Home Blog Page 5918

அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீக்கம்

சென்னை:

அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிமுக., பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்த அறிக்கை:
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஆர்.நட்ராஜ் (முன்னாள் காவல்துறை இயக்குனர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குமரியிலிருந்து கோவா, திருவனந்தபுரம் – வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கேரள முதல்வர் கோரிக்கை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோவாவிற்கும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

       அடுத்த 2016-17 ஆண்டிற்குரிய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னமும் இரண்டு மாதங்களே உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளை ரயில்வே அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட்க்கு வேண்டி கேரளாவில் அதிக ரயில்கள் இயக்க வேண்டும் மற்றும் ரயில் திட்டங்களுக்கு நிதி ஓதுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை ரயில்வே அமைச்சருக்கு கேரளா முதல்வர் அளித்துள்ளார். இந்த மனுவில் குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக இரண்டு ரயில்கள் இயக்க கோரிக்கை வைத்துள்ளார். குமரி மாவட்ட ரயில் வழித்தடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் இந்த கோரிக்கை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக அமைந்துள்ளது. இதன்படி கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோவாவிற்கும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என்று இரண்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி – கோவா ரயில்:

        கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களுர், உடுப்பி வழியாக வாஸ்கோடகாமாவிற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்  என்று பல ஆண்டுகளாகவே பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். கோவா மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு இடங்களும் சுற்றுலா பிரசித்தி பெற்ற இடங்களாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டால் அனைத்துவிதமான பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கன்னியாகுமரியிலிருந்து மங்களுருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோவா ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில் மங்களுர் வழியாக செல்வதால் மேலும் சிறப்பு ஆகும்

திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி ரயில்:-

        திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு செல்லும் பயணிகளால் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை கேரளா முதல்வரும் தற்போது வலியுறுத்தியுள்ளார்.  இந்த ரயில் இயக்கப்பட்டால் குமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு தினசரி வேலைக்கு செல்லும் பயணிகளுக்கு காலையில் திருவனந்தபுரம் செல்வதங்கும், மாலையில் பணிமுடிந்து  வீடுகளுக்கு வருவதற்கு என இரண்டு மார்க்கங்களிலும் ஓர் ரயில் வசதி கிடைக்கும்.

     பொதுவாக ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய கோரிக்கைகளை ஒருவாரத்துக்கு முன்பாகவே மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வைப்பார்கள். இவ்வாறு ஒரு வாரத்துக்கு முன்பாக வைத்தால் ஒரு கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது கேரளா முதல்வர்  இரண்டு மாதத்துக்கு முன்பாகவே இந்த கோரிக்கைகளை சமர்ப்பித்ததால்  இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மிகுந்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டால் குமரிக்கு இரண்டு வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயக்கப்படலாம்.

 தமிழக முதல்வரும் கோரிக்கை வைக்க வேண்டும்
       கேரளா முதல்வர் தங்கள் மாநிலத்துக்கு வேண்டி கூடுதல் ரயில்கள், ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி, பல்வேறு புதிய ரயில்வே திட்டங்கள், ஒருசில திட்டங்களுக்கு ஐம்பது சதவிகித நிதி என பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு என ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதைப்போல் தமிழக முதல்வரும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக ரயில்வே வளர்ச்சி திட்டங்களுக்கு வேண்டி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய கோரிக்கைகளை ரயில்வே அமைச்சர், பாரதம பிரதமர் ஆகியோரை நேரடியாக சந்தித்து கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த மின்னஞ்சலுடன் கேரளா முதல்வரின் கோரிக்கை மனு இணைக்கப்பட்டுள்ளது. இந்த மனு கேரளா முதலமைச்சரின் இணையதள முகவரியிலிருந்து எடுக்கப்பட்டது.

https://www.keralacm.gov.in/images/stories/pr/2015/october/Memorandum%20to%20Railway%20Minister.doc

– எட்வர்ட் ஜெனி

சிமி பெயரால் இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம்

சென்னை:
சென்னை இந்து முன்னணி அலுவலகத்திற்கு தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் பெயரால் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறை ஆணையரிடம் இந்து முன்னணி மாநகர செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் புகார் கொடுத்துள்ளார்.

திப்பு சுல்தான் குறித்து இந்து முன்னணி மேற்கொண்டு வரும் பிரசாரம் இஸ்லாம் மரபுக்கு எதிரான அவதூறாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்தக் கடிதத்தில், கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதி இந்து முன்னணித் தலைவர்களை கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் குறித்து அந்த அமைப்பு தெரிவித்த தகவலில், அரசின் மெத்தனப்போக்கால் இஸ்லாமிய பயங்கரவாதச் சதி செயல், மிரட்டல் தொடர்கிறது என்றும், இது வரை வந்த மிரட்டல் கடிதம் குறித்து முறையாக விசாரணை நடத்தியிருந்தால், அதற்கு முளையாக செயல்படுபவரைகண்டறிந்து தண்டித்திருக்கலாம். காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு செயலழிக்க செய்யப்பட்டு கிடக்கிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளை பரப்பியும், தவறாக சித்தரிக்கப்பட்ட படங்களையும் வெளியிட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இதனை முளையிலேயே கிள்ளி எறிந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். காவல்துறை விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(ஏ.டி. இளங்கோவன்)
மாநகரப் பொதுச் செயலாளர்

சிம்பு, அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு : காவல்துறை ஆணையர் அமல்ராஜ்

பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பீப்’ பாடல்..பாடல் இயற்றி உள்ளதாக கோவை மாவட்ட ஜனநாயக சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் சட்ட ஆலோசனைகள் பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
 
மேலும் முறையாக வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
 
சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய தமிழக அரசு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பாலியல் வெறியோடு பெண்களை கொச்சை படுத்தி பாடல்அமைத்து வெளியிட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய புரட்சிகர விடியல் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கி வாட்ஸ்ஆப்பில் தகவலை வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டு வைரலாக இன்று வைரலாக பரவவிட்டது.
 
இந்த நிலையில் கோவை மாவட்ட ஜனநாயக சங்க செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
 
மேலும் பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கத்தினர், சிம்பு – அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்தும் செருப்பால் அடித்தும் மாதர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால்மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.
 
சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப வார்த்தைகளை செய்தி பதிவில் குறிப்பிட
முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் உள்ளது. அந்த பாடல்.வார்த்தைகளை பீப் ஒலி கொண்டு மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தைகள் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் தான் உள்ளது.
 
இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஆபாசமான கருத்துக்களை பகிர்ந்தது பெண்களை இழிவுபடுத்தி பாடல் இயற்றியது, ஆபாசமாக பாடியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது சட்ட ஆலோசனைகள் பெற்று ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களே, அரசியல் என்னும் சாக்கடையை சுத்தம் செய்ய புறப்படுங்கள் : ஒரு இளைஞனின் வேகம்

அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மாணவர்கள் மற்றும் பெரும்பாலான பொதுமக்கள் திட்டம் போட்டு வருகின்றனர் .
 
பொது மக்களுக்கு இளைஞர்கள் சேவையாற்ற முன்வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முகனூலில் “Need A Change – 2016” எனும் சமூக பக்கத்தை கடந்த சில நாட்களுக்கு முன் எவரோ ஒருவர் உருவாக்கியுள்ளார்.
 
அந்த முகநூல் சமூகப் பக்கத்தை இதுவரை 19500க்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர்.மேலும் “Need A Change – 2016” எனும் முகனூல் பக்கத்த்தில் இளைஞர்களை ஊக்கபடுத்தும் இளைஞர்கள் மற்றும் பலர் பதிகளை பதிவிவிட்டும் வருகின்றனர் .பெரும்பாலானோர் அரசாங்கம், அரசியல்வாதிகள், பல அரசு அதிகாரிகள், ஊடகங்கள், திரைப்பட நடிகர்கள் ஆகியோர்மீது
பெருத்த கோபம் கொண்டு பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்.
 
இந்த நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமே பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே, என்றும் அவர்களூக்கு முக்கியமாக பெரும்பாலான ஊடகங்கள் ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
 
“Need A Change – 2016” எனும் முகனூல் பக்கத்தில் பெரும்பாலோனரை இணைக்க கிருஷ்ணபிரசாத் எனும் இளைஞன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது :-
 
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் எந்த கட்சிக்கு உங்கள் ஆதரவு என்றால், திமுக, அதிமுக இரண்டில் ஏதேனும் ஒன்றையே பெரும்பாலானோர் கூறுவார்கள்.ஆனால் சமூக ஊடகங்களில் குழுக்களில் பதிவிடப்படும் பதிவுகளின்படி தமிழகத்தை அடுத்து யார் ஆட்சி செய்ய வர வேண்டும் என்ற பதிவுகளைப் பார்த்தால் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக, அதிமுக இருவருமே வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள்.
 
தமிழ்நாடு உள்ள சூழ்நிலையில், தமிழர்களின் பிரதான எதிரிகள் திராவிட கட்சிகள். சட்டத்தை மதிக்காமல் ஆக்கிரமிப்பு செய்தவர்கள், உங்களைப் போன்ற மத வெறியர்களுக்கு புத்தி புகட்டத்தான் இறைவன் இத்தகைய ஒரு சோதனையைக் கொடுத்துள்ளான். நீங்கள் எல்லாம் திருந்துவீர்களா இல்லையா என்பதை பார்க்கத்தான் அந்த இறைவன் உங்கள் உடலில் இன்னும் உயிரை விட்டு வைத்து உள்ளான். எல்லாம் வல்ல பரமேஸ்வரன் நினைத்தால் ஒரு நொடி போதும். உங்கள் அனைவரின் உயிர்களையும் எடுக்க.
 
திமுக, அதிமுக இரண்டுமே கூட்டு களவாணிகள், கோக்கு, மாக்கில் பல நுறு Phdகள் வாங்கக்கூடிய திறமையான கட்சிகள். ஆனால் இரண்டும் ஒன்றை ஒன்று குற்றம் சொல்லியும், மாறி மாறி கட்சியின் தலைவர்கள் தான் மட்டும்தான் யோக்கியம் என்பதைப் போல் பேசி வருவதாக பரவலாக பேசப்படுகிறது.இன்று மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு காரணம், இன்றைய அரசாங்கம்தான். அதற்கு திமுகவையும் ஏன் விமர்சிக்கிறாய். வெறும் அதிமுகவை மட்டும் விமர்சித்தால் உன்னை திமுககாரன் என்று பிறர் சொல்லி விடுவார்கள். உனது நடுநிலை வேடம் களைந்து விடும் என்று பயமா என்று திமுகவினர் பலர் கேட்கிறார்கள். அனைவருக்குமான பதில்.
 
திமுக, அதிமுக இருவர் ஆட்சியிலுமே எரி, குளங்கள் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. சமீபத்தில் போரூர் ஏரியை அதிமுக ஆக்ரமிக்க முயற்சி செய்தது. அது தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தடுக்கப்பட்டது. ஆனால் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை தடுக்கப்படவில்லை. தடுக்க பலர் நினைத்தும் முடியவில்லை. காரணம் மணல் கொள்ளையர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆளும் கட்சிக்கு ஒரு பங்கு. பிரச்னை செய்யாமல், சட்டசபையில் கேள்வி கேட்காமல், அறிக்கை விடாமல் இருக்க எதிர் கட்சிக்கு ஒரு பங்கு என்று கப்பம் கட்டி பல ஆண்டுகளாக கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த கொள்ளையர்களில் அரசியல் பதவிகளில் இருப்பவர்களும் அடக்கம்.
 
வேளச்சேரியில் உள்ள ஏரிகளை எல்லாம் ஸ்வாகா செய்தது யார்? வேளச்சேரி பகுதியில் மொத்தம் 69 ஏரிகள் இருந்ததாகவும், இவை குறிப்பிட்ட காலகட்டமான 2005 – 2011ம் ஆண்டு காலகட்டத்தில் காணாமல் போயுள்ளதாகவும் தமிழக பொதுப்பணித் துறை, பத்திரப்பதிவுத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிடம் கட்ட வேளச்சேரி உகந்த இடம் அல்ல என்பது தெரிந்தும் 2007ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ஆக்கிரமிப்பு பகுதிகளில் பல கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
 
அதிலும் 2009 முதல் 2011ம் ஆண்டு காலகட்டத்தில் மிக அதிகமாக அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும்
செம்பரம்பாக்கம் ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும் உலக வங்கியிடமிருந்து ரூ.600 கோடி கடனாக சென்ற திமுக அரசு பெற்றது. அதை செய்ததா? இல்லை. அதுவும் ஸ்வாகா.
 
சென்ற திமுகவும் அதை செய்யவில்லை. இன்றைய அதிமுகவும் செய்யவில்லை. ஆக ஜெயா, கருணாநிதி இருவரும் கூட்டு களவாணிகளாக சேர்ந்துதான் இந்த தமிழ்நாட்டை நாசப்படுத்தி உள்ளனர்.
 
இப்போது புரிகிறதா? நான் ஏன் அதிமுகவை விமர்சிக்கும்பொழுது திமுகவையும் சேர்த்து விமர்சிக்கிறேன்
 
வெள்ள நிவாரணத்தில் மக்கள் பணி செய்த இளைஞர்களில் ஒரு பகுதியினர் அரசியலுக்கு வந்து மக்கள் பணியும் செய்ய முடிவு செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5, 6 மாதங்களில் வர இருக்கிறது. இந்த 6 மாதங்களில் ஊடகங்கள், கமல் போல் உண்டா என திடீர் என்று அந்தர்பல்டி அடிக்கலாம். எனவே ஊடகங்களை நாம் நம்பக் கூடாது .
 
சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாம் அனைவருமே தமிழக மக்கள் மனதில் இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் தீயை அணையாமல் பார்த்து கொள்ள வேண்டியது முதல் பணி. அந்த தீயை மேலும், மேலும் நாம் இந்த சமுதாய ஊடகங்கள் மூலம் அதிகரிக்க வேண்டும்.
 
நாட்டின் ஜனத் தொகையில் 60 சதவீதம் பேர், முகநூல் முதலான சமுதாய ஊடகங்களை பயன்படுத்துவோர். சமுதாய ஊடகங்களில் இல்லாத 40 சதவீத மக்களின் மனங்களில் எரியும் தீயை தூண்டி விட்டு, தூண்டிவிட்டு அதிகரிக்கும் வேலையை செய்ய வேண்டும்.காரணம, இந்த தீ சாதாரண தீ அல்ல. ஞானத் தீ. ஞானாக்னி. 50 வருடங்களாக இந்த தமிழகத்தை சூழ்ந்துள்ள போலி திராவிட இருளைப் போக்க இந்த தீயை நாம் மேலும், மேலும் அதிகரிக்க வேண்டும்.
 
வெள்ளையர் இனத்தை சேர்ந்த அன்னிபெசன்ட் அம்மையார் முதலானோர்கூட வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும்பொழுது, இப்பொழுது ஆன்மீக பேச்சு முக்கியமா, ஆன்மீகத்தைவிட தேச விடுதலைதான் முக்கியம் என்று எப்பொழுதும் ஆன்மீகம் பற்றி மட்டுமே பேசி கொண்டு இருந்த, தேச விடுதலைபற்றி கவலையேபடாத தனது நண்பர்களை பாரதி கடிந்து கொண்டாராம்.
 
முன் அறிவிப்பு இன்றி, அம்மாவின் ஆணைக்கு காத்திருந்து தாமதமாக ஏரி நீர் திறந்ததில் எவ்வளவு கோவில்கள் பாதிக்கப்பட்டன? சிந்தித்து பாருங்கள். அதனால், ஆன்மீக குரூப்களில்கூட இனி அரசியலை சற்று சத்தமாக பேசுங்கள். அதற்கு ஆன்மீக குரூப் அட்மின்கள் அனுமதி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
 
சர்வதேச அரசியல், சர்வதேச பொருளாதாரம், உலக வரலாறு, சிங்கப்பூர் போன்ற 100 சதவீதம் ஏழ்மையில் இருந்த நாடுகள் அசுர வேகத்தில் முன்னேறியதன் ரகசியம், நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள். அதை திருத்திக் கொள்ளும் வழிகள் முதலான அனைத்தையும் ஒவ்வொரு இளைஞன், இளைஞியர் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
விவேகானந்தர் கனவு கண்டதைப் போன்ற இளைஞர்கள் அன்று நிறைய பேர் இல்லை, பாரதியின் அறிவுரை கேட்டு அதன்படி நடக்க அன்று யாருமே தயாராக இல்லை. ஆனால் இன்று விவேகானந்தர் கனவு கண்டதை போன்றவர்கள், பாரதி கண்ட புதுயுகத்தை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? உங்களுக்கே தெரியாமல் உங்களோடு பல பாரதிகள், விவேகமான விவேகானந்தர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
 
படிப்பு, துடிப்பு இரண்டும் உள்ள இளைஞர்களே, இன்று தமிழகத்தின் தலைவிதியை நம்மால் மாற்ற முடியும். மழை பேரிடரில் அரசாங்கம் வரும் முன்பே, இந்திய ராணுவம் வரும் முன்பே, பேரிடர் மீட்புக் குழு வரும் முன்பே, பல ஆயிரம் மக்களை காத்தது இளைஞர்கள். இளைஞர்கள் மக்கள் பணிக்கு வந்தால் மக்களிடம் ஆதரவு கிடைக்கும்.
 
தமிழகத்தில் இளைஞர்கள் தற்போது செய்த மழை வெள்ள நிவாரணப் பணியை பார்த்து பயந்து போய்தான் அரசியல்வாதிகளும், மக்கள் பணிக்கு 2, 3 நாட்கள் கழித்து நிதானமாக வீதிக்கு வந்தார்கள். ஸ்டிக்கர், போட்டோ, கேமராமேனுடன்.
 
இளைஞர்களே, நம்மில் பலர் பட்டதாரிகள். நம்மை ஆள்பவர்களும், படித்தவர்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவர்கள். நமது இளைஞர்கள் ஆரம்பித்து உள்ள Need A Change – 2016 எனும் முகநூல் பக்கத்திற்கு ஒரு லைக் செய்யுங்கள். முகநூலில் வாங்கும் லைக் வைத்து ஆட்சி அமைக்க முடியாதுதான். ஆனால் புதிய மாற்றத்தை எவ்வளவு தூரம் மக்கள் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த லைக் ஜஸ்ட் ஒரு சர்வே.
 
நிறைய நல்லவர்கள் இருப்பதை இந்த மழை நமக்கு உணர்த்தியது. இளைஞர்கள், அதுவும் படித்த நல்ல இளைஞர்கள் அரசியலுக்கு வர உள்ள இந்த தகவல் மக்களுக்கு தெரிந்தால் நிச்சயம் மக்கள் ஆதரவு நமக்கு இருக்கும். ஆனால்?
 
இந்த தகவலை நிறைய மக்களுக்கு வேகமாக கொண்டு சேர்க்க வேண்டும். இந்த தகவல் வைரலாக பரவ வேண்டும். அது, இது என படித்துக்கொண்டு இருக்கும் பொதுமக்களின் கையில் உள்ளது. அரசியல் என்னும் சந்தனத்தில், ஊழல் என்னும் சாக்கடை கலந்து விட்டதால் அரசியலும் இன்று சாக்கடை ஆகி விட்டது. இதை சுத்தம் செய்து மீண்டும் சந்தனமாக மாற்ற இளைஞர்கள் நாங்கள் தயார்.
 
அதற்கு எங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு, பெரியோர்களின் ஆசி வேண்டும். அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.
 
இந்த மழையில் சேவை செய்த நாங்கள், அரசியலுக்கு வந்து மக்கள் பணியும் செய்ய தயார்.
 
முகநூலில் இந்த பக்கத்திற்கு லைக் பண்றவங்க பெரும்பாலும் நிச்சயமா இளைஞர்களுக்காக ஓட்டும் போடுவீங்க.
 
மாற்று அரசியலுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கு என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் இந்த பக்கத்திற்கு கொடுக்கும் லைக் ஜஸ்ட் ஒரு சர்வே.
 
அரசியம் மாற்றம் வேண்டும் என விரும்புவர்கள் எங்களது Need A Change – 2016 பக்கத்திற்கு லைக் என்னும் ஓட்டை போடுங்கள்.
 
அந்த முகநூல் பக்கத்தின் லிங்கை பயன்படுத்துக.
https://www.facebook.com/Need-A-Change-2016-107787219592769/
 
இளைஞர்களே விரைவாக செயல்படுங்கள்.
நமது முயற்சி வெற்றியே.
 
என்று கிருஷ்ண பிரசாத் எனும் இளைஞன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பெண்கள் அமைப்பு காவல் காவல்துறைனரிடம் புகார்

சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய தமிழக அரசு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பாலியல் வெறியோடு பெண்களை கொச்சை படுத்தி பாடல்அமைத்து வெளியிட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய புரட்சிகர விடியல் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கி வாட்ஸ்ஆப்பில் தகவலை வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டு வைரலாக இன்று வைரலாக பரவவிட்டது.
 
இந்த நிலையில் கோவை மாவட்ட ஜனநாயக சங்க செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
 
மேலும் பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கத்தினர், சிம்பு – அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்தும் செருப்பால் அடித்தும் மாதர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால்மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.
 
சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப வார்த்தைகளை செய்தி பதிவில் குறிப்பிட
முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் உள்ளது. அந்த பாடல்.வார்த்தைகளை பீப் ஒலி கொண்டு மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தைகள் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் தான் உள்ளது.
 
இந்நிலையில், ஜனநாயக மாதர் சங்கத்தினர் காவல் காவல்துறைனரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது :-
 
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பெண்களை திட்டமிட்டுஅவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாடல் முழுக்க கேவலமான வரிகளால் பாடல் வரிகளை பாடியுள்ளனர்
 
தொடர்ச்சியாக நடிகர் சிம்புவின் படங்களிலும், பாடல்களிலும் பெண்களை அவமானப்படுத்தி பேசுவதும், பாடுவதும் தொடர்கிறது. சமீபத்தில் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்வதும் என பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தூபம் போடும் வேலையாக இந்த பாடல் அமைந்துள்ளது. பெண்களை கேவலமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, திட்டமிட்டு இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது. இப்பாடலை உடனே தடை செய்ய வேண்டும். மேலும் இப்பாடலை எழுதி, பாடிய சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது பெண்களை ஆபாசமாக பாடியதற்காகவும், பெண்களின் உடலுறுப்பைச் சொல்லி அவமானப்படுத்தியதற்காகவும் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
 
வெள்ள நிவாரணத்திற்கு கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம் 50 லட்சம் நிதி உதவி!

பங்கு முதலீடு, திரைப்பட தயாரிப்பு மற்றும் திரையரங்கு வணிகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வரும் கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னையை சீர் செய்து வரும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் ருபாய் 50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

மேலும், கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம் “ரீச் அவுட்” என்ற அறக்கட்டளை மூலமாக வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் எனபது குறிப்படத்தக்கது.

வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு நயன்தாரா செய்த உதவி!

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன, மொழி வேறுபாடின்றி உதவி வருகின்றனர். தமிழ் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி தெலுங்கு, கேரளா நடிகர்கள் உட்பட அனைவரும் வெள்ள நிவாரணத்திற்கு உதவி வருகின்றனர்.

தற்போது நயன்தாராவும் சென்னை மக்களுக்கு உதவியுள்ளார். ஆனால் நயன்தாரா பணமாக தராமல் பொருட்களாக கொடுத்துள்ளார். மலையாள பத்திரிகை ஒன்று ‘அன்புடன் சகோதரிகளுக்கு’ என்ற பெயரில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியது.

அவர்களுடன் இணைந்து சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு சில பிரத்தியேகமான உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார். 1000 பேருக்கு உதவக் கூடிய இந்த உதவி பொருட்கள், உடைகள் மற்றும் சுகாதார சம்மந்தப்பட்ட பொருட்களாகும்.

வெள்ள பாதிப்பிற்க்கு ஆண்ட ஆளுகின்ற ஆட்சிகளே காரணம் விஜயகாந்த் குற்றச்சாட்டு

அதிமுக, திமுக ஆட்சியே மழை வெள்ள பாதிப்பிற்கு காரணம்! தனது முகநூல் பக்கத்தில் விஜயகாந்த் அறிக்கை

தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை வெள்ளம், தற்போது டெல்டா மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. மோசமான இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், ஜாஸ் சினிமா நிறுவனம் பெயரில் சென்னையிலுள்ள சத்தியம் திரையரங்க வளாகத்திலுள்ள அனைத்து அரங்குகளையும் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 1000 கோடி ரூபாய் மதிப்பில் வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்திலுள்ள 11 திரையரங்குகளை ஜாஸ் சினிமா நிறுவனம் வாங்கியது குறித்த கேள்விக்கு இதுவரை பதில்வராத நிலையில், மீண்டும் சத்தியம் சினிமாவை வாங்கியிருப்பதை என்னவென்று சொல்வது. அதிகார மமதையா? ஆட்சி செய்யும் ஆணவமா? எதுவாக இருந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு விடையளிப்பார்கள்.

அதிமுக, திமுக ஆட்சியில் இதுபோன்ற முறைகேடுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும், நிர்வாக சீர்கேட்டாலும்தான், சென்னை மாநகரம் கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டையும், மழை காலங்களில் வெள்ளத்தையும் அனுபவித்து வருகிறது. தண்ணீரை சேமிக்கவும், மழைநீர் வடிகால்களை முறையாக அமைக்காததும், இயற்கையான நீர்வழிப்பாதைகளை மூடியதன் விளைவே சென்னை மாநகர பாதிப்பிற்கு காரணமென “டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்” அதிமுக, திமுக ஆட்சிகளை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் கடந்த 1980ஆம் ஆண்டில் சுமார் 600க்கும் அதிகமான நீர்நிலைகள் சென்னை மாநகரில் இருந்ததாகவும், 2008ஆம் ஆண்டு மாஸ்டர் பிளானில் பெரும்பாலான நீர்நிலைகளை காணவில்லை என்றும், 2,792 ஏக்கர் பரப்பிலிருந்த 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு, 1,594 ஏக்கராக குறைந்துள்ளதென்றும், 2,847 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் இருக்கும் நிலையில், 855 கிலோ மீட்டர் நீளத்திற்கு மட்டுமே மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும் இந்த மையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த கால கட்டங்களில் அதிமுக, திமுக ஆட்சிதான் நடைபெற்றது. இரண்டு கட்சிகளும் நடைபெற்ற தவறுகளை மறைத்திட, தாங்கள்தான் மக்களுக்கு உதவி செய்கிறோம் என்பது போல, நிவாரண பொருட்களை ஓடி, ஓடி வழங்குவது போன்ற நாடகத்தை நடத்துகிறார்கள்.

மழை வெள்ள பாதிப்புகளை களைந்திட, தொலைநோக்குப் பார்வையில் எவ்வித நிரந்தர திட்டங்களை தீட்டாமல், பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பெற்று, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும், பாதிப்புகளையும் ஈடுசெய்ய முடியுமா? வெள்ள பாதிப்பின்போது களத்தில் நிற்காத அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் கொடுப்பது போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடத்தில் உருவாக்கவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்கிறார். இது பாதிக்கப்பட்ட மக்களிடம் எடுபடாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை உரிய நேரத்தில் செய்யாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அதனால் பாதிப்புகள் ஏற்படும்போது அரசியல் சுயலாபத்திற்காக நிவாரணம் வழங்குகிறேன், உதவி செய்கிறேன் என்றெல்லாம் நடத்தும் இதுபோன்ற நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “குதிரை ஓடிய பின், லாயத்தை பூட்டுவது போன்ற ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதை பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளனர். இனியும் தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் முகநூல் பக்கத்தில் ஒரு கார்ட்டுன் படத்துடன் தெரிவிக்கபட்டுள்ளது

வெள்ள பாதிபிற்க்கு முந்தைய ஆட்சிகளே காரணம் விஜயகாந்த் குற்றச்சாட்டு