Home Blog Page 5794

கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கீழப்பாவூர் மேற்கு  ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் 64 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
 திமுக பொருளாளர் ஸ்டாலின் 64 வது பிறந்தநாள் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய  செயலாளர்  வழக்கறிஞர் சிவபத்மநாதன் தலைமையில் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது  விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளார் இராமச்சந்திரன், நகர செயலாளர்; ஜெகதீஸ், மகளீரணி வைத்தீஸ்வரி, ராசாத்தி ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் . விழாவில் ஸ்டாலின் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு 64 கிலோ லட்டுகளை பொதுமக்களுக்கு  வழக்கறிஞர்  சிவபத்மநாதன் வழங்கினார்  விழாவில் ஊராட்சி செயலாளர்கள் சீனித்துரை, சமுத்திரபாண்டி, மதிச்செல்வன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, ஒன்றிய பிரதிநிதி சிவநாடானூர் முருகேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர் , முடிவில் பாவூர் சத்திரம் நகர செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்

ஹெல்மெட் போடாமல் கார் ஓட்டிய பாஜக பிரமுகருக்கு அபராதம் விதித்த காவல்துறை !

 

ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதாக, பாரதிய ஜனதா பிரமுகருக்கு, அபராதம் விதித்து காவல்துறை ரசீது அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் பெங்களூரில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரு மல்லேசுவரத்தில் வசித்து வரும் பாஜக பிரமுகர் பிரகாஷ். அவருக்கு பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து அபராதம் கட்டும்படி ரசீது ஒன்று நேற்று முன்தினம் வந்தது.

அந்த ரசீதுவில் ‘அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்ததோடு, பசவேசுவரா சர்க்கிளில் கடந்த 4-ந் தேதி சென்றபோது பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த ரசீதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து, பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த தவறு எந்திர கோளாறு காரணமாக நடந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ என்று கூறியுள்ளார் .

 

பேசிகிட்டு இருக்கோம் ! பேசிகிட்டு இருக்கோம் ! நாங்க தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசிகிட்டே இருக்கோம்! : தமிழிசை சௌந்திரராஜன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா தமிழிசை சவுந்திரராஜன், “நாளை மீண்டும் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வர இருப்பதாகவும், அவர் தே.மு.தி.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்த உள்ளார் என்றும் ஏற்கனவே தே.மு.தி.க. கூட்டணியில் இருப்பதால் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ. அலுவலகமான கமலாலயத்தில் கணபதி ஹோமம் நடந்தது. தேர்தல் வெற்றிக்காக நடந்த இந்த யாகத்தில் மாநில தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாமியாரை குத்திய மருமகன் கைது !

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமியாரை கண்ணாடியால் குத்திய மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி ராணி(45). இவரது மகள் நித்யா(24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான வாழ்ராஜா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் நித்யா, வாழ்ராஜாவை பிரிந்து ஓராண்டாக தாய் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 28-02-2016 அன்று அங்கு வந்த வாழ்ராஜாவுக்கும், ராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த வாழ்ராஜா ஜன்னலை உடைத்து கண்ணாடியால் ராணியைக் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த ராணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக ராணி அளித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து வாழ்ராஜாவை கைதுள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத மோடி அரசு பட்ஜெட் : தி.வேல்முருகன்

 

தமிழகம் உள்ளிட்ட மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடியதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.:

உணவுப் பொருள் விற்பனையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு என்பது, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மறைமுக செயலாகும்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களை மனதில் கொண்டு விவசாயிகள், ஏழை மக்களுக்கான அரசு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என தி.வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

பெற்றோருடன் தூங்கிய போது மாயமான சிறுமி, கிணற்றில் பிணமாக மீட்பு ! : நரபலி காரணமா ?

 

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கல்பட்டு கிராமத்த்தில் பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கிய போது மாயமான 6 வயது சிறுமி, கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டாள். சிறுமி நரபலி கொடுக்கப்பட்டாளா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மகள் திவ்யா (வயது 6). இவள், அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு சிறுமி திவ்யா, தனது பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கினாள்.

நள்ளிரவில் சதீஷ்குமார் எழுந்து பார்த்த போது திவ்யாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல்வேறு இடங்களில் தேடினார். எங்கேயும் சிறுமியை காணவில்லை. இதுபற்றி சூனாம்பேடு காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் சதீஷ்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மாயமான திவ்யா பிணமாக கிடந்தாள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சூனாம்பேடு காவல் நிலையத்தினர், கிணற்றில் மிதந்த சிறுமி திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெற்றோருடன் படுத்து தூங்கிய சிறுமி திவ்யாவை யாராவது கடத்திச்சென்று கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசினார்களா? அல்லது சிறுமி திவ்யா, நரபலி கொடுக்கப்பட்டாளா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மத்திய பட்ஜெட் தாமதமாக அமளியுடன் தாக்கல் செய்ய காரணமான பெண் அமைச்சர் !

 

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீது காங்கிரஸ் கொடுத்துள்ள உரிமை பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பட்ஜெட் தாக்கல் 5 நிமிடம் தாமதம் ஆனது. 

பாராளுமன்ற கூட்டத்தில் நேற்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா மரணம் குறித்து தவறான கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீது உரிமை பிரச்சினை கொண்டுவந்தனர். நேற்று பட்ஜெட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த பிரச்சினை குறித்து கோஷம் போட்டனர்.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி அழைத்தார். அப்போது காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் எழுந்து நின்று இந்த பிரச்சினையை எழுப்பினார். அதற்கு சபாநாயகர், இதுபற்றி எனக்கு அறிக்கை வந்துள்ளது. அது எனது பரிசீலனையில் உள்ளது என்றார்.
 

காலை 11.02 மணிக்கு அருண் ஜெட்லி பட்ஜெட் உரையை வாசிக்க எழுந்தார். அப்போது காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் கொடுத்த உரிமை பிரச்சினை குறித்து சபாநாயகர் பதில் அளிக்கவில்லை எனக்கூறி கோஷம் போட்டனர். இதனால் அருண் ஜெட்லி உட்கார்ந்துவிட்டார்.

காங்கிரஸ் அவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தீர்மானம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். அதற்கு சபாநாயகர், ‘மனிதவளத்துறை அமைச்சர் 26–ந்தேதி இந்த அவையில் பேசியது குறித்து அவர் மீது உரிமை பிரச்சினை தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. அந்த விவகாரம் எனது பரிசீலனையில் உள்ளது’ என்றார்.

இந்த அமளி காரணமாக பட்ஜெட் தாக்கல் 5 நிமிடங்கள் தாமதமாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

வாங்க! வாங்க! திமுக கூட்டணியில் சேர விஜயகாந்தே வாங்க! : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக – காங்கிரஸ் கூட்டணிகூட்டணியில் சேர முன் வேண்டும் என்று காங்கிரஸின் தமிழக மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது :

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விஜயகாந்தைச் சந்தித்து, கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். மொத்தம் 160 கட்சிகள் உள்ளன. அவர்கள் எல்லோரையும் சந்தித்தும், ஜாவடேகர் ஆதரவு கேட்கக் கூடும். திமுக – காங்கிரஸ் கூட்டணி தேமுதிக வரவேண்டும் என்று ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளோம்.

இப்போதும் மீண்டும் அழைக்கிறோம்.விஜயகாந்த் வருவார் என்று நம்புகிறோம். திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு நடக்கும்போது நடக்கும். விவசாயிகளுக்கு வருவான வரி விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி விதித்தால் நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

காவல் ஆணையாளராக அலோக் குமார் வர்மா பதவி ஏற்பு !

 

புது தில்லி மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பி.எஸ்.பஸ்சி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய ஆணையாளராக அலோக் குமார் வர்மா நேற்று பதவியேற்றார். 1979-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், புது தில்லி திகார் சிறையின் இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

புது தில்லியின் காவல்துறை தெற்கு மாவட்ட துணை ஆணையாளர், குற்றப்பிரிவு இணை ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர், அந்தமான் நிகோபார் தீவுகளில் ஐ.ஜி.யாகவும், புதுச்சேரியில் டி.ஜி.பி.யாகவும் பணியாற்றி உள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வரும் இந்த நேரத்தில் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள அலோக் குமார் வர்மா, இன்னும் 17 மாதங்களுக்கு இந்த பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த ரூ.1½ கோடி கைக்கடிகாரங்கள் துணிகர கொள்ளை !

 

ரூ.1½ கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்களை சென்னை ராயப்பேட்டையில் கடிகாரக்கடையை உடைத்து மர்மநபர்கள் இருவர் துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் ‘ரிஸ்ட் வேல்டு’ என்ற பெயரில் பிரபல கைக்கடிகாரக்கடை உள்ளது. இங்கு ரேடோ உள்பட விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த கடையின் உரிமையாளர் வினோத் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை 10.30 மணிக்கு கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவந்தது.

கடைக்குள் இருந்த விலை உயர்ந்த 150 கைக்கடிகாரங்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. திருட்டு போன கைக்கடிகாரங்கள் ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.1½ லட்சம் வரை விலையுள்ள கடிகாரங்களாகும்.கொள்ளை போன கைக்கெடிகாரங்களின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என கருதப்படுகிறது.

கடையின் கல்லாபெட்டியில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும், கொள்ளையர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பற்றி கடைக்காரர் வினோத், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இணை ஆணையாளர் மனோகரன், துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திருட்டு நடந்த கைக்கடிகார கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் இருவரின் உருவம் பதிவாகியிருந்தது. கொள்ளையர்கள் கைக்கடிகாரங்களை ஒரு பையில் அள்ளிப்போட்டு மூட்டை கட்டிக்கொண்டு எடுத்துச்செல்லும் காட்சியும் கேமராவில் காணப்பட்டது.

கொள்ளையர்கள் இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டைகாவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.