் எல்.பிரேந்திர குமார் சிங்*
? *சித்தார் இசைக் கலைஞர் உஸ்தாத் இம்ராத் கான்*
? *நாட்டுப்புற பாடகர் சுக்ரி பூமா கவுடா*
? *ஜார்கண்ட் நாட்டுப்புற பாடகர் முகுந்த் நாயக்*
? *மலையாள கவிஞர் அக்கிதம்*
? *காஷ்மீர் பல்கலைக்கழகம்*
? *முன்னாள் பேராசிரியர் காசிநாத் பண்டிட்*
? *மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி*
? *களரி பயிற்சியாளர் கிரானி*
? *சின்தகிண்டி மல்லீஸம்*
? *தரிபள்ளி ராமைய்யா*
*பிபின் கனத்ரா*
? *டாக்டர்.சுனிதா சாலமோன்*
? *சுப்ரோதா தாஸ்*
? *பக்தி யாதவ்*
? *கிரிஷ் பரத்வா*
? *கரிமுல் காகு*
? *பல்பீர் சிங் சீசிவால்*
? *கினாபாய் தர்கபாய் பட்டேல்*
? *சேகர் நாயக்*
? *பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு*
? *பாடகர் ஜிதேந்திர ஹரிபால்*
*
? *பத்மபூஷண் :*
? *தோனி*
? *நடிகர் ரிஷி கபூர்*
? *வீணை வித்வான் விஸ்வ மோகன் பட்*
? *பி.வி.சிந்து*
? *சாக்ஷி மாலிக்*
? *பாட்மின்டன் கோச் புலேலா கோபிசந்த்*
? *பாடகர் ஆஷா பரேக்*
? *பாடகர் ஷங்கர் மகாதேவன்*
? *பாடகர் சோனு நிகம்*
? *நடிகர் மனோஜ் பாஜ்போய்*
? *நடன கலைஞர் லட்சுமி விஸ்வநாதன்*
? *பாடகர் கைலாஷ் கர்*
? *நாட்டுப்புற பாடகர் பாசந்தி பஷித்*
? *முகம்மது யூசுப் கத்ரி*
? *கதக்களி நடன கலைஞர் சி.கே.நாயர்*
? *பத்மவிபூஷண் :*
? *மறைந்த சபாநாயகர் பி.ஏ.சங்மா*
? *பாடகர் யேசுதாஸ்*
? *தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்*
? *பா.ஜ., தலைவர் முரளி மனோகர் ஜோஷி*
? *காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சையது*
? *மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சுந்தர் லால் பட்வாக்.*
ஜல்லிக்கட்டு பீட்டா மனு, தமிழக அரசும் கேவியட் மனு
*ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக மாற்று வேடத்தில் பீட்டா மனு*
தமிழகத்தில் பீட்டாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக மாற்று வேடத்தில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பீட்டா என்ற பெமல் கியூப்பா என்ற பெயரில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கியூப்பா அமைப்பு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. விவகாரம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனுத்தாக்கல்*
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. பேரவையில் நிறைவேறிய ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டத்துக்கு எதிரான மனுக்களை தங்களை கேட்காமல் விசாரிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கொடி ஏற்றக்கூடாது: டிராஃபிக் ராமசாமி வழக்கு
*குடியரசு தினத்தன்று முதல்வர் கொடியேற்றக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு*
குடியரசு தினத்தன்று முதல்வர் கொடியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். ஆளுநர் இல்லாத பட்சத்தில் தலைமை நீதிபதி கொடியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
கோடையில் குடிநீர் வினியோகம் செய்வது குறித்து அமைச்சர் ஆய்வு
*குடிநீர் வினியோகம் குறித்து அமைச்சர் ஆய்வு: கோடையில் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கை*
சென்னை
பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் கூறியுள்ளது.
அமைச்சர் ஆய்வு
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் வினியோகம் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வினியோகம் குறித்தும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 12,522 மில்லியன் கன அடியில், 1,412 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே (11 சதவீதம்) இருப்பு உள்ளது. பருவமழை பொய்த்ததன் காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்த அளவே இருந்தபோதிலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி குடிநீர்
சென்னை மாநகரின் கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.61 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரவனாறு ஆற்றிலிருந்து நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் நீர் எடுப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெய்வேலி நீர்ப்பரப்பு பகுதியில் தற்போது பயன்பாட்டில் உள்ள 10 ஆழ்துளை கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு வீராணம் குடிநீர் குழாய் மூலம் சென்னைக்கு எடுத்துவரப்படுகிறது. மீதமுள்ள 35 ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றதும் கூடுதலாக 20 மில்லியன் கனஅடி நீர் சென்னைக்கு எடுத்துவரப்படும்.
பரவனாறு ஆற்றுப்படுகையில் கூடுதலாக விசைப்பம்புகள் அமைக்கவும், மற்றும் நெய்வேலியில் 35 ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கவும் ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய கிணறுகள்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 300 விவசாய கிணறுகளை வாடகைக்கு அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது 118 விவசாய கிணறுகளிலிருந்து நாளொன்றுக்கு 40 மில்லியன் லிட்டர் அளவிற்கு நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்தமாத இறுதிக்குள், 300 விவசாய கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 100 மில்லியன் கனஅடி நீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படும். சென்னை மாநகரில் ஏற்கனவே 520 லாரிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 லாரிகளை வாடகைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 4,200 லாரி நடைகளின் எண்ணிக்கை 6,500 நடைகளாக அதிகரிக்கப்படும்.
ஆழ்துளை கிணறுகள்
சென்னை மாநகரில் கூடுதலாக 500 புதிய பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகருடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் புதிதாக தேவைப்படும் ஆழ்துளை கிணறுகள் நிறுவுவதற்கு ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பில் மொத்தம் 409 மில்லியன் கன அடி நீரை உபயோகிக்க ஏதுவாக பம்புசெட்டுகள் மூலம் இறைத்து சென்னை மாநகருக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகளிலும் நீர்வற்றிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டால், காஞ்சீபுரம் மாவட்டம், மாமண்டூர், பாலூர் மற்றும் கருங்குழி ஆகிய தொலைதூரப் பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 500 நடை லாரிகள் மூலம் 10 மில்லியன் லிட்டர் நீர் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்ததன் காரணமாக கோடைகாலத்தில் ஏற்படவுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் பயன்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலை நேர செய்திகள்: செய்தி சுருக்கம்
*டெல்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் தந்தி டி.வி.க்கு தேசிய விருது வழங்கபட்டது* தந்தி டி.விக்கு வாழ்த்துக்கள்.விஸ்வரூபம்*
♈?? *பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண எம்.பி நுஸ்ரத் சஹார் அப்பாஸி, பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்*
♈?? *எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்*
♈?? *கம்பளா போட்டியை நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்: எடியூரப்பா வலியுறுத்தல்*
♈?? *தமிழகத்தில் சிலரால் இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்படுகிறது – பாரதீய ஜனதா குற்றச்சாட்டு*
♈?? *சோமாலிய தலைநகரில் உள்ள ஹோட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்:7 பேர் பலி*
♈?? *பீட்டாவின் புகார் மனுவுக்கு நடவடிக்கை எடுத்த ஆளுநர் கிரண் பேடி உடனடியாக மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கிரண் பேடிக்கு புதுச்சேரியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக புதுச்செரி ஆளுநர் கிரண் பேடி செயல்படுவதால் மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்*
♈?? *சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவையில் சேர்வதற்கு ரூ. 500 விண்ணப்பம் வழங்கப்படுவதாக வெளியான தகவல்கள் பொய்யானது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்*
♈?? *ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் வாகனங்கள் எரிக்கப்படும் வீடியோ ஒன்றை மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு பலர் கருத்துகள் தெரிவித்தனர். அதில் ஒருவர், என்னிடம் காவல்துறையினர் வாகனங்களுக்கு தீயிடும் ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. இதில் அரசியல் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.அதற்கு துணை ஆணையர் பாலகிருஷ்ணன், நான் இதை ஒத்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மெரீனாவில் நடந்த கலவரம் அரசியல் என்று எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அதை காவல்துறையினரே ஒப்புக்கொள்கிறார்கள்.அடிதடி கலவரத்தில் ஈடுப்பட்ட காவல்துறையினர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது*
♈?? *மாணவர்கள் குடிகாரர்கள்-வெளிநாட்டு மது வகைகளையும் விட்டுவிட்டு, இவர்கள் பழச்சாறு மற்றும் பழம், காய்கறிகளிலான smoothies சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார் ஆர்யா. மேலோட்டமாக பார்த்தால் ஆர்யா ஏதோ நல்லது சொல்ல வருவது போல இருக்கும் இந்த டிவிட்டர் பதிவு, தமிழ் இளைஞர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்று சித்தரிப்பதை போல உள்ளது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பெரும் யுக புரட்சியை நடத்தி காட்டிய நிலையில், கல்லூரி சர்க்குலரை காண்பித்து, 'இவர்கள்' வெளிநாட்டு மதுபானத்தை தவிர்க்கலாம் என கூறியுள்ளார் ஆர்யா. அப்படியானால், இவர்கள் என அழைக்கப்படும் கல்லூரி மாணவர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்பதே இவரது கருத்து. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் புரட்சியை ஏதோ குடிபோதையில் நடந்துள்ளதை போல வர்ணித்துள்ளார் ஆர்யா என்ற சந்தேகம் எழுகிறது*
♈?? *ஜல்லிக்கட்டுக்கு முதன் முதலாக தடை விதித்த நீதிபதி பானுமதியை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமையன்று தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது. கடந்த முறை ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில் இருந்து விலகியது போல நீதிபதி பானுமதி இம்முறையும் விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகின. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டன*
♈?? *ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய தீ வைப்பு சம்பவத்தில் 31 இருசக்கரவாகனங்கள் சேதம் அடைந்துள்ளது என்று துணை ஆணையர் சுதாகர் கூறியுள்ளார். ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தியதாக காவல்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்*
♈?? *புதுக்கோட்டையில் டுவீலர் மீது கார் மோதல்: 2 பேர் பலி*
♈?? * டில்லி வந்த அபுதாபி இளவரசர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்*
♈?? *மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு*
♈?? *தமிழகத்தில் நடத்தப்பட்ட வறட்சி பாதிப்பு குறித்த அறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று குன்னத்தூரில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு உறுப்பினர் விஜயராஜ் மோகன் கூறியுள்ளார். மேலும் வறட்சி பாதித்த பகுதிகளில் அறிவியல் ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்*
♈?? *ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2009-ல் திமுக கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டத்தை குறை கூற பொன். ராதாகிருஷ்ணனுக்கு தகுதியில்லை என்று கூறியுள்ளார். தமிழ் கலாசாரத்திற்காக போராடி பெற்ற வெற்றியை கேலி செய்வதற்கு டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்*
♈?? *ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்டாமலு என்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட குண்டை வெடி குண்டு நிபுணர்கள் பாதுகாப்பான இடத்தில் வெடிக்க செய்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது*
♈?? *தமக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது தமிழகத்திற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன் என மாரியப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு மத்திய அரசு இன்று பத்மஸ்ரீ விருது அறிவித்ததது. இதுகுறித்து மாரியப்பன் கூறியுள்ளதாவது: வெளியில் தெரியாத வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது உத்வேகமாக அமையும். மேலும் பத்மஸ்ரீ விருது கிடைக்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி எனவும் மாரியப்பன் தெரிவித்தார்*
♈?? *மும்பை: வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்ந்து 27,708 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 8,603 புள்ளிகளாக உள்ளது*
♈?? *உத்தரகாண்ட் மாநிலம் பஸ்பூர் என்ற இடத்தில் இரண்டு பாஜக குழுக்களிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தலைவர் எஸ்பால் ஆர்யா பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது*
♈?? *ராய்ச்சூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 கால்கள், 2 ஆண் உறுப்புடன் வினோத குழந்தை பிறந்துள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தைச் சேர்ந்த லலிதம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 4 கால்களும் 2 பிறப்புறுப்புகளும் இருந்தது.இதையடுத்து, லலிதம்மாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் விருபக்ஷாவின் அறிவுரைப்படி, அந்தக் குழந்தை பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (விஐஎம்எஸ்) கொண்டு செல்லப்பட்டது.தற்போது குழந்தைக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தனது மூத்த குழந்தை நலமாக இருக்கிறது. தற்போது பிறந்துள்ள குழந்தை எப்படி இருக்கிறதோ அதுபோன்றே வளரட்டும் தங்களால் குழந்தையின் உயர் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியாது என்றும் லலிதம்மா கூறியுள்ளார்*
♈?? *ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காவல் அதிகாரி : தள்ளி விடும் மர்ம நபர் யார்? : அதிர்ச்சி வீடியோ.கடந்த திங்கட்கிழமை விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில், ஆயுதப்படை பிரிவை சேர்ந்த காவலர் சங்கர் என்பவர் மாடு முட்டி மரணம் அடைந்தார். இந்நிலையில், அவருக்கு பின்னால் நிற்கும் ஒரு மர்ம நபர், அவரை மாட்டை நோக்கி தள்ளிவிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரணையில் இறங்குவார்கள் எனத் தெரிகிறது*
♈?? *இசையமைப்பாளர் அனிருத் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஒரு வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்றிருக்கும் அவர், தனது ரசிகை ஒருவருடன் அந்தரங்கமாக இருந்தார் எனவும் செய்திகள் பரப்பப்பட்டது. ஒல்லியான தேகத்தில், அவரைப் போலவே இருந்தாலும், அது அவர்தானா என்பது தெரியவில்லை.அது அவர் இல்லை எனவும், இது போன்ற வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனாலு, அது அவர்தான் என சத்தியம் செய்யும் நெட்டிசன்கள், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள்.ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பின் வாங்கி விட்டதாக இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பற்றி சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதை திசை திருப்பவே, அனிருத் என்ற பெயரில் இந்த வீடியோவை யாரோ பதிவு செய்துள்ளார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்*
♈?? *சாலையில் சென்ற வாகனம் தீடிரென தூக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ!!சீனாவில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று தூக்கப்பட்டு பின்னர் கீழே விழுந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் முக்கிய சாலை ஒன்றில் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது சாலையை கடப்பதற்காக ஒருவர் காத்துக்கொண்டிருந்தார்.அவர் கடந்து செல்வதற்காக, அந்த சாலை வழியே வந்த சில வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ஒரு வாகனம் மட்டும் நிறுத்தாமல் சாலை கடக்காமல் சென்ற போது திடீரென்று அந்த காரின் பின்பக்கம் தூக்கப்பட்டு, அதன் அருகே இருந்த கார் மீது சென்று மோதியது. இதில் அந்த வாகனத்தின் டயர்கள் பாதிப்புக்குள்ளாகின.இந்த வீடியோவைக் கண்ட ஒரு சிலர் இது ஒரு அமானுச சக்தி என்று கூறிவந்தனர். வாகனம் தூக்கப்பட்ட அந்த இடத்தில் தொலைப்பேசி கம்பங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதில் காயில் ஒன்று சாலையின் மேல் கிடந்துள்ளது. இதன் விளைவாகவே வாகனம் தூக்கப்பட்டு, பின்னர் வீசப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளது சீன அரசு*
♈?? *10 நிமிடங்களில் 2.5 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி, புதிய சாதனை படைத்துள்ளது. சியாமி நிறுவனம் கடந்த வாரம் தனது புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதையடுத்து இதை நேற்று ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் விலை ரூ.9,999 முதல் ஆரம்பமாகிறது.10 நிமிடங்களில் 2,50,000 ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன்கள் விற்று, முந்தைய ‘ரெட்மி நோட் 3’ விற்பனை சாதனையை முறியடித்துள்ளது. ’ரெட் மி நோட் 4’ செல்போனில் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை சேர்த்துள்ளது.’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன் Rs 9999 (2GB RAM + 32GB Flash), Rs 10,999 (3GB RAM + 32GB Flash) மற்றும் Rs 12,999 (4GB RAM + 64GB Flash) ஆகிய வகைகளில் கிடைக்கிறது*
♈?? *த்ரிஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட தொழிலதிபர் வருண் மணியன் தற்போது த்ரிஷா இல்லைனா பிந்து மாதவி என்று தற்போது பிந்து மாதவியோடு பிஸியாக உள்ளார்*
♈?? *படம் முடியப் போகிறது. இருந்தும், படப்பெயரை இன்னும் அறிவிக்காததால், தல 57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.அஜித், கஜோல், அக்ஷரா நடித்துவரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்து வருகிறது.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விரைவாக முடித்து ஜுன் 23 ரம்ஜான் தினத்தில் திரையிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. அப்படி வெளியானால் ரசிகர்களுக்கு அது ரம்ஜான் விருந்தாக அமையும்*
♈?? *சினிமா திரைப்பட புரமோஷனுக்கு ஹீரோயின்கள் கலந்துகொள்ளாதது பற்றி அடிக்கடி பேசப்பட்டவர் நயன்தாரா, சமீபத்தில் படத்தின் புரமோஷனுக்கு ஹீரோயின்கள் வந்துவிட்டால் மட்டும் மோசமான படத்தை ஓடவைக்க முடியுமா? என நடிகை நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார்*
♈?? *நாமக்கல்: அரிய வகை மூலிகை கிழங்கை வெட்டி கடத்திய 6 பேர் கைது*
News… Viswaroopam
தமிழகத்துக்கு சிறந்த மாநிலத்துக்கான விருது
*தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது*
சிறப்பான செயல்பாடுகளுக்கான தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது கிடைத்துள்ளது.இவ்விருதினை டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.சிறந்த மாவட்டத்திற்கான விருது மதுரைக்கு கிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கும் ஜனாதிபதி விருது வழங்கியுள்ளார்.
*தமிழக தேர்தல் ஆணையத்திற்கு விருது*
தமிழகத்தில் வன்முறையின்றி தேர்தல் நடத்தியதற்காக தமிழக தேர்தல் ஆணையத்திற்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.இவ்விருதினை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெற்றுக்கொண்டார்.2016 தேர்தலில் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தந்தி டிவிக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். ரசாயன ஆயுதங்களால் தாக்கக்கூடும்: ஜெர்மனி
ஐஎஸ் தீவிரவாதிகள் இரசாயன ஆயுதங்களை கொண்டு ஜெர்மனியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதற்காக ஆய்வுப்படைகள்,
உளவுத்துறைகள் மற்றும் அவசர சேவைகள் போன்றவை உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜெர்மனியில் ஒரு நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாத குழு ஜெர்மனி மீது இரசாயன ஆயுத தாக்குதலுக்கு தாயாரக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தண்ணீர் மாசுபடுத்துதல்,
நாட்டில் அதிக அளவு தண்ணீர் செல்லும் டேங்குகுகளில் இரசாயனங்களை கலக்குதல் மற்றும் கட்டிடங்களுக்கு செல்லும் தண்ணீர் தொட்டிகள் என பலவற்றை குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு ஏற்றாற் போல் ஜெர்மனில் உள்ள படை வீரர்கள் கவனமுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதே போன்று கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து அமைச்சர் ஜென்பா வலஸ் ஐஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்தை தாக்குதவதற்கு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

