Home Blog Page 5793

ரயில் டிக்கெட்டுகளில் பார் கோடிங் சிஸ்டம் இன்று முதல் அறிமுகம்

இதுகுறித்து  ரயில்வே தரப்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், 

புது டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள 9 டிக்கெட் கவுன்ட்டர்களில் பார் கோடிங் உள்ள ரயில் டிக்கெட்டுகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. இந்த புதிய முறையின் மூலம் ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை சமூக விரோதிகள் தாங்களாவே போலியாக தயாரித்து பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது.

இதனால் டிக்கெட்டுகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்பட்டு ரயில்வேயில் அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க இந்த சிஸ்டம் உதவுகிறது. படிப்படியாக நாடு முழுவதிலுமுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ‘பார் கோடிங்’ டிக்கெட் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் மருந்துகளை சுருட்டும் மருந்தாளுநர்கள்!

 

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கச் சொல்லும் மருந்துகளை மருந்தாளுனர்கள் முறையாகக் கொடுக்காமல் சுருட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் இலவச மருத்துவ சேவை திட்டம்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையை பொருத்தமட்டில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து பயன் பெறுகின்றனர்.

சில நிரந்தர வெளி நோயாளிகளுக்கு ஏழு நாட்கள், பதினைந்து நாட்கள், முப்பது நாட்களுக்கு ஒருமுறை என்கிற முறையில் மருந்துகளை வழங்க மருந்தாளுனர்களுக்கு அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

சில வெளி நோயாளிகளுக்கு மருந்து அளிக்க மருத்துவர்கள் உத்தரவிட்ட சீட்டினை அந்த மருத்துவமனை மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்களிடம் கொடுத்து மருந்தினை கேட்டால் நான்கு நாட்களுக்கு மட்டுமே ( மருந்து குறைவாக சரியான எண்ணிக்கை இல்லாமல் ) கொடுத்து விரட்டி விடுகின்றனராம்.

மருத்துவர்கள் பரிந்துரை செய்த நாட்களுக்கு ஏன் மருந்தினை கொடுக்க மறுக்கிறீர்கள்? என மருந்தாளுனர்களிடம் நோயாளிகள் கேட்டால் ஓசியில சிகிச்சை பெற்று மருந்து வாங்குகிற நீ எல்லாம் என்ன சட்டம் பேசுகிறாயா? என தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனராம்.

ஒரு சிலரிடம் நான்கு நாட்களுக்கு மேல் மருந்து கொடுக்கக் கூடாது என சட்டம் இருப்பதாக தெரிவித்தும் உள்ளனராம்.

அவர்கள் மீண்டும் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சென்று மருந்தாளுனர்கள் கூறியதைக் கூறி மருந்து வழங்க மறுக்கின்றனர் என முறையிட்டனராம்.

அதற்கு “மருத்துவர்களாகிய நாங்கள் நோயாளிக்கு எத்தனை நாட்களுக்கு மருந்து கொடுக்க சொல்கிறோமோ அதை சரியான எண்ணிக்கையில் கொடுப்பது மட்டுமே மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்களின் வேலை. ஆனால் மருந்தாளுனர்கள் எப்போதுமே நாங்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை நோயாளிக்கு கொடுப்பது இல்லை. அவர்கள் எப்பவுமே அப்படித்தான் செய்வார்கள். நாங்கள் என்ன செய்வது?” என மருத்துவர்களும் புலம்பினராம்.

நான்கு நாட்களுக்கு மேல் மருந்து கொடுக்கக் கூடாது என சட்டம் இருப்பதாக மருந்தாளுனர்கள் கூறும் நிலையில் மருத்துவர்கள் நோயாளிக்கு நான்கு நாட்களுக்கு மேல் மருந்து அளிக்க ஏன் சீட்டினை கொடுக்கின்றனர்?

நோயாளிக்கு நான்கு நாட்களுக்கு மேல் மருந்து அளிக்க மருத்துவர்கள் சீட்டினை எழுதி கொடுக்கக் கூடாது என ஏன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் தலைவர் உத்தரவு போடவில்லை?

மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்து அளிக்க உத்தரவிட்ட சீட்டினை மருந்தாளுனர்கள் பெற்றுக்கொண்டு மருந்து கொடுத்ததாக கணக்கு எழுதி மருந்தை குறைவாக கொடுத்தால் மருந்தாளுனர்கள் சுருட்டும் மருந்துகள் எங்கே செல்கிறது ? எனும் கேள்வியே அனைவர் மத்தியிலும் கட்டாயம் எழும்!

மருந்தாளுனர்களால் சுருட்டப்படும் மருந்துகள் எங்கே செல்கிறது என்பது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் தலைவருக்கு தெரியாமலா இருக்கப் போகிறது?

மக்களின் வரிபணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனையில் இன்னும் என்ன என்ன முறைகேடுகள் நடக்கிறதோ என்கிறது மதுரை மாநகரம்.

எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்!

காட்பாடி-யில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 10 பேர் சிக்கினர்:10,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு வேலூர் சாலை, சித்தூர் பஸ் நிறுத்தங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த மினி வேனை போலீசார் சோதனையிட்டனர். அதில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது

இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சதிக்கு எதிராக போரிட வேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

‘இந்துக்களுக்கு எதிராக சதி நடக்கிறது’ என பாரதீய ஜனதா கட்சியின்  மத்திய அமைச்சர் ராம் சங்கர் கதாரியாவும், பாஜ எம்பி பாபு லாலும் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களால் கொல்லப்பட்ட விஎச்பி தலைவர் அருண் மஹருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் கடந்த ஞாயிறு அன்று நடந்தது. இதில் பேசிய மத்திய அமைச்சர் ராம் சங்கர் கதாரியா, ‘இந்து சமூகத்துக்கு எதிராக சதி நடக்கிறது. நாம் எச்சரிக்கையாக வேண்டும். இதை எதிர்த்து போரிடாவிட்டால் இன்று ஒரு அருண், நாளை மற்றொரு அருண் என நடக்கும்’ என்று கூறியுள்ளார். 

மத்திய அரசை கண்டித்து இன்று முதல் 3 நாட்கள் நகைக்கடைகளை அடைத்த தமிழக வியாபாரிகள் !

 

தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் விரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரூ.2 லட்சத்துக்கும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு நகை வாங்கும்போது, பான்கார்டு கட்டாயம் என்பதை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரி தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு அடைக்கப்படுகிறது. இந்த வரியை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடை அடைப்பு சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உற்பத்தி செய்யப்படும் தங்கத்தின் மீது ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி அறிவித்து இருக்கிறார். இந்த வரி விதிக்கப்படுவதால், நகை வாங்கும் நுகர்வோருக்கு, ஒரு சவரனுக்கு ரூ.250 கூடுதலாக சுமை ஏற்படும்.

மேலும், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதற்குரிய ஆவணங்களை சரியாக பராமரிக்கவேண்டும். ஏற்கனவே உள்ள வேலைப்பளுவில் மிக அதிகமான சுமையாக இது அமையும். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை சார்ந்த தொழிற்கூடங்கள், கைவினை கலைஞர்கள் இன்று(புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கடைகளை அடைத்து, கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருக்கிறோம்.

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான நகைக்கடைகள் அடைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக்கடைகள் மற்றும் அதனை சார்ந்த 12 லட்சம் தொழிலாளர்கள் இந்த கடை அடைப்பில் பங்கேற்க உள்ளனர்.

இதனால், அரசுக்கு ரூ.1,000 கோடி வர்த்தக மற்றும் வருவாய் இழப்பு ஏற்படும். இதை ஒரு அடையாள போராட்டமாக தான் செய்கிறோம். தங்க நகைகளுக்கு கலால் வரி ஒரு சதவீதம் விதிப்பதைவிட, தங்கம் இறக்குமதியில் ஒரு சதவீதத்தை ஏற்றி இருக்கலாம்.

ஏற்கனவே தங்கம் இறக்குமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு சதவீதத்தை அதில் ஏற்றி எங்களிடம் இருந்து மத்திய அரசு பெற்றிருக்கலாம். ஆனால் கலால் வரி மூலம் அதை பெறுவதை ஏற்க முடியாது. கலால் வரி சட்டம் மிக கடுமையான சட்டம். இதை சாதாரண தொழில் செய்யும் நிறுவனங்கள் மீது திணிப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக மத்திய அரசு இதை திரும்ப பெற வேண்டும்.

இதே போல், தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்யவும், ரூ.2 லட்சத்துக்கும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு நகை வாங்கும்போது, பான்கார்டு கட்டாயம் என்பதை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரி அனைத்து மாநிலங்களிலும் தங்க நகை நிறுவனங்கள் கடை அடைப்பில் ஈடுபடும் என்று அகில இந்திய ரத்தினக்கல் மற்றும் தங்கநகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தடை ! தடை ! தமிழக அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு விரைவில் தடை !

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வாரம் கடைசியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் தேதி அறிவித்த பிறகு தமிழக அரசால் அறிவிக்கப்படும் எந்த திட்டங்களையும் அறிவிக்க கூடாது என்று விரைவில் தேர்தல் ஆணையம் விரைவில் தடைவிதிக்கவுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.  

புதிய திட்டங்கள், அறிவிப்புகளை முன்தேதியிட்டு வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறை மீறல்களை முற்றிலுமாக தடுக்க அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்த பிறகு அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகளின்படி, எந்தவொரு புதிய திட்டங்களை அறிவிப்பதோ, புதிய அரசாணைகளை வெளியிடுவதோ கூடாது.

ஆனாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஓரிரு நாட்கள் கழித்து, முன்தேதியிட்ட அரசாணைகள் வெளியிடப்படுவதாகவும்; தேர்தல் தேதி வெளியிடப்படுவதற்கு முன்பே அந்த அரசாணைகளை வெளியிட்டது போல் காட்டிக்கொள்வதாகவும், முந்தைய தேர்தல்களின் போது புகார்கள் வந்தன.

இதுபோன்ற புகார்களை தவிர்க்கவேண்டும். இதைத் தவிர்ப்பதற்காக புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் தேதி அறிவிப்பு ஊடகங்களில் வெளியானதும், அரசாணை பதிவேட்டில் பதியப்பட்ட கடைசி அரசாணைக்குக் கீழே ஒரு எல்லைக் கோட்டை சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் போடவேண்டும்.

அந்த கோடு போடப்பட்ட பக்கத்தை அவர் புகைப்படம் எடுக்கவேண்டும். அதை இணைத்து, தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு, ஊடகங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட செய்தி வெளியான 2 மணிநேரத்துக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் ஆவணமாக பதியப்படும். 

அரசாணை தொடர்பாக ஏதாவது புகார்கள் கூறப்பட்டால் அதற்கு உடனே பதிலளிக்க முடியும். மேலும், தவறான குற்றச்சாட்டை கூறுவதும் தவிர்க்கப்படும். அரசுச் செயலாளர்கள் யாரும் தலைமையகத்திற்கு வெளியே இருந்தால், இதற்காக கீழ் நிலை அதிகாரி ஒருவரை நியமிக்கவேண்டும். அவர் மேற்சொன்ன நேரத்துக்குள் அந்த தகவலை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறேன்: நடிகர் யுகேந்திரன்

அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் யுகேந்திரன். சைலண்ட் வில்லனாக நடித்து அப்படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றார். அதை தொடர்ந்து விஜய்யின் யூத், பகவதி உள்ளிட்ட நடித்துள்ளார். சினிமாவில் நல்லது, கெட்டது என அனைத்தும் கற்றுக் கொண்ட யுகேந்திரன். தற்போது நல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்.

பிறப்பிலேயே சினிமா வரம் பெற்று வந்த நான் எனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்க நினைத்தேன். பல நெகட்டிவ் கதாபாத்திரல் நடித்து ஒரு நடிகனாக என்னை நிலைநிறுத்திக் கொண்டேன். ஆனால் சமீபகாலமாக சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது, அதன் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் தமிழ் நாட்டிலும் எனது குடும்பம் சிங்கப்பூரிலும் என இருந்ததுதான் எனக்கு பின்னடைவாக இருந்தது.

அடிக்கடி நான் என் குடும்பத்தை பார்க்க சிங்கப்பூர் சென்றுவிடுவதாகவும் இதனால் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்வதில்லை என்றும் சிலர் வதந்திகளை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் பொய். நான் என் குழந்தைகளின் விருப்பத்துக்காக மட்டுமே சிங்கப்பூரில் தங்க நேர்ந்தது. 2013ம் ஆண்டு ”விழா” என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க துவங்கியதிலிருந்து படத்தில் டப்பிங் பேசி முடிக்கும்வரை நான் சிங்கப்பூருக்கு செல்லவில்லை. படத்தை முடித்து கொடுத்தபின்தான் சென்றேன்.

சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் நான் சிங்கப்பூரிலேயே தங்கிவிட்டேன், அதற்கும் சிலர் இனி யுகேந்திரன் இந்தியா வரமாட்டாராம் என்றெல்லம் கதை கட்டிவிட்டுள்ளார்கள். இதோ நான் என் தமிழ் சினிமாவுடன் மீண்டும் இணைய வந்துவிட்டேன். இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதால் பணத்துக்காக எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்ளாமல். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று நடிகர் யுகேந்திரன் கூறினார்.

ரேடான் குறும்பட விழாவில் பரிசு வென்ற அணிக்கு திரைப்பட வாய்ப்பு

அதி நேர்த்தியான தயாரிப்பு மற்றும் விநியோக உத்திகளோடு வெள்ளித் திரை மற்றும் சின்னத் திரை இரண்டிலும் கொடி நாட்டிக் கோலோச்சும் இந்த நிறுவனம் இப்போது, ரேடான் குறும்பட விழாவின் மூலம் (Raadan Short Film Festival – RSFF). குறும்படத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது.

இது பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கூறும் ரேயான் “இந்த குறும்பட விழாவில் கலந்து கொள்ளும் படங்களுக்கான அறிவிப்பு 2015 நவம்பரில் கொடுக்கப்பட்டது. தேசிய அளவில் மற்றும் உலக அளவில் என்று இரண்டு பிரிவுகளின் கீழ் 200க்கும் மேற்பட்ட படங்கள் எங்களுக்கு வந்தன.

அதில் இருந்து 25 படங்கள் முதல் கட்டமாக தேர்ந்து எடுக்கப்பட்டன. அவை யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அவற்றில் மிகச் சிறந்த பத்துப் படங்கள் தேர்வாகி திரு சரத்குமார், திருமதி லக்ஷ்மி ராம கிருஷ்ணன் ஆகிய நடுவர்களுக்கு அனுப்பப்பட்டன இவர்களுடன் இயக்குனர் பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் ரத்னவேல், எடிட்டர் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இணைந்து தேசிய அளவில் ஆறு படங்களையும், உலக அளவில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு பெறும் படங்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள்.

முதல் பரிசு பெற்ற படத்தை உருவாக்கிய படக் குழுவுக்கு இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத் தொகுப்பாளர் கே எல் பிரவீன், நடிகர்கள் எம் எஸ் பாஸ்கர் மற்றும் மோகன்ராம், வசனகர்த்தா பார்த்திபன் ஆகியோர் இணைந்து, ஒரு நாள் தொழில் நுட்பப் பயிற்சிப் பட்டறை நடத்தி சிறப்பித்தார்கள்.

இப்பொழுது அந்தப் படக் குழுவுக்கு ஒரு புது குறும்படத்தை இயக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் வரும் மார்ச் 9 ஆம் தேதி சத்யம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

அதன் பிறகு அந்தப் படக் குழுவுக்கு பணப் பரிசு வழங்கப்பட உள்ளதோடு பிரபல நிறுவனங்கள் உருவாக்கும் படத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படும். எங்கள் சார்பில் இவர்களை வைத்து எங்கள் நிறுவனம் படம் ஒன்றையும் தயாரிக்கும்.

இதன் மூலம் திரையில் நுழைய போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு புதிய வழி பிறக்கிறது என்பது என் கருத்து அதனால் இது மாதிரி ஒரு விழாவை நடத்துவதில் நான் ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன்.” என்கிறார், ஒருவித உற்சாகப் பாய்ச்சலோடு!

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் 30 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகாதீஷூவில் இருந்து வடமேற்கே சுமார் 245 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சந்தைப்பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பைடோவா நகரில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே நடைபெற்ற இரு வேறு தற்கொலைப்படை தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதே போல், கடந்த வாரம் மொகாதீஷூ அருகே உள்ள உணவகம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

109 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழகம் முழுவதும் 1,355 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். போக்குவரத்துத்துறை சார்பில் 109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியின் சார்பில் 4 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 19 அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.