2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
விமான பாதுகாப்பு சோதனையின் போது டர்பனை அகற்ற மறுத்த சீக்கியர், விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
சீக்கிய- அமெரிக்க நடிகரான வாரிஸ் அலுவாலியா, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து மெக்ஸிகோவிற்கு ஏரோமெக்ஸிகோ விமானத்தில் செல்வதற்காக விமானநிலையத்தில் காத்திருந்தார்.
பாதுகாப்பு சோதனையின் போது தான் அணிந்திருந்த டர்பனை கழற்ற அவர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவரை பயணம் செய்ய அனுமதிக்காமல், ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.அவர் விமான பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்தனர்.
நேபாள காங்கிரஸ் கட்சி தலைவரும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமருமான கொய்ராலா இன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டு சுமார் 16 ஆண்டுகாலம் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். விமான கடத்தல் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறைகளில் 3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த இவர், கடந்த 10-2-2014 அன்று நேபாள நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் கொய்ராலா, நுரையீரல் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பிய இவர், தலைநகர் காத்மாண்டுவின் புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை 12.50 மணிக்கு காலமானார்.
நுரையீரல் அழற்சி நோயால் மரணம் அடைந்த சுஷீல் கொய்ராலாவின் உடல் காத்மாண்டு நகரில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் ஆரோக்யா பால் நிறுவனம் தனது பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 5.00ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.
தமிழகத்தில் தற்போது பால் உற்பத்தி அபரிமிதமாக இருப்பதுடன், பாலுக்கான கொள்முதல் விலை உயராமல் அப்படியே இருப்பதுடன், பெட்ரோல், டீசல் விலையும் கணிசமான அளவு குறைந்திருக்கும் சூழ்நிலையிலும் தற்போது பால் விற்பனை விலையை உயர்த்துவதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.
பொதுமக்கள் நலன் மீது சற்றும் அக்கறையின்றி, பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வரும் ஹட்சன் ஆரோக்கிய நிறுவனம் முற்றிலும் தனது சுயநலத்திற்காக, சுய லாபத்திற்காக மட்டுமே இந்த பால் விலை உயர்வை அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் உடனடியாக பால் விலை உயர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் எனவும், பால் விலை உயர்வை ஹட்சன் நிறுவனம் திரும்ப பெறாவிட்டால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பால் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் ஆட்டோ கட்டணம், பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் போன்ற கட்டணங்களை தமிழக அரசே நிர்ணயம் செய்வது போல பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்யும் வகையில் “மக்கள் பிரதிநிதி, அரசு அதிகாரி, பால் முகவர்கள்/உற்பத்தியாளர்கள் பிரதிநிதி, தனியார் பால் நிறுவனங்களின் சார்பில் பிரதிநிதி” அடங்கிய “நால்வர் குழு” அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள், பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் நலன் காத்திடும் பொருட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விகடன் பிரசுரத்தில் இருந்தபோது எழுதிய 1857ல் தமிழ் மண் – நூலின் 10 ஆம் அத்தியாயத்தின் நூல் வடிவத்தை இங்கே இணைத்திருக்கிறேன்.
ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்- ஐ க்ளிக் செய்து படியுங்கள். வெறும் 8 பக்கம் மட்டுமே இணைத்துள்ளேன். இதைப் படித்து முடித்த பிறகு, இனி நான் இங்கே உங்களுடன் பகிரப் போகும் விஷயத்தை ஆழப் புரிந்து கொள்ளவும்! ***
2008ல் இருக்கும். 1857ன் முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடினோம்.
அப்போது, அடியேனும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில், இந்த நூலைத் தொகுத்து எழுதினேன். சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள ஆவணக் காப்பகம் மற்றும் பி.ஸ்ரீ. தொகுத்திருந்த ராபர்ட் கிளைவ் முதல் ராஜாஜி வரை -கட்டுரைத் தொகுப்புகள், வி.டி. திவாகர் மற்றும் கே.எம். ராவ் தொகுத்த ஒரு நூல் இவற்றைத் துணையாகக் கொண்டு…
1857ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் நிலை எப்படி இருந்தது என்பதை 10 அத்யாயங்களில் 128 பக்க சிறு நூலாகக் கொடுத்தேன். இந்த நூல் வந்த சில நாட்களில், பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து வரிசையாக நாலைந்து செல்போன் அழைப்புகள்…
தொடர்பு கொண்ட அனைவருமே இஸ்லாமியர்கள்தான்! அவர்களில் 3 பேர் தாங்கள் இஸ்லாமியப் பள்ளியில் (மதரசா) பயில்வதாகக் கூறினர். மேலும், இது போன்ற நூல்களை நீங்கள் அதிகம் எழுதவேண்டும் சார்.. என்றும் ஊக்கப் படுத்தினர். நான் அவர்களிடம் உற்சாகத்தில், ”மிகவும் சந்தோஷம். நீங்கள் இந்த நூலின் கருத்துகளைப் படித்து, நம் நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளக் காட்டிய ஆர்வமும், இந்தப் பாராட்டுதலும் எனக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது. நிச்சயமாகச் செய்கிறேன்” என்று நன்றி தெரிவித்தேன்.
அவ்வாறு, இஸ்லாமிய இளைஞர்கள் இந்த வரலாறை அவ்வளவு தூரம் ஊன்றிப் படித்து பாராட்டும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது..?
நம் நாட்டின் உண்மை வரலாறுதான்!
முதல் இந்திய சுதந்திரப் போர் காலகட்டத்தில், சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் இருந்தனர். தில்லிப் பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷா ஜாபரின் ஆட்சியை நிலைநாட்ட, வடக்கேயுள்ள இந்துக்களும் இஸ்லாமியர்களும் கைகோத்து, ஆங்கிலேயருக்கு எதிராகக் களம் கண்டனர். அப்போது, எத்தனையோ கசப்புணர்வுகள் இருந்தும், அனைத்தையும் மறந்து, இந்து இஸ்லாம் பாகுபாட்டைத் துறந்து, இரு தரப்பும் கைகோத்தனர்.
பொது எதிரி ஒருவன் இருந்த போது இருவரும் இணைந்து செயல்பட்டது, தமிழகத்திலும் எதிரொலித்தது. அப்போதைய சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை தேசத் துரோக குற்றம் சுமத்தி, அந்தமானுக்கும் பர்மாவுக்கும் சிறைக்கு அனுப்பியது ஆங்கிலேய கம்பெனி அரசு. அப்போது பிரிட்டிஷ் ராணியின் நேரடி ஆளுகையில் வரவில்லை. கம்பெனியாரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 1857 போர் நிறைந்த பின்னரே, பிரிட்டிஷ் அரசியாரின் கட்டுப்பாட்டுக்கு இந்திய பகுதிகள் வந்தன.
அவ்வாறு நாடு கடத்தப்பட்ட, தேச துரோகியர் என குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்துக்களோடு கூட, இஸ்லாமியர்களும் கணிசமான அளவில் இருந்தனர். அவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தது காரணம். அப்போதைய நோக்கம்… பகதூர் ஷாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவது. அதற்கு ஆதரவாக இருந்தவர்கள் (மங்கள் பாண்டே) நானாசாஹப் பேஷ்வா, தாத்தியா தோபே உள்ளிட்ட இந்து மன்னர்கள்.
இரண்டாம் சுதந்திரப் போர் நேரத்தில், ஒரு வேளை, ஜின்னாவுக்கு பட்டாபிஷேகம் செய்வோம் என நேரு ஒதுங்கியிருந்தால்…. இந்தியப் பிரிவினை நடந்திருக்காதோ என்னவோ? நம் குதர்க்க புத்தி அப்படியும் எண்ணத் தோன்றுகிறது. *** இப்போது விஷயத்துக்கு வருகிறேன்….
சென்ற ஆண்டு, ராமேஸ்வரம் சென்று விட்டு, ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்.
காலை நேரம் ரயில் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது….
எதிரே சீட்டில் அமர்ந்தபடி, இஸ்லாமிய சிறுவர்கள் சிறுமியர் நாலைந்து பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பிஞ்சு, வயது அனேகமாக 3 இருக்கக் கூடும்… என் நெற்றியில் அப்போது ஒற்றைக் கீற்றாய்த் தெரிந்த ஸ்ரீசூர்ணக் காப்பைக் கையைக் காட்டி… ”அவரு நெத்தில ரத்தம் … அவரு நெத்தில ரத்தம்” என்று சிரித்தான். அருகில் இருந்த மற்ற சிறுவர்களும் சிரித்தனர். இவர்கள் குழந்தைகள் என்ற எண்ணத்தால், அதைப் பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை… ஆனால், என் அருகே அமர்ந்திருந்த அந்தச் சிறுவனின் முக்காடிட்ட தாயும் குல்லா போட்ட தகப்பனும்… அந்தச் சிறுவர்களைக் கண்டித்தோ, கடிந்தோ, அல்லது டேய் அப்படி சொல்லக் கூடாது என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்தோ.. அடக்க முற்படவில்லை. அவர்களும் சேர்ந்து வாயை மூடி சிரித்துக் கொண்டனர்.
நாமாக இருந்தால், நம் குழந்தைகளை எப்படி அதட்டுவோம்??? அவர்கள் மனம் புண்படும் என்று கண்ணீர் வடித்து, ச்சீ.. சூ… தூ.. என்றெல்லாம் அடக்குவோமே! அந்த இங்கிதம் கூட இல்லாத இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இப்போது தமிழகத்தில் அதிகரித்து விட்டது. #சகிப்புத்தன்மை
** கறுப்புக் கண்ணாடி கயவன் உதிர்த்த அதே தரங்கெட்ட காழ்ப்புணர்வு வார்த்தை இப்போது நினைவில் வந்தது. ** இப்படி ஒன்றல்ல இரண்டல்ல… பல சம்பவங்கள் ! இப்போது எனக்குள்ளும் பிடிவாத குணம் …! பளிச் என்று முழு திருமண் காப்பும், குடுமியும் வைத்துக் கொண்டு… எவன் என்ன சொல்கிறான் பார்ப்போம் என்ற ரீதியில் வீம்புக்கு செயல்படும் அளவுக்கு புத்தி செல்கிறது!
மூட நம்பிக்கை ஒழிப்பு என்று கூட்டம் போட்டால்.. இஸ்லாமியர்கள் பெருமளவில் இருக்கும் அவர்களின் பகுதிகளில் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். அதை விடுத்து, ஷிர்க் மாநாடு என்று, இந்த நாட்டின் பன்முகத் தன்மைக்கு சவால் விடும் வகையில் பயங்கரவாதத்தைப் பரப்பும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை ஓட்டுக்காக வளர்த்து விட்ட திமுக.,வும், அதிமுகவும்., இதற்காக மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு விரைவில் தள்ளப்படுவார்கள்.
இப்படி ஒரு மாநாட்டுக்கு அனுமதி கொடுத்து, மற்ற மக்களிடையே காழ்ப்புணர்வையும், மக்களிடையே பிரிவினையும் வளரவிட்டுக் கொண்டிருக்கும் காவல்துறை, இதற்காக பின்னாளில் பெரிய விலை கொடுக்க நேரும் ! ஏற்கெனவே ஆம்பூரில் ஒரு ரவுடியிஸத்தைப் பார்த்திருப்பார்கள். அதை நிச்சயம் அவர்கள் மறக்க மாட்டார்கள்.
இத்தகையவர்கள்:, தங்களின் பிரிவினைவாத காழ்ப்புணர்வு மத வன்முறைச் செயல்கள் மூலம், இந்து – இஸ்லாமியர்களின் ஒற்றுமையே நாட்டின் முன்னேற்றம் என்று காந்திய வழியில் கனவு கொண்டிருக்கும் என் போன்றோரின் கனவுகளுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளையும் இதுவரை பிரித்தே அறிந்து, சில சிறுகதைகள் வாயிலாக, மனித நேயத்தை வெளிப்படுத்தும் வகையில் என் உணர்வுகளையும் பதிந்து வந்தேன். ஆனால், தங்கள் செயல்களால், இரண்டும் வேறல்ல என்ற எண்ணத்தை இவர்கள் விதைக்கும்போது, நாம் என்னதான், சமரச நோக்கோடு சமுதாய ஒருங்கிணைப்புக்கு முயன்றாலும், அது இயலாமல் போகும்!
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடை பெற உள்ளது.
இந்த மாநாட்டில் தீவிரவாத செயல்களுக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டில் 23 மாநில ஆளுநர்களும் மற்றும் 2 துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் துணை குடியரசு தலைவர் அமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
குஜராஜ் மாநிலத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில், அதிகாரி ஒருவர் காதலர் தினம் கொண்டாட முன் கடன்தொகை வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தைக் கண்டு வங்கி நிர்வாகம் அதிர்ச்சியடைந்த்து. பின்பு நிர்வாகம் விண்ணப்பத்தை நிராகித்தது.
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை ஃபை இணைப்பு பிரச்சினைகள் உள்ளன என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை உள்பட நாட்டின் பல பகுதிகளில் வை ஃபை இணைப்பு கிடைக்காமல் இருப்பது 21ஆம் நூற்றாண்டின் ஒரு பிரச்சினையாக உள்ளது.
இந்தப் பிரச்சினையால் தனது மகள்கள் எரிச்சலைந்துள்ளனர் அமெரிக்காவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், வை ஃபை பிரச்சினையை தீர்க்க தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அடுத்த அதிபர் இதிலிருந்து விடுபட தான் முனைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹுப்ளி என்ற பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாயினர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.பி.ராஜா கட்சித் தலைவர் சரத்குமார் மீது, மோசடிப் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தான் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட வாய்ப்புத் தருவதாகக் கூறி, கடந்த 9 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் வரை கட்சித் தலைவர் சரத்குமார் மோசடி செய்தார்.
இதனால், தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இது தொடர்பாக சரத்குமார் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.பி.ராஜா கட்சித் தலைவர் சரத்குமார் மீது, மோசடிப் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தான் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட வாய்ப்புத் தருவதாகக் கூறி, கடந்த 9 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் வரை கட்சித் தலைவர் சரத்குமார் மோசடி செய்தார்.
இதனால், தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இது தொடர்பாக சரத்குமார் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.