Home Blog Page 6193

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீயின் இறுதிச் சடங்கில் மோடி பங்கேற்கிறார்

  சிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமானவரும் அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ (91)வின் இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். திங்கள்கிழமை காலமான லீயின் இறுதிச் சடங்கு மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது.

“தர வரிசை அறியா பேதமை”

“தர வரிசை அறியா பேதமை” கி.வா.ஜ., ஒரு கட்டுரையில்: தங்கம், தன்னைப் படைத்த பிரம்மதேவனிடம் சென்று, குலுங்கிக் குலுங்கி அழுததாம். அதைப் பார்த்த பிரம்மா, ‘தங்கமே… ஏன் இப்படி அழுகிறாய்…’ என்று கேட்டாராம். உடனே தங்கம் சொன்னதாம்… ‘என்னையும் படைத்து, அந்த தட்டானையும் படைத்தாயே… அதனால் தான் அழுகிறேன்…’ என்றதாம். ‘ஏன் உனக்கு அவன் மேல் கோபம்… உன்னை நெருப்பிலிட்டு உருக்குகிறானே… அதனால் வருத்தமா?’ என்று கேட்டார். ‘இல்லை… அப்படிச் செய்வதனால் தான் நான் மாசு நீங்கி ஒளிர்கிறேன்…’ என்றது தங்கம். ‘அப்படியானால், அவன் பட்டறையில் வைத்து தகடாகத் தட்டுகிறானே… அதனால் உனக்கு வேதனை உண்டாகிறதா?’ என்று கேட்டார். ‘இல்ல இல்ல… தகடாக மாறினாலும் இறைவனுக்கே கவசமாகி விடுகிறனே…’ என்றது தங்கம். ‘பின்னே, அவன் பெரிய துளையிலிருந்து சிறிய துளையிட்டு, உன்னைக் கம்பியாக இழுக்கிறானே அப்போது உன் உடல் நலிந்து, நைந்து துன்புறுகிறாயோ…’ என்றார். ‘இல்ல இல்ல… நல்லவர்களை எல்லாம் தங்கக் கம்பி என்று என்னைத் தானே உவமானமாகச் சொல்கின்றனர்; அதனால, அதற்காக வருத்தமில்லை…’ என்றது தங்கம். ‘இதற்கெல்லாம் வருத்தம் இல்லை என்றால், நீ புலம்புவதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார் பிரம்மா. ‘அந்தப் படுபாவி என்னை எடை போடும் போது, தராசில் என்னை ஒரு தட்டில் வைத்து, எனக்குச் சமமாக, மற்றொரு தட்டில், குன்றிமணியை வைத்து நிறுக்கிறானே… அந்த அவமானத்தை என்னால் தாங்க முடியவில்லை…’ என்று புலம்பியது தங்கம். — தர வரிசை அறியா பேதமையை, இப்படி அழகாகக் கற்பனை செய்து, வடமொழி கவிஞர் ஒருவர் பாடியிருக்கிறார்.download (1)

தமிழ் வருடப் பிறப்பு (ஏப்.14) அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ் வருடப் பிறப்பான சித்திரை 1 (ஏப்ரல் 14) அன்று விடுமுறை தினம் ஆகிறது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14, 2015 (செவ்வாய்கிழமை) அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர்கள் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இதை அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த விடுமுறை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி மனைவியின் காலை தொட்டுக் கும்பிட்டு வெளியில் செல்லும் அமைச்சர்

delhi-sandeep-rituபுது தில்லி: ஒவ்வொரு நாளும் தன் மனைவியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு வெளியில் செல்கிறார் மாநில அமைச்சர் ஒருவர். அவர், தில்லி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் சந்தீப் குமார். ஹரியானா மாநிலம் சங்கதால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் தில்லியில் குடியேறியவர். ஹரியானாவில்தான் 2011ஆம் வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, நாட்டிலேயே மிகக் குறைந்த ஆண் பெண் விகிதாச்சாரம் உள்ளது கண்டறியப்பட்டது. இப்படிப்பட்ட இடத்தில் இருந்து வந்தவர் சந்தீப். 34 வயதாகும் சந்தீப், கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி, மகளிர் தினத்தன்று, தில்லி சட்டமன்றக் கூட்டத்தில் வைத்து, தனது மனைவிக்கு மிகப் பெரும் நன்றியைத் தெரிவித்தார். எவ்வளவோ தியாகங்களைச் செய்து அவர் தன்னுடன் வாழ்ந்து வருவதாகவும், ஒவ்வொரு நாள் காலையிலும் அவரது காலைத் தொட்டு கும்பிட்டு வருவதாகவும் அவர் கூறினார். இவ்வாறு சந்தீப் கூறியதும் அங்கே பலத்த கைத்தட்டல்கள் எழுந்தன. கடந்த 2011 ஏப்.5ம் தேதி அவர் ரிதுவை திருமணம் செய்தாராம். முதலில் தில்லி தயாள்சிங் கல்லூரியில் படித்த போதுதான் சந்தித்தோம். அது 2003 ஜூலை 16. அப்போது நான் பிஏ முன்றாம் ஆண்டு படித்தேன். அப்போதுதான் ரிது கல்லுரியில் சேர்ந்தார். அப்போது நான் அவளை பாட்டுப்பாட சொல்லி ராக்கிங் செய்தேன். அவள் பாடினாள். அதன் பிறகு எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு 8 ஆண்டுகள் காதலித்தோம். பின்னர் 2011 ஏப்ரல் 5ம் தேதி திருமணம் செய்து கொண்டோம் என்று கூறுகிறார் சந்தீப். நான் மனைவி காலில் விழுவதை என் நண்பர்கள் ஜோக் அடித்து கிண்டல் செய்வார்கள் என்று கூறும் சந்தீப், தன் மனவியின் காலில் விழும்போது, அவர் புன்னகைப்பார் என்றும், வெற்றி பெறுங்கள், நீண்ட நெடிய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தொடரட்டும் என்று வாழ்த்துவார் என்றும் கூறுகிறார். ரிது இது குறித்துக் கூறுகையில், ‘ அவர் என் காலைத் தொட்டதும் நான் புன்சிரிப்புடன் வெற்றி பெற வாழ்த்துக் கூறுவேன்’ என்றார். 29 வயது ரிது. இருவரும் தங்களுக்குள் எந்த வித வேற்றுமையும் வந்ததாகக் கருதவில்லை என்று கூறுகின்றனர்.

காஷ்மீர்: ஒரு மாணவர்கூட இல்லாத பள்ளிகள் 124

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு மாணவர்கூட இல்லாமல் இயங்கும் 124 பள்ளிகள் உள்ளதாக அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் மாநில சட்டப் பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஜம்முவில் உள்ள 50 பள்ளிகளிலும், காஷ்மீரில் உள்ள 74 பள்ளிகளிலும் ஒரு மாணவர்கள்கூட இல்லை எனத் தெரிவித்தார். அப்போது, நகரங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனுடன் ஒப்பிடும்போது கிராமப்புற பள்ளி ஆசிரியர்களின் தரம் குறைவாக உள்ளது என்று ஓர் உறுப்பினர் குறை கூறினார்.

பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இறுதிப் போட்டிக்கு தகுதி

newzealand-southafricaஉலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில், நியூசிலாந்து அணி வெற்றிக்குத் தேவையான ரன்னைப் பெற்றது. நெருக்கடியில் சிக்ஸர் அடித்து எலியாட் அணியை வெற்றி பெறச் செய்தார். முன்னதாக தென்னாப்பிரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன் பெற்றது. மழை பெய்ததால், ஆட்டம் 43 ஓவராகக் குறைக்கப்பட்டு, நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 43 ஓவருக்கு 298 ரன் என்று நிர்ணயிக்கப் பட்டது. இதை அடுத்து நியூசிலாந்து அணி களம் இறங்கியது. துவக்கம் முதலே நியூசிலாந்து வீரர்கள் அதிரடி காட்டினர். மெக்கலம் 26 பந்தில் 59 ரன் அடித்தார். 4 சிக்ஸர், 8 பவுண்டரி என கலக்கினார். குப்டில் 38 பந்தில் 34 ரன் எடுத்தார். வில்லியம்சன் 6 ரன் எடுத்தார். டெய்லர் 30 ரன் எடுத்தார். ஆண்டர்சன் 57 பந்தில் 58 ரன் எடுத்தார். எலியட் அதிரடி காட்டி, 73 பந்தில் 84 ரன் எடுத்தார். அவர் 3 சிக்ஸ், 7 பவுண்டரிகளூடன் இந்த ரன்னை எடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை எலியட் பெற்றார்.

நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான கூட்டம் பிப்ரவரி 17-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை நடந்தது. நாளை மீண்டும் சட்ட சபை கூடுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். முதலில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அதை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். இதில் அந்த துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படும். பட்ஜெட் விவாதம் நிறைவு பெற்றதும் அதற்கு முதல் – அமைச்சர் பன்னீர் செல்வம் பதில் அளிப்பார். துறை ரீதியாக விவாதத்துக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்த கூட்டத்தொடர் ஒரு மாதம் நடைபெறலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

“மாவடு ஊறுகாய்”

11071467_817047378349283_6674827151919026494_n “மாவடு ஊறுகாய்” எஸ்.மீனாட்சி அம்மாளின் பக்குவம் (பழைய கால புத்தகத்தில் இருந்து) தட்டச்சு-வரகூரான் நாராயணன். தேவையான சாமான்கள், 1) (மலை வடுவானால்) 48 கப்புகள் (12 லிட்டர்கள்) ,மாவடு 2)உப்பு- 8 கப்புகள் (2 லிட்டர்) 3)மிளகாய் வற்றல் அல்லது 2 கப்புகள் காரப்பொடி. 4)கடுகு 3 டீஸ்பூன்கள். 5)வரளிமஞ்சள்,விளக்கெண்ணெய் 3 டீஸ்பூன்கள். (தோப்பு வடுவானால்) 64 கப்புகள் (16 லிட்டர்) மாவடு உப்பு 8 கப்புகள் (2 லிட்டர்) காரப்பொடி 2 கப்புகள். கடுகு 4 டீஸ்பூன்கள் வரளி மஞ்சள் 4 விளக்கெண்ணெய் 4 டீஸ்பூன்கள் (கடுகையும்,மஞ்சளையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மாவடுவை ஜலத்தில் கொட்டி அலசி,அலம்பி, மூங்கில் கூடையில் வடியவைத்து, தாம்பாளத்தில் போட்டுக்கொண்டு விளக்கெண்ணெய்,கடுகு-மஞ்சள் அரைத்த விழுது இவைகளையும் போட்டுக் கலந்து கொள்ளவும். ஊறுகாய் போடும் ஜாடியை அல்லது பாத்திரத்தை நன்றாக துடைத்துக் கொண்டு, முதலில் ஒரு கை உப்பை அடியில் போடவும். அதன் மேல் நான்கு கை மாவடுவைப் போட்டு, ஒரு கை உப்பையும்,கொஞ்சம் காரப்பொடியையும் போடவும். அதே மாதிரி மாவடுவும்,உப்பும்,காரப்பொடியுமாகக் கடைசிவரை நிறவிப் போட்டு மூடி வைத்து, மறுநாள் போக மறுநாள் கலந்து எடுக்கவும்.உப்பு காரப்பொடி மிகுந்து போனால் மேலாகப் போட்டுவிடவும். (மிளகாயையும் இடித்துக்கொண்டு,கடுகு மஞ்சள் இவற்றை அரைத்து விளக்கெண்ணையையும் விட்டுப் பிசறிக் கலந்து, வடுவையும்,இடித்து வைத்துள்ள உப்பு-மிளகாயையும் போடலாம்) 8 கப்புகள் உப்புக்கு, 8 கப்புகள் ஜலத்தை விட்டு அடுப்பில் வைத்து உப்பு நன்றாகக் கரைந்து பாதி ஜலம் வற்றும் வரை நன்றாகக் காய்ச்சி, இறக்கி ஆறவைத்துக் கொண்டு இரண்டு கரண்டிகள் (1/3 கப்) உப்பு ஜலமும்,காரப்பொடியும்,வடுவுமாக முன் சொன்னபடி போட்டால், எத்தனை நாட்களானாலும் வடு அழுகாமல் நிறமாக இருக்கும். குறிப்பு; மாவடுவின் காம்புகளை முழுவதும் எடுக்காமல், அரைவிரல் நீளக் காம்புடன் போட வேண்டும். பொதுவாக எல்லா ஊறுகாய்களுக்கும், மிளகாய் வற்றலை மிஷினில் அரைக்காமல், உரலில் அல்லது கிரைண்டரில் இடித்துப் போட்டால், ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ரயில்வே இ-டிக்கெட் முன்பதிவு: புதிய கட்டுப்பாடு அமல்

புது தில்லி: ஏஜெண்டுகளின் முறைகேடுகளைத் தடுக்க இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது இந்தியன் ரயில்வே. நெரிசல் நேரத்தில், ஏஜெண்டுகள் ஒரே லாக்-இன் ஐ பயன்படுத்தி, இ-டிக்கெட்டுகளை மொத்தமாக பதிவு செய்து, முடக்கி விடுவதைத் தடுப்பதற்காக, இந்த்ப புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இ-டிக்கெட் முன்பதிவில் ஏஜெண்டுகள் செய்யும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, இந்தப் புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை, ஒரு யூசர் லாக்இன்-ஐப் பயன்படுத்தி, ஒரு தடவை மட்டுமே இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அடுத்த இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றால், தானாகவே அது லாக்-அவுட் ஆகிவிடும். இது, ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜெண்டுகள் உள்பட அனைவருக்கும் பொருந்தும். ஆனாலும், ஒரே நேரத்தில் புறப்படுதல், திரும்பி வருதலுக்கு முன்பதிவு செய்ய இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. பாதுகாப்பு துறையினரின் முன்பதிவுக்கும் இது பொருந்தாது.

என்னைக் குறிவைத்து அச்சுறுத்துகிறார்கள்: உத்தமவில்லன் கமல்ஹாசன்

kamalhasan-uthamavillainசென்னை: எனகு அச்சுறுத்தல் உள்ளது. என்னைக் குறிவைத்து அச்சுறுத்துகிறார்கள் என்றார் நடிகர் கமல்ஹாசன். இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். தனது உத்தமவில்லன் படம் குறித்து விளக்குவதற்காக இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது கமல்ஹாசன் கூறியவை… அச்சுறுத்தல் எந்தத் துறையில்தான் இல்லை. எனக்கும் கூட அச்சுறுத்தல் உள்ளது. அச்சம் இருக்கிறது என்பதை விட நம்மை அவர்களே வழிநடத்துகிறார்கள். ஏன் பத்திரிகையாளர்களான உங்களுக்கும் கூட பத்திரிகையில் என்ன எழுத வேண்டும் என்று உங்களுக்கு சொல்வார்கள். சமூக வலைதளங்கள் பரிணாம வளர்ச்சியின் சான்று. அதை யாரும் தடுத்து விட முடியாது. என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள் என்று கூறினார் கமல்ஹாஸன். நான் ஒவ்வொரு படத்திலும் இடையூறுகளைச் சந்திக்கிறேன். என் முகவரியை கேட்டால் இடையூறு என்று சொல்லலாம். வீட்டு நம்பருடன் இடையூறு தெரு என்றுகூட போடலாம். அந்த அளவுக்கு எதிர்ப்புகளைச் சந்திக்கிறேன். ‘தசாவதாரம்’ படம் எடுத்தபோது ஒருவர் என்னுடைய கதை என்று வழக்குப் போட்டார். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம் எடுத்த போது அந்த பெயரை வைக்கக்கூடாது என்றனர். மும்பைக்கு எப்படி தமிழ் வார்த்தை கண்டுபிடிப்பது? ‘சண்டியர்’ படத்தை எடுத்தபோது எதிர்த்தனர். அதன் பிறகு ‘சண்டியர்’ என்ற பெயரிலேயே ஒரு படமும் தயாராகி வெளிவந்து விட்டது. ‘பாபநாசம்’ படத்தை எதிர்த்தும் வழக்கு போட்டனர். நல்ல வண்டி என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். மருதநாயகம் மருதநாயகம் படத்தை எடுக்க என் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். இது ஒரு உலகப் படம் என்று அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு ஒரு வியாபாரம். அந்த வியாபாரம் முடிந்தபிறகு அதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பிக் கேட்பது சரியல்ல. ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்துவிட்டு, எனக்கு படம் பிடிக்கவில்லை; அதனால் பாதிப் பணத்தை எனக்குத் திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானதும் அல்ல என்று கூறினார் கமல்ஹாசன். அண்மையில் லிங்கா படத்தில் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரஜினி காந்திடம் பணத்தை திருப்பிக் கேட்ட விவகாரத்தில் கமல் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.