திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜீவ் கொலை கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. 161வது விதியின்படி 7 பேரையும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தை மத்திய அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: கருணாநிதி
பிஃஎப்க்கான வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 60 சதவீத தொகைக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2016-17ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் போது, 40 சதவீத தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும் எனவும், மீதமுள்ள 60 சதவீத தொகைக்கு வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதாவின் பி.எம்.எஸ். தொழிற்சங்கம் உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உடனடியாக இந்த வரிவிதிப்பு முறையை கைவிட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தொழிலாளர் எடுக்கும் வைப்பு நிதியின் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூட்டணி குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
“தற்போதைய சூழலில் திமுக-காங்., கூட்டணி குறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. பாமக. உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விஜய்-சூர்யா-விஷால்-கார்த்தி படங்களுக்கு பாடல் எழுதும் வைரமுத்து!
கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிய கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிடுகிறார்.
புகழ் மிக்க விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க பரதன் இயக்க விஜய் நடிக்கும் அவரது அறுபதாவது படத்திற்கு எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கார்த்தி – சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தில் ஏழு பாடல்கள் எழுதுகிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்டமான படத்தில் எட்டுப் பாடல்கள் எழுதுகிறார். விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடிக்கும் 24 படத்திற்கும் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். இசை ஏ.ஆர்.ரகுமான்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி – தமன்னா நடிக்கும் தர்மதுரை படத்தில் எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
விஷால் – ஸ்ரீதிவ்யா நடிக்க முத்தையா இயக்கும் மருது படத்தில் இமான் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி வருகிறார்.
ஜி.என்.ஆர் குமரவேல் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ரன்யா ராவ் நடிக்க, இமான் இசையமைக்கும் வாகா படத்தில் இதயத்தை உருக்கும் காதல் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி – மஞ்சிமா மோகன் ஜோடி சேரும் புதிய படத்தின் எல்லாப் பாடல்களையும் இமான் இசையில் எழுதுகிறார்.
இளைய தலைமுறையின் வாழ்வியல் மாறுதலுக்கேற்பப் புதிய மொழிநடையை உருவாக்கி வருவதாகக் கவிஞர் வைரமுத்து கூறினார்.
எதிர்காலத்தில் பாடல்களே இல்லாத படங்கள் வருமா என்ற கேள்விக்கு “பாடல்கள் இல்லாத படங்களைத் தயாரிக்க முடியும் பாடல்கள் இல்லாத வாழ்க்கையைத் தயாரிக்க முடியுமா?” என்றார் கவிஞர் வைரமுத்து.
தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று அறிவித்தார்.
அதன்படி, அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதியும் நடைபெறும்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 6 கட்டங்களாக நடைபெறும். ஏப்ரல் 4ம் தேதி மற்றும் ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 21ம் தேதியும், ஏப்ரல் 25ம் தேதியும், மே 5ம் தேதி கடைசி கட்டத் தேர்தல் நடைபெறும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி முடிவடையும். ஏப்ரல் 30-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மே 2-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கேரளா சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறும். வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி முடிவடையும். ஏப்ரல் 30-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மே 2-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறும் கடைசி நாள். மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
நோட்டா’வுக்கு தனி சின்னம் வழங்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். பணப்பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் உடன் நடமாடும், பறக்கும் படைகள் அமைக்கப்படும்.
தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல்: தேதியை அறிவித்தது ஆணையம்
புதுதில்லி:
தமிழகம், கேரளா, புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.
தமிழக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
அதன்படி,
தமிழகத்துக்கு ஒரு கட்டமாக தேர்தல்
வேட்பு மனு தாக்கல்: 22-4-16
வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்:29-4-16
வேட்பு மனு பரிசீலனை:30-4-16
வேட்பு மனுக்களை திரும்ப பெற இறுதி நாள்:2-5-16
தேர்தல் நாள்: 16-5-16
வாக்கு எண்ணிக்கை 19-5-16
தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் தமிழகத்தில் மே 22ம் தேதியுடனும், அசாமில் ஜூன் 5ம் தேதியுடனும், கேரளாவில் மே 31ம் தேதியுடனும், புதுச்சேரியில் ஜூன் 02ம் தேதியுடனும், மேற்குவங்கத்தில் மே 29ம் தேதியுடனும் நிறைவடைகிறது. இந்த மாநிலங்களில் தமிழக சட்டசபையின் பதவி காலமே முதலில் முடிவடைகிறது. இதனால் மே 22ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்து, முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக தமிழகத்தை அடிப்படையாக வைத்தே தேர்தல் கமிஷன் தேர்தல் தேதி அட்டவணையை வகுத்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படைகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்வினை, சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
இன்று தொடங்கும் இந்தத் தேர்வு, ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. வழக்கம் போல், வினாத் தாளை படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன.
தேர்வுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 2400 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார விநியோகம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 4000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கையால் சாப்பிட வாங்க!
கையால் சாப்பிட வாங்க!

நன்றி: கூகுள்
இப்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் கையால் சாப்பிடுவது பத்தாம்பசலித்தனம், பழங்கால வழக்கம், ஆரோக்கிய குறைச்சல், நாகரீகமில்லாத செயல் என்று கருதப் படுகிறது. ஆனால் கையால் சாப்பிடும் பழக்கம் நம் உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்திற்கும், ஆன்மாவிற்கும் வலுவூட்டும் என்கிறது ஒரு பழைய சொல்வழக்கு. இப்போது பல வீடுகளில் கையால் சாப்பிடுவதைத் தவிர்த்து ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள்.
ஏன் நம் முந்தைய தலைமுறை கையால் சாப்பிட்டு வந்தார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆயுர்வேதத்திலிருந்து இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. வேத காலத்து மக்களுக்கு நம் கைகளில் இருக்கும் வல்லமை தெரிந்திருந்தது.
கைகளினால் பல்வேறு முத்திரைகள் காண்பிக்கும் பழக்கம் பரத நாட்டியத்தில் உண்டு. அதேபோல தியானம் செய்யும்போதும் விரல்களை மடக்கியும், நீட்டியும் வேறு வேறு விதமான முத்திரைகளுடன் அமருவது வழக்கம். இது போன்ற முத்திரைகளினால், அவற்றில் இருக்கும் நன்மைகளை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் கையினால் சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம்.
நமது செயல்களுக்கு கைகள் தான் மிகச்சிறந்த உறுப்பு. வேதத்தில் வரும் ஒரு இறைவணக்கம் இதை சொல்லுகிறது. காலையில் எழுந்தவுடன் ‘கர தரிசனம்’ செய்ய வேண்டும். அப்போது கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.
‘கராக்ரே வசதே லக்ஷ்மி; கர மூலே சரஸ்வதி; கர மத்யே து கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’
‘நமது கைகளில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். கைகளின் மூலையில் சரஸ்வதி தேவி; கைகளின் நடுவில் கோவிந்தன் இருக்கிறான். இதை ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே சொல்ல வேண்டும். அன்றைய நாள் நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஸ்லோகம் தருகிறது. நம் கைகள், கால்களின் வழியாகத்தான் பஞ்சபூதங்களும் நம் உடம்பில் நுழைகின்றனவாம். ஒவ்வொரு விரலும் இந்த ஐம்பூதங்களின் நீட்சிகள் என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது.
நமது கட்டை விரல் அக்னி. சின்னக் குழந்தைகள் விரல் சூப்புவதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களால் உடல்ரீதியான செயல்கள் செய்ய முடியாத போது, உண்ட உணவு செரிக்க இயற்கை கட்டை விரலை சூப்புவதன் மூலம் அவர்களின் செரிமானத்திற்கு இப்படி உதவுகிறது.
ஆட்காட்டி விரல் வாயு. நடுவிரல் ஆகாசம். (இதையே ஈதர் என்கிறார்கள். அதாவது மனித உடலில் உள்ள செல்களின் நடுவில் இருக்கும் வெற்றிடங்கள்.) மோதிர விரல் ப்ருத்வி (பூமி). சுண்டு விரல் நீர்.
ஆக ஒவ்வொரு விரலும் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. விரல்களிலேயே செரிமானம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. கையால் உணவை அள்ளி எடுக்கும்போது ஐம்பூதங்களின் ஆற்றலும் தூண்டப் படுகிறது. அக்னி செரிமான நொதிகளை சுரக்க உதவுகிறது. செரிமானம் தூண்டப் படுவதுடன், உண்ணும் உணவின் சுவை, தன்மை, வாசனை முதலிய அம்சங்களும் அதிகரித்து உணவை நன்கு அனுபவித்து ருசித்து உண்ணமுடிகிறது.
நம் வீட்டில் அந்தக் காலத்துப் பெரியவர்கள் உணவுப் பொருட்களை அளக்க ஆழாக்கு, கரண்டி அல்லது ஸ்பூன் பயன்படுத்த மாட்டார்கள். ‘ஒரு பிடி அரிசி, ஒரு சிட்டிகை உப்பு, சின்ன கோலி அளவு புளி’ என்று கை விரல்களாலேயே அளவு காண்பிப்பார்கள். புட்டு மாவிற்கு பதம் சொல்லும்போது கையால் பிடித்தல் பிடிபடவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும் என்பார்கள். வெல்லப்பாகுப் பதமும் இரண்டு விரல்களால் கரைந்த வெல்லத்தைத் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம், இரண்டு கம்பிப் பதம் என்பார்கள்.
கெட்டியான உணவுப் பொருளோ, அல்லது திரவப் பொருட்களோ அவற்றை அளக்க, 6 விதமான கையளவுகள் இருக்கின்றன.
சின்ன வயதில் அம்மா கையால் கலந்து நம் கையில் சாதம் போடுவாள். அதில் சின்னதாக ஒரு குழி செய்து அதற்குள் குழம்பு விட்டுக் கொண்டு சாப்பிடுவோமே, அந்த ருசி இன்னும் நாவில் இனிப்பதற்குக் காரணம் அம்மாவின் கை ருசி தானே?
கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் சாப்பிடுவோமே, நினைவிருக்கிறதா? கல்சட்டியில் இரவு நீர் ஊற்றப்பட்ட சாதத்தில் காலையில் உப்பு, மிளகாய், துளி பெருங்காயம் நுணுக்கிப் போட்டு நீர் மோர் ஊற்றி பாட்டி தரும் ஆரோக்கிய பானம் சாதேர்த்தம் (சாதமும் நீரும் கலந்த திரவம்) அது நமது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதையும் குளிரப் பண்ணுமே, அதற்குக் காரணம் உப்பு மிளகாய் பெருங்காயம் மட்டுமா? இல்லையே, பாட்டியின் கை மணமும் அதில் சேர்ந்திருப்பதால் தானே?
இட்லிக்கு அரைத்து வைக்கும்போது என்னதான் அரவை இயந்திரம் அரைத்தாலும் கடைசியில் நம் கைகளால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலந்து வைக்கிறோம், இல்லையா? அடுத்தநாள் காலையில் பொங்கி இருக்கும் மாவைப் பார்த்து நம் மனமும் பொங்கி, இன்றைக்கு மல்லிகைப் பூ போல இட்லி என்று பூரிக்கிறோமே!
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நீரை சிறிது சிறிதாக கொட்டி, மாவை கைகளால் நன்றாக அளைந்து, உருட்டி பிசையுங்கள். நீங்கள் அதிக நேரம் பிசையப் பிசைய மிக மிக மிருதுவான சப்பாத்திகள் வரும். முக்கியமாக ஃபூல்கா சப்பாத்திக்கு கையால்தான் கலக்க வேண்டும். அப்போதுதான் நெருப்பில் நேரிடையாக சப்பாத்திகளைப் போடும்போது அவை உப்பும்.
பழைய விஷயங்கள் என்றாலே ஒரு மாதிரி பார்த்து ‘இப்போ இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க, யாராவது கைகளை பயன்படுத்தி ஏதாவது செய்கிறார்களா சொல்லுங்க’ என்பவர்களுக்கு:
6 விதமான கையளவுகள் பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடியபோது ஒரு காணொளி கிடைத்தது.
அதில் அரிசோனா மாநில பல்கலைகழக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் பணி புரியும் திருமதி சிமின் லேவின்சன் என்ற பெண்மணி நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை ஒருவேளைக்கு எந்த அளவில் சாப்பிடுவது என்பதை நமது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டு விளக்கினார். ரொம்பவும் வியப்பாக இருந்தது.
மாவுப்பொருள்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்? கை விரல்களை மடக்கிக் காட்டுகிறார்: ஒரு கைப்பிடி;
பழங்கள்: கையை விரித்து ஒரு கையளவு;
பச்சை காய்கறி, கீரைவகைகள் இரண்டு கைகளையும் விரித்து சேர்த்து வைத்து இரண்டு கையளவு;
கொழுப்பு: (வெண்ணை, நெய், எண்ணெய்) கட்டை விரலின் நுனியிலிருந்து கட்டைவிரலின் பாதி வரை;
சீஸ்: முழு கட்டைவிரலின் அளவு – ப்ரோடீன் இருப்பதால்.
திரவங்கள்: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் விரித்து ஒரு டம்ளர் அளவு என்கிறார்.
காணொளி இணைப்பு: https://usatoday30.usatoday.com/video/measuring-food-with-the-palm-of-your-hand/2308102638001
பாருங்கள், இந்த விஷயங்களை நம் முன்னோர்கள் என்றைக்கோ செயல் படுத்தி இருக்கிறார்கள்.
பழைய விஷயங்கள் இவற்றில் என்ன இருக்கின்றன என நாம் ஒதுக்கும் பலவற்றில் நிறைய விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மறைந்து இருக்கின்றன. இவற்றை அறிந்து கொண்டு நம் வாழ்வை சீராக அமைத்துக் கொள்வோம்.
நடுரோட்டில் கட்டு புரண்டு சண்டை போட்ட பிரபலங்கள்!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் நடந்த ஒரு சமீபத்திய நிகழ்வு அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பசுமை பொங்கும், அமைதியான இந்த ஊரில் சமீபத்தில் ஒரு நாள் நடு ரோட்டில் ஒரு அழகான இளம் பெண்ணும், இளைஞனும் மோதிக் கொண்டார்கள்.
முதலில் வாய் சண்டையாக இருந்த இந்த சண்டை போக போக உக்கிரமாகி, அந்த இடத்தையே ஒரு போர் களமாக்கி விட்டது. எதோ சின்ன பசங்க சண்ட போட்டுக்குறாங்க என்று அலட்சியமாக இருந்த ஊர் மக்கள், சண்டையின் வீரியத்தை பார்த்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என்றுக் கூட யோசிக்க துவங்கினர்.
அந்த நேரத்தில் ‘Cut’ என்று வந்த வார்த்தையை கேட்டபிறகு தான், படப்பிடிப்பு என்று அறிந்து அவர்கள் ஆசுவாசப் படுத்திக் கொண்டனர். நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில், புதிய இயக்குனர் ஆர் கே இயக்கும் ‘உன்னோடு கா’ படத்தில் தான் இந்த சம்பவம் அடைந்தது. கதாநாயகனாக நெடுஞ்சாலை, மற்றும் ‘மாயா’ ஆகியப் படங்களில் நடித்த ஆரி நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ‘டார்லிங்’ 2 கதாநாயகி மாயா.
நடிகர் ஆரி இப்படம் பற்றி கூறும்போது, ‘இந்த அருமையான ஊரில் படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு வழங்கிய அபிராமி ராமநாதன் சாருக்கு பெரிய நன்றி. பூலாங்குறிச்சி என்கிற இந்த அழகு கொஞ்சும் ஊர் அவருடைய சொந்த ஊர் ஆகும். இந்த ஊருக்கு அவர் பல நலத் திட்டங்களை புரிந்து இருக்கிறார். இந்த ஊரையே அவர் தத்து எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவருக்கு ஊரார் கொடுக்கும் மரியாதையில் தெரிகிறது.
குடும்பத்தோடு படம் பார்க்க வருவோர் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு அருமையான படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபு சாரும் ஊர்வசி அம்மாவும் மிக பிரமாதமாக நடித்து இருக்கிறார்கள். அவர்களது நடிப்பு ரசிகர்களின் விலா நோக சிரிக்க வைக்கும் என்பது நிச்சயம். எங்கள் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் பிரபு சார் தன்னுடைய செலவில் மிகப் பெரிய விருந்து வைத்தார். படப்பிடிப்பு நடந்த நாட்கள் அத்தனையும் இனிமையான நாட்கள். ‘உன்னோடு கா’ எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இனிமையான படமாக இருக்கும் என்பது நிச்சயம்’ என்றார் ஆரி.
நடிகர் சரத்குமார் மீது ஊழல் புகார்
தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் மீது போலீசில் பலகோடி ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமார் 1.65 கோடி ஊழல் செய்துள்ளதாக நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் விஷால், பூச்சி முருகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

