அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை ஃபை இணைப்பு பிரச்சினைகள் உள்ளன என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை உள்பட நாட்டின் பல பகுதிகளில்
வை ஃபை இணைப்பு கிடைக்காமல் இருப்பது 21ஆம் நூற்றாண்டின் ஒரு பிரச்சினையாக உள்ளது.
இந்தப் பிரச்சினையால் தனது மகள்கள் எரிச்சலைந்துள்ளனர் அமெரிக்காவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், வை ஃபை பிரச்சினையை தீர்க்க தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அடுத்த அதிபர் இதிலிருந்து விடுபட தான் முனைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


