Home Blog Page 5791

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு லோக்சபாவில் பிரதமர் மோடி பதில்

பாராளுமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி,

இந்தியாவின் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டு உரையாற்றியதற்கு எனது நன்றி. ஜனாதிபதியின் ஆலோசனைகளை இந்த அரசு கருத்தில் கொள்கிறது. பல்வேறு விவகாரங்களில் இந்த அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பாரளுமன்றத்தை முடக்குவது என்பது அனைவருக்கும் இழைப்பை ஏற்படுத்துவதாகும்.
*மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். சமீப கால நிகழ்வுகள் கவலை அளிக்கிறது என்றார் .

விஜய் மல்லையா மீது யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை

வங்கிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாத விஜய் மால்யாவின் கிங் பிஷர் நிறுவனத்தின் மீது யாரும் புகார் அளிக்க முன் வரவில்லை என சிபிஐ இயக்குனர் அனில் சின்ஹா கூறியுள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக புகார் அளிக்க எந்த வங்கியும் முன்வரவில்லை என்று கூறிய அனில் சின்ஹா, 2015ம் ஆண்டில் சிபிஐ, தானாக முன் வந்து அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்ததாக கூறினார். இதுபோன்ற செயல்பாடுகளால் வங்கிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2009ம் ஆண்டில், 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்திய வங்கிகளின் வாராக்கடன், தற்போது மூன்று லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த சின்ஹா, இதுகுறித்த விசாரணையை தாமதப்படுத்தினால், கடன் செலுத்தத் தவறியோர், பணத்துடன் நாட்டை விட்டுத் தப்பித்து விடுவார்கள் என்றும் எச்சரித்தார்.

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜவடேகர் சென்னை வருகை

தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.வின் பிரகாஷ் ஜவடேகர், சென்னை வந்தார். அவர் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்துடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இதையடுத்து விஜயகாந்தை அவர் மீண்டும் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பயணமாகிறார் போப் முதலாம் பிரான்சிஸ்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை ஏற்று போப் முதலாம் பிரான்சிஸ், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் போப் முதலாம் பிரான்சிஸ் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்புக்கு வாடிகன் சிட்டி பதில் அனுப்பியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடத்த தயார்: ராஜேஷ் லக்கானி

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில், சட்டமன்றத் தேர்தல் நடத்த தயார் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், வாக்களிப்பதன் அவசியம், வாக்களிக்கும் முறை குறித்து நாடக வடிவில் செய்முறை விளக்கம் காண்பித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில், தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்த தயார் எனவும், தமிழக தேர்தலுக்காக சமூக வலைதளங்களில் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் லக்கானி குறிப்பிட்டார்.

மார்டின் குரோவ் இறப்புக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்

நியூசிலாந்து அணியின் முன்னார் வீரர் மார்டின் குரோவ்(53) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். 1980 முதல் 1996 வரை நியூசி., அணியில் இடம்பெற்றிருந்த குரோவ், தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார்.

நியூசிலாந்து அணியின் முன்னார் வீரர் மார்டின் குரோவ் இறப்புக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் கேரளாவில் அறிமுகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் கேரளாவில் நேற்று ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி உடல் உறுப்பு மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தைகள்

தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. பெரும்பாலான பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதும் பங்குச் சந்தைகளின் உயர்விற்கு துணை புரிந்துள்ளன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 183.31 புள்ளிகள் உயர்ந்து 24,426.29 புள்ளிகளாகவும், நிப்டி 52.40 புள்ளிகள் அதிகரித்து 7421.25 புள்ளிகளாகவும் உள்ளன. ஹிண்டல்கோ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பிஎன்பி, ஐசிஐசிஐ வங்கி, கெயில் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் லாபம் ஈட்டி உள்ளன.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் முடிவு தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலை கருத்தில் கொண்டே பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு முடிவு: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க முயற்சி எடுப்பதாக தமிழக அரசு காட்டிக்கொள்வது தேர்தலை மனதில்கொண்டு வெளிப்படும் அறிவிப்பு என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் திமுக தலையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நடைபெற்றது.

இந்த நேர்காணலுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் திமுக கூட்டணி உறுதி செய்யப்படும் என்றார். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.