Home Blog Page 6085

கர்நாடகத்தில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவோம்: வெறியேற்றும் மஞ்சுநாத்

மேகதாது விவகாரத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம் என்று கன்னட வேதிக அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் பேசியுள்ளார். மேகதாது அணை கட்ட ஆதரவு தெரிவித்தும், தமிழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் படுகிறது.. இதனால் தமிழக எல்லையில் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஹோசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெல்காம், பீஜப்பூர், பெல்லாரி, வடகர்நாடகாவில் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்றாலும், பெங்களூரு, ராம்நகர், கார்வார்ட், மைசூர், தாவனகெரே உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு நடக்கிறது. இந்தப் பகுதிகளில் ரயில், பஸ்கள் ஏதும் ஓடவில்லை. இந்நிலையில், கன்னட அமைப்பினர் பலர் மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கன்னட வேதிக அமைப்பின் தலைவர் மஞ்சுநாத், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் கர்நாடகாவில் வாழும் 25 லட்சம் தமிழர்கள் வெளியேற்றப்படுவார்கள். தமிழர்கள் சார்பில் கர்நாடகாவில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பறந்து பறந்து ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடி பாக்கி: மற்ற அமைச்சகங்களுக்கு கடிதம்

air-india-flight புது தில்லி: ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் மேற்கொண்ட பயணங்களின் வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி ரூ.600 கோடி அளவுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சகங்களின் கவனத்துக்கு கடிதம் மூலம் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எடுத்துச் சென்றுள்ளது. பல கோடி ரூபாய் நஷ்டம் காரணமாக மூழ்கும் நிலையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தற்போது ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளதாம் . தொடர்ச்சியாக சந்தித்த நஷ்டங்களுக்கு பின்னர், கடந்த டிசம்பரில்தான் இந்த நிறுவனம் ரூ.14.6 கோடி நிகர லாபம் ஈட்டியதாக முன்னர் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

திரை விமர்சனம்: காஞ்சனா 2

Kanchana-200007 தமிழில் சீரிஸ் படங்கள் வருவது அரிது. அப்படி வந்தாலும் பல படங்கள் முந்தைய படங்களை விட வெற்றியடைவதில்லை. நடிகரும், இயக்குநரமான ராகவா லாரன்ஸ் முனி பட வரிசையில் முன்றாவதாக காஞ்சனா 2 இயக்கியுள்ளார். தன்னுடைய முதல் 2 படங்களான முனி மற்றும் காஞ்சனா ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று மாபெறும் வெற்றியடைந்த படங்கள். அந்த எதிர்பார்ப்பினை காஞ்சனா 2-வில் லாரன்ஸ் தக்கவைத்து கொள்கிறாரா என்ற ஆர்வத்தில்தான் படத்தை பார்த்தேன், தக்கவைத்துவிட்டார் லாரன்ஸ் என்றே சொல்ல வேண்டும். கதை இதுதான், கதாநாயகி டாப்ஸி வேலை செய்யும் கிரீன் டிவி சேனல் முதலிடத்தை இழந்து 2ஆம் இடத்திற்குத் தள்ளப்படுகிறது. இதனால் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை முதலுக்கு கொண்டுவர பரபரப்பாக எதையாவது செய்ய வேண்டும் என நிர்வாகம் தீர்மானிக்கிறது. அதற்காக பேய் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கத் திட்டமிடுகிறது அந்நிறுவனம். இதனால் மகாபலிபுரத்திலுள்ள பாழடைந்த பங்களா ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கே இல்லாத பேயை இருப்பதுபோல் காட்டி டிஆர்பியை எகிற வைக்கத் திட்டம் போடுகிறார்கள். நிகழ்ச்சியின் இயக்குனர் டாப்ஸி, கேமராமேன் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட கிரீன் டிவி டீம் அந்த பங்களாவிற்குப் போகிறது. அங்கே போனபிறகு நடக்கும் அதிரடி, அமானுஷ்ய அனுபவங்களே ‘காஞ்சனா 2’. காஞ்சனா’வில் நடித்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரது நகைச்சுவை கூட்டணி இதிலும் தொடர்கிறது. ஆனால், இதில் குறிப்பிடப்பட வேண்டியது டாப்ஸியின் நடிப்பு. பல திரைப்படங்களில் மரத்தை சுற்றி டூயட் பாடி வந்த டாப்ஸி, காஞ்சனா 2-வில் நடிப்பில் பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார். அதேபோல இரண்டாம் பாதியில் வரும் நித்யா மேனன் மாற்றுத் திறனாளி கேரக்டரில் வந்து மனதை உறுக்குகிறார். ராகவா லாரன்ஸ் இதில் வெவ்வேறு கெட்டப்புகளில் வந்து தனது நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டுகிறார். அதுவும், ஒரு சிறுமியாக வந்து அவர் ஆடிப்பாடி பயமுறுத்துவது டாப் கிளாஸ். காஞ்சனா 2-வின் முக்கியமான பலம் அதன் பிண்ணனி இசை. தமன் மற்றும் சத்யாவின் பிண்ணனி இசை திகிலையும். வாயா வீரா பாட்டு மெலடியில் சொக்கி ரசிக்க வைக்கிறது. கடும் சவால்கள் நிறைந்த ஒளிப்பதிவவை சிறப்பாக செய்திருக்கிறார் ராஜவேல். இதுபோன்ற அமானுஷ்ய படங்களுக்கு படத்தொகுப்பு மிகவும் முக்கியம். விறுவிறு பரபர காட்சிகளை சிற்பபாக செய்து முடித்து இறைவனடி சேர்ந்துவிட்டார் மறைந்த கிஷோர். எல்லா படத்திலும் குறை இருக்கத்தானே செய்யும். காஞ்சனா 2-வில் முன்பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம்பாதியில் இல்லை என்றே கூற வேண்டும். அதற்கு காரணம் அழுத்தமில்லா ப்ளாஷ் பேக். யூகிக்க கூடிய சில காட்சிகள். இவை அனைத்தும் இருந்தாலும் நகைச்சுவை படத்தை இழுத்துக்கொண்டு செல்கிறது. மேலும், கிராபிக்ஸ் சண்டைக் காட்சியின் நீளமும் சற்று அதிகம். முடிவில் முனி பட வரிசையின் 4-ஆம் பாகத்துக்குக்கான போஸ்டர் காட்டப்பட்டது. ஒரு சில குறைகள் இருந்தாலும், மக்களை குஷிப்படுத்தவதில் இந்த காஞ்சனா 2 கோட்டை விடவில்லை. இந்தப் படம் மாஸ் இல்லை…. பக்கா மாஸ்… திரை விமர்சனம்: தர்மா

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் படை பாதுகாப்பு தேவை: தமிழக அரசு பதில் மனு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் படையினர் பாதுகாப்பே தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் படையை நியமிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கடந்த ஆண்டு நவம்பரில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் மீது 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவுக்கு, தமிழக அரசு சார்பில் நேற்று எதிர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றம், 15-12-2011 அன்று வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசு அதிகாரிகளுக்கு எந்த வகையான இடையூறும் ஏற்படாது என்று கேரள தலைமைச் செயலாளர் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லை. அணையின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் கேரள அரசு செயல்பட்டுவருகிறது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கேரள அரசு செயல்படுவதாகக் கூறினாலும், அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. அணை பராமரிப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த பதிலில் கேரள அரசு கூறியுள்ளவை ஏற்புடையதல்ல. அவை அனைத்தையும் மறுக்கிறோம். எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு முன் நடைபெறும்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு: மாடலிங் நடிகை பூஜா புகார்!

Pooja-Mishra-Photoshoot21 பாட்னா: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை எவரோ கற்பழித்துவிட்டதாகவும், தன் விலையுயர்ந்த பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாகவும் மாடலிங் நடிகை பூஜா மிஸ்ரா புகார் ஒன்றை அளித்துள்ளார். பீகாரைச் சேர்ந்த மாடல் நடிகை பூஜா மிஸ்ரா. இவர் பிக் ஸ்விட்ச், பிக் பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள் சிலவற்றில் நடனம் ஆடியுள்ளார். கடந்த 2003ல் பாலிவுட் படமான தில் க ரிஷ்டா வில் சாஜன் சாஜன் என்ற பாடலில் ஆடி நடித்து புகழ்பெற்றார். பின்னர் கலர்ஸில் சல்மான் கான் நடத்திய ‘பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோ’மூலம் புகழ்பெற்றார். 2010ல் யுடிவி பிந்தாஸில் பெரிய ரியாலிடி ஷோவில் நடித்தார். பிகார் மாநிலம் முங்கரில் பிறந்த பூஜா, பி4யு டிவியில் ஜப் வி டாக் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். நட்பு, தாம்பத்யம் இவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக அமைந்த நிகழ்ச்சி இது. அண்மையில் இவர் காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றிற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் செய்ன்றார். அங்கே உள்ளா ‘ராடிசன் ப்ளூ’ என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டுள்ளார். போட்டோ ஷூட் முடிந்த பின்னர் அவரை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் சென்றுவிட்ட நிலையில் ஹோட்டலில் தான் குடித்த குளிர் பானத்தில் யாரோ மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளதாகவும், அதைக் குடித்துவிட்டு அறைக்குச் சென்ற தான் மயங்கிவிட்டதாகவும் பூஜா தெரிவித்துள்ளார். காலையில் கண் விழித்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது போன்று உணர்ந்ததாகவும், தனது நகை பணம் பொருட்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து, போலீஸார் ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை யாரையும் அவர்கள் கைது செய்யவில்லை. இது குறித்து உத்ய்புர் ஐஜி ஆனந்த் ஸ்ரீவத்ஸவா கூறியபோது, அவர் மன அதிர்ச்சிக்குள்ளான நிலையில் பேசுகிறார். தெளிவான பேச்சு இல்லை. இருந்தாலும் ஒரு போலீஸ் அதிகாரியை நியமித்து, அவருடன் அனைத்து விவரங்களையும் கேட்டு விசாரிக்கவுள்ளோம் என்று கூறினார். இந்தச் சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, இதன்பின்னணியில் சோனாக்ஷி சின்ஹாவும், அவரது அம்மாவும் உள்ளனர் என்று பூஜா புகார் கூறியுள்ளார். sonakshisinha-poojamishra  

 

சாய்னா நேவால் மீண்டும் முதல் இடம்: தக்க வைப்பது கடினம் என்கிறார்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியன் ஓபன் கிராண்ட்ஃபிரி பேட்மிண்டன் பட்டத்தை வென்றார். இதை அடுத்து ஒற்றையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார். ஆனால் மறுவாரமே மலேசிய ஓபன் போட்டியில் வெளியேறியதால், 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நேற்று புதிதாக வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சாய்னா நேவால் 80,191 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியை முதலிடத்தில் இருந்த சூய்ருய் (72,964 புள்ளி) புறக்கணித்ததால் இரண்டு இடங்கள் இழந்து 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் சாய்னா முதலிடத்தை எட்டினார். இதுகுறித்து சாய்னா நேவால் கூறியபோது…. முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். ஆனால் பேட்மிண்டன் தரவரிசையில் முதல் இடத்தை எட்டிய முதல் இந்தியப் பெண் நான்தான் என்ற வகையில் அதற்கே மக்கள் மதிப்பளிக்க வேண்டும். போட்டிகளில் எல்லாம் சரியாக அமைந்து, பயிற்சியும் நல்ல விதமாக இருந்தால், நீண்ட காலம் முதலிடத்தில் என்னால் தொடர முடியும். ஆனால் இது லேசான விஷயமில்லை. இருப்பினும், ஒவ்வொரு நாளும் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு, அதற்கு ஏற்ப உழைப்பேன். என் நாட்டுக்காக மேலும் பல பட்டங்களை வெல்ல முயற்சி செய்வேன். எனது முதலிட அந்தஸ்துக்கு நிறைய வீராங்கனைகள் அச்சுறுத்தலாக உள்ளனர். சீன வீராங்கனை லீ சூய்ருய் பிரதான போட்டியாளர். மற்றவர்களை காட்டிலும் இவர் குறைவான போட்டிகளிலேயே விளையாடுகிறார். எனவே அவர் மீண்டும் முதலிடத்தை தட்டிப் பறிக்க வாய்ப்புள்ளது… என்றார்.

இணைய சமவாய்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நவீன் பட் நாயக்

புவனேஸ்வரம்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இணைய சமவாய்ப்புக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்துள்ளார். இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சி, வளர்ந்து வரும் ஐ.டி. துறைக்கு பெரும் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். நவீன் பட் நாயக் டிராய் தலைவர் ராகுல் குல்லாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சியானது, வளர்ந்து வரும் ஐ.டி. துறைக்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும். அது ஏழைகளையும் பாதிக்கும். இப்போது பணக்காரர்கள் மட்டுமின்றி இணைய தொழில்நுட்ப சேவையை ஏழைகளும் அதிகம் பயன் படுத்துகின்றனர். ஏழைகள் பயன்படுத்தும் சேவைகள் பல இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. எனவே இணையத்தில் சமவாய்ப்பு நிலைநாட்டப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட செயலியை மட்டுமே ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனம் விரும்புகின்ற ஒரே காரணத்துக்காக அதை இணைய வாடிக்கையாளர் மீது திணிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். செல்போன்களில் இயங்கும் ஆப்ஸ்களில் சிலவற்றுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க டிராய் முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் செல்போன்கள் வழியாகவே மிக அதிக அளவில் இணையம் பயன்படுத்தப்படும் என்பதால், செல்போன்கள் வழியாக வழங்கப்படும் சேவைகளில் இந்த விதிமுறைகளைத் திணிக்க டிராய் முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை முன்வைத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் டிராய் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தென்காசி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

தென்காசி அருகே பாம்பு கடித்து பலியான சிறுவன்
தென்காசி அருகே பாம்பு கடித்து பலியான சிறுவன்
தென்காசி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

தென்காசி:தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி பாட்டப்பத்து பகுதியை சார்ந்தவர் கூலித்தொழிலாளி இசக்கிராஜ் இவரது வீட்டில் நள்ளிரவில் விஷத்தன்மை வாய்ந்து பாம்பு ஓன்று புகுந்து 2வயதுமகன் மதீஸ்,கிருஷ்ணவேணி ,இசக்கியம்மாள்,ஆகியோரை கடித்துள்ளது.
உடனடியாக இவர்கள் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானான்.மற்ற இருவரையும் நெல்லை தலைமை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பாம்பு கடித்து சிறுவன் பலி

தென்காசி : நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிராஜ்(25) இவரது மனைவி இசக்கியம்மாள் (22) மகன்மாரீஸ் (2) இசக்கிராஜ் கேரளாவில் பணி புரிந்து வருகிறார்  சம்பவத்தன்று இரவு தன் கணவர் ஊரில் இல்லாத காரணத்தினால்   இசக்கியம்மாள் த்ன் குழந்தை மாரீஸ் மற்றும் உறவினரின் மகள் கிருஷ்ணவேணியுடன் அதே தெருவில் இருக்கும் தான் தந்தை வீட்டில் இரவில் தங்கியுள்ளார் அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 3 பேரை பாம்பு கடித்தது இதில் மாரீஸ் என்ற 2வயது சிறுவன் பலியானான். அவனது தாய் இசக்கியம்மாள், உறவினர் கிருஷ்ணவேணி (இரண்டாமாண்டு பயிலும் கல்லூரி மாணவி)ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து குற்றாலம் சரக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்

செங்கோட்டை,தென்காசி,குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை

00154_mpeg2video   நெல்லைமாவட்டத்தில் சிலதினங்களாக காலையில் சுட்டெரிக்கும் வெயிலும்,மாலைப்பொழுதில் மழையும் தீடீர் ..தீடீர் என பெய்துவருவதால் காலையில் சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை சமப்படுத்தும் வண்ணம் பெய்யும் மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாலை 4.30மணிமுதல் தென்காசி,குற்றாலம்,செங்கோட்டை,புளியரை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பலத்த மழை இரவு 6.10 வரை நீடித்தது. பெய்தது. இம்மழையின் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா வாகனங்கள் பலத்த மழையின் காரணமாக மெதுவாக ஊர்ந்து சென்றன.சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.