Home Blog Page 5788

பெண்களை பற்றி அவதூறாக பேசிய பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சாவித்திரி பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பேசும்போது, பெண்களை இழிவு படுத்தும் விதமாக, அவரது படத்தில் நாயகிகளை அவர் துரத்தி துரத்தி காதலிப்பதை மட்டும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் ஒன்று நாயகிகளை அவர் முத்தமிட வேண்டும் இல்லையென்றால் இல்லை அவர்களை கர்ப்பமாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த இன்று, பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார். ”பெண்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அனைத்து பெண்களையும் தனது குடும்பத்தைச் சேர்ந்த சொந்த சகோதரிகளாக பாவிப்பதே தனது குடும்பத்தின் வழக்கம் என்றும் பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கியது உயர்நீதிமன்றம்

தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக ராஜிவ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான நளினி, சென்னை ஐகோர்ட்டில் மூன்று நாள் பரோல் கேட்டு மனுசெய்தார். இன்று நடந்த விசாரணையில் மூன்று நாள் பரோல் அளிக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மனுவை விசாரித்த நீதிபதி ஒரு நாள் பரோல் அளித்து உத்தரவிட்டார்.

கெயில்-சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு மற்றும் தே.மு.தி.க. ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது, நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் மனுவில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொழிலாளர்களின் வைப்புநிதி மீதான வருமான வரி ரத்து

இ.பி.எப். தொழிலாளர் எனப்படும் வருங்கால வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என பட்ஜெட்டில் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி இதனை பரிசீலிக்கும்படி வலியுறுத்தினார். இதையடுத்து இன்று மக்களவையில்  மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது, இ.பி.எப். வட்டிக்கு புதிய வரி விதிக்கும் முடிவு ரத்து செய்யப்படும் என்றும் இந்த அறிவிப்பும் திரும்ப பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கமல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் “மீன் குழம்பும் மண் பானையும் ” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார்.

இது நடிகர் திலகத்தின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் கமல் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே சாத்தியமானதாக மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பி இருக்கும் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம்.எஸ்..பாஸ்கர், சந்தானபாரதி, ஆர்..எஸ். சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஜே.லக்‌ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும் கலையை எம்.பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை எஸ்.ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை ஆர்.எஸ். சிவாஜியும் கவனிக்கிறார்கள்.

தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது.

தங்கம் விலை உயர்வு

தங்கத்தின்‌ விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. ஒரு‌ கிராம் ‌சுத்தத் தங்கம் விலை நேற்று மாலையுடன் ஒப்பிடுகையில் 6 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 980 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 5 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 78‌6 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் விலை‌ உயர்ந்து 22,288 ரூபாய் ஆக உள்ளது.

திருடியதாக கூறி 4ம்வகுப்பு தலித் மாணவன் அடித்துக் கொலை

நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அருகே சக மாணவர்கள் தாக்கியதில் நான்காம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டை அடுத்த கோழிக்கால்நத்தத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்று வந்த தலித் வகுப்பை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவரான சூர்யாவிற்கும், சக மாணவர்களான நிதிஷ், சதீஷ் ஆகியோர் இடையே கடந்த 29 ஆம் தேதி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாமின்ட்ரி பாக்ஸை எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில், தலையில் படுகாயமடைந்த சூர்யா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார்.

மாணவன் இறந்ததை அடுத்து திருசெங்கோடு போலீசார், எஸ்.சி -எஸ்.டி பிரிவின் கீழ் மாணவர்கள் நிதிஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோழிக்கால் நத்தம் துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சூர்யாவின் மரணத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சூர்யாவின் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோழிக்கால் நத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் இழிவாக நடத்தி வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழிக்கால் நத்தம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

அதிமுக பிரச்சார தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு 720 பேர் நியமனம்

சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்காக 720 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்  மற்றும் பட்டதாரிகள், பட்டயபடிப்பு முடித்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் சமூக வலை தளங்கள் மூலம் அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் அதிமுக அரசின் சாதனைகள்,

கொள்கைகள் பற்றி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

ஒரே நாளில் சமூக வலைதளம் மூலம் 12 லட்சம் மக்களை சென்றடைய திட்டம் வகுத்துள்ளனர்

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ நாளை தொடக்கம்

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி மற்றும் ஆதரவு அளிப்பதற்காக, ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 6 சிறப்பு உதவி மையங்களை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக பெண்கள் தினத்தன்று  உ.பி., ம.பி., உத்தரகண்ட் ஆகிய 3 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு உதவி மையம் தொடங்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்