பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி
அதிகமான குடிகார அடிமைகளைக் கொண்ட மாநிலம் எனும் அவப்பெயரை எடுத்து தமிழகம் முதலிடத்தில் திகழ்கிறது : மருத்துவர் ராமதாஸ்
அரசுக்கு எதிரான நிலைப்பாடா?: விருது மறுப்புக்கு ஜெயமோஹன் தரும் விளக்கம்
சென்னை:
பத்மஸ்ரீ விருதுக்கு எழுத்தாளர் ஜெயமோஹன் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகவும், அதற்காக அவருக்கு அரசு சார்பில் இருந்து தகவல் வந்ததாகவும், விருதை அவர் மறுத்துவிட்டதாகவும் ஜெயமோஹன் தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
தாம் விருதை மறுப்பது அரசுக்கு எதிரான நிலைப்பாடல்ல என்றும், தன் தனிப்பட்ட எண்ணத்தாலேயே அதை மறுப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதன் பின்னணி குறித்து அவர் வெளியிட்ட இரு பதிவுகள்:
1
இன்று மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்தார். எனக்கு வரும் குடியரசுதினத்தில் பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார். நான் ஒருமாதம் முன்னரே அதை அறிந்திருந்தேன். சென்னையிலிருந்து என் நெடுங்கால நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான காவல்துறை உயரதிகாரி கூப்பிட்டு பத்ம விருதுகளுக்கான நுண்ணோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார். உண்மையில் நான்காண்டுகளுக்கு முன் என் எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத்துறை உயரதிகாரி ஒருவரால் இந்த எண்ணம் முன்வைக்கப்பட்டது. அவரது முயற்சியால் அப்போது என்பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதை நான் ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன். முழுமகாபாரதத்தையும் நாவலாக எழுதும் வெண்முரசு தொடங்கியபோது அந்தப் பெருமுயற்சியை இந்தியா முழுக்கக் கவனப்படுத்தவேண்டும் என்று நண்பர்கள் விரும்பினர்.அதற்கிணையான இலக்கிய முயற்சி மட்டுமல்ல சமானமான ஒரு பண்பாட்டுநடவடிக்கைகூட இன்று உலகமெங்கும் இல்லை. அதற்காக மீண்டும் பத்மஸ்ரீ விருதுக்கான முயற்சிகளை நண்பர்கள் முன்னெடுத்தனர். உண்மையில் அதை எனக்குத்தெரியாமலேயே செய்திருக்கிறார்கள். பத்மஸ்ரீ விருது அதை இந்தியாவெங்கும் கவனப்படுத்தும் என்று எண்ணினர். மணிரத்னம் உள்ளிட்ட பலர் இதற்காக என்னை பரிந்துரைசெய்திருக்கின்றனர். நான் அதை அறிந்தது அம்முயற்சி பரவலாகக் கசிந்து அதற்கு எதிராக எழுந்த கசப்புகள் வழியாகத்தான். என் நேர்மையை அவதூறுசெய்யும் செய்திகள் முன்னாள்நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டபோது அவர்களின் உள்குழு விவாதங்கள் வழியாகவே அதை அறிந்தேன் நண்பர்களிடம் விசாரித்தபோது இதற்கான முயற்சிகளைப்பற்றி அறிந்துகொண்டேன் . முயற்சிகள் என்றால் என் பங்களிப்பைப்பற்றிய ஒரு விரிவான குறிப்பும் வெண்முரசின் ஐம்பது அத்தியாயங்களின் மொழியாக்கமும்தான். மகாபாரதம் யானைபோல, அதற்கான வழிகளை அதுவே உருவாக்கிக்கொள்ளும். அதை வாசித்த அத்தனைபேரும் அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்தனர் என்பதே வழிகளை எளிதாக்கியது. ஆனால் தமிழ்ச்சூழலில் எழுந்த அவதூறுகளால் கசந்தே இவ்வரசிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை என்றும் இவ்வரசின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்றும் அறிவித்தேன். அலர்கள் மட்டுப்பட்டன. சென்றசிலநாட்களுக்கு முன் மாத்ருபூமி மலையாள இதழில் என்னுடைய மிகநீளமான ஒரு தலைப்புப் பேட்டி வந்தது. அதில் வெண்முரசு குறித்து விரிவாகப் பேசப்பட்டிருந்தது. அது பத்மஸ்ரீ விருதுக்கு ஒரு காரணம் ஆகியது திரு சௌகானிடம் நான் விருதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறேன் என அறிவித்தேன். அதிர்ச்சியுடன் “எண்ணிப்பார்த்துதான் சொல்கிறீர்களா?” என்றார். “இது பிரதமர் அளிக்கும் விருது அல்ல. அரசு அளிக்கும் விருது அல்ல. நூறுகோடிபேர் கொண்ட இந்தத்தேசம் அளிக்கும் விருது” என்றார். “ஆம் பிற அனைவரையும் விட நான் அதை அறிவேன். ஆனாலும் நான் ஏற்கமுடியாது. ஏனென்றால் என் கருத்துக்களின் நேர்மை ஐயத்திற்கிடமாவதை விரும்பமாட்டேன்” என்றேன். “நான் வருந்துகிறேன்” என்று சொல்லி அவர் வைத்துவிட்டார். நான் மறுக்கும் அடிப்படை இதுதான். என் கருத்துக்களே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன். இலக்கியத்தின் அழகியல்மையநோக்குமேல், அதன் மானுடம்தழுவிய ஆன்மிகத்தின்மேல், கம்பன் முதல் காளிதாசன் வரை தாகூர் முதல் ஜெயகாந்தன் வரை நான் வரித்திருக்கும் இலக்கிய ஞானாசிரியர்களின் மேல் எனக்கிருக்கும் ஈடுபாடே என் செயல்பாட்டின் அடித்தளம். நவீன இந்திய தேசியத்தின்மேல், இந்துமெய்யியல்மேல், என் குருமரபாக வந்த ஞானத்தின்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையையே நான் முன்வைத்து எழுதிவருகிறேன். கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு. இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும் இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே. விருதை மறுத்த செய்தி அதற்காக முயன்ற என் நண்பர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்ததை புரிந்துகொள்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன். என் தரப்பைச் சொன்னபோது “இவர்களுக்காகவா இந்த முடிவு? உங்கள் முப்பதாண்டுக்கால இலக்கியப்பங்களிப்பை பங்களிப்பை மிக எளியமுறையிலேனும் இவர்களால் அங்கீகரிக்கமுடிந்திருக்கிறதா? உங்கள் எச்செயலையாவது இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? நீங்கள் இப்படி ஒருமுடிவை எடுத்ததை ரகசியமாகக் கொண்டாடுவார்கள். வெளியரங்கில் இதை மேலும் அவதூறுசெய்துதான் எழுதுவார்கள். எந்தக்கருத்தியலாலும் அல்ல, வெறும் பொறாமையால் மட்டுமே செயல்படும் கூட்டம் அது. ஒரு படைப்பை உருப்படியாக எழுதியவனின் சொற்களை மட்டும் நீங்கள் கருத்தில்கொண்டால் போதும்” என்று ஒரு நண்பர் கொதித்தார். அதுவும் உண்மையே. ஆனால் தனிப்பட்டக் கருத்துக்கள் அல்ல, அலர் என்பது ஒரு சமூகத்தின் ஒருபகுதியின் கூட்டான குரல். அது கருத்துச்செயல்பாட்டை மறைக்கும் வல்லமை கொண்டது. மேலும் எதிரிகள் அல்ல நண்பர்களென நான் அறிந்தவர்களின் அவதூறும் கொக்கரிப்புகளுமே என்னை பெரிதும் புண்படுத்தியவை.வெண்முரசு என்றுமிருக்கும். இன்று எழுதப்படும் ஒருவரியும் எஞ்சாத காலத்திலும். தமிழ்இலக்கியச் சமூகம் வெண்முரசு போன்ற ஒரு படைப்பு வெளிவரும்போது அதை எப்படி எதிர்கொண்டது என்பது இதன்மூலம் வரலாறாக ஆகட்டும் என் மனைவிக்கும் மாமனாருக்கும் மாமியாருக்கும் மிகமிக வருத்தம். அண்ணா என்ன சொல்வாரென்றே தெரியவில்லை. மிக எளிய குடியில் கிராமத்தில் பிறந்த ஒருவனுக்கு தேசத்தின் அங்கீகாரம் என்பது அவனுடைய குடும்பத்தின், உறவுக்கிளைகளின் வெற்றியே.நான் அதை மறுப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அத்தனைக்கும் மேலாக எனக்கும் இதில் பெரும் வருத்தம் உண்டு. நான் இந்தத் தேசத்தை ஒரு பெரிய பண்பாட்டுவெளியாக எண்ணக்கூடியவன். என் பத்தொன்பதாவது வயதுமுதல் வருடம்தோறும் பெருந்தாகத்துடன் இந்நிலத்தில் அலைபவன். இதன் நிலப்பரப்பும் மலைகளும் நதிகளும் விதவிதமான மக்கள்முகங்களும் என்னைப்பொறுத்தவரை தெய்வத்தோற்றங்களே இவ்விருது இத்தேசத்தின் அங்கீகாரம். இதைப்பெறுவதற்குரிய பங்களிப்பை ஆற்றியே இதைநோக்கி நான் சென்றிருக்கிறேன். அதை மறுப்பதென்பது என் அன்னை எனக்கு அளிக்கும் அன்புப்பொருள் ஒன்றை மறுப்பதே. பரவாயில்லை, அன்னை என்றால் புரிந்துகொள்வாள். **** இறுதியாக பத்மஸ்ரீ விருது குறித்து பலகோணங்களில் கடிதம் எழுதியவர்கள் அனைவருக்கும் பொதுவாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சில விளக்கங்கள் 1. இது அரசுக்கு எதிரான நிலைபாடெல்லாம் அல்ல. நான் உடனடி அரசியலில் ஈடுபடுவதும் ,கட்சி நிலைபாடுகள் எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது என நினைப்பவன். 2. மேலும் விருதை அளிப்பது அரசு அல்ல. அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம். ஏனென்றால் இது இந்திய மக்களால் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. 3. மறுப்பை ஏன் அறிவிக்கவேண்டும் என்றால் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டதும் காவல்துறைவிசாரணையும் வரை இலக்கியசூழலிலேயே அனைவருக்கும் முன்னரே தெரியும் என்பதனால்தான். இதன்பொருட்டே வெண்முரசு எழுதப்படுகிறது என்று பேசப்பட்டது.இப்போது இதை அறிவிக்காவிட்டால் நான் இதற்காக முயன்று அதுகிடைக்கவில்லை என பேச ஆரம்பிப்பார்கள். 4. என் நோக்கம் வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும் என்பதுதான். அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது. அது இலக்கியம் மட்டும் அல்ல. இதைப்பற்றி இனிமேல் எந்த வினாக்களுக்கும் விடையோ விளக்கமோ அளிக்கப்போவதில்லை. நன்றி ஜெ
***
இதை அடுத்து அவர் பதிவு செய்த இரண்டாவது விளக்கப் பதிவு:
பத்மஸ்ரீ விருது குறித்து பலகோணங்களில் கடிதம் எழுதியவர்கள் அனைவருக்கும் பொதுவாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சில விளக்கங்கள் 1. இது அரசுக்கு எதிரான நிலைபாடெல்லாம் அல்ல. நான் உடனடி அரசியலில் ஈடுபடுவதும் ,கட்சி நிலைபாடுகள் எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது என நினைப்பவன். 2.மேலும் விருதை அளிப்பது அரசு அல்ல. அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம். ஏனென்றால் இது இந்திய மக்களால் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. 3.மறுப்பை ஏன் அறிவிக்கவேண்டும் என்றால் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டதும் காவல்துறைவிசாரணையும் வரை இலக்கியசூழலிலேயே அனைவருக்கும் முன்னரே தெரியும் என்பதனால்தான். இதன்பொருட்டே வெண்முரசு எழுதப்படுகிறது என்று பேசப்பட்டது.இப்போது இதை அறிவிக்காவிட்டால் நான் இதற்காக முயன்று அதுகிடைக்கவில்லை என பேச ஆரம்பிப்பார்கள் . 4. என் நோக்கம் வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும் என்பதுதான். அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது. அது இலக்கியம் மட்டும் அல்ல. இதைப்பற்றி இனிமேல் எந்த வினாக்களுக்கும் விடையோ விளக்கமோ அளிக்கப்போவதில்லை. நன்றி ஜெ
அடடே காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் பெண் பாலியல் சித்ரவதையால் தற்கொலையான வழக்கில் கைது ஆனவராமே !
விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனையில் விவசாயிகளின் பெயரில் பாராட்டும், புகழுரையும் சூட்டிக்கொண்டு, பூரித்து, புளகாங்கிதம் அடைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல், “உழவன் சேற்றில் கால் வைத்தால்தான், நீங்கள் சோற்றில் கைவைக்க முடியும்” என்பதை மனதில்கொண்டு, விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை:ஆட்சியர்பி.ராமு அதிரடி
கர்நாடகா மாநிலம் பெங்களூர் அருகேஎ உள்ள சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பி.ராமு கூறினார்.
சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் பி.ராமு நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பலியிட தடை
சிக்கலூர் சித்தபாஜி கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, இந்த விழாவின்போது ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் ஆடு, கோழிகளை பலியிடக்கூடாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடு, கோழிகளை கொண்டு வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக, 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு போலீசார் பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்பார்கள்.
மேலும் இதை கண்காணிக்க ஒரு சிறப்பு படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த படையினர் கோவில் விழா முடியும் வரை அங்கேயே தங்குவார்கள். உதவி கலெக்டர் கவிதா ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் தலைமையில் அந்த படையினர் செயல்படுவார்கள்.
ரகசிய கண்காணிப்பு கேமராக்கள்
கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் கடைகள் அமைக்க வேண்டும். கோவிலில் பாதுகாப்பு கருதி 10 இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு 150 சிறப்பு பஸ்களை இயக்கும்படி அரசு போக்குவரத்து கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் பி.ராமு கூறினார்.
800 போலீசார்
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குல்தீப்குமார் ஜெயின் கூறும்போது, ‘சிக்கலூர் கோவில் விழாவில், ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கோவில் விழாவின்போது ஏதாவது சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவது தெரியவந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்’ என்றார்.
முன்னதாக, சிக்கலூர் கோவில் விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பி.ராமு, கூடுதல் கலெக்டர் பாரதி, மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி நரசிம்ம மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு குல்தீப்குமார் ஜெயின் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
டெல்டா மாவட்டங்களில் கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விஜயகாந்த் வேண்டுகோள்
டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்; டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அடைமழையால் வெள்ள பாதிப்பு, கடும் வெயிலால் வறட்சி பாதிப்பு, இதுதான் தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை. இப்பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்தான். ஏற்கனவே மேட்டூர் அணை காலம் கடந்து திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியை கூட செய்ய இயலவில்லை என விவசாயிகள் நொந்து நூலாகிப் போயினர். சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போனதால், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உரிய முறையில் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்பட்டிருந்தால் டெல்டா விவசாயிகளின் பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கும். இயற்கை இடற்பாடுகளால் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கிடைக்கும் மகசூலை விட இந்த ஆண்டு மிகவும் குறைவாக, அதாவது பாதிக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தமிழக அரசு நெல் கொள்முதல் விலையாக மோட்டா ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,460 ரூபாய் என்றும், சன்னரக நெல்லுக்கு 1,520 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்துள்ளது கட்டுபடியாகவில்லை என்றும், அதனால் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி அளிக்கவேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனவே அதிமுக அரசு நெல்கொள்முதல் ஆதார விலையை உயர்த்தி வழங்கவேண்டுமென தேமுதிக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு, அரசு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லையென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்கள் வழக்கமான எண்ணிக்கையில் திறக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதில் உண்மை இல்லையென்றும், மிகக்குறைந்த எண்ணிக்கையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் பல்வேறு சிரமங்களுக்கிடையே, அறுவடை செய்த நெல்லை எடுத்துக்கொண்டு கிராமம் விட்டு கிராமமாக அலைந்து, திரிந்து, அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய சென்றால், அங்கே நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி, நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும், அரசு 20 சதவிகித ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்யலாமென உத்தரவிட்டு இருந்தாலும், அது நடைமுறை படுத்தப்படவில்லையென விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நெல் மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வீட்டிலோ, வயல்வெளியிலோ வைத்து பாதுகாக்க முடியாது என்ற சூழ்நிலையில், “பட்ட காலிலேயே படும், கெட்டகுடியே கெடும்” என்பதைப்போல, அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல், நெல் வியாபாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும் மிககுறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனையில் விவசாயிகளின் பெயரில் பாராட்டும், புகழுரையும் சூட்டிக்கொண்டு, பூரித்து, புளகாங்கிதம் அடைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல், “உழவன் சேற்றில் கால் வைத்தால்தான், நீங்கள் சோற்றில் கைவைக்க முடியும்” என்பதை மனதில்கொண்டு, விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மாணவிகள் தற்கொலை: மத்திய மாநில அரசுகளே பொறுப்பு என்கிறது டாக்டர்கள் சங்கம்
சென்னை:
கள்ளக்குறிச்சி அருகே மருத்துவ மாணவிகள் மூன்று பேர் மர்ம மரணம் தொடர்பில், மத்திய – மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாணவிகள் மரணத்திற்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே யோகா மற்றும் இயற்கை மருத்துவ மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
எஸ்.வி.எஸ் என்ற அந்த தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்பு சார்ந்த மருத்துவக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.இதனால் அக்கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மிகப் பெரிய அளவிற்கு கட்டணக் கொள்ளையும் நடைபெற்று வந்துள்ளது.இதை எதிர்த்து பல் வேறு போராடங்களை நடத்தியும் எந்த பயனும் ஏற்பட வில்லை. மத்திய – மாநில அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்நிலையில் , அக்கல்லூரிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியும் ரத்தாகியுள்ளது.இதனால் மாணவ – மாணவியர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அக்கல்லூரியில் படித்துவந்த 3 மருத்துவ மாணவிவகள் மர்மமான முறையில் கிணற்றில் மூழ்கி இறந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசு கடைபிடித்துவரும் தவறான மருத்துவக் கல்விக் கொள்கையும், மருத்துவக் கல்வி தனியார் மயமானதும் தான் இத்தகைய இறப்புகளுக்கு அடிப்படைக் காரணம்.
அடிப்படை வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, பிறகு திடீரென அனுமதியை ரத்து செய்வது போன்றவை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இது போன்று பாதிக்கப்பட்டு ,பணத்தையும் இழந்து படிப்பையும் தொட முடியாமல் உள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் கொள்கையில் உள்ள குறைபாடே இத்தகையை அவல நிலைகுக் காரணம்.
மருத்துவக் கல்வியும், உயர் கல்வியும் தனியார் மயமானதும், வியாபாரமயமானதும் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிலை குலைந்து உள்ளனர்.
மாநில அரசும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கும் பொழுது , அக்கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் செயல்படுகிறது.இதில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டால் அதற்கு மாநில அரசுகள் இழைக்கும் தவறுகளும் தான் காரணமாகின்றன.
எனவே, இந்த மாணவிகளின் மரணத்திற்கு மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கைகளும், ஊழல் முறைகேடுகளுமே அடிப்படைக் காரணம்.அம்மாணவிகளின் மரணத்திற்கு மத்திய – மாநில அரசுகள் பொறுப் பேற்க வேண்டும்.
மாணவிகளின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.மரணம் அடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ 15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த உரிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் உள்ள விதிமுறைகளில் உரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். முறையாக செயல்படாத மருத்துவக் கல்லூரிகளை மத்திய – மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அமித் ஷா மீண்டும் தேர்வு: அன்புமணி வாழ்த்து
சென்னை:
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியின் ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவம் வருமாறு:
Dear Mr. Amit Shah Avl,
Congratulations for your election to the prestigious position of President of the Bharathiya Janata Party for the second consecutive term.
I am sure the Party and the Nation will head for glorious times under your great leadership and able guidance.
************
அன்புள்ள திரு. அமித் ஷா அவர்களுக்கு,
பெருமையும், கவுரவமும் மிக்க பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது சீரிய தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பாரதிய ஜனதாக் கட்சியும், நாடும் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
-& இவ்வாறு அமித் ஷா அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
பாஜக., தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

