Home Blog Page 5938

செய்தியாளரின் கேள்விக்கு பயந்து ஓடிய அ.தி.மு.க கட்சியை சேர்ந்த மேயர்

தமிழக அரசாங்கம் சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும் ஏரி,குளங்களை ஆக்கிரமித்த பொது மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த சென்னை மேயர் சைதை துரைசாமியிடம் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காணரமாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் செய்தியாளரின் கேள்விக்கு அ.தி.மு.க கட்சியை சேர்ந்த சென்னை மேயர் சைதை துரைசாமி பதில் அளிக்க முடியாமல் பயந்து ஓடுகிறார். மேயர் சைதை துரைசாமி பயந்து ஓடும் காணொளி வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது

 

 

தலைக்கீழாக பறந்த இந்திய தேசியக் கொடி : கண்டு கொள்ளாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய தேசியக் கொடி தலைக்கீழாக பறந்தும் அதை கொள்ளாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்ததால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கோலாலம்பூரில் ஜப்பான் பிரதமரை மோடி சந்தித்த போது தலைகீழாக தேசியக் கொடி பறந்ததுள்ளது. பிரதமர் மோடி தேசியக் கொடி தலைகீழாக இருப்பதை கூட பார்வையிடாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்துள்ளார்.

மூக வளைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கைக்கு கடும் கண்டன விமர்சனம் செய்துள்ளனர்.68 ஆண்டில் தேசியக் கொடிக்கு தலைகீழாக மரியாதை செலுத்திய பிரதமர் என விமர்சித்துள்ளனர். இந்தியக் கொடி தவறாக இருப்பதை மலேசிய பிரதமர் சுட்டிக்காட்டியதாக தகவல் கூறுகின்றன.

மலேசியாவில் நடந்து வரும் 2 நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று இன்று உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த கொடி யாரால் வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அரசு தரப்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பறந்ததுள்ளதை கூட கண்டு கொள்ளாமல் ஒருவர் இந்திய பிரதமராக பதவியில் இருப்பது முறையானது அல்ல .! என்பது போன்ற பல கேள்விகளை பலர் எழுப்பி தேசியக்கொடி தலைகீழாக இருக்கும் புகைப்படத்தையும், காணொளியையும் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள்.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

திருமணமான ஒரே மாதத்தில் புதுமனைவி மாயம் : கணவர் புகார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புலித்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது27). இவரது மனைவி சவுந்தர்யா (20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.

கப்பலூரில் உள்ள ஒரு தையல் பயிற்சி நிறுவனத்தில் திருமணத்திற்கு முன்பு சவுந்தர்யா பயிற்சி பெற்று வந்தார். நேற்று அதற்கான சான்றிதழ் வாங்க வேண்டும் என கணவரிடம் கூறினார்.

இதனை தொடர்ந்து புதுமண தம்பதியர் கப்பலூர் வந்தனர்.
இந்த நிலையில் கணவரை கம்பெனி வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்ற அவரது மனைவி சவுந்தர்யா அதன் பிறகு வெளியே வரவில்லை.

நீண்ட நேரமாக காத்திருந்த ராஜபாண்டி, உள்ளே சென்று விசாரித்தபோது பின்பக்க வழியாக சவுந்தர்யா சென்று விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ராஜபாண்டி புகார் செய்தார். புகாரில் மதுரை பைக்காராவில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் ஒருவருடன் சவுந்தர்யாவுக்கு பழக்கம் இருந்ததாகவும், அவருடன் சென்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழக அரசுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது மழை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது பொருத்தமானது : ராமதாஸ்

தமிழக அரசாங்கம் சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும்
ஏரி,குளங்களை ஆக்கிரமித்த பொது மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது பொருத்தமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளதாவது :–

சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத தமிழக அரசுக்கும், ஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.

இதை கருத்து என்று கூறுவதை விட தமிழக அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்த கண்டனம் என்று கூறுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

சென்னையில் ஏரி, குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்த போதிலும் கடந்த 50 ஆண்டு கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது, மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாதது, மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் கழிவுநீர் குழாய்களில் மழைநீர் சேர்ந்து ஓட அனுமதிக்கப்பட்டது ஆகியவைதான் சென்னையில் மழை பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

அதேநேரத்தில் சென்னையில் ஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை பாடம் புகட்டியிருப்பதாக உயர் நீதிமன்றம் கூறியிருப்பதில் முழு உண்மை இல்லை.

ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வீடுகளை கட்டி குடியிருப்பது பொதுமக்கள்தான் என்ற போதிலும், ஏரிகளை தூர்த்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்தது தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான்.

இந்த உண்மை உயர் நீதிமன்றத்திற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால், பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும்.

சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீடு என்பது அனைவருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில், அந்தக் கனவை தமிழக ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தந்திருக்க வேண்டும்.

சென்னை மாநகரில் எங்கெல்லாம் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்; மழை நீர் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்களைத் தயாரித்து அதன்படி வடிகால்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதை இதுவரை செய்த தவறுகள், விதிமீறல்கள், ஊழல்கள் உள்ளிட்ட பாவங்களை போக்க கிடைத்த வாய்ப்பாக தமிழக அரசாங்கம் கருத வேண்டும்.

அதுமட்டுமின்றி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவற்றை அகற்றவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளார்.

மனைவியாக வர இருந்த பெண்னை நண்பருக்கு விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராணிதன் சிங் என்ற ராணுவ வீரர் அவருக்கு நிச்சயித்த பெண்ணை அவரது நண்பருக்கு விருந்தாக்க முயன்றதாக
எழுந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ராணுவ வீரர் ராணிதன் சிங்
விடுமுறை எடுத்து அவரது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இரு வீ ட்டார் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையி நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ராணுவ வீரர் ராணிதன் நெருங்கி பழகி அவருடன் உடலுறவும் வைத்துள்ளார்.

அதை காணொளியாக பதிவிட்டு அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும் அந்த காணொளியை அவரின் நண்பருக்கும் அனுப்பியுள்ளார்.அத்துடன் அந்த பெண்ணை தனது நண்பருக்கும் விருந்தாக்க முயன்றுள்ளார்.

இதனால் அந்த பெண் ராணுவ வீரர் ராணிதன் மீது கடும் கோபம் கொண்டு சம்பவங்களை அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை ஜோத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் ராணுவ வீரரை கைது விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மனைவியாக வர இருந்த பெண்னை நண்பருக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் ஆய்வு

ஜம்புநதி மேல்மட்டகால்வாய் திட்டம் ஆய்வுப்பணிகள்

நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ராமநதி நீர்தேக்கம். இந்த நீர்தேக்கத்தின் உபரிநீரை ஜம்புநதியில் இணைப்பதற்காக  மேல்மட்டகால்வாய் அமைக்கபட உள்ள இடத்தையும், அதற்கான நிலம்கையகப்படுத்தவேண்டிய நிலங்களையும் மாவட்டஆட்சியர்  மு.கருணாகரன் மற்றும் அதிகாரிகளுடன் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி தலைமையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 25-ம் தேதி சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் 42 கோடி ஒதுக்கீடு செய்ய அறிவித்தார். மேலும் அதன் பூர்வாங்க பணிக்காக முதற்கட்டமாக 5 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மாவட்டஆட்சியர் மு.கருணாகரன்,கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி ஆகியோர் பொதுப்பணிதுறை அதிகாரிகளுடன் சென்று ராமநதி நீர்தேக்கத்தின் உபரிநீர் அளவு மற்றும் ஜம்புநதி மேல்மட்டகால்வாய் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் கூறியதாவது.
 திருநெல்வேலில் மாவட்டம் ஜம்பு நதியில் இருந்து 42 கோடி மதிப்பீட்டில் ராமநதியில் மேல்மட்ட கால்வாய் அமைத்து மத்தளம்பாறை,திப்பணம்பட்டி ,ஆவுடையனூர் ,தெற்குகடையம் ,கீழக்கடையம் மற்றும் பொட்டல்புதூர்,வெங்கடாம்பட்டி,மடத்தூர் ஆகிய பகுதிவிவசாய மக்கள் பயன்பெறும் வகையில் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு செய்தார் இதன் மூலம்  4050 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெரும் மேலும் 10 கண்மாய்கள் ,நீட்டிப்பு கால்வாய் மூலம் 7 கண்மாய்களும் பயன்பெரும் மற்றும் கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள 729 கிணறுகளின் நீர் செறிவூட்டப்படும் இத்திட்டத்தை செயல்படுத்த 45.28 ஏக்கர் பட்டா நிலங்கள் கையப்பபடுத்தபட உள்ளது ,முதற்கட்டமாக நிலங்கள் கையப்பபடுத்துதல் மற்றும் விரிவான ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்காக ஜம்பு நதியில் இருந்து 42 கோடி மதிப்பீட்டில் ராமநதியில் மேல்மட்ட கால்வாய்  செய்து உத்தரவிட்டுள்ளார்கள் நிர்வாக அனுமதி கிடைத்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது சம்மந்தமான பணிகளை துவங்குவார்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி .பிரபாகரன்,மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நீர் நிலைமை ,நீரின் கொள்ளவு உபரி நீர் பற்றிய ஆய்வுகளும் மற்றும் இடங்கள் பார்வையிடப்பட்டது இவ்வாறு அவர் தெரிவித்தார்
 இது குறித்து கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கூறியதாவது கடந்த  2001 -2006ஆட்சிகாலத்தில் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் ,ஜம்பு நதியில் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஜெயலலிதா  25.9.2015அன்று சட்டசபையில் ஜம்பு நதியில் இருந்து 42 கோடி மதிப்பீட்டில் ராமநதியில் மேல்மட்ட கால்வாய் அமைக்க ஆரம்பகட்ட பணிகளுக்கு ரூ.42 கோடி மதிப்பீட்டில் ராமநதி மேல்மட்ட கால்வாய் அமைக்க நிதி ஒதுக்குவத்காக அறிவித்தார் ,இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் இப்பகுதியில் உள்ள கிணத்தடி நீர் மட்டம் உயர்வதோடு விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளது இத்திட்டம் இப்பகுதி மக்களின் 35 ஆண்டுகால கனவு திட்டம் அதை நிறைவேற்ற  உத்தரவிட்ட முதல்வருக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்
ஆய்வின் போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் விஷ்ணு, பயிற்சி உதவிகலெக்டர் கார்த்திகேயன், பொதுபணித்துறை செயற்பொறியாளர் காளிராஜ், உதவிசெயற் பொறிளாளர் மாரியப்பன், மேல்மட்ட கால்வாய்திட்ட செயற்பொறியாளர் நாகராஜ்,  அம்பாசமுத்தரம் தாசில்தார் பால்துரை, உள்ளிட்ட அதிகாரிகளும் மாவட்டகவுன்சிலர் சேர்மப்பாண்டியன், கடையம் யூனியன் முன்னாள் தலைவர டி.பொன்னுத்துரை, கீழப்பாவூர் யூனியன் துனைத்தலைவர் உத்திரகுணபாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் ராமசாமி, ராதா, கடையம் ஒன்றியகவுன்சிலர் முருகேசன் உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தையிடம் பண மோசடி : சாமியார் கைது

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தையிடம் யோகா ஆசிரமம் மற்றும் மூலிகை பொருட்கள் நிறுவனம் தொடங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திர ஷெட்டியிடம், பாபா ராம்தேவ் பதஞ்சலி யோகாபீடம் மற்றும் மூலிகை பொருட்கள் நிறுவனம் போல், யோகா ஆசிரமமும் மூலிகை பொருட்கள் நிறுவனமும் அமைத்து தருவதாகக் கூறி, பாபா தேவேந்திரா என்பவர் ரூ.2 கோடி பணம் வாங்கியுள்ளார். இவர் ராம்தேவ் ஹரித்துவார் யோகா பீடத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் கூறியது போல் அமைத்துத் தரவில்லை.இதனால் சுரேந்திர ஷெட்டி மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, மும்பை போலிசார் பாபா தேவேந்திராவை கைது செய்துள்ளனர்.

சபரிமலை படிபூஜை 2034 வரை முன்பதிவு

சபரிமலை: சபரிமலையில் முக்கிய பூஜைகளில் ஒன்றான படிபூஜை 2034-ம் ஆண்டு வரை முன்பதிவாகி உள்ளது.

இதர பூஜைகளின் கட்டணங்கள் விபரங்களை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. (கட்டணம் ரூபாய்களில்)

உஷபூஜை 501,
உச்சபூஜை 2001,
நித்யபூஜை 2501,
அரவணை 60,
அப்பம் 25,
கணபதிஹோமம் 200,
பகவதிசேவை 1000,
புஷ்பாபிஷேகம் 8500,
களபாபிஷேகம் 3000,
அஷ்டாபிஷேகம் 3500, லட்சார்ச்சனை 4000,
சகஸ்ரகலசம் 25,000,
உற்சவபலி 10,000,
முழுகாப்பு 500,
சகஸ்ரநாமஅர்ச்சசனை 20,
அஷ்டோத்தர அர்ச்சனை 20,
துலாபாரம் 20,
நெய்யபிஷேகம் 70,
விபூதி பிரசாதம் 15,
வெள்ள நிவேத்யம் 10,
சர்க்கரை பாயாசம் 15,
பஞ்சாமிர்தம் 50,
அபஷேகநெய் 50,
சுயம்வரஅர்ச்சனை 25,
நவக்கிரகபூஜை 100,
ஒரு கிரக பூஜை 20,
தங்கநகை பூஜை 25,
ஐயப்ப சக்கரம் 120,
மலர் நிவேத்யம் 15,
தங்க அங்கி அணிவித்தல் 7500,
வெள்ளி அங்கி அணிவித்தல் 4000,
சோறு ஊட்டு 100,
நாமகரணம் 75,
நீராஞ்சசனம் 75,
உதயசசார்த்து 15,
மஞ்சள் குங்கும அபிஷேகம் 25,
நாகர் பூஜை 25,
நெல் பூஜை 15.

சபரிமலை வழிபாடுகளில் படி பூஜைக்கு அதிக கட்டணம் ஆகும். இதற்கு 40 ஆயிரம் ரூபாய் ஆகும். இதற்கான முன்பதிவு 2034 வரை முடிந்து விட்டது. அடுத்து அதிக கட்டணம் கொண்ட பூஜை உதயாஸ்மனபூஜை. இதற்கு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் ஆகும். இதற்கு 2024 வரை முன்பதிவு முடிந்து விட்டது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணையதளத்தில் குறிப்பிட்ட சில பூஜைகளுக்கு மட்டும் முன்பதிவு செய்ய முடியும். இதர பூஜைகள் சபரிமலை நிர்வாக அலுவலகத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

மழை சேதங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை அரசு உணர வேண்டும்: ராமதாஸ்

சென்னை:
மழை சேதங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட கண்டனத்தை அரசு உணர வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,‘‘சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத அரசுக்கும், ஏரி&குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது’’என கூறியிருக்கிறது. இதை கருத்து என்று கூறுவதை விட தமிழக அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்த கண்டனம் என்று கூறுவது தான் பொருத்தமானதாக இருக்கும்.

சென்னையில் பெய்த மழை அசாதாரணமானது இல்லை என்றாலும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் அசாதாரணமானவை என்பது அனைவரும் அறிந்த உண்மை. சென்னையில் ஏரி, குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்த போதிலும் கடந்த 50 ஆண்டு கால தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகளில் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது, மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாதது, மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் கழிவுநீர் குழாய்களில் மழைநீர் சேர்ந்து ஓட அனுமதிக்கப்பட்டது ஆகியவை தான் சென்னையில் மழை பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வும் அதே கருத்தைத் தான் தெரிவித்திருக்கிறது.

அதேநேரத்தில் சென்னையில் ஏரி&குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை பாடம் புகட்டியிருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியிருப்பதில் முழு உண்மை இல்லை. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வீடுகளை கட்டி குடியிருப்பது பொதுமக்கள் தான் என்ற போதிலும், ஏரிகளை தூர்த்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்தது தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான். இந்த உண்மை உயர்நீதிமன்றத்திற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்… ஆனால், பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும். சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீடு என்பது அனைவருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில், அந்தக் கனவை தமிழக ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய ஆட்சியாளர்கள் தவறிவிட்ட நிலையில், அவர்களின் ஆசியுடன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏரி மற்றும் குளங்களை மடக்கிப் போட்டு, மனைகளாக்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் போது எப்படியாவது சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற கனவில் இருந்த நடுத்தர மக்கள் அந்த மனைகளை வாங்கி வீடுகள் கட்டி குடியேறியதை தெரிந்தே செய்த தவறாக கருத முடியாது.

அதேநேரத்தில் தமிழக அரசு தெரிந்தே இந்த தவறை செய்து வருகிறது. சென்னை மாநகரமே மழையில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் அம்பத்தூரில் குறைந்த வருவாய் பிரிவினருக்கான அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்திருக்கிறது. மொத்தம் 11.5 ஏக்கரில் 2394 வீடுகளை கட்டுவதற்கான அந்த நிலம் ஏற்கனவே ஏரியாக இருந்த இடம் ஆகும். சென்னை முகப்பேர், வேளச்சேரி ஆகிய இடங்களில் பல வீட்டு வசதித் திட்டங்கள் ஏரிகளில் தான் அரசால் செயல்படுத்தப்பட்டன. ஏரி நிலங்களில் வீடுகளை கட்டுவதற்கான பல தனியார் திட்டங்களுக்கு சதுர அடி கணக்கில் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்தது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு கட்சிகளின் அரசுகள் தான். அதனால், அடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவிக்க வேண்டியதும், மழையிலிருந்து பாடம் கற்க வேண்டியதும் அவர்கள் தானே தவிர அப்பாவி மக்களல்ல.

சென்னை மாநகரில் எங்கெல்லாம் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்; மழை நீர் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்களைத் தயாரித்து அதன்படி வடிகால்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதை இதுவரை செய்த தவறுகள், விதிமீறல்கள், ஊழல்கள் உள்ளிட்ட பாவங்களை போக்க கிடைத்த வாய்ப்பாக கருத வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவற்றை அகற்றவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு

நாமக்கல்:

நடிகர் சங்கத்தை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வடிவேலு, வரும், வரும் 27ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த, அக்டோபர், 18ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன், சரத்குமார் அணியும், விஷால் அணியும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாகக் குற்றம் சாட்டினர். விஷால் அணிக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நடிகர் வடிவேலு, தேர்தலுக்கு முன், கடந்த, அக்டோபர், 12ம் தேதி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தை காணவில்லை’ என, தெரிவித்த்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து, அக்டோபர், 15ம் தேதி, நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் ராஜா, நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நடிகர் வடிவேலு மீது, சங்கத்தைக் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகனம்பாள், நடிகர் வடிவேலு, ‘நவ., 20ம் தேதி ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

அவரது வக்கீல் ராமசாமி, ‘சென்னையில் தொடர்மழை பெய்து வருவதால், நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகவில்லை’ என, வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனம்பாள், ‘வரும், 27ம் தேதி, நடிகர் வடிவேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார்.