Home Blog Page 5808

எமதர்மனின் ’ஏஜண்ட்’களாகத் திகழும் ’டுபாக்கூர் மருத்துவர்கள் !

 
எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்கள் பணவெறி பிடித்து புற்றீசல் போல தமிழகம் முழுவதும் பொது மக்களின் உயிருடன் விளையாட டுபாக்கூர் மருத்துவமனைகளை தொடங்கி நடத்தி கொண்டே தான் உள்ளனர் எனும் குற்றசாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது .மேலும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் டுபாக்கூர் செவிலியர்களும் பணியாற்றி கொண்டுதான் உள்ளனர் .
 
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் ஒத்தைகடை எனும் கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அமைத்துள்ளது.
 
அந்த பேருந்து நிறுத்ததத்தில் இருந்து திருமோகூர் செல்லும் சாலையின் நுழைவு வாயிலின் சிறு தூரத்திலேயே எமதர்மனின் மறு உருவமாகத் திகழும் சில டுபாக்கூர் மருத்துவர்கள் போட்டி போட்டுக் கொண்டு டுபாக்கூர் மருத்துவமனைகளை பல ஆண்டுகளாக நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டுபாக்கூர் மருத்துவர்கள் நடத்தி வரும் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களும் டுபாக்கூர்தானாம்.
 
எமதர்மனின் மறு உருவமாகத் திகழும் டுபாக்கூர் மருத்துவர்கள் அனைவருமே ஏற்கெனவே பல மருத்துவமனைகளில் கம்பவுண்டராக பணியாற்றியவர்களாம்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்தான் டுபாக்கூர் மருத்துவர் ஒருவர் ஒத்தைகடை பகுதியில் நடத்திவந்த அவரது டுபாக்கூர் மருத்துவமனையின் பெயரை மாற்றம் செய்து அந்த பகுதிக்கு இடப் பெயர்ச்சி செய்தாராம்.
 
ஒத்தைகடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் படிப்பறிவு இல்லாத வசதியற்றோர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அதை டுபாக்கூர் மருத்துவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு வரும்பொழுது அவர்களிடம் உள்ள தொகையைப் பெற்று கொண்டு சிகிச்சை அளித்து விடுவார்களாம்.
 
எவருக்காவது குளுகோஸ் ஏற்ற வேண்டி இருந்தால்கூட டுபாக்கூர் செவிலியர் மருத்துவமனையின் சந்தில் வைத்தே குளுகோஸ் ஏற்றிவிடும் கொடுமையும் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது.
 
மதுரை மாவட்டத்தில் சில மருத்துவர்கள் பணவெறி பிடித்து புற்றீசல் போல மருத்துவமனைகளை தொடங்கி நடத்தியும் வருகின்றனர்.
 
எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்கள் ஏற்கனவே பல மருத்துவமனைகளில் கம்பவுண்டராக பணியாற்றியதால் சில தனியார் மற்றும் அரசு மருத்துவர்களுக்கும் வியாபாரத் தொடர்பு உண்டாம்.
 
அதனால் சில பணவெறி பிடித்த மருத்துவர்கள் டுபாக்கூர் மருத்துவமனைக்கு வந்து அங்கு உள் நோயாளியாக இருப்பவர்களுக்கு சிகிச்சையும் அளிப்பார்களாம்.
 
கடந்த 6 மாதங்களுக்கு முன் உலகநேரி பகுதியில் வசிக்கும் பெற்றோர் ஒருவரது மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்தினாராம் . அப்போது அந்த மாணவிக்கு அதிகமான உதிரப் போக்கு ஏற்பட்டு மிகுந்த கடுமையான வேதனைக்கு உள்ளாகி சிரமப்பட்டாராம்.
 
அதைக் கண்ட பெற்றோர்கள் எமதர்மனின் ஏஜெண்ட் அலுவலகமாக திகழும் டுபாக்கூர் மருத்துவமனையில் மகளை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்களாம்.
 
அப்போது டுபாக்கூர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சேர்ந்து அந்த மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததுடன் தவறான மருந்தையும் கொடுத்தனராம். அதனால் அந்த மாணவியின் உடல்நிலை மிகுந்த மோசம் அடைந்ததாம்.
 
அதை அறிந்த எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர் அந்த பெற்றோர்களிடம் உங்களுடைய மகளை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றால்தான் காப்பாற்ற முடியும் என கூறி கைகழுவி தப்பித்துக் கொண்டாராம்.
 
அதன்பின் அரசு மருத்துவனைக்கு சென்ற மாணவிக்கு கொடுக்கப்பட்ட மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டாராம்.
 
டுபாக்கூர் மருத்துவருக்கு அரசு மருத்துவனையில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி மாணவிக்கு எமதர்மன் கொடுத்த தவறான சிகிச்சை பற்றிய இரகசியம் வெளிவராமல் பார்த்து கொண்டாராம்.
 
எமதர்மனின் ஏஜெண்ட் அலுவலகமாக திகழும் டுபாக்கூர் மருத்துவமனையில் வைத்து டுபாக்கூர் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சேர்ந்து கொடுத்த தவறான சிகிச்சையால் சுமார் ஆறு பேருக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
 
எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்களுக்கு அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் என பலரிடமும் மிகுந்த செல்வாக்கு உண்டாம் . மேலும் டுபாகூர் மருத்துவர் மாத மாதம் நன்கு கவனித்து விடுவாராம். அதனால் எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்களை கண்டு கொள்வதில்லையாம்.
 
பொதுவாக காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவகளின் மருத்துவ கல்வி படிப்பு சான்றிதழ் மற்றும் அந்த மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களின் கல்வி படிப்பு சான்றிதழ்களை வாங்கி அது உண்மையானதுதானா என ஆய்வு செய்யும் அதிகாரம் காவல் ஆய்வாளருக்கே உள்ளது.
 
தமிழகத்தில் அந்த ஆய்வை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டாலே எமதர்மனின் மறு உருவமாக திகழும் பல டுபாக்கூர் மருத்துவர்களை ஒழித்து விடலாம்.
 
தமிழக காவல்துறையில் மனிதாபிமான நோக்கத்துடன் நேர்மையாக பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் மிக இல்லாமல் இருக்கவா போகிறார்கள் ?
 
அவர்கள் தமிழகம் முழுவதும் பொது மக்களின் உயிருடன் விளையாடும் டுபாக்கூர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒழித்துக் கட்ட அவர்களின் கல்வி சான்றிதழ் அதிரடி ஆய்வு வேட்டை நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல் இருக்கவா போகிறார்கள்? நடக்குமா என்ன ?

பெங்களூருவில் பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்ததால் பதற்றம்

பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றுக்குள்  சிறுத்தை நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சிறுத்தை அங்கிருந்தவர்களை தாக்கியது.

 

இதில்  6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தைவானில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 மாதக் குழந்தை 30 மணி நேரத்திற்கு பின் மீட்பு

தைவானின் தெற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 462 பேர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதில், 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

 

இதனிடையே, இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட 6 மாத குழந்தை 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடம் ஒன்றின் 5-வது மாடியில் தாயுடன் வசித்து வந்த குழந்தையுடன், 20 வயது மிக்க இளைஞர் ஒருவர் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் முதன்முறையாக ‘ஸிகா’ வைரசுக்கு இந்தியாவில் மருந்து கண்டுபிடிப்பு

‘ஸிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த நடவடிக்கையாக ஐதராபாத் ஆய்வு விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக ‘ஸிகா’ வைரசுக்கு எதிராக இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணா எல்லா இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசுகையில், “உலகில் முதலாவதாக ஸிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனம் நாமாக இருக்கலாம், சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த மருந்தை பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணா ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்று நான் நினைக்கவில்லை: வங்கதேச பெண் எழுத்தாளர் கருத்து

கோழிக்கோட்டில் நடந்த இலக்கியத் திருவிழாவில், சகிப்பின்மை குறித்த விவாதத்தின் போது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா தெரிவித்ததாவது:

 

இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்று நான் நினைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் மற்றவர்களின் மத நம்பிக்கையின் மீது முழு சகிப்புத்தன்மை கொண்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

 

இந்தியாவில் உள்ள மதச்சார்பின்மைவாதிகள், ஹிந்து அடிப்படைவாதிகளை மட்டும் ஏன் கேள்வி எழுப்புகின்றனர் என்பதை கண்டு வியப்படைகிறேன்.

 

இந்தியாவில் உள்ள சட்டங்கள் சகிப்பின்மையை ஆதரிக்கவில்லை. ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்கள் ஏராளமாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வங்கதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களால் ஹிந்துக்கள் எந்த மாதிரியான துன்பங்களை அடைந்துள்ளனர் என்பது குறித்து 1994-ஆம் ஆண்டு தஸ்லீமா நாவல் ஒன்றை எழுதினார்.

 

இதனால் முஸ்லிம் மத அடிப்பபடைவாதிகளின் கோபத்துக்கு ஆளான தஸ்லீமாவுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

234 தொகுதியிலும் தனித்து நிற்க விஜயகாந்த் தயாரா? சமக கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி

நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன. சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார், பொதுச்செயலராக ஜெ.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி பொருளாளராக சுந்தரேசன், அவைத் தலைவராக செல்வராஜ், துணைத் தலைவர் காளிதாசன், துணை பொதுச்செயலராக மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் மகளிர் அணி தலைவியாக ராதிகா சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சமத்துவ மக்கள் கட்சி  சிறப்பு பொதுக்குழுவில் பேசிய கட்சியின் தலைவர் சரத் குமார்,  நிழலில் இருந்துவிட்டோம்சூரிய ஒளி படும்போது செடி சிறப்பாகவளரும் நெல்லை பொதுக்குழுவில் சரத்குமார் சூசகம் ஜாதிக்கூட்டுக்குள் தன்னை அடைக்கப்பார்க்கிறார்கள். தமிழன் நாட்டை ஆளக்கூடாதா தமிழனுக்கு தன்மீது நம்பிக்கை கிடையாது. அறிவுஆற்றல் இல்லாத இருவர் மட்டும் தான் கட்சியைவிட்டு சென்றிருக்கின்றனர். 234 தொகுதியிலும் தனித்து நிற்க விஜயகாந்த் தயாரா ? நான் தயாராக உள்ளேன் என்றார்.

ஒப்பந்ததாரரிடம், நகராட்சி ஆணையர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சியால் பரபரப்பு

சிவகங்கையில் தனியார் ஒப்பந்ததாரரிடம், நகராட்சி ஆணையர் லஞ்சம் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில், நிழற்மேற்கூரை அமைக்க நகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டது.

 

பணிகள் முடிவடைந்து, அதற்கான காசோலையை வழங்குவதற்கு நகராட்சி ஆணையர் சக்திவேல், தனியார் நிறுவனத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒப்பந்ததாரரின் அலுவலகத்திற்கு சென்ற நகராட்சி ஆணையர், 4 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை அளித்து விட்டு, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டார்.

 

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானி இளையராஜா இசையில் பாடிய கமல்!

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”.

இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா” என்று தொடங்கும் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமுண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் எழுதியுள்ளார். முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு (முத்துராமன், கார்த்திக், கவுதம் கார்த்திக்) பாடல் எழுதியுள்ளார் பஞ்சு அருணாசலம். இப்படத்தின் வாயிலாக பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர்.

கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் D.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு U.K.செந்தில்குமார்.

ஊக்கமருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் வீரருக்கு தடை

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த நவம்பரில் நடந்த ஒருநாள் தொடரின் போது, யாசீர் ஷாவிடம் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஐ.சி.சி.யின் ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட குளோர்டாலிடோனை அவர் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அவருக்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் அவர் T20 ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் புகார்களுக்கு புதிய சாப்ட்வேர் அறிமுகம்: ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

 

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாமில் ஒன்பது மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.

 

அந்த முகாமில் தேர்தல் நடத்துவது தொடர்பாக  தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி, செய்தியாளர்களிடம் பேசினார். அதில், போலி வாக்காளர்கள் குறித்த புகாரின் பேரில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

 

அதேபோல் இறந்தவர்களின் பெயர்களையும், இரண்டு முறை இடம் பெற்றுள்ள வர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

தேர்தல் தொடர்பான புகார்களை அதற்குரிய சாப்ட்வேரில் பதிவு செய்து விட்டால், புகார் 5 நிமிடத்தில் தொடர்புடைய அதிகாரிக்கு சென்று விடும் எனவும், தமிழகத்தில் வரும் தேர்தலில், 65 ஆயிரத்து, 616 மையங்களில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.