Home Blog Page 5914

வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்!

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ருபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.

சென்னைய மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்ஷ்ய் குமார் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களை தொடர்பு கொள்கையில், அவர் சுஹாசினி மணிரத்னம் அவர்களை தொடர்பு கொள்ள கூறியுள்ளார்.

சுஹாசினி மணிரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ருபாய் 1 கோடி ருபாய் காசோலையை நடிகர் அக்ஷ்ய் குமார் அளித்துள்ளார். பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது.

தற்போது அக்ஷ்ய் குமார் கத்தி படத்தின் ஹிந்தி பதிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

மக்களை சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா வாட்ஸ் ஆப் மூலம் பேசுகிறார் : மு.க.ஸ்டாலின்

 
 
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா, வாட்ஸ்ஆப் மூலம் பேசுகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியும், நிவாரணப்பொருட்கள் வழங்கியும் வருகிறார்.
 
சைதாப்பேட்டையில் உள்ள ஜோதியம்மன் நகர், கோதாமேடு, சீனிவாசா தியேட்டர், எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் உடமைகளை இழந்த 14 ஆயிரம் பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, புடவை, லுங்கி, பாய் உள்ளிட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார்.
 
பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
செம்பரம்பாக்கம் ஏரியை மிகவும் தாமதமாக அதுவும் ஜெயலலிதாவின் உத்தரவுக்காக காத்திருந்து ஒரே நேரத்தில் 35,000 கனஅடி தண்ணீரை திறந்து விட்ட காரணத்தால் தான் சென்னை மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது தொடர்பாக தன்னால் பதில் சொல்ல முடியாததால் தவறான ஒரு தகவலை தலைமை செயலாளரை விட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா சொல்ல வைத்திருக்கிறார்.
 
நிவாரண நிதியையும், நிவாரண உதவிகளையும் மிகச் சிறப்பான வகையில் செயலாற்றி வரும் பொது நலச்சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சி குழு மூலமாக கொடுத்தால் தான் முறையாக சென்றடையும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 
பாதிக்கப்பட்ட மக்களை ஒரு முறை கூட  சந்திக்காத ஜெயலலிதா அதையெல்லாம் மறைத்து விட்டு இன்றைக்கு மக்களுக்காக நான் மக்களால் நான் என்று சொல்லி கொண்டிருக்கிறார். மக்கள் அவர் மீது இப்போது கடும் கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டு தான் நேற்று 15-12-2015 சினிமாவில் வசனம் பேசுவது போல வாட்ஸ் ஆப்பிலும் வசனம் பேசியுள்ளார் என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 

 

உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்…! : தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உரை!

 

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் உரையாற்றி உள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் தொடர்பாக உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்…! எனக்கு சுயநலம் கிடையாது. என்னை நீங்கள் ‘அம்மா’ என்று அழைக்கும் ஒரு சொல்லுக்காக என்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். எத்துயர் வரினும் இந்த தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்” என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில் கூறியுள்ளார்.

அவரது முழுமையான பேச்சு ஒலி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் இணையதளத்தில் தேர்தல் – 2016 கருத்துகணிப்பு : திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு

 
தமிழகத்தில் வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் செய்தி இணையதளத்தில் இன்று 15-12-2015 கருத்துகணிப்பு நடத்தியதாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக தகவல் புகைப்படப் ஆதாரத்துடன் பரவிவருகிறது.
 
வைரலாக பரவிவருல் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
 
அடுத்தடுத்த பரபரப்புகள்…
 
நமது எம்.ஜி.ஆர் இணையதளத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என கேட்டிருந்தார்கள்..அதற்கு 80 சதவிகிதத்திற்கும் மேலானோர் திமுக கூட்டணி வெற்றி பெறும் என பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
இது பற்றிய தகவல்கள் நிருபர்கள் மூலம் கசிந்தவுடன் சில நிமிடங்களில் அந்த இணையதளத்தையே முடக்கி விட்டார்கள்..பின்னர் 5 நிமிடங்கள் கழித்து இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் இந்த முறை தேர்தல் கருத்து கணிப்பு பதிவு இல்லை..அதற்கு பதிலாக மக்கள் கருத்து..இந்த இணையதளத்தை பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள் என்று மாற்றிவிட்டார்கள்..
 
டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழ், 2016 தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று இணையதளத்தில் கருத்துகணிப்பு எடுத்து வருகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், 85% பேர் தி.மு.க கூட்டணி வெற்றி பெரும் என்று வாக்களித்துள்ளனர். வெறும் 12.92% ஆதரவு மட்டுமே அ.தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது.
images india 20151215063512 - 2026
 
 
எப்படியோ இணையதள பொறுப்பாளர்கள் நீக்கப்படுவது மட்டும் உறுதி.. என வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

 

தமிழக முதலமைச்சர் வேட்பாளர் கலெக்டர் சகாயம் ?

 
அட ஆமாங்க, எவ்வளவு நாள் தான் “செய்வாங்க செய்வாங்கன்னு” திராவிடக்கட்சிகளுக்கும்,அவர்களுக்கு கூட்டணியா இருந்த தோழமை கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டுட்டு ஏமாந்து கொண்டே இருப்பாங்க.நம்ம டெல்லியில் மக்கள் ஒரு மாற்றத்துக்காக எப்படி அரவிந்த் கேஜிரிவாலை தேர்ந்தெடுத்தார்கள்.
 
அரவிந்த் கேஜ்ரிவால் கூட அண்ணா ஹசாரேவின் லோக்பால் பிரச்சனைல மக்களுக்கு அறிமுகமானார். இன்று அவர் நடத்தும் ஆட்சியில் கூட பிரச்சனைகள் மலிந்து தான் இருக்கு.நேற்றைக்கு கூட கலவர வழக்கில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஆனா நம்ம தமிழ்நாட்டுல “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” இந்த வார்த்தையை கேட்டாலே நம்ம மனசுக்குள் சட்டுன்னு ஞாபகம் வருபவர் சகாயம் ஐஏஎஸ். அவர் சென்ற இடமெல்லாம் நேர்மையாக இருந்ததன் விளைவு பல இட மாற்றங்கள்.சமீபத்தில் நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நுழைந்த வேகத்துக்கு இரண்டு தேசிய விருகளை பெற்றுத்தந்தவர். புதிய மாற்றங்களை உருவாக்கியவர்.தற்பொழுது மதுரை கிரைனட் முறைகேடுகள் பற்றி விசாரிக்கும் அதிகாரியாக பொறுப்புவகித்து வருகிறார்.
 
இந்த நிலையில் தமிழக அரசுக்கு மதுரை கிரானைட் முறைகேட்டில் ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல இவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமாக லட்சக்கணக்கான இளைஞர்கள்இவருக்கு ஆதரவளித்து வருகிறார்கள். இவருக்கு சில சமூக விரோதிகளால் மிரட்டல் வரும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் “உங்களுக்கு துணையாக நாங்க இருக்கோம்” என்று ஒன்று திரள்கிறார்கள்.
 
அரசியலுக்கு கலெக்டர் சகாயம் வரும் எண்ணம் இல்லை என்பதை அவர் பலமுறை சொல்லி விட்டார். ஆனாலும் தற்போது தமிழகத்தில் நடைபெறும் அரசியல் சூழ்நிலையில் அவர் பலரின் வேண்டுகோளால் அரசியலுக்கு வரும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
 
மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற 2016 தேர்தலில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த அதிமுக, திமுக, ஆகிய இரண்டு பலமான கட்சிகளுக்கு எதிராக வாக்களித்து வீ ழ்த்த வேண்டும் எனும் மன ஓட்டமே தமிழக மக்களிடம் காணப்படுகிறது. தற்போது மக்கள் நல கூட்டனிக்கு மக்களிடம் அதரவு இருப்பதகவே தெரிகிறது. மேலும் மக்கள் நல கூட்டனியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இணைந்தாலும்இணையலாம் .அந்த கூட்டனிக்குள் கலெக்டர் சகாயம் இணைந்தாலும் இணைய கூடும் எனும் பேச்சே பரவலாக பேசப்படுகிறது. முக்கியமாக மக்கள் நல கூட்டனியின் முதலமைச்சர் வேட்பாளர் இது நாள் அறிவிக்கபடவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
 
இந்த நிலையில் தற்பொழுது ஒரு செய்தி பெரிய அளவில் உலா வருவது என்னவென்றால் “ரமணா” பட பாணியில் யாரெல்லாம் நேர்மையான அரசு அதிகாரிகளாக செயல்பட்டு ஓய்வுபெற்றவர்களை தொகுதி வாரியாக சேகரித்து, வரும் தமிழக சட்டமன்ற 2016 தேர்தலில் அவர்களை தொகுதி வேட்பாளராகவும் கலெக்டர் சகாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முயற்சி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
 
சென்னையில் வருகிற 20 ம் தேதி “அணிதிரள்வோம்” மாற்றத்திற்கான பிரம்மாண்டபேரணி எனும் பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் சகாயம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சகாயம் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது குறித்தான இறுதியான முடிவை அறிவிக்க இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது .
 
images india 12390907 819881714784531 6363740570372039514 n - 2026
 
ஒரு வேலை கலெக்டர் சகாயம் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கபடுவார் எனும் தகவல் உண்மையென்று இருந்தால் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல நேர்மையான தலைமை அமையும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.
 
டெல்லியில் மக்கள் ஒரு மாற்றத்துக்காக எப்படி அரவிந்த் கேஜிரிவாலை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்களோ அதே போல் கலெக்டர் சகாயத்தையும் முதலமைச்சராக பொது மக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு. மேலும் நேர்மையான அரசு அதிகாரிககள் தமிழக சட்டமன்ற 2016 தேர்தலில் போட்டி யிட்டால் அவர்களையும் பொது மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என பரவலாக பேசப்படுகிறது .
 
– கவின் –

12 வருட சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது: விஜய் சேதுபதி படம் பற்றி இயக்குனரின் குமுறல்!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘தர்மதுரை’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஸ்டூடியோ 9 சுரேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவர் கூட்டணியில் புதுமுக இயக்குனர் ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘வசந்தகுமாரன்’.

விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படம் நிறுத்தப்பட்டது. தற்போது இருவரும் இணைந்து மீண்டும் ‘தர்மதுரை’ படத்தை துவங்கி இருக்கிறார்கள். இந்நிலையில், ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குநரான ஆனந்த் குமரேசன், ‘தர்மதுரை’ படக்குழுவுக்கு கேள்விகள் எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய வலைதளபக்கத்தில்,“வசந்தகுமாரன்” திரைப்படத்தை எழுதி இயக்குவதற்காக கடந்த டிசம்பர் 2012-ல் நான் ஒப்பந்தமாகினேன். பணிகளும் நடந்தன. பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் என்று வருடங்கள் நகர்ந்தன. தற்போது அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிகிறேன்.”வசந்தகுமாரன்” திரைப்படத்திற்குப் பதிலாக ”தர்மதுரை” என்கிற திரைப்படம் இன்று (டிசம்பர் 14 – 2015) படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக மீண்டும் ஊடகங்களின் மூலமே அறிகிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டு, இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளேன்…

1. வசந்தகுமாரன் திரைப்படம் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் கதாநாயகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை என்றே அறியப்படுகிறது. அது என்ன பிரச்சினை?

2. அந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது?

3. பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால், சம்மந்தப்பட்ட படம்தானே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஏன் ”வசந்தகுமாரன்” கைவிடப்பட்டது?

4. அதற்குப் பதிலாக தர்மதுரை என்கிற திரைப்படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?

5. இவை எதுவுமே தொழில் அடிப்படையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலோ கூட தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகரோ,தகவலாகவோ அல்லது என்னை அழைத்து நேரிலோ ஏன் என்னிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.?

நான் பலமுறைத் தொடர்புகொள்ள முயற்சித்தபொழுதும் அவர்களிடம் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பதில்களே இல்லை என்பதுதான் உண்மை. இப்பொழுது என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். மூன்று வருடங்களாகக் காத்திருந்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சுமார் பன்னிரெண்டு வருட சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

ஒரு திரைப்படம் கைவிடப்பட்டு அதற்குப்பதிலாக இன்னொரு திரைப்படம் நடக்கும்பொழுது அது ஏன் என்று விளக்கமளித்து துறை சார்ந்தவர்களுக்கும், ஊடகங்களுக்கும் ”அறிவிக்க” வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் எனக்காவது விளக்கமளிக்கவேண்டியது தார்மீக அடிப்படையில் உங்களது கடமை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் உங்களிடம் படமோ, பணமோ அல்லது பரிதாபமோ வேண்டி நிற்கவில்லை.

தயாரிப்பாளருக்கும் கதாநாயகருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில், ஒரு முதல் பட இயக்குனராகிய நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த ஒரு முறையான விளக்கம் மட்டுமே… தர்மதுரை வெற்றி பெற வாழ்த்துக்கள்… -இயக்குனர் திரு.ஆனந்த் குமரேசன்.

விரைவில் வெளிவரவிருக்கும் “சேதுபதி”

வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பிசன் நடிப்பில் உருவாகிவரும் படம் “சேதுபதி”

மதுரை மாநகரத்தில் ஒரே கட்ட படபிடிப்பாக எடுக்கப்பட்ட சேதுபதி திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் தனது டப்பிங் வேலைகளை விஜய் சேதுபதி செய்து வருகிறார்.

மிக விரைவில் இப்படத்தின் இசை வெளியிடும், அதிகாரப்பூர்வ பட வெளியிடு தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறுகிறது தயாரிப்பு தரப்பு.

ம.பி.யில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 15 பேர் பலி

இடார்சி:

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பஸ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்.

ஹோஷானாபாத் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து, பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர்.

இன்று காலை அந்த தனியார் பஸ் இந்தூரில் இருந்து பராசியாவுக்குச் சென்றது என்றும், அப்போது இந்த விபத்து நேரிட்டதாகவும் கூறப்பட்டது. விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கிராம மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை மோசமாக உள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நான் நேசித்தவர்களே விலகிச் சென்றனர்; எனக்கென்று உலகம் இல்லை: வைகோ வேதனை

சென்னை:

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர்களை நான் அதிகம் நேசித்தேன். எனக்கென்று தனிப்பட்ட உலகம் இருந்ததில்லை. தொண்டர்களே என் உலகம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ., வெளியிட்டுள்ள அறிக்கை:-

பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் 1964-ல் கல்லூரி மாணவனாக இணைந்து, தி.மு.க.வை என் உயிரினும் மேலாக நெஞ்சில் ஏந்தி னேன். 1993 அக்டோபர் 3-ந்தேதி கொலைப்பழி சுமத்தப்பட்டபோது என் தலையில் பேரிடி விழுந்தது போல் துடித்தேன். என் உள்ளம் நொறுங்கியது.

தி.மு.க.வின் ஐந்து தொண்டர்கள் எனக்கு ஏற்பட்ட நிலைமைக்காக நெருப்புக்குத் தங்கள் உயிர் களைத் தந்தனர். இந்தத் தூய தொண்டர்களின் தியாக நெருப்பில் உதித்ததுதான் மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம்.

22 ஆண்டுகள் கடந்து விட்டன. அணு அளவும் தன்னலம் இன்றித் தமிழர் நலனுக்காகவும் தாய்த் தமிழகத்தின் உயர்வுக்காகவும், தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணாவின் கொள் கைகளைக் காப்பதற்காகவும், நானும் எனது தோழர் களும் போராடி வந்திருக் கின்றோம்.1996-ம் ஆண்டு சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு. க.வின் தலைமை எங்கள் இயக்கத்தில் இருந்தவர்களை இச்சகம் பேசி அழைத்து, ம.தி.மு.க.வுக்கு மூடு விழா என்று செய்தி வெளியிட்டது.

2006-ம் ஆண்டில், எங்கள் இயக்கத்தின் உயர் பொறுப்புகளில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும், அமைச்சர் பதவி எனும் ஆசை வார்த்தை கூறி தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தையே நிர்மூலம் செய்து விட பொதுக்குழு உறுப்பினர்களுக்குப் பெரும் பணம் தருவதாகக் கூறி வளைக்க முயன்று, போட்டிப் பொதுக்குழுவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது. அந்த முயற்சியிலும் தி.மு.க., பரிதாபகரமாகத் தோற்றுப் போனது. கொள்கை மாமணிகளான பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் இயக்கத்தைக் காப் பாற்றினார்கள்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தங்கள் கூட்டணியில் சேர்க்க முயல்வது; அது பலிக்காவிட்டால், எங்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு பதவி உள்ளிட்ட பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி ம.தி.மு.க.வை வீழ்த்துவது எனத் திட்டமிட்டு, பல மாதங்களாகவே ரகசிய மாக பல்வேறு முனை களில் சதிச்செயல்கள் நடைபெறுவதை அறிந்து கொண்டேன்.

என்னை விட எங்கள் இயக்கம் மேலானது; நிரந்தர மானது என்பதனால், பொது மக்களிடம் கழகத்தின் நம்பகத்தன்மையைப் பாது காக்கவும், எக்காரணத்தைக் கொண்டும் திராவிட முன் னேற்றக் கழகத்துடன் கரம் கோர்ப்பது இல்லை என்று, இயக்கத்தில் பெரும் பாலோர் கருத்தின் அடிப் படையில்தான் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சி களுடனும் எக்காரணத்தை முன்னிட்டும் உடன்பாடு கொள்வது இல்லை என்று முடிவு எடுத்தோம்.

உயர்நிலைக்குழுவில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவை, மாவட்டச் செய லாளர்கள் கூட்டத்தில் முன் வைத்தபோது, அக்கூட்டத்தில் எவரும் இந்தக் கருத்துக்கு மறுப்புக் கூறவில்லை.

இயக்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்களை நான் மிகவும் நேசித்து வந்தேன். ஆனால், சில மாதங்களாகவே தி.மு.க. தலைமையில் இருந்து அவர்களை ரகசிய மாக அணுகி வந்த செய்தி களை அறிந்து நான் அதிர்ச்சி யுற்றேன். விலகிச் சென்ற வர்கள் மீது நான் எந்தக் குறை யும் கூற விரும்பவில்லை. முடிவு எடுப்பது அவர்களது உரிமை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தை கள் ஆகிய கட்சிகளோடு மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம் இணைந்து, ஜூலை மாதத்தில் இருந்து கடந்த ஐந்து மாதங்களாகப் பல கட்டங்களில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில், மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி இருக்கின்றோம்.

தமிழக அரசியலில் இது வரை இல்லாத அளவில், இக்கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டத்தையும் வெளியிட்டுள்ளோம். நடு நிலையாளர்கள், நல்லோர் மனதில் எல்லாம் இதற்குப் பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில், மிகுந்த ஆத்திரம் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க.வின் தலைமை அனைத்துப் படைக்கலன்களையும் பயன் படுத்துகிறது.

தற்போது கழகத்தை விட்டு விலகி தி.மு.க.வில் சேர்ந்துள்ள சகோதரர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. எல்லையற்ற அன்போடும் பாசத்தோடும் பரிவோடும் உடன்பிறவாத சகோதரர்களாக நேசித்து நான் பழகி வந்த காரணத்தால், அவர்கள் விலகிச் சென்றதில் என் இருதயம் காயப்பட்டு வலிக்கத்தான் செய்கிறது.

போய்ச் சேருகின்ற இடத்தின் தலைமையைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் என் மீது கூறும் குறைகளுக்காக நான் ஆத்திரப்படவில்லை. இத்தனை ஆண்டுக் காலம் என்னோடு கரம் கோர்த்து உழைத்ததற்காக அந்த இனிய தோழர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனக்கென்று ஒரு உலகம் இல்லை. எங்கள் இயக்கமும், தொண்டர்களும்தான் என் உலகம். கடுமையான சோதனைகளைத் தாங்கி நெஞ்சுறுதியோடு பயணித்துக் கொண்டு இருக்கின்றோம். எங்கள் இயக்கத்தின் மூல பலமே தொண்டர்கள்தான். சபலத்திற்கோ சஞ்சலத்திற்கோ எள் அளவும் ஆட் படாத தொண்டர்களும், அவர்களைத் தக்க முறையில் வழிநடத்திச் செல்லும் தளகர்த்தர்களும், இயக்கத்தைப் புதிய வலிவுடன் முன்னெடுத்துச் செல்வோம்.

– இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

அதிமுக., எம்.எல்.ஏ.க்கள்., தங்கள் 1 மாத சம்பளத்தை நிவாரணத்துக்கு வழங்குவர்: ஜெயலலிதா

சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நிவாரணப் பணிகளில் உதவ, அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவர் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் ஏற்பட் டிருக்கும் கடுமையான மழை வெள்ள சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தேவை யான அனைத்து உதவிகளை யும் செய்கின்றன பெரும் பணியில் எனது தலைமை யிலான அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது.

வரலாறு கண்டிராத வகையிலும், திடீரென்றும் ஏற்பட்ட அரிதினும் அரிதான இந்த மழையும் வெள்ளப் பெருக்கும் தமிழகத் தில் ஏற்படுத்தி இருக்கும் இழப்புகள் ஏராளம்.

நிவாரணப் பணிகளில் எல்லோரும் பங்கேற்கும் வகையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற பொருள் உதவியையும், உடல் உழைப் பையும் வழங்கி வருகின்றனர் என்ற செய்தி பல இடங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது.

நிவாரண பணிகளில் தன்னலமின்றி ஈடுபட்டி ருக்கும் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டும்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு எல்லாம் இந்த மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இந்த பணியில் பங்கு பெற்று ஆற்றி வரும் கடமைகளில் ஒன்றாக கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது 1 மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அன்பு சகோதரி யாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன். கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களை பற்றியதாகவே இருக்கிறது. இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.