Home Blog Page 5898

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் பணிவாய்ப்புகள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான 2550 உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
1. Assistant Engineer Electrical – 300
2. Assistant Engineer Mechanical – 25
3. Assistant Engineer Civil – 50
4. Technical Assistant Electrical – 500
5. Technical Assistant Mechanical , Civil – 25
6. Field Assistant(Trainee) – 900
7. Junior Assistant/ Administration – 100
8. Junior Assistant/ Accounts – 250
9. Junior Auditor – 25
10. Typist – 200
11. Steno – Typist – 25
12. Assistant Draughtsman – 50
13. Tester Chemical – 100
தகுதி: +2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், பி.எஸ்சி, பி.காம், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: OC, BCO, BCM. MBC பிரிவினருக்கு ரூ.500, SC, SCA, ST, DW, PWD பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு தொடர்ந்து https://www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஓசைப்படாமல் திருடிய அஞ்சல பட டீம்

 

என்ன பிரச்சனை என்பதை பார்க்கும் முன்பு யார் இந்த மாமிபாய்ஸ் (Mamiboys) என்று பார்க்கலாம்.

சிங்கப்பூரை சேர்ந்த இசையமைப்பாளர் , ராப் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியரான கிரிஷ்செனோ (Krisheno) எனும் இளைஞர் அவரது சென்னை நண்பர்கள் மற்றும் பாடகர்களாகிய கேலப் ஜேக்கப் (Caleb Jacob) மற்றும் கெவி ஜே (Kevi-J) இணைந்து உருவாக்கியதுதான் மாமிபாய்ஸ் (Mamiboys) எனும் இசைக்குழு.

ஹாரிஸ் ஜெயராஸ்,ஶ்ரீகாந்த் தேவா போன்ற தமிழ் தெலுங்கு இசையமைப்பாளர்களுடன் இணைந்து திரைப்பட பாடல்களில் பங்கெடுத்தவர்கள்.

முதன்முதலில் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டுக்காக சலோ இந்தியா எனும் இவர்களின் தனிப்பாடல், நார்வே சர்வதேச படவிழாவில் விருதுப்பெற்ற படமாகிய ரோடு சைடு அம்பானியில் இடம்பெற்றது.

இது மட்டும் இன்றி பல இன்டர்நேஷனல் (International) போட்டிகளிலும் இவர்கள் விருது பெற்றுள்ளனர்.

சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இவர்கள் வெளியிட்ட பாடல் Empower நல்ல வரவேற்பை பெற்றது.

2013 ல் தம் டீ எனும் ஆல்பத்தை சென்னை AVM Studios சில் வெளியிட்டனர். அதில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்புடன் iTunes, Google play ஆகியவற்றில் ஹிட்டை அள்ளின.

தம் டீக்கான வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து இதை படமாக்கிடும் முயற்சியில் இறங்கினர். இடையில் நிதிப் பிரச்சனையால் வேலைகள் தடைப்பட்டன. இப்போது மீண்டும் பணிகள் உயிர் பெற்றுள்ளன.

இந்நிலையில் தனது தம் டீ பாட்டின் Concept திருடி தங்கம் சரவணன் இயக்கியுள்ள அஞ்சல படத்தில் டீ போடு பாடலாக உருவி சொருகி உள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் மாமிபாய்ஸ் (Mamiboys) குழுவினர்.

இது பற்றிக் கூறும்போது “டீ போடு பாடலையும் விடியோவையும் பார்த்து அதிர்ந்தோம் அப்படியே தம் டீ concept. எங்கள் தம் டீ விடியோவில் இடம்பெறும் scene அனைத்தும் அஞ்சல டீ போடு விடியோவில் உள்ளது.

டீ போடு பாடலை பார்த்த எங்களின் ரசிகர்கள் Facebookகில் தங்கள் கோபத்தை #DUMTEAvsTEAPODU எனும் hashtag மூலமாக காட்டி உள்ளனர்.

எங்கள் சார்பாகவும் அனைத்து Independent Artist சார்பாகவும் நாங்கள் நீதி மன்றத்தை அணுகி அஞ்சல திரைப்படத்தை தடைபெற அஞ்ச மாட்டோம் என்கின்றனர் மாமிபாய்ஸ் (Mamiboys) குழுவினர்.

 

  எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா  அஞ்சலி

 
அ.தி.மு.க.,வை நிறுவியரும், முன்னாள் முதலமைச்சரும், எம்.ஜி.ஆர் 28 வது நினைவு நாளான இன்று ( 25-12-2015) அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார் இவரது வருகையால் சென்னை மெரீனா கடற்கரையில் தொண்டர்கள் பலர் குவிந்திருந்தனர் .
 
எம்.ஜி.ஆர் நினைவு நாளான இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் அதிமுக பொதுசெயலர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் , இவருடன் அமைச்சர்கள் தொண்டர்கள் பலர் வந்திருந்தனர் .
 
நினைவிடத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க தொண்டர்கள் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்று கொண்டனர் .
 
 
உறுதிமொழியாவது :-
 
 
எம் ஜி ஆர் , புகழ் என்றும் ஒலித்திட அவர் உருவாக்கிய இயக்கத்தில்பணியாற்ற உளமாற உறுதி ஏற்கிறோம் .
 
 
அவரது கொள்கை வழியில் இன்று வளர்ச்சி அடைந்திட 7 வது முறை பொது செயலராக பொறுப்பேற்றுள்ள ஜெ வழியில் நின்று கழகத்தை காத்திடவும் உறுதி ஏற்கிறோம் .
 
 
தமிழகத்தை வளம் பெற செய்யவும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்வோம், மறு வாழ்வு பெற துடிக்கும் தீய சக்திகள் மக்களுக்கு செய்திட்ட துயரங்களை மக்களிடம் எடுத்துரைக்க உருவாக்கிய இயக்கத்தை ஜெ., தலைமையில் செயல்படுவோம் என்று உறுதிமொழி அ.தி.மு.க.வினர் ஏற்றனர்.

 

சிம்பு என்ன தப்பு செய்தார் ? தனி மனித சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை : சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கதறல் !

நடிகர் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை மாவட்ட காவல் துறையினர், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்களுக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம் என்று சிம்புவின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது மகனின் ‘பீப்’ பாடல் குறித்து டி.ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் பேசும் காணொளி வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோ பதிவில் உஷா ராஜேந்தர் பேசியிருப்பது, “சிம்பு அப்படி என்ன குற்றம் பண்ணிவிட்டார்? பொதுநிகழ்ச்சியிலோ, படங்களிலோ, பேட்டியிலோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? எதுவுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. வீட்டில் நண்பர்களுடன் விளையாட்டாக பண்ணிய பாடல், அதுவும் ‘பீப்’ போடப்பட்டு இறுதியில் தேவையில்லை என்று தூக்கிப் போடப்பட்ட பாடல். அதை என்னமோ பெரிய குற்றம் பண்ணிவிட்டது போல, எந்த நேரமும் வீட்டின் முன்பு போலீஸ் இருக்கிறது.

24 மணி நேரமும் வீட்டின் முன்பு கேமிரா கையுமாக ஆட்கள் இருந்தால் எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கிறது. சொந்த வீட்டின் வாசலில் என்னால் கோலம் போட முடியவில்லை, அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். காவல் துறையினர் தேடும் அளவுக்கு சிம்பு என்ன தவறு பண்ணினார், அப்படியே தேடினாலும் தமிழ்நாட்டை விட்டோ, இந்தியா விட்டோ எங்கேயும் ஒடவில்லை. உங்களுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த போலீஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம் எடுத்துக் கொள்ளுங்கள்.

என்ன நாடு இது? தனிப்பட்ட வீட்டிற்குள் தனியுரிமை இல்லை என்றால் ஏன் இங்கு இருக்க வேண்டும். எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை யாருமே சொல்லமாட்டேன் என்கிறார்கள். இது திருடப்பட்ட ஒரு பாடல், தூக்கி எறியப்பட்ட ஒரு பாடல், ‘பீப்’ சத்தம் போட்டு மறைக்கப்பட்ட ஒரு பாடல். அப்படியிருக்கும் போது உங்களுக்கு என்ன தான் வேண்டும். என் பையனோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள்.. இல்லையென்றால் அந்த பையனை வளர்த்த என்னோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள். என்ன தான் பிரச்சினை உங்களுக்கு?

சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். அந்த பையன் தூக்கில் போடும் அளவுக்கு என்னங்க பண்ணிட்டான். அந்த பையனை வளர்ந்தவள் நான். என்னை தூக்கில் போடுங்கள். என் மகன் தவறு பண்ணியிருந்தால், என்னை தூக்கில் போடுங்கள். நான் வருகிறேன். வீட்டில் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வெளியே வர முடியவில்லை. எந்தொரு நேரம் பார்த்தாலும் கேமிரா கையுமாகவே இருக்கிறார்கள். என்னங்க நாடு இது? எனக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் எங்கேயாவது சென்று விடுகிறோம்.

எங்கள் குடும்பத்தோட நிம்மதியே போய்விட்டது.தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம். எங்களை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசும் காணொளியில்

சமூக ஊடகங்கள் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர்

சகாயமா ? சமந்தாவா ? 

சகாயமா ? சமந்தாவா ? எனும் தலைப்பில் பல்வேறு கேள்விகளுடன்  சமூக ஊடகங்களில் வைரலாக  பரவிவரும் செய்தியில் கூறியுள்ளதாவது :-

சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் , அவர் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த பட்டால் அவருக்கு தான் என் ஒட்டு என்று சமூக வலைதளங்களிலும் பொது வெளிகளிலும் பேசுவதை சமீப காலத்தில் அதிகமாக கேட்க முடிகிறது . சகாயத்தின் நேர்மை மீதோ அவரின் நிர்வாக திறமை மீதோ யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நம்புகிறேன் . ஆனால் நேர்மையாளர்களையும் திறமைசாலிகளையும் இந்த மண் அங்கீகரித்து உள்ளதா என்பதே என் கேள்வி

திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டு அண்ணாவிற்கே ஆலோசனை சொல்லும் இடத்தில இருந்தவர் , நடமாடும் பல்கலைகழகம் என்றும் நாவலர் என்றும் தமிழ் சமூகம் அவரை கொண்டாடியது , பேரறிஞர் அண்ணாவே “தம்பி வா தலைமை ஏற்க வா” என்று திமுக வை வழிநடத்த வாஞ்சையோடு அழைத்தார். இரண்டு முறை இடைகால முதல்வராக இருந்த அந்த நாவலர் நெடுஞ்செழியன் கற்றவர்கள் அதிகம் வசிக்கும் மைலாப்பூர் தொகுதியில் வெறும் 500 வாக்குகள் மட்டுமே பெற்று காமெடி எஸ் வி சேகரை காட்டிலும் பின்தங்கி போனார் .

அரசியலில் ஆயிரம் பிறை கண்டவர் இந்திய அளவில் விரல் விட்டு எண்ண கூடிய சிறந்த நாடாளுமன்றவாதி , நெருக்கடி நிலையின் போது நாடாளுமன்றம் நடுங்க அதை எதிர்த்து பேசியவர் ,நாடாளுமன்ற நடைமுறைகளில் உள்ள சந்தேகங்களை தீர்க்க இன்றைக்கும் இவரை தான் தேடுவார்கள் அப்படிப்பட்ட இரா .செழியன் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நடிகை வைஜேந்தி மாலாவிடம் தோற்று போனார் .

இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யும் இடத்தில இருந்த கர்மவீரர் காமராஜர் சொந்த மண்ணில் ஒரு கல்லூரி மாணவனிடம் தோற்று போனார் ,அண்ணாவின் இறுதி ஊர்வலத்திற்கு கூடிய கூட்டம் உலக சாதனை படைத்தது ஆனால் அந்த மனிதர் வாழும் காலத்தில் தான் பிறந்த காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார் .

இன்றைக்கும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாத மாமனிதர் நல்லகண்ணு தொழிலாளர்கள் நிரம்பிய கோவை தொகுதியில் தோற்றார் ,இரா .செழியன் ,நாஞ்சில் மனோகரன் ,முரசொலி மாறன் என்ற வருசையில் இன்றைக்கு எஞ்சியும்,விஞ்சியும் இருக்கும் நாடாளுமன்றவாதி வைகோ தொடர்ச்சியாக இரண்டு முறை விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார் .

ஆனால் அதே சமயம் பனித்துளியை போல பரிசுத்தமான மோகனை எதிர்த்து அழகிரி வெற்றி பெறுகிறார் ,லேகியம் விற்ற ஜெயதுரை ,நாடாளும் மன்ற நிகழ்வுகளை தொலைகாட்சியில் கூட பார்த்திராத நடிகர் ஜே கே ரித்தீஷ் போன்றவர்கள் பெருவாரியான ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்கள் .
இது தான் இந்த மண்ணின் கள எதார்த்தம் ,புதிதாக ஒருவர் வந்து இந்த அரசியலை புனித படுத்த வேண்டிய அவசியம் இல்லை பல ஆண்டுகளாக இந்த மக்களுக்கு உண்மையாக போராடி வரும் நேர்மையாளர்கள் பலர் உண்டு அவர்களை அங்கீகரியுங்கள் தமிழக அரசியல் தானாக சுத்த படும் .

இல்லை எங்களுக்கு சகாயமே தான் வேண்டும்(பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணும் ) என்றால் தாரளமாக அரசு பதவியை ராஜினாமா செய்ய வைத்து அவரை அரசியலுக்கு இழுத்து வாருங்கள் ,ஆனால் ஒன்று ரெண்டு லட்சம் பேர் திரண்ட நயன்தார வேண்டாம் வெறும் சமந்தாவை எதிர்த்து களமிறக்கி சில கோடிகளை செலவு செய்தால் சகாயம் டெபாசிட் வாங்குவார என்பதே சந்தேகம் தான் .

ஒரு நல்ல ஆட்சி வந்து சகாயம் போன்ற அதிகாரிகளை தக்க இடத்தில பணி அமர்த்தி அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் நியாயமான எதார்த்தமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும் .
பாவம் அந்த மனிதர் மாச சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்தி கொண்டு இருக்கிறார் உங்கள் புரட்சி போராட்டத்தில் அவர் சோற்றில் மண்ணை போட்டு விடாதீர்கள் .என்றாவது ஒருநாள் என் தமிழகம் விழிக்காத என்ற ஏக்கத்தில். என்று   சமூக ஊடகங்களில் வைரலாக  பரவிவரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குருசாமிபுரத்தில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

கீழப்பாவூர் ஒன்றியம் குருசாமிபுரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர்   மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும் பாசறை மாவட்ட செயலாளருமான சிலம்பம் மு.சேர்மபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்வில் குருசாமிபுரம் கிளை செயலாளர் பொருட்செல்வன் ,பேச்சிமுத்து ,பரமசிவன் ,சுடலைக்கனி,சரவணன்,செல்வகுமார்,செல்வன்,விஜய்முருகன் ,சிவன்,டேவிட்ராஜ்,செல்வமுருகன்,முத்துசெல்வன்,முப்பிடாதி,மதன், உட்பட  பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை பாசறை மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டியன் செய்திருந்தார்

தங்கமகன் – THANGAMAGAN – தங்கா மகன் …

ஒரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும் போது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயற்கை . ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தாமல் ஒரு படத்தை புதிதாய் பார்க்கும் போது பிடித்துப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் . அதையும் தாண்டி படம் நம்மை கவராமல் போகும் போது ஒரு ஏமாற்றம் வரும் . அது தான் தங்கமகன் படம் பார்த்த பிறகு ஏற்பட்டது …

இன்கம்டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் நேர்மையான அதிகாரியின் மகன் தமிழ் ( தனுஷ் ) . திடீரென அப்பா ( கே.எஸ்.ரவிகுமார் ) தற்கொலை செய்து கொள்ள அவர் மேல் விழுந்த களங்கத்தை துடைத்து குடும்பத்தை தமிழ் எப்படி மீட்கிறான் என்பதே தங்கமகன் …

இத்தோடு சேர்த்து மிடில் கிளாஸ் பையனாக தனுஷ் எக்கச்சக்க படங்களில் நடித்து விட்டாலும் இதுவரை அவர் நடிப்பு போரடிக்காதது ஆச்சர்யமே . நன்றாக நடிக்கும் அவர் இன்னும் வேறு வேறு களங்களில் பரிமாணிப்பது நல்லது . தண்ணியடித்து விட்டு வீட்டுக்கு வந்து அம்மா காலிலும் , மனைவி காலிலும் விழும் இடத்தில் தேசிய விருதை சும்மா வாங்கிவிடவில்லை என நிரூபிக்கிறார் . ஆனால் அவர் படத்தை பார்ப்பதற்கு அது மட்டுமே போதுமா ? யோசிக்க வேண்டும் …

ஆங்கிலோ இந்திய பெண்ணாக எமி ஜாக்சனும் , அவருக்கு ஆண்ட்ரியாவின் குரலும் நன்றாகவே பொருந்துகின்றன . ஆனால் பிகினி போட்டு அழகு பார்க்க வேண்டிய பெண்ணை சுடிதாரில் அலைய விட்டு ” நானும் ரவுடி தான் ” படத்தில் வரும் காமாட்சி போல ஆக்கி விட்டார்கள் . அரை பீருக்கு போதையாகி இவர் தனுஷை அடிப்பதெல்லாம் படத்துக்கு கிடைத்த யூ செர்டிபிகேட் போல ஓவர் . இவர்கள் இருவருக்குமான லவ் சீன்ஸ் தான் நம்மை முதல் பாதியில் படத்தோடு ஒன்ற வைக்கின்றன . அதற்கு சதீஷும் ஒரு காரணம் …

சமந்தா போல மனைவி கிடைத்தால் எமி என்ன ஏஞ்செலினா வையே கழட்டி விடலாம் . தனுஷ் – சமந்தா இருவருக்குமான காட்சிகள் குறைவாக இருந்தாலும் கச்சிதம் . பொயட்டு தனுஷ் வரிகளில் அனிருத் இசையில் பாடல்கள் நல்ல மெலேடி . ஓட்டக்கருவாடு போல பாடல் இல்லாதது வருத்தமே . பி.ஜி யில் பெரிசாக ஒன்றுமில்லை . குமரனின் ஒளிப்பதிவு சில இடங்களில் நாம் நாடகம் பார்க்கிறோம் என்கிற உணர்வை தவிர்க்கிறது …

டீன் ஏஜ் காதல் , அப்பா சென்டிமென்ட் இவற்றை ஓவராக வழிய விடாமல் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் வேல்ராஜ் . அதே சாமர்த்தியம் படம் நெடுக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . குறிப்பாக இடைவேளைக்கு பிறகு
” தமிழ்நாட்டுல தமிழ் தோக்காது ” என்றெல்லாம் தனுஷ் பஞ்ச் பேசும் போது
” ஆமா ஆந்திரால தெலுங்கு தோக்காது , கேரளாவுல மலையாளம் தோக்காது”
என்று விசு போல நம்மை வசனம் பேச வைத்துவிடுகிறார்கள் . அர்னால்டை வில்லனா போடலாமா , அமீர்கான வில்லனா போடலாமானு மாமானரு யோசிச்சா மருமகனோ இன்னும் அமுல் பேபி மூஞ்சியா பாத்து வில்லனா போடறது என்ன சாரே ?! …

கே.எஸ்.ரவிக்குமாருக்கு அடிக்கடி நடப்பது மறந்து விடுவது போல நம்மையும் விஜய் சேதுபதி மாதிரி ” ஆமா படத்துக்கு வந்தோம் , அப்புறம் என்ன ஆச்சு ” என்பது போல் சில இடங்களில் புலம்ப வைத்து விட்டார்கள் . கவர்மென்ட் குவாட்டர்ஸ் இல் குடியிருக்கும் தனுஷ் குடும்பத்தை அப்பா இறந்தவுடன் ஒருவர் வந்து வீட்ட காலி செஞ்சுருங்க என்று சொல்வதெல்லாம் என்ன லாஜிக்கோ ?! அவர்களுக்கே வெளிச்சம் . தனுஷ் – வேல்ராஜ் கூட்டணியில் கடந்த வருடம் வந்த வி.ஐ.பி வசூலை அள்ளியதோடு நன்றாகவும் பேசப்பட்டது . ஆனால் இந்த வருடம் வந்திருக்கும் தங்கமகன் நம்மிடையே எந்த உரசலையும் ஏற்படுத்தாத விதத்தில் மனங்களில் தங்காமகன் …

விமர்சனம்: அனந்த நாராயணன் 

இளையராஜா மீதான விமர்சனம்: ட்விட்டரிலிருந்து வெளியேறிய ஜேம்ஸ் வசந்தன்!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவிடம் செய்தியாளர் ஒருவர் சிம்பு பாடிய பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது கோபமடைந்த இளையராஜா, அவரை திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவை தாக்குவது போல் ஒரு சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அவரை திட்ட, ஜேம்ஸ் வசந்தன் டுவிட்டரை விட்டே வெளியேறினார். தற்போது இதற்கு மன்னிப்பு கேட்கும் படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை.

இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும், படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன். இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்ற!!!”.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா

 
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள் ளதாவது :-
 
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.
 
தமிழக கலாச்சாரத்துடன் தொடர்புடையது ஜல்லிக்கட்டுப் போட்டி. பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.
 
விரைவில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு, மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் தட்பவெப்ப மாற்றங்கள் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் நேரடியாக அறிவுறுத்த வேண்டும்.
 
வரும் 2016 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட வழிவகைக் காணப்பட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் அவர்களது பிரதிநிதியாக நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் .

 

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : காவலர் பலி

 
 
 
புது தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக் கைதியை பழிக்குப் பழியாக சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் காவலர் ஒருவர் பலியானார்.
 
இதனிடையே தாக்குதலில் இறந்த காவலர் ராம் குமாரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
 
பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் இர்பான் என்ற ஷைனி பேகல்வன். கிழக்கு தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இர்பானை, தில்லி மூன்றாவது சிறப்புப் படையில் பணியாற்றும் காவலர் ராம் குமார் அழைத்து சென்றார்.
 
இருவரும் இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் காத்திருந்தபோது, இர்பானை கொலை செய்யும் நோக்கில் அங்கு வந்த ஒரு கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இர்பானும், காவலர் ராம் குமாரும் படுகாயமடைந்தனர்.
 
இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் ராம் குமார், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். குமாரின் உடலில் 4 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாக போலீஸார் கூறினர். இர்பான் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
 
இச்சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்திய புது தில்லி காவல் துறையினர், சீலம்பூர் அருகே 4 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் விசாரணைக் கைதி இர்பான், தாக்குதல் நடத்தியவர்களின் குழுவைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்திருப்பதும், பழிக்குப் பழியாக அவர்கள் இர்பானை கொல்ல முயற்சித்ததும் தெரிய வந்தது.
 
பாதுகாப்பு மிகுந்த நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் எவ்வாறு நுழைந்தனர் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் சம்பவத்தை காணொளி எடுத்த முக்கிய குற்றவாளி ஒருவரையும்காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 
இத்தாக்குதல் சம்பவத்தில் முதன்மை நீதிபதி சுனீல் குப்தா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.