Home Blog Page 6279

நிலம் கையகப் படுத்தும் சட்ட விவகாரத்தில் விபரீதமான விளைவுகளை மோடி சந்திக்க நேரிடும்: கருணாநிதி எச்சரிக்கை

karunanidhi நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்ட விவகாரத்தில், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கத் தவறினால், விபரீதமான விளைவுகளை மோடி அரசு எதிர்கொள்ள நேரிடும் என திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கையில்… கேள்வி:- எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, பா.ஜ.க. அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது பற்றி? பதில்:- இப்போது கொண்டு வரப்படும் அவசரசட்டத்தில், குறிப்பிட்ட ஐந்து அமைப்புகளுக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் போது, அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதைப் பார்க்கத் தேவையில்லை என்று உள்ளது. இந்த முடிவு பாஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டுத்தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவாகவும் செயல்படுகிறது என்பதை நிச்சயமாக உறுதி செய்து விடும். எந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தத் திட்டம் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படாவிட்டால், அந்த நிலத்தை விவசாயிகளுக்கே திரும்பத் தந்து விட வேண்டும் என்பது முந்தைய சட்டத்தில் உள்ளது. அவசரசட்டத்தில் இந்தப்பிரிவும் நீக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்தச்செயலுக்கு சமூக ஆர்வலர் அன்னாஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளே கூட இந்த முடிவினை ஏற்கவில்லை. மத்திய அரசு இந்த அவசரசட்டம் உட்பட மேலும் பல அவசர சட்டங்களுக்கும் நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்தத் தொடருக்குள் நிறைவேற்றாவிட்டால், அவசர சட்டம் காலாவதி ஆகிவிடும். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தன. ஆனாலும் இந்தப்பிரச்சினையில் பிரதமர், பின்வாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது சரியான முடிவில்லை என்பதே என் கருத்து. சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையைப் பாதுகாத்திடத் தவறினால், விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். கேள்வி:- அன்னை தெரசாவின் சேவையைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்து தெரிவித்தது பற்றி? பதில்:- தேவையில்லாத கருத்து அது. பேசக்கூடாத கருத்து அது. அன்னை தெரசா, கொல்கத்தா நகரில் ஏழையெளியவர்களுக்காக ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். 1979-ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசே வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதிலும் மறைந்து விட்ட ஒரு மாபெரும் மாதரசியைப் பற்றி இப்படிப்பட்ட அநாகரிகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறி, வீண் பிரச்சினையை பா.ஜ.க. அரசுக்கு ஏற்படுத்தி விட்டார் என்று தான் கூற வேண்டும். “யாகாவாராயினும் நா காக்க” என்பதை இவர்கள் உணராமல் இருக்கிறார்களே என்பதுதான் வேதனை! கேள்வி:- ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்டது பற்றி? பதில்:- மத்திய அரசும், குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடியும், இந்தப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்ததின் காரணமாக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பியிருக்கிறார். அதற்காக என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கு மனப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதுகின்றன. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, லீக் சுற்றின் 19 வது போட்டி. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. இது இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டி வில்லியர்ஸ், இந்திய அணியுடனான மோசமான தோல்விக்குப் பின்னர் மனதளவில் உற்சாகம் குறைந்து தங்கள் தன்னம்பிக்கை குலைந்துவிட்டதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தப் போட்டி அவர்களுக்கு மனதளவில் தெம்பூட்ட முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : அமிதாப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் அமிதாப் பச்சனுக்கு சம்மன் வழங்கி உள்ளது. 1984 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் பெரிய அளவில் வெடித்தது. இந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ‘ரத்தத்துக்கு ரத்தம்’ என்று கோஷம் எழுப்பி, இக்கலவரத்தை தூண்டி விட்டதாக, நடிகர் அமிதாப் பச்சனுக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் சீக்கிய உரிமை அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், அமிதாப்பச்சனுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மன், அமிதாப் பச்சனின் ஆலிவுட் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சட்ட விதிகளின்படி, சம்மன் ஒப்படைக்கப்பட்ட 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர் பதில் அளிக்க வேண்டும். அதன்படி, வருகின்ற மார்ச் 17 ஆம் தேதிக்குள் அமிதாப்பச்சன் பதில் அளிக்க வேண்டும். அப்படி அவர் பதில் அளிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக தண்டனை நடவடிக்கை மற்றும் இழப்பீடு உத்தரவு பிறப்பிக்கக் கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தை அணுகப் போவதாக சீக்கிய உரிமை அமைப்பின் சட்ட ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.

செல்போன் எண்ணை மாற்றாமல் விரும்பிய சேவை நிறுவனங்களை நாடு முழுதும் மாற்றும் வசதி: மே 3 முதல் அமல்

செல்போன் பயன்படுத்துவோர் நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களது செல் போன் எண்ணை மாற்றாமல், சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் முறை மே 3-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் சேவை நிறுவனங்களை அந்தந்த தொலைத் தொடர்பு வட்டாரங்களுக்குள் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இனி நாடு முழுவதிலும் இத்தகைய வசதி கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் ஒரே எண்ணை தக்க வைத்துக் கொண்டு விரும்பிய செல்போன் சேவை நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள முடியும். உதாரணமாக சென்னையிலிருந்து ஒருவர் மாற்றலாகி டெல்லிக்குச் சென்றால் அவர் தனது பழைய மொபைல் எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள செல்போன் சேவை நிறுவனத்தின் சேவையைப் பெறலாம். இது தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைத் தொடர்பு எண் மாற்றும் வசதி தொடர்பான சட்டம் 2009-ன் அடிப்படையில் முழுவதுமான சேவை நிறுவனங்களுக்கு எண்களை மாற்றிக் கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிளிடி வசதி (எம்என்பி) நாடு முழுவதும் மே 3-ம் தேதி முதல் அமலாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை கையகப் படுத்தியது ஸ்டேட் பாங்க்

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மும்பையில் உள்ள அலுவலகத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கையகப் படுத்தியது. வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை வசூலிப்பதற்காக இந்த நடவடிக்கையை வங்கி எடுத்துள்ளது. செல்வாக்கு மிக்க நபர்களிடம் வங்கிகள் இனியும் தயவு, தாட்சண்யம் காட்டாது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மும்பையில் மிகவும் முக்கியமான பகுதியில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்தக் கட்டடம் அதன் நிறுவனர் விஜய் மல்லைய்யாவுக்குச் சொந்தமானது. அது இப்போது எஸ்பிஐ வசமாகியுள்ளது. இந்தக் கட்டடம் மொத்தம் 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பிரதான அலுவலகங்கள் சில இயங்கி வந்தன. இந்த அலுவலகத்தை ஜப்தி செய்யலாம் என மும்பை தலைமை மெட்ரோபாலிடன் நீதிபதி அளித்த உத்தரவின் அடிப்படையில் எஸ்பிஐ நேற்று முன்தினம் இந்தக் கட்டடத்தைக் கையகப்படுத்தியது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு மொத்தம் ரூ. 7 ஆயிரம் கோடி கடன் நிலுவை வைத்துள்ளது. இந்தக் கட்டடத்தைக் கைப்பற்றியதன் மூலம் குறைந்த பட்சம் ரூ. 2 ஆயிரம் கோடியாவது கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

லிஃப்டுக்குள் இந்திய இளைஞரை பலாத்காரம் செய்து பணத்தைக் கொள்ளையடித்த ஜோர்டான் பெண் கைது

துபையில் ஒரு லிஃப்டுக்குள் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 17ஆம் தேதி துபை பகுதியில் உள்ள ஓர் அலுவலக வளாக லிஃப்ட்டினுள் ஏறியுள்ளார் இந்திய இளைஞர் ஒருவர். அப்போது லிப்டினுள் இருந்த ஒரு பெண், நலம் விசாரிப்பதுபோல் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார். பிறகு திடீரென்று அந்த இளைஞரை நெருங்கி வந்து கட்டிப்பிடித்துள்ளார். லிஃப்ட் நான்காவது மாடியை அடைந்ததும், இளைஞரின் சட்டையைப் பிடித்து உள்ளேயே இழுத்துள்ளார். பிறகு, ஏழாவது மாடிக்குச் செல்லும்படி பட்டனை அழுத்தியுள்ளார். அப்போது அந்த இளைஞரை பலவந்தமாகக் கட்டியணைத்து அந்த இளைஞரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் லிஃப்ட் 7ஆவது மாடியை அடைந்துள்ளது. அந்தப் பெண் மீண்டும் நான்காவது மாடிக்குச் செல்லும் பட்டனை அழுத்தியுள்ளார். அப்போது லிப்ட் 4ஆவது மாடியில் நின்றிருக்கிறது. அப்போதுதான் அந்த இளைஞர் அவளிடம் இருந்து விடுபட்டு தப்பியுள்ளார். ஆனால், வெளியே வந்து பாக்கெட்டைத் தடவியபோது, அதிலிருந்த பர்ச்சில் வைத்திருந்த 4500 திர்ஹமை (இந்திய மதிப்புக்கு சுமார் 72 ஆயிரம் ரூபாய்) எடுத்துச் சென்றுள்ளார் அந்தப் பெண் என்பது தெரியவந்துள்ளது. புகாரின்பேரில் அந்த ஜோர்டான் நாட்டுப் பெண் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். அந்த விசாரணையின்போது அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். ”நான் கடவுளுக்கு பயந்து நடப்பவள். எந்தத் தவறையும் செய்யவில்லை” என தெரிவித்தார். ஆனால், போலீஸார் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அதில், அந்த இளைஞரை அந்தப் பெண் லிப்ட்டினுள் இழுத்துப் போடுவதும், அந்த இளைஞர் வெளியே தப்பித்து ஓடிவர முயற்சி செய்ததும் அந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண்ணை காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

“சங்கரநாராயணன்”

“சங்கரநாராயணன்” (பெரியவாளின் பொருத்தம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்947129_585338794830241_865216797_n

 
ஒரே விதமான இலக்கிய மரபின் அடிப்படையில்
பிறந்த திருப்பாவை-திருவெம்பாவையைக் கொண்டு
சைவ,வைணவச் சழக்கு நீங்கி அவை இசையச் 
செய்தவர் ஸ்ரீ பெரியவாள். அர்த்தநாரீச்வரர் போல்,
திருவெம்பாவைக்குரிய ஈசனும்,திருப்பாவைக்குரிய
கண்ணனும் ஒரே மூர்த்தியில் பாதிப்பாதியாக இணைந்த
சங்கரநாராயணனாயிருப்பதை வலியுறுத்துவார்.
 
இவர்கள் ரூபத்தில் பாதிப் பாதியாகச் சேர்ந்திருப்பவர்கள்
என்பது முன்பே பலர் சொன்னதுதான். காலத்திலும்
அப்படியே இவர்கள் ஆளுக்கொரு பாதியாக இருப்பதாக
நமக்குப் பொருத்தம் காட்டியிருப்பது பெரியவாள்தான்.
 
(பெரியவாளின் பொருத்தம்)
 
“ஒரு வருஷத்தை இரண்டாக்கிக் கொண்டால் ஒரு பாதி கண்ணன், மறுபாதி ஈச்வரன். அந்த இரண்டு
பேருக்கே ஜகத்குரு பிருதம் உண்டு. “கறுப்புக் கண்ணன் தேவர்களுக்கு ராத்திரியான
தக்ஷிணாயணத்தில் அவதாரம். ஜ்யோதிர்லிங்கமோ
அவர்களுக்குப் பகலான உத்தராயணத்தில் உத்பவம்.
 
கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமிக்கும் லிங்கம்
உத்பவித்த சிவராத்திரிக்கும் இடையே சரியாக 180 நாட்கள்
இருக்கும்” என்ற அரிய விஷயத்தை அவர் சொல்லித்தானே
நாம் அறிகிறோம்? சந்தேகமிருந்தால் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு
பாருங்கள். ‘அதிக மாஸம்’ என்பது இல்லாத மற்ற எல்லா
ஆண்டுகளிலும் அப்படித்தானிருக்கும்.

“ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து”

 “ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து”

(‘முகமுக’மாக தரிசித்த பொருத்தம்.) தொகுத்தவர்-ரா. கணபதி.10482143_599228513527816_46027082804070919_n தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
ஸ்ரீமுக வருஷம்.தில்லைக்கு முதன்முறை வந்த
பெரியவர்கள் கண்களை மூடிக்கொண்டே நகருக்குள்
வருகிறார்கள். கண் மூடித் தியானத்தில் இருக்கிறார்
என்றோ, வெளிச்சத்தின் கூச்சத்தால் கண் மூடியிருக்கிறார்
என்றோ பெரும்பாலோர் நினைத்திருப்பார்கள். மடத்தில்
மிக நெருங்கியிருப்பவர்களுக்கு மட்டும் இது சற்று
வித்தியாஸமாகப் பட்டது. 
 
ஏனெனில் சிதம்பரத்துக்கு முந்திய முகாமான குமராக்ஷியை
விட்டுப் புறப்படும் போதே பெரியவாள் கண்ணை மூடிக்
கொண்டுவிட்டார்.சிதம்பரப் பட்டணப் பிரவேசம் முழுதும்
பெரியவாள் கண்ணைத் திறக்காமல் இருந்ததோடு.
பிறகு அந்த ஊரில் மடத்தின் ஜாகைக்கு வந்த பின்னரும்
அவ்விதமேயிருந்து நித்திரை கொண்டு விட்டார்.
 
மறுநாள் அதிகாலை மடத்தினருக்கோ,கோவில் தீக்ஷிதர்கள்
உட்பட சிதம்பர மக்களுக்கோ எவருக்கும் தெரியாமல்,
ஒரே ஒரு கிங்கரரை மட்டும் அழைத்துக் கொண்டு
பெரியவாள் ‘கோயில்’ என்றே பெருமை கொண்ட சபாபதி
ஆலயத்துக்குச் சென்றார்கள். அப்போதும் கண் திறக்கவில்லை
கிங்கரரே வழி சொல்லிக்கொண்டு சென்றார். அரையிருட்டு
வேளையில், இந்தக் குருட்டு வேஷத்திலேயே குருபிரான்
சிவகங்கைத் திருக்குளத்தில் தீர்த்தமாடி, மாற்றுத் துவராடை
புனைந்து, திருநீறு அணிந்து,பிரத்தியக்ஷப் பரமசிவமாக
சித்ஸபையை அடைந்தார்.
 
உஷக்கால பால் நைவேத்தியத்துக்காக மணியடிக்கப்
பொன்னம்பலத்தின் மணிக் கதவுகள் திறந்தன. பெரியவாளின் கண்களும் திறந்தன. நேரே நடராஜனின் சௌந்தரிய சமுத்திரமான மூர்த்தியில்
மீன்களாக ஆழ்ந்து திளைத்தன!
 
“தர்சனாத் அப்ரஸதஸி”- “காண முக்தி சிதம்பரத்தில்”
என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டார்.!
ஆரூரில் பிறந்தாலும்,அருணையை நினைந்தாலும்,
(திரு அண்ணாமலை) காசியில் மரித்தாலும்,
கோயிலில் (தில்லையில்) கண்டாலும் மோக்ஷம் என்பது
ஆன்றோர் வாக்கு. எனவே ஞான சிதம்பரத்தில் இந்த ஊனக் கண் காணவேண்டிய
முதல் வஸ்து. ;என் கண்ணின் மணியே,குருமணியே’
அடியார் பாடிய நடனசிகாமணியைத்தான் என்று நமக்குக்
காட்டிவிட்டார். குருமணி! ‘குமாரக’ என்றால் ‘கண்மணி’என்றொரு பொருள்.
‘அக்ஷி’ என்றாலும் கண்தான். இந்தப் பெயர் பொருத்தம்
பார்த்துத்தான் ‘குமராக்ஷி’யிலேயே தம் திவ்விய நயனங்களை மூடிக்கொண்டு விட்டார்.
 
அப்புறம் அந்த ஸ்ரீமுக ஆண்டிலே ஈசனின் திருமுகத்தை
ஈசனின் அவதாரத் திருமுகம் ‘முகமுக’மாக
தரிசித்த பொருத்தம்!

ரசிகர்களுடன் நடிகர் ரஜினி காந்த் திடீர் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 35-வது திருமண நாளை ஒட்டி போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்தார். இவரது. இந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 35-வது திருமண நாளை இன்று குடும்பத்துடன் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக போயஸ் கார்டன் வீட்டின் முன்னர் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரசிகர்களின் ஆரவாரத்தைக் கேட்ட ரஜினி காந்த் திடீரென வெளியே வந்து ரசிகர்களிடம் கை குலுக்கி அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். பட்டு வேஷ்டி – பட்டு சட்டை அணிந்து வந்த அவரைப் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தனது பிறந்தநாளன்று வெளியான லிங்கா படம் நஷ்டமடைந்ததில், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள சூழ்நிலையில், பொது இடங்களுக்கு வருவதை ரஜினிகாந்த் தவிர்த்து வருகிறார். இந்நிலையில், அவர் ரசிகர்களை சந்தித்தது சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது: பாரிவேந்தர்

சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று ஐக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 2015 – 2016 –ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தின்கீழ் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் பஸ் – ரயில்களுக்கு ஒரே டிக்கெட் வழங்கும் முறை அறிமுகமாகிறது. இதன்மூலம் ஒரே டிக்கெட்டில் பஸ் – ரயிலில் பயணம் செய்யமுடியும். இது மிகவும் பயன்தரக்கூடியதாகும். மேலும், பயணிகள் ரயில் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. எனினும், சரக்குகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. தற்பொழுது டீசல் விலை குறைந்து வரும் நிலையில் சரக்கு கட்டணம் உயர்ந்திருப்பது – மக்களிடையே சற்று சிரமத்தை ஏற்படுத்துவதுடன், அதைச் சார்ந்த பொருள்களின் விலையும் உயரும்.எனவே இதனை தவிர்த்திருக்கலாம். நகரங்களில் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் மெட்ரோ ரயில்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் அகலப் பாதை மற்றும் மின் மயமாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிப்பதுட்ன் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் பாதையை மேம்படுத்த 8.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். பயனிகளுக்கான முன்பதிவு காலம் 60 நாட்களிலிருந்து 120 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பண்டிகைக் கால டிக்கெட் நெரிசலை எளிதாகத் தவிர்க்க முடியும் என்பது அனைவரும் பெரிதும் வரவேற்கும் ஒன்றாகும். அத்துடன் ஒவ்வொரு வருடமும் ரயில்வே பட்ஜெட் வெளியிடப்படும்போது புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு இருக்கும் – கூடுதல் ரயில்களும் அறிவிக்கப்படும். ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்துள்ள முதல் ரயில்வே பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. இதன்மூலம் ஏற்கனவே கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு முடிவடையாத நிலையில் இருக்கும் அனைத்து வகையான ரயில்வே திட்டங்களும் உடனடியாக முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்ற முனைப்பை இந்த அரசு காட்டுகிறது. மேலும் ரயில்வே துறையும் – இந்திய விண்வெளி ஆய்வு மையமும்(IS R O ) இணைந்து ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்கில் விபத்தைத் தடுப்பதற்காக புதிய ரேடியோ சிக்னலுடன் ஒலி–ஒளி கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும், ரயில்வே ஊழியர்களின் துறை சார்ந்த அறிவை மேம்படுத்தவும், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பல்கலைக்கழகங்களில் ரயில்வே ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டப்ப்படக்கூடியதாகும். ​ ​அதேபோல், ரூ.120 கோடியில் லிப்டுகள் மற்றும் எஸ்குலேட்டர்கள் அமைப்பதால் பயணிகளின் படியேறும் நிலை மாறுவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயன்தரும். ரயில்களில் உள்ள 17 ஆயிரம் கழிப்பறைகளை சுத்தப்படுத்தி நவீனப்படுத்துவதுடன் நாடெங்கும் உள்ள 400 ரயில் நிலையங்களில் அதிநவீன வை – பை இணையதள வசதி செய்யப்படுவதுடன் ரயில்வே துறையைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்காக பல்வேறு மொழிகளில் இணைய தளமும் துவங்கப்படும் -என்று ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எதிர்கால சந்ததிகளின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் ஒரு தொலைநோக்கு பட்ஜெட் என்கிற வகையில், முழுமனதுடன் இந்திய ஜனநாயகக் கட்சி பாராட்டி வரவேற்கிறது. அதேவேளையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கும் வண்ணம், பெரம்பலூர் ரயில்வே திட்டம் உட்பட எந்த புதிய அறிவிப்புகளும் வராதது ஏமாற்றமளிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும்,ரயில்வே நிதிநிலை விவாதத்தின் போது தமிழகத்திற்கான திட்டங்கள் வெளியாகும் என நம்புகிறோம்!