Home Blog Page 6326

சக்தியும் கணபதியும் முன்னின்று காக்கட்டும் !

lord-ganesh நாம் செய்கிறோம் என்ற அகங்காரம் அழிந்து ஆதி முதல்வன் கணபதியையும் அவருக்கும் மூலமாக விளங்கும் சக்தியையும் tமனதில் தியானித்து காரியங்களைத் தொடங்குவோம் ! அரிஓம் திருவுளமே ! ஆதித் திருவுளமே ! செந்தாமரையில் பிறந்திடும் மருவே ! உன் முகம் என் முகமாக ! உன் கண் என் கண்ணாக கண்டோர் கைவசமாக சக்தியும் கணபதியும் முன்னே நடக்க ஸ்வாஹா !

இதோ விரிகிறது ஒரு கவிதை!

rose அழகான சிறிய கூடு அதில் அம்மா குருவி இட்ட முட்டை பாதுகாப்பாய் இருந்தது விரியப் போகுது இதோ… இதோ… பட்டுக் குஞ்சு தன் ரோஜா வாய் திறக்கும் திராட்சைக் கண்கள் திறக்கும்! குட்டிக் குட்டி கை, கால்கள் அசைக்கும் இதோ… இதோ… உழைப்பைப் பகிரும் மகிழ்ச்சிக் குதூகலம் அன்பைப் பன்மடங்காக்கும் அனுபவிக்கவும் தூண்டும் இதோ……. இதோ……. சோர்வு போகும் தொலைவில் சோகம் போகும் விரைவில்… வாழ்வுக்கு ஓர் அர்த்தம் உழைப்புக்கு ஓர் உற்சாகம் இதோ….. இதோ… புதிய அனுபவங்கள்… பூரிக்க வைக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் மேன்மைபெற வைக்கும் இதோ…… இதோ……. கவிதை: மஞ்சுளா மூர்த்தி

முதுகுளத்தூர் அருகே ஆலய புனர் நிர்மானம் மேற்கொள்ள ஆசி வழங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

temple1 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் உள்ள திருவரங்கம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமையான மிகப்பெரும் ரெங்கநாதர் ஆலயம் இருந்த இடத்தை ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமி பார்வையிட்டு அதனை புனர் நிர்மானம் செய்யுமாறு கிராம மக்களைக் கேட்டு கொண்டார். முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை ஜீயர் சுவாமிகள் உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் திருவரங்கத்தில் அமைந்துள்ள தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில், கிராம மக்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்து வைத்தார். கோயிலில் உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு கிராம மக்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நம்பிகள், திருவரங்கம் விஞ்சாமூர் சுதர்சன ஐயங்கார், ராமநாதபுரம் தேவஸ்தான பொறுப்பாளர் ஆடலரசன், சமூக ஆர்வலர் நம்பி நாராயணன், காளிகோயில் பொறுப்பாளர் சந்திரன் உள்பட கிராம மக்கள் இதில் கலந்து கொண்டனர். பின்னர், கிராம மக்கள் சனிக்கிழமை அன்று ஒன்றுதிரண்டு, இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். jeeyar2 [su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ orderby=”comment_count”]

மந்திரங்களும் வழிபாடும்

பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம் விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகிஹ்ருத் த்யா நகம்யம் வந்தே விஷ்ணும் பவ பயஹரம் ஸர்வலோகைக நாதம் மேகச்யாமம் பீத கௌசேய வாஸம் ஸ்ரீ வத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம் புண்யோ பேதம் புண்ட ரீகாய தாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்

ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம் ஸபீத வஸ்த்ரம் ஸரஸிரு ஹேக்ஷணம் ஸஹார வக்ஷஸ்த்தல கௌஸ்துப ச்ரியம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம் அச்சுதன் அமலன் என்கோ! அடியவர் வினை கெடுக்கும் நச்சு மாமருந்தும் என்கோ! நலங்கடல் அமுதம் என்கோ! அச்சுவைக் கட்டி என்கோ! அறுசுவை அடிசில் என்கோ! நெய்ச் சுவை தேறல் என்கோ! கனிஎன்கோ! பால் என்கேனோ; லட்சுமி லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீ ரங்கதாமேச்வரீம் தாஸீ பூதஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம் ஸ்ரீ மந்மந்தகடாக்ஷலப்பதவிபவப்ரஹ்மேந்த்ரகங்காதராம் த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்வந்தே முகுந்தப்ரியாம் மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களாநாம் வக்ஷ: பீடீம் மதுவிஜயிநோ பூஷயத்தீம் ஸ்வகாந்த்யா ப்ரத்யக்ஷõ நுச்ரவிக மஹிமப்ரார்த்தி நீ நயம் ப்ரஜாநாம் ச்யோ மூர்த்திம் ச்ரியமசரண, த்வாம்சரண்யாம் ப்ரபத்யே ரக்ஷத்வம் வேததேவேசி தேவ தேவஸ்ய வல்லபே தாரித்ர்யாத் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபாம் குருமமோபரி. ராமர் ஸ்ரீராம சந்த்ர கருணாகர தீனபந்தோ ஸீதாஸமேத பரதாக்ரஜ ராகவேச பாபர்த்தி பஞ்ஜன பயாதுர தீனபந்தோ பாபாம்புதௌ பதித முத்தர மாமநாதம் ஸ்ரீராகம் தசரதாத்மஜ மப்ரமேயம் ஸீதாபதிம் ரகுகுலாப்வய ரத்நதீபம் ஆஜாபுபாஹு மரவிந்த தளாயதாக்ஷம் ராமம் நிசாசர விநாசகரம் நமாமி. கிருஷ்ணர் கோபல ரத்நம் புவனைக ரத்நம் கோபாங்க நாயௌவந பாக்ய ரத்நம் ஸ்ரீகிருஷ்ண ரத்நம் ஸுரஸேவ்ய ரத்நம் பஜா மஹே யாதவ வம்ச ரத்நம். லட்சுமி நரசிம்மர் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாய நம; ஹரி ஓம் பாந்தஸ்மான் புருஸூத வைரிபலவன் மாதங்க மாத்யத் கடா கும்போச்சாத்ரி விபாட நாதிகபடு ப்ரத்யேக வஜ்ராயுத; அனுமான் வாமே கரே வைரிபிதம் வஹந்தம் சைலம் பரே ச்ருங்கல ஹாரிடங்கம் ததாந மச்சச்சவி யஜ்ஞ ஸூத்ரம் பஜே ஜ்வலத் குண்டலம் ஆஞ்ஜநேயம். ஸபீத கௌபீந முதஞ்சிதாங் குளிம் ஸமுஜ்வலந் மௌஜியஜி நோபவீதிநம் ஸகுண்டலம் லம்பசிகா ஸமாவ் ருதம் தமரஞ்ஜநேயம் சரணம் ப்ரபத்யே. அஞ்சிலே ஒன்று பெற்றான்: அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்: அவன் நம்மை அளித்துக் காப்பான் சாஸ்தா யஸ்ய தன்வந்தரீ மாதா பிதாருத்ரோ பிஷக்தம் தம் சாஸ்தார மஹம் வந்தே மரா வைதயம் தயாநிதிம். கருடன் குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம சக்கரத்தாழ்வார் ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம் ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம் ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும் ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்

தில்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

obama_modi_welcome புது தில்லி: பாரதத் தலைநகர் தில்லிக்கு இன்று வருகை தந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு சிறப்பாஅ வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபுகளுக்கு மாறாக விமான நிலையத்துக்கு நேரில் சென்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை கட்டித் தழுவி வரவேற்றார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான பாரதத்தின் 66வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று காலை 9.43 க்கு தனி விமானம் மூலம் தில்லி விமான நிலையம் வந்தார். அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். இவருடன் மனைவி மிக்செல் ஒபாமாவும் வந்தார். தொடர்ந்து அதிபர் ஒபாமாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பகல் 12 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் 12.30க்கு, ராஜ்காட் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ஒபாமாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அமெரிக்க அதிபர் ஒருவர் பாரத நாட்டின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. வெளிநாட்டின் தேசிய விழா ஒன்றில் கலந்து கொள்வது ஒபாமாவுக்கும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது. [wp_ad_camp_4] modi [su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ orderby=”comment_count”]

“சீயக்காய் கலந்த கஞ்சியை குடித்த சிவபெருமான்”…

“சீயக்காய் கலந்த கஞ்சியை குடித்த சிவபெருமான்”………. ஹரதத்தர் விழா : 24-1-15…..கஞ்சனூர் கற்பகாம்பாள் உடனுறை அக்னீஸ்வரர் திருக்கோயில்…..கும்பகோணத்திற்குக் கிழக்கில் 18 கி.மீ தொலைவிலும் மயிலாடுதுறைக்கு மேற்கில் 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது… “கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர்” என்கிறது பெரியபுராணம்…இத்தல ஈசன் திருநாவுக்கரசரால் “மதிசூடும்பெருமான்” எனப்போற்றப்படுகிறார்.இவரே சுக்கிர தோஷ பரிகார மூர்த்தியாவார்.காவிரி நதியானது உத்தரவாஹிணியாகப் பாயும் இந்த புண்யத்தலம் கம்ஸபுரம் பலாசவனக்ஷோத்திரம் ஆகும்.சிவத்தலங்களில் மிக உயர்ந்த இத்தலம் கிருதயுகத்தில் புன்னாகவனம் என்றும், திரேதாயுகத்தில் கதளீவனம் என்றும் த்வாபரயுகத்தில் வில்வ வனம் கலியுகத்தில் பலாசவனம் என்றும் வழங்கப்படுகிறது. பராசர முனிவரின் சித்தப்ரமை நிவர்த்தியானதும், அக்னி பகவான் பாண்டு நோய் தீரப்பெற்றுதும், கம்ஸராஜன் நோய் நீங்கி சுகம் பெற்றதும், சந்திரன், சித்திரசேனன், இந்திரன் ஆகியோரின் பாவங்கள் நீங்கியதும் காளகண்டன் என்ற வேடன் மோக்ஷம் அடைந்ததும், விஷ்ணு முதலான தேவர்கள் சுக்கிரதோஷம் நீங்கி சுகபோகங்கள் பெற்றதுமான இத்தலமே மிகச்சிறந்த திருத்தலம் ஆகும். இங்குள்ள வடகாவிரியில் ஒரு முறை நீராடினால் கங்கை நதியில் பன்னிரெண்டு முன்னோர்களுக்கான நீததார் கர்மங்கள் காசியில் செய்வதற்கு ஒப்பாகும் . இங்கு முன்னர் பதினான்கு கோத்திரத்தில் உதித்த வைணவர்கள் இருந்தனர். தீவிர வைணவர்களாகிய அவர்கள் வேதங்களில் மிகவும் போற்றப்படுபவர் மஹாவிஷ்ணுவே எனக்கூறி சிவநிந்தனைகளையும், சிவனடியார்களுக்கும் சிவாலயத்திருவிழாக்களுக்கும் பல இடையுறுகளையும் செய்து வந்தனர். இந்நிலையைப்போக்கி அவர்களுக்கு சிவபரத்துவத்தை உணர்த்த எண்ணிய விஷ்ணுவானவர் காசியப கோத்திரத்தில் வாசுதேவர் என்ற வைணவருக்கு மகனாப்பிறந்தார்.சுதர்சனர் என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை பேசத் தொடங்கியதுமே “சிவ சிவ” என்றது. தந்தை வாசுதேவர் பலமுறை கண்டித்தும் கேளாமல் சிவனடியார்களுடன் சேர்ந்து சிவநாம பஜனை செய்வதும் திருநீறு அணிந்து கொண்டு அருகில் உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தை வலம் வருவதாக இருந்தது. ஒருநாள் அக்னீஸ்வரர் ஆலயத்தில் சுதர்சனர் ஈசனை மனதில் தியானித்து இருந்தார். அப்போது அத்தல ஈசன் அக்னீஸ்வரர் அக்குழந்தைக்கு தக்ஷிணாமூர்த்தி வடிவில் காட்சி தந்து சகல வேதம்களையும் தர்ம சாஸ்திரத்தையும் உபதேசித்து ஹரததத்ர் என்ற நாமத்தையும் சூட்டினார். சகல ஞானமும் பெற்ற ஹரதத்தர் மறுநாள் வேதங்களையும் சாஸ்திரங்களையும் மேற்கோள்காட்டி “சிவனே பரம்பொருள்” என்று தனது தந்தையிடம் வாதம் செய்தார். ஹரதத்தரின் வாதத்தை ஏற்க மறுத்த வாசுதேவர் அவரைக்கொல்ல நினைத்து ஹரதத்தரை நோக்கி,” நீ கூறுவது உண்மையென்றால் நெருப்பில் காய்ச்சிய இரும்பு பீடத்தின் மீது நின்று “சிவனே பரம்பொருள்” என சத்தியம் செய்து சொல்ல வேண்டும் எனக்கூற ஹரதத்தரும் சம்மதிக்கவே, பண்டிதர்களும் சைவ வைணவ அடியார்களும் அருகில் இருக்க நெருப்பிலிடப்பட்டு செம்மை நிறத்தில் தகிக்கும் இரும்பு பீடத்தின் மீது நின்று “”சிவனே பரம்பொருள்”‘என சத்தியம் செய்து கூறினார். அவரை அந்த நெருப்புஇல் இட்ட இரும்பு பீடம் சுட வில்லை …மாறாக ஈசன் அருளால் தகிக்கும் அந்த நெருப்புஇல் இட்ட இரும்பு பீடம் ஹரததரை குளிர்வித்து நின்டது. அப்போது தேவர்கள் பூமாரிப்பொழிய அக்னீஸ்வர சுவாமி அன்னை கற்காம்பிகையுடன் ஹதத்தருக்கு காட்சி தந்தார். இன்றும் கஞ்சனூர் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் அக்னீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக கற்காம்பாளுடன் காட்சி தருகின்றார். அவருக்குப்பக்கத்தில் சைவஸ்தாபனம் செய்யும் கோலத்துடன் ஹரதத்தரின் திருவுருவமும் உள்ளது குறிபிடத்தக்கது.. ஹரதத்தர் ஒருமுறை சீயக்காயுடன் வடிகஞ்சியும் எடுத்துக்கொண்டு காவேரி நீராடச்சென்றார். அப்போது வயது முதிர்ந்த சிவனடியார் வேடம் கொண்ட அக்னீஸ்வரப் பெருமான் ஹரதத்தரிடம் மிகவும் பசியாயிருக்கிறது என்று கூற ஹரதத்தரும் தன்னிடம் இருந்த கஞ்சியை அவருக்கு அளிக்க அச்சிவனடியாரும் அதை வாங்கி அருந்தினார்.அகமர்சனம் செய்து எழும்பிய ஹரதத்தர் கஞ்சியில் சீயக்காய் கலந்திருப்பது நினைவில்லாமல் முதிய சிவனடியாருக்கு அளித்து விட்டதை எண்ணி வருந்தி அவரின் உடல்நலத்திற்கு தீங்கு வராதிருக்க ஈசனை தியானித்தார் .அக்னீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளில் பலவகையான நிவேதனமும் சிவனடியார்களுக்கு அன்னதானமும் செய்து வரும் சிவலிங்கபூபதி என்ற மன்னனின் கனவில் தோன்றிய ஈசன் “மன்னா!உனது நிவேதனமும் அன்னதானமும் நம் ஹரதத்தரின் கஞ்சிக்கு ஈடாகாது” என்று கூறி மறைய ,மன்னன் ஹரத்ததரைப் பணிய ,இருவரும் இணைந்து அப்பன் ஈசனை பணிய ஈசனின் அருள்மழை பெய்ய தொடங்கியது .ஆம்! அன்றில் இருந்து இன்றுவரை தம்மை நாடிவருவோரின் இல்லங்களில் சுக்கிர திசையை பாய்ச்சி செல்வமும்,நல் உடல்நலமும் தம் அடியவர்களின் இல்லங்களில் நிறைய அருள்மழையை கஞ்சனூரில் பாய்ச்சி வருகிறான்.

பாராளுமன்றத்தில் விரைவில் முற்றுகை போராட்டம் : வைகோ

Vaiko இந்திய சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 119வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதிமுக சார் பில் திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்தது. கட்சி பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நேதாஜி பிறந்த மண்ணை இந்த கூட்டத்தில் என்னிடம் ஒப்படைத்து உள்ளீர்கள். இதை நான் உயர்வாக கருதுகிறேன்.
நேதாஜியில் இறுதி நாட்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். அத்தகைய தகவல்களை வெளியிடுவதால் பிற நாடுகளிடம் உள்ள நட்புறவு பாதிக்கப்படும் என்றால் அந்த நாடுகளின் நட்புறவு நமக்கு தேவையில்லை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸை விட அந்த நாடுகள் முக்கியம் இல்லை.நேதாஜியின் இறுதி நாட்கள் குறித்த தகவல்களை வெளியிட வலியுறுத்தி பிற மாநில தலைவர், மக்களை திரட்டி 2 வது கூட்டத்தொடர் அறிவிகப்பட்டவுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன் என்று வைகோ பேசினார்.

ஸ்ரீரங்கம் தேர்தலில் பா.ஜனதா வெற்றி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்

pon Radha photo திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விவேகானந்தரின் 152வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியில் மோடி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளோம். மக்களை நம்பி மட்டுமே நாங்கள் தேர்தலில் நிற்கிறோம் என்று கூறினார்.

அம்பையில் கைதி தப்பி ஓட்டம்

Crime-Pix நெல்லை ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வெள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் (வயது 28). இவரை ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு ஒரு வேனில் அழைத்து வந்தனர். அவருடன் பாதுகாப்புக்காக 2 போலீசார் வந்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற போது, திடீரென்று ஆறுமுக நயினார் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய கைதியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கண்டனம்!

Maran-brothers சென்னை சன் டிவி ஊழியர்கள் இருவர், தயாநிதி மாறனின் முன்னாள் செயலர் என மூவர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தொடர்பு படுத்தி தயாநிதி மாறன் கூறிய குற்றச்சாட்டுக்கு அந்த இயக்கம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் அந்த இயக்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் என்.சடகோபன். அதில், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னையில் உள்ள அவரது வீட்டில்சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் மீது 2013ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் மற்றும் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் உட்பட மூன்று பேரை சிபிஐ தற்போது கைது செய்துள்ளது. தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை சந்திக்க தைரியம் இல்லாமல், தேவையின்றி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது தயாநிதி மாறன் அபாண்டமான பழியை சுமத்தி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கும் ஆர்.எஸ்.எஸ். இக்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இதை தமிழக மக்களும் நன்கு அறிவர். ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வருகின்றார். அவர் நமது நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களை தனது கட்டுரைகளின் வாயிலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவர் வெளிப்படுத்திய ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூறியதில்லை. தயாநிதி மாறன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை திசை திருப்பும் பொருட்டு வேண்டுமென்@ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வம்புக்கு இழுத்துள்ளார். தமிழகத்தில் 75 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அமைதியாக, ஆக்கபூர்வமான பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ச்சிக்கு எந்த அரசியல் கட்சியின் ஆதரவோ உதவியோ தேவையில்லை. கட்சி, பதவி, அரசியல் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர். தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் இடையூறுகள், அவதூறுகள், அபாண்ட குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் கடந்து, தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்து வருகிறது. தனது ஊழலை மூடி மறைப்பதற்காகவும், பிரச்னையை திசை திருப்புவதற்காகவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வீண் வம்புக்கு இழுக்கின்ற தயாநிதி மாறனை தமிழக ஆர்.எஸ்.எஸ் வன்மையாக கண்டிக்கிறது

  • என்று கூறியுள்ளார்.