Home Blog Page 5841

இளம் இயக்குனர்கள், நடிகர்களின் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா: கமல் புகழாரம்!

மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், கீதன் பிரிட்டோ, ஈஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “ஓய்”

இப்படத்தின் இசை வெளியீடு நேற்று மிகவும் எளிமையாக நடைப்பெற்றது. இப்படத்தின் இசையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் கமல் ஹாசன் பேசியதாவது, தன் வசிகர இசையால் பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கனவு படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா. 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்கள் அதற்கு சான்று. இன்று ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கும் ஓய் படத்திற்க்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படமும் வெற்றி பெற்று சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள் என உலகநாயகன் கமல்ஹாசன் கூறினார்.

கச்சா எண்ணெய் விலைக் குறைப்பு: பின்னணி அரசியலும் நடப்பு நிலையும்!

கச்சா எண்ணெய் உற்பத்தி: அமெரிக்கா, ஈரானை தோற்கடித்தது இப்படிதான்!

கச்சா எண்ணெய்  விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே.. அல்லது குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இது பெட்ரோல் விலை குறையக்கூடும் என்ற நமக்கான நம்பிக்கையை அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஆய்வாளர்கள் சொல்வது… கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை தற்போது 30 டாலர்கள். அது மேலும் 10 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளது. அப்படியென்றால் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் வருமோ… என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஓடுவது இது நிஜம்.

ஆனால், நிஜத்தின் நிஜம்…?

கச்சா எண்ணெய் விலை சென்ற வருடத்தின் விலையைவிட 50% குறைந்து, கடந்த பதினோரு ஆண்டுகளில் இல்லாத ஒரு குறைந்த விலையில் தற்போது விற்க்கப்படுகிறது. ஆனால், கச்சாவிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, முறையே 13% மற்றும் 23% மட்டுமே குறைந்துள்ளது.

இது எதை தெளியப்படுத்துகிறது?

கச்சா எண்ணெய்  விலை குறைப்பின் விளைவு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் முழுவதுமாக மாற்றப்படவில்லை. ஒரு பேரல் 120 டாலராக கச்சா எண்ணெய் விலை இருந்தபோது, பெட்ரோல் ரூ.82 வரை விலை ஏற்றப்பட்டது. தற்போதைய கச்சா எண்ணெய்  விலை 30 டாலர். ஆனால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.59.77. ஆக நாம் வாங்கும் பெட்ரோல் விலையில் குறைப்பு முழு வீச்சில் இல்லை.

இப்படி நடப்பது சாத்தியமில்லை? மூலப்பொருள் விலை குறைக்கப்பட்டால், அதில் இருந்து தயாரிக்கப்படும் துணை பொருளின் (by product), விலையும் இறங்கத்தானே வேண்டும். இப்படி நடக்காமல் போனதற்கு என்ன காரணம்?

அரசாங்கம், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விகிதம் ஏற்றப்பட்டு, மூல விலை குறைந்தாலும், அதில் போடப்படும் வரிகளின் அளவால், நமக்கு கிடைக்கக்கூடிய விலை குறைப்பு கிடைக்காமல் போய்விட்டது. வரி விகிதம் டீசலுக்கு 18 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாகவும், பெட்ரோல் மேல் 30 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆக, இந்த வகையான பெட்ரோல் விலை நிர்ணயிப்பு, அரசாங்கத்தின் கையில் ஒரு கருவி. இதை வைத்துப் பார்க்கும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க விலை குறைப்பு இருக்காது என்றே தோன்றுகிறது. 10 டாலர் என்றே கச்சா எண்ணெய்  விலை இறங்கி வந்தாலும், அரசாங்கம் வரியை உயர்த்தி விலையை தற்போதுள்ள நிலையிலேயே விற்கக்கூடும்.

சரி, எதனால் கச்சாஎண்ணெய்   விலையில் இந்த சரிவு? இந்தக் காரணங்களை நாம் ஆராய்ந்தால், விலை குறைப்பு வருவதற்கு வழியில்லை என்பது புரிந்துவிடும்.

முதலில், அமெரிக்க நாட்டின் ஷேல் ஆயில் தயாரிப்பு. ஷேல் ஆயில் என்பது என்ன? ஆயில் ஷேல் கற்களிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை கச்சா தான் அது. இறக்குமதியில் சில வருடங்கள் முன் வரை முதல் இடத்தில் நின்ற அமெரிக்கா, இன்று ஈரானையும் தோற்கடித்து முதலாவது கச்சா எண்ணெய்  ஏற்றுமதியாளராக மாறிவிட்டது. தற்போது ஏற்பட்டுள்ள Shale Oil boom அமெரிக்காவின் உற்பத்தி, சவுதி அரேபியாவைவிட அதிகமாக செய்ய வைத்துள்ளது. தற்போதைய கையிருப்பு இன்னும் இரண்டு வருடத்திற்கு தாராளமாக தாக்கு பிடிக்க முடியும்.

ஆனால், OPEC (Organization for Petroleum Exporting countries) இதை முறியடிக்கச் செய்வதுதான் இந்த கச்சா விலை குறைப்பு. அடி மாட்டு விலைக்கு ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, வெனிசூலா, இந்த நாடுகளின் கூட்டமைப்பு OPEC, கச்சா விலையை குறைத்தால் அதைவிடக் குறைந்த விலையில் விற்க முடியாமல் தற்போதுள்ள Shale Oil கம்பெனிகள் தங்கள் கடையை மூடிவிடும் என்ற கணிப்பு. முதலிலேயே சொன்னபடி Shale Oil இயற்கை எரிபொருள் அல்ல. அதைத் தயாரிப்பதற்கே 50 டாலர் வரை செலவாகும். எனில், 30 டாலருக்கு ஒரு பாரலை எப்படி விற்க முடியும்? ஆக OPEC நினைத்தபடி, அமெரிக்கா தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்ட பின், கச்சா விலை முன் போல் ஏற்றப்பட்டு விடும்.

இரண்டாவது, சீனாவின் பொருளாதார சரிவு. சீனா மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவை மற்றும் இருப்பில் பொருத்தமில்லாமை உண்டாகிவிட்டது. கச்சா தேவைக்கு மேல் கிடைக்கிறது. வாங்க ஆளில்லாமல் விலை சரிகிறது. சவுதி அரேபியா தன் உற்பத்தியைக் குறைக்கலாம். ஆனால், செய்ய வில்லை. அமெரிக்காவை வெளியேற்றும் முயற்சியில் இந்த முடிவு. இதனால் சவுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. 750 பில்லியன் டாலர், ரிசர்வில் உள்ளது. அதைத்தன் குறுகிய கால நிதித்தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆக, இந்த விலை குறைப்பு  அமெரிக்காவை நோக்கி என்பதால் எதிர்மறையான முடிவுகள் எடுக்கப்படலாம்.

மூன்றாவது, டாலர் இண்டெக்ஸ், இது கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இல்லாத உயரத்தில் தற்போது நிற்கிறது. டாலர் ஏற்றம் எப்போதும் கச்சா விலை இறக்கத்தில் தான் முடியும். ஆனால், 50 டாலருக்கு கீழ் விற்க முடியாமல் Shale Oil கம்பெனிகள் மஞ்சள் கடுதாசி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் டாலர், தன் ஏறு முகத்தைவிட்டு இறங்கு முகமாக மாறிவிடும். இப்படி நடந்தால் கச்சா விலை ஏற ஆரம்பித்துவிடும்.

நான்காவது, நம் அரசாங்கத்தின் கொள்கை. கச்சா விலை ஏற்றத்தின்போது அரசாங்கம் அதன் விலையை ஒரு அளவில் வைக்க நிறைய மானியங்கள் கொடுத்தது. இந்த மானியங்களுக்கான பணம் எங்கிருந்து வந்தது? கடன் மூலமாகத்தான். அதனால், இந்த விலை குறைப்பை ஈடு செய்யும் விதத்தில் வரிகள் ஏற்றப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் அந்தக் கடனை அடைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணத்தினால் கடன் முழுவதும் அடைக்கப்படும் வரை, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும், அதிக வரி வசூலிக்கப்பட்டு நமக்கு கொடுக்கப்படும் விலையில் அதிக மாற்றம் இருக்காது.

ஐந்தாவதாக, அரசாங்கம் அதிக வரி என்று போட்டு அதில் கிடைக்கும் வருமானம் ஒரு வித buffer ஆக உபயோகிக்கிறது. நாளை ஏதோ காரணங்களினால் கச்சா விலை அதிகமானால் விலையை ஏற்றாமல், கைவசம் உள்ள இந்த buffer-ஐ மானியமாக கொடுக்கலாம்.

கடைசியாக, விலை குறைக்காமல் இருக்க முக்கிய காரணம் வாகனங்களின் உபயோகம் அதிகமாகாமல் தடுப்பதற்காகவே. தற்போது உள்ள மாசு நிலைமையை எல்லோரும் அறிந்ததே. பெட்ரோல் விலை குறைந்தால் வாகனங்கள் மானாவாரியாக விற்கப்படும், வாங்கப்படும், ஓட்டப்படும். இதைத்தடுக்க பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அரசாங்கம் கொண்டு வராது.

ஆக, மேற்படி காரணங்களினால் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம், விலை குறைப்பு இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது!

கட்டுரை:

மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கல்லூரிக்கு சீல்

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகள் தற்கொலை இறப்புக்குக் காரணமான கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லூரியின் உரிமையாளர் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி முதல்வர் வாசுகி மற்றும் கணவர் சுப்பிரமணி ஆகிய இருவரை தனிப்படை பிடித்துள்ளனர்.

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலை குறித்து விசாரணை நடத்த ராமதாஸ் கோரிக்கை

சென்னை:
விழுப்புரம் அருகே சித்த மருத்துவ மாணவிகள் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து  அவர் வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்திலுள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் நேற்று மாலை அருகிலுள்ள கிணற்றில் ஒன்றாக குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இது பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளிக்கிறது. அந்த   மாணவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரத்தில் மூன்று மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி என்ன? என்பதை ஆராய வேண்டும். எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் நடக்கும் கட்டணக் கொள்ளை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதியின்மையை எதிர்த்து அங்கு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சில மாணவர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த அறிக்கையை மேல்நடவடிக்கைக்காக  தமிழக அரசுக்கும், எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்திற்கும் மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது. ஆனால், அதன்மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் தமிழக சுகாதாரத்துறை எடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி, சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகி  வாசுகியும், அவரது மகன் சுதாகரும் அடிமைகளைப் போல நடத்தியுள்ளனர். கல்லூரி வளாகத்திலுள்ள  முள் மரங்களை வெட்டுவது, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்த்து கேள்விக் கேட்பவர்கள் கல்லூரி நிர்வாகியின் சமுதாயத்தைச் சேர்ந்த அடியாட்களால் மிரட்டப்பட்டிருக்கின்றனர். பாலியல் சீண்டல்களும் இருந்ததாக ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியுள்ளன. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத மாணவிகள்,‘‘கட்டிய பணம் கூட தேவையில்லை… சான்றிதழ்களை கொடுங்கள். நாங்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்கிறோம்’’ என்று கெஞ்சிய போதும் அதை கல்லூரி நிர்வாகம் பொருட்படுத்தாததால் மாணவிகள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்புகார்கள் எதையும் புறக்கணிக்க முடியாது.

எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி மீதான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசும் மருத்துவப்பல்கலைக்கழகமும் உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், கல்லூரி நிர்வாகியின் சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அரசியல் கட்சி பிரமுகர் மூலம் அதே சமுதாயத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெண் உயரதிகாரிக்கு பெரும் தொகை தரப்பட்டு சித்த மருத்துவக் கல்லூரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுக்கப் பட்டிருக்கிறது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

சித்த மருத்துவக் கல்லூரி மீது ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், அதன்மீதும், அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அனுப்பிய விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசு தான் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். மாணவிகளின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அதற்கு காரணமான அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரியை மூடி முத்திரையிட்டு அதில் படித்து வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும்.

ஏகத்துக்கும் இறைவன்தான்!

ஏக இறைவன் அல்ல..
ஏகத்துக்கும் இறைவன்!

இறைவனுக்கும் குடும்பத்தைப் புகுத்தியவன் இந்து…
குடும்பத்துக்குள் இறைவனைக் கண்டவன் இந்து!

இறைவனுக்கு இணை வைப்பா?
எதிர்க்கேள்வி கேட்டவன் அல்ல!
இறைவன் மனித உருவில் உலவிய பூமியில்…
எளியோரைக் காத்தருளும் மனித உருவில்
இறைவன் வருவான் என்ற தத்துவ தரிசனம் இங்கே!

கற்கள் வெறும் கற்கள்தான்..!
ஆலயத்தினுள் கல்லாய்ச் சமைந்திடினும்..
கைதொழும் பக்தன் உள்ளத்தால்
கல் தெய்வமாகிறது!
அவன் நம்பிக்கை
இங்கே இறைவனை இறக்குகிறது!

இசையால் வசப்படுபவன்
நாட்டியத்தால் ஒட்டிக் கொள்பவன்
கலைகளால் கடவுள்தன்மையை
கல்லிலும் காட்டி நிற்பவன்!

இவை எதுவும் இல்லாமல் போனால்…
பாலைவனத்து மணல் வெளியில்
கானல் நீர்க் காட்சிக்கு மயங்குவான் போல்…
வானத்தை நோக்கி கையெடுத்துக்கதறி
நீர்த் துளிக்காய் ஏங்க வேண்டியிருக்கும்!

விஜயதாரணி அதிமுகவுக்கு தாவ போகிறாரா ?

 
காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டு அந்த பதவிக்கு எம்.ஜான்ஸிராணி நியமிக்க பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிரடியாக அறிவித்தது.
 
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு விஜயதரணி நீக்கத்தின் பின்னணியில் இருப்பதாக விஜயதாரணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, இன்று விஜயதாரணி சட்டமன்ற வளாகத்தில் கூட்டத்தொடர் முடிந்த பிறகு சந்தித்துப் பேசினார்.
 
அதன் பின்னர் விஜயதாரணி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். தவறு செய்த இளங்கோவனை விட்டு விட்டு என் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது பற்றி கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இணைவேன் என்று கூறியுள்ளார்.

மது விலக்கை அமல் படுத்தாததால் திமுக கூட்டணியிடம் அதிமுக ஆட்சியை பறி கொடுக்கும்! : ராஜநாயகம்

 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், தெரியவந்துள்ளது.
 
மக்கள் ஆய்வகம் தலைவர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
எங்களது அமைப்பினர்க டந்த சில மாதங்களாக 120 தொகுதிகளில் பல்வேறு மக்களிடம் கருத்துக்கள் கேட்டு ஆய்வு நடத்தினர். வருகிற சட்டமன்ற தேர்தலில், கூட்டணி குறித்து இன்னமும் முடிவாகாத நிலையில் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பீர்கள் என்ற கேள்வியை கேட்டோம். அதிமுகவுக்கு ஆதரவாக 33 .3 சதவீதத்தினரும் , திமுக வினருக்கு 33.1 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் .
மேலும் திமுக கூட்டணிக்கு 37.7 சதவீதத்தினரும், அதிமுக கூட்டணிக்கு 35. 7 சதவீதத்தினரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர் .தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. மேலும் மது விலக்கு முக்கிய பிரசாரமாக எடுத்து வைக்கப்படுகிறது.
 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் தி.மு.க தலைமையில் ஆட்சி அமையும் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் கூறினார்.

பேய் மிரட்டு மிரட்ட வருகிறது ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’

ஏடிஎம் புரொடக்‌ஷன் சார்பில் T.மதுராஜ் வழங்க, ஹாக்ஸ் ஐ ஸ்டுடியோ வாங்கி வெளியிட பேய் மிரட்டு மிரட்ட வருகிறது ராம்கோபால் வர்மா சவால் விட்டு எடுத்த படமான ‘சாக்கோபார்’

இரண்டேகால் லட்சத்தில் ஒரு நல்ல தரமான குறும்படம் எடுப்பதே சிரமம். ஆனால் ஒரு படமே எடுத்து அதனை வெற்றி படமாக்கியும் காட்டியிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா.

2,11,832 ரூபாய் தான் படத்தின் மொத்த பட்ஜெட்டே… ஆனால் படம் தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி அள்ளியது ஐந்து கோடிகள். இதனால் தான் ராம்கோபால் வர்மாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். பாலிவுட் ஜாம்பவான் அனுராக் காஷ்யப்பின் குரு இவர், அவ்வப்போது ட்விட்டர் சர்ச்சைகளில் சிக்கினாலும் ராம்கோபால் வர்மாவின் படங்கள் சக்கை போடு போடுபவை. தேசிய விருது உள்பட ராம்கோபால் வர்மாவுக்கு கிடைத்த அங்கீகாரம் ஏராளம்.

தன்னை விமர்சித்த சிலருக்கு சவால் விடும் வகையில் தான் இரண்டேகால் லட்சத்தில் படம் எடுத்தார் ராம்கோபால்வர்மா. நடிகர்கள் நவ்தீப்பும், தேஜஸ்வனியும் அதற்கு சரியான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தெலுங்கில் வெளியாகி சில கோடிகளை அள்ள, பாலிவுட்டுக்கும் போய் பல கோடிகளை அள்ளியது.

இப்படி கோடிகளை அள்ளிய படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட் அடிக்க இப்போது மூன்றாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்.

அவரது இந்த முயற்சி தமிழுக்கு வருவது என்பது வணிக நோக்கத்தை தாண்டி இப்படியும் ஒரு படம் எடுத்து தங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என்று தமிழ் சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளைஞர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான்.

தமிழில் சாக்கோபார் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நவ்தீப், தேஜஸ்வனி நடித்திருக்கிறார்கள்.

ஏடிஎம் புரடக்‌ஷன் சார்பில் T.மதுராஜ் வாங்கி மொழிமாற்றம் செய்த படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி வெளியிடுகிறது ஹாக்ஸ் ஐ ஸ்டுடியோ. சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என சினிமா பிரபலங்கள் கணித்திருக்கிறார்கள்.

கோடிகளில் படம் எடுத்து லட்சங்களில் வசூல் பார்க்கும் இன்றைய மோசமான சினிமா சூழலில் இது போன்ற படங்கள் வருவது ஆரோக்கியமானதே…! இந்த படம் முழுக்க முழுக்க ஃப்ளோகேம் என்னும் படப்பதிவு முறையில் எடுக்கப்பட்டது. இதன் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி தான் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிக்கும் போக்கிரிராஜா படத்துக்கு ஒளிப்பதிவாளர்.

சாக்கோபார் படத்தில் ஹீரோயினாக வந்து மிரட்டியிருக்கும் தேஜஸ்வனியை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டியதோடு சிபாரிசும் செய்திருக்கிறார்.

பயம் ஒரு பயணம் போஸ்டரை வெளியிட்ட கமல் ஹாசன்

சமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான ‘பயம் ஒரு பயணம்’ படத்தை Octospider production சார்பில் தயாரித்து இருப்பவர்கள் எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர். புதிய இயக்குனர் மணிஷர்மா இயக்கத்தில் உருவான ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் வெளயிட்டார்.

‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாகா சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானது.

திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று, ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக உச்சரிக்கும் டாக்டர் கமல்ஹாசன், ‘பயம் ஒரு பயணம்’ படக் குழுவினரை பற்றி கூறியதாவது ‘டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர்.ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது.

‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் ஒரு சிலக் காட்சிகளை காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘பயம் ஒரு பயணம்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ எனக் கூறினார்.

குஷ்பு உத்தரவால் இளங்கோவன் விஜயதாரணியை கழற்றி விட்டரா ?

 

காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்பட்டார்.மேலும் அந்த பதவிக்கு எம்.ஜான்ஸிராணி நியமிக்க பட்டுள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தன் துவிவேதி அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

அதிரடியாக நீக்கம் தொடர்பாக விஜயதாரணி செய்தியாளர்களிடம் கூறுகையில், சோனியாவும், ராகுலும் எனக்கு பதவி வழங்கினார்கள். ராகுலுக்கு நெருக்கடி கொடுத்து என் மீது நடவடிக்கை எடுக்க வைத்து இருக்கிறார்கள். தவறு செய்த இளங்கோவனை விட்டு விட்டு என் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது பற்றி சோனியா, ராகுலை நேரில் சந்தித்து முறையிடுவேன் என்றார்.

 

விஜயதாரணி மேலும் கூறுகையில் எனக்கு கிடைத்திருப்பது நீதியல்ல, அநீதி. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியைப் போல் தமிழ்நாட்டில் விஜயதாரணியாக நான் செயல்பட்டேன். அதை இளங்கோவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.விஜயதாரணி சட்டமன்றதிலும், வெளியிலும் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்தவர். தொலைக்காட்சி விவாதங்களிலும் காங்கிரஸ் சார்பில் பங்கேற்று காரசாரமாக பேசி வந்தார்.

 

விஜயதாரணிக்கு தொடக்கத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தார். இந்த நிலையில் தி.மு.க.வில் இருந்து விலகிய குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுன் அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியை . இளங்கோவன் சிபாரிசு செய்து குஷ்புவுக்கு பதவியை வாங்கி தந்ததாக கூறப்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த விஜயதாரணி கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி தரவேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் எவருக்கும் தெரியாதபடி சண்டையிட்டதாக சொல்லப்படுகின்றது

அதனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விஜயதாரணியை சமாதானப்படுத்தும் வகையில் அவரை தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்ககாங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்தாரம். இருந்தபோதிலும் விஜயதாரணி குஷ்பு இடையேயான கடும் மோதல் நீடித்தது. விஜயதாரணி மகளிர் காங்கிரஸ் தலைவியாக பொறுப்பேற்றதில் இருந்து அவர் நடத்திய எந்த நிகழ்ச்சியிலும் குஷ்புவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவருக்கு முறையான அழைப்பு கொடுக்காமலும், போஸ்டரில் அவரது பெயரை இடம் பெறச்செய்யாமலும் தொடர்ந்து புறக்கணித்து வந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் .

 

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. மகளிர் காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவன் வாசலில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் இளங்கோவன் படம் சிறியதாக வைக்கப்பட்டு இருந்தது.அப்போது நடந்த மகளிர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இளங்கோவன் படத்தை சிறியதாக போடுவதா? என அவரது ஆதரவாளர்கள் விஜயதாரணியிடம் நேருக்கு நேராக கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் விஜயதாரணி வைத்திருந்த பேனர்களையும் சேதப்படுத்தினார்கள்.

 

இதனால் ஆவேசம் அடைந்த விஜயதாரணி இளங்கோவன் அறைக்கு சென்று ஆவேசமாக சத்தம் போட்டு சீறினார். இளங்கோவனும் பதிலுக்கு ‘‘இங்கு சத்தம் போட வேண்டாம், வெளியே போங்கள்’’ என்று கண்டித்தார்.இளங்கோவன் தன்னை ஆபாசமாக திட்டியதாக விஜயதாரணி பரபரப்பு புகார் கூறினார். மேலும் விஜயதாரணி சார்பில் இளங்கோவன் மீது அண்ணா சாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. பதிலுக்கு விஜயதரணி மீதும் விஜயதாரணி ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

 

இந்த பிரச்சினையில் அகில இந்திய தலைவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினார்கள். இதனால் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுக்களை திரும்ப பெற்றனர். என்றாலும் உள்ளுக்குள் உட்கட்சி பூசல் புகைந்து கொண்டு இருந்தது.இந்த நிலையில்தான் திடீர் என்று மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விஜயதரணி நீக்கப்பட்டு புதிய தலைவராக ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தியான ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். இவர் திண்டுக்கல் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரான முகுல்வாஷ்னிக்கிடம் குஷ்பு நட்புரீதியாக அடிக்கடி பேசுவதால் விஜயதாரணி செயல்பாடுகள் பற்றி அடிக்கடி புகார் கூறி வந்தார். விஜயதாரணி பதவி நீக்கத்துக்கு அதுவும் நக்மா விவகாரமும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.குஷ்புவுக்கு போட்டியாக நியமிக்கப்பட்ட நக்மாவை விஜயதாரணி அனுசரித்து நக்மா பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜயதரணி கலந்து கொண்டார். ஆனால் குஷ்பு பங்கேற்கவில்லை. நக்மாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை குஷ்பு விரும்பவில்லை.

 

இந்த நிலையில் நக்மா ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததை இளங்கோவன் கண்டித்தார். நக்மாவுக்கு பாட்ஷாவை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டை தெரியாது என்று பகிரங்கமாகவே கூறினார்.இந்த நிலையில்தான் விஜயதாரணி நீக்கப்பட்டுள்ளார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு விஜயதரணி நீக்கத்தின் பின்னணியில் இருப்பதாக விஜயதாரணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர் .