Home Blog Page 5911

2016 செப்.24ல் தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் பிரான்சிஸ் அறிவிப்பு

பாரிஸ்:

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். அவருக்கான இந்த புனிதர் பட்டம் வரும் 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, வழங்கப்பட உள்ளது. இதனை கத்தோலிக்க செய்தித்தாள் ஒன்று செய்தியாக வெளியிட்டு உள்ளது.

யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. 1910 ஆகஸ்ட் 27-ஆம் நாளில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டார்.

1929-ல் இந்தியா வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்து, தொழு நோயாளிகளுக்கு `ப்ரேம் நிவாஸ்’ இல்லம் தொடங்கினார்.

மத்திய அரசு அன்னை தெரசாவுக்கு 1980-ல் `பாரத ரத்னா’ விருது வழங்கிக் கௌரவித்தது. அவரின் பணியைப் போற்றும் விதமாக உலக அமைதிக்கான நோபல் பரிசு (1979) அவருக்கு வழங்கப்பட்டது.

தெரசா 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் மரணமடைந்தார். 1962-ல் பத்மஸ்ரீ விருது, 1962-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான `ராமோன் மக்ஸேஸே’ விருது, 1971-ல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் `நல்ல சாமரித்தான்’ விருது, 1972-ல் சர்வதேச நேரு சமாதானப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டு, வரும் 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி வழங்கப்பட உள்ளதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளதாக இத்தாலிய கத்தோலிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டு உள்ளது.

தங்களுக்காக பாடுபடுவது யார் என்பதை தேர்தலில் மக்கள் சொல்வார்கள்: விஜயகாந்த்

சென்னை:

தங்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் தங்கள் பதிலாகத்தெரிவிப்பார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையை சுத்தம் செய்ய ஆயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களின் பணிச்சுமைக்காக கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டதாக அ.தி.மு.க. அரசு கூறி வருகிறது. ஆனால் சென்னை வந்துள்ள ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சரியான உணவும், இருப்பிட வசதியும் செய்து தரவில்லையென குற்றம் சாட்டுகின்றனர்.

நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்துதரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அதை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த பல தரப்பினரும், அரசை எதிர்பார்த்து ஏமாந்தது போதுமெனக் கருதி, தாங்களாகவே முன்வந்து தங்களது பகுதிகளில் தன்னார்வத்தோடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதை தற்போது பார்க்கமுடிகிறது.

மக்களை நேசிக்கின்ற தலைவர் யார்? மக்களுக்காக உழைக்கின்ற தலைவர் யார்? சொகுசான, சுகபோக வாழ்க்கை வாழ்பவர் யார்? என்பதை தமிழக மக்கள் நன்கு தெரிந்து கொண்டார்கள். இனியும் அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. தேர்தல் காலத்தில் இதற்கெல்லாம் பதிலளிக்க தயாராக உள்ளார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கூகுள் தேடலில் அப்துல் கலாம்க்கு மரியாதை

மும்பை:
கூகுள் தேடலில், அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அப்துல் கலாம் ஆறாம் இடத்தில் இருந்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளின் டிரண்டிங் தேடலில் இரண்டாம் இடத்திலும், 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை முதல் இடத்திலும் உள்ளது. இந்தியில் வெளியான பஜ்ரங்கி பைஜான் மற்றும் பிரேம் ரத்தன் தன் பயோ படங்கள் சினிமாவில் 2 மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளன. இந்திய அளவில் தேடப்பட்டவைகளில் 3, 4ம் இடங்களை இந்த படங்கள் பிடித்துள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் ஐந்தாம் இடத்தையும், ஏ.பி.ஜெ அப்துல் கலாம் ஆறாம் இடத்தையும், எஸ்.எஸ்.சி தேர்வு 7ம் இடத்தையும் பிடித்துள்ளது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 8ம் இடத்திலும், ஹாட் ஸ்டார் 9ம் இடத்தையும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதல் 10 பேர் பட்டியலில் 6 இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர். இந்திய டெஸ் அணி கேப்டன் வீராட் கோலியும் பெற்று உள்ளார். முதல் இடத்தில் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி இடம் பெற்று உள்ளார். மேலும் சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் டோனி 3 மற்றும் 4 வது இடத்தில் உள்ளனர்.

 

கூகுள் தேடல்: பாகுபலி சாதனை

மும்பை:

2015ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியாவின் மொத்த தேடலில் ‘பாகுபலி’ இரண்டாம் இடத்தையும், திரைப்படங்களின் பெயர் தேடலில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது. சினிமா, பிரபலங்கள், நடிகர், நடிகைகள் என மொத்தம் 8 பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பாகுபலியின் சாதனை தெரியவந்துள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள்: சல்மான், மோடியை முந்திய சன்னி லியோன்

மும்பை:
கூகுள் தேடல் மூலம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, சல்மான் கான் ஆகியோரை முந்தி சன்னி லியோன் இடம்பெற்றார்.

2015 ல் இந்தியாவில் மிக அதிகமாக தேடபட்டவர்கள் பட்டியலில் நடிகை சன்னி லியோன் முதல் இடத்தில் உள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான் 2 வது இடத்தில் உள்ளார். ஷாருகான் 6 வது இடத்திலும்,, அப்துல் கலாம் 3 வது இடத்தையும், பிரதமர் நரேந்திர மோடி 10-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.சானியா மிர்சா 7 வது இடத்தில் உள்ளார். ரோகித சர்மா, யுவராஜ் சிங் ஆகியோர் 8 மற்றும் 9 வது இடத்தில் உள்ளனர். 4வது இடத்தில் காதீனா கையூபும்,5 வது இடத்தில் தீபிகா படுகோனேவும்,7 வது இடத்தில் யோ யோ கனி சிங்கும் 8 வது இடத்தில் காஜல் அகர்வாலும் 9 வது இடத்தில் அலியா பட்டும் உள்ளனர்.

2014ம் ஆண்டிற்கான தேடபட்டவர்கள் பட்டியலில் சன்னிலியோன் தான் முதல் இடத்தில் இருந்தார்.2013 ஆம் ஆண்டும் இவரே முதல் இடத்தில் இருந்தார்.

தனக்கு அளிக்கபட்ட இந்த் கவுரவத்திற்கு சன்னி லியோன் நன்றி கூறி உள்ளார்.

”ஓ மை காட் உங்களுக்கு மிகவும் நன்றி! நான் எல்லோரையும் நேசிகிறேன்! நான் மீண்டும் கூகுள் தேடலில் முதலிடம் பெற்றதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லோருக்கும் எனது இரவு வணக்கங்கள் ” என்று அவர் தெரிவித்திருந்தார்.

பள்ளி மாணவர்கள் ‘ஓவர் டைம் டூட்டி’ பார்க்கும் ரோபோக்களா? : சனிக்கிழமை பள்ளி திறக்க ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை:
சனிக்கிழமையும் பள்ளிகளைத் திறப்பதா? இதன்மூலம் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்களை ஈடுகட்டும் வகையில் ஜனவரி மாதம் வரை சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. சில அரசு பள்ளிகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பள்ளி பணிநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

‘‘பாடநூல்களிலுள்ள அனைத்துப் பாடங்களையும் மாணவனின் மூளைக்குள் எப்படியாவது திணிக்க வேண்டும்; மனப்பாடம் மூலம் திணிக்கப்பட்ட பாடங்களை, தேர்வு என்ற பெயரில் நடத்தப்படும் ஆய்வின் போது விடைத்தாளில் கொட்டவைக்க வேண்டும் என்பது தான் கல்வி’’ என்ற எண்ணம் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் விளைவு தான் மாணவர்களின் வலிகள், வேதனைகள், மன அழுத்தம் ஆகிய எதைப்பற்றியும் கவலைப்படாமல், சூதாட்டத்தில் விட்டதை பிடிக்க துடிப்பவர்களைப் போல, வெள்ள நாட்களில் நடத்தப்படாத பாடங்கள் அனைத்தையும் நடத்தி முடிப்பதற்காக விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கூடங்கள் நடைபெறும் என தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்திருக்கின்றன.

சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய மழை மனிதர்களுக்கு மறக்க முடியாத பல பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் பள்ளிகள் தான் அந்த பாடங்களைப் படிக்கவில்லை. அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளத்தில் தங்களின் பாடநூல், சீருடைகள் ஆகியவை மட்டுமின்றி தங்களின் வீடு, உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். பல மாணவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை மழை& வெள்ளத்திற்கு பலி கொடுத்திருக்கின்றனர். சாவின் விளிம்பு வரை சென்று நல்வாய்ப்பாக மீண்டு வந்த மாணவர்களும் உண்டு. மேல்தட்டு மாணவர்கள் இவ்வளவு துயரங்களை அனுபவித்திருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் மூழ்கடித்த வெள்ளத்தில் சிக்கி பல நாட்கள் உணவின்றி பட்டினியில் வாடிய அனுபவத்தை பணக்கார மாணவர்களுக்கும் இம்மழை வழங்கியுள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி, ஒரே ஒரு மாணவன் வெள்ளத்தில் சிக்கி துயரத்தை அனுபவித்திருந்தால் கூட, அவனது துயரம் மற்ற மாணவர்களையும் தொற்றிக்கொள்ளும் ஆபத்துள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்.

மாணவர்கள் பற்றிய இந்த உளவியலை பள்ளி நிர்வாகங்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்க வேண்டும்; கவலைகளை மறந்து, சக மாணவர்களுடன் கலந்து மகிழ்ச்சியாக விளையாடப் பழக்க வேண்டும்; அதன்பிறகு தான் பாடம் என்பதையே அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள். இவற்றையெல்லாம் விடுத்து, பள்ளி திறந்த முதல் நாளிலேயே மொத்த புத்தகங்களையும் கையில் கொடுத்து படித்து ஒப்புவிக்கச் செய்வதற்கும், விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கும் அவர்கள் ‘ஓவர்டைம்’ வேலை செய்யும் ரோபோக்கள் அல்ல… குழந்தைகள் என்பதை கல்வியாளர்கள் உணர வேண்டும். அதுமட்டுமின்றி, சில பள்ளிகளில் வெள்ளம் புகுந்ததால் மாணவர்களின் குறிப்பேடுகள் சேதமடைந்து விட்ட நிலையில், அவற்றில் எழுதப்பட்டிருந்த அனைத்து பாடங்களையும் புதிய நோட்டில் எழுத வேண்டும் என்றும் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

பள்ளிக் கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும் இருக்க வேண்டும். ஆனால், மழை- வெள்ளத்தின் போது மூடப்பட்ட கல்லூரிகளுக்கே சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படாத நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவிப்பது கொடுமையானது; கண்டிக்கத்தக்கது. இது மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்துமே தவிர, பாடத்தை படிப்பதற்கு உதவாது. இனி வரும் வழக்கமான வேலை நாட்களில் எத்தனை பாடங்களை கற்றுத்தர முடியுமோ… அத்தனை பாடங்களைக் கற்பித்து, நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தினால் போதுமானது. எனவே, அரசு பள்ளிகளாக இருந்தாலும், தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; அதேபோல் ஆண்டுத் தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அத்துடன் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு அடுத்து வரும் பருவங்களுக்கான கல்விக் கட்டணத்தையும் இரத்து செய்ய தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் முன்வர வேண்டும்.

வாட்ஸ்ஆப்பில் ஜெயலலிதா உருக்கமா பேசினா போதுமா?: கருணாநிதி கேள்வி

சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாக பேசினால் போதுமா? அதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா? என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கேள்வி – பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகளை இழந்துள்ளனர். இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

தமிழகத்தின் தலைநகரமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது முதல்வர் எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்? மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள எத்தனை முகாம்களுக்கு சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார்? பத்திரிகையாளர்களை எத்தனை முறை சந்தித்து அரசின் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்?

வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் எத்தனை முறை விவாதித்தார்? எதிர்க்கட்சித் தலைவர்களை குறைந்தபட்சம் தோழமைக் கட்சித் தலைவர்களையாவது அழைத்துப் பேசினாரா? பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து உதவி கோரினாரா? எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எத்தனை முறை பதிலளித்துள்ளார்? இந்த கேள்விகள் அனைத்துக்கும் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.

இந்நிலையில் தான் முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாகப் பேசுகிறார். இதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா? என்பதை அவர் விளக்க வேண்டும்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தானாக முன்வந்து தன்னார்வ அமைப்புகளும், இளைஞர்களும் உதவியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல மக்கள் பிரச்சினைகளிலும் இளைஞர்கள் தன்னெழுச்சியோடு முன்வந்து தீர்வு காண வேண்டும்.

ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமான பணி மேற்கொள்ள தடை; உயர் நீதிமன்றம்

சென்னை:
தமிழகத்தில் ஏரி, ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள, கட்டடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் கே.சண்முகசுந்தரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்
ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் பெரும்பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடையில் உள்ள தண்ணீரை நம்பி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அதுதவிர மழை காலத்தில் மழை வெள்ளம் இந்த ஓடை வழியாக தங்கு தடையின்றி சென்றால்தான், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வராது. ஆனால், இந்த ஓடையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டும், இந்த ஐகோர்ட்டும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், இந்த பெரும்பள்ளம் ஓடையில் ஈரோடு தாசில்தார் உத்தரவின்படி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் ஆட்களை வைத்து மண்ணை கொட்டி வருகின்றனர்.

இதனால், நீர் ஓட்டம் பாதிக்கப்படுகிறது. கனமழை பெய்தால், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதற்கு காரணம் நீர்நிலைகளில் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டதே ஆகும். எனவே, பெரும்பள்ளம் ஓடையில் மணல் கொட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும். கொட்டப்பட்ட மணலை எடுத்து, ஓடையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்… – என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில்…
மனுதாரரின் இந்த வழக்கை கடந்த நவம்பர் 16-ந்தேதி நாங்கள் விசாரித்தபோது, ஈரோடு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மனுதாரர் கூறும் பெரும்பள்ளம் ஓடையை நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டோம். அதன்படி அதிகாரிகளும் ஆய்வு செய்ததாக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார். ஆனால், மனுதாரர் தரப்பு வக்கீல் எல்.சந்திரகுமார், ‘இந்த நீர்நிலையை மறித்து அரசு சாலை அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். எனவே, இந்த வழக்கின் தன்மையை ஆராய்ந்ததில், ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டியதுள்ளது.

அதாவது, மனுதாரர் குறிப்பிட்ட நீர்நிலை மட்டும் அல்லாமல், தமிழகத்தில் உள்ள ஏரி, ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் சாலை உள்ளிட்ட எந்த ஒரு கட்டுமானப் பணிகளையும் அரசு மேற்கொள்ளக்கூடாது. நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். – என்று கூறினர்.

என்னமா சொல்லுறீங்க? பீப்…. பீப்…. பாடலுக்கு இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டுமா ? 

 

தற்போது சர்சையை கிளப்பியுள்ள சிம்பு, அனிருத்தின் “பீப் சாங்” குறித்து சென்னையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜாவிடம், தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஆனந்த் நேற்று கருத்து கேட்டுள்ளார்

இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி செய்தியாளரை தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்ததால் அதற்கு ஊடகவியலாளர்கள் சங்கங்கள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வாட்ஸ் ஆப்மூலம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த கண்டன அறிக்கையின் முடிவில் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன், சிம்பு, அனிருத், “பீப் சாங்” பாடல் பெண்களை மிக கேவலமாக சித்தரித்துள்ளதற்கு இசையமைப்பாளர் இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதற்கு மாறாக கேள்வி கேட்ட நிருபரை தரக்குறைவாக பேசியது இளையராஜாவின் உண்மையான முகத்திரை கிழிந்து உண்மையான சொரூபம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இளையராஜாவின் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது என அன்பழகன் கூறியுள்ளார்.

 

images india AhaaGUa72tUs - 2026

 

கண்டன அறிக்கையின் முடிவில் அன்பழகன் கூறி வெளியிட்டுள்ள மேற்சொன்ன தகவல்கள் மட்டும் அறிக்கையில் சிவப்பு மையினால் வட்டமிடப்பட்டு அந்த அறிக்கை வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவருகிறது .

எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! எவரும் பாடம் எடுக்கவேண்டாம்

 
எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்!. “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் என்ற அவருக்கு எவரும் போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்..
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கூறியுள்ளார்.
 
மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
ஊடகங்களில் பங்கேற்கும்…
“அரசியல் விமர்சகர்கள்”
“சமூக ஆவலர்கள்” போன்ற அடையாளத்துடன் பங்கேற்போருக்கு வேண்டுகோள்…
‪#‎வணக்கம்‬…
 
விவாதங்களில் மக்களின் தேவை, மக்களின் நலன், சமூக சீர்திருத்தம், போன்றவைகளை முன்னெடுத்து கருத்துக்களை சொல்லுங்கள்…
 
அரசியல் கட்சிகளை தூக்கி பிடிப்பது, தூக்கி போட்டு மிதிப்பது, அதன் வளர்ச்சியில் அக்கரை கொள்வது, வளச்சியை தடுப்பது போன்ற கருத்துக்களை முன் வைக்காதீர்கள், அதை கட்சியின் அடையாளத்துடன் வருபவர்களின் வேலை அது…
 
இதை ஏன் சுட்டிகாட்டுகிறேன் என்றால், தேமுதிகவை பற்றிய விவாதங்களில் ஈடுபடும் சமூக அரசியல் ஆவலர்கள், மக்களின் தேவைகளை, நாட்டின் வளர்ச்சியை மனதில் கொள்ளாமல், அரசியல் கட்சிகளின் லாப நஷ்டத்தைப்பற்றி, ஓட்டு வங்கியை பற்றி, அக்கரையுடன் விவாதிக்கிறீர்கள் அதை விட்டு விட்டு, மக்களுக்காக கட்சிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இந்த தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று மக்களை சுற்றியே கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்காக, மக்களின் தேவைக்காக அரசியல் கட்சி ஆரம்பித்தவர், மக்களின் நலனையே கவனத்தில் கொள்பவர்…
எவர் கட்சியையும் தூக்கி நிறுத்தவோ, எந்த கட்சியையும் அழிப்பதோ நோக்கம் அல்ல, முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே உருவான இயக்கம் தேமுதிக…
எவரும் கேப்டன் அவர்களுக்கு “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்…
‪#‎நன்றி‬.
 
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்