சிவமயம் சிவாயநம நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றிப் பார்ப்போம் நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் யாவை என்று பார்ப்போம் 1. தினசரி காலையும், மாலையும் தூய ( நல்ல சிந்தனையுடன்) மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் ( பரம்பொருள் – சிவபெருமான்) பெயரை உச்சரித்தல் வேண்டும். 2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள். 3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும். 4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும். 6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும். 7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது தான் துவாதசன தரிசனம் எனப்படும். 8. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. 9. அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது. 10. பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது. 11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது. 12. கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம். 13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் ( மலர்களை) சூடக்கூடாது. 14. வீட்டின் நிலைகளில் ( வாசற்காள்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது. 15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது. 16. அதிகாலை ( 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் இது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்) நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது. 17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும். 18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது. 19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும். 20. ஓம் ( பிரணவம்) என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது. 21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும். 22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. 23. ருத்ரம், சமகம் கந்த சஷ்டி கவசம், சிவபுராணம், கோளாறு பதிகம், திருநீற்றுப் பதிகம், போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது. 24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும். 25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது. 26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம். 27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும். 28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும். கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும் 29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது. 30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது. 31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உடுத்தலாம். 32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேலையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது. 33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடனும் இரவு தூங்குவதற்கு முன்ன்னும் சிவபெருமானையும் அவரின் திருநாமத்தையும் ( நமசிவாய, சிவாயநம, சிவயசிவ, சிவசிவ, சி, ) நினைக்க வேண்டும். 34. கஷ்டங்கள் ( துன்பங்கள்) நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம். 35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும். 37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது. 38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது. 40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது. 41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது. 42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது. 43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது. 44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. 45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது. 46. தெய்வப் படம், குத்து விளக்குகளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது. 47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார். 48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் திருநீறு கையில் வைத்துக் கொண்டு என் அடியார்கள் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன் என்று பரம்பொருள் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் திருநீறு இருக்கும் வரை சிவபெருமானின் துணை அவருக்கு தோன்றாய் துணையாய் உண்டு. 49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும். 50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும். 51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு. 52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும். 53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள். 54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது. 55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது. 56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். 57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள். 58. வெள்ளிக் கிழமையன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது. 59. வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி தானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படாத தானம் வீண். 60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும். 61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும். 62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும். 63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும். 64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள். 65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும். 66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள். 67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும். 68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்களுக்கு செல்வத்தை வாரி கொடுப்பவரே பரம்பொருள் ( சிவபெருமான்) ஒருவரே ஆவார் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது. 69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும். 70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது. 71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும். 72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது. 73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம். 74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது. 75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது. 76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது. 77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது. 78. சிவாலயங்களை வணங்கி வீடு திரும்பும்போது பார்வதி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே சிவன் கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது. 79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம். 80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் கண் திருஷ்டி விநாயகரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது திருச்சிற்றம்பலம் இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ சுப்பிரமணி சைவ சித்தாந்த சபை ஒசூர்
அகில பாரத பிராமணர் சங்க கூட்டம்
20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . தேசியத் தலைவர் குமரி எஸ் . சங்கரநாராயணன் தலைமையில், மூத்த துணைத் தலைவர் நடராஜய்யர், திருநெல்வேலி மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், குமரி மாவட்ட தலைவர் கணேஷ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மதுரை வேத பாடசாலை மாணவர்களும், வேதப் பண்டிதர்கள் வன்னிநாத சர்மா, மணிகண்ட வாத்தியார் தென்காசி சுந்தரராஜன் , பாஸ்கர வாததியார் வேத கோஷம் முழங்க , தேசிய மகளிர் அணி செயலர்கள் சாந்தி சந்திரசேகர் நாராயணீ பத்மஜா அனந்தராமன் நடிகை பத்மினி குத்துவிளக்கு ஏற்ற , மதுரை மூத்த வக்கீல் ரமேஷ் அவர்கள் துவக்கி வைக்க தமிழ் மாநில கட்சி தலைவரும் தமிழ்நாடு புதுவை வழக்கறிஞர் சங்கத் தலைவருமான உயர்திரு பால் கனகராஜ் , அகில இந்திய தலித் சம்மேளன கட்சி தலைவர் சௌரிராஜன் , தியாகிகள் குடும்ப நல அமைப்பு சங்கத் தலைவர் தக்கலை சந்திரன் , க்ஷத்ரிய நாடார் சங்கத் தலைவர் சந்திரன் ஜெயபால் , தேசிய பொது செயலாளர் பாலாஜி சாஸ்த்ரிகள் , தேசிய இளைஞர் அணி செயலாளர் கண்ணன் இராமலிங்கம், துணைப் பொது செயலாளர் சதீஷ்குமார் , வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பர்வதராஜன் , தேசிய கொள்கை பரப்பு செயலாளர் SRS , தேசிய அமைப்பு செயலர்கள் க.இரவி, கவிஞர் முத்துராமன், N .வெங்கட்ராமன் , தேசிய செயலர்கள் ASR பாலாஜி, ஆனந்த், iyswarya கணேஷ் , கல்லிடைக்குறிச்சி விசுவநாதன் , தேசிய ஆலோசகர் கிருஷ்ணசாமி , சென்னை மாவட்ட தலைவர் ரவிசங்கர், காஞ்சி மாவட்ட தலைவர் சுந்தரம் , திருச்சி மாவட்டத் தலைவர் சௌந்தரராஜன் , சேலம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அனந்தபத்மநாபன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சந்திரமௌலி, கோவை மாவட்ட செயலாளர் வெங்கடரமணி, கு 20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . குமரி மாவட்ட செயலாளர் விவேகாநந்தன் , தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐய்யப்பன், சேலம் மாவட்டப் பொருளாளர் ஆனந்த தீர்த்தன், செங்கோட்டை ஸ்ரீராம் சிறப்புரை ஆற்ற , கடயநல்லூர் ராஜகோபால் பஜனை மண்டலியின் நாம சங்கீர்த்தனம் நிகழ, தேசியப் பொருளாளர் TP குளத்துமணி iyer அவர்களின் நன்றியுரையுடன் பழரசம் அருந்தி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது . நமது நீண்ட நாள் கோரிக்கையான வீரவாஞ்சிநாதன் நினைவு நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் அம்மா அறிவித்தது நமக்குக் கிடைத்த வெற்றி ஆகும் ..
பேரவையில் இன்று விவாதம்
தமிழக சட்டசபையில் இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்து, நடப்பாண்டு இரு துறைகளிலும், செயல்படுத்தப்பட உள்ள, புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
மோடியின் அமெரிக்க பயணம் நாளை துவக்கம்
அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 7 நாள் அரசு முறை பயணமாகும் பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை நாளை துவக்க உள்ளார். நாளை(செப்., 23) அயர்லாந்து செல்லவுள்ள மோடி, அங்கு தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நாளை மறுநாள்(செப்., 24) அமெரிக்கா செல்கிறார். இதனையடுத்து 25ம் தேதி ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, 26ம் தேதி பேஸ்புக் தலைமை அலுவலகம் செல்கிறார்.
வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்கள் அழிக்க கூடாது: புதிய தேசிய கொள்கை கொண்டுவர முடிவு
புதுடில்லி: இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கையை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் தங்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இணைய தள பயன்பாட்டில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ்அப் செயலி (WHATS APP) ஆகும். மற்ற செயலிகளை விட வாட்ஸ் அப் மூலம் மொபைல் வாயிலாக இ-மெயில் தகவல்கள், பேட்டோ, வீடியோ ஆகியவை நொடிப்பொழுதில் அனுப்பி வைகப்பட்டு அவை வைரலாக பரவிவிடுகிறது. இது போன்ற டேட்டாக்கள் பல்வேறு குற்றச்செயல்களை கண்டுபிடிப்பதற்கு முக்கிய ஆதாரமாகவும் பயன்படுகிறது.இவற்றினை ஒழுங்குப்படுத்திட தகவல் தொழில்நுடப் சட்டத்தின் கீழ் இதற்காக வழி வகை செய்ய மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.இதன்படி வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மற்றும் போட்டோ , வீடியோ உள்ளிட்ட டேட்டாக்களை பாதுகாப்பு கருதி 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு சேமிக்காமல் டேட்டாக்களை அழித்துவிட்டால் அது சட்டவிரோதம் என அறிவிக்க வகை செய்யும் புதிய தேசிய வரைவு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மந்தைவெளியில் இளைஞர் சுடப்பட்டதால் பரபரப்பு
போலீஸ் எஸ்.ஐ. சங்கரபாண்டியனின் மகள் அபிநயா. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ராஜசேகர் என்பவரை அபிநயா, எஸ்.ஐ. சங்கர பாண்டியனின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த சங்கர பாண்டியன், ராஜசேகரை தன்னிடம் இருந்த 9 எம்.எம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவம் மந்தைவெளி பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வழக்கறிஞர் ராஜகோபாலின் பாதுகாப்பு அதிகாரியாக சங்கர பாண்டியன் பணியாற்றி வருகிறார் .
வாட்ஸ்அப், ஹேங்க்அவுட் தகவல்களை 90 நாட்களுக்குள் அழித்தால் குற்றம்: மத்திய அரசின் புதிய சட்டம்
புது தில்லி:
வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் உள்ளிட்டவற்றில் பரிமாறப்படும் தகவல்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சமூக தகவல் தளங்களான இந்த வழிகளில் வரும் தகவல்கள் குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம். வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம் அனுப்பும் செய்திகள் தானாகவே குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன. அவற்றைப் பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம் அனுப்பும் தகவலை படிக்க முடியும்.
இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவுச் சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங் அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்டவற்றை 3 மாதங்கள் வரை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் படும்..
இந்தப் புதிய சட்டத்தின்படி பொதுமக்களுக்கு இணையம் மூலம் தகவல்களைப் பரிமாறுவதிலும் தகவல்களை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றில் பதிவு செய்து வைப்பதிலும் குறியீட்டுச் சொற்கள் வசதியை பயன்படுத்த உரிமை உண்டு. அதே நேரத்தில் அதற்கான செயல்முறையை முக்கியமாக அல்காரிதம் வடிவமைப்பு, “கீ சைஸ்” உள்ளிட்டவற்றை அரசின் அப்போதைய அறிவிப்பின்படி செயல்படுத்த வேண்டும். இதன்படி கூகுள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் மத்திய அரசு கூறும் குறியீட்டு சொல் வடிவமைப்பு முறையையே பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த வசதியைப் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போனில் பெறும் தகவல்கள், அனுப்பும் தகவல்களை கண்டிப்பாக 3 மாதங்கள் வரை அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்.
இந்தப் புதிய சட்டத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நமக்கு நாமே! பயணத்தில் ஆட்டோவில் சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்
நாகர்கோவில்:
தமிழகத்தில் பல இடங்களில் நமக்கு நாமே என்ற திட்டத்தை வைத்து பயணத்தை மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாகர்கோவிலில் ஆட்டோவில் நின்றபடி பயணித்து மக்களிடம் பிரசாரம் செய்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படி, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு முதல் கட்ட பயணம் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு பயணத்தை தொடங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நேற்று நடந்தது. இதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.30க்கு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பகுதிக்கு வந்தார். அங்கு வந்திருந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுடன் கலந்துரையாடி நடைப் பயணத்தை தொடங்கினார். வரும் வழியில் கன்னியாகுமரியில் உள்ள கடை வியாபாரிகள் சிலரை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து காந்தி மண்டபத்துக்கு சென்று, காந்தியின் அஸ்தி கட்டத்துக்கு (நினைவிடம்) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு காமராஜர் நினைவு மணிமண்டபத்துக்கு வந்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கன்னியாகுமரி சந்திப்பு பகுதிக்கு மக்களோடு நடந்து வந்தார். அண்ணா சிலை அமைந்துள்ள இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கும், அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி, ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு பயணத்துக்காக வரவழைக்கப்பட்டு இருந்த வேனில் ஏறி நாகர்கோவிலுக்கு புறப்பட்டார்.
பின்னர் நாகர்கோவிலுக்கு வந்த அவர் கோட்டார் சந்தைப் பகுதியில் வியாபாரிகளை சந்தித்துப் பேசினார். ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி நின்று ஆட்சியர் அலுவலக பிரதான வாயில் அருகில் மக்களைப் பார்த்து கை அசைத்தவாறு பயணித்தார்.
குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய அவர், குமரி மாவட்டம் அய்யா வைகுண்டர், மார்ஷல் நேசமணி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, ஜீவா போன்ற பல சான்றோர்களை உருவாக்கிய மாவட்டம். அப்படி பெருமைக்குரியவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் இருந்து இந்த பயணம் தொடங்கப்படுகிறது.
கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது வணிகர்களுக்கு பல நன்மைகளும், சாதனை திட்டங்களும் கிடைத்து வந்தன. ஆனால் இன்று எந்த புதிய திட்டமும் கிடையாது. நீங்கள் சுதந்திரமாக தொழில் செய்யும் நிலை வரும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு நல்ல வாய்ப்பு வருகிற 2016–ம் ஆண்டு. இன்னும் 237 நாட்கள்தான் உள்ளன. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் வைகோ
நெல்லை:
இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணை நடத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- என்று நெல்லையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார்.
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க பிற நாடுகளை வலியுறுத்த வேண்டும்; இலங்கை அரசு நடத்திய போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா முன்வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை புறநகர், மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கிப் பேசினார். அப்போது,
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை அவசியம் வேண்டும். சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும். அதற்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகம் எங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும், தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ள 65 ஆயிரம் ஈழத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கக்கூடாது.
ஈழத்தமிழர் விடுதலைக்காக முத்துக்குமார் தீக்குளித்து உயிர்நீத்தபோது நடந்த கூட்டத்தில், மத்திய அரசை விமர்ச்சித்தும், பிரபாகரனை பற்றியும் பேசக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தனது மகன் மத்திய அமைச்சரவையில் இருந்ததால் அவர் அப்படி கூறினார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க.வும் இது பற்றி பேசவில்லை.
இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் குறித்த மனித உரிமை கமிஷனின் 268 பக்க அறிக்கையை படித்து பார்த்தேன். அப்போதைய ராணுவ மந்திரி மைத்ரிய ஸ்ரீபாலசேனா, ராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியவர்களும், தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள்தான். அவர்கள் கண்முன்பே ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால், அவர்களுக்காக போராடும் இயக்கம் ம.தி.மு.க. மட்டுமே. ம.தி.மு.க.வில் இருந்து சிலரை தி.மு.க.வுக்கு கருணாநிதியும், ஸ்டாலினும் இழுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு சென்ற பின்புதான், ம.தி.மு.க. மீண்டும் எழுச்சி பெற்று உள்ளது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இது ஏழரை கோடி தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கும் தீர்மானம். அந்த தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். அதுபற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு எடுத்துச் சென்று, பன்னாட்டு நீதி விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்.
ஈழ தமிழர்களின் பிரச்சினைக்கு உலக நாடுகள் தீர்வு தராது. நாம் உலக நாடுகளிடம் நீதி கேட்கவேண்டாம். நாமே நீதியை பெறவேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள 10 லட்சம் இளைஞர்கள் கட்சியை மறந்து தமிழர் என்ற உணர்வுடன் களத்தில் இறங்கி போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உடனே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்வு காணப்படும். ஈழ தமிழர்களின் உரிமைக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
– என்று வைகோ கூறினார்.
காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவெடுக்கவே பிரதமர் விரும்புகிறார்: முரளிதர் ராவ்
சென்னை:
பாஜக., வின் கூட்டம் நேற்று சென்னையில் கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ்,
காவிரி நதிநீர் பிரச்னை நாட்டின் ஒற்றுமை சார்ந்த விஷயம். இதனை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றார்.
மேலும், இலங்கை பிரச்னையில் தமிழர் நலனுக்காக ராஜதந்திரத்துடனும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்தும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்னையில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லாமலும், இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு நல்ல முறையில் முடிவு எடுப்போம் என்று கூறினார்.

