Home Blog Page 5792

இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை

- 2026

ஒன் வே, நோ எண்ட்ரி, நோ ஃப்ரீ லெப்ட், சிக்னலை மதிக்காமல் கடப்பது… இவற்றில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், தவறு செய்பவர்களை தகுந்த நேரத்தில் பிடித்து அபராதம் விதிப்பது என்பதை விட,
தவறு செய்யத் தூண்டி, வண்டியோட்டியின் கண்ணில் படாதவாறு இடது புறம் மரத்துக்குப் பின்னோ, தெருவிளக்கு மின் பெட்டிக்குப் பின்னோ மறைந்து நின்று… திடீரென இடப்புறம் திரும்பி வருபவரை கப் என்று பிடித்து, கறந்து விடுவது… போக்குவரத்து போலீஸாரின் இயல்பு. அவர்கள் என்றுமே, தவறு செய்யாமல் தடுக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் கண்ணில் படும் வகையில் நிற்பதில்லை!
இது கிட்டத்தட்ட ஸ்டிங் ஆபரேஷன் போல்தான்! அதாவது பொறி வைத்துப் பிடிப்பது.
ஏற்கெனவே சபல புத்தியுள்ள ஒருவனை, விதி மீற வைத்து, அபராதம் கறக்கும் ஒரு செயலைச் செய்வது அறமா?
இது போன்றதற்கான விடையை, ஊடகங்களின் ஸ்டிங் ஆபரேஷனை வைத்து  நீதிபதி ராமசுப்ரமணியன் சொன்னது ரசிக்கும் படி இருந்தது. நல்ல தகவலாகவும் இருந்தது.
எங்கே என்று கேட்கிறீர்களா?
***
தினமணி அறக்கட்டளையின் சார்பில், மார்ச் 1 ஆம் நாள், ஏ.என்.எஸ்., நினைவுச் சொற்பொழிவு என்றும், முதல் சொற்பொழிவாக நீதிபதி ராமசுப்ரமணியன் சிறப்புச் சொற்பொழிவு என்றும் பார்த்தேன். தலைப்பு இன்னும் தூண்டுதலாக அமைந்துவிட்டது. “இதழியல் அறம்” என்பதுதான் அது.
நீதிபதி ராமசுப்ரமணியன் மீது பெரும் மரியாதை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் உண்டு எனக்கு! நேரில் சந்தித்து அளவளாவிய தன்மையால் மட்டுமல்ல… எவர் ஒருவர் பசுவை வைத்து பூஜை செய்து நியமப்படி நடந்து கொள்கிறாரோ… அவர்  காமதேனுவின் அம்சம் ஆகிறார்!
நீதிபதி ராமசுப்ரமணியன் தமது இல்லத்தில் இப்போதும் பசு மாடு வைத்து, கோ பூஜை முறையாகச் செய்து, தர்ம நெறிப்படி வாழ்வை நகர்த்திச் செல்பவர். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு! மேலும், நல்ல பேச்சுத் தமிழ் நடை கைவரப் பெற்றவர். கெக்கே பிக்கே நகைச்சுவை என மலிவான சரக்கை வலுக்கட்டாயமாகத் திணிக்காமல், இயல்பான கௌரவமான நகைச்சுவையைக் கையாளக் கூடியவர். அந்த எண்ணத்தில் ஏ.என்.எஸ்ஸுக்காகவும், தினமணிக்காகவும், நீதிபதியாருக்காகவும் இந்த நிகழ்ச்சிக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வராவிட்டாலும், தினமணியின் பொது அழைப்பு காரணத்தால், தினமணி வாசகனாகவே இந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்!
***
நிகழ்ச்சியில் பேசிய அனைவரின் பேச்சுமான, ஓரளவு முழுமையான ரிப்போர்ட்… தினமணியில் 2ம் பக்கம் முழுமைக்கும் பிரசுரமாகியிருக்கிறது. பார்த்துப் படித்துக் கொள்க!
நீதிபதியார் பேசியவை வழக்கம்போல் ரசிக்கத் தக்கனவாய் அமைந்திருந்தது.
அவர் பேசியவற்றில் ஒரு கருத்து…
***
அறம் விலகக் காரணம்..?
இதழ்களின் எண்ணிக்கை பெருகியது; (இதழ்கள் பெருகிய அளவுக்கு வாசகர்கள் பெருகாதது); இதழ்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை! முந்தித் தருதலில் குளறுபடி; கிடைத்தது மலினமாக இருந்தாலும் காசுக்காக செய்தியாக்குவது! தவிர்க்க இயலாத போட்டியால் பொறிவைத்தல் செய்திச் செயல்களில் ஈடுபடுவது….
– இப்படி சில காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
அடுத்தது… அவரின் உரைத் தொகுப்பில் கடைசியாக இடம்பெற்ற முத்தாய்ப்பு வார்த்தைகள்!

ஓர் இதழ், அறத்தில் பால் நிற்கிறதா அல்லது அப்பால் தள்ளிப் போகிறதா என்பதை, அந்த இதழ் வெளியிடும் செய்திகள், அதில் இடம்பெறும் கட்டுரைகளின் உண்மைத் தன்மை, பொதுநலன் மட்டுமே அதில் பொதிந்துள்ளதா அல்லது தங்களுடைய சுழற்சி (சர்குலேஷன்), மலிவான பரபரப்பு விற்பனையை மையமாகக் கொண்டுள்ளதா என்ற தன்மை, (சுயவிளம்பரம், சுயதம்பட்டம் கொண்டு விளங்கும் தன்மை) இவற்றுக்கான விடையில்தான் இதழியல் அறத்தின் உயிர் நாடி உள்ளது.
***
இப்படியாக,
இந்த உயிர்நாடியை உயர் நாடித் துடிப்பாய்க் கொண்டு செயல்பட்டதால்தான், ஏ.என்.எஸ் என்ற ஒரு சித்தாந்தத்தை இன்றளவும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்த உயர் தனிச் சிந்தனை!

இருக்கும்போது, ஜால்ரா போட்டு, அண்ணன் வாழ்க, ஐயா வாழ்க கோஷம் போடுவதெல்லாம் அவ்வப்போதைக்கு காதுக்கு குளிராகவும் மனதுக்கு போதையாகவும் இருக்கும்… ஆனால் காலம் கடந்து நிற்பதுதான் பிறப்பின் பயன்.
அந்தப் பிறவிப் பயனை அடைந்த ஏ.என்.எஸ் போன்றவர்கள், நமக்கு வழிகாட்டிகளாய் அமையட்டும்!

இதழியல் அறம் குறித்த உரை!

தேர்தலில் அரசியல் ஆதாயம் அடையவே அதிமுக அரசாங்கம் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாக வைகோ, திருமாவளவன் குற்றசாட்டு !

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.

கொலையாளிகள் 7 பேரை விடுதலை முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஞானதேசிகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

நளினி உள்ளிட் ட கொலையாளிகள் 7 பேரும் ஏற்கனவே தங்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர்.

கொலையாளிகள் 7 பேரும் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தவுடன் ஏன் திமுக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை ? என வைகோ, திருமாவளவன் ஆகியோர் வினா எழுப்பியுள்ளனர்.

மேலும் தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அரசாங்கம் அரசியல் ஆதாயம் அடைய ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தற்போது முடிவு எடுத்து இருக்கலாம் என வைகோ, திருமாவளவன் ஆகியோர் குற்றம்சாட்டி கருத்து கூறியுள்ளனர்

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு !

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.

நளினி உள்ளிட் ட கொலையாளிகள் 7 பேரும் ஏற்கனவே தங்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர். தமிழக அரசு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கதது .

இந்த நிலையில் சிறையில் உள்ள கொலையாளிகள் 7 பேரின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளது.

கொலையாளிகள் 7 பேரை விடுதலை முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஞானதேசிகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

சந்தானத்திற்கு ஜோடியாகும் மராத்திய நாயகி

தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும், அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி theatre மூலம் அறிமுகமாகி, தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புதுமுக நாயகி வைபவி ஷண்டிலியா.

கெனன்யா films தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார். ஹீரோயின் பற்றி இயக்குனர் பால்கி கூறும்போது, ‘வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதாநாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம்.

அவர் பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர். அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார்’ என்று தெரிவித்தார் இயக்குனர் பால்கி.

சின்னத்திரை தொழிலாளர்களுக்கு உதிய உயர்வு அறிவிப்பு!

சின்னதிரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் பெப்ஸி (FEFSI) உடனான “ஊதிய உயர்வு“ சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜய குமார், செயலாளர் குஷ்பூ, பொருளாளர் டி.ஆர்.பாலேஷ்வர் பெப்ஸி தலைவர் சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர்கள் ஊடகங்களிடம் பேசியதாவது :-

வெகு நாட்கள் பேச்சில் இருந்த ஊதிய உயர்வு சார்ந்த பிரச்சனைக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வுகாணப்பட்டது. சின்னத்திரை மிகவும் நலிந்து கொண்டு இருக்கிறது. இன்று தயாரிப்பாளர் சங்கமும், பெப்ஸியும் கலந்து பேசி ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தத்தில் கை எழுத்துதிட்டுள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டுள்ளோம். இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் யாதெனில் 27.5% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை 27.5% ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது இது மூன்று வருடங்களுக்கு தொடரும். இன்று முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஏழு பிரிவை சேர்ந்த 5௦௦௦ தொழிலாளர்களுக்கும் மேல் பயனடைவார்கள் என தெரிவித்தனர்.

பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும்: உள்துறை முன்னாள் துணைச் செயலர் திடுக் தகவல்

புது தில்லி:

இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் விவகாரத்தில், இரண்டாவதாகத் தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும் என்று, உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணை செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.

குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறப்படும் மும்பையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான், ஒரு ‘தற்கொலைப்படை பயங்கரவாதி’ என்று அமெரிக்காவில் இருந்தபடி மும்பை நீதிமன்றத்தில் விடியோ கான்பிரன்ஸிங்கில் வாக்குமூலம் அளித்த டேவிட் ஹெட்லி கூறி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்து, இஷ்ரத் ஜகான் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்தரத்தை, அப்போதைய காங்கிரஸ் அரசு திருத்தி, இரண்டாவது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.பிள்ளை கடந்த வாரம் கூறியிருந்தார். இது, அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி நேற்று அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவலில் இஷ்ரத் ஜகான் வழக்கில், திருத்தப்பட்ட, இரண்டாவது மனுவை தாக்கல் செய்யுமாறு அப்போதைய காங்கிரஸ் அரசு எனக்கு உத்தரவிட்டது. அந்த நிர்ப்பந்தத்தால், அந்த மனுவில் நான் கையெழுத்திட்டு தாக்கல் செய்தேன். அந்த மனுவை நானும் தயாரிக்கவில்லை, அப்போதைய உள்துறை செயலாளரும் தயாரிக்கவில்லை. பிறகு யார் தயாரித்திருப்பார் என்பது உங்களுக்கே தெரியும். இதில் அரசியல் தலையீடு இருந்தது என்று நம்ப இடமிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இத்தகைய பரபரப்பான திருப்பங்களால், போலி என்கவுண்டர் என்று போலியாக ஒரு நிகழ்வை உருவாக்கி செய்தியாக்கிய விவகாரத்தில், இப்போது பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், இஷ்ரத் ஜஹான் வழக்கில் பிரமாணப் பத்திரத்தைத் திருத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சிதம்பரம், முதல் பிரமாணப் பத்திரத்தில் தவறு இருப்பதாக தனக்குத் தெரியவந்த பிறகு, உள்துறைச் செயலர், உளவுத்துறையின் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே இரண்டாவது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அப்போது உள்துறைச் செயலராக இருந்த ஜி.கே.பிள்ளை தற்போது இந்த விஷயத்தில் தன்னை விலக்கிக் கொள்வது அதிருப்தி அளிப்பதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

வாய்ப்பளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: குஷ்பு

சென்னை:

வாய்ப்பளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையாக இருந்து அரசியல்வாதி ஆனவரும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாய்ப்பு கொடுத்தால் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். கூட்டணி தொடர்பாக நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார். ஐந்து ஆண்டுகளில் செய்யாததை தேர்தலுக்காக தமிழக அரசு செய்து வருகிறது. திசை திருப்பவே கார்த்தி சிதம்பரத்தின் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

யானை தந்தம் பறிமுதல் விவகாரத்தில் நடிகர் மோகன்லால் மீதான வழக்கு தள்ளுபடி

கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு வனத்துறையினர் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், மோகன்லால் யானை தந்தங்களை வைத்திருப்பதில் தவறு இல்லை என்று அரசு, நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கமால் பாஷா, மோகன்லாலுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.