“பெரியவாளின் தியாகம்” சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்
“பெரியவாளின் தியாகம்.”
“பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்”
“பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்” சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்
டி.வி. அலுவலக முற்றுகை முயற்சி: நிர்வாகிகள் கைதுக்கு இந்து முன்னணி கண்டனம்
சென்னை: சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, சர்வதேச மகளிர் தினமான மார்ச். 8 அன்று, “தாலி- பெண்ணுக்கு பெருமையா, சிறுமையா?’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிடச் சென்றபோது, கைகலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்… புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு(இன்று), `பெண்களுக்குத் தாலி தேவையா?’ என்ற விவாதத்தை நடத்துவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இந்த விளம்பரத்தில் பெண்களுக்கு தாலி என்பது நாய்க்கு சங்கலி கட்டுவது போல என ஒரு பெண் பேசுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், இதனைத் தடுத்து நிறுத்த இந்து முன்னணிக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, புதிய தலைமுறைக்கும் தங்களது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நம்முடைய ஆட்சேபணையை தெரிவித்தபோது, நிகழ்ச்சியை ரத்து செய்யமுடியாது எனத் தெரிவித்துவிட்டனர். அதனை அடுத்து, எல்லா மாவட்டங்கள், நகரங்களிலும் காவல்துறையிடம் புதிய தொலைக்காட்சி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டன. காவல்துறை அதிகாரிகள், இதற்கு பெரும் ஆட்சேபம் எழுந்துள்ளது என்பதை எடுத்துக்கூறியும், அதனை அலட்சியப்படுத்தி தொலைக்காட்சி அதிகாரிகள் பேசியுள்ளனர். இன்று காலை 10 மணி அளவில் மாநிலப் பொதுச் செயலாளர் சி. பரமேஸ்வரன் தலைமையில் சென்னை மாநகர இந்து முன்னணி சார்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர். அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் முன்பாகவே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி, அனைவரையும் கைது செய்ய முற்பட்டனர். அங்கு ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் தடியடி நடத்தினர். அந்த தள்ளுமுள்ளுவை படம்பிடிக்க வந்த பத்திரிகையாளர் காமிரா கீழே விழுந்தது. இதனை திட்டமிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது என்பது தற்போது தெரிய வந்ததுள்ளது. அதன் பரபரப்பு செய்தியில் சமூக விரோதிகள் தாக்குதல், பத்திரிகையாளர் மீது தாக்குதல், காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தனர் என செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடந்தது ஜனநாயக வழியிலான எதிர்ப்பு, இதனை திசைத்திருப்பும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், புதிய தலைமுறை தொலைக்காட்சி, மக்கள் விரோதமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இனியும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது விவகாரத்தில், மீடியாவின் கயமைக்கு பயப்படும் காவல்துறையையும் அரசாங்கத்தையும் கண்டிக்கிறோம்.. புதிய தலைமுறை தொலைக்காட்சி சதி செய்து ஒரு நாடகம் நடத்தி இந்து முன்னணி பொறுப்பாளர்களை கைது செய்ய வைத்துள்ளது. இதனால் அதன் கயமைத்தனம் உலகத்திற்கு தெரிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்து முன்னணி நாளை இதற்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், போஸ்டர்கள் மூலம் மக்களிடம் நியாயத்தை எடுத்துச் சொல்வார்கள். மீடியாவின் கயமைத்தனத்திற்குத் துணைபோகும் தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அழிவிற்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் வழி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு முன்பே ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்ய தடுப்புப் போட்டு நின்றனர். இதனிடையே வேண்டுமென்றே அந்த இடத்திற்கு வந்து போலீஸ் நடத்திய தடியடியில் புகுந்த ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. இது காவல்துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெரியும். அப்படி இருந்தும் செந்தில்குமரன் கொடுத்த புகாரை அடுத்து
- மாநிலப் பொதுச் செயலாளர் சி. பரமேஸ்வரன்,
- மனோகரன் மாநில நிர்வாகக்குழு உறுப்பனர் 3.இளங்கோ சென்னைமாவட்ட பொதுச்செயலாளர் செயலாளர் 4.முகுந்தன் 5.குமரேசன் 6.ஹரிபாபு 7.ராஜா
- ஜெயகுமார் 9.அய்யப்பன் 10.சீனிவாசன்.
ஆகிய பத்து பேர் மீது 147, 341, 294(),323, 506(2) பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அதேசமயம் இந்து முன்னணியின் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு ஊர்களில் கொடுக்கப்பட்ட வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தது காவல்துறை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மக்களின் தங்கள் ஆட்சேபணையை தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தற்கு கேவலமாகவும், துச்சமாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் பேசியுள்ளனர். இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க தவறினால், இந்தப் பிரச்னையை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. காவல்துறையும், தமிழக அரசும் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டுள்ளதற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரிவினைவாதி விடுதலை விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்: காங்கிரஸ்
புது தில்லி: காஷ்மீரில் பிரிவினைவாதி மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. காஷ்மீர் சிறைகளில் இருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சயீத் உத்தரவிட்டார். இதையடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த மசாரத் ஆலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர், கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு வயது 44. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்கும் போராட்டத்தை மக்களிடம் தூண்டி விட்டதாக மசாரத் ஆலமை போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் அவர் தலைமறைவானார். அவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், 2010 அக்டோபரில் அவர் கைது செய்யப்பட்டு பாரமுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். முதல்வர் முப்தி முகமது சயீத் உத்தரவுப் படி, நேற்று அங்கிருந்து விடுதலை செய்யப்பட்ட மசாரத் ஆலம், ஷாகீத் குனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, காஷ்மீர் முதல்வரின் நடவடிக்கைக்கு ஆளும் கூட்டணிக் கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசாரத் ஆலத்தை விடுதலை செய்த செயலுக்கு தனது கண்டனத்தை அது தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநில பாஜக இளைஞரணித் தலைவரும், நவ்ஷேரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவீந்தர் ரெய்னா, “மசாரத் ஆலம் அரசியல் கைதி அல்ல, அவர் ஒரு பயங்கரவாதி என்பதால் அவரது விடுதலை தேசத்துக்கு அச்சுறுத்தலாக அமையும், அவரை விடுவித்ததை பாஜக., ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்று தேசவிரோதிகளும், பாகிஸ்தானுக்கு ஆதரவான தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டால், கூட்டணி அரசை நடத்திச் செல்வது சிரமம்தான் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிந்தர் சர்மா கூறுகையில், ”மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பிரதம அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் காஷ்மீர் மாநில துணை முதலமைச்சர் நிர்மல் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்..”
‘தர்ஷன்’. இதழிலிருந்து.
கும்பகோணம் கடப்பா!
“ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் விரும்பி சாப்பிட்ட கும்பகோணம் கடப்பாவின் மற்றொரு ரெசிபி.” “கும்பகோணம் கடப்பா [5 பேருக்கு]” எதேச்சையாக 4-7-99 கதிர் ஒரு பக்கம் எனக்கு கிடைத்தது. கட்டுரையாளர் பேர் இல்லை ஆனால் தமிழ்நாட்டின் பெரிய சமையல்காரர். ஒரு தடவை குருஜி [ஹரிதாஸ்கிரி] அவரது குருநாதர் ஞானானந்த ஸ்வாமிகளின் ஆராதனையை நடத்த நினைத்தார்.அவரது கட்டளையை ஏற்று ஆராதனைக்கு தர்மப்ரகாஷ் முதலாளி, இடம் மற்றும் சகல வசதிகளையும் செய்து தந்தார். சுமார் 3000 பேர் சாப்பிட்ட ஆராதனைக்கு நான்தான் சமையல் ரவா சொஜ்ஜியும்,வெண் பொங்கலும் செய்தேன். இந்த ஐட்டங்களுடனே வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ரவாதோசையும் அதற்கு தொட்டுக் கொள்ள கும்பகோணம் கடப்பாவும் செய்தேன். இந்தக் கடப்பா குருஜிக்கு மிகவும் பிடித்தமானது. இது இட்லி,தோசை,ரவா தோசை,ஊத்தப்பம்,பூரி,வடை போன்றவற்றுக்குப் பக்க மேளமாக அமையும். செய்முறை+தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு-300 கிராம் பெரிய வெங்காயம்-அரை கிலோ தக்காளி-100 கிராம் பூண்டு-பெரியதாக-1 தேங்காய்-ஒரு மூடி பச்சைமிளகாய்-7 இஞ்சி-சிறிய துண்டு உப்பு-தேவையான அளவு மஞ்சள் பொடி-அரை டீஸ்பூன் எலுமிச்சம்பழம்-1 முந்திரி-50 கிராம் எண்ணெய்-150 கிராம் பயத்தம் பருப்பு-50 கிராம். கசகசா,சோம்பு-தலா 1 டீஸ்பூன் பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை நன்றாக வேகவைத்துப் பொடியாக உடைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு,சோம்பு,கசகசா, பச்சை மிளகாய்,இஞ்சி,தேங்காய்த் துருவல் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் வைத்து அடுப்பில் ஏற்றி காய்ந்தவுடன் வெட்டிய வெங்காயத்தை அதில் நன்றாக வதக்கிக்.கொண்டு மிக்ஸியில் அரைத்த மசாலாக் கலவையை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி சேர்த்து நன்றாக வெந்தவுடன் வேக வைத்து உடைத்த உருளைக் கிழங்கையும் வெந்த பயத்தம் பருப்பையும் அதில் சேர்த்துக் கூட்டு மாதிரி பதம் வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சம் பழம் பிழியவும். இதில் முந்திரியை வறுத்துப் போட்டுக் கலந்து சாப்பிடவும்
ஸ்பெஷல் அரிசி உப்புமா (5 பேருக்கு)
“13 வயது பையனின் அனுபவம்”
“13 வயது பையனின் அனுபவம்” சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
“இலகுவாக-கனமே இல்லாமல் அத்வைத தத்துவம்.”
“இலகுவாக-கனமே இல்லாமல்
“இன்னிக்கு- பாலா,பாதுகையா?
சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

