திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் சிலையை சுற்றிலும் செருப்பு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை அகற்ற கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.
அதிகாரிகள் மாற்றம்
கல்வித்துறை செயலர் சபீதா உட்பட, 22 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். மின்வாரிய புதிய தலைவராக, ராஜிவ் ரஞ்சன், பள்ளிக் கல்வித்துறை செயலராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் விவரம்: ஜஸ்பிர் சிங் பஜாஜ் டில்லி தமிழ்நாடு இல்ல கூடுதல் கமிஷனர் பதவியிலிருந்து டில்லி தமிழ்நாடு இல்ல கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.வீர சண்முகமணி நிர்வாக இயக்குனர், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பதவியிலிருந்து கமிஷனர், கருவூல கணக்குத்துறை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்மோகன் பியாரே தலைவர், நிர்வாக இயக்குனர், சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் பதவியிலிருந்து செயலர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். நிரஞ்சன் மார்டி தலைவர், நிர்வாக இயக்குனர், மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் பதவியிலிருந்து செயலர், குறு மற்றும் நடுத்தர தொழில்துறை பதவிக்குமாற்றப்பட்டுள்ளார். சந்தீப் சக்சேனா கமிஷனர், வேளாண்துறை பதவியிலிருந்து வேளாண் உற்பத்தி கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். மணிவாசன் கமிஷனர், கருவூலம் மற்றும் கணக்குத் துறை பதவியிலிருந்து கமிஷனர், வேளாண்துறை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜ்குமார் தலைவர், நிர்வாக இயக்குனர், சிமென்ட் கார்ப்பரேஷன் பதவியிலிருந்து கூடுதல் தலைமைச் செயலர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.சாந்தினி கபூர் செயலர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பதவியிலிருந்து செயலர், சமூக சீர்திருத்தத் துறை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீதர் கூடுதல் தலைமைச் செயலர், குறு மற்றும் நடுத்தர தொழில்துறை பதவியிலிருந்து கூடுதல் தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்விக்ரம் கபூர் முதன்மை செயல் அலுவலர், எவரான் இந்தியா பவுண்டேஷன் பதவியிலிருந்து திட்ட இயக்குனர், சுனாமி மறுவாழ்வு திட்டம் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். தயானந்த் கட்டாரியாஒழுங்கு நடவடிக்கை கமிஷனர், திருச்சி பதவியிலிருந்து கமிஷனர், சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை பதவிக்க மாற்றப்பட்டுள்ளார். அருள்மொழிவேளாண் உற்பத்தி கமிஷனர் பதவியிலிருந்து இயக்குனர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஸ்டாலின் பயணம்
அம்பாசமுத்திரத்தை அடுத்த சேரன்மாதேவியில் விவசாய கூட்டமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய விவசாய பிரதிநிதிகள், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய நதிகளிலிருந்து உரிய நேரத்தில் கடந்த 4 வருடங்களாக தண்ணீர் திறந்துவிடவில்லை, அதனால் விவசாயம் செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள குளங்கள, ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், உங்கள் தேவைகளை நிறைவேற்றும் இந்த மாற்றத்தை திமுகவால் தான் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துருக்கீறீர்கள். அதே நம்பிக்கையோடு அனைவரிடத்திலும் எடுத்துக்கூறுங்கள் நிச்சயமாக அனைத்து நலத்திட்டங்களையும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
விஷச் செடி
“விஷச்செடி”
(மீ.விசுவநாதன்)
இப்போதெல்லாம்
நம்
நாட்டில் அதிகமாக,
மிக வேகமாக வளர்வது
இரண்டே இரண்டுதான்
ஒன்று
கருவேல மரம்
மற்றது
ஊழல் பேர்வழிகள் !
கருவேலமரம்
பூமியின் நீராதாரத்தை
உறிஞ்சித் தானும்,
தன் குடும்பமுமாகப்
புறம்போக் கெங்கும் வளரும் !
அது விஷச் செடி
அதை அழிக்கவேண்டுமாம் !
ஊழல் பேர்வழிகள்
நாட்டின் பொருளாதாரத்தையே
உறிஞ்சித் தானும்,
தன் குடும்பமுமாக
மட்டுமே வளரும் புறம்போக்குகள் !
தேசத்தின் தீய சக்திகள்
வெளியே தெரியாத விஷச் செடிகள் !
அட..கருவேல மரமாவது
ஏழைக்கு
அடுப்பெரிக்க உதவும்..
இப்பச் சொல்லுங்க
எரிக்க வேண்டிய
“விஷச்செடி”
கருவேல மரங்களா?
இல்லை
தீய சக்திகளா?
ம.தி.மு.க விழித்துக் கொண்டது; தி.மு.க வை பின்னுக்கு தள்ளியது: வை.கோ
முதல் பால் சிக்ஸர் அடித்தார் – மாவட்ட செயலாளர் தி.மு.க விற்கு செல்வதை அறிந்த வை.கோ – அவர் என்ன தி.மு.க விற்கு செல்வதை கட்சியை விட்டு நான் விலக்குகிறேன் – வை.கோ – அதிரடி
வரும் சட்டமன்ற தேர்தலையடுத்து தி.மு.க வினர் தற்போது ம.தி.மு.க வினரை குறி வைத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களது கட்சிகளுக்கு இழுக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் செலவு தி.மு.க தரப்பில் இருந்து ரூ 50 ஆயிரம் கோடி என கணக்கிடப் பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லாம் 2 ஜி மற்றும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் தான் என்கின்றனர். மற்ற கட்சியினர்.
இப்படி இருக்க ஒவ்வொரு மாவட்ட செயலாளரையும் தங்கள் கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க வினர் மத்தியில் கரூர் மட்டும் விதிவிலக்கல்ல, கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பரணி தி.மு.க விற்கு தாவலா ? என கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் பரவலாக வலம் வந்த நிலையில் தற்போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் விழித்துக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அவரே தூக்கியுள்ளார். கட்சி விட்டு கட்சி மாறும் படலம் நிகழ்ச்சியில் கட்சியை விட்டு தூக்கிய முதல் நிகழ்ச்சி இது.
இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த வை.கோ வை முழித்துக்கொள்ள வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளதாக மற்ற கட்சியினர் பேசி வரும் நிலையில், தற்போது பொதுச் செயலாளர் பம்பரம் போல் செயல்பட்டு வருகிறார் என ம.தி.மு.க வினரே புகழாரம் சூட்டி வருகின்றனர். எது எப்படியோ தி.மு.க சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாரம் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தி.மு.க, ம.தி.மு.க வை பம்பரம் போல் சுழல வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த சில மாதங்களாக கட்சி பணியில் தொய்வு ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும், தி.மு.க விற்கு சப்போட்டாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சி.ஆனந்தகுமார் கரூர்
A self-aware, organised and active society is the remedy for all the misconceptions in the society: Sri Bhayyaji Joshi
A two day seminar was held on secularism for columnists in Chennai, Tamil Nadu on September 19th and 20th. The event, organised by Prachar Vibagh of RSS was inaugurated by Sri Suresh ‘Bhaiyyaji’ Joshi (Sarkaryavah, All India General Secretary of RSS) on 19th September and attended by more than 80 columnists from Southern states of India.
Eminent personalities such as Sri Balbir Punj (Vice President of BJP), Sri Prafulla Ketkar (Editor of Organiser), Sri N K Singh (Senior Journalist), Smt. Madhavi Diwan (Senior Advocate, Supreme Court), Sri K G Suresh (Editorial Advisor, Doordarshan), Dr. Makkhan Lal (Founder Director, Delhi Institute of Heritage Research and Management) and Sri S Gurumurthy (Auditor and Columnist) presented their views on various aspects of Secularism within their respective domains such as politics, media, constitutional law and education.
Dr. Manmohan Vaidya, while summarising the deliberations wondered, why the word ‘Secularism’ was included in the Preamble of our Constitution during the dark period of emergency. The constitution makers discussed and deliberated on this point in detail and decided that it was not necessary to include the same. He requested the legal luminaries and political experts to ponder over this issue and to see whether the intention was to initiate divisive communal politics in our country.
Sri Bhiyyaji Joshi delivered the valedictory address today. He spoke about the confusions that prevail in the society such as the name of the nation (India Vs Bharat), Country Vs State Vs Nation, Citizen Vs National, Patriot Vs Friend of nation, Anti-national Vs Enemy of the nation, Invader Vs Native Ruler etc. Many of these confusions were infused by people with divisive interests including British and shallow political discourse. Current day democratic set up assumes to have absolute right over the public discourse which was not the case in pre-independent Indian society. There was a clear distinction between the rights and responsibilities of both the ruler and society. The same is needed now, for example government can impart education while the character building has to be done by the society.
He also said that a secular state should not allow any sects or community to infringe upon the rights of other sects or communities. However, in Bharat today, the religious minorities are given preferential treatment. For example in Nagaland, Mizoram and Kashmir though the minority community is in majority, they enjoy all the privileges available to minorities. He concluded saying that a democracy is only successful if the people are self-aware, organised and active.
இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதா? ஆர்.எஸ்.எஸ் கருத்து மிகவும் ஆபத்தானது: ராமதாஸ்
சென்னை:
இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வது குறித்த ஆர்.எஸ்.எஸ் கருத்து மிக ஆபத்தானது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த இயக்கத்தின் ‘ஆர்கனைசர்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் இந்தியாவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் ஆபத்தானது; முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது ஆகும்.
அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளிப்படையான திட்டங்கள் என்றால், இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது மறைமுகமான திட்டம் ஆகும். இதை கடந்த காலங்களில் மற்றவர்களின் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போது நேரடியாகவே இக்கருத்தை முன்வைத்திருக்கிறது. ‘‘ இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதற்காக ஒட்டு மொத்த நாட்டு நலனில் அக்கறை கொண்ட, சமூக, சமத்துவத்தில் உறுதிப்பாடு கொண்ட சிலரை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும். எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தேவை, எவ்வளவு காலம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அக்குழு தீர்மானிக்க வேண்டும். இதை செயல்படுத்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட, அரசியல் கலப்பில்லாத ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆயத்தமாகி விட்டது என்பதையே மோகன் பாகவத்தின் இந்த நேர்காணல் உணர்த்துகிறது. இந்தியாவில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது என்று மத்திய அமைச்சர்களும், பாரதிய ஜனதா தலைவர்களும் கூறியிருக்கும் போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமை என்ன? பாரதிய ஜனதாக் கட்சியின் வலிமை என்ன? யார் சொல்வதை யார் கேட்பார்கள்? என்ற வினாக்களுக்கு விடை அறிந்தவர்களால் நடக்கபோவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடியும். இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, முதலில் குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் மூலமாக, ‘‘கொடுத்தால் அனைவருக்கும் இட ஒதுக்கீடு தரவேண்டும்; இல்லாவிட்டால் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்த வைத்தது. அடுத்து ஆர்.எஸ்.எஸ். தலைவரே களமிறங்கியுள்ளார். இவை அனைத்துமே ஆழம் பார்க்கும் செயல்கள். முதலில் இத்தகைய கருத்துக்களைப் பரப்பி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்பது, பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாவிட்டால் திட்டத்தை அப்படியே செயல்படுத்துவது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் உத்தியாகும்.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய துணையாக இருப்பது இட ஒதுக்கீடு தான். இது எந்தெந்த பிரிவினருக்கு தேவை என்பது அவர்களின் சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதை எந்த வகையிலும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை. அதேபோல், ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு தொடர வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்ட துரோகங்கள், அநீதிகள் ஆகியவற்றின் காரணமாகத் தான் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அநீதியை ஒரு சில பத்தாண்டுகள் மட்டும் இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் சரி செய்து விடலாம் என்று நினைப்பது அறியாமையாகவே இருக்கும். இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தில் உள்ள கடைசி குடிமகன் அதிகாரம் பெறும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இந்த உண்மைகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறியாதது அல்ல. ஆனால், பாகவத்தின் நோக்கம் வேறு என்பதால் தான் இப்படியெல்லாம் அவர் பேசி வருகிறார்.
இன்றைய நிலையில் சமூகத்தின் தேவை முழுமையான சமூக நீதி தான். இதற்காக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் வாழும் பல்வேறு சமுதாய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆகும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் முன்வைக்கும் திட்டத்தை கைவிட்டு, வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். அதற்காக நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணிகளை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
பொட்டு சுரேஷ் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை: தயாளு
பொட்டு சுரேஷ் கொலை வழக்கிற்கும் எனது கணவருக்கும் தொடர்பில்லை – அட்டாக் பாண்டி மனைவி தயாளு அம்மாள் பேட்டி – 2013 ஆம் ஆண்டு பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட நிலையில் எனது கணவன், 2011 ஆம் ஆண்டே மும்பைக்கு சென்றுவிட்டார் : தயாளு
அவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்
தமிழக சட்டசபையில், அவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை, சபாநாயகர் தனபால், சபையிலிருந்து வெளியேற்ற சபைக்காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடும் எதிர்ப்பு: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை அரசு கைவிட்டது
======================= நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது. வாட்ஸ்ஆப் மூலம் மொபைல் வழியாக தகவல்கள், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கும் வசதி உள்ளதால், நல்லதோ, கெட்டதோ.., அவை நொடிப் பொழுதில் பலருக்கும் பரவி விடுகிறது. இவை குற்றச் செயல்களை கண்டுபிடிப்பதற்கு முக்கிய ஆதாரமாகவும், சில குற்றச் செயல்களுக்கு தூண்டுகோலாகவும் இது விளங்குகிறது வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்படும் அனைத்து விஷயங்களையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் ஒழுங்குப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கென புதிய வரைவு கொள்கையும் உருவாக்கியது. இதுதொடர்பாக, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு புதிய திட்டவரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திட்டவரைவின்படி வாட்ஸ் அப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்கள் தாங்கள் அனுப்பும் அனைத்து செய்திகளையும், புகைப்படங்கள், வீடியோக்களை (தனிப்பட்ட உரையாடல்கள் உட்பட) கண்டிப்பாக 90 நாட்களுக்கு சேமித்து வைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விசாரணைக்காக அரசு கேட்கும்பட்சத்தில் அவற்றை வழங்க வேண்டியதும் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. வரைவுநிலையில் மட்டுமே இருந்த இத்திட்டம் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கண்காணிப்பு திட்டத்துக்கு இணையதள பயனாளர்கள் மற்றும் மொபைல்களில் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், வாட்ஸ்அப் வாயிலாகவும் இந்த முடிவை கண்டித்து கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து, தனது நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. வாட்ஸ்அப்க்கு விதிக்க இருந்த கட்டுப்பாட்டை உடனடியாக தளர்த்தியுள்ளது.

