கலைமகள் ஆசிரியராகவும் சிறந்த பேச்சாளராகவும் முருக பக்தராகவும் இருந்து புகழ்பெற்றவர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் நகைச்சுவையாகவும் சிலேடையாகவும், பேசுவதில் வல்லவர் அதில் நான் ரசித்த சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறேன். கி.வா.ஜ. பல வருடங்கள் முன்பு ஒரு முறை புதுக்கோட்டைக்கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு பேச்சாளாராக கலந்து கொள்ள வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு எதிரில் அவருடைய உறவினர் இருந்ததால் முதல் நாளே அங்கு வந்து தங்கினார். குடும்பத்தினருடன் அவரை சந்தித்து பேசினோம். மறுநாள் எங்கள் வீட்டில் சாப்பிட வேண்டும் என்று அழைத்தோம். அவரும் சம்மதித்தார். மறுநாள் எங்கள் வீட்டிற்கு வந்தார். சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது ரசம் பரிமாறும்போது இது என்ன பழரசமா? என்றார். நான் உடனே இல்லை இது புது ரசம் தான் என்றேன். தக்காளி பழ ரசமா? என்று கேட்டேன் என்றார். தயிர் சாதம் சாப்பிடும்போது அதிகபிரசங்கி இருந்தால் கொஞ்சம் போடுங்க என்றார். நாங்கள் புரியாமல் விழித்தோம். தெரியாதா? அதிகப்ரசங்கி என்றால் கா ய்ந்த உப்பு நார்த்தங்காய் ஊறுகாய் தான். அதனுடைய குணம் என்ன தெரியுமா? விருந்து சாப்பிட்டு கடைசியில் அதை சாப்பிட்டால் முதலில் சாப்பிட்ட எல்லாவற்றையும் சுலபமாக ஜீரணிக்க செய்து விடும். ஆனால் தான் மட்டும் நெஞ்சிலேயே நிற்கும். அதானல் தான் அதற்கு அப்படி ஒரு பெயர் என்றார். அன்று மாலை தான் அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பகலில் நாங்கள் யாவரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பி ஒரு போட்டே கிராபரை அழைத்து வந்தோம். எங்கள் வீடு பழங்கால வீடு. நடுவில் முற்றம். சுற்றி கூடங்கள். நாங்கள் ஒரு பத்து பேர் கூடத்தில் ஒரு பக்கம் நின்றோம். போட்டே எடுப்பவர் முற்றத்தின் ஓரம் நின்று கேமிராவில் எங்களை பார்த்து கொண்டு கொஞ்சம் பின்னால் போங்கள். நேரே கேமிராவை பாருங்கள் என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது கி.வா.ஜ. அவர்கள் போட்டே எடுப்பவரை பார்த்து தம்பி கொஞ்சம் கால் அடி நீங்க பின்னுக்கு போனால் எங்களை விட நீங்கள் நன்றாக விழுவீர்கள். முற்றத்து பள்ளத்தில் என்றார். எல்லோரும் குபீரென்று சிரித்து விட்டோம். மாலையில் அவர் நிகழ்ச்சிக்கு போக எங்கள் வீட்டு கார் ரெடியாக இருந்தது. அவர் காரில் ஏறிக்கொண்ட பிறகு என் கணவர், மைத்துனர் எல்லோரிடமும் உங்களிடம் நெருங்கி பழக எனக்கு ஆசையாக உள்ளது. வாங்க காரில் ஏறுங்கள் என்றார். காரில் இடமில்லை என்று தயங்கியவர்கள் காரில் ஏறிக்கொண்டார்கள். இட நெருக்கடி என்பதை தான் அப்படிக் கூறினார். மாலை புத்தக வெளியீட்டு விழாவிற்கு நாங்களும் கோயிலுக்கு சென்றோம். அது புவனேஸ்வரி அம்பாளின் ஒரு பெரிய புத்தகம். அப்போது பேச ஆரம்பித்த கி.வா.ஜ. அவர்கள் இந்த புத்தகத்தை எழுதியவர் முத்துசாமி இதை அச்சிட்டவர் குப்புசாமி, இதைவெளியிட்டவர் ராமசாமி நான் வெறும் ஆசாமி என்றார். கூட்டத்தில் சிரிப்பு அலை அடங்க நீண்ட நேரம் ஆகியது எல்லாம் முடிந்து பிரியாவிடை பெற்று புறப்பட்டார் அவர். ஊர் போய் சேர்ந்தவுடன் ஒரு லெட்டர் அன்பாக எழுதினார். அம்மணி உண்டி கொடுத்து வண்டியும் கொடுத்து உபசரித்ததை நன்றியுடன் என்றும் மறக்கவே மாட்டேன். இப்படி பட்ட ஓர் அருமையான மனிதரை இன்றும் என் 80 வது வயதில் மறக்காமல் வணங்குகிறேன.” -ராதா ராமமூர்த்தி, அசோக்நகர்.
சிலேடை ராஜா கி.வா.ஜ.
குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம்
குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம் ஜனவரி 20,2015,- தினமலர் காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.
“பெண் இப்போ ‘fit’ தானே”
தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒகேனக்கல் பேருந்து விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், தருமபுரி மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தருமபுரி மாவட்ட மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை அமைச்சர்கள் பழனியப்பன், வி.செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒகேனக்கல் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தருமபுரி புறநகரப் பேருந்து நிலையத்திலிருந்து காலை 11.45 மணிக்கு இப் பேருந்து புறப்பட்டது. ஒகேனக்கல் வனப் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள வளைவில் மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயற்சித்தபோது, அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறம் இருந்த சாலையோரத் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்து முழுவதுமாகச் சேதமடைந்தது. பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட அந்த வழியே சென்றவர்கள், விபத்து குறித்து பென்னாகரம் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். பென்னாகரம், ஒகேனக்கல் தீயணைப்பு, மீட்புத் துறை வீரர்களும் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து, பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி மீட்டனர். பேருந்தில் பயணம் செய்த தருமபுரி மாவட்டம், அதகபாடியைச் சேர்ந்த காளியப்பன் (54), இவரது மனைவி வெங்கட்டம்மாள் (50), மல்லாபுரம் சகாதேவன் (50), கம்மாளப்பட்டி மாதம்மாள் (50), அவரது பேத்தி சிவசங்கரி (10), தருமபுரியைச் சேர்ந்த மணிவண்ணன் (50), தொப்பூர் அருகே தொம்பரகாம் பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (10) ஆகிய 7 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். ஊத்தங்கரையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் சுதாகர் (42), இண்டூர் சுண்ணாம்புப் பாளையம் எம்.துரைசாமி (63) ஆகிய இரண்டு பேரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தினைப் பாயசம் : மருத்துவர் சிவராமன்
ஆறாம் திணை – 01
கு.சிவராமன் அடிப்படையில் சித்த மருத்துவர். உடல் நலனுக்கும் மன நலனுக்கும் சுற்றுச்சூழலும் இயற்கையோடு இயைந்த வாழ்வும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தவர். உணவு, சுற்றுச்சூழல், சித்த மருத்துவம் தொடர்பாகத் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். பழந்தமிழர் வாழ்முறையை சிவராமன் கொண்டாடும் பின்னணி இதுதான்!
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிப்பது என்பது எந்த வயதிலும் சுகம். அப்போதைய வில் வண்டியோ, தற்போதைய விமானமோ… ஓரத்து சீட்டின் ஒய்யாரமே தனி! நமக்கு வெளியே விரிந்து நிற்கும் உலகத்தை எட்டிப் பார்ப்பதும் குளிர்ந்திருக்கும் ஜன்னல் கம்பியில் கன்னம் அழுத்தி, ஈர மண்ணின் வாசம் முகர்ந்து லயிப்பதும் மூக்கின் நுனி சாரல் காற்றில் சில்லிடுவதும் ஜன்னலோர சந்தோஷங்களில் முக்கியமானவை.
நீண்ட நாளைக்குப் பின், ஒரு பகல் பொழுதின் ரயில் பயணத்தில் ஜன்னல்ஓரப் பயணம். ஆனால், குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியின் கம்பிகள் இல்லாத கண்ணாடி ஜன்னல். வெளியே அதே ஊர்கள். ஆனால், அடையாளங்கள் மாறிப்போய் இருக்கின்றன. ஜன்னலுக்கு வெளியே நாற்று நடும் பெண்கள் யாரும் தென்படவில்லை. ரயிலடிக் கத்தாழை மறைவில், ‘இயற்கை உரம்’ போடும் குழந்தைகள் எவரும் எழுந்து நின்று டாட்டா காட்டவில்லை. வழக்கமாக உயரப் பிதுங்கி வழியும் வைக்கோல் போரைச் சுமக்கும் மாட்டு வண்டியின் மெலிந்த மாடு, கிரானைட் கல்லைச் சிரமப்பட்டு இழுத்து, லெவல்கிராஸிங் கில் காத்து நிற்கிறது. குளத்து மீனும் குளமும் காணாமல்போனதில்… பாதி கொக்குகள், குவாரியில் புதிதாய் முளைத்த குட்டையைத் தேடிப் போக, மீதிக் கொக்குகள் சைவமாக மாறி, நீர்முள்ளிச் செடியின் தூரைக் கொத்திக்கொண்டு இருக்கின்றன. நாம் எங்கே செல்கிறோம்? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணைகளையும் ஐந்தாம் வகுப்பு மனப்பாடத்தோடு மறந்துவிட்டோம். பொருளும் பொருள் சார்ந்த நிலமும் அல்லது நானும் நான் சார்ந்த இனமும் வாழ்வதற்கென அவசர அவசரமாக ஆறாம் திணையை உருவாக்கி, அதில் அலைகிறோம். இழந்தவையும் மறந்தவையும் தொலைத்தவையும் பிடுங்கப்பட்டவையும்… வெறும் உணவும் ஆடைகளும் பண்பாடும் மட்டும் இல்லை. அது மிகப் பெரிய பட்டியல்!
அப்படித் தொலைந்தவற்றில் கொஞ்சத்தைத் தேடவும் இழந்தவற்றை மீட்டெடுக்கவும்தான் இந்தப் பகிர்வுகள். பழந்தமிழர் உணவில் இருந்து இந்தப் பகிர்வுகளைத் தொடங்குவோம். கும்மாயம் அடிசலில் தொடங்கி பழ அப்பம், பணியாரம், வெந்தயக் களி, கேழ்வரகு உப்புமா, குதிரைவாலிக் குழம்புச் சோறு வரை நம் மூதாதையர் சுவைத்த – நாம் இழந்துவிட்ட அற்புதமான, ஆரோக்கியமான உணவுகளில் தொடங்கி சூழலோடு இயைந்த வாழ்க்கைக்கு நாம் எப்படித் திரும்புவது என்பது வரை எல்லாவற்றையும் பேசுவோம். முதலில் ஓர் இனிப்பில் இருந்து தொடங்குவோமா? தினைப் பாயசம் :
பாயசம் என்றாலே, ஓர் அலாதிப் பிரியம்தான். அதுவும் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். சரி, பாயசம் எல்லோருக்கும் தெரியும். தினைப் பாயசம்? அது ஒன்றும் பெரிய சமாசாரம் அல்ல. அரிசியைப் போட்டால், அரிசிப் பாயசம்; பருப்பைப் போட்டால் பருப்புப் பாயசம்; தினை யைப் போட்டால் தினைப் பாயசம். அவ்வளவு தான்.
தினையைப் பற்றிப் பேசும்போது ‘லவ் பேர்ட்ஸ்’ ஞாபகம் வருகிறது. காதல் சிட்டுகளுக்கு மிகப் பிரியமான உணவு தினை. நண்பர் ஒருவர் வீட்டில் வளரும் காதல் சிட்டுகள் தினையை உண்ணக் கொடுக்கும்போது எல்லாம் அவை ஒன்றுக்கு ஒன்று முத்தமிட்டுக்கொள்ளும். ”தினை சாப்பிட்டால் காதல் உணர்வு கூடுதலாகச் சுரக்குமோ சிவராமன்?” என்பார் நண்பர். ஆராய வேண்டிய விஷயம்தான்!
தேவையானவை
தினை – 250 கிராம்
பனை வெல்லம் – 200 கிராம்
பால் – 250 மி.லி.
முந்திரிப் பருப்பு – 15
ஏலக்காய் – 5
உலர்ந்த திராட்சை – 15
நெய் – 2 தேக்கரண்டி
எப்படிச் செய்யலாம்?
ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு அதில் தினையைப் போட்டு நன்கு வேகவைக்கவும். அரிசி நன்கு வெந்த பின், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிட மெல்லிய சூட்டில் அதை வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து அதில் போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, மறக்காமல் ஏலம் போடவும். இனிப்பில் ஏலக்காயைக் கடைசி யாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பு எங்கெல்லாம் சேர்கிறதோ அங்கெல்லாம் ஏலம் இருக்க வேண்டும் என்பது தமிழர் உணவு விதி. தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவமும்கூட இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும் என்கிறது.
தினைப் பாயசம் இனிப்பை மட்டும் தருவதல்ல; கண்ணுக்கும் எங்கோ ஒரு மானாவாரி ஏழை விவசாயியின் மண்ணுக்கும் நல்ல விஷயம். ஒரு முறை மைசூரில் உள்ள மத்திய உணவியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சென்றிருந்தபோது, ஒரு பேராசிரியர், தினையில் ஃப்ளேக்ஸ், தினை அவல், தினை சேர்ந்த முசிலி (தினை முதலான பிறதானிய அவலும், உலர் பழங்களும் சேர்ந்த கலவை) எல்லாம் அவர் ஆய்வகத்தில் காட்டினார். ‘ஆஹா… இவ்வளவு அருமையாகச் செய்து இருக்கிறதே… இது எல்லாம் சந்தைக்கு வந்தால் எப்படி இருக்கும்?’ என்று அப்போது நினைத் திருக்கிறேன். இப்போது மெள்ள மெள்ள, தினை பிஸ்கட் குக்கீஸ், தினை இனிப்பு உருண்டை என்று ஒவ்வொன்றாகச் சந்தைக்கு வர ஆரம் பித்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. தினை ஓர் அற்புதமான தானியம் (பார்க்க அட்டவணை). ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு தானியம் இங்கே மாவுரெட்டிப்பட்டி நாடார் கடைக்கு வர வேண்டும் என்றால், சூழலைச் சிதைக்கும் எத்தனை காரியங்கள் நடக்க வேண்டும் தெரியுமா? அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தில் தவிடு நீக்க, உமி நீக்க, பின் எடை பார்த்து, கெட்டுப்போகாமல் இருக்க, பொலபொலவெனப் புட்டியில் இருந்து உதிர, ஈரத்தன்மை உறிஞ்சாமல் இருக்க… இவ்வளவுக்கும் அது அதற்குரிய ரசாயனம் சேர்க்க வேண்டும். பின்னர், அது பிளாஸ்டிக் புட்டிக்குள் அடைபட்டு, லாரியில் ஏறி துறைமுகம் வந்து, கப்பலில் ஏறி, சென்னை துறைமுகம் வந்து, கண்டெய்னரில் ஏறி, பெரும் வணிகரின் கிடங்குக்குப் போய், அங்கிருந்து கடைக்கு வர, இன்னொரு வாகனம் ஏறி உங்கள் வீட்டை அடைவதற்குள் எவ்வளவு எரிபொருள் செலவுகள்? எவ்வளவு போக்குவரத்துச் செலவுகள்? எவ்வளவு சூழல் சிதைவுகள்? இப்படி ஆஸ்திரேலிய ஓட்ஸ், வாஷிங்டன் ஆப்பிள், மடகாஸ்கர் ஆரஞ்சு என என்னென்னவோ சாப்பிட்டு ஆற்றும் பசியை, தரும் உடல் திறனை, சங்ககிரி தினையும் திருச்செங்கோடு நெல்லிக்காயும் நாமக்கல் நவ்வாப் பழமும் சாப்பிட்டாலே ஈரோட்டுக்காரர் பெற முடியும் என்றால், எதற்கப்பா இத்தனை சிதைவுகள்? யோசித்துப்பாருங்கள்… உள்நாட்டு உணவு உத்தமம் – உடலுக்கும் உலகுக்கும்!
– பரிமாறுவேன்.. மருத்துவர் கு.சிவராமன் – வலையிலிருந்து.
கமர்கட்டு ஸ்டில்ஸ்
கமர்கட்டு ஸ்டில்ஸ்/Kamarkattu Stills [Best_Wordpress_Gallery id=”3″ gal_title=”kamarakkattu-stills”]
கமர்கட்டு பட ஸ்டில்ஸ்
கமர்கட்டு பட ஸ்டில்ஸ்/Kamarkattu Movie Stills [Best_Wordpress_Gallery id=”4″ gal_title=”kamarakkattu”]
வலியவன் இசை வெளியீடு
வலியவன் இசை வெளியீடு / Valiyavan Music Launch [Best_Wordpress_Gallery id=”5″ gal_title=”valiyavan-music-launch”]
நடிகை அருந்ததி நாயர் ஸ்டில்ஸ்
நடிகை அருந்ததி நாயர் ஸ்டில்ஸ் [Best_Wordpress_Gallery id=”6″ gal_title=”Actress-Arundathi-Nair”]

