Home Blog Page 5919

கிராமிய வில்லிசை சங்க நிர்வாகிகள் தேர்வு

கிராமிய வில்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
நெல்லைமாவட்ட கிராமிய வில்லிசை கலைஞர் சங்கத்தின் கீழப்பாவூர் பகுதி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு நலிவுற்றோர் சங்க தலைவர் பாவூர்நாவலர் தலைமை வகித்தார், தமிழ்இலக்கிய மன்ற தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க தலைவராக மேலபட்டமுடையார்புரம் த.ஜெகநாதன், துணைத்தலைவராக குற்றாலம் மாடக்கண் என்ற கண்ணன், செயலாளராக சிவகாமிபுரம் ஆர்.ராஜலட்சுமி, துணைசெயலாளராக பி.சரவணன், பொருளாளராக எஸ்.வி.செல்லத்துரை, தனிக்கையாளராக பாலசுப்பிரமணியன், சட்ட ஆலோசகர்களாக வக்கீல்கள் மலர்விழி, ராமச்சந்திரபாண்டி மற்றும் கவுரவ ஆலோசகர்களாக நடராஜன், அழகுமுத்து, மனோகரன், செந்தில்குமார், தங்கசிவா, ராமர், பாலமுருகன், தங்கசாமி, லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்களாக கிருஷ்ணன், மைனர்ராஜ், முருகன், பரமசிவன், விமலா, செல்வி, வீரம்மாள், மாரியம்மாள், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது வழக்கு பதிவு செய்ய பெண்கள் அமைப்பு போர்கொடி !

 
சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய தமிழக அரசு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பாலியல் வெறியோடு பெண்களை கொச்சை படுத்தி பாடல்அமைத்து வெளியிட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய புரட்சிகர விடியல் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கி வாட்ஸ்ஆப்பில் தகவலை பதிவிட்டு பரவவிட்டுள்ளது.
 
வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த தகவல் பதிவில் கூறியுள்ளதாவது :-.
 
பாலியல் வக்கிரம் பிடித்த ஆண்களின் உடலின் ஒவ்வொரு செல்லுமே,
 
பெண்களை எப்படி மடக்குவது, போட்டு தள்ளுவது, லவ்வுவது, படுக்கையில் விழ வைப்பது என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருக்குமா?
 
இந்த கேடு கேட்ட வக்கிர நாய்கள் திருந்தவே மாட்டார்களா?
அனிருத் கிற நாயும், சிம்பு ‘ என்கிற சலம்பல் நாயும், பீப் சாங் என்ற பெயரில் பெண்களின் உறுப்புகளை மையப்படுத்தி படு அசிங்கமாக பாடியிருந்த பாட்டை கேட்டு கொதித்துபோய் தான் இந்த பதிவு……!!
 
என்னாத் ….கு லவ் பண்றோம், என்ன பு……கு லவ் பண்றோம்,…. லவ் வை ஏண்டா பண்றோம்,…
 
சந்தோசமா இருக்கணும்னு லவ்வை பண்ணுறோம்…….
போடு…
லவ் மட்டும் பண்ணாத மாமா…
அவள வேணா வச்சிக மாமா…..
பு….ட…., பு…ட… “”…..!!!!
இப்படி போகுது பாட்டு..
இனி இந்த பாட்டு ஒலகம் பூரா இளவட்ட புள்ளங்க மொதக்கொண்டு விஜய் டிவி சூப்பர் சிங்கர் வரைக்கும் பிஞ்சு குழந்தைகள் வரை அர்த்தம் புரிந்தும் புரியாமலும் பாடப்போகிறார்கள்….
 
(ஏற்கனவே … ஒருவயது குழந்தைகள் முதற்கொண்டு 90 வயது பாட்டி வரை பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இன்னும் இதற்க்கு மேல்
பெண்களை சீண்ட நினைக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது.பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கப்போகிறது.பாலியல் பலாத்காரங்களும், படுகொலைகளும் அதிகரிக்கப் போகிறது.
இதற்கு ஒரு பிரபல பொறம்போக்கு எழுத்தாளர் [பதில் எழுதுறார்.
 
என்னவென்று,,,,, “‘ என்னுடைய ஆட்சோபம் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி பாடியதற்காக அல்ல … இதெல்லாம் சாதாரணமப்பா,… நான் கூடத்தான் என்னுடைய நாவல்களில் இந்தமாதிரி ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அதை வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்க மாட்டார்கள். ( இவரு விளக்கு வைத்து பார்பார் போல )
 
சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய இந்த மானங்கெட்ட ஜெயலலிதா அரசு, …
 
இப்படி பாலியல் வெறியோடு பெண்களை, பெண் உடலை, பகிரங்கமாக கொச்சை படுத்தி உலகம் முழுக்க வைரலாக பரவவிடும் தரங்கெட்ட தறுதலை நாய்களின் மீது ஏன் வழக்கு போட்டு சிறையிலடைக்கக்கூடாது ?
 
தமிழக அரசே… காவல்துறையே…
 
ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தை, பெண் உடலை,பொதுவெளியில் பகிரங்கமாக இழிவு படுத்தி, பாடல் எழுதி பாடிய நடிகர் சிம்பு, அதற்க்கு துணைபோன இசையமைப்பாளர் அனிருத், இவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்…..!!
 
இல்லையென்றால் வழக்கு பதிய வைப்போம்.
ஒட்டுமொத்த பெண்கள் சமூகமே இவர்களுக்கு வீதிமன்றத்தில் தண்டனை கொடுப்போம்.
 
புரட்சிகர விடியல் பெண்கள் மையம்..
தமயந்தி, சேலம்.
 
என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த தகவல் பதிவில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் ஏன் இந்த பாடலை எதிர்த்து புரட்சிகர விடியல் பெண்கள் மையமே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரக் கூடாது? எனும் கேள்வியையும் பல வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக வைரலாக பரவிவரும் அந்த பதிவின் கீழ் பலர் பதிவிடுவது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் மத்திய, மாநில அரசுகள் டீசல் வாகனங்களை வாங்க தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புது தில்லி:

மத்திய மாநில அரசுகள் டீசல் வாகங்களை இனி வாங்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் மத்திய, மாநில அரசு அலுவலங்களில் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகனங்கள் அதிக பயன்பாட்டில் உள்ளன. இதனால் தலைநகர் தில்லியில் காற்றில் அதிக மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக பரவலாக கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

அதில், தில்லியில் மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய இலாகாக்களில் பயன்படுத்துவதற்கு இனி டீசல் வாகனங்களை வாங்கக் கூடாது என்றும், அரசு இலாகாக்கள் வாங்கும் டீசல் வாகனங்கள் மீது எந்தப் பதிவும் இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

காற்று மாசு அடைவதை தடுக்கும் வகையில் தில்லி மாநில அரசு ஒரு நாள் விட்டு ஒருநாள் வாகனங்களை இயக்குவதற்கு கொண்டு வந்துள்ள திட்டம் அதன் நோக்கத்தை அடைய உதவாது; ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தால் தில்லி நகரவாசிகள் ஒவ்வொருவரும் 2 கார்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.

மும்பை அருகே ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து குழந்தை பலி

தானே:

மும்பை அருகே ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை ஒன்று பலியானது. இருவர் காயம் அடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள பிவாண்டி நகரில் வசித்து வரும் தம்பதிக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மேல் மருத்துவ வசதி தேவைப்பட்டதால், தானேயில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் மும்பையில் உள்ள நவீன மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ஆம்புலன்சில் குழந்தையுடன் சென்றனர். உடன் ஒரு டாக்டரும், நர்சும் அதில் பயணித்தனர்.

அப்போது ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து தீப்பொறி கிளம்பியதை டாக்டரும் நர்சும் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் குழந்தையை விட்டு விட்டு கீழே குதித்தனர். அதற்குள் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது. இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்தத் தீ அருகில் நின்றிருந்த மற்றொரு ஆம்புலன்சிலும் பரவியது.

தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது எனினும் ஆம்புலன்சில் இருந்த குழந்தை உடல் கருகி பலியானது. குழந்தையின் பெற்றோர் வெளியில் நின்றிருந்ததால் அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை.

தேசிய மக்கள் நீதிமன்றம்: புதுவையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரி:
புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கிவைக்கிறார்.

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்று (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் அந்தந்த நீதிமன்றங்களிலும் நடைபெறுகிறது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமாதானம் செய்யத்தக்க குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமையியல் சிவில் வழக்குகள், வருவாய்த்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வழக்குகள், சிவில் மேல்முறையீடு, குற்றவியல் வழக்கு மேல்முறையீடு மற்ற வகையான மேல்முறையீடு வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், ஓய்வூதியநிலுவை சம்பந்தப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையம் செய்துள்ளது.

மேலும் இன்றைய தினம் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவில், இந்திய அரசிய லமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரிகள், அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடந்த கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.

மேலும் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செய்தி தொகுப்பு வெளியீடு மற்றும் புதுச்சேரியில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் 4-வது குற்றவியல் நீதிமன்றம், காரைக்கால் குடும்ப நீதிமன்றம் மற்றும் சார்பு நிலை நீதிமன்றங்களில் திறப்பு விழாவும் நடக்கிறது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ஜெய்சந்திரன், நீதிபதி சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விழா நடக்கிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரே ஸ்டிக்கர் இன்னும் வரவில்லையா ? : சட்டமன்ற உறுப்பினர்

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.
 
மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்ய ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் தமிழக பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.
 
இந்த நிலையில் மிக கொடுரமாக மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீதும் கூட முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர்.
 
நிவாரண பொருட்கள், தேவைப்படுவோருக்கு கிடைக்காமல், அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், ஆட்சியாளரே, மக்கள் அளித்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்காமல் வைத்திருக்கிறார்கள்.
 
இந்த நிலையில் கடலூரின் தி.மு.க.வைச் சேர்ந்த குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியரே ஸ்டிக்கர் இன்னும் வரவில்லையா ? என கேள்வி எழுப்பியுள்ளார் .
 
கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சிவசங்கர் கடிதம் எழுதியுள்தாக கூறி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில்
கூறியுள்ளதாவது :-.
 
அன்பிற்குரிய கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,
 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருக்கும் நிவாரணப் பொருட்களை கொஞ்சம் வெளியே எடுங்களேன்.
ஆங்காங்கே மக்கள் நிவாரணம் கேட்டு, சாலை மறியலில் இறங்கி விட்டார்கள். இன்று (11.12.2015) காலை 11.00 மணியளவில் வடலூர் அருகே, சாலை மறியலில் நான் மாட்டிக் கொண்டேன். இப்போது மறியலுக்கு பிறகு நிவாரணப் பொருட்கள் வருவதாகத் தகவல்.
 
அரசாங்க சார்பாக நீங்கள் ஒன்றுமே தர வேண்டாம். மற்ற ஊர்களில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கும் பொருட்களை எடுத்து விநியோகம் செய்தாலே போதும்.
 
அங்கு ஒரு லட்சம் போர்வைகள் இருப்பதாகத் தகவல். அரிசி பல்லாயிரம் கிலோ குவிந்திருக்கிறது. சமையல் பொருட்கள், பிஸ்கெட், வேட்டி, சேலை என இன்னும் பல அத்தியாவசியப் பொருட்கள் குவிந்திருப்பதை வெளியே எடுக்காவிட்டால், காற்றில் இருக்கும் ஈரப்பதத்திலேயே பூஞ்சை பிடித்து விடும்.
அதை காவல் காக்க, ஒரு தாசில்தார், பல கிராம நிர்வாக அலுவலர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் என நியமித்து, பயனில்லாமல் பத்திரமாக வைத்திருப்பது நியாயமா?
 
வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இனியும் மக்கள் பொறுக்க மாட்டார்கள். பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் ஆங்காங்கே சாலைமறியல் என்ற செய்தி வர ஆரம்பித்து விட்டது.
 
தனி நபர்கள் தங்கள் உழைப்பில் சம்பாதித்ததை கொண்டு வந்து கடலூர் மாவட்ட மக்களுக்கு வழங்கி உதவி வருகிறார்கள்.
நீங்கள் மற்றவர்கள் அளித்ததை எடுத்துக் கொடுக்க ஏன் தயங்குகிறீர்கள், தாமதப்படுத்துகிறீர்கள் ?
 
இன்னமும் “ஸ்டிக்கர் ” வந்து சேர வில்லையா ?
 
அன்புடன்
சிவசங்கர்.எஸ்.எஸ்.
சட்டமன்ற உறுப்பினர்,
குன்னம் தொகுதி.
 
 
என்று கடலூரின் தி.மு.க.வைச் சேர்ந்த குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள dhinasari.com இணையதள லிங்கை பயன்படுத்துக.

 

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று வாகன பழுது நீக்கும் முகாம்கள்

சென்னை:

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பழுது நீக்கும் சிறப்பு முகாம்கள் இன்று நடக்கின்றன. முகாம் நடக்கும் இடங்கள் குறித்த பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், சொகுசு வாகனங்கள் என பல ஆயிரக் கணக்கான வாகனங்கள் சேத மடைந்தன. இவற்றில், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை, யமஹா, பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஐஷர் நிறுவனங்கள் இலவசமாக பழுது நீக்கி தருவதாகவும், இதற்கான சிறப்பு முகாம்கள் இன்று (டிச.12) முதல் வரும் 21-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதன்படி, 4 மாவட்டங்களிலும் முகாம்கள் நடக்கும் இடங்கள், நடத்தும் நிறுவனங்கள் பட்டியல், தமிழக அரசின் https://www.tn.gov.in/whatsnew இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியல்படி, ராயல் என்பீல்டு நிறுவனத்தின், சென்னை, அண்ணாநகர் சதர்ன் மோட்டார்ஸ், ஆயிரம் விளக்கு பகுதியில் வேலவன் மோட்டார்ஸ், காஞ்சி புரத்தில் ஜெட் பிளேஸ் மோட்டார்ஸ், கடலூரில் செல்லங்குப்பம் ரூஸ்டர் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட 13 முகவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்கின்றனர்.

யமஹா இந்தியா நிறுவனத்தின், சென்னை நங்கநல்லூர் பைக்கர்ஸ், அண்ணாசாலை பாரஸ் யமஹா, ஜாபர்கான்பேட்டையில் உள்ள மோட்டார்ஸ், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஆனந்த் யமஹா, திருவள்ளூர் மணவாளன் நகர் சம்பத்ராஜ் மோட்டார்ஸ், கடலூர், இம்பீரியல் சாலையில் உள்ள விஎம்எஸ் பைக்ஸ் உள்ளிட்ட 14 முகவர்கள் முகாம் நடத்துகின்றனர்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை அடையாறு ராம்கே மோட்டார்ஸ், தாம்பரம் சத்யா மோட்டார்ஸ், புது வண்ணாரப்பேட்டை வாரி மோட்டார்ஸ், அண்ணா நகர் கிழக்கில் குட்வில் ஆட்டோ மோட்டிவ், திருவள்ளூரில் ராகவா மோட்டார்ஸ், காஞ்சிபுரம் சாரதா மோட்டார்ஸ், கடலூர் மாவட்டம் வடலூரில் செம்பை ஏஜென்சீஸ், பண்ருட்டி திருவத்திகையில் உள்ள ஜெய்சக்தி டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 90 முகவர்கள் முகாம் நடத்துகின்றனர்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சார்பில், சென்னை, திருவான்மியூரில் உள்ள அரோகி ஆட்டோ சர்வீஸ், ரெட்டேரி ஜே.கே.ஏஜென்சீஸ், திருவொற்றியூர் ஜெயம் ஆட்டோ கேர், ஆழ்வார் திருநகர் வினெக்ஸ் ஆட்டோமொபைல்ஸ், திருநின்றவூர் ஏபிஎஸ் மோட்டார்ஸ், முகப்பேர் மேற்கு எஸ்.வி.எஸ். ஆட்டோமொபைல்ஸ் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை விஎம்ஸ் மோட்டார்ஸ் உட்பட 34 முகவர்கள் முகாம் அமைத்துள்ளனர்.

ஆட்டோக்களை பொறுத்த வரை, டிவிஎஸ் நிறுவனம் சார்பில், ஈக்காட்டுத்தாங்கல் சாய் ஆட்டோமொபைல்ஸ், பம்மல் சாய் சக்தி ஆட்டோ, சிந்தாதிரிப் பேட்டை சாய் ஹரி மோட்டார்ஸ், எருக்கஞ்சேரி எஸ்.பி.எம். மோட்டார்ஸ், ஆவடி மக்கா மோட்டார்ஸ், காஞ்சிபுரம் சபரி ஆட்டோமொபைல்ஸ் ஆகிய 6 இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

முகாம் நடக்கும் இடங்கள், நடத்தும் முகவர்கள், அதில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் கைபேசி எண் ஆகியவை அரசு இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

வாகன பழுது குறித்த தகவல் தருவதுடன், உதிரி பாகங்களுக்கு உரிய சலுகை விலையில் பாகங்கள் வழங்கப்படும் என்றும், பழுது நீக்கும் பணிக் கட்டணம் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கிறார்?

கொழும்பு:

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பகுதியில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 41 வயதான சாரதி உயிருடன் இருப்பதாக செய்தி வெளியானது.

உயிரிழந்த அந்த நபர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும், ராமேஸ்வரத்தில் உயிரிழந்த நபரின் சடலம், இலங்கை கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் கியூ பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த அந்த நபரின் அடையாளத்தை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாம் உயிரிழந்து விட்டதாக வெளியான செய்தி தமக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அந்த அடையாள அட்டை பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாகவும் இந்த அடையாள அட்டை மீட்கப்பட்ட சடலத்தில் கிடைத்தது எவ்வாறு என்பது தனக்குப் புரியவில்லை எனவும் பூமிதுரை தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் தகவல் மூலம் ரயிலில் பசியால் துடித்த குழந்தையின் பசி தீர்த்த ரயில்வே அமைச்சர்

கான்பூர்:

சமூக வலைதளமான, ‘டுவிட்டர்’ மூலம் கிடைத்த தகவலால் ஓடும் ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டு அக்குழந்தையின் பசியைப் போக்கினார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.

உத்தரப்பிரதேச மாநிலம் மந்துவாடி ரயில் நிலையத்திலிருந்து தில்லிக்கு அதிவேக விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் குசும் யாதவ் என்ற பெண் தன் ஐந்து வயது மகன் அவிஸ் உடன் வாரணாசியில் உள்ள மந்துயாதிஹ் ரயில் நிலையத்தில் ஏறினார். வட இந்தியாவில் கடும் பனிமூட்டத்தின் காரணமாக, ரயில் மிகவும் மெதுவாகச் சென்றதால், ரயிலில் உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், பசியால் அழுத தன் மகனுக்கு, பால் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல், குசும் தவித்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த குசும் யாதவ் தனது கணவர் சத்யேந்த்ரா யாதவுக்கு போன் மூலம் தகவலைக் கூறினார். சத்யேந்த்ரா தில்லியில் இருந்ததால் தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது. சமூக வலைத்தளமான டுவிட்டரின் மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் பக்கத்தில், தனது மகன் பசியால் துடித்துக் கொண்டிருக்கிறான். தாங்கள் உடனே உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தத் தகவலைப் பார்த்த அமைச்சர் சுரேஷ் பிரபு துரித நடவடிக்கை மேற்கொண்டார். அவர் உடனே அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அந்த ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து அந்த சிறுவனுக்கு உடனே பால் மற்றும் பிஸ்கட் வழங்கி உதவிட உத்தரவிட்டார்.

உடனே அலகாபாத் டிவிஷனல் ரயில் மானேஜர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி அந்த ரயில் படேஹ்பூர் ரயில் நிலையம் வந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் அவர்கள் இருவருக்கும் உணவு வழங்கினார். மேலும், அந்த ரயில் கான்பூரை வந்தடைந்தபோது ரயில்வே அதிகாரிகள் காத்திருந்து பால் மற்றும் பிஸ்கட் வழங்கினார்கள். பசியாக இருந்த தனது மகனுக்கு உடனடியாக உணவு வழங்கிய அதிகாரிகளுக்கும், அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும் அந்தத் தாய் குசும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

சுங்கச் சாவடி கட்டணம் ரத்து சலுகை 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

புது தில்லி:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடி மையங்களில் 11 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி உத்தரவிட்டார்.

இந்த சலுகை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல்வேறு நிவாரணப் பொருள்கள் அடங்கிய வாகனங்கள் சென்னை மற்றும் இதர பகுதிகளுக்குச் செல்வதால், பொதுமக்களின் நலன் கருதி மேலும் ஒருவார காலத்திற்கு (18 ஆம் தேதி வரை) தமிழக சுங்கச் சாவடிகளில், சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் இதற்கான அறிவிப்பை பொன்.ராதாகிருஷ்ணன் தில்லியில் நேற்று வெளியிட்டார்.