Home Blog Page 5809

விபத்தில் பலியானவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மதுரை அருகே நடந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் அரசுப்பேருந்தும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பலியாகினர். இவர்களது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன.

திருமங்கலத்தில் வைக்கப்பட்டிருந்த 10 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இதில் ராணுவ வீரர் குடும்பத்தைச் சேர்ந்த நல்லகுருவம்மாள், ஜெயசந்தோஷ் ஆகியோரின் உடல்கள் மட்டும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மேலும் 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

தெற்காசிய விளையாட்டு: பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி, மேகாலயாவின் ஷில்லாங் நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்திய அணி 14 தங்கம், 5 வெள்ளி என மொத்தம் 19 பதக்கங்களை குவித்தது.

இன்று நடைபெற்ற மகளிர் 58 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சரஸ்வதி ராவுத் தங்கம் வென்றார்.

பிறகு நடைபெற்ற ஆடவர் 69 கிலோ பளு தூக்குதல் போட்டியிலும் இந்தியாவைச் சேர்ந்த சம்போ லபுங் தங்கம் வென்றார்.

தெற்காசிய போட்டியில் முதல்முறையாக மகளிர் பளுதூக்குதல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சானுவின் 169 கிலோ சாதனையாக அமைந்தது.

தாவூத்தை சந்தித்தார் மோடி என்ற ஆசாம் கானின் கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு : மத்திய அரசு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை காண, பிரதமர் மோடி லாகூருக்கு சென்ற போது நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார் என்று  தனது எருமை மாட்டை கண்டுபிடித்து தர உ.பி., போலீசுக்கு உத்தரவிட்டு சர்ச்சைகுள்ளான உத்திர பிரதேச அமைச்சர் ஆசாம் கான் கூறி உள்ளார்.

இந்நிலையில் இது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஆசாம் கானின் இந்த கருத்திற்கு பா.ஜ., மட்டுமின்றி காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆசாம் கான் நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் இருப்பவர். அவர் இத்தகைய ஆதாரமற்ற கருத்துக்களை கூற கூடாது. யார் என்ன கூறினாலும் அதை தங்களால் நம்பி விட முடியாது. தனது எருமை மாட்டை கண்டுபிடித்து தர உ.பி., போலீசுக்கு உத்தரவிட்டவர் தானே இந்த ஆசாம் கான் என்று இதுகுறித்து பேசிய கான்கிரஸ் செய்திதொடர்பாளர் தாம் வடக்கன் தெரிவித்தார்.

காங்கிரஸில் போட்டியிட 10-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்: தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

‘தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுவை வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தை பெற ரூ.100 செலுத்த வேண்டும். சட்டமன்ற பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.5000, பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலை பார்வையிட இந்தியாவுக்கு வருகிறார் இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் ஆகியோர் வரும் ஏப்ரல் மாதம் தாஜ்மஹாலை காண இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் அவர்களது பயணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

 

கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அன்றைய தினம், பக்கிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் சார்பில் அவருக்கு தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.

 

அப்போது இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் ஆகியோர் 2016 ஏப்ரல் 10 முதல் 17ம் தேதி வரை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஆக்ரா மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். எனினும், வில்லியம் தம்பதியின் பயண நாள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

‘யாஷ் பாரதி விருது’ பெற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பித்த சுரேஷ் ரெய்னா

உத்தரபிரதேச மாநில அரசு பலதுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ரூ.5 லட்சத்துடன் யாஷ் பாரதி(Yash Bharti) விருது வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்ததைத்யடுத்து, இதற்கான விண்ணப்பங்கள் 108 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ரூ.50 ஆயிரம் கிடைக்கும் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

‘லோ நெக் டாப்’ அணிந்த இந்திய தொகுப்பாளினிக்கு பேட்டி அளிக்க ஹசிம் அம்லா மறுப்பு

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹசிம் அம்லா, தொகுப்பாளினி முறையாக ஆடை அணியாத காரணத்தினால் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ஹசிம் அம்லா, இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இரு அணிகள் மோதிய 5வது ஒருநாள் போட்டியின் போது, இவரை பேட்டி எடுப்பதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார்.

அவர் Low Neck Top-யை அணிந்திருந்த காரணத்தினால், அம்லா பேட்டி கொடுக்க மறுத்து விட்டார்.

தொடர்ந்து பேட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பாக பீர் நிறுவனம் என்ற காரணத்திற்காக Castle லோகோ போடப்படிருந்த தென் ஆப்பிரிக்கா ஜெர்சியை அணிய மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் விண்வெளி திட்டங்கள், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை: மோடி

இந்தியாவின் விண்வெளி திட்டங்கள், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு மைய துவக்கவிழாவில், பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சூரிய சக்தி சேமிப்பு என்பது சவாலான ஒன்று.   இந்தியாவின் விண்வெளி திட்டங்கள், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியர்கள், விண்வெளி துறை மட்டுமல்லாது, கல்வி, அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து நாட்டின் பெருமையை சர்வதேச அளவிற்கு உயர்த்தி வருவதாக தெரிவித்தார். 

விகடன் குழுமத்தின் வன்மம்: தனது பழியை பிறர் மீது சுமத்தும் அநியாயம்!

பேராசிரியர் ராஜநாயகம் என்பவரின்  கருத்துக் கணிப்பினை, “லயோலா கருத்துக் கணிப்பு” என்று மோசடியாக பிரச்சாரம் செய்தது விகடன் குழுமம். 

இப்போது, அதே விகடன் குழுமத்தினர், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று சொன்னது போலவும், விகடன் கும்பல் அதனை மறுப்பது போலவும் ‘தலைகீழாக’ செய்தி வெளியிட்டுள்ளனர். 

https%3A 2.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி டிவிட்டர் செய்தி 23.1.2016
https%3A 4.bp.blogspot.com - 2026
ஜூனியர் விகடன் கேள்வி பதில்

பின்னணி என்ன?

ஜனவரி 23 பகல் 11.30 மணியளவில் இராஜநாயகம் வெளியிட்ட அறிக்கையில் ‘லயோலா’ என்கிற வார்த்தையே இல்லாத நிலையில் – பகல் 12.30 மணிக்கு  ‘லயோலா கருத்து கணிப்பு’ என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டது விகடன். உடனடியாக இதனை விகடன் இணைய தளத்திலும் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பகல் 1.11 மணியளவில் “லயோலா – கல்லூரி வெளியிடும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் – சரியாக இருக்குமா?” என்கிற ஒரு கருத்துக் கணிப்பை டிவிட்டரில் வெளியிட்டனர்.

https%3A 4.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி முகநூல் செய்தி 23.1.2016

https%3A 3.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி டிவிட்டர் செய்தி 23.1.2016

இதன் மூலம் – தமிழ்நாட்டு மக்களை குழப்பி, “திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு” என லயோலா கல்லூரியே சொன்னதாக நடகமாடியது விகடன். இதுகுறித்து விரிவாக இந்த இணைப்பில் காணலாம்: https://arulgreen.blogspot.com/2016/01/Paid-News-in-Vikatan.html

ஜூனியர் விகடனின் புதிய பித்தலாட்டம்

இப்போது “மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று சொன்னது போலவும், அதற்கு அது லயோலா கருத்துக்கணிப்பு அல்ல” என்று விகடன் குழுமம் விளக்கம் அளிப்பதாகவும் – ஜூனியர் விகடனில் ‘கேள்வியும் நானே – பதிலும் நானே’ வெளியிட்டுள்ளனர்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 23.1.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில்“லயோலா கல்லூரியில் பணியாற்றிய போது மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பை தொடங்கி கருத்துக் கணிப்புகளை நடத்திவந்த பேராசிரியர் இராஜநாயகம், கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதே அமைப்பின் சார்பில் கருத்துக்கணிப்பு கடைவிரித்து நடத்தி வருகிறார்”என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னதாக அப்பட்டமாக பொய் சொல்கிறது ஜூனியர் விகடன். 

தவறாக செய்தி வெளியிட்ட விகடன் குழுமம் அதற்காக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், விகடன் குழும மோசடியை அம்பலப்படுத்தியவர்கள் மீதே இப்போது பழியைப் போடுகின்றனர்.

விகடன் குழுமத்துக்கு எதுக்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு?

தொடர்புடைய செய்திகள்:

1. விகடன் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும்: பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்து! 

2. மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரிக்கு விளம்பரம் செய்த ஜூனியர் விகடனுக்கு என்ன தண்டனை? 

3. ‘விலைபோன’ தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்? 

 

செய்தி பதிவு: https://arulgreen.blogspot.com/2016/02/Vikatan-PaidNews.html

அவசர அவசரமாக நடக்கும் துணைவேந்தர் நியமனங்கள்: மிகப்பெரிய அளவில் ஊழல்!

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதையும், அதிக விலை தருபவர்களை அப்பதவிகளில் அமர்த்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த 16.01.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாற்றியிருந்தேன். அக்க்குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையில் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில்  பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறுவதாக வெளியாகும் தகவல் கவலையளிக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உள்ளது. அந்த அமைப்பால் அவ்வப்போது வகுக்கப்படும் விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவது கட்டாயம் ஆகும். ஆனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் இந்த விதிகளை கடைபிடிக்கும் தமிழக அரசு, துணைவேந்தர் நியமனத்தில் கடைபிடிப்பதில்லை. தொடக்க நிலை பணிகளுக்கே விதிகள் கடைபிடிக்கப்படும் போது,  உயர்ந்த நிலை பணிகளுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுவது தான் முறையாகும். அவ்வாறு விதி கடைபிடிக்கப்படாவிட்டால் ஊழல்களும், முறைகேடுகளும் தலைதூக்கும் என்பது தான் இயற்கை. இதை நன்றாக உணர்ந்துள்ள தமிழக அரசு, துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் செய்வதற்கு வசதியாகவே பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை பின்பற்ற மறுக்கிறது என்பது தான் உண்மை.
இதை எதிர்த்து கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக அமையலாம் என்பதால், அத்தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகம், சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக இந்த 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுக்களுடன் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமது விருப்பப்படியான பெயர்களை  கொடுத்து அந்த பெயர்களை ஆளுனருக்கு பரிந்துரைக்கும்படி அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 
அதன்படியே, 3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான பரிந்துரைப்பட்டியலை ஆளுனரிடம் தேர்வுக்குழுக்கள் தாக்கல் செய்திருக்கின்றன.  அப்பட்டியலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 பேர் துணைவேந்தர்களாக தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கான பணி நியமன ஆணை எந்த நேரமும் அவர்களுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மூவருமே பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த தகுதிகளை பெறாதவர்கள். பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி பேராசிரியராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களை மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்க முடியும். ஆனால், பேராசிரியராக குறைந்த ஆண்டுகளே அனுபவம் பெற்றவர்களையும், இணை பேராசிரியர்களாக இருப்பவர்களையும் துணைவேந்தர்களாக நியமிப்பது  ஏற்க முடியாத ஒன்றாகும். இதனால் தமிழகத்தில் பல்கலைக்கழக உயர்கல்வி மிக மோசமாக சீரழியும்.
தமிழ்நாடு தகவல் ஆணையம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றில் முழுக்க முழுக்க அ.தி.மு.க.வினரை நியமித்து அவற்றின் புனிதத் தன்மையையும், நேர்மையையும் குழிதோண்டி புதைத்த அ.தி.மு.க. அரசு, தகுதியில்லாதவர்களையும், பணம் வைத்திருப்பவர்களையும் துணைவேந்தர்களாக நியமித்து பல்கலைக்கழகங்களையும் சீரழிக்க முயல்கிறது. இந்த முயற்சி தடுக்கப்படாவிட்டால் தமிழக பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி அமைப்பாக இல்லாமல் கல்வி வணிக நிறுவனங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. பல்கலைக் கழக மானியக் குழு நிர்ணயித்த கல்வித்தகுதியும், திறமையும், தலைமைப் பண்பும் கொண்ட பேராசிரியர்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளனர். அவர்களை புறந்தள்ளிவிட்டு தகுதியில்லாதவர்களை துணைவேந்தர் பதவியில் அமர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கல்வித் தகுதி குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை துணைவேந்தர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர் பணி நிறைவு அடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகளைத் தொடங்கி  வெளிப்படையான முறையில் நியமனம்  செய்ய வேண்டும்