Home Blog Page 6323

பேஸ்புக் சேவையில் தடங்கல்

Facebook-Icon-300x300 பேஸ்புக் சமூக வலைத்தள சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தளத்தை இயக்க முடியவில்லை என்று பேஸ்புக் பயன்படுத்துவபவர்கள் டிவிட்டரில் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் இரண்டின் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யோகா, இந்து மதத்தை அமெரிக்காவில் பரப்பியவர் விவேகானந்தர்: ஒபாமா

புது தில்லி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தில்லி டவுண்ஹாலில் உள்ள ஸ்ரீபோர்ட் அரங்கில் இன்று காலை இந்திய அமெரிக்க உறவு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஸ்ரீ போர்ட் அரங்கில் , ஒபாமாவின் உரையைக் கேட்க மாணவர்கள்,மற்றும் முக்கிய பிரமுகர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ஒபாமா, இந்து மதம், யோகாவை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தவர் விவேகானந்தர். அவரை 100 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா வரவேற்றது என்றார்.. மேலும், குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் நான் என நினைக்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது என்று கூறினார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையே நட்புறவில் புதிய சகாப்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் சார்பில் இந்திய மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க மக்களின் நட்பை இந்திய மக்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன் என்றார். லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்ட நாடு இந்தியா. தேநீர் விற்கும் நிலையில் உள்ள ஒருவர் கூட பிரதமர் ஆகலாம் என்ற நிலையில் இந்தியா உள்ளது. ஒரு சமையல்காரனின் பேரன் கூட அதிபராக முடியும் என்ற நிலையில் அமெரிக்கா உள்ளது. ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாடு பெண்களை புறக்கணிக்கக் கூடாது. பெண்களை முன்னேற்றும் நாடு தானாக முன்னேறும். இந்திய ஆயுதப் படையில் பெண்களின் பங்களிப்பு பெருமிதத்தை ஏற்படுத்துகிறது ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பு நாடாக அமெரிக்கா ஆதரவு அளிக்கும். அமெரிக்க மக்களின் பிரதிபலிப்பாகவே இந்தியாவை நான் பார்க்கிறேன். நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்பிய மிகச் சில நாடுகளில் நாமும் உண்டு. இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவை. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு அளிப்போம். என்று பேசினார் ஒபாமா.obama1  

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மீதான நடவடிக்கை: இந்து முன்னணி வரவேற்பு

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது தமிழக தலைமைச் செயலாளர் எடுத்த நடவடிக்கையை இந்து முன்னணி வரவேற்கிறது என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: rama-gopalanதமிழக அரசு அதிகாரியாக இருக்கும் உமாசங்கர் அவர்கள் தொடர்ந்து பெந்தகோஸ்தே கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததை இந்து முன்னணி கண்டித்துள்ளது, தொடர்ந்து தமிழக அரசுக்கு புகாராகவும் கொடுத்துள்ளது. சமூகத்தில் பதட்டம் தொடர்ந்த நீடித்த நிலையில் தற்போது உமாசங்கர் மீது தமிழகத் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. ஓர் அதிகாரி பதவி ஏற்கும்போது, சமூகத்தில் எந்தவித பாகுபாடுமின்றி செயல்பட உறுதி ஏற்கிறார். அப்படி பதவி ஏற்ற உமாசங்கர், கிறிஸ்தவ மதப்பிரச்சாரக் கூட்டங்களில் பகிரங்கமாக கடந்த சில ஆண்டுகளாக கலந்துகொண்டு வந்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கு அரசியல் சாயம் பூசி தப்பித்தும் வந்தார். உமாசங்கர் இந்துக்களுக்குரிய சலுகையை பெற்று ஐ.ஏ.எஸ். ஆகவும், பதவி உயர்வும் பெற்றவர், கிறிஸ்தவராக இருப்பதாக புகார் எழுந்தபோது, தான் இந்து தான், கிறிஸ்தவரில்லை என கூறி தப்பினார். ஆனால், தொடர்ந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததை இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் காவல்துறை சில இடங்களில் கூட்டத்தை ரத்து செய்தது, சில இடங்களில் பாதுகாப்பு அளித்து நடத்தவும் அனுமதி அளித்தது. இவை வெறும் மதக்கூட்டங்கள் இல்லை, மூட நம்பிக்கைகளை வளர்க்கவும், மக்களை ஆசை வார்த்தைகூறி, அச்சுறுத்தி மதமாற்றும் கூட்டமாக நடைபெற்ற வந்துள்ளது. ஓர் அதிகாரி இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்பது தார்மீகக் கடமை. இக்கூட்டங்களில் மதப் பிரச்சாரமும் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஒருவர் தான் சார்ந்து மத நிகழ்ச்சிகளிலோ அல்லது நல்ல எண்ண அடிப்படையிலோ தனிப்பட்ட முறையில் மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்பது தவறில்லை என்றாலும், மதப்பிரச்சாரம் செய்வது என்பது அரசின் விதிமுறைகளை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் இவர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதை பகிரங்கமாக சுவரொட்டிகளில் வெளியிட்டு மதப்பிரச்சாரம் நடைபெற்றது கடுமையான குற்ற செயலாகும். இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உமாசங்கரை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதற்கும் அவர் உள் அர்த்தம் கற்பிப்பத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவர் மீது பல வழக்குக்களை இந்து முன்னணி பதிவு செய்துள்ளது. மதப்பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தது மட்டுமல்ல, மக்களை கிறிஸ்தவ மதத்தின் பெயரால் அச்சுறுத்தவும் செய்துள்ளார். உலகம் அழிந்துவிடும் என பயமுறுத்தி உள்ளார். தான் கனவில் கண்டதாகம், ஏசு தனக்கு காட்சி கொடுத்ததாகவும் பல பேட்டிகளில் கூறியுள்ளார். இத்தகை மன நோய் உள்ளவர் அரசு அதிகாரியாக தொடர்வது சமூகத்திற்கு நல்லதல்ல. இவரது கடந்த கால செயல்பாட்டையும் தமிழக அரசு ஆராய்ந்து, இவர் பாரபட்சமாக நடந்துகொண்டிருந்தால் அதற்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமைச் செயலாளரின் எச்சரிக்கை கடிதத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இவரது செயலுக்கும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.  

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் பிப்.3 -ல் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

muruganதிருச்சி குமார வயலூரிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி 3-ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. தைப்பூச தினமான பிப்ரவரி 3-ம் தேதி காலை 5 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெறும். பிற்பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு முத்துக்குமாரசுவாமி புறப்பாடாகி உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளி, அதவத்தூர் மண்டபத்தில் காட்சி தருதல் நடைபெறும். இரவு 8 மணிக்கு புறப்பாடாகும் முத்துக்குமாரசுவாமி வரகாந்திடலை அடைந்து மண்டகப்படி பெற்று, தைப்பூச மண்டபத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடைவார்.  

நரேந்திர மோடி- ஒபாமா இன்று இரவு வானொலியில் உரை

Obama-Modiபிரதமர் நரேந்திர மோடி இன்று 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது முறையாக உரையாற்ற உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இணைந்து உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சி நாடெங்கும் உள்ள அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகும். பாரதப் பிரதமர், அமெரிக்க அதிபர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தமிழாக்கத்தை 28-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பும்.

சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

ramadossசென்னை சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில்  தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த இல்லம்  கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு,  நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக தொகுத்து  தமிழ் சமுதாயத்திற்கு பரிசளித்தவர். 1874 ஆம் ஆண்டு தமது 19 ஆவது வயதில் ஓலைச்சுவடிகளை புத்தகமாக்கும் பணியைத் தொடங்கிய உ.வே.சா. தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை சுமார் 68 ஆண்டுகளை ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிக்கும் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். இத்தகைய பெருமைக்குரிய தமிழ் தாத்தா சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய போது முதலில் வாடகைக்கு இருந்து பின்னர் விலைக்கு வாங்கிய வீடு தான் இடிக்கப்பட்டிருக்கிறது. உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களால் விற்கப்பட்ட அந்த வீட்டை இடிப்பதற்கான முயற்சிகள் கடந்த 2012 செப்டம்பர் மாதத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. அப்போது பாதி இடிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்ததால் காப்பாற்றப்பட்டது. அப்போதே அந்த வீட்டை உ.வே.சா அவர்களின் நினைவு இல்லமாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதை தமிழக அரசு ஏற்றிருந்தால் தமிழுக்கு தொண்டு செய்த தமிழ் தாத்தாவின் இல்லம் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால், அரசின் அலட்சியத்தால் உ.வே.சா.வின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. இதன்பிறகாவது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் தமிழ் தாத்தாவின் இல்லம் அமைந்திருந்த இடத்தை தமிழக அரசு விலைக்கு வாங்கி அங்கு அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். மகாகவி பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப் பட்டிருக்கும் போதிலும் சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசு  வாங்கி நினைவு இல்லம் அமைத்திருக்கிறது. அதேபோல், தமிழ் தாத்தா பிறந்த உத்தமதானபுரம் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கிறது என்ற போதிலும் திருவல்லிக்கேணியில் அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டையும் நினைவு இல்லமாக மாற்றுவதே சரியானதாக இருக்கும். அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கர் லண்டனில் சில காலம் வாழ்ந்த இல்லத்தை வாங்கி அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்று மராட்டிய மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, லண்டன் வீட்டை ரூ.35 கோடிக்கு வாங்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாளான வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் லண்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அதேபோல், சென்னை திருவல்லிக்கேணியில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் அமைந்திருந்த நிலத்தை தமிழக அரசு வாங்கி, அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். உ.வே.சா அவர்களின் 160 ஆவது பிறந்த நாள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அந்த நாளில் அவரது நினைவு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பெரியவா கொடுத்த PRESCRIPTION

37061_10151356031212617_107367148_n_zpsb19955ed

பெரியவா கொடுத்த PRESCRIPTION (பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்)
அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸுதான் இருக்கும். பாவம், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான்! டாக்டர்கள், வைத்யம் இதெல்லாம் ஒரு பக்கம் அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்கு பேரிடியாக ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்தது!
சோதனை காலத்திலும் ஒரு நல்ல காலம், ஞாபகம் நன்றாக இருக்கும் போதே [“அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்”என்று ஆழ்வார் பாடியது போல்] பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டான்.
“எனக்கு தலைவலி தாங்க முடியலே பெரியவா…. அதோட மறதி ரொம்ப இருக்கு. பாடத்தை ஞாபகம் வெச்சுக்கவே முடியலே… பெரியவாதான் காப்பாத்தணும்”அழுதான்.
“கொழந்தே! நா….. வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா….. வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்…..”
பையன் நகருவதாக இல்லை. பெரியவாளிடம் prescription வாங்காமல் போவதாக இல்லை. அதற்கு மேல் அவனை சோதிக்க பெரியவா விரும்பவில்லை.
எனவே அவனிடம்,”சரி, நான் சொல்ற வைத்யம் ரொம்ப கடுமையா இருக்குமேப்பா! ஒன்னால follow பண்ண முடியாதேடா கொழந்தே!…”
“அப்டீல்லாம் இல்லே பெரியவா…… ஒங்க வார்த்தைப்படி கட்டாயம் நடக்கறேன்!”
வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பையன் முகம் ப்ரகாஸமானது.
“ரொம்ப சந்தோஷம். அந்தக் காலத்துல, முகத்தளவைன்னு ஒரு கணக்கு உண்டு. அதுப்படி, நாலு பெரிய்….ய்ய படில அரிசி, கோதுமை மாதிரி எதாவுது ஒரு தான்யத்தை அளந்து ஒரு பையில கட்டி ….. சபரி மலைக்கு இருமுடி கட்டிண்டு போறவாளை பாத்திருக்கியோ? அதுமாதிரி, அந்த தான்யத்தை ஒன்னோட தலையில வெச்சுண்டு, தெனோமும் ஒரு மைல் தொலைவு நடக்கணும்! செய்வியா?…. முடியுமா?…”
“கட்டாயம் நடக்கறேன்…..”
“இரு …. இரு…. இன்னும் நான் முழுக்க சொல்லி முடிக்கலே! ஒரு மைல் தொலைவு நடக்கறச்சே…. யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசப்….டாது! சிவ நாமாவோ, ராம நாமாவோ சொல்லிண்டிருக்கணும்! அந்த தான்யத்தை அன்னன்னிக்கி எதாவுது சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ,..க்ராம தேவதை கோவிலுக்கோ எதுவானாலும் சரி, குடுத்துடணும்! இல்லாட்டா…. யாராவுது ஒரு ஏழைக்கு அதைக் குடுத்துடணும்! இதுமாதிரி பதினோரு நாள் பண்ணினியானா….. ஒன்னோட தலைவலி போய்டும்; ஞாபகசக்தியும் நன்னா வ்ருத்தியாகும்…”
பையனுக்கு ஒரே சந்தோஷம் !”நிச்சயம் நீங்க சொன்னபடி பண்றேன் பெரியவா”விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான்.
பெரியவாளின் அநுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்ததால், அவர் சொன்ன எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு பண்ணினான். ஒரே வாரத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தான்… அழுது கொண்டு இல்லை! சிரித்த முகத்துடன் வந்தான்!
“பெரியவா…… என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா! “என்ன மருந்து சாப்ட்டே?”ன்னு கேட்டா….. பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்…. தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கறதையும் பண்ணிடறேன் பெரியவா”
அவன் சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.
உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்
தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது!

 

சென்னை முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றல்

muslim_leag_flag_hosting சென்னை இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் அதன் தமிழ் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேசியக் கொடி ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

காந்தி குறித்த உணர்வு உயிர்ப்புடன் உள்ளது: ஒபாமா

புது தில்லி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் ஒபாமா, விருந்தினர்களுக்கான புத்தகத்தில் காந்தி பற்றி எழுதிய குறிப்பில், மகாத்மா காந்தி உலகிற்கு கிடைத்த அரிய பரிசு. காந்தியை பற்றி மார்ட்டின் லூதர் கிங் அன்று சொன்னது இன்றும் மாறாமல் தொடர்கிறது. இந்தியா முழுவதும் காந்தியை பற்றிய உணர்வு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.