Home Blog Page 6325

சென்னையில் குடியரசு தின விழா வாகன அணிவகுப்பு: எல்லாம் ‘மக்கள்’ முதல்வர் மயம்!

parade_TN நாட்டின் 66 வது குடியரசு தின விழா கொண்டாடப் படுகிறது.  இதை ஒட்டி, இன்று சென்னையில் நடத்தப் பட்ட குடியரசு தின விழா வாகன அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்துக்கு பதிலாக, முன்னாள் முதல்வர் “ஜெயலலிதா” படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளும் இடம்பெற்றது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை, தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றி வைத்து முப்படைத் தளபதிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். குடியரசு தின விழா அணிவகுப்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் வரிசையாகச் சென்றன. தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, மின்சார துறை, கூட்டுறவுத் துறை, மீன்வளத் துறை, பால்வளத் துறை, சுகாதாரத் துறை, வனத்துறை, பள்ளிக்கல்வி துறை உள்பட 25-க்கும் மேற்பட்ட துறைகளின் சார்பில், அவற்றின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்தி அணி வகுப்பும் நடைபெற்றது. இந்த அலங்கார ஊர்திகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது நிறைவேற்றிய சாதனை திட்ட செயல் விளக்கப் படங்களுடன் ஒவ்வொரு துறை வாகனங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்துக்குப் பதிலாக இடம்பெற்றிருந்த இந்தப் படங்களால், தற்போது, பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குடியரசு தின விழா அணிவகுப்பில் கோல்கத்தா புறக்கணிப்பு: மம்தா பானர்ஜி கண்டனம்

கோல்கத்தா இன்று இந்தியாவின் 66-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, இன்று நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நடந்து. இந்த அணிவகுப்பில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலாசாரம் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் வாகனம் அல்லது நடனம் இடம்பெற்றது. ஆனால், தமிழகம், மேற்குவங்கம், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களின் சார்பிலான வாகனங்களோ நடனங்களோ இடம்பெறவில்லை. இந்நிலையில், இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்க கலாச்சாரத்தையும், திட்டத்தையும் விளக்கும் வாகனங்கள் அணி வகுப்பில் இடம் பெறாதது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், அமிதாப்புக்கு பத்மவிபூஷண் விருது வழங்கினால் போதாது, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றார்.

பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டினார் கொலம்பிய அழகி

Colombia மியாமி அமெரிக்காவின் மியாமி தீவில் 2014ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி்ப் போட்டி நடந்தது. இந்தியா உள்ளிட்ட 87 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்த அழகிகளில் கொலம்பியாவைச் சேர்ந்த பௌலினா வேகா (24) பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் மகுடம் சூட்டப்பட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் பிப். 13-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் போட்டியிடாது என்று இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, ஆகிய கட்சிகள் அறிவித்து, தங்கள் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி  போட்டியிடாது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் இன்று கூறினார். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது. இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. எனவே தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் எங்கள் சக்தியை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. என்று கூறினார். ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வளர்மதியும், தி.மு.க. சார்பில் ஆனந்தும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுப்பிரமணியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அண்ணாதுரையும் போட்டியிடுகிறார்கள். இதில் வளர்மதி (அ.தி.மு.க.), ஆனந்த் (தி.மு.க.), சுப்பிரமணியம் (பா.ஜ.க.) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து தேர்தல் பணியையும் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க., மற்றும் பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், யாருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கியுள்ளது.செய்திருப்பதாகவும், இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடப் போவதில்லை என்றும், வேறு கட்சிகள் எதற்கும் ஆதரவும் அளிக்கப் போவதில்லை என்றும்’ அறிவித்துள்ளார்.

66 வது குடியரசு தின விழா அணிவகுப்பு நேரலை

66வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். குடியரசு தின விழா அணிவகுப்பு நேரலை: [su_youtube_advanced url=”https://www.youtube.com/watch?v=buPvrN14Q7c”] video source: DD National

பத்துமா அவார்டு! பத்துமா மைலார்டு!

”பத்ம விபூஷன் பட்டியலில் ரஜினிகாந்த் பெயர் இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானதே?” ”ஆமாம். பிரதமர் மோடியே தன் கைப்பட ரஜினியின் பெயரை எழுதித் தந்திருக்கிறார். ஆனால் இது தன்னை பாரதிய ஜனதா பக்கம் இழுக்கும் முயற்சி என்று ரஜினி தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்திருந்திருக்கிறார்” ”ஓஹோ” ”தவிர பத்மவிபூஷன் கொடுத்தாலும் ரஜினி தங்கள் கட்சிப் பக்கம் வரமாட்டார்கள் என்று தமிழக பாரதிய ஜனதாத் தலைவர்கள் திட்டவட்டமாக அமித்ஷாவிடம் தெரிவித்தார்களாம். ஆகவே கடைசி நிமிடத்தில் அவரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.” ”இது அவரை உசுப்பேற்றி விடாதா?” ”அப்படியாவது அவர் அரசியலுக்கு வந்தால் போதும். அதன் பிறகு தங்கள் பக்கம் இழுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள் பாஜகவினர்.” “சரி தான்” “தன்னால் தான் ரஜினிகாந்திற்குக் கொடுக்கவிருந்த பத்மவிபூஷன் விருது கொடுக்கப்படவில்லை என்று அசிங்காரவேலன் பேச ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்” “அடடே” ”அதே நேரத்தில் வட இந்திய ஊடகங்களிலும் மூன்று நாட்களுக்கு முன்னரே வந்த செய்திகள் அனைத்திலும் அமிதாப், அத்வானி பெயர்களை விட ரஜினிகாந்த் பெயர் முன்னிலைப்படுத்தியிருந்ததை அரசியல்நோக்கர்கள் கவனிக்கத் தவறவில்லை. அநேகமாக அடுத்த ஆண்டு பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பதாகக் கூறி அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் பலமாக நடைபெறலாம்” சொல்லி விட்டு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஓடினார் எலியார். – மாயவரத்தான்

உள்ளப் பேரொளிக்கு அஞ்சலி !

உருப்பொருளாய் கருப்பொருளாய் உள்ளத்தில் உறைந்தே உணர்விற்கோர் கருவூலமாய் உற்ற பொருளை யாம் உணர்ந்திட உள்கலந்து உயிரின் பெருமை உணர்த்திடும் உந்தனுக்கு உன் ஆன்ம பிம்பமாகிய எந்தன் உள்ளத் தாமரையை உவந்தே காணிக்கையாக்குகின்றேன் ! உள் நிலைத்து உன்னத வழி காட்டுவாய் ! உயிரிருக்கு உயிராகிடும் பேரொளியே ! vanakka

லக்ஷ்மி கடாக்ஷம் பெருகட்டும் !

mahalakshmi_godess அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை ! பொருள் இல்லார்க்கோ எவ்வுலகமும் இல்லை ! இறை பக்தியால் அருளப்படும் செல்வமே உயரிய செல்வம் ! அன்னை மகாலஷ்மியின் அருளுக்கு பாத்திரமாகிட அவளை நித்தம் எளிய துதிகளால் போற்றி வணங்கிடுவோம் ! ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் மகா அஷ்ட ஐஸ்வர்ய குபேர மங்கள யோக ப்ரஸித்யை மகா தன தான்ய தைரிய ராஜ வசீகர ஜகத்சொரூபிண்யை மகா திவ்விய மங்கள ஞான யோக அம்ஸ யோக கடாக்ஷ சொரூப மகா பகவதி நாராயணி தேவ்யை நமோ நம : மகாலட்சுமியை மேற்கண்ட துதியினால் நித்தம் பதினாறு முறைகள் துதித்து பதினாறு பாக்கியங்களையும் அவள் அருளால் வாழ்வில் அடைந்திடுவோம் இது சகாதேவன் ஜீவநாடியில் கிடைத்த அருள் மந்திரம். இதனை வழங்கியவர் பகவதி தாசன் திரு.பகவதி ராமசாமி அவர்கள் -சென்னை !

நாமசங்கீர்த்தனத்தின் அவசியம் !

isaiஅக்னியானது விறகுக் கட்டைகளையும் தன்னிடம் ஆஹுதியாக்கப்படும் அனைத்து வஸ்துக்களையும் பொசுக்கிவிடுவது போல்… உத்தமமான புகழ் படைத்த ஸ்ரீஹரியின் நாமசங்கீர்த்தனம் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்துவரும் அனைத்துப் பாவங்களையும் பொசுக்கிப் பொடிப்பொடியாக்கி நம் உத்தம குணங்கள் மேலோங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். நாமசங்கீர்த்தனத்தின் மற்றொரு பெருமை பகவானே அந்தந்த நாமங்களின் வசப்பட்டு நம்முள் அவரே ஈர்க்கப்பட்டு நம்மைத் தன கைக்கருவியாகப் பயன்படுத்தி செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கும் வல்லமையை நமக்கு அருள்வதுதான் ! ஓதுவோம் ஹரியின் நாமங்களை அனவரதமும் ! வணங்கிப் பணிவோம் அவன் திவ்ய பாதங்களை ! காத்தருள்வான் என்றே சித்தம் தெளிந்திருப்போம் !

வேலும் மயிலும் சேவலும் துணை !

murugan வேல் என்பதே ஞான சக்தி ! மயில் என்பதோ இச்சா சக்தி ! சேவல் என்பது கிரியா சக்தி ! கிரியா சக்தி நம்மை உறக்கத்திலிருந்து விழித்தெழுப்ப இச்சா சக்தி நம் எண்ணங்களுக்கு வலிமை சேர்க்க ஞான சக்தியாய் வேலாயுதம் நம்மை செயல் புரிய காத்தருளட்டும் !