Home Blog Page 5789

இமெயிலை கண்டுபிடித்தவர் ராய் டாம்லின்சன் மரணம்

இமெயிலை கண்டுபிடித்த ராய் டாம்லின்சன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கம்யூட்டர் புரோக்ராமரான இவர், எலக்ட்ரானிக் முறையில் தகவல்களை அனுப்பும் முறையை கண்டுபிடிக்க முயன்று, 1971ல் இமெயிலை கண்டுபிடித்தார்.

இவரது இமெயில் கண்டுபிடிப்பிற்கு பிறகு தான் “@” என்ற குறியீட்டை பயன்படுத்தி இமெயில் முகவரிகள் உருவாக்கப்பட்டன

ஈழ அகதி தற்கொலை: அரசின் மனித நேயமின்மையே காரணம்- ராமதாஸ்

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அளிக்கிறது. நம்பி வந்த அகதிகளின் உயிரைக் காக்கத் தவறியதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

நமது சொந்தங்களாக ஈழ அகதிகளை குற்றவாளிகளைப் போலவே ஆட்சியாளர்கள் பார்க்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டால் தான் இலங்கை அகதிகள் தமிழகத்தில் சுய மரியாதையுடனும், கவுரவத்துடனும் வாழ முடியும். பாட்டாளி மக்கள் கட்சி அரசு அமைந்தவுடன் ஈழத் தமிழ் அகதிகளின் குறைகள் தீர்க்கப்படும்; கோரிக்கைகள் ஏற்கப்படும் என உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அகதியை தற்கொலைக்குத் தூண்டியதாக வருவாய் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

திருமங்கலம் அருகே இலங்கை அகதியை திட்டி, தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்பட்ட வருவாய் ஆய்வாளர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அகதிகளை கணக்கெடுக்கும் பணிக்காக, வருவாய் ஆய்வாளர் துரைபாண்டியன் நேற்று முகாமிற்கு சென்றுள்ளார். 

அப்போது ரவீந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து துரைபாண்டியன் விளக்கம் கேட்ட போது, ரவீந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக ரவீந்திரன் விளக்கமளித்தார். 

ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ரவீந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவீந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலை செய்து கொண்டார்

விஜயகாந்த் கிங் மேக்கராக இருக்க வேண்டும்: நடிகர் கார்த்திக்

வரும் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங்காக இருப்பதை விட கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என, நாடாளும் மக்கள் கட்சியின் த‌லைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல்

சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, நேர்காணல் நடத்தினார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், இன்று நேர்காணல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் கலாபவன் மணி கொச்சியில் காலமானார்

பிரபல நடிகர் கலாபவன் மணி நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று திடீரென்று சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணியளவில் கலாபவன் மணி உயிர் பிரிந்தது.

மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தில் போலீசாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் தேசிய விருது, கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

 

ஆண்பாவம் கருப்பாயிக்கு உதவிய விஷால்!

மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி. இவரை 1985-ல் இயக்குநர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல் புகழ்பெற்றது.

1993-ல் இவரது கலைச் சேவைக்காக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கலைமாமணி விருது பெற்றவர், சினிமா மூலம் நாட்டுப்புறப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்த நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி வயது-80, அரசு வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் வாழ்க்கை நடத்தி வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறேன் என்றும் மருத்துவச் செலவுக்கும், நல்லது கெட்டதுக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றேன்,

சுமார் 10 சினிமா படங்களில் நடித்தும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட சேர்க்காமல் கைவிடப்பட்டேன் என்றும் வருந்தி சமபத்தில் பிரபல நாளிதழில் செய்தியாக வெளிவந்ததை படித்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் புரட்சி தளபதி விஷால் உடனே சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி உள்ள நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி அம்மா அவர்களுக்கு உதவி தொகை வழங்கினர் மற்றும் அவர் ஒரு வாரத்திற்குல் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு தென்னித்திய நடிகர் சங்கத்திலும் ஆணையிட்டுள்ளார்.

கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கும் சினேகன்

யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கவிஞர் சினேகன், உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார்.

அதன் பிறகு தற்போது இராஜராஜ சோழனின் போர்வாள் மற்றும் பொம்மி வீரன் என்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பொம்மி வீரன் என்ற படத்தில் இவர் ஒரு கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கிறார்.

இதற்காக இவர் கட்டைக்கூத்து கலைஞர்களை நேரில் சந்தித்து பிரத்தேகமாக பயிற்சியும் எடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வு முறைகளை அறிய அவர்களோடு பழகி தன்னை ஒரு முழுமையான கட்டைக்கூத்து கலைஞனாகவே மாற்றி இருக்கிறார். நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியலோடு இப்படத்தின் கதை வேறு ஒரு வித்தியாசமான தளத்தில் பயணிக்கிறது.

இப்படத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கை குறிப்புகளை சேகரித்து அதை புத்தகமாக பதிவு செய்து அதனை அரசின் பார்வைக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டு உள்ளார்.

இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்குகிறார். தாஜ்நூர் இசை அமைக்கிறார் சாலைசகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் பாக்யராஜ், ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், சந்தானபாரதி, டி.பி.கஜேந்திரன், முத்துக்காளை அறிமுக கதாநாயகி நாட்டியா, ஆனந்தி, கன்னிகா என ஏராளமான நட்சத்திர பட்டளாமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பல லட்ச ரூபா செலவில் மதுரை பாரம்பரியத்தோடு தத்ரூபமாக ஒரு காலனியை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 7 பேர் விடுதலையை பாதிக்காது: வேலூர் சிறையில் வழக்கறிஞர் புகழேந்தி

ராகுல்காந்தி வழக்கில் கைதான கைதிகளுக்கு வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கியுள்ளது .நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் 7 பேர் விடுதலை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தி உள்ளது என்பது கூறிப்பிடதக்கது.

 

விடுதலை குறித்து நளினி பேசுகையில் மாநில மற்றும் மத்திய அரசின் மீது நம்பிக்கை உள்ளதாக அவரது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.

இன்று காலை வேலூர் சிறையில்  நளினி மற்றும் முருகன் சந்தித்து பேசினார்கள் பின்பு நளினி அவர் தந்தையின் சடங்கிற்காக 8,9,10 மூன்று நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.பரோல் வழங்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு அளிப்போம் என்று வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.

எம்எல்ஏக்கள் அறைகள் பூட்டி சீல் வைப்பு: தேர்தல் கமிஷன் நடவடிக்கை

அரசு அலுவலகங்களில் கட்சி பிரமுகர்கள் வந்து அரசியல் நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க தமிழகம் முழுவதும் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் அறைகள் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை அடுத்து, எம்எல்ஏக்களின் அரசு அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் அலுவலகங்களை காலி செய்து சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்த இன்று ஒரு நாள் மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது