Home Blog Page 5787

மனைவிக்கு தண்ணீர் மறுப்பு: தனியாக கிணறு வெட்டி ஊருக்கே வழங்கியவர்!

மும்பை:

தாழ்த்தப்பட்டவர் என்பதால் மனைவியை கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்ததால், அவரது கணவர் தனியாக ஒரு கிணற்றை வெட்டி, அதிலிருந்த வந்த தண்ணீரை ஊரார் அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டம், கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், கூலித்தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் இவரது மனைவி ஊரில் இருந்த உயர் வகுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது கிணற்றின் உரிமையாளர், தண்ணீர் எடுக்க கூடாது என கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அவர் அழுது கொண்டே வீட்டிற்கு வந்திருக்கிறார். மனைவி அழுவதை பார்த்து விரக்தி அடைந்த பாபுராவ், தனது வீட்டிற்கு அருகில் தனியாக கிணறு வெட்ட ஆரம்பித்திருக்கிறார்.

பாபுராவ் வெட்டிய கிணற்றுக்கு அருகில் ஏற்கனவே 3 கிணறுகளும், ஒரு ஆழ்துளை கிணறும் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்திருக்கிறது. இதனால், பாபுராவை அவரது மனைவி உள்பட உறவினர்கள் அனைவருமே விமர்சனம் செய்ததோடு, யாரும் கிணறு வெட்ட உதவியும் செய்யவில்லை.

இருப்பினும், மனம் தளராத பாபுராவ், தினமும் வேலைக்கு செல்வதற்கு முன் 4 மணி நேரமும், வேலை முடிந்து வந்த பின் 2 மணி நேரமும் கிணறு வெட்டியிருக்கிறார். விடா முயற்சியாக பாபுராவ் வெட்டிய கிணற்றில் 40 நாளில் தண்ணீர் வந்திருக்கிறது. அதுவும் அதிகமான தண்ணீர் ஊற்றெடுத்திருக்கிறது.

இப்போது அந்த கிணற்றில் இருந்து தாழ்த்தப்பட்டவர் மட்டுமின்றி, உயர் சாதியினரும் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.

இதுகுறித்து பாபுராவ் கூறுகையில், ”எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த உரிமையாளர் பெயரை கூற விரும்பவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் தண்ணீர் மறுக்கப்பட்டது. இதனால், எப்படியாவது தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி கடவுளை மட்டுமே நினைத்து வேண்டிவிட்டு, பக்கத்து ஊருக்கு சென்று கிணறு வெட்டும் பொருட்களை வாங்கி வந்தேன்.

எனது வேண்டுதலின் பயனாக கடவுள் இந்த இடத்தில் தண்ணீர் வர வைத்து இருக்கிறார். இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, உயர் சாதியினரும், எங்களுக்கு தண்ணீர் தர மறுத்தவர்களும் இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர்” என்றார்.

இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்ததும், தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். அதோடு, எந்தவிதமான உதவியும் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

தனி ஒருவனாக நின்று 40 நாட்களாக கடுமையான உழைப்பின் மூலம் கிணறு வெட்டி, இன்று ஊருக்கு தண்ணீர் வழங்கும் பாபுராவ் தஜ்னேவை பார்த்து ஊரார் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு

election_chennai

சென்னை :

சென்னை மாவட்டத்தில் 3771 வாக்குச்சாவடிகளுக்கு 9,784 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4841 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 256ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

இது குறித்து சென்னை மாநகராட்சியின் தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாவட்டத்தில் மே 16ந் தேதி வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மே 2ந் தேதி முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை முதல்சுற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3771 வாக்குச்சாவடிக்கும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்டதேர்தல் அலுவலர்/ஆணையாளர் டாக்டர்.பி.சந்தரமோகன், தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (பொது), தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (09.05.2016) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 9784ம், கட்டுப்பாட்டு கருவிகள் 4841ம், ஒப்புகைச் சீட்டு 256ம், வாக்குச்சாவடி வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. அண்ணா நகர் தொகுதியில் வாக்களிப்பவர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவிகள் முன்னோடியாக பயன்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு இயயதிரங்களில் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் சின்னம் பொறித்த ஒட்டு வில்லைகள் ஒட்டும் பணி விரைவில் நடைபெறும். வாக்குப்பதிவிற்கு முதல்நாள் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து தளவாட பொருட்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படும்.

நாளை 10ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்டத்தில் 10 இலட்சம் பேர் ஒரே நேரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இயநிகழ்ச்சியில் கலயதுகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2ம் கட்டமாக குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி நிகழ்வில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (பொது), கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்னையர் தினம் எதற்கு?

safe_image

அம்மா… அம்மா…
எந் நெஞ்சில் நீங்காதிருக்க
நினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு?

காலை கண்விழித்தால்… அம்மா
காலில் அடிபட்டால்… அம்மா ஆ
கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும்
உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா…
நிமிடம் தப்பினும்
நினைவு தப்பாது…
மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா
நொடிப் பொழுதும் நீங்காது
நீக்கமற நிறைந்த எண்ணம் … அம்மா அம்மா

நாம் என்ன அயல்நாட்டான் போல்
ஆண்டுக்கு ஒருமுறையா
அம்மாவைப் பார்த்து வருகிறோம்…

போங்கடா பொசக்கெட்ட பசங்களா…
அம்மாவை நினைக்க ஒரு நாளாம்..
அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களாம்!

பொத்திப்பொத்தி வளர்த்த தாய்க்கு
ஒரு நாளை மட்டும் ஒதுக்கி
மீதி நாளெல்லாம் சுயநலப் பித்தோடு
சுற்றித் திரிவதற்கா சும்பப் பயல்களே!

இத்தோடு நிறுத்துங்கள்
இந்த அன்னையர் தினம் கொண்டாடுவதை!

இது என்ன பிறந்த நாள் போலா?

இளவயதில் உன்னைத் தாங்கியவளை
முதிய வயதில் நீ தாங்குவதை விட்டு…
இதற்கெல்லாம் நாள் பார்த்து
கொண்டாடிவிட்டு சிட்டாய்ப் பறந்து போக
இது என்ன குடும்பம் தொலைத்த
உறவு தொலைத்த உருப்படாத தேசமா?

அழுக்கு ஆங்கிலக் கலாசாரம்
அகலும் நாள் எந்நாளோ?
அந்நாளில் நிச்சயமாய்
இந்த அன்னையர் தினமும் இருக்காது
மகளிர் தினமும் இருக்காது!

அருளிச் செயலில் மாமுனிகளும் தேசிகரும்

andavan-jeer

அண்ணா… நாங்க சமாஸ்ரயணம் செய்துக்கப் போறோம். நீயும் வாயேன்..!

என் தங்கை அழைத்தபோது, சரி வரேன் என்றேன்.

4 வருடங்களுக்கு முன்னர் இருக்கும். அப்போது நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்த நேரம்.

ஒற்றை நாளை தேற்றிக் கொண்டு மதுரைக்குச் சென்றேன்.

தங்கை கணவரான என் மாப்பிள்ளை வேங்கடேசனும், அவள் மாமனார் சம்பத் மாமாவும் வெகு ஆர்வமுடன் அழைத்துச் சென்றார்கள் அவர்களின் ஆசார்யரான ஆண்டவன் ஜீயர் ஸ்வாமியிடம்.

அப்போது ஸ்வாமி மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோவில் செல்லும் இடத்தில் அவர்களின் ஆச்ரம மண்டபத்தில் வ்ரதகாலத்தில் இருந்தார்.

ஆச்ரமத்தில் ஜீயர் ஸ்வாமியின் கைங்கர்யத்தில் இருந்த … அண்ணா, நமக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமானவர். அவர் அடியேனைக் கண்டபோது, முகம் மலர… செங்கோட்டை ஸ்வாமி வாரும்.. எப்டி இருக்கீர். ஏது இந்தப் பக்கம் என்றெல்லாம் விஜாரிக்கத் தொடங்கிவிட்டார்.

வந்த விவரத்தைச் சொல்லிவிட்டு அளவளாவினேன்.
***
முன்னதாக, ஜீயர் ஸ்வாமியை தெண்டனிடப் போவதால், ஸ்வாமிக்கு ஏதாவது சமர்ப்பிக்க வேணுமே என்றெண்ணி அகத்தில் தேடினேன்.

ஞான ஸ்வரூபியாய்த் திகழும் பெரியோர் பக்கலில் நாம் சமர்ப்பிக்க என்ன இருக்கிறது என்ற எண்ணத்தில் பார்வையைச் செலுத்தியபோது, சட்டென அகப்பட்டது அடியேன் எழுடியிருந்த “தமிழ்மறை தந்த பன்னிருவர்” புத்தகம். விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராக இருந்த போது எழுதிய புத்தகம்.

சரி.. ஸ்வாமி சந்நிதியில் அதைச் சேர்ப்பிப்போமே என்று உடன் எடுத்துச் சென்றிருந்தேன்.
***
அன்று ஆச்ரம சிஷ்யர்களுக்கு சமாஸ்ரயனாதிகள் முடிந்து, திருவாராதனாதிகளும் முடிந்து,

சிஷ்யர்களுக்கு அனுக்ரஹிக்க ஆசனத்தில் எழுந்தருளியிருந்தார் ஜீயர் ஸ்வாமி.

சம்பத் மாமா அடியேனை ஜீயரிடம் என் புள்ளையாண்டானின் மச்சினன் என்று அறிமுகப் படுத்த,

ஸ்வாமியின் கைங்கர்யத்தில் இருந்த அண்ணாவோ… நம் விருத்தாந்தங்களைக் கூறி அறிமுகப் படுத்த…

ஸ்வாமி முகம் மலர அடியேன் கையில் இருந்த புத்தகத்தை வாங்கினார்.

வரிசையாக ஏலக்காய் மாலையும், பழங்கள் நிறைந்த தட்டுகளுடனுமாய் சிஷ்யர்கள் பலர் … காத்திருந்தார்கள்.

வரிசை நீண்டிருந்தது…

ஜீயர் ஸ்வாமி புத்தகத்தின் முன் பின் அட்டைகளைத் திருப்பித் திருப்பி சுவாரஸ்யமாகப் பார்த்தார். முதல் பக்கம் புரட்டினார். இரண்டாம் பக்கம்… மூன்றாம் பக்கம்…

தொடர்ந்து ஒவ்வொரு பக்கமாகப் பார்க்கத் தொடங்கினார்.

அடுத்து ஒவ்வொரு பக்கமாகப் படிக்கவும் தொடங்கினார். சில இடங்களில் ஆழ்ந்து வாசிக்கத் தலைப்பட்டார்.

சுமார் 20 நிமிடங்கள்… இருக்கும்! சிஷ்யர்கள் பாவம்… வரிசையில்!

சிலர் அடியேனைத் திட்டிக் கொண்டிருந்திருக்கலாம்! இவன் என்ன இப்படி குறுக்கே என்று!

ஆனால்… எனக்கு திக் திக் என்றிருந்தது. ஸ்வாமியின் பக்கலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் எங்கெல்லாம் பார்வையை அதிகம் பதித்து ஆழ்ந்தாரோ… அங்கெல்லாம் என்ன சம்ப்ரதாயப் பிரச்னைகள் வரும் என அடியேனுக்கும் தெரியும்!

ஆயிற்று…

அவ்வளவு நேரம் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தவர்… அடியேனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்…

அது அனுக்ரஹிக்கும் பார்வையுமல்ல, எரித்து விடும் கோபக் கனல் பார்வையும் அல்ல… ஆனால் ஏதோ ஒரு ஏமாற்றப் பார்வை! புரிந்தது!

அடுத்த நொடி அவரிடம் இருந்து வந்தன இடிபோன்ற சொற்கள்…

“நீர் மாமுனி சம்ப்ரதாயஸ்தர்ங்கிறதால், ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களுக்குச் செய்ததெல்லாம் இல்லாமல் போய்விடுமா?”

“இல்லை.. ஸ்வாமி.. அடியேன் பாடம்…! அப்படி…; அடுத்த நூல் எழுதும்போது ஸ்வாமி தேசிகரின் பாக்களையும் ரெஃபரன்ஸுக்கு எடுத்துக்கறேன்…”

– எப்படியோ மென்று விழுங்கினேன்..

காரணம், அடியேன் எழுதியிருந்த அந்த நூலில், பன்னிரு ஆழ்வார்களையும் அறிமுகப் படுத்தும் விதத்தில், ஒரு பயோ டேடா போன்று,

பெயர், அம்சம், திருநட்சத்திரம், அவதரித்த தலம், பாசுரங்கள், மணவாள மாமுனிகளின் உபதேச ரத்னமாலையில் இருந்து ஆழ்வார்கள் ஒவ்வொருவர் குறித்த பாசுரம்… என்று கொடுத்திருப்பேன்.

ஸ்வாமி அதை உன்னிப்பாகப் பார்த்துவிட்டு, அவ்வாறு கேட்டார் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்!

***
நமக்கு சம்ப்ரதாய அளவில் விருப்பு வெறுப்பு கிடையாது; பகவத் விஷயத்தில் மாமுனிகளும், தேசிகரும் நமக்கு இரு கண்கள்.

அடியேன் சிறு வயதில் தேசிக ப்ரபந்தம் படித்திருக்கிறேன் என்றாலும், அதை அப்போது உடனே கையாள எடுத்துக் கொள்ளவில்லை!

ஸ்வாமி தேசிகரின் ப்ரபந்தங்கள் அவ்வளவு இனிமையானவை. அவருடைய ஆஹார நியமம் குறித்து மஞ்சரியில் கட்டுரை வெளியிட்டிருக்கிறேன். பரமபத சோபானம் குறித்தும், ஆழ்வார்கள் குறித்து அவர் எடுத்தாண்ட விஷயங்களையும் இன்று ஓர் இடத்தில் திருப்தியாகக் கையாள முடிந்தது பெரும் பேறு.

**
இன்று ஒரு நிகழ்ச்சியில் அடியேன் கையாண்ட ஸ்வாமி தேசிகரின் வார்த்தைகள்… தேசிக ப்ரபந்தத்தில் இருந்து….

***
மீனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னும் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தருளுங் கல்கியாய் மற்றும்
மலிவதற்கு எண்ணும் வல்வினை மாற்ற
நாலா உருவங்கொண்டு

***
மாளாத வினை அனைத்தும் மாள நாம் போய்
வானேறி மலர் மகளார் அன்பு பூணும்
தோளாத மாமணிக்குத் தொண்டு பூண்டு
தொழுது உகந்து தோத்திரங்கள் பாடியாடிக்
கேளாத பழ மறையின் கீதம் கேட்டுக்
கிடையாத பேரின்பம் பெருக நாளும்
மீளாத பேரடிமைக்கு அன்பு பெற்றோம்
மேதினியில் இருக்கின்றோம் விதியினாலே!

***
ஆரண நான்கின் பொருளை
ஆழ்வார்கள் ஆய்ந்தடைவே
அன்புடனே அம்புவியோர் அனைவரும் ஈடேற வென்று
நாரணனார் தாள்களிலே
நாலாயிரந் தமிழால்
நண்ணி உரை செய்தவற்றை நாடி….
***
வையகமெண் பொய்கை பூதம் பேயாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவிகள்
பொய்யில் புகழ்க்கோழியர்கோன் விட்டுசித்தன்
பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்
ஐயன் அருட் கலியன் எதிராசர் தம்மோடு
ஆறிருவர் ஓர் ஒருவர் அவர்தாம் ….

***
அனைத்துலகும் காக்கும் அருளாளர் வந்தார்
அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார் வந்தார்
தினைத்தனையும் திருமகளை விடாதார் வந்தார்
தேசொத்தார் மிக்காரும் இல்லார் வந்தார்
நினைக்க நமக்கு இன்னறிவு தந்தார் வந்தார்
நிலை நின்ற உயிர்தோன்ற நினைந்தார் வந்தார்
எனக்கு இவர் நான் இவர்க்கு என்ன இனியார் வந்தார்
எழுத்து ஒன்றில் திகழ நின்றார் வந்தார் தாமே
****
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரும் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

மகளிர் தினவிழா கொண்டாட சந்திரபாபு நாயுடு தகுதியற்றவர்: நடிகை ரோஜா

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சிக்காரர்களும் பெண்களை போகப் பொருளாகவும் ஏளனமாகவும் பேசி வருகிறார்கள்” என்றும் “இந்த நிலையில் கர்னூலில் நடக்கும் மகளிர் தினவிழாவை கொண்டாட சந்திரபாபு நாயுடுவுக்கு எந்த தகுதியும் இல்லை” என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு

ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி ரவி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து

நெல்லை வேளாண்மைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, கடந்தாண்டு பிப்ரவரி 20ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஒட்டுநர் நியமனத்தில் பணம் கேட்டு வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் நெருக்கடி கொடுத்ததால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை தவறாக இணைத்துள்ளதால் முதல் தகவல் அறிக்கையினை ரத்து செய்ய வேண்டும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரவி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்: சோனியா காந்தி

சர்வதேச மகளிர் தினமான இன்று, நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் பேச முன்னுரிமை அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், நாட்டின் முதல் பெண் பிரதமரை அளித்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான், முதல் பெண் குடியரசுத் தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சமூகத்தில் இன்னும் நிறைய மாற்றம் நடைபெற வேண்டியிருப்பதாக தெரிவித்த சோனியா காந்தி, நாடாளுமன்றத்தில், சட்டப்பேரவையிலும் 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

சசிகலாவுக்கு எதிரான வெளிநாட்டு நிதி மோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 1996-1997ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சசிகலா, அதிமுக முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரன், பாஸ்கரன், ஜெ.ஜெ. டிவி தரப்பு ஆகியோர் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கப் பிரிவு 6 வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை, சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாடுகளில் இருந்து நவீனக் கருவிகள் வாங்கியது, வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்தது, வெளிநாட்டு நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனை செய்தது ஆகியவை தொடர்பானவை இந்த வழக்கு ஆகும்.

18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த 6 வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, சசிகலா, தினகரன் தரப்பினர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி தட்சிணாமூர்த்தி விசாரித்தார்.

இந்த இரு வழக்குகளிலும் போதிய முகாந்திரம் இல்லாததால் தினகரனை விடுவிப்பதாக அவர் உத்தரவிட்டார். இதன் மூலம் தினகரன் மீது அமலாக்கப் பிரிவு பதிவு செய்த இரு வழக்குகளும் முடிவுக்கு வந்தன. சசிகலா மீது தொடரப்பட்ட ஒரு வழக்கும் முடிவுக்கு வந்தது.