காமெடி கச்சேரியாக திரைக்கும் வரும் ‘கத்துக்குட்டி!’
கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கவில்லை?: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவர்
சென்னை:
கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காத விரக்தியில் ஐஐடி மாணவர் ஒருவர் சென்னையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கேசபுரத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் நாகேந்திரகுமார் (23). இவர் சென்னை ஐஐடி-யில் எம்.டெக். 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள தாமிரபரணி விடுதியில் 5 வது மாடியில் தங்கியிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்று திரும்பிய அவர் சோகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் விடுதி அறையில் நாகேந்திரகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நாகேந்திர குமாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்துள்ளது. இதில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாகேந்திரகுமார் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் சில நாட்களாக அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்திருக்கலாம்’’ என்றனர்.
இருப்பினும், அவரது தற்கொலைக்கு காதல் விவகாரம் ஏதேனும் காரணமாக இருக்கலாம் என்றும், குடும்பப் பிரச்னை ஏதும் காரணமா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை, அவர் நன்றாகத்தான் இருந்தார் என்று மாணவரின் தந்தை கூறியுள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.
த்ரிஷா இல்லனா நயன்தாரா -விமர்சனம்
அடல்ட் கன்டென்ட் படம் தமிழில் எடுப்பதில் தப்பில்லை . செக்ஸ் மேட்டரை ஆன் பெண் வித்தியாசம் இல்லாமல் பேசியது பாவமில்லை . ஒரு மெச்சூர்ட் படமாக இல்லாமல் காமெடி யாக கொடுத்ததிலும் ஏமாற்றமில்லை . ஆனால் அதையே ஸ்ட்ராங்காக இல்லாமல் நிறைய தனி தனி அடல்ஸ் ஒன்லி சீன்களை எடுத்து பிட் பிட் டாக ஓட்ட வைத்தது போல படம் இருப்பதே குறை . ஏ சர்டிபிகேட் படத்துக்கு சின்ன பசங்கள வச்சு எதுக்கு இத்தன சீனு ? படத்துல ஹீரோ விர்ஜின் ?! ஆனா பொண்ணுங்க விர்ஜினா கிடக்குறது டைனோசர் காலத்துலேயே முடிஞ்சிருச்சு என்று வி டி.வி கணேஷ் டயலாக் விடுவது மட்டும் எந்த ஊரு நியாயங்கோ ?! …
சரக்கை வாங்கிக் கொடுத்து விட்டு சைட் டிஷுக்கு தன் கன்னத்தை காட்டும் ஒரு ஹீரோயின் , சரக்கடித்து விட்டு வரும் ஹீரோ வை ட்ரங்கஅன்ட் டிரைவ் ஸ்டடியாக இருக்காது என்பதால் தொட விடாமல் ஏய்க்கும் மற்றொரு ஹீரோயின் என்று இதுவரை ஹீரோயின்ளை அப்பாவிகளாக அல்லது லூசுகளாக மட்டும் காட்டி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் டெர்ரெர்ராக காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆதிக் இரவிச்சந்திரன் . ஆனாலும் கடைசியில் பெண்களை மட்டும் ஹீரோவை வைத்து திட்ட விடுவதில் ஆதிக்கிடம் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே . ஒரு காலத்தில் இலை மறை காய் மறையாக இருந்த செக்ஸ் சமாச்சாரம் செல்போன் வருகையால் தெருச்சரக்காகி விட்ட இந்த காலத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்கிற டைட்டிலில் வந்திருக்கும் இந்த ஷகிலா வகையறா படம் விடலை (ஹி ஹி ) பசங்களையும் , குடும்பஸ்தனாகியும் கள்ளத்தனமாக பலான சிடி பார்க்கும்
( என்ன தான் பிட் போடாவிட்டாலும் ) விட்ட பசங்களையும் கவரும் . குடும்ப குத்துவிளக்குகள் அந்த பட போஸ்டர் பக்கம் கூட செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் … ன்
தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்!
எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்…
கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.
திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய, துவங்கிய பாசமிகு நட்பு எங்களுடையது. அவை எல்லாவற்றையும் விட எங்களுக்குள் முக்கியமான பிணைப்பாக இருந்த பெயர் – நா.பா.
சிராப்பள்ளி மலையில் கோயில் கொண்ட தாயுமானவன் தாள் தொட்டு பூசித்த பாரமபரிய தீட்சிதக் குடும்பம். கைலாசம் – எழுத்துலகுக்கு கௌதம நீலாம்பரனாக மாறிப்போனார்.
என் இதழியல் துறைப் பணியின் துவக்க கால கட்டத்தில், எனக்கு அறிமுகமான முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். தீபாவளி மலர் ஒன்றே அப்போது எழுத்தாளர்கள் பலரையும் சென்று பார்க்க வைத்து, எங்களை இணைத்தது என்றே சொல்லலாம்.
பத்திரிகை – எழுத்துலக நண்பர்களாக / என் நலன் நாடும் பெரியோர்களாக – திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், பாலகுமாரன், கௌதம நீலாம்பரன் உள்ளிட்ட பலர் கிடைத்தார்கள்.
கௌதம நீலாம்பரன் – ஓர் அதிசயப் பிறவிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். முகம் அமைதியில் தோய்ந்திருக்கும். அவருடைய ஜிப்பாவும் பட்டையான பிரேம் போட்ட கண்ணாடியும் அவரை எழுத்தாள அடையாளத்துக்குள் புகுத்தியிருக்கும்.
ஓர் இதழாளன் படும் அத்தனை சிரமங்களையும் அனுபவித்தவர். சிலவற்றை என்னிடம் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவருடைய விகடன் தொடர்பான அனுபவம், முதுநிலை ஆசிரியர்களிடம் அவர் பட்ட பாடு, ஓர் இதழ் நடத்திய போட்டியில் இவருடைய கதை வென்று பிரசுரமாக, அதனால் உடனிருந்தோர் பொறாமையில் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள்… எல்லாம்தான்!
இவை எல்லாவற்றையும் மீறி, எழுத்துலகில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டார்.
15 வருடங்களுக்கு முன்னர் முதல் முதல் அறிமுகத்தில், இலக்கிய உலகம் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, தாம் தீபம் இதழில் பணியாற்றிய அனுபவத்தைச் சொன்னபோது, நா.பா., ஒரு வகையில் எங்கள் குடும்ப உறவு; என் தாய்வழி மாமா தாத்தாவின் சகலை அவர் என்றேன். அது முதல் பேச்சின் நெருக்கம் இன்னும் அதிகமானது.
தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, விகடன் என அவருடைய பணி நீண்டது. சுமார் 40 வருடங்கள். இதழியல் பணியில் இருந்துவிட்டார். பின்னாளில் குங்குமச் சிமிழுக்கு எழுதிவந்தார்.
சிறுகதைகள் அதிகம் எழுதியவர். வானொலி, தூர்தர்ஷன் எழுத்துத் தொடர்புகள் என எழுத்தாள இலக்கணத்துடன் திகழ்ந்தவர். சரித்திர நாவல்களில் அவருக்கிருந்த தணியாத ஆர்வம்… அவருடைய சரித்திர நாவல்களின் பட்டியலைச் சொல்லும்! சேது பந்தனம், மாசிடோனிய மாவீரன், விஜய நந்தினி, சோழ வேங்கை, ராஜ கங்கனம், மோகினிக் கோட்டை, நிலா முற்றம்…
கலைமகள் இதழில் கதைகள் எழுதியுள்ளார். கி.வா.ஜ. காலத்தில் அவர் எழுதிய கதைகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட என் வயதைக் காட்டிலும் சில வருடங்கள் அவருடைய எழுத்து / இதழியல் உலகப் பணி அதிகமானதுதான்.
சில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் நெடிதுயர்ந்த கட்டடத்தில் குடியேறினார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். லிப்ட் இல்லாமல் இல்லத்து இலக்கை அடைதல் கடினம்தான்! இப்போது மிக உயரத்தில் வந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தக் குறு நகைப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.
பல நேரங்களில் எனக்கு உரிய கௌரவம் கிட்டாது போயின் துச்சமென எதையும் தூக்கிப் போட்டு வந்துவிடுவேன். அப்போது தோன்றும்… நான் என்ற அகம்பாவத்துக்கும், உரிய கௌரவத்தை எதிர்பார்த்தலுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என…?! மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான்! பூணூல் அணிவித்து, வேத வித்யா கர்வம் மேலேறிவிடக் கூடாதென்பதற்கே பவதி பிட்சாந் தேஹி என கைநீட்டி பிட்சை ஏற்கும் தத்துவத்தை இளவயதில் புகட்டியிருந்தாலும், உரிய மதிப்பை எதிர்நோக்கும் மனம் மட்டும் என்னிடம் மாறவில்லை. கிட்டத்தட்ட அதே குணாதிசயம் கௌதம நீலாம்பரனிடமும் இருந்ததை உணர்ந்தேன். அதனாலேயே அவர் பட்ட துயர்களையும் கேட்டறிந்தேன்.
அண்மைக் காலமாக பொற்றாமரை இயக்கத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டினார். திருவாளர் இல.கணேசனார் தலைமையிலான பொற்றாமரை இலக்கிய அமைப்பில் அவருக்கு உரிய இடம் கிடைத்தது. மிகுந்த மன மகிழ்ச்சியோடு பணிகளில் ஈடுபட்டிருந்தார். சில கூட்டங்களில் நான் பார்வையாளனாகச் சென்றபோது, வயதையும் மீறி என் கை பிடித்து சிநேகத்தை வெளிப்படுத்தி வாழ்த்துவார். அவர் மேடை ஏறி மைக் பிடித்துப் பேசும்போது பெருமிதமாக இருக்கும்.
அண்மையில் ஒரு முறை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு பார்வை பலவீனமடைந்து வருவதை கவலையுடன் சொன்னார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு சொன்னார். அவரை என் பைக்கில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டு விடைபெற்றேன். இப்போது அவர் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். நினைக்கும் போது துயரம் மேலிடுகிறது. தமிழன்னை தன் புகழ்பாடிய ஒரு புதல்வனை இழந்துவிட்டாள்!
“மேக்கப்போடாத அமலா பால்” – எனக்கு மிகவும் பிடிக்கும்: ஒளிப்பதிவாளர் சுகுமார்
இப்போது ‘கெத்து’- உதய நிதி ஸ்டாலின் படம், அடுத்து விக்ரம் பிரபுவின் படம் என்று தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். போட்டோகிராஃபராக தனது பயணத்தை தொடங்கியவர் கடின உழைப்பின் மூலம் இன்று டாப்பில் நிற்கிறார்.
கும்கி படம் உங்களுக்கு நல்ல அடையாளம் தானே? அந்த அனுபவம் பற்றி..?
”என்னை ‘லாடம்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக்கியவர் பிரபுசாலமன் சார்தான்.
அவருடன் பிறகு ‘மைனா’ ,’கும்கி’ செய்தேன். மைனாவில், கும்கியில் கால் தேய காடுமலை என்று சுற்றினேன். கடுமையான உழைப்பு அது. காமெராவை கல்லிலும் மலையிலும் மழையிலும் வெயிலிலும் தூக்கிக்கொண்டு வேலை செய்தோம். அதற்கான பலன்தான் இன்றைய சுகுமார் .
. என்னைப் பார்ப்பவர்கள் என்னிடம் பேசுகிறவர்கள் கும்கி பற்றியே கேட்கிறார்கள். அந்தப்படம் அந்த அளவுக்குச் சென்றடைந்திருக்கிறது என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் இன்னும் அதைவிட்டு வேறு என் படத்தைப் பற்றிப் பேசுவதில்லையே என்று
வருத்த
ம்
.
என் வாழ்க்கையை ‘கு.மு ‘மற்றும் ‘கு
ஒருவரிடமே நீங்கள் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்வது பற்றி..?
அது நல்ல விஷயம்தானே? முதலில் பிரபுசாலமன்சார் இயக்கத்தில் 3 படங்கள் தொடர்ந்து செய்தேன்
சிவகார்த்திகேயன் நடித்து முதலில் ‘மான்கராத்தே’யில் பணிபுரிந்தேன்
அடுத்த ‘காக்கி சட்டை’ க்கு அவரே சிபாரிசு
ய்தார். விக்ரம்
பிரபுவுடன் மீண்டும் பணியாற்றப் போகிறேன். ‘கெத்து’ முடிந்ததும் அந்தப் படம் தொடங்கும்.
இது நல்ல விஷயம்தானே?
என்
வேலையை முழுமையாக, சரியாகச் செய்யவேண்டும் என கடினமாக உழைக்கிறேன்
அது அடுத்த வேலையை எனக்கு தானாக தேடிக் கொடுக்கும் என்பது என் நம்பிக்கை
.
பிரபு சாலமனுடன் அடுத்த ‘கயல்’ இப்போதைய தனுஷ்
படம் இதில் எல்லாம் ஏன் நீங்கள் பணியாற்றவில்லை?
கயல் சமயத்தில் ‘நிமிர்ந்துநில்’ பணியில் இருந்தேன்
தனுஷ்
படத்தின் போது ‘கெத்து’ வில் இருந்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணிபுரிவதில் எனக்கு விருப்பமில்லை.
எனவே அவரது படங்களில் வேலை பார்க்க முடியவில்லை. அவர் என் நண்பர் மட்டுமல்ல
நலம் விரும்பியும் கூட
வாய்ப்பு வரும்போது மீண்டும் அழைப்பார்
இணைவோம்.
சிவகார்த்திகேயன் உங்களுக்கு சிபாரிசு செய்கிறாரா?
ஒரு படத்தில் பணியாற்றிவிட்டு நட்பும் புரிதலும் ஏற்பட்டுவிட்டால் அடுத்த படத்திலும் பணிபுரிவது எளிதானது, மகிழ்ச்சியானது . அப்படி எங்களுக்குள் நல்ல நட்பு வரவே, என் உழைப்பு பிடித்துப் போகவே அவரே ‘காக்கிசட்டை’க்கு பரிந்துரை செய்தார். அது நட்பை விட உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பு என்பேன். அதேசமயம் நட்பு இருக்குன்னு வேலையில கோட்டை விட்டா அடுத்த முறை கூப்பிடமாட்டாங்க பாஸ். இங்கே நட்போடு சேர்ந்த திறமை ரொம்ப முக்கியம்.
‘கெத்து’ எப்படி?
இதுவரை பார்த்த உதயநிதி என்கிற நடிகரை இதில் பார்க்க முடியாது
வித்தியாசமான உருவில் வருவார். அவரது தோற்றம், நடை, உடை, பாவணையே வேறுமாதிரி இருக்கும்.
ஓர் ஒளிப்பதிவாளருக்கு எது தேவை? யதார்த்தமா? அழகுணர்ச்சியா?
இரண்டுமே தேவைதான். ஆனால் எது தேவை என்பதை தீர்மானிப்பது கதையும், சூழலும், எண்ண
ட்டம் என்கிற அடிப்படையும்தான். கதை அனுமதிப்பதை, ஏற்பதை இயக்குநர் பேசுகிற மொழியில் காட்சிப் படுத்துவதே ஒளிப்பதிவாளரின் வேலை.
அப்போது உங்களின் தனிப்பட்ட படைப்புத் திறன் எது?
அந்த எல்லைக்குள்தான் நாம் விளையாட வேண்டும்
அதை மீறி வெளிப்பட நினைக்க
கூடாது. அப்படிஅந்த எல்லைக்குள் செய்துதான் எல்லா பெரிய ஒளிப்பதிவாளர்களும் பெயர் பெற்று இருக்கிறார்கள்.
இயற்கை ஒளி, வடிவமைக்கப்பட்ட ஒளி எது சவால்.?
இயற்கை ஒளியில் ஒளிப்பதிவு செய்வது சுலபம். நாமாக ஒளியமைப்பு செய்வது சிரமம். சவாலானதும் கூட!
நான் காடு
மலை
சம்பந்த்ப்பட்ட காட்சிகளுக்கு
செய்திருக்கிறேன்., காதல் சார்ந்த காட்சிகளுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்., அதீத கற்பனை சார்ந்த காட்சிகளுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்,
ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.
எந்தமாதிரி காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கொடி உயரே
பறக்கும்?
படத்தில் கதையை விட்டு ஒளிப்பதிவு தடம் மாறக் கூடாது
பாடல் காட்சிகளில் சண்டைக் காட்சிகளில் நாங்கள் கொஞ்சம் வெளியே தெரிய வாய்ப்பு உண்டு. எங்கள் சுதந்திர எல்லை இதில் சற்று அதிகம்.
படங்களில் பாடல் காட்சிகளில் சண்டைக் காட்சிகளில்தான் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது
உங்களுக்கு யாருக்கும் நல்ல புரிதல் இருக்கவேண்டும்?
முதலில் இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நல்ல புரிதல் இருக்கவேண்டும். அடுத்து கலை இயக்குநருக்கும் நல்ல புரிதல்வேண்டும்.பிறகு மற்றதெல்லாம்.
உங்களுக்கான ஹோம் ஒர்க் எது?
ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நகர்விலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பதில், சந்திப்பதில், கண்ணில் படுவதில் எல்லாம் விஷூவலாக காட்சிகளைப் பார்க்க வேண்டும்; தொழில்
தினமும்
கற்றுக் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல்
யுகத்தில் ஒளிப்பதிவு இன்று சுலபமாகிவிட்டதே?
ஆனால் அதை இயக்க திறமையுள்ள ஒளிப்பதிவாளர் வேண்டுமல்லவா? அன்று
பிலிமில் எடுத்த போது இருந்த அர்ப்பணிப்பு , கவனம், டிஜிட்டலில் போய்விட்டது
டிஜிட்டல்
யுகத்தில் கொஞ்சம்
அலட்சியம் வந்துவிட்டது வேதனைக்குறியதுதான்.
மறக்க முடியாத பாராட்டு ?
முதலில் நான் ‘லாடம் ‘செய்தபோது கேவி ஆனந்த்சார் , ரத்னவேலுசார் , என்
குரு பாலசுப்ரமணியெம்சார் ஆகியோர் பாராட்டியது மறக்க முடியாதது.’காக்கிசட்டை’ யில் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் என் ஒரு
ட்டைப் பார்த்து எங்கே ஜீவாவைக் காணோம் என்றார். நான் மானசீக குருவாக கருதும் ஜீவாவுடன் என்னை ஒப்பிட்டது மறக்கவே முடியாதது.
நட்சத்திரங்களுடன் நீங்கள் எப்படி நட்பாக இருக்கிறீர்கள்?
பலரும் நட்பாக இருக்கிறார்கள். பெரிய நட்சத்திரக் குடும்பத்திலிருந்து வந்த விக்ரம்பிரபு எப்படி பழகுவாரோ என்று முதலில் தயங்கினேன். அவரோ ஒரு சகோதரர் போல சுலபமாக பழகி, அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுமளவுக்கு சகஜமாகிவிட்டார்.
உதயநிதி ஸ்டாலின்
என்கிற எந்த எண்ணமும் இல்லாமல் எளிமையாகப் பழகினார். இன்றும் பழகுகிறார். இப்படி நிறைய பேர் சொல்லலாம்.
மேக்கப் போடாத அமலாபாலைத்தான் பிடிக்கும்
எப்போதும் அதே குண
பிடிக்கும். எமிஜாக்சன்
கூட வெள்ளந்தியாகத்தான் பழகுகிறார். அவர் அழகு என்றால் அவர் பேச முயல்கிற தமிழ் மிக அழகு.
அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ராகுல் காந்தி
புது தில்லி:
காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரணதீப் சூரஜ்வாலா செய்தியாளர்களிடம் கூறியபோது…
அமெரிக்காவின் ஆஸ்பன் நகரில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக குறுகிய காலப் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெளியாகும் ஊகங்களை மறுக்கிறோம் என்று தெரிவித்தார்.
இருப்பினும் ராகுல் கலந்து கொள்ள இருக்கும் மாநாட்டுத் தேதி குறித்தோ, அமெரிக்காவில் எத்தனை நாள்கள் அவர் பயணம் செய்கிறார் என்பது குறித்தோ சூரஜ்வாலா தெரிவிக்கவில்லை.
மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’
மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’னு பெரியவா நமக்கு போதிக்கறா மாதிரி இல்லையா?
காவிரியைப் பாதுகாக்க வலியுறுத்டி 28இல் போராட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைத்தில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் சாய ஆலைகளை இழுத்து மூடவும் காவேரி ஆற்றை பாதுகாத்திடவும் மாசுகட்டுப்பாடு வாரியத்தை வலியுறுத்தி வரும் 28-9-2015 அன்று காலை 10 மணியலவில் காவேரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தமிழர் படை சார்பில் நடைபெறும்.
நக்கீரன் கோபாலுக்கு சம்மன்
நக்கீரன் கோபாலுக்கு சம்மன். நவம்பர் 16ல் ஆஜராக வேண்டும். 2340 கோடி ரூபாய் வாக்காளர் பரிசு தொகை. ஜெ. தேர்தல் பிளான். நக்கீரன் செய்தி வந்த தேதி 5-8 செப்டம்பர இதழ். நக்கீரன் கோபால், சிறப்பு நிருபர் பிரகாஷ் மீது முதல்வர் சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் கடந்த 8ம் தேதி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன் சம்மன் அனுப்ப இன்று உத்தரவிட்டார்
அரசு, மூங்கில், துளசி
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி. இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி. துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது. துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற் போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும். பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் அல்லது 720 கோடி மூங்கில் மரங்கள் அல்லது 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை. இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.



