நாங்க பெட்ரோல் வாங்கிக் கொடுத்து நீங்க தீ குளிச்சிட்டா? : மதுரை மாநகர போலீஸ்
ஊடகத்தினரை கடுமையாக திட்டிய மத்திய அமைச்சர் !
நான் வரல! அரசியலுக்கு நான் வரல! என்னை அரசியலுக்கு கூப்பிடாதீங்க! : சகாயம் ஐ.ஏ.எஸ்
ஊருக்கு உபதேசம் செய்யும் மருத்துவர் ராமதாஸ் முதலில் திருந்துவாரா? தமிழக பொதுமக்கள்!
தெறி டீசர் பணி தொடங்கியது: ஜி.வி.பிரகாஷ்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. படத்திற்கான பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகளும், டப்பிங் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
இப்படத்தின் டீசர் பொங்கலுக்கு வரும், குடியரசு தினத்திற்கு வெளியாகும் என்று இணையத்தில் தொடர்ந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியது. ஆனால் அந்நாளில் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்ததே மிஞ்சம்.இந்நிலையில் இப்படத்தின் டீசர் உருவாக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளதாம்.
தெறி படம் தன்னுடைய 50வது படம் என்பதால் இப்படத்தின் இசைக்கு தனிகவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெறி படத்தின் டீசர் பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, தெறி டீசர் பணிகள் தொடங்கியது. விரைவில் டீசர் வெளியாகும். கொண்டாட்டம் ஆரம்பம்… என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
பிள்ளைகளுக்கு ஊக்கமூட்டி துணிச்சலை ஏற்படுத்துவதே பெற்றோரின் இன்றைய சவால்!
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரராகவன் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !
ஏமாந்த இலவு காத்த கிளிகளை மீண்டும் ஏமாற்ற திட்டம் போடும் அரசியல் கட்சிகள் !
ஆட்சி கட்டிலில் அமர தேர்தல் நடைபெறும் காலங்களில் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டே இருக்கும் இலவு காத்த கிளிகளை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்.என்ன திட்டம் போட்டால் இலவு காத்த கிளிகள் மீண்டும் ஏமறுவதற்குத் தயாராகும் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்!
ஆட்சிக்கு வந்தால் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய மூத்த குடிமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் இப்போது அமர்ந்திருக்கும் அஇஅதிமுகவின் 2011ஆ்ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.
மூத்த குடிகளுக்கு வாயெல்லாம் பல். இலவசத்தில் ஊறிப்போனதின் – ஊசிப்போனதின் விளைவு. அக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் கட்சியினரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி இவர்களுக்கே. அளித்த வாக்குறுதிகளில் சில ஒன்றன் பின் ஒன்றாக நடைமுறைக்கு வந்தபோது தங்களுக்கான அறிவிப்பு அடுத்து வந்து விடும் என்று இலவு காத்த கிளி போல் காத்திருந்த இலவச எதிர்பார்ப்பாளர்கள் நம்பினர்.
ஆனால் ‘குடி’மக்கள் மீது காட்டிய அக்கறையை மூத்த குடியினர் மீது அரசு காட்டாததைக் கண்டு வெம்பினர். வாக்களித்தவர்கள் வைத்தனர்; வசை பாடினர்.
சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளும், எதிர்க் கட்சியினர் யாரும் இது குறித்து வாயைத் திறக்கவில்லை. பொதுவுடமை பேசும் புண்ணியவான்கள் கூட மவுனிகளாக வலம் வந்தனர். எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது, எத்தனை இடங்கள் பெறுவது? ஒருத்தர் கழுத்தறுத்தால் அடுத்து யாரிடம் ஓடுவது என்ற சிந்தனையில் மூழ்கி விட்டனர் போலும்!
நாணயமில்லாமல் கடன் சுமையினால் அரசு அல்லாடுவதாகக் கூச்சலிடும் எதிர்க்கட்சியினர், மூத்தோர் விஷயத்தில் அரசு நாணயம் இல்லாமல் நடந்து கொண்டதை கண்டு கொள்ளாததைக் காணும் போது, மூத்தோரை அவமதிப்பதில் கட்சி பேதம் ஏதுமில்லை என்பது வெட்டவெளிச்சமானது.
நா நயமாகப் பேசுவோருக்கு நாணயம் முக்கியமே தவிர நாணயமல்ல என்பதை மூத்தோர்கள் உணர்ந்து கொண்டனரா என்பதும் கேள்விக்குறியே! ஏமாந்த இலவு காத்த கிளிகளும், மீண்டும் ஏமறுவதற்குத் தயாராகவே இருக்கும் என்பது அவற்றுக்கும் தெரியும்!
வரும் தேர்தலையொட்டி இன்னும் எத்தனை விதமாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களையும் அரசியல் கட்சிகள் முட்டாளாக்கப் போகின்றன என்பதைக் காண சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
– ராமச்சந்திரன் முத்துசாமி –
மூத்த பத்திரிக்கையாளர்
பாலம் அமைக்க கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.அடிக்கல் நாட்டினார்
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மேலச்சேவல் பகுதியிலிருந்து கீழச்செவல் செல்லும் சாலையில் பாளையங்கால்வாயின் குறுக்கே ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் அடிக்கல் நாட்டினார் உடன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.முருகையாபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள்
பிப்ரவரி 12ல் வெளியாகும் டெட் பூல்!
20th century பாக்ஸ் நிறுவனத்தார் தரமான ஆங்கிலப் படங்களை இந்தியாவில் விநியோகம் செய்து வருகின்றனர். சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்றும் இருக்கும் மவுசை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு படங்கள் இவர்களது விநியோகத்தில் வெளி வந்து உள்ளது. வருகின்ற 12 ஆம் தேதி வெளி வர இருக்கும் ‘டெட் பூல்’ சூப்பர் ஹீரோக்களின் சாகசத்தையும் தாண்டிய ஒரு படமாகும்.
கூலி படைக்கு தலைமை தாங்கும் வெட் வில்சன் தன்னுடைய சின்ன வயதில் பல்வேறு சோதனகளுக்கு உட்பட்டவர். தன்னால் கொலை செய்ய படுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்ம் என்று நினைப்பவர் இவர். சர்வதேச அளவில் ஒருப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கும் டெட் பூல் தனக்கு புற்று நோய் வந்து இருப்பது அறிந்ததும், தான் ஆற்ற வேண்டிய காரியங்களை விரைவில் சாதிக்க நினைக்கிறார்.
அந்த நேரத்தில் நடக்கும் ஒரு தாக்குதலில் அவர் தவறுதலாக தன்னுடைய சகாவைக் கொன்று விடுகிறார். அதன் தொடர்ச்சியாக மருத்துவ மணியிலும் அனுமதிக்கபடுகிறார். அங்கு நடக்கும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அவரை கோபப்படுத்துகிறது. அங்கு இருக்கும் ஒரு மூத்த மருத்துவ சிம்பந்தி அடுத்தாக மரணம் அடைய போகும் நோயாளி யார் என்பதை பந்தயம் கட்டி, அவர்களை கொல்லவும் செய்வதை கண்டு கொதிக்கிறார். அவர் அந்தக் கொடிய சூழ் நிலையிலம் இருந்து எப்படி தப்பிக்கிறார், அவருடைய சக நோயாளிகள் எப்படி தப்பினர் என்பதே; டெட் பூல்.

