மதத்தை கைவிட்வரின் தலையை வெட்டிக் கொல்ல உத்தரவிட்ட நீதிமன்றம்
ரூ.7,000 கோடியை மோசடி செய்த விஜய் மல்லையா : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
மாநில ஆளுநர் மீது இந்திய தேசிய கீதம் அவமதிப்பு புகார்
அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா மீண்டும் நியமனம்
சொந்த செலவில் சாலையை சீர்செய்த காவல் துறை அதிகாரிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகருக்குள் வரும் வாகனங்கள் பழுதில்லாமல் வர,சொந்த செலவில் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர்.
கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் அனைத்து புறநகர் பஸ்களும் கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள நுழைவு வாயில் வழியாகத்தான் வர வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நினைவு வாயில் வழியாக தான் பெங்களூர், சேலம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நகருக்குள் செல்ல முடியும்.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை, கடந்த சில ஆண்டுகளாக பழுதாகி குண்டும், குழியுமாக காட்சியளித்தது. பழுதாகிய சீர்செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடமும் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
தொடர் மழையால் இந்த சாலை மேலும் பழுதாகி, வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நுழைவு வாயில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் வாகனங்களில் அமர்ந்து பயணிப்பவர்கள் பெரும் அச்சத்துடன் தான் பயணம் செய்தனர். காரணம் இந்த நுழைவு வாயில் மீது வாகனம் மோதினால் அது கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதில் இருந்துகொண்டே இருந்தது.
இந்த நுழைவு வாயில் வழியாக செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி, பலர் காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சாலை சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசு அறிவுறுத்தலின்பேரில், கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீஸ் காவல் ஆய்வாளர் செல்வமணி, ஏட்டுகள் நவீத்பாஷா, அருள்பிரகாஷ், வடிவேலு மற்றும் பூங்காவனம் ஆகியோர் தங்களது சொந்த செலவில், நுரம்பு மண்ணை வாங்கி, சாலையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த மேடு, பள்ளங்களை காவல் துறை சீருடையுடன் அவர்களே சமன் செய்தனர். அரசில் காழ்ப்புணர்ச்சியால் சீர் செய்யப்படாத இந்த சாலையை, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சீர் செய்த போக்குவரத்து போலீசாரை பஸ் டிரைவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் நிதி கேட்டு பிரதமரிடம் பேசாதது ஏன் ? : மு.க.ஸ்டாலின் கேள்வி
இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா ?
இந்தாண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய அமெரிக்காவின் பிரபல, ‘டைம்’ பத்திரிகை, வாசகர்களுக்கான போட்டியை நடத்துகிறது.
அந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உள்ளிட 58 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வாசகர்களின் அதிகப்படியான வாக்குகளை பெறுபவர், இந்தாண்டின் சிறந்த மனிதராக அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்.
இதுவரை, மோடி, சுந்தர் பிச்சை, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆதரவாக, தலா, 1.3 சதவீத வாசகர்கள் வாக்கு அளித்துள்ளனர். 0.2 சதவீதம் பேர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனமயமாக்கவும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்,
மேலும் மோடி பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார் என டைம் பத்திரிகை கூறியுள்ளது :-
தொலைத்தொடர்பு துறைமுதல், எண்ணெய் சுத்திகரிப்பு வரை அனைத்து துறைகளிலும் கால் பதித்து, இந்தியாவின் முதல் நிலை பணக்காரராக, முகேஷ் அம்பானி திகழ்கிறார்,
11 ஆண்டுகள் ‘கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, லாரி பேஜ்ஜின் வலது கரமாக, சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார் என்றும் டைம் பாராட்டியுள்ளது.
கடந்த ஆண்டும் டைம் பத்திரிகையின், சிறந்த மனிதருக்கான போட்டியில் இடம் மோடி பெற்றிருந்தார்;
50 லட்சம் வாசகர்களில், எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர், மோடிக்கு வாக்குஅளித்து இருந்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோர் இந்தாண்டு போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்த மதகுரு கைது
பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோருக்கு தேவேந்திர குஜ்ஜார் என்பவர் தான் ஒரு மதகுரு என்று அறிமுகம் செய்து கொண்ட 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானார்.
அவருக்கு யோகா குரு பாபா ராம்தேவை நன்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதனால் நடிகையின் பெற்றோருக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ஆயுர்வேத மருந்து நிறுவனம் தொடங்க உதவி செய்வதாகக் கூறி ரூ. 2 கோடி வாங்கி மோசடி செய்தாக கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து, ஷில்பா ஷெட்டியின் பெற்றோர்காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தேவேந்திர குஜ்ஜாரை தேடி வந்தனர்.
தேவேந்திர குஜ்ஜார் தன் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணிகலன் பகுதியில் பதுங்கி இருப்பதாக மும்பை காவல்துறையினருக்குத் ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர், உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் தேவேந்திர குஜ்ஜாரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
ஜெயலலிதா பேச்சை மிமிக்ரி செய்து காணொளியாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்ட வாலிபர்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல் ஒருவர் பேசி அதை காணொளியாக பதிவிட்டு வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பெரும்பாலானோர் அவர்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்துபல பதிவுகளை பதிவிடுகின்றனர்.
ஒரு சிலர் அவர்களின் பதிவுகளில் முக்கியமாக அரசியல் கட்சி தலைவர்களை பலவிதமாக சித்தரித்து நக்கல், நையாண்டி செய்து எதைக் கண்டும் அஞ்சாமல் மிகத் துணிவுடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவது தற்போது அதிகமாகியுள்ளது.
அவ்வாறு பதிவிடப்படும் பதிவுகளில் சிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்கிற நிலைமைதான் தற்போது நிலவுகிறது.
மேலும் ஊடகத் துறையில் பணியாற்றும் செய்தியாளர்களை அரசியல்வாதிகள் கண்டால் அவர்களிடம் சிக்கி ஏதாவது அவர்களுக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் வந்து விடக் கூடாது என பயந்து ஓடும் நிலைமையே கடந்த காலங்களில் இருந்தது. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் செய்திகள் பதிவிடுபவர்களை கண்டு பயந்து செய்வது அறியாமல் முழித்து கொண்டுள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கு எதிரான செய்திகளை செய்தியாளர்கள் உருவாக்கி அவர்கள் பணியாற்றும் ஊடகதில் வெளியிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்தும் சரிக்கட்டி வந்தனர்.
ஊடக நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் ஒரு சிலரைத் தவிர அன்பளிப்புமீது மோகம் கொள்(ல்)லாமல் நேர்மையாக பணியாற்றுபவர்கள் தற்போதும் உள்ளனர்.
நடுநிலைமையாக எவருக்கும் ஆதரவு அளிக்காமல் எதைக் கண்டும் அஞ்சாமல் மிக துணிவுடன் செய்தியாளர்கள் உருவாக்கி செய்திகளை அவர்கள் பணியாற்றும் ஊடகத்தில் வெளியிட்டும் வருகின்றனர்.
ஊடகத் துறையில் நேர்மையாக பணியாற்றுபவர்கள் தவறு செய்பவர்களுக்கு எதிரான செய்திகளை உருவாக்கி அனுப்பினாலும் பல ஊடக நிறுவனத்தினர் அந்த செய்தியை பயன்படுத்தி பணத்தின் மோகத்தில் மிரட்டல் விடுத்து பல வழிகளில் லஞ்சப் பணத்தை சம்பாதித்து செய்திகளை அவர்களது ஊடகங்களில் வெளியிடாமலும் உள்ளனர். பல ஊடக நிறுவனங்கள் அரசியல் கட்சியினரிடம் உள்ளதால் செய்தி வெளியீட்டிலும் பலர் அரசியல் நடத்துகின்றனர். இது நிதர்சனமான உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல் ஒருவர் பேசி அதை காணொளியாக பதிவிட்டு வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.
வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்த ஜெயலலிதா !
தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா பிரதமர் பிரதமர் மோடிக்கு இலங்கை கடற்படையின சிறை பிடித்த 14 மீனவர்கள் மற்றும் 50 படகுகளை உடனே விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க மீண்டும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :-.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தியதி 4 மீனவர்களை சிறை பிடித்திருந்தனர் தற்போது 18 ஆம் தியதி 14 மீனவர்களையும் 47 படகுகளையும் இலங்கை படையினர் சிறை பிடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கை பிரச்சினைக்கு மத்திய அரசை அனுமதிக்காமல் தனிப்பட்ட முறையில் பிரதமராகிய நீங்கள் முடிவெடுக்க வேண்டும். தூதரக ரீதியாக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க டனடி நடவடிக்கை எடுக்க மீண்டும் வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

