Home Blog Page 5840

யார் சொல்லி யார் கேட்பது?

இஸ்லாம் மதத்தில் தர்கா வழிபாடு, தாயத்து, பில்லிசூனியம் போன்றவற்றை செய்துகொண்டிருக்கும் இந்திய முஸ்லீம்களை திருத்தி வழிகாட்ட நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு “அது மற்ற மதத்தை சீண்டாத வரை” வரவேற்க வேண்டிய ஒன்று.

ஒவ்வொரு மிஷனரி மதத்திற்கும் தன் மதத்தை பின்பற்றுபவர்களை இதைச்செய் இதைச்செய்யாதே எனக்கூற உரிமை உண்டு. தீவிரவாதம் செய்யாதே என்று யாராவது சொல்வார்களா என்று பார்க்கிறேன். சில மத அமைப்புகள் மற்றவர்களை கொலை செய்வது குரானில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரமாக காட்டுகிறார்கள்!

இதே போல கிருத்துவம் மதத்திற்கும் ஒரு ஒழிப்பு மாநாடு தேவை. தென் மாவட்டங்களில் கிருத்துவ மதம் தனித்துவம் இழந்து வேகமாக இந்து மதமாக உருமாறி வருகிறது.

விஷயம் தெரியாமல் குத்துவிளக்கு ஏற்றி தீபத்தை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். லஷ்மி விளக்கு போல மேரி விளக்கு வைத்து அழகு பார்க்கிறார்கள்.  சிலை வழிபாடு முட்டாள் தனம் என்று கூறி மதம் மாற்றியவர்கள் பல சர்ச்களிலும் சிலை முன் தான் மண்டியிடுகிறார்கள். பல சர்ச் களிலும் என்ன விஷயம் என்று தெரியாமல் கொடி மரம் வைத்திருக்கிறார்கள். இந்து கோவில்களைப்போல கொடியேற்றம் கொடியிறக்கம் நடக்கிறது. கிருத்துவ மத சிலைகளை வைத்து தேர் இழுக்கிறார்கள். மேற்கத்திய பேண்ட்செட் அடித்தவர்கள் இப்போது மேளதாளம் சிங்காரி மேளம் என்பதற்கு மாறிவிட்டார்கள்.  ஊதுபத்தி கொழுத்துவது எல்லாம் எப்போதோ வந்துவிட்டது. சூடம் காட்டுவது கூட சில இடங்களில் வந்துவிட்டதாக கேள்வி. இதற்கும் மேல் சர்ச்களை இந்து சமய கோவில்களைப்போல கட்டி அழகு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கிருத்துவம் தோன்றிய நாட்டில் மலர்களை வைத்து மாலை கட்டி பயன்படுத்தும் பழக்கம் இருந்ததா என தெரியவில்லை ஆனால் இந்திய கிருத்துவர்களிடம் இந்த பழக்கம் உண்டு.

செத்தவன் எப்படி கடவுளாக முடியும் என்று கேட்டவர்கள் இப்போது மனிதனாக பிறந்து செத்தவர்களை புனிதர்களாக்கி அவர்களுக்கும் சர்ச் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இறந்த முன்னோர்களை வணங்கக்கூடாது என்போர்கள் நினைவுகூறுதலை விட்டுவிட்டு கல்லறை முன் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். பல கிருத்துவர்களும் இப்போது யோகா, தியானம் செய்கிறார்கள். சிவனின் பரத நாட்டியம் கற்கிறார்கள்.

மற்றவர்களிடம் ஜோஷியம் கேட்ட காலம் போய் கிருத்துவர்களே ஜோஷியம் சொல்ல ஆரம்பித்து அந்த பிசினஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஏசு உருவம் பதித்த தகடு வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் போல நம்பிக்கைக்காக கையில் நூல் கட்டுகிறார்கள். யோகிகள் மந்திரம் சொல்ல பயன்படுத்தும் முத்து மாலை வைத்து எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்களைப்போல திருமண பொருத்தம் பார்க்கிறார்கள். நல்ல நேரம் பார்த்து நல்ல செயல்களை துவங்க ஆரம்பித்துவிட்டர்கள். இந்துக்களைப்போல வேண்டுதல்களும் பரிகாரம் செய்வதும் உண்டு.

வீடு கட்டும் முன் பூமி பூஜை போடுகிறார்கள். பலரும் வீடு கட்ட வாஸ்து பார்க்கிறார்கள். பூவைத்தல் பொட்டு வைத்தல் எல்லாம் எப்போதோ வந்துவிட்ட விஷயங்கள். தேவன், ஜபம், தேவாலயம், பாவம், பாவி,  போன்ற பல சம்ஸ்கிருத சொற்களையே அவர்களும் பயன்படுத்துகிறார்கள். இந்துக்களின் ஏடு வாசித்தல் போல அவர்களும் எதையோ எழுதிவைத்து வாசிக்கிறார்கள்.

மலை மேல் சர்ச்களை வைத்து மலை ஏற ஆரம்பித்தாகிவிட்டது. இனி சீக்கிரமே அலகு குத்துதல் காவடி எடுத்தல் பழக்கும் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஏசு சிலை வைத்து அபிஷேகம் செய்வது மட்டும் தான் பாக்கி. அதுவும் சீக்கிரமே வந்து இந்துவாக மாறிவிடும்.

இந்து சமயத்தின் தலைமை உரிமையை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் இந்துக்கள் செய்யும் சில சடங்குகளை யாரும் குறை சொல்ல உரிமை இல்லை. அனைத்து சடங்குகளும் அவரவர் நம்பிக்கை அந்தந்த ஊர் பழக்கம் என்பதுடன் நின்றுவிடுகிறது. காலப்போக்கில் தேவையற்ற சடங்குகள் தானாகவே அழிநதுவிடும். இருந்தாலும் பல குருமார்கள் அவ்வப்போது இதை செய் செய்யாதே என்பதை சொல்லி வருகிறார்கள், கேட்கத்தான் ஆள் இல்லை. யார் சொல்லி யார் கேட்பது?

காங்கிரசில் இருந்து நேதாஜியை விரட்டிய காந்தி

உங்களுடைய ரத்தத்தை தாருங்கள் பதிலுக்கு உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று சொன்ன போஸை அவர்
ஒரு டென்சன் பார்ட்டி- மெச்சூரிட்டி இல்லாதவர் என்று ஒப்பாரி வைத்தவர்கள் இந்திய அரசியலில் இருவர் உண்டு.ஒருவர் காந்தி இன்னொருவர் நேரு.நடிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் உண்மையானவர்கள் உணர்ச்சி வசபடுவார்கள் என்று..

காங்கிரசில் காந்திக்கும் நேதாஜிக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காமல் போக முக்கிய காரணம் தேசபந்து என்றழைக்கபட்ட சித்தரஞ்சன் தாஸ் தான்.ஏனெனில் நேதாஜியின் அரசியல் குருவே தாஸ் தான். இருவரும் வங்காளத்தை சேர்ந்தவர்கள்.இருவரும் ஐசிஎஸ் படித்தவர்கள்.தாஸின் அறிவுரையின் படியே ஐசிஎஸ் பதவியை உதறிவிட்டு சுதந்திர போராட்டத்தில் 1921 ம் ஆண்டில் பங்கேற்க வந்தார்.போஸ்.

காந்திக்கும் தாசுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமா கவே அவருடைய சிஷ்யரான சுபாசையும்காந்தி வெறுக்க
ஆரம்பித்தார்.1928ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த மராட்டிய மாநில காங்கரஸ் அரசியல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நேதாஜி, பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்று பிரகடனம் செய்தார்.

ஆனால் காந்தியோ எங்களுக்கு பரிபூரண சுதந்திரம் தேவை யில்லை..ஆங்கிலேயர்களின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஆட்சியமைப்பு போதும் என்றார்.இதில் காமெடி என்ன வென்றால் 1927ல் சென்னையில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் பூரண சுயராஜ்யமே நமது குறிக்கோள் என்று தீர்மானம் போடபட்டிருந்தது.
அடுத்து1929 ம் வருடம் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காந்தியே பூரண சுதந்திரம் வேண்டும் என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எது செய்தாலும் புகழும் பெயரும் தனக்கே வரவேண்டும் என்றே செயல்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.ஏனெனில் அது மட்டுமல்லாமல் லாகூர் மாநாட்டில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் ஜனவரி 2ம் தேதி நடை பெரும் என்று அப்போதைய தலைவர் நேரு அறிவித்திருந்தார். அதை அறிந்த நம்ம போஸும் வங்காள சிங்கங்கள் ஊருக்கு சென்று விட்டார்கள்.

இதை பயன் படுத்தி குறுக்கு புத்தி கொண்ட காந்தியும் நேருவும் போஸ் இல்லாத நாளிலேயே தேர்தல் வைத்து அவர்கள் ஆட்களே தேர்ந்தெடுத்து கொண்டார்கள் என்பதை நினைத்தால் காந்தி எல்லாம் ஒரு மகான் என்று எவனாவது சொன்னால் காரி துப்பி விடுவேன் அவன் மூஞ்சியில்..

தான் இல்லாத நேரத்தில் தேர்தல் நடத்திய காந்தி நேருவின் திருட் டு தனத்தை அறிந்த நேதாஜி பொங்கி எழுந்து விட்டார். பின்னே இருக்காதா…உண்மையானவன் என்றும் உணரச்சி வசப்படவே செய்வான்.கோபப்பட்ட நேதாஜி உடனே காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை அன்றே அறிவித்தார்.

இதை விட நேரு செய்த பெரிய எட்டப்பன் வேலை எது தெரியுமா?
இந்திய சுதந்திரத்திற்கு வெளி நாடுகளில் ஆதரவு திரட்டி கொண்டி ருந்தார் நேதாஜி.அப்படி வியன்னாவில் இருந்த பொழுது எட்டப்பன் நேரு கடிதம் எழுதி லட்சுமணபுரியில் நடைபெற உள்ள காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்க வாருங்கள் என்று உருகி அழைத்தார்.

ஆயிரம் தான் நேருமீது கோபம் இருந்தாலும் தேசத்தின் விடுதலை சம்பந்த பட்ட விஷயம் என்றவுடன் வியன்னாவில் இருந்து பம்பாய் வந்த போஸை ஆங்கிலேய அரசு அள்ளி ஜெயிலில் போட்டது.வெளிநாட்டில் இருந்த போஸை வெள்ளைக்காரன் பேச்சை கேட்டு இந்தியா வரவைத்து ஜெயிலில் அடைத்த மாமா தான் நேரு.

இருந்தாலும் பதினோரு மாதங்களில் ஜெயிலில் இருந்து வெளி வந்த போஸ் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கல்கத்தா வில் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படி காங்கிரஸ் கட்சியில் போஸுக்கும் காந்திக்கும் உட்கட்சி போர் நடந்து வரும் நிலையில் 1939 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம்இரண்டாம் உலகப்போர் வந்து விட்டது..இந்த போரில் இங்கிலாந்தும் பங்கேற்கும் அதனால் அவர்களை சுதந்திரம் கேட்டு டிஸ்டர்ப் செய்ய கூடாது என்றார் காந்தி..ஆஹா..என்ன ஒரு தேச பற்று…

ஆனால் நேதாஜியோ இது தான் சரியான சந்தர்ப்பம் ..ஏனெனில் வெளிநாடுகளுடன் போர் நடைபெறும் பொழுது இங்கிலாந்தால் இந்தியாவின் உள்நாட்டில் கவனம் செலுத்த முடியாது ..ஆதலால் போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என்றார். இந்த நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் தேர்தல் வந்தது.இதில் போட்டியிட்ட நேதாஜியை எதிர்த்து காந்தியின் கைத்தடி பட்டாபி சீதாராமய்யர் போட்டியிட்டார்.

தேர்தல் நடந்த பொழுது காந்தி சீதாராமய்யருக்கு போடும் ஓட்டு எனக்கு போடும் ஓட்டு என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் களிடம் மன்றாடினார்.ஆனால் நேதாஜி மாபெரும் வெற்றி பெற்றார்.இதனால் கட்சி தன்னுடைய கையை விட்டு போவதை அறிந்த காந்தி பட்டாபியின் தோல்வி என்னுடைய தோல்வி காங்கிரஸ் கட்சி பாதை மாறுகிறது என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார்.

இதனால் மனம் மாறியசெயற்குழு உறுப்பினர்கள் நேதாஜிக்கு ஒத்துழைப்பு தர மறுத்தனர்.கடைசியில் காந்தியின் கபடவேடம் வெற்றி பெற்றது.நேதாஜி தன்னுடைய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பின் கல்கத்தா வில் உள்ள ஹஸ்ரா பூங்காவில் நேதாஜி நிகழ்த்திய நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்ற உரையை கேட்டு மானமிருந்து இருந்தால் காந்தியும் நேருவும் அன்றே அரசியலில் இருந்து விலகி இருப்பார்கள்.

திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

 

திருச்செந்தூர்:

இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு அனைத்து முருகன் ஆலயங்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் தைபூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இன்று குவிந்தனர். உள்ளூர், வெளியூர் பக்தர்களுடன் வெளிநாட்டு முருக பக்தர்களும் அதிக அளவில் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். கடலில் புனித நீராடி ஆலயத்துக்குச் சென்று மகிழ்ந்தனர்.

நல்லூர் கந்தசாமி கோயில் தைப்பூச தேரோட்டம்

nallur kandasamy temple

நல்லூர் கந்தசாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இலங்கையின் வடக்கு மாகாண யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூரில் வேல் வடிவாய்க் குடிகொண்ட வேலவன் கந்தசாமி ஆலயத்தில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.
அதன் காணொளி:

 

போஸ்டரில் சிரிக்கும் “அக்கா”

எத்தனை எத்தனை சொந்தங்கள்.. தமிழ்நாட்டில்!

அம்மா, ஐயா, அண்ணன்,
லேட்டஸ்ட்..
‪#‎_அக்கா‬

கொடுத்துவைத்த தமிழினம்!
உறவுகளோடு கொஞ்ச!smile emoticon

கனிமொழியின் செங்கோட்டை வருகையையொட்டி, நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்… கலைஞர் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் அமைப்பின் நிகழ்ச்சியில், பேசுகிறார் கனிமொழி.

akkaa

 

வெள்ள மீட்பில் துடிப்புடன் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் சேவாபாரதியால் கௌரவிப்பு

சென்னை:
சென்னையில் வெள்ள மீட்பில் துடிப்புடன் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி, சேவாபாரதி அமைப்பின் சார்பில் இன்று சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவாபாரதி இணைந்து சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவித்தது.

சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடை பெற்ற  இந்த நிகழ்ச்சியில், சுமார் 2500 பேருக்கு நிவாரணப் பொருள்கள் 20 நிமிடங்களில் வினியோகம் செய்யப் பட்டது. எந்த விதமான தள்ளு முள்ளுவும் கூச்சல் குழப்பமும் எதுவும் இல்லாமல் அனைவரும் அமைதியாகப் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ஆதரவில்லாமல் ஒருவரும் வெற்றி பெற முடியாது

 

கரூர்:

கேப்டன் தயவில்லாமல் ஒருவர் கூட தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்க முடியாது என தே.மு.தி.க மாவட்ட செயலாளர் தங்கவேலு பேசினார்.

கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணையும் விழா தே.மு.தி.க மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றிற்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து தே.மு.தி.க வில் தங்களை இணைத்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட செயலாளர் தங்கவேலு பேசுகையில்., தமிழக சட்டசபையில் தே.மு.தி.க தலைவர் கேப்டனின் தயவில்லாமல் ஒரு கட்சி கூட, ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என சூளுரை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அறிவின்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வக்குமார் மற்றும் குமார், நகர செயலாளர் காந்தி, கேப்டன் மன்றம் சோமூர் ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தி: சி.ஆனந்தகுமார், கரூர் செய்தியாளர்

கல்வித் துறை ஊழலால் 3 மாணவிகள் உயிர் பறிபோயுள்ளது: அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை:

கல்வித்துறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதால், 3 மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. ஜெயலலிதா அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம்- சின்னசேலம் அருகில் பங்காரத்தில் இயங்கி வந்த இயற்கை மற்றும் சித்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது.

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் விதிமுறைகள் பின்பற்றப்படாததாலும் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா, சென்னை எர்ணாñரைச் சேர்ந்த மோனிஷா, காஞ்சிபுரம் செய்யூரைச் சேர்ந்த சரண்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தலா 2 இலட்சம் ரூபாய் அளித்துவிட்டு, இந்தக் கல்லூரியில் இயற்கை மற்றும் சித்த மருத்துவம் பயின்று வந்தனர். இரண்டாம் ஆண்டில் பயின்ற மாணவிகள் அடிப்படை வசதிகள் இன்றி, சரிவர செயல்படாத இக்கல்லூரி நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையிடமும புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து மாணவிகளிடம் பெற்ற கட்டணத் தொகை மற்றும் சான்றிதழ்களை திருப்பி அளிக்குமாறு எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், ஆட்சியரின் உத்தரவை ஏற்காமல், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருந்தது.

பல்வேறு சிரமங்கள், குடும்பப் பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்தி ஏமாற்றம் அடைந்த மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா மூவரும் ஒன்றாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கண்ட கனவுகள் ஒரு நொடியில் சிதைந்துவிட்டன. இந்தக் குடும்பங்களுக்கு எப்படி ஆறுதல் கூற முடியும்?

அடிப்படை வசதிகள் இல்லாமல் தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கு அரசு அனுமதி வழங்கியது ஏன்?

கல்வித்துறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதால், மூன்று மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. ஜெயலலிதா அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

சின்னசேலம் பங்காரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகளின் தற்கொலைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? பொதுவிவாதத்துக்கு அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ்

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? அவர் பொதுவிவாதத்துக்கு தயாரா என்று அறைகூவல் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
அவர் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தமது அரசு நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். அதையும் தாண்டி மக்களுக்காக பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை  50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மக்களின் மறதி மட்டும் முதலீடாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே நிறைவேற்றிவிட்டதாக வீர வசனம் பேசுவதும் வாடிக்கையாகி விட்டது. அதேபோல் தான் இப்போதும் 2011-ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், 10% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட  நிலையில், மீதமுள்ள 90% இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

*   2013-ஆம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; 3000 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; 4 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை ஒரு மெகாவாட் கூட கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.

*   வேளாண் வளர்ச்சிக்காக இரண்டாம் விவசாயப் புரட்சித் திட்டம் செயல்படுத்தப்படும்; வேளாண் துறையில் 9% வளர்ச்சி எட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு புரட்சியும் நடக்க வில்லை. மாறாக வேளாண்மை வளர்ச்சி மைனஸ் 12.1% என்ற அதல பாதளத்துக்கு சென்றது.

*   கரும்பு கொள்முதல் விலை 2011 ஆம் ஆண்டில் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்;கரும்பு உற்பத்தி 475 லட்சம் டன்னிலிருந்து 1000 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்றார்கள். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. மாறாக கரும்புக்கான பரிந்துரை விலையை தமிழக அரசு ரூ.200 குறைத்தது; சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.1050 கோடியை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கரும்பு சாகுபடி பரப்பு பாதியாக குறைந்துவிட்டது.

*   விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று அதிமுக கூறியது. ஆனால், இழப்பு தான் இரட்டிப்பானது. இதனால் 4 ஆண்டுகளில் 1500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

*  ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும்; இதற்காக 20 ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பால் உற்பத்தியை தினமும் ஒரு கோடி லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மாறாக குடிநீர் விலைக்கு விற்கப்பட்டதும், பால் சாலைகளில் கொட்டப்பட்டதும் தான் நடந்தது.

*   கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என்றார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல் அரசு சார்பில் ஒரு கேபிள் டி.வி.யைத் தொடங்கி, பிடிக்காத தொலைக்காட்சிகள் பழிவாங்கப்படுகின்றன.

*   கச்சத்தீவு மீட்கப்படும் என்றனர். மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுதான் நடந்தது.

*   அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்; சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவுமே நடக்காததால் அரசுத்துறைகளில் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

*   ஊக வணிகம் தடுக்கப்பட்டு விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், ஊக வணிகம் தழைக்கிறது. துவரம் பருப்பு கிலோ ரூ.260 என்ற உச்சவிலையைத் தொட்டது.

*   58 வயதுக்கும் மேற்பட்டோருக்கு இலவச பேரூந்து பயண அட்டை திட்டமும் நிறைவேறவில்லை.

*   தமிழகத்தில் ரூ.1.20 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும். தமிழகம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒரு பைசா கூட கூடுதல் வருவாய் ஈட்டப்படவில்லை. மாறாக  ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை ரூ.4.12 லட்சம் கோடி கடனாக அதிகரித்தது தான் சாதனை.

*   சட்டம் – ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றார்கள். கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்ததுதான் மிச்சம். கடந்த 5 ஆண்டுகளில் 9,948 கொலைகளும், ஒரு லட்சம் கொள்ளைகளும் நடந்துள்ளன.

*   உயர்கல்வித்துறையில் புதிய சாதனைகள் படைக்கப்படும் என்றார் ஜெயலலிதா. அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக அனுமதியில்லாத திருவள்ளூர் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர்கள்  படிப்பையும், பணத்தையும் இழந்தது தான் மிச்சம். நேற்று கூட விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள தனியார் இயற்கை மற்றும் யோக மருத்துவ கல்லூரியில் படித்து வந்த  மாணவிகள் 3 பேர் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பாலியல் தொல்லை தரப் பட்டதாலும் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்த அவலம் நடைபெற்றிருக்கிறது.

அ.தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பட்டியல் நீளமானது. ஆனால், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், 90% நிறைவேற்றப் படவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருப்பதாக நான் கூறுகிறேன். இது குறித்து   முதலமைச்சருடன் பொதுவிவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா தயாரா?

இந்து முன்னணி சேலம் கோட்ட மாநாடு

இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட மாநாடு ஜன.24 இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் வீடியோ தொகுப்பு (நேரலை)