புது தில்லி: குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு வெள்ளப் பெருக்கைச் சந்தித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடியிடம் வழங்கினார். பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்க வழங்கப்பட்ட காசோலையைப் பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் வழங்கிய ரூ.5 லட்சம்: மோடியிடம் ஒப்படைப்பு
சண்டியர்; கொம்பன்… அட சினிமாவ எதிர்க்கத்தான் கிருஷ்ணசாமி அரசியலுக்கு வந்தாரா? – கேட்பது சீமான் !
காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். நெல்லை மாநகராட்சி பழைய பேட்டை நெல்லையாபுரம் தெருவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் பயன்பெறும் வகையில் வீட்டுக் குடிநீர் இணைப்பு, பொது குடிநீர் குழாய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பழையபேட்டையில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக இப்பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லையாம். இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காலிக் குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
அடிதடியை எடிட் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்: பிரசாந்த் பூஷண்
புது தில்லி: ஆம் ஆத்மி செயற்குழுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசிய வீடியோ பதிவுகள் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷண். ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கேஜரிவால் பேசிய வீடியோ பதிவுகள் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாகவும், பல காட்சிகள் அவற்றில் காணாமல் போயுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்… அன்று செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற போது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டது தொடர்பான காட்சிகள் வீடியோவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிலம் எடுத்தல் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கக் கூடாது: ராமதாஸ்
இளம் பெண் குழந்தையோடு மாயம்
வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் இளம்பெண் குழந்தையோடு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் தவுடன் என்ற ரஜினி. இவருக்கும் அருகிலுள்ள ஊரைச் சார்ந்த முருகேஷ்வரிக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தவுடன் என்ற ரஜினி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி முருகேஷ்வரியையும் மகள் புவனேஸ்வரியும் காணாமல் தவித்தார். ஒரு வேளை உறவினர்கள் வீட்டுக்குச் சென்று இருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரித்துள்ளார். ஆனால் அங்கேயும் அவரைக் காணவில்லை. பாலா இடங்களில் தேடியும் அவர், மற்றும் குழந்தையும் காணவில்லை. உடனடியாக அவர் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தாயையும், மகளையும் யாரும் கடத்திச் சென்றார்களா இல்லை வீட்டில் கணவன் மனைவி சண்டை காரணமாக எங்கேயும் சென்றாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: இரா.முத்தரசன் கோரிக்கை
திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தர வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அதில்,
2015 உலகக் கோப்பையில் சாதித்த 5 பேட்ஸ்மென்கள்
2015 உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தத் தொடரில் சாதனை படைத்த டாப் 5 பேட்ஸ்மென்கள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 22,293 ரன் எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 38 செஞ்சுரிகள், அவற்றில் 2 இரட்டை சதங்கள், (அதுவும் முதல் முதலாக உலகக் கோப்பை இரட்டை சதம்), நூறு பந்துக்கு 89 ரன் என்ற ரன் ரேட் என இந்த உலகக் கோப்பை சாதனைகள் நீள்கின்றன. இவற்றில் பேட்டிங்கில் அசத்திய 5 பேர், மார்டின் குப்டில், குமார் சங்ககரா, ஏபி டி விலியர்ஸ், பிரெண்டன் டெய்லர், ஷிகர் தவான்.. ஆகியோர். குப்டில்: 547 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். 163 பந்தில் 237 எடுத்து உலக கோப்பை கிரிக்கெட் ரன்னின் உச்ச பட்ச சாதனை படைத்தார். குமார் சங்ககரா: 541 ரன் குவித்து இரண்டாமிடம். இதில் சராசரி 108.20 என்பது குறிப்பிடத்தக்கது. ஏபி டிவில்லியர்ஸ்: 482 ரன் குவித்தார். ஷிகர் தவான்: 449 ரன் எடுத்துள்ளார். பிரண்டன் டெய்லர்: 433 ரன் குவித்துள்ளார்.
கொம்பன் தடை கோரி நெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 31 பேர் கைது
திருநெல்வேலி: கொம்பன் படத்துக்கு தடை கோரி, திருநெல்வேலியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 31 பேரை போலீஸார் கைது செய்தனர். கொம்பன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச்செயலர் நடராஜன் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 31 பேரை கைதுசெய்தனர்.

