த்ரிஷா இல்லனா நயன்தாரா -விமர்சனம்

2.bp.blogspot.com - 2026
 
முதல் படமான டார்லிங் சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய்  அதையே  கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா வில் நடித்து விட்டார் ஜி.வி என நினைக்கிறேன் . அடல்ட் செக்ஸ் பேஸ் மூவி தமிழுக்கு போல்டாக பட்டாலும் படத்தில் காமெடி என்கிற பெயரில் காம நெடி மட்டுமே தூக்கலாக இருக்கிறது …
 
வெர்ஜின் பையன் ஜீவா ( ஜி.வி.பிரகாஷ்குமார் ) தனது சிறு வயது தோழிகள் தீபிகா ( ஆனந்தி ) , அதிதி ( மனிஷா யாதவ் ) இருவரையும் லவ் பண்ணி கடைசி வரை கன்னி கழியாமல் இருந்து பல்பு வாங்குவதே கதை . வழக்கமான காதல் தோல்வி ஹீரோ புலம்பலை செக்ஸ் , டபுள் மீனிங் ஜோக்குகளை சேர்த்து அடுத்த கியருக்கு தாவியிருக்கிறார்கள் …
 
ஆரம்ப காலங்களில் தனுஷை இமிடேட் செய்தது  இருக்கிறது ஜி.வி.யின் தோற்றம் மற்றும் பாடி லாங்குவேஜ் . முதல் படத்திற்கு இந்த பட நடிப்பு தேவலாம் என்றாலும் இன்னும் லாட்ஸ் டு கோ . எப்பவுமே மூஞ்சில விரக்தியா ?  கொஞ்சம் வெரைட்டியும் காட்டுங்க பாஸ் ! . இரண்டு ஹீரோயின்களில் ஆனந்தி பெரிய விழிகளில் அழகாய் பேசுகிறார் . க்ளைமேக்சில் இவர் ஏற்கனவே அடிபட்ட மேட்டரை உடைக்கும் போது நமக்கே ” என்னமா இப்புடி பண்ணிட்டியேம்மா ” என்று ஜி.வி மேல் வருத்தம் வரத்தான் செய்கிறது . மாங்கு மாங்கென்று குடிக்கும் பெண்ணாக மனிஷா . நான் ஏன் குடிக்கக்கூடாது என்று ஜி.வி யை இவர் மடக்கும் சீன் சூப்பர் . கிளாமரா டவுசரோட நடிக்குற பொண்ணுக்கு கொஞ்சம் மூஞ்சியோட சேத்து மத்த இடத்துக்கும் மேக்கப் போட்டா தேவல ! . ஜோதிகா ஜம்மென்று 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இது போன்ற படங்கள் சிம்ரனுக்கு தேவையா ?! . வி.டி.வி கணேஷ் பெரிசாக இம்ப்ரெஸ் செய்யவில்லை …
 
1.bp.blogspot.com - 2026
 
அடல்ட் கன்டென்ட் படம் தமிழில் எடுப்பதில் தப்பில்லை  . செக்ஸ் மேட்டரை ஆன் பெண் வித்தியாசம் இல்லாமல் பேசியது பாவமில்லை . ஒரு மெச்சூர்ட் படமாக இல்லாமல் காமெடி யாக கொடுத்ததிலும் ஏமாற்றமில்லை . ஆனால் அதையே ஸ்ட்ராங்காக இல்லாமல்  நிறைய தனி தனி அடல்ஸ் ஒன்லி சீன்களை எடுத்து பிட் பிட் டாக ஓட்ட வைத்தது போல படம் இருப்பதே குறை . ஏ சர்டிபிகேட் படத்துக்கு சின்ன பசங்கள வச்சு எதுக்கு இத்தன சீனு ? படத்துல ஹீரோ விர்ஜின் ?! ஆனா பொண்ணுங்க விர்ஜினா கிடக்குறது டைனோசர் காலத்துலேயே முடிஞ்சிருச்சு என்று வி டி.வி கணேஷ் டயலாக் விடுவது மட்டும் எந்த ஊரு நியாயங்கோ ?! …

சரக்கை வாங்கிக் கொடுத்து விட்டு சைட் டிஷுக்கு தன் கன்னத்தை காட்டும் ஒரு ஹீரோயின் , சரக்கடித்து விட்டு வரும் ஹீரோ வை ட்ரங்கஅன்ட் டிரைவ் ஸ்டடியாக இருக்காது என்பதால் தொட விடாமல் ஏய்க்கும் மற்றொரு ஹீரோயின் என்று இதுவரை ஹீரோயின்ளை அப்பாவிகளாக அல்லது லூசுகளாக மட்டும் காட்டி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் டெர்ரெர்ராக காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆதிக் இரவிச்சந்திரன் . ஆனாலும் கடைசியில் பெண்களை மட்டும் ஹீரோவை வைத்து திட்ட விடுவதில் ஆதிக்கிடம் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே . ஒரு காலத்தில் இலை மறை காய் மறையாக இருந்த செக்ஸ் சமாச்சாரம் செல்போன் வருகையால் தெருச்சரக்காகி விட்ட இந்த காலத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்கிற டைட்டிலில் வந்திருக்கும் இந்த ஷகிலா வகையறா படம் விடலை (ஹி ஹி ) பசங்களையும் , குடும்பஸ்தனாகியும் கள்ளத்தனமாக பலான சிடி பார்க்கும்
( என்ன தான் பிட் போடாவிட்டாலும் ) விட்ட பசங்களையும் கவரும் . குடும்ப குத்துவிளக்குகள் அந்த பட போஸ்டர் பக்கம் கூட செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் … ன் 

ஸ்கோர் கார்ட் : 39
 
ஸ்கோர் கார்ட் : 2.25*/5*
 
பின்குறிப்பு : ( படத்தை எதிர்த்து மாதர் சங்கங்கள் கேஸ்  போடுதோ இல்லையோ த்ரிஷா , நயன்தாரா ரெண்டு பேரும் போடாம இருந்தா சரி ) 
 
விமர்சனம்: அனந்த நாராயணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories